பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
அத்தியாயம்-47
சாரதி லாவண்யா காதல் எவ்விதமான இடைஞ்சலும் இல்லாமல் பயணிக்க, லாவண்யா பரீட்சை எழுதி முடித்து விடுமுறைக்கு செல்லும் நாளும் வந்தது. கூடவே மாலதிக்கு ஏழாம் மாதம் வளைக்காப்பு என்று இலக்கியா குடும்பத்தையும் அழைத்திருக்க, கூடவே சின்ன சம்பந்தியாக காஞ்சனாவுக்கு வர அழைப்பு விடுத்திருந்தார் புருஷோத்தமன்-அலமேலு.
அதனால் காஞ்சனா சாரதி கூட வர தயாராகினார்கள்.
லாவண்யா தேவியை அழைத்திருக்க, தேவி வீட்டில் சரிகாவுக்கு அன்று தான் பெண் பார்க்க வருவதால் தேவி வரமறுத்தாள்.
"மாலதி அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் நேர்ல பார்க்க வர்றேன் டி." என்று கூறிட, லாவண்யாவும் சரியென்றாள்.
லாவண்யாவோ வேகமாய் தலையாட்ட, "அதான்னே... நான் வரலைன்னா உனக்கென்ன... அதான் சாரதி அண்ணா வர்றாரே. உனக்கு ஜாலியா தான் இருக்கும்" என்று சிரிக்க, லாவண்யாவோ "கேலி பண்ணாதடி.. சாரதியே வரலை வரலைன்னு சொன்னவனை எப்படியோ அத்தையை ஐஸ் பண்ணி நைஸ் பண்ணி, அப்பாவா வச்சி சாரதியை கூப்பிட வச்சிட்டேன். அவனை வரவக்க படாத பாடு பட்டுட்டேன்." என்றாள்.
"சரி சரி.. டைம் ஆகப்போகுது போ" என்று விரட்ட, லாவண்யா புறப்பட்டு செல்ல, அந்த நேரம் வாசலை பார்த்த இஷிதா, "அக்கா வந்துடுச்சும்மா... சாரதி மாமா.. அதோ அக்கா" என்று கத்த, "அச்சோ.. வந்துட்டாரா. அவர் வர்றதுக்குள்ள தேவியிடம் சொல்லிட்டு வர ஓடினேன்." என்று வர, வாசலை அடைத்தபடி சாரதி உயரமாய் நின்றிருந்தான்.
அவனை மோத வந்து கவனித்து தள்ளாடி நிற்க, "லக்கேஜ் எடுத்துக்கோ" என்று இலக்கியா கூற, லாவண்யா திருட்டு முழியோடு, எடுக்க அவளிடமிருந்து பிடுங்கிய படி சாரதி முன்னே சென்றான்.
இலக்கியா சுரேஷுடன் இஷிதா கைப்பிடித்து வந்தாள். காஞ்சனாவோ நடக்க, "பாருங்க அத்தை.. சிடுசிடுனு வர்றார்." என்றாள்.
"எனக்கு தெரியாதும்மா.. அவனாச்சு நீயாச்சா. வளைகாப்பு விழாவுக்கு எல்லாம் வரலைன்னு சொன்னவனை, வம்படியா இழுத்துட்டு வர.
என்னை மட்டும் போக சொன்னான். படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு. இந்த நேரம் அங்க வேண்டாம்னு சொல்லியும் உங்கப்பாவிடம் தொல்லை செய்து, 'நீங்க சொன்னா வருவார்ப்பா'னு ஏத்தி விட்ட, இப்ப உங்கப்பாவிடம் மறுக்க முடியாம வந்தா இப்படி தான் மூஞ்சு காட்டுவான்.
காதலிக்கும் போது இந்த மூஞ்சை காட்டிருக்கானா? இப்ப தெரிந்துக்கோ.. பசங்க எல்லாம் காதலிக்கறப்ப ஒரு முகமும், கல்யாணம்னு ஆகறப்ப ஒரு முகமும் காட்டுவாங்க.." என்று மாமியாராக அச்சுறுத்தியும் பேசினார்.
லாவண்யா மெதுவாக பின் தொடர, இஷிதா இலக்கியா கையை விடுத்து லாவண்யா கையை பிடித்து நடந்து வந்தாள்.
சாரதி எஸ்டேட்டில் இருந்து வேலப்பன்சாவடிக்கு வந்து சேரும் வரை, தனியாக அமர்ந்து கொண்டான்.
வேலப்பன்சாவடிக்கு வந்தப்பின், வேறு பேருந்து ஏறும் போது, இலக்கியா காஞ்சனா இருவரும் ஒன்றாக பெண்கள் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள, சுரேஷுடன் இஷிதா ஆண்கள் பக்கம் மகளை அமர்த்தி தன்னுடன் அமர்ந்தார்.
லாவண்யா சாரதி அருகே அமர்ந்தால் நன்றாக இருக்குமென அவனை தேட, அவனோ தண்ணீர் பாட்டில் மட்டும் கடையில் வாங்கிக் கொண்டு வந்தான்.
படியில் ஏறி முன்னால் செல்ல இருந்தவனை படிக்கட்டில் எதிரே அமர்ந்த ஆண்கள் இருக்கையில் இருந்து, "இங்க வந்து உட்காரு" என்று கூப்பிட்டவள் அவன் சட்டையை வேறு பிடித்து இழுக்க, "கொல்ல போறேன் பாரு" என்று கண்ணை உருட்டினான் சாரதி.
"சாரதி ப்ளீஸ்." என்று பாவமாக முகத்தை வைக்க, சுரேஷ் திரும்பி பார்க்க தலையை திருப்பவும், லாவண்யா கையை தட்டிவிட்டு, அவனாக அவள் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்தான்.
சுரேஷ் லேசாக சிரிக்க, சாரதியும் லேசாக அசடு வழிந்தான். காஞ்சனாவும் திரும்பி பார்த்து, மகன் லாவண்யாவுடன் அமரவும், மகனை முறைத்தபடி திரும்பிக் கொண்டார்.
சாரதியோ 'போச்சு.' என்று தலையிலடித்து முடிக்க, "சாரதி.. என்ன தலைவலிக்கா?" என்று கேட்க, "எதுக்குடி சட்டையை பிடிச்சு இழுத்த? நான் வேற சீட்ல உட்கார்ந்து இருப்பேன்ல. இப்ப பாரு.. உங்க சித்தப்பா பார்க்கற நேரமா நான் இங்க உட்காருற நிலையில தள்ளிட்ட. இதுல அம்மா வேற முகம் திருப்பிக்கிட்டாங்க.
ஏதோ வரவே பிடிக்கலைனு சீன் போட்டான். இப்ப உன் பக்கத்துல உட்கார்ந்ததா என்னை என்னடி நினைப்பாங்க" என்று எகிறினான்.
"மூனு மணி நேரம், உன்கூட உட்கார்ந்து பேசிட்டு வர ஆசைப்பட்டேன் தப்பா?" என்று கேட்க, "பேசாத" என்று முகம் திருப்பி "ஆறு வேலூர்" என்று டிக்கெட் எடுத்தான்.
"நான் எடுத்திருப்பேனே மாப்பிள்ளை" என்று சுரேஷ் கூற, "பரவாயில்லை மாமா. பக்கத்துல கண்டெக்டர் இருக்கவும் எடுத்துட்டேன். அதனால என்ன மாமா கணக்கெல்லாம் பார்க்காதிங்க" என்று கூறினான்.
கொஞ்ச தூரம் போனதும், ஆளாளுக்கு முன்னால் வேடிக்கை பார்த்து வந்தார்கள்.
லேசாக சாரல் வேறு பொழிய, ஜன்னல் பக்கம் திரும்பினான்.
உம்மென்ற முகத்துடன், லாவண்யா ஜன்னல்புரம் திரும்பி இருக்க, அவளது கோபம் கூட அழகாக இருந்தது.
சற்று முன் வரை, தன்னை இப்படி அழுச்சாட்டியம் செய்து வரவைக்கின்றாளே என்று கடுப்புடன் இருந்தான். இதில் படிக்கட்டு ஏறி முன்னே நடக்கும் நேரம் பின்னால் சட்டையை பிடித்து இழுக்க, சுரேஷ் மாமா பார்த்ததும், சங்கடமாய் வேறு போனது. அதனால் முகம் காட்டி விட்டான். இந்த நிமிடம், லாவண்யாவை பக்கத்தில் வைத்து கோபத்தை இழுத்து பிடிக்கவும் முடியாமல் அவளை ரசித்தான்.
சாரதி கை தானாக அவளது தோளை சுற்றி வளைத்து கையை போட, லாவண்யா கையை எடுத்து விட்டாள்.
சாரதி மீண்டும் கையை போட, கையை எடுத்து விட்டு, அவனை இப்பொழுது அவள் முறைக்க, "லயாவுக்கு கோபமா?" என்றான்.
"உன்கிட்ட பேசலை போ... வேற பிளேஸ் காலியா இருந்தா அங்க உட்கார்ந்துக்கோ.
ஆசையா.. ஆசை ஆசையா... மூனு மணி டிராவல்... என்கூட ஜன்னல் சீட் பக்கம் உட்கார்ந்து பேச நினைச்சேன் பாரு. என்னை முடிந்தளவு இன்சல்ட் பண்ணிட்ட" என்றாள்.
"லூசு.." என்று அவளது தலையில் செல்லமாய் தட்டி, "இப்பவே என்னை எதுக்கு உங்கப்பா அம்மா, உங்க அக்கா வளைகாப்புக்கு வரச்சொல்லறாங்க. தேவையா இது? ஒரு வருஷம் இருக்கு. காதலிப்பது ஊருக்கே தெரியணுமா? யாராவது ஏதாவது பேசவா? தேவையில்லாம அவல்-லை எடுத்து நீங்களா மெல்லுங்கனு நீட்டினா என்ன அர்த்தம். இதுல உங்க சித்தப்பா பார்க்கற சமயம் சட்டையை பிடிக்கற. அவர் உன்னை பத்தி என்ன நினைப்பார்.
அண்ணன் பொண்ணு படிக்க வந்தா காதலிக்குது, இதுல பையனே சும்மா இருக்கான் இவ துள்ளறானு நினைக்கவா? எதுக்கு நீயாவே கண்டென்ட் பேச ரெடியாகற? இதுக்கு முறைச்சா மேடம் கோபப்படறிங்க" என்றான்.
''பேசாத.. ஆல்ரெடி இரண்டு மூன்று பேர் சின்னவளை கட்டி கொடுக்கறிங்களானு வீட்ல வந்து கேட்கறாங்க. அப்பா பையன் பார்த்தாச்சுனு சொல்லியும் சும்மா சொல்லறதா பேசறாங்க. அதான் நேர்ல அக்கா பங்ஷனுக்கு கூப்பிடறார்.
சும்மா ஒன்னும் கூப்பிடலை." என்று சிணுங்க, சாரதி 'இதுவேறயா?' என்று மலைத்தான்.
ஆனால் லாவண்யாவின் வதனம் நாளெல்லாம் பார்த்து ரசிக்கும் விதமாக அழகில் தேவதையாக மற்றவர்களை ஈர்க்க, போட்டி போட்டுக் கொண்டு வருவதில் அதிசயமில்லை என்றது அவன் மனம்.
சாரதி லாவண்யா மீது கையை போட்டு, "லயா... ஓகே.. சாரி.. இங்க பாரு." என்று திருப்ப, "ஒன்னும் வேண்டாம்" என்றாள்.
"ஏய்... சிரி டி. நீ தானே சொன்ன. மூன்று மணி நேர டிராவல் பக்கத்தில உட்கார்ந்து போறோம்னு. நீ சிரிச்சா தானே எனக்கு சந்தோஷமா இருக்கும்" என்றான்.
சாரதி ஒருமுறை பேருந்தை கவனித்தான். ஒரளவு அவரவர் முன்னால் இருக்கும் கவனத்தில் இருக்க, மழை பொழியவும், கூடுதலாக அதில் தான் பார்வை பதித்திருந்தனர்.
சாரதி நெருங்கி அமர்ந்து, ஜன்னலோரம் மழை சாரலில் கையை நீட்ட, "கண்டெக்டரா வேலை செய்யற... பேருந்தில் கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள் என்ற வாசகத்தை படிச்சதில்லை கையை வெளிய நீட்டற" என்று திட்டி கையை மடக்க, சாரதியோ வேண்டுமென்றே வெளியே நீட்டி, தண்ணீரை எடுத்து லாவண்யா முகத்தில் தூவ, லாவண்யாவோ "இதே நான் விளையாடினா லூசுடி நீனு சொல்வ." என்றாள்.
சாரதி புன்னகையோடு சிரித்தான்.
மழை பெரிதாக, இயல்பாகவே ஜன்னல்புரத்தை மூட எழு, லாவண்யா சாரதி புறம் திரும்ப, கன்னத்தில் அவன் இதழ் மின்னலாய் உரசியது. வேண்டுமென்றே உரசினானா என்பதை அவன் தான் விளக்க வேண்டும்.
இப்பொழுது எல்லாம் இந்த மின்சார உரசல்கள் இயல்பாக நடந்தால் பதறுவது மற்றவர்கள் பார்த்தனரோ என்ற பயத்தில் மட்டுமே. இவனுக்குள் அது இயல்பானதாக மாறியது.
ஆனாலும் லாவண்யா 'அம்மா" என்று திடுக்கிட, சாரதியும் சுற்றி யாராவது பார்த்தனரா என்று பயந்து, ஜன்னலை சாற்ற முயன்றான்.
அதுவோ ஈரம் பட்டு துருப்பிடித்து இருக்க சற்று ஆட்டம் காட்டியே மூடினான்.
கண்ணாடி தடுப்பு தான் ஜன்னல் என்றதால் வேடிக்கை பார்த்தாள்.
'பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்...
பின்வாசல் முற்றத்திலே துளசி மாடம்...
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்..
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்..
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்...
அன்பே அன்பே நீயே..!" என்று சாரதி போன் அலற, "உங்கப்பா தான்" என்று எடுத்தான்.
"சொல்லுங்க மாமா" என்றான்.
"பஸ் ஏறிட்டிங்களா மாப்பிள்ளை. நீங்க வர்றிங்க தானே?" என்று கேட்க, 'வரலைன்னா நீங்களும் உங்க பொண்ணும் விடலையே மாமா' என்று மனதிற்குள் கூறியவன் "லயா கூட தான் இருக்கேன் மாமா. சின்ன மாமா முன்ன இருக்கார். பஸ்ல வந்துட்டு இருக்கோம். இங்க மழை தூவுது" என்றான்.
"அப்படியா நல்லது மாப்பிள்ளை. வாங்க வாங்க. பெரிய மாப்பிள்ளையோட அப்பா அம்மா நீங்க வர்றிங்களானு கேட்டாங்க. அதான். ஒன்னும் பிரச்சனை இல்லை மாப்பிள்ளை. நிதானமாக வாங்க." என்று கூறி அணைத்தார்.
"ஒரு பச்ச மண்ணை... சாதி வெறிப்பிடிச்சவர்... சண்டை வரும் அப்படியிப்படி பேசிட்டியேடி. இந்த மனுஷன் நான் வேற கேஸ்டா இருந்தா கூட, உன் மேல வச்ச பாசத்துல, என்னை ஏத்துட்டு இருப்பார் தெரியுமா?" என்று பேசினான்.
"ஆங்... எங்கம்மா அடி வெளுத்தாங்க. அதெல்லாம் தெரியலை." என்றாள்.
சாரதிக்கு சிரிப்பு தான் வந்தது. இவனுக்காக அல்லவா அடி வாங்கினாள்.
அதுவும் விளக்குமாறு பிய்ந்து சிதறி, என்று சிரித்தான்.
"உண்மையில நீ பண்ணற அழுச்சாட்டியத்துக்கு, உங்கப்பா வேற கேஸ்டா இருந்தா கூட, என்னிடம் உன்னை தள்ளி விட்டிருப்பார்.'' என்று கேலி பேசினான்.
"பின்ன.. சின்ன வயசுலயே சின்ன விஷயத்துக்கு எல்லாம் ரோட்ல உருண்டு பிரண்ட கலை எல்லாம் யூஸ் பண்ணுவேன்னு அவருக்கு தெரியாதா" என்று லாவண்யாவுமே சிரித்தாள்.
இவ்வாறாக.... கண்டெக்டர் சாரதி லாவண்யா குடும்பத்தில் ஒருவனாக
கலந்து, மாலதியின் வளைகாப்பு விழாவுக்கு சென்றுக் கொண்டிருந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ
Sarathy fantastic da. Lovable sarathy. Laya u r so.lucky. wonderful narration sis. We can see this kind of sarathy in our life very rare. Awesome narration sis. Sarathy thoughts, behavior, love romance etc etc. Wonderful. Laya also very bold and adamant for sarathy. She stay in her decision. Fantastic narration sis.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 47)
அடிப்பாவி மக்கா ....! வளைகாப்புக்கு எதுக்குடி சாரதி ?
ஆனாலும் ரொம்பத்தான் அழிச்சாட்டியம் பண்ணுறாள் இவள். சாரதி சொன்ன மாதிரி வேற கேஸ்ட்டா இருந்தாலும், இவள் பண்ற அட்டகாசத்துக்கு இவளை சீக்கிரமா எவன் கையிலயாவது பிடிச்சுக் கொடுத்திட்டா போதும் என்கிற நிலைமைக்குத்தான் அலமேலுவும் புருசோத்தமனும் வந்திருப்பாங்க..
அந்தளவுக்கு அடம் பிடிக்குறாள், இவளையெல்லாம் பெத்தாங்களா, இல்ல செய்தாங்களான்னேத் தெரியல போங்க.
ஐய்... சாரதியோட ரிங்டோனே நான் எதிர்பார்த்த பாடல் தானா..
சூப்பர்.
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50
18 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48
45 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
1 hour ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
1 hour ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-43-44
2 hours ago
Recently viewed by users: Kalidevi 57 minutes ago.
- 26 Forums
- 377 Topics
- 1,918 Posts
- 1 Online
- 442 Members
