Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-36

9 Posts
8 Users
0 Reactions
98 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#382]

அத்தியாயம்-36

அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை லாவண்யா பேயறைந்தது போல இருந்தாள்.

நேற்று காஞ்சனா ஆன்ட்டி வீட்டில் அகப்பட்டபோது ஏற்பட்ட பயம்கூட இப்போது அவளுக்கு பெரிதாகத் தெரியவில்லை.

பழைய பிரச்சனையைவிட, நேற்று இரவு நடந்த புதிய சம்பவம் அவளுடைய மனதை அதிகமாக அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

யாரிடமும் சொல்ல முடியவில்லை. யாரிடம் சொல்வது? இலக்கியாவிடம் சொன்னால் என்ன ஆகும்?

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிட்டால்? அந்த எண்ணமே அவளை நடுங்க வைத்தது.

சமையலறையில் இலக்கியா சமைத்துக் கொண்டிருந்தார்.

இஷிதா அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

லாவண்யா மட்டும் எதுவுமே நடக்காதது போல அமைதியாக வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சுரேஷ் கறி வாங்கிக் கொண்டு வந்து லாவண்யா முன் நீட்டினார்.

"இதை வாங்கி உள்ள வச்சுடு."

அப்போது ஆவுடையப்பன், "ஏன்டா... மருமகள்கிட்ட கொடு. அவதானே சமைப்பா." என்று சொல்லவும், சுரேஷ் உடனே இலக்கியாவிடம் கறிப் பையை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

லாவண்யா எதுவுமே பேசவில்லை. இஞ்சி, பூண்டு உரித்து இலக்கியாவிடம் கொடுத்தபடியே இருந்தாள்.

அவளுடைய விரல்கள் மட்டும் வேலை செய்தன. மனம் வேறு எங்கோ இருந்தது.

சாப்பிடும் நேரத்திலும் அப்படித்தான். தட்டில் இருந்த உணவை எதையோ பறிகொடுத்தவள் போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னாச்சு லாவண்யா? சாப்பிடு." என்று இலக்கியா சொல்ல, "பசிக்கலை சித்தி... லேசா தலைவலி." என்று சமாளித்தாள்.

"அப்ப ரூம்ல போய் படுத்துக்கோ."

"இல்லை சித்தி... தூக்கம் வராது." என்று உடனே மறுத்தாள்.

"தைலமாவது தேய்ச்சிக்கோ." என்று ஒரு சிறிய பாட்டிலை நீட்டினார். லாவண்யா அதை வாங்கிக் கொண்டாள்.

அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை.

அதே நேரத்தில் சாரதி வீட்டில் அதிகாலை ஏழு மணி அளவில் எழுந்திருந்தான். பல் தேய்த்துவிட்டு வந்தவனுக்கு காஞ்சனா டீ கொடுத்தார்.

அவன் அமைதியாக வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான்.

அப்போது சோபாவின் அருகில் முந்தைய நாள் மடித்து வைக்காமல் இருந்த துணிகள் கண்ணில் பட்டன.

காஞ்சனா அவற்றை எடுத்துக் கொண்டு மடிக்க ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் கவருக்குள் இருந்த ஒரு துணி கீழே நழுவியது.

காஞ்சனா அதை கவனித்து தள்ளிவிட்டார். அது நேராக சாரதியின் காலடியில் வந்து நின்றது.

சாரதி குனிந்து பார்த்தான். அந்தக் கவர் அவனுக்கு யாருடையது என்று நன்றாகத் தெரியும். லாவண்யா தைக்கக் கொடுத்து வந்த சுடிதார் இருக்கும் கவர். அவன் மெதுவாக அதை எடுத்தான்.

காஞ்சனா அவனைப் பார்த்தார். எதுவும் சொல்லவில்லை.

சாரதியும் எதுவும் கேட்கவில்லை. அவன் கவரைத் திறந்தான். உள்ளே இருந்த மெட்டீரியலை வெளியே எடுத்துப் பார்த்தான்.

ஒரு கணம் அந்தத் துணியைத் தடவிப் பார்த்தவன், பிறகு நேராக அம்மாவின் தையல் மெஷின் அருகே சென்றான்.

அங்கிருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தான்.

அதில் இருந்த லாவண்யாவின் அளவுகளைத் தேடிப் பிடித்தான்.

அதைப் பார்த்ததும் அவனுடைய முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அளவுகளை ஒரு முறை கவனமாகப் பார்த்துவிட்டு, துணியை விரித்தான்.

சுடிதார், பிளவுஸ் என்று தைக்கக் கற்றுக்கொண்டவன் தான். சிறு வயதிலிருந்தே காஞ்சனாவுக்கு உதவி செய்து பழகியிருந்ததால், பெண்கள் உடைகளை தைக்கத் தேவையான வேலைகள் அவனுக்கு புதிதல்ல.

அன்று காலை ஏழு மணிக்கே லாவண்யாவுக்கான சுடிதாரைத் தைக்க முடிவு செய்துவிட்டான்.

நேரத்தை வீணாக்கவில்லை. முதலில் துணியை நிதானமாக அளந்தான். எந்த இடத்தில் வெட்ட வேண்டும்... எவ்வளவு விட வேண்டும். எப்படிப்பட்ட நெக் வைத்தால் அவளுக்குப் பிடிக்கும். கைகளின் வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து வெட்டினான்.

காஞ்சனா அமைதியாக அவனை கவனித்துக் கொண்டிருந்தார். சாரதி இப்படி ஒரு வேலையைச் செய்கிறான் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை.

சில நிமிடங்களில் மெஷினை இயக்க ஆரம்பித்தான். அவன் கைகளின் வேகம் பழகிய கைகளுக்குரியதாக இருந்தது.

ஒரு பக்கம் தைத்துக் கொண்டே இருந்தான்.

அந்த நேரத்தில் காஞ்சனா இட்லியும் குருமாவும் கொண்டு வந்து அவன் முன் வைத்தார்.

சாரதியோ ஒரு கையால் ஸ்பூனால் இட்லியை எடுத்துச் சாப்பிட்டபடியே இன்னொரு கையால் தையலைத் தொடர்ந்தான்.

காஞ்சனா எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

கோபம் இன்னும் இருந்தது. ஆனால் அந்தக் கோபத்துக்குள் ஏதோ ஒரு வலி இருந்தது.

மகன் இவ்வளவு தீவிரமாக அந்தப் பெண்ணுக்காக உடையைத் தைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது, 'இதை அவளிடம் கொண்டு போய் கொடுக்கப் போகிறானோ?' என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.

சாரதி மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் தைத்துக் கொண்டிருந்தான்.

மதியத்துக்குள் அழகாக தைத்து முடித்துவிட்டான்.

லாவண்யாவுக்கு பிடிக்கும் வகையில் பூக்கள் கொண்ட டிசைனில் இருந்த அந்த மெட்டீரியல், சில இடத்தில் ஸ்டோன் ஓர்க் எல்லாம் இணைத்து, அவன் கைகளில் அழகான சுடிதாராக மாறியிருந்தது.

டிவி பார்த்தபடி, பேண்டிலும் நாடாவை நுழைத்து முடித்தான்.

பிறகு அதை அழகாக ஐயர்ன் செய்தான். அதை மடித்து ஒரு கவருக்குள் வைத்தான்.

காஞ்சனா மட்டும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

'தைத்துட்டு அவளிடம் தந்துட்டு... பார்த்துப் பேசப் போறான்.' என்று மனதுக்குள் கோபப்பட்டார்.

ஆனால் சாரதி அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

மதியம் சாரதி குளித்து முடித்து யூனிஃபார்ம் அணிந்து வந்தான். காஞ்சனா சமைத்திருந்த சிக்கன் குழம்பைச் சாப்பிட்டான்.

அவனுக்கு எதிரே காஞ்சனாவும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இருவருக்கும் நடுவில் இன்னும் அந்தச் சம்பவத்தின் பாரம் இருந்தது. சாப்பிட்டு முடித்த சாரதி கையைக் கழுவிக் கொண்டான். பிறகு பைக் சாவியை எடுக்கச் சென்றான்.

அப்போது சோபாவின் மீது இருந்த சுடிதார் கவர் அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்துக் கொண்டு நேராக காஞ்சனாவின் அருகில் வந்தான். அன்னையின் கையைப் பிடித்தான்.

காஞ்சனா அவனைப் பார்த்தார்.

சாரதி அந்தக் கவரை அவருடைய கையில் வைத்து, "இந்த டிரஸ்.. அவ உங்களிடம் தைக்கக் கொடுக்கற சாக்குல என்னைப் பார்க்கத்தான் வந்தா." காஞ்சனாவின் முகம் இறுகியது.

"நான்தான் அவளிடம் அத்துமீறி முத்தம் தந்தேன். காதலிக்கற பையன் முத்தம் தரவும் என்னை தள்ளி விடவும் முடியாம தான் அவ நின்றா." காஞ்சனா கண்களைத் தாழ்த்தினார். மகனே அன்னையிடம் அவனது செயலை பேச என்ன செய்வார்.

"அவ மேல எந்தத் தப்பும் இல்லை. என்னை காதலிச்ச தப்பைத் தவிர." காஞ்சனா எதுவும் பேசவில்லை.

"நீங்க அவளை வெட்கம் கெட்டவனு சொல்ல முடியாது. அந்த வார்த்தை எல்லாம் என்னைத் தான் சேரும். நான் தான் ஆம்பள திமிருல அவளிடம் எல்லை மீறியது."

காஞ்சனாவின் விரல்கள் கவரை இறுக்கமாகப் பற்றிக் கொண்டன.

"நீங்க எப்படியும் இந்த டிரஸை தைப்பீங்களா இல்லையானு தெரியல." என்று சொல்லியவன், "அதனால நானே அவளுக்காக இந்த சுடிதாரைத் தைச்சிட்டேன்."

காஞ்சனா அதிர்ந்து அவனைப் பார்த்தார்.

"ஆனா நான் அவளிடம் இதைத் தரப்போறதில்லை." இப்போது காஞ்சனா முகத்தில் குழப்பம் தெரிந்தது.

"இந்த வீட்டுக்கான மருமகள் அவதான்னு உங்களுக்கு எப்ப ஸ்ட்ராங்கா தோணுதோ..

அப்ப அவளோட நம்பருக்கு போன் போட்டு, நீங்களே அவளை கூப்பிட்டு இந்த சுடிதாரைக் கொடுங்க." காஞ்சனா எதுவும் பேசவில்லை.

"அப்படி கொடுக்கணும்னு எப்பவும் தோணலையா..." என்று சொல்லிவிட்டு, "இதை கண்டந்துண்டமா கத்திரிக்கோலால கிழிச்சு போடுங்க. இல்ல எரிச்சு தூக்கிப் போட்டுடுங்க. ஆனா அது உங்க பையனோட ஆசையும் சேர்த்து கிழிச்சி எரிப்பதுக்கு சமம்." காஞ்சனாவின் கண்கள் கலங்கின.

"எனக்கு கல்யாணம் என்று எந்தப் பொண்ணையும் பார்க்காதீங்க." அவன் குரல் இப்போது மிகவும் உறுதியாக இருந்தது.

"எனக்கு அவதான், அவளுக்கு நான் தான்" என்று மட்டும் சொல்லிவிட்டு, ''நான் வேலைக்குக் கிளம்பறேன்." என்று வெளியே நடந்தான்.

காஞ்சனா கையில் இருந்த சுடிதாரையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு வாசலை நோக்கிப் பார்த்தார்.

காலையிலிருந்து மகன் தானாக அளவுகளைப் பார்த்து, துணியை வெட்டி,  சுடிதாராகத் தைத்து, அழகாக அலங்கரித்து, 

அதை அந்தப் பெண்ணிடம் கொடுக்காமல் தன் கையிலேயே வைத்துவிட்டுப் போயிருந்தான்.

அவன் மனதில் அவள் எவ்வளவு ஆழமாக இருக்கிறாள் என்பதை காஞ்சனாவால் இப்போது மறுக்க முடியவில்லை.

அன்று முழுவதும் அந்தச் சுடிதார் அவருடைய கண்முன்னே இருந்தது.

எதிரே இருந்த ஹேங்கரில் அதை மாட்டி வைத்தார்.

அதைப் பார்த்தபடியே தையல் வேலையில் மூழ்க முயன்றார்.

ஆனால் நூல் ஓடிக் கொண்டிருந்தாலும்...

மனம் மட்டும் மகனது ஆசையை சுற்றியே இருந்தது.

மறுபுறம் லாவண்யா அன்று முழுவதும் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்ததால், இலக்கியாவும் பெரிதாக அவளைக் கண்டுகொள்ளவில்லை.

இரவு படுக்கச் செல்லும்போது, லாவண்யா கதவைப் பார்த்தாள். இங்கு வந்து தங்கிய இத்தனை நாட்களிலும் அவள் அந்த அறைக்கதவை இப்படி தாழிட்டதில்லை.

ஆனால் நேற்று இரவு நடந்த சம்பவத்துக்குப் பிறகு, இன்று தாழிட்டு கொண்டாள்.

தாழ்ப்பாள் சரியாகப் பொருந்தியிருக்கிறதா என்று இரண்டு முறை பார்த்துக் கொண்டாள். பிறகுதான் படுக்கையில் அமர்ந்தாள்.

அப்படியும் உறக்கம் வரவில்லை.

பேயைப் பார்த்தது போல கண்கள் திறந்தபடியே கிடந்தாள். 

அன்று இரவு சாரதி அவன் வீட்டுக்கு வந்தபோது, ஹேங்கரில் மாட்டியிருந்த லாவண்யாவின் சுடிதார் கவர் அவன் கண்ணில் பட்டது.

அதை ஒரு கணம் பார்த்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

காஞ்சனா அவனிடம் பேசவில்லை. சாரதியும் எதுவும் கேட்கவில்லை.

இருவருக்கும் நடுவில் இருந்த அமைதி மட்டும் இன்னும் நீடித்தது.

-

அடுத்த நாள் காலையில்...

கல்லூரிக்குக் கிளம்பும்போது லாவண்யாவிடம் எந்தச் சுறுசுறுப்பும் இல்லை.

அவள் முகத்தைப் பார்த்த இலக்கியா, "உடம்பு சரியில்லைன்னா லீவு போடு லாவண்யா." என்றார்.

"வேண்டாம் சித்தி. நான் பார்த்துக்கறேன்." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

தேவியைப் பார்த்ததும், முந்தாநேற்று இரவு நடந்ததை அப்படியே சொல்லிவிட வேண்டும் போல இருந்தது.

வார்த்தைகள் தொண்டை வரை வந்தன. ஆனால் அடுத்த நொடி அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டாள். எப்படிச் சொல்வது? எங்கே ஆரம்பிப்பது? என்று தெரியவில்லை.

"என்ன லாவண்யா... அப்செட்டா இருக்க?" தேவி அவளை உற்றுப் பார்த்தாள்.

"உனக்கு உடம்பு முடியலைன்னு உங்க சித்தி சொன்னாங்க. இன்னும் சரியாகலையா?" என்று சொல்லியபடி அவளுடைய நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்த்தாள்.

"சரியாகலை." லாவண்யா மெதுவாகச் சொன்னாள்.

"லீவு போடலை? காலேஜ் வந்துட்ட?" என்று கேட்டாள் தேவி.

"எக்ஸாம் வருது. இந்த நேரத்துல லீவு போட முடியலை." என்று சொல்லிவிட்டு அமைதியானாள்.

பேருந்தில் ஏறியதும், "தேவி... எனக்கு தூக்கம் வருது. காலேஜ் வந்ததும் எழுப்பு." என்று சொல்லி, பையை மடியில் வைத்துக் கொண்டு அதன் மீது தலை வைத்து படுத்துக் கொண்டாள்.

தேவியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. கல்லூரி வந்ததும் எழுப்பினாள்.

லாவண்யா திடுக்கிட்டு எழுந்து சுற்றிப் பார்த்தாள். ஆனால் கல்லூரிக்குள்ளும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. வகுப்பில் அமர்ந்திருந்தாலும், ஆசிரியர் என்ன பேசுகிறார் என்பதே காதில் விழவில்லை.

பார்வை எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தது.

மதியம் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் போதும் அதே நிலை.

தேவி அவளிடம் பெரிதாக எதுவும் கேட்கவில்லை.

வீட்டுக்கு வந்த பிறகு தேவியும் மாடிக்கு வந்து லாவண்யாவுடன் பாடம் எழுத அமர்ந்தாள். லாவண்யா அதிகமாகப் பேசவில்லை.

தேவி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னாள்.

சிறிது நேரம் கழித்து தேவி சிரித்தபடி, "என்னடி... இன்னும் அசதியா இருக்க?" என்று கேட்டாள்.

"எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்க." பிறகு அவளை கிண்டலாகப் பார்த்து,

"சாரதி அண்ணா நைட் வந்தப்புறம் அவரோட பேசறியா? நைட்டெல்லாம் ரொமான்ஸ் சாட். அதான் தூங்கி தூங்கி வழியறியா?" என்று கேலி செய்தாள்.

லாவண்யா பதில் சொல்லவில்லை. அது உண்மையில்லை என்று மறுக்கவும் இல்லை. தேவி அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு, "சரி டி... நான் போறேன்." என்று எழுந்தாள்.

அப்போது லாவண்யா அவளை அழைத்தாள்.

"தேவி..."

"என்ன?"

"இங்க வந்தா ஷால் போட்டுட்டு வா." தேவி உடனே முகத்தைச் சுளித்தாள்.

"அடப்போடி! காலேஜுக்குத்தான் துப்பட்டா. இங்கயுமா?" என்று அலுத்துக் கொண்டபடி கீழே இறங்கினாள்.

லாவண்யா எதையும் விளக்கவில்லை. அவள் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அன்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகு, லாவண்யா மீண்டும் தன் அறைக்குச் சென்றாள்.

கதவைத் தாழிட முயன்றபோது, தாழ்ப்பாள் சரியாக இல்லாததை கவனித்தாள்.

அவள் கையை நிறுத்தினாள்.

"சித்தி..." என்று அழைத்தாள்.

இலக்கியா திரும்பிப் பார்த்தார்.

"கதவோட தாழ்ப்பாள் எங்க சித்தி? உடைஞ்சிருக்கு." என்று கேட்க, "அதுவா?"

இலக்கியா சாதாரணமாகச் சொன்னார்.

"துரு பிடிச்சிருந்தது போல லாவண்யா. மதியத்துக்கு மேல பார்த்தப்ப கீழே கிடந்தது. அந்த ஸ்க்ரூவும் காணோம்." லாவண்யாவின் முகம் அப்படியே மாறியது.

அவளுடைய பார்வை உடைந்த தாழ்ப்பாளில் நிலைத்தது.

தானாக துருப்பிடித்து உடைந்திருந்தால்... ஸ்க்ரூ மட்டும் எப்படி காணாமல் போகும்?

நேற்று இரவு தன் வாயை பொத்தி இருந்த அந்தக் கை...

அந்தக் குரல் பேசியது, அவள் படுத்திருந்த அறையில் நடந்தவை எல்லாமே ஒரே நேரத்தில் நினைவுக்கு வந்தது.

அவளுடைய நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.

'இதெல்லாம்... திட்டமிட்டு நடக்கின்றது என்ற எண்ணம் லாவண்யாவுக்குள் எழுந்தது.

அடுத்த நொடி அவள் அறைக்குள் செல்லாமல் அப்படியே நின்றாள்.

எத்தனை மணி நேரம் அப்படியே உறைந்து நிற்க முடியும். ஒரு கட்டத்தில் இஷிதா படுத்துறங்கும் இடத்திற்கு அருகே உறங்கியாக வேண்டுமே. அந்த பயத்தில் லாவண்யா முகம் வேர்த்தது.

-தொடரும்

பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : September 30, 2026 8:16 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Appo antha chittapa panra vela thana ethu.. yepdi thappika pora.. compass ah engeyum use panna start pannu ma.. be brave.. Nayantara than ennum yerikkum avanugaluku


 
Posted : September 30, 2026 8:51 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Omg elakkiya husband did this. Elder person did like this was very awkward. Laya took brave decision. Tell this to elakkiya . Or ask elakkiya to come for sleep with u. Sarathy well done. U opened ur mind told everything to ur mother. Kanchana will think over it. Very intresting sis. Really i didnt expect this unexpected twist. Sis.


 
Posted : September 30, 2026 9:27 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 36)

சாரதியோட நிதானம் ரொம்ப பிடிச்சிருந்தது, அது மட்டும் இல்லாமல் தன்னோட முடிவுலயும் ரொம்பத் தெளிவா இருக்கிறான்.
இதுவே போதும், அவன் லாவண்யாவை நல்லபடியா பார்த்துப்பான்ங்கிற நம்பிக்கை வந்திடுச்சு. அதே மாதிரி காஞ்சனாவும் மாறிடுவாங்கன்னுத் தோணுது. மகனோட ஃபுட் பால் ஆசையைத் தான் நிறைவேத்த முடியலை,
அட்லீஸ்ட் சாரதிக்கு பிடிச்ச லாவண்யாவையே மருமகளாக்கிப்பாங்க பாருங்களேன்.

எப்ப ஒரு இடத்துல தப்பு நடக்குதுன்னுத் தெரியுதோ, அப்பவே அதை தட்டி கேட்கணும், இல்லையா சத்தமவாவது எடுத்துச் சொல்லிடணும். இப்படி வாயை மூடிட்டிருந்தால், தப்பு மேலும் மேலும் நடக்க நாமளே இடம் கொடுக்கிற மாதிரியாகிடும்.
அநேகமா அந்த ஆளு சுரேஷாத்தான் இருக்கணும்.
ஒருவேளை, லாவண்யாவோட காதலை தெரிஞ்சிக்கிட்டு மிரட்டி கூட தன்னோட ஆசைக்கு பணிய வைக்குறதா கூட இருக்கலாம்.
ஆனால், அதற்கெல்லாம் இடமே கொடுத்திடக் கூடாது.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : September 30, 2026 12:58 pm
(@lachu-balu-varadhan)
Posts: 10
Active Member
 

Lavanya yen ipadi Iruka unmaiya chithi ta sola vendiyathu dana, ava thaththa va ila Chithappa va yara irukum becoz Chithappa one time nyt vanthu avala pathutu povare oru vela avara dan irukumo


 
Posted : September 30, 2026 3:31 pm
(@lachu-balu-varadhan)
Posts: 10
Active Member
 

Lavanya yen ipadi Iruka unmaiya chithi ta sola vendiyathu dana, ava thaththa va ila Chithappa va yara irukum becoz Chithappa one day nyt vanthu avala pathutu povare oru vela avara dan irukumo 


 
Posted : September 30, 2026 3:34 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy avan oda virupa tha thelivu ah sollitan pa 

Lavanya veetula than yaro misbehave panraga onnu ava chittapa ah illa na andha thatha rendu per la yara chum oruthar ah than irukanum 


 
Posted : October 2, 2026 7:04 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

யாரு பண்ற வேல இது


 
Posted : October 7, 2026 10:29 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Suresh ah


 
Posted : October 8, 2026 1:46 pm

Scroll to Top