மதுர ஜில்லா... மச்சானே!-28
அத்தியாயம்-28
ஊருக்குள்ளே இனியனின் வீட்டுக்கு சென்று விட்டு மதுரையை நோக்கி திரும்பி செல்லும் காவ்யாவின் கார், சில கிலோமீட்டர் முன்பாகவே திடீரென நின்று விட்டது.
"சார்... ஒரு நிமிஷம்..." என்று டிரைவர் காரை ஓரமாக நிறுத்தினான்.
மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்றான். எஞ்சின் சத்தம் மட்டும் கேட்டதே தவிர கார் நகரவில்லை. "என்னாச்சுப்பா?" என்று ராஜாராம் புருவம் சுருக்கினார்.
"தெரியல சார்... கொஞ்சம் பாத்துட்டு சொல்றேன்." அவன் பேனட்டைத் திறந்து பார்த்துக் கொண்டு அங்கும் இங்கும் யாரிடமாவது உதவி கேட்கும் மனநிலையில் இருக்க, அந்த வழியாக தனது காரில் உரமூட்டையை ஏற்றி வந்த அகிலன், சாலையோரத்தில் நின்றிருந்த காரைப் பார்த்து அம்மனிதரை கண்டும் வண்டியை மெதுவாக நிறுத்தினான்.
"ஏதாவது பிரச்சனையா சார்?" என்று கேட்டான். டிரைவருக்கு அகிலன் உதவிக்கு வரவும் நிம்மதியாக, "ஆமா தம்பி... நான் மதுரை டிராவல்ஸ்ல வண்டி ஓட்டறேன். ஏர்போர்ட்ல இருந்து வாடகைக்கு வந்திருக்கேன். இந்த ஏரியால சில ரூட் தெரியாது. காரும் பாதி வழியில நின்னுருச்சு." என்றதும் அகிலன் கீழே இறங்கி வந்து பார்த்தான்.
சில நிமிடங்கள் முயற்சி செய்தான். பிறகு நிமிர்ந்து,
"சார்... சின்ன பிரச்சனை மாதிரி தெரில்ல. பார்ட் ஏதோ மாத்தணும். மெக்கானிக் வந்தா தான் சரியாகும்." என்றான்.
டிரைவர் உடனே "இங்க எனக்கு எந்த மெக்கானிக்கையும் தெரியாது தம்பி. உங்களுக்கு தெரிந்தா வரச்சொல்லுங்க" என்று கூறிடவும் அகிலனே மெக்கானிக்கை போனில் அழைத்தான்.
அகிலன் பேசிக் கொண்டிருக்க காருக்கு அருகே நின்றிருந்த காவ்யாவுக்கும் ராஜாராமுக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பமாகியது.
"உன்னை நம்பி நான் இந்தியா வர்றேன்னு நினைச்சா... என்ன வேலை பார்த்திருக்க?" என்று ராஜாராமின் குரல் கடினமாக இருந்தது.
"டாட்..." என்று காவ்யா சலிக்க,
"பேசாத." என்று அவர் ஆத்திரமாக கையை உயர்த்தினார்.
"இந்தியாவுக்கு டிக்கெட் எடுக்கறப்பவே அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு உனக்கு தெரியும் தானே?" என்றதும் காவ்யா அமைதியாக நின்றாள்.
"அப்புறம் எதுக்காக இவ்வளவு தூரம் வந்த?" என்று கடிந்தார்.
"அவனை நேர்ல பார்க்கணும்னு." என்று இழுத்தாள்.
"பார்க்கவா? இல்ல சண்டை போடவா?" என்று ராஜாராம் கேட்க காவ்யா பதில் சொல்லவில்லை.
ராஜாராம் இன்னும் கோபமானார். "அதுவும் என்ன பொய்? அவன் வீட்ல உங்க காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்கன்னு என்னையே ஏமாத்திட்டு கூட்டிட்டு வந்திருக்க." காவ்யா மெதுவாக சிரித்தாள்.
"டாடி... அதெல்லாம் சொல்லாம இருந்தா நீங்க இவ்ளே செலவு பண்ணி வந்திருப்பீங்களா?" என்று கேட்டாள்.
"காவ்யா.." என்று ராஜாராம் கடிய, "சரி டேடி.. நான் ஏமாத்திட்டேன்." என்றாள்.
"எவ்வளவு பெரிய பிராடுத்தனம் இது?" என்று ராஜாராமின் குரல் உயர்ந்தது.
"உன்னை காதலிக்கறேன்னு சொல்லிட்டு... இங்க வந்து வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். சரி... அதைக்கூட விடு. கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல? உன்னிடம் நேர்ல பார்க்க வரை கல்யாணமே ஆகலைன்னு பொய் சொல்லிட்டு திரிஞ்சிருக்கான்.
இதுல அவனை திட்டுறதுக்காக ஆயிரம் ஆயிரமா செலவு பண்ணி இந்தியா வந்திருக்க. உன்னை சொல்லி குத்தமில்லை. அம்மா இல்லாத பிள்ளைனு, செல்லம் கொடுத்து கெடுத்தது நான்தான். இதுக்குத்தான் அவனை பார்த்ததிலருந்தே உனக்கு சரியா வராதுனு படிச்சு படிச்சு சொன்னேன்." என்றார்.
அகிலன் காரின் முன்புறம் நின்றபடியே அனைத்தையும் கேட்டான். வேண்டுமென்று கேட்கவில்லை. கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. இருவரது குரல் தான் அவ்விடத்தில் அதிக சத்தத்துடன் அலைப்பாய்ந்தது.
அப்போது காவ்யா மெதுவாக, "டாடி... ஐ நோ மை லிமிட். என்னால வீடியோ கால்ல அவனை திட்ட முடியல. அவன் செய்த வேலைக்கு, நேர்ல நின்னு நாலு வார்த்தை கேக்கணும்னு வந்தேன். இப்ப அவனை லெப்ட் ரைட் வாங்கிட்டேன். இரண்டறை தந்ததும் தான் நிம்மதி. அவ்வளவுதான். பணம் போனா போகட்டும். நான் ஒண்ணும் அவனை நினைச்சு அழுது நிற்கல. அதுதானே உங்களுக்கு வேணும்?" என்று கூறினாள்.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே... அகிலனை இரண்டு மூன்று முறை கவனமாக குறுகுறுவென பார்த்தாள்.
அவன் மட்டும் எதையும் கேட்காதவன் போல போனில் கவனமாக பேசிக் கொண்டிருந்தான்.
அதை கவனித்த ராஜாராம், "காவ்யா..." என்று மெதுவாக எச்சரித்தார்.
"என்ன டாடி?" என்றாள்.
"அந்த தம்பியை ஏன் அப்படி பார்த்துட்டே இருக்க?" என்று கேட்க "அப்பறமா செல்லறேன். சும்மா இருங்க." என்று அவரையே அதட்டினாள்.
சில நிமிடங்களில் அகிலன் போன் பேசி வந்தான்.
"சார்... இப்ப மெக்கானிக் வரமுடியாதாம். இப்ப போய் ஏதோ வெளியே இருக்காப்ல. காரை எங்கயாவது நிறுத்திட்டு வெயிட் பண்ண சொல்லறார்." என்றதும் கார் டிரைவரோ "நல்லதா போச்சு. அவர் வரச்சொல்லுங்க. நான் வெயிட் பண்ணறேன். பட் இவங்க.." என்று காவ்யாவையும் ராஜாராமையும் பார்த்து வைத்தான்.
"சார் நீங்க வேற கார் ஆட்டோ பிடிச்சு போயிடுங்க." என்றார் டிரைவர்.
"என்னப்பா நீ.. உன்னை நம்பி வந்தேன். நடுவுல இறக்கற. மழை வேற வர்றாப்ல தெரியுதே" என்றார் ராஜாராம்.
"சார் மழை வர்ற மாதிரி இருந்தா.. உங்களை நீங்க தங்குற இடத்துல இறக்கி விடறேன். யாரும் யாரை நம்பியும் ஏமாற வேண்டாம்." என்றான் அகிலன்.
"இங்க எங்க தங்கறது. இந்த இடமும் எங்களுக்கு புதுசு தம்பி. மதுரை ஏர்போர்ட் போகணும்" என்றார்.
"டேடி.. நான் இந்தியா சுத்தி பார்க்க டிக்கெட் எடுத்திருக்கேன்" என்றாள்.
"சும்மாயிரு." என்று கடிந்தார்.
"கார் இங்கேயே இருக்கட்டும்."
டிரைவர் உடனே, "சார்... என்னை மட்டும் செட்டில் பண்ணிடுங்க."
"மெக்கானிக் வந்ததும் நான் பாத்துக்கிட்டு கிளம்புறேன்." என்றான்.
ராஜாராம் சுற்றிலும் பார்த்தார்.
"தம்பி... இந்த ஊர்ல எனக்கு யாரையும் தெரியாது."
"நாங்க சுத்திப் பார்க்க கூட வரல. இந்த பொண்ணு..."
என்று காவ்யாவை காட்டி,
"தன்னோட எக்ஸ் காதலனை திட்டுறதுக்காக அமெரிக்காவிலிருந்து காசு செலவு செய்து இந்தியா கூட்டிட்டு வந்திருக்கா." என்றார்.
டிரைவருக்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கிக் கொண்டு, ''அப்படியா சார்?" என்றான்.
"ஆமாம்பா. இப்ப என்ன செய்யறதுனே தெரியல." என்றதும் அகிலன் சிறிது யோசித்தான்.
"டவுன்ல நல்ல லாட்ஜ் இருக்கு. அங்க ரூம் எடுத்துட்டு..." என்று சொல்லிக் கொண்டிருக்க, வானம் திடீரென இருண்டது.
அடுத்த நொடியே சடசடவென்று மழை கொட்ட ஆரம்பித்தது.
"அய்யோ..." என்று காவ்யா அலறினாள். "கார்ல ஏறுங்க. முதல்ல மழைக்கு ஒதுங்கலாம்."
என்று அகிலன் கூற, டிரைவருக்கு ராஜாராம் பணத்தை செட்டில் செய்து முடித்தார். டிரைவரும் மெக்கானிக் நம்பரை வாங்கியதால் காரை ஓரமாக நிறுத்தி அதில் அமர்ந்துக் கொண்டார்.
காவ்யா ராஜாராமை ஏற்றிக் கொண்டு அகிலன் கார் அவனது வீட்டை நோக்கி திருப்பினான்.
"காலையிலிருந்தே வானம் இருட்டிட்டு இருந்துச்சு. மழை வரும் போலன்னு நினைச்சேன்." என்று வண்டியை இயக்கினான்.
காவ்யா மீண்டும் காதில் ஹெட் செட்டை போட்டுவிட்டு, 'நம்ம மதுர' என்ற சேனலில் உள்ள அந்த வீடியோவை கவனித்தாள்.
'இது அவனே தான் அகிலன். இனியனின் தம்பி.' என்று தெளிவாக அறிந்துக் கொண்டாள்.
அகிலன் வீட்டுக்குள் வர, வீட்டின் வாசலில் காய வைத்திருந்த துணிகளை அவசரமாக எடுத்து மாட்டுக் கொட்டகைக்குள் மாற்றிக் கொண்டிருந்தார் மீனாட்சி.
அந்த நேரத்தில் கார் வீட்டின் முன் வந்து நின்றது.
"அம்மா..." என்று அகிலன் அழைத்தான்.
காரை உள்ள நிறுத்திவிட்டு "பார்த்து பொறுமையா இறங்குங்க" என்று சொல்லிவிட்டு, "நான் இதோ வர்றேன்." என்று லேசாக நனைந்தபடியே உள்ளே வந்தான். ஆங்காங்கே கட்டியிருந்த வாயில்லா ஜீவனை உடனடியாக கயிற்றை கழட்டி, கீற்று கொட்டைகையில் கட்டினான். அதிலேயே பாதி நனைந்தான். காவ்யா அவனை பார்த்தபடி தந்தையோடு இறங்கினாள்.
அதியமானும் மீனாட்சியும் வாசலில் நின்றிருந்த ராஜாராமையும் காவ்யாவையும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
காவ்யா நவீன சுடிதாரில் விரித்த கூந்தலோடு ஊருக்கு புதிதாக வந்தவள் என்பது முகத்திலேயே தெரிந்தது.
அகிலன் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தயங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது காவ்யாவே புன்னகையுடன் அவனது பெற்றோரிடம் கையை நீட்டினாள்.
"ஹாய்... நான் காவ்யா. இவர் என்னோட டாடி... ராஜாராம். அமெரிக்காலிருந்து வந்திருக்கோம். மழையில மாட்டிக்கிட்டோம். இவர் ஹெல்ப் பண்ண வந்தார்" என்று இயல்பாக அறிமுகமானாள்.
"உள்ள வாங்க" என்று மீனாட்சி தான் அழைத்து வந்தார்.
அந்த வார்த்தையைக் கேட்டபடி, ராஜாராம்... வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தார். முன்னபின்ன தெரியாதவரை அரவணைத்து உள்ளே அழைத்தது அவருக்கு பிடித்தது. அகிலனும் வழியில் உதவி காரில் ஏறக்கூறியதை வைத்து நல்ல மனிதன் என்று எண்ணினார். இல்லையென்றால் இந்நேரம் மழையில் அப்பாவும் மகளும் நனைந்திருப்பார்கள். இல்லையேல பழுதடைந்த காரில் அடைந்துக் கொண்டிருக்க வேண்டும். இதில் வந்ததும் வராததும் வாயில்லா ஜீவனையும் மழையில் நனைய விடாமல் அகிலன் காத்தது அவருக்கு இதமாக இருந்தது.
வணக்கம் வைத்து சுவரில் மாட்டியிருந்த குடும்பப் புகைப்படத்தை ஒவ்வொன்றாக கவனித்தார்.
அதில் அதியமானும் மீனாட்சியும் தம்பதியராக இருந்த படமும், அகிலனின் சிறுவயது புகைப்படமும் தூரிகாவின் புகைப்படமும் அவரது பார்வையில் பட்டது.
அந்த நேரம் மீனாட்சி தான் காபி போட்டு கொண்டு வந்து நீட்டினார். "மழைக்கு காபி குடிக்கலாம்னு தோனுச்சு. ரொம்ப நன்றிங்க" என்று எடுத்துக் கொண்டார்.
காவ்யாவுக்கு மட்டும் இது இனியனின் சொந்தக்கார வீடு என்று தெரிந்திட, தந்தையிடம் எப்பொழுது கூறலாமென காத்திருந்தாள்.
இதில் தூரிகா உடனடியாக பஜ்ஜி செய்து கொண்டு வந்தாள்.
"அப்பா அம்மா இது தங்கச்சி" என்று அறிமுகப்படுத்தினான்.
தூரிகா முறைத்துக் கொண்டு செல்ல, "ஏம் மேல கோபத்துல கிடக்கு" என்று சிரிக்க முயன்று தோற்றான்.
அதியமானோ "என்ன விஷயமா வந்திங்க? இங்க யாரும் சொந்தக்காரங்களை பார்க்க வந்திங்களா?" என்று கேட்க, "தேவையில்லாத பயணம்ங்க. கிளம்பறப்பவே சொல்லியிருந்தா வந்திருக்கவே மாட்டேன். அங்க சொல்லாம கமுக்கமா இருந்துட்டு, இங்க வந்து அதுவும் வீட்டுக்கு முன்ன வந்து கத்தி சண்டை போட்டுட்டு வந்திருக்கா" என்றார்.
மீனாட்சியோ "சண்டையா?" என்று காவ்யாவை பார்வையிட்டார். நவநாகரீக உடை அணிந்தாலும் பார்க்க லட்சணமாக இருக்கவும் இந்த பிள்ளை ஏன் சண்டையிட போகின்றாளென கேட்டுவிட்டார்.
"அதையேன் கேட்கறிங்க... இவளுக்கு அம்மா இல்லைங்க. நான் மட்டும் தான். அதிகம் செல்லம் தந்துட்டேன். அங்க அமெரிக்காவுல படிக்கறப்ப சீனியர் பையன் ஒருத்தனை விரும்பினா. நானும் காதலுக்கு எதிரில்லாம் இல்லை. அதனால சம்மதிச்சிட்டேன். உங்க வீட்ல சொல்லிட்டு பொண்ணு கேளுப்பா. நான் அமெரிக்காவுல செட்டிலாகிட்டாலும், முறைப்படி வந்து பொண்ணு கேட்டு நம்மூர் வழக்கப்படி கல்யாணத்தை நடத்திடலாம்னு சொன்னேன். கூடுதலா இரண்டு பேரும் கம்பெனி நடத்த திட்டமெல்லாம் போட்டாங்க.
இங்க அப்பா அம்மாவிடம் காதலை சொல்வி பர்மிஷன் வாங்கறேன்னு சொன்ன பைய, பொசுக்குனு அத்தை மகளை கட்டிட்டு குடித்தனம் நடத்திருக்கான். சரி என்னவோ கட்டி தொலையட்டும். என் மகளிடம் அவனுக்கு கல்யாணம் ஆனதை சொல்லியிருக்கலாம்ல. பாவிபைய... வேண்டுமின்னே மறைச்சி ஒரு வருடம் ஆகும்னு ஏமாத்தியிருக்கான்.
என் மக அமெரிக்காவுல இருந்தாலும், எப்படியே கண்டுபிடிச்சிட்டா. அங்கயே சொன்னா நான் வந்திருக்க மாட்டேன். போனா போறான்னு திட்டிட்டு வேலையை பார்த்திருப்பேன். என்னிடம் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டான் சர்பிரைஸா போகலாம்னு செலவு பண்ணி வந்துட்டா. இங்க போனா நேரா வீட்ல போய் அந்த பைய இனியனை கன்னத்துல அறைந்து, லெப்ட் ரைட் வாங்கிட்டா. அங்க மொத்த குடும்பமும் திடுக்கிட்டு போயிட்டாங்க. அவனை கட்டின மகராசி மட்டும் மூலையில் நின்னுட்டு இவளையே பார்த்துட்டு இருக்கா." என்றதும் தூரிகாவோ ''மதுராவா? நீங்க இனியன் அண்ணனை பத்தி பேசறிங்களா?" என்றாள்.
'ஒரு நிமிஷம்... இது... இனியனோட சொந்தக்கார வீடா...?' என்று மனதுக்குள் அதிர்ந்தார் ராஜாராம்.
மகளை சுரண்டி, "என்னம்மா இனியனை அண்ணன்னு சொல்லறா. நாம கிளம்பலாம்." என்று கிசுகிசுத்தார்.
காவ்யாவோ "மழை பெய்யுது இருங்கப்பா." என்றாள். இது இனியனோட சொந்தக்கார வீடுனு எனக்கு இங்க வர்றப்பவே தெரியும். இவர் பெயர் அகிலன். இவரை நான் இதுக்கு முன்ன பார்த்திருக்கேன். 'நம்ம மதுர' சேனல்ல மாட்டை அடக்கியது, அப்பறம் ஏதோ அரசாங்க குழாய் உடைந்து சீர் செய்தது பார்த்திருக்கேன். அப்பறம் நடுவுல அதை மறந்துட்டேன். இங்க வர்றதுக்கு முன்ன மறுபடியும் ஒரு ஆர்வத்துல அந்த சேனலை பார்த்தப்ப தான், நீங்க லைப்ரரிக்கு புக்ஸ் எல்லாம் வாங்கி அடுக்கியது. மரக்கண்ணு நட்டது. இதெல்லாம் கூட பார்த்திருக்கேன். ஆக்சுவலி அதுல தான் ஒரு தெருவுல இனியனும் அந்த பொண்ணு மதுராவும் ஜோடியா பேனர்ல நின்ற திருமண கோலத்தையும் பார்த்தேன்.
செம ஷாக். அப்பவே போன்ல பிடிச்சி திட்டி விட நினைச்சேன். ஆனா அவன் கல்யாணம் ஆனதை அப்பவும் சொல்லாம கேம் விளையாடவும், நேர்ல நாலரை அறைந்து வந்தா தான் நிம்மதினு வந்துட்டேன். இங்க அவனை அடிச்சி பேசிட்டு வந்தப்பிறகு தான் இவரை பார்த்தேன்.
நிஜமா இவரை எங்கயோ பார்த்தோம்னு கார்ல மறுபடியும் அந்த வீடியோவை பார்த்தேன். அதே நபர். இனியன் என்கிட்ட ஒரு முறை 'சித்தப்பா பையன் எனக்கு தம்பி முறை'னு சொல்லியிருக்கார்.
அதே நபர் என்றதும் தான் நீங்க கூப்பிட்டப்ப பயப்படாம வந்தேன். என்னனு தெரியலை... அவரால நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிங்க தானே?! எப்ப பாரு... உங்களை ஒரா போட்டியாளரா நினைப்பான்.
அமெரிக்காவுல இருந்தப்ப கூட அப்படி உங்களை பத்தி பேசியதில்லை. இங்க வந்தப்பிறகு, நாங்க பேசறப்ப எல்லாம் உங்க பெயரை சொல்லியே புகைவான்.
அப்படியென்னங்க பகை" என்று கேட்டாள்.
"பெரிய பகை எல்லாம் இல்லைங்க.. இனியனுக்கு எல்லாத்திலும் முதல்ல இருக்கணும். அவனை பத்தி பெருமையா பேசணும். அந்த எண்ணம் மட்டும் தான். இதுல அவன் விரும்பியதை எப்படி வேண்டுமென்றாலும் அடைஞ்சிடுவான். அவ்வளவு தான்' என்றான் அகிலன்.
அதை சொல்லி விட்டு அதனால தான் மதுராவை எப்படியாவது அடைந்துட்டான்' என்று மனதில் நினைத்து வலியுடன் நின்றான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
Kindly Register & Login to Read
Share ur valuable Comments.
Thank u
Sema sema eniyian u deserve this punishment from this kavya. But we miss the slapping scene. Very very intresting sis.
Kaviya vandha appuram than unmai therinchi iniyan vanguvan nu nenachen aana iva entry kuduthathu yae unmai therinchathu na la than ippo than theriyuthu aana ennaku ore oru varutham than sis enna na kaviya nadantha ah sonnalum iniyan adi vangunatha pakka mudiyala la athu than ore sogam atha mattum clear panni vittuda ga sis avan pechu na pechu avan adi vangurathu chinna punishment than atleast atha ya chum parthu happy aagiduvom la .
Sis enna ku oru doubt ne 30th epi la akilan jodi ah intro panren nu sonninga andha jodi kaviya ah iruku ah vaipu iruku ah sis illa vera yarachum ah
மதுர ஜில்லா..மச்சானே ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 28)
ஓ காவ்யா.. இந்தியா வந்துட்டாளா, வந்ததோட பாக்கியில்லாமல் இனியனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தும் முடிச்சிட்டாப்பல... சூப்பர்.
இனி கழுதை கெட்டால் குட்டிச்சுவர்ங்கிற மாதிரி, இனியனுக்கு மதுரா தான், மதுராவுக்கு இனியன் தான், இனிமேல் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.
அது சரி, அகிலனுக்கான ஜோடி முப்பதாவது அத்தியாயத்துலத் தானே வரும்ன்னு சொன்னிங்க, இப்ப இருபத்தெட்டுலயே வந்திட்டாளோ,..? அப்புறம் ஏன் காவ்யா அகிலனை உத்து உத்து பார்க்கிறாள்..? ஆனால், இது கொஞ்சம் ஊவாமுள்ளா உறுத்துற மாதிரி இருக்காது, ஏன்னா அண்ணனை காதலிச்சிட்டு தம்பியை கலியாணம் பண்ணிக்கிறது, அப்புறம் அவ அமெரிக்கா பொண்ணு வேற. அவளோட கல்சருக்கும், அகிலனோட கல்சருக்கும் எப்படி ஒத்து வரும். அகிலன் அம்மாஞ்சி,
காவ்யா அடாவடி... ஸூட் ஆகாதே ?
😔😔😔
CRVS (or) CRVS 2797
super kaviya vanthathum illama nera poi adi koduthutu vanthu iruka very good ipo avan pana plan ellam pocha eppadilam yosichan inga tha irukanum eni. aana kaviya just akilan nu therinji thana vanthu iruka akilanukana jodi illaye ithu nalla illa madhura va iniyan mrg pana mari kaviya va akilanuku jodi serka venam pa 30 th epi la puthusa ethipakalama
-
மதுர ஜில்லா... மச்சானே!-47
56 minutes ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-46
20 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-45
20 hours ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-44
3 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
4 days ago
- 25 Forums
- 220 Topics
- 790 Posts
- 0 Online
- 329 Members
