Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50

9 Posts
9 Users
1 Reactions
37 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#395]

அத்தியாயம்-49

After 1 Year 

நேற்று தான் லாவண்யா சாரதியின் ரிசப்ஷன் முடிந்திருந்தது. இன்று

சாரதி-லாவண்யாவின் திருமணம்

ஒரு வாரத்திற்கு முன்பே காஞ்சனா பெண் வீட்டிற்கு வந்து, அங்கிருந்தே திருமண வேலைகளில் ஐக்கியமாகிவிட்டார்.

நேற்று காலையில்தான் முத்து அண்ணாவுடன் வேலூருக்கு வந்திருந்தான் சாரதி.வந்தவன் நேராக அலங்காரம் செய்து கொண்டு கோர்ட் சூட் சகிதம் ரிசப்ஷனுக்கு சென்றான்.

அவன் தோற்றத்திற்கும், தோரணைக்கும், அவன் வேலை பற்றி பகிரங்கமாக கூறிய நிலையும், அவனை மென்மேலும் உயர்த்தி தான் பார்க்க வைத்தது. ஒருவன் தன் வேலையை தயக்கமின்றி சொல்கின்றான். அவன் பணி அவனுக்கு உயர்வானதாக எதிரே இருப்பவரிடம் தெரிவிக்கும் தருணம், அங்கே கேலி செய்து யார் நிற்க முடியும். 

நிச்சயதார்த்தம் முடிந்து, சேலை கொடுத்து தட்டு மாற்றி, புகைப்படம் எடுத்து, ப்ரீ-வெட்டிங் ஷூட் கூட முடித்துவிட்டு, அதே மண்டபத்தில் தான் மணமகன் அறையில் இரவு உறங்கினான்.

அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும், வேஷ்டி சட்டையோடு தயாராகி நின்றவனைப் பார்த்த விக்னேஷ், "என்ன சகலை வேஷ்டி கட்ட வரலையா. வா நான் கட்டிவிடுறேன்." என்று வேஷ்டியை சரியாகக் கட்டிவிட்டான்.

சாரதி இடுப்பைப் பார்த்துக் கொண்டு, "இடுப்புல நிக்கும்தானே? புட்பால் கோச்சிங் பண்ணறதால உடம்பு கட்டுமஸ்தா ஆகிருக்கா. தாத்தா இறப்புக்கு வந்து பார்த்தப்ப இப்படி இல்லை.யே" என்று சந்தேகமாகக் கேட்டான்.

"அதெல்லாம் நிக்கும் சகலை! கோச்சிங் போறப்ப விளையாடவும், கொஞ்சம் உணவுமுறல மாறியது. அதனால.." என்று கூற விக்னேஷ் வேஷ்டியை இன்னொரு முறை இறுக்கமாகச் சரி செய்தான். 

பிறகு மண்டபத்திற்குள் இருந்த விநாயகர் முன் தாலி, பதினெட்டு வகை சீர்வரிசைத் தட்டுகள் என அனைத்தையும் வைத்து இறைவனை வணங்கிவிட்டு, சாரதி இறைவனை வேண்டி வெளியே நடந்து வந்தான்.

வாசலிலேயே பெண் வீட்டார் அலங்கரித்த ஆரத்தித் தட்டுகளுடன் காத்திருந்தனர்.

அவர்களில் இஷிதா, ஆரத்தி எடுக்கப் போவதைவிட, சாரதியைப் பார்த்த சந்தோஷத்தில் குதிக்காத குறையாக ஓடி வந்தாள்.

"சாரதி மாமா... நான் தான் அந்த பஸ் மாடல் செய்தேன். நீங்க கண்டெக்டர் இல்லையா? நான் அதனால பஸ் நிற்கற மாதிரியும், லாவண்யா அக்கா பஸ்ஸுக்கு கல்யாண சேலையோட வெயிட் பண்ணற மாதிரி செய்திருக்கேன்" என்று சுட்டிக் காட்டினாள்.

பெருமையாகச் சொல்லிவிட்டு ஆரத்தித் தட்டைப் பிடித்தாள்.

அந்தத் தட்டைப் பார்த்ததும் சாரதிக்கு இன்னொரு ஆச்சரியம்.

முழுவதும் இஷிதாவுடைய கைவண்ணம்.

பள்ளியில் செய்யும் கிராஃப்ட் வேலைகளில் ஆர்வமாக இருக்கும் இஷிதா, இந்த ஆரத்தித் தட்டையும் தனக்கே உரிய கற்பனையுடன் அழகாக அலங்கரித்திருந்தாள்.

அதற்கு லாவண்யாவும் உதவியிருந்தாள்.

பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது போலவும், அதன் அருகே சாரதி புட்பால் விளையாடுவது போலவும், தூரத்தில் மணப்பெண் லாவண்யா நின்று அதை வேடிக்கை பார்ப்பது போலவும் அந்த அலங்காரத்தில் சிறிய சிறிய உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சாரதி அதை ரசித்துப் பார்த்தான். "ஏய் இஷிதா... ரொம்ப அழகா பண்ணியிருக்கியே!" என்றான்.

"லாவண்யா அக்காவும் ஹெல்ப் பண்ணாங்க." என்றாள்.

"அப்படியா?" என்று சாரதி லாவண்யாவைப் பார்த்தான்.

அவள் தூரத்தில் மணப்பெண் அலங்காரத்துடன் வெட்கத்துடன் சிரித்தாள்.

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு."

என்று சொல்லிவிட்டு, எப்போதும்போல இஷிதாவின் கையில் ஒரு இனிப்புப் பொட்டலத்தோடு சிறிய பரிசையும் வைத்தான்.

மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்ததால் பரிசை வாங்கிக் கொண்டு, "தேங்க்யூ மாமா" என்று இஷிதா குதூகலித்தாள்.

அதற்குள் ஒருவருக்கொருவர் ஆரத்தி எடுத்து முடித்தனர்.

புருஷோத்தமனே மாப்பிள்ளைக்கு செயின் அணிவித்து, மோதிரம் போட்டு, சாரதி கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு அழைத்து வந்தார்.

அங்கே மணமகளாக லாவண்யா அமர்ந்திருந்தாள்.

அவளைப் பார்த்ததும் சாரதியின் கால்கள் ஒரு நொடி நின்றுவிட்டது போல இருந்தது.

சிவப்பு நிற ஜரிகை பட்டுப் புடவை, நெற்றியில் குங்குமம். கழுத்தில் நகைகள். கைகளில் வளையல்கள் அணிந்து முகம் முழுவதும் திருமணக் களையின் அழகு.

அவன் இதுவரை பார்த்த லாவண்யா வேறு.

இன்று அவன் முன்னால் தேவதை பெண்ணாக அமர்ந்திருந்தவள்.

அவனுடைய மணப்பெண்.

இத்தனை அழகான பெண் என் துணைவியாக வருவாள் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை...

கண்டெக்டர் வாழ்க்கை.

சாதாரண சம்பளம்.

எல்லாமே தன் ஆசைக்கு ஏற்றபடி அமையாது என்று எத்தனையோ முறை நினைத்திருந்தான்.

ஆனால் இன்று...

அவனுடைய வாழ்க்கையில் தான் விரும்பிய பெண்ணே மணப்பெண்ணாக அமர்ந்திருந்தாள்.

அதைவிட பெரிய மனநிறைவு அவனுக்கு வேறெதுவும் இல்லை.

தேவி அருகில் நின்றபடி லாவண்யாவிடம்,

"என்னடி... இப்பவே சொற்பொழிவு ஆத்தப் போறாங்க போல?" என்று கிசுகிசுத்துச் சிரிக்க,

லாவண்யா அவளை முறைத்தாள்.

"சும்மா இரு தேவி" என்றதும் அதற்குள் திருமணச் சடங்குகள் தொடங்கின.

இன்னார் மகள், இன்னார் மகனை மணப்பதாக கூறி பெரியவங்கள் பேச, பிறகு சில மந்திரங்களுடன் கூறி முடித்தனர்.

வயதில் பெரிய தம்பதியர், வாழ்க்கையில் அனுபவமும் ஆசீர்வாதமும் நிறைந்த பெரியவர்களின் கைகளால் தாலி எடுத்துக் கொடுக்கப்பட்டது. சாரதியும் பக்தியுடன் வாங்கிக் கொண்டு லாவண்யா கழுத்தில் கட்டினான். அடுத்த நொடியில்...

மங்கள நாண் அவளுடைய கழுத்தைத் தொட்டது.

கெட்டிமேளம் முழங்கியது.

சுற்றிலும் மலர்கள் தூவப்பட்டன.

சாரதி லாவண்யாவைத் தன் வாழ்க்கையின் துணைவியாக ஏற்றுக் கொண்டான்.

"பைனலி... கண்டெக்டர் சாரதி லயாவை கல்யாணம் பண்ணியாச்சு" என்று கிசுகிசுத்தான். லயாவோ ஆனந்த கண்ணீர் உகுத்தினாள். 

அந்த நொடி... புருஷோத்தமன் அலமேலு, தங்கள் மகளின் கையைப் பிடித்து சாரதியின் கையில் ஒப்படைத்தார்.

சாரதியின் மறுபக்கக் கையை காஞ்சனா பிடித்துக் கொண்டார்.

மகனைப் பெற்ற தாயாக மட்டுமல்ல... மருமகளைப் பெற்ற தாயாகவும் அங்கே நின்றார்.

சாரதியின் கண்கள் லாவண்யாவின் கண்களைத் தேடின. அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன.

ஆனால் அந்தக் கண்ணீருக்குள் இருந்த சந்தோஷத்தை அவனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

திருமணம் முடிந்ததும் குடும்பப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

இருவீட்டாரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பிறகு காஞ்சனா மகனுடனும் மருமகளுடனும் தனியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு வந்தவர்களை உபசரிக்க மேடையை விட்டு இறங்கினார்.

அப்போது புதிதாகத் திருமணம் முடித்து வந்த சரிகாவையும் பார்த்ததும், "வாம்மா... வா. நல்லா இருக்கியா?" என்று அன்பாக வரவேற்று உபசரித்தார்.

முத்து அண்ணாவோ கடைசி வரை அங்கேயே இருந்தார்.

அது சாரதியின் திருமணம் அல்ல... தன் வீட்டுத் திருமணம் போலவே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

கோவிந்தன் அண்ணாவும் வருவதாகத்தான் இருந்தார்.

ஆனால் வேலூரில் திருமணம் என்றதும் அவரால் வர முடியவில்லை. 'ஒருநாள் விருந்துக்கு வீட்டுக்கு எல்லாரும் வரணும்.' என்ற அழைப்பு வைத்துவிட்டார்.

லாவண்யாவின் அருகில் மணப்பெண் தோழியாக தேவி இருந்தாள். அவளைப் பார்த்ததும் சிரித்தபடி,

"காதல் முதல் கல்யாணம் வரை... பேஸ் பேஸ்!" என்றாள்.

"உனக்கு எப்ப கல்யாணம்?"

என்று லாவண்யா கேட்டாள்.

"எங்க அக்காவுக்கே இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். எங்களோட வீட்டுல கல்யாணம் லேட்டாத்தான் பண்ணுவாங்க. அதுவரை ஜாலியா சைட் அடிச்சமா மேல படிச்சமா, இல்லையா.. ஒரு வேலையில் சேர்ந்தமானு இருப்பேன்.." என்று தேவி சலிப்பில்லாமல் சொல்லிவிட்டு,

"சரி... அண்ணாவோட பேசிட்டு இரு. நான் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டு வர்றேன்." என்று வேண்டுமென்றே இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

தேவி சென்றதும் லாவண்யா சாரதி பக்கம் திரும்பவே நாணினாள். சாரதியோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"சாரதி... என்ன அப்படிப் பார்க்கற?"என்று மெதுவாகக் கேட்டாள்.

"இல்லை..." என்று ஆரம்பித்தவன் அவளுடைய கழுத்தைப் பார்த்தான். "இந்தத் தாலி... குங்குமம்... மெட்டி... இதுக்கெல்லாம் தனி அழகு இருக்குல்ல.." என்றான் ரசனையுடன்.

லாவண்யா இன்னும் நாணினாள். "நீ புதுசா இதெல்லாம் போட்டு பார்க்கவும், செமையா இருக்கடி" என்று அவன் கிசுகிசுத்தான்.

"என் கண்ணு அங்கயும் இங்கயும் தவிக்கும்னு நினைச்சேன்." என்று சிறிது இடைவெளி விட்டவன், "இல்லை... உன்னை வச்ச கண்ணு வாங்காம பார்க்க முடியாத தவிப்புல இருக்கு." என்று அவளை ஒரு மின்சாரப் பார்வை பார்த்துவிட்டு, சட்டென்று எதிரே திரும்பிக் கொண்டான்.

லாவண்யா சிரித்தாள். "நீ மட்டும் என்னவாம்?" என்று அவனுடைய பட்டு வேஷ்டி சட்டையைப் பார்த்தாள்.

"கண்டெக்டர் டிரஸ்ல ஒரு விதமா அழகா ஹாண்ட்சமா இருப்ப. இதுல ரொம்ப அழகா இருக்கடா. அதுவும் இந்த சுருட்டை முடி..." என்று அவனுடைய தலையைப் பார்த்து, "புஸுபுஸுன்னு இருக்கு." என்றதும் சாரதி சிரித்தான்.

"என்ன... கல்யாணம் முடிஞ்ச உடனே என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்ட?" என்றான்.

"இல்லையே... உண்மையைத்தான் சொல்றேன். என்னை விட்டா நாள் முழுக்க உன் தலை முடியை கோதிட்டு நெத்தில முத்தமிட்டுட்டே இருப்பேன்" என்றவள் பார்வை அவன் விழியை சந்தித்தது.

அவள் பேசி முடித்ததும், சாரதியின் முகத்தில் அந்தத் திமிரான புன்னகை வந்தது.

"அதான் பஸ்ட் நைட் இருக்கே. சொன்னதெல்லாம் செய்." என்றான். 

"ச்சீ!" என்று வெட்கத்துடன் லாவண்யா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்

கிடைத்த அந்தச் சிறிய நேரத்தில் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

காதலித்த நாட்களைப் பற்றியும்... இனி சேர்ந்து வாழப்போகும் நாட்களைப் பற்றியும், சின்னச் சின்ன ஆசைகளைப் பற்றியும்,

பேசிப் பேசி ஓய்ந்திட, அந்த இரவும் வந்தது.

முன்பு போலவே மாடியில் எல்லோரையும் விரட்டி விட்டு, கீழே முதலிரவு அறையில் சாரதி உலாத்தினான். இலக்கியா லாவண்யாவை அலங்காரித்து அனுப்பிவிட்டு, மாடிக்கு செல்வதாக கூறினார். ஏற்கனவே காஞ்சனா எல்லாம் இஷிதாவோடு மாடிக்கு வந்துவிட்டார்கள். 

மாலதி விக்னேஷ் குழந்தை ஒரு அறையில் இருக்க, அலமேலு காஞ்சனாவுடனும், புருஷோத்தமன் மாடிக்கு வந்து சுரேஷிடம் பேசினார்கள்

முதலிரவு அறைக்குள் லாவண்யாவை அனுப்பிவிட்டு இலக்கியாவும் பறந்திட, சாரதி லாவண்யா இருவரும் அவ்வறையில் தனித்து இருந்தனர். 

அந்த இரவில் வார்த்தைகளை விட, இருவருடைய நாணமும் காதலும் போதுமானதாக இருந்தது.

கதவு மெதுவாக மூடப்பட்டது.

அவர்களுக்குள் மீண்டும் காதல் பேசத் தொடங்கியது.

காலையில் கூறியது போல சாரதியை மடியில் ஏந்தி அவன் தலைகோதி நெற்றியில் சில பல முத்தமிட்டாள் லாவண்யா. 

"நானா சாரதினு ஒருத்தன் பின்னாடி போவேன்னு நினைக்கலை. எங்கப்பா அம்மா கண்டிப்பை மறந்து, நானா உன்னிடம் காதலை சொல்லுவேன்னு நினைக்கலை. நமக்கான சந்திப்பு கூட எதிர்த்தமா தானே அமைஞ்சது. அப்பறம் எப்படி டா? இந்த காதல்.. உன் மேல நான் வச்ச பாசம், அன்பு, உன்னை விடான்டு வாழவை முடியாதென்ற தவிப்பு எல்லாம் என் மனசுக்குள்ள வந்தது. 

இத்தனைக்கும் நீ என் பின்னாடி வரலை, செய்கை காட்டலை. வச்சக்கண்ணு எடுக்காம பார்க்கலை... என்னிடம் காதல் டயலாக் எல்லாம் கூட நீ விடலை‌. பிறகு.. பிறகு எப்படி சாரதி நாம காதலிச்சோம்? எனக்கு ஆச்சரியமா இருக்கு. இந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிடுச்சு" என்று அதிசயத்தாள். 

சாரதியோ, லாவண்யா தந்த கைகடிகாரத்தையும், மாமனார் காலையில் அணிவித்த தங்க செயினையும் எடுத்தான். அந்த தங்க செயினில் கூட பேருந்தில் அடிக்கும் விசில் இருந்தது. தொட்டு, ''இதோ இந்த பஸ்.. இந்த விசில் இரண்டும் சொல்லலையா? அதோட... இந்த இன்சிடென்ட் மறந்துட்டியா என்ன?" என்று இரண்டு ரூபாய் காயினை எடுத்து சாரதியின் ஜாக்கெட்டுக்குள் போட்டுவிட்டான். 

''ஞாபகமிருக்கா? நான் என்ன உண்டியலாடானு என்னை பார்த்து கேட்டியே?" என்று கேட்டது, "சாரதி... காயினை ஏன் டா உள்ள போட்ட" என்று கையை விட்டு, எடுக்க முயல, அந்த காயினோ அவளது அங்கங்களில் புதையல் போல புதைந்துக் கொள்ள துடித்தது. 

சாரதியோ "காயினை நான் அப்பறம் எடுத்து தர்றேன். என்னை பாருடி." என்று கண்ணை நேராக சந்திக்க வைத்தவன், "நான் கண்டெக்டரா வேலை செய்யறேன்னு விசில் மாடல்ல உங்கப்பா டாலர் வாங்கியிருக்கார். அவனவன் நான் ஏதோ கட்சிக்குரியவன்னு முத்திரை குத்தறாங்க. ஹார்டின் டாலர், சாமி டாலர், மீன் டாலர், சூரியன் டாலர், இப்படி ரகரகமா டாலர் இருக்கறப்ப விசில் தான் கிடைச்சுதா?" என்றான். 

"அய்யோ சாரதி.. சாரிடா.. அப்பா இதை வாங்கலை. அப்பாவுக்கு தெரிந்த நகை செய்யறவரிடம் காயினை தந்து டாலர் செயினை செய்ய சொன்னார். நான் தான் இந்த டிசைன் உன்னோட பஸ் ரிலேட்டிவா இருக்கும்னு செய்தேன்.‌ சத்தியமா இதுல போய் அரசியலை விதைப்பாங்களா." என்று சிணுங்கினாள். 

சாரதி கையோடு கையாக இடையை அழுத்திபிடித்தானே. 

"உனக்கு மட்டும் மூளை அப்படியே வழியுது" என்றான். 

"போடா.. எது பண்ணினாலும் சலிச்சிக்குற" என்றாள். 

"சரி சலிக்கவே சலிக்காத விஷயத்தை பேசலாமா? பேச வேண்டாம்... செயல்ல முழ்கலாம்" என்று முந்தானையை விலக்க, "சச..சா.சாரதி" என்று திக்கி திணற, "இரண்டு ரூபாய் காயின் இங்க தான் எங்கயாவது சிக்கிட்டு இருக்கும். எடுத்துடறேன். லக்கி காயின்" என்று கையை நீட்ட, "நோ சாரதி.. வேண்டாம்.. அச்சோ. டேய்.." என்று செல்ல சிணுங்கல் அவ்வறையை சிலிர்ப்பூட்டியது. 

சாரதியோ, மெத்தையில் விழுந்தவனாக லாவண்யாவை பார்வையிட, அவளோ வெட்கம் மறந்து, அவனது நெற்றியில் முத்தமிட்டவளை, இதெல்லாம் தனக்கு இனி தாங்காது என்று, நொடியில் அவளை கீழே மாற்றி, இடையை இறுக்கி, இதழை கவ்வினான். 

காமம் என்ற பேருந்தில் ஏறி, நிறுத்தங்கள் இல்லாமல் முடிவில்லாத பயணத்தில் சென்றார்கள். 

அத்தியாயம்-50

"உய்ய்ய்" காதருகே விசில் சத்தம் அலறியதும் லாவண்யா திடுக்கிட்டு விழித்தாள். சுற்றி முற்றி பார்க்க, பேருந்து டிப்போவை அடைந்துவிட்டதை உணர்ந்தாள். 

"என்ன சாரதி! காது கிழியுற மாதிரி விசிலடிக்கற" என்று தூக்கக் கலக்கத்தில் எழுந்தாள். எப்பொழுதும் லாவண்யா இருந்தால் கையால் தான் விசிலடிப்பான். இன்று வேண்டுமென்றே தான் காதில் சத்தம் அதிர எழுவைத்தான்.

சாரதி அவளைப் பார்த்துச் சிரித்தான்.

"பின்ன என்னடி.. மூனு நாலு ஸ்டாப் இருக்குமா? ஏறியதுலருந்து சீட் கிடைச்சதும் ஜன்னலோரம் சாயற.. தூங்கற!" என்றான். 

"தூங்காம என்ன பண்ண?" என்றாள் லாவண்யா. 

"முன்னெல்லாம் ஜன்னல் சீட்டுக்காக தேவிகிட்ட சண்டை போட்டு வாங்கி, வேடிக்கை பார்த்துட்டே என்னை சைட் அடிப்ப. இப்ப புருஷன் ஆனதும் மேடம் சைட் அடிக்க மாட்டிங்களா?" என்று அவளுடைய தலைமுடியை ஒதுக்கி வைத்தான்.

அவளோ உடலசதியில் இருந்தாள்.

"இப்ப கும்பகர்ணி மாதிரி தூங்கற!" என்றான்.

"போடா..." என்று லாவண்யா சிணுங்கினாள்.

முத்து அண்ணா பேருந்தை டிப்போவுக்குள் கொண்டு வந்து நிறுத்த செல்ல, சாரதி அவளுடைய பையை எடுத்துக் கொண்டான். இருவரும் சேர்ந்து கீழே இறங்கினர்.

"கல்யாணமாகி இந்த இத்தனை நாள்ல..." என்று ஆரம்பித்த லாவண்யா அவனைப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

"நீ தினமும் ஆப்டர்நூன் ஷிப்ட் முடிச்சு வீட்டுக்கு வர்ற வரை. நீ வர்றவரை கண் முழிச்சு காத்திருந்து, நீ சாப்பிட்டு தூங்கப் போகற வரை முழிச்சிருக்கேன். அதுக்கு பிறகு... பெட்ல என்னை தூங்க விடாம சேட்டை பண்ணற" என்றதும் சாரதி சிரித்தான்.

"நான் என்ன பண்ணேன்? பொண்டாட்டி எனக்காக காத்திருந்து சோறு வச்சா... பெட்ல சேட்டை செய்யாம தூங்கமுடியுமா? எதுவும் செய்யாம தூங்கினாலும் 'என்னை பிடிக்கலையாடா.. அவ்ளோ தானா ல்வவுனு சொல்வ" என்றான். 

லேசான முறைப்புடன், 'ஆமா எதுவும் பண்ணலை' என்றவன் "நீ பாட்டுக்கு ஹாயா காலையில நான் கிளம்பற வரைக்கும் தூங்கற!" என்றாள். 

"அது என்னோட உரிமை கடமை என்றான் கண் சிமிட்டி."

"என்னையாவது ஜாலியா அத்தை கூட பகல்ல சீரியல் பார்க்க விட்டியா?" என்று அவள் முறைத்தாள்.

"இது அம்பத்தூர் எஸ்டேட். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கு. பி.காம் படிச்சிட்டு வெட்டியா வீட்டுல இருக்கக் கூடாதுன்னு வேலைக்கு கையோட தெரிந்த இடத்துல வேலைக்கு சேர்த்துட்ட." என்றாள். 

"நல்லதுதானே படிச்ச படிப்பு ரிலேட்டிவா எதுவும் செய்யலைன்னா அறிவு மங்கிடும் லயா. அதுவும் உன் மூளை எல்லாம்..." என்றவன் கேலியாக சிரித்தான். அவன் புஜத்தை அடித்தாள்.

"வேலைக்குப் போயிட்டு வர்ற அலைச்சல் வேற. தூக்கமா வருது தெரியுமா." என்று கொட்டாவி விட்டாள்.

"அதுல கனவு வேற" என்று அவள் சொல்ல, சாரதி ஆர்வமாகப் பார்த்தான்.

''என்ன கனவு?" என்றான்.‌

"ம்கூம்.. நம்ம கல்யாணமாகி வேலூர்ல இருந்து பஸ்ல உன் தோள்ல சாய்ந்துட்டு தூங்கினதும்....

அடுத்து... இதோ உன் பஸ்ல ஏறியதும் டிக்கெட் எடுத்துட்டு கண் அசந்துட்டேன்." என்றாள். 

"அவ்ளோ தானா.. கனவுல வேற ஏதும் நடக்கலை." என்றான்.

"உனக்கென்ன எல்லாம் பேசுவ. ஊரை கேட்டா உன்னை தங்கமான புள்ளனு சர்டிபிகேட் தரும். எனக்கில்ல தெரியும். நீ எப்படி எங்க நைஸா பேசுவ, கோபப்படுவனு" என்று அவள் மீண்டும் சிணுங்கினாள்.

மேலும் "இதுல நீ லேட்டா எந்திரிச்சாலும் அத்தை சுட்ட தோசையோ, சூடான இட்லியோ முழுங்கிட்டு புட்பால் டிரைனிங் போற.

ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்கன்னு எல்லாருக்கும் விளையாட டிரைன் பண்ணற.

நிதானமா வீட்டுக்கு வந்து, அகைன் குளிச்சிட்டு கண்டெக்டர் சாரதியா மாறி நிக்கற.

எனக்கு காலையில எழுந்து அத்தை கூட சமைக்க உதவி, வேலைக்கு கிளம்பிட்டு, இதோ இந்த நேரத்துக்கு வந்துட்டு மத்த வேலையெல்லாம் முடிச்சி, நைட் நீ வர்ற வரை உட்கார்ந்து, உடம்பு எவ்ளோ அசதியா இருக்கு தெரியுமா." என்று முடித்தவள் அவனுடைய தோள் வளைவில் சாய்ந்தாள்.

அதற்குள் முத்து அண்ணா பேருந்தின் இன்ஜினை நிறுத்திவிட்டு அவர்களிடம் வந்தார்.

முத்து அண்ணாவோ இவர்களை பார்த்து சிரித்து, அங்கிருந்து நகர்ந்ததும், லாவண்யா மெதுவாகக் கேட்டாள்.

"டேய்... டே ஷிப்ட் எப்ப கிடைக்கும்?" என்று லாவண்யாவின் குரலில் ஏக்கம் இருந்தது.

சாரதிக்கு அது நன்றாகவே புரிந்தது. கல்யாணமாகி இந்த இடைப்பட்ட நாளில் பாவம் தன்னால் இரவெல்லாம் முழித்து சாப்பாடு வைத்து, பிறகு மனைவியின் கடமையாக கட்டிலில் தன்னோடு இசைந்து உறவாடி, காலையில் வேலைக்கும் ஓடி, இந்த அசதி லாவண்யாவுக்கு கஷ்டமாக தான் இருப்பதை அவனுமே உணர்ந்தான்.

"டே ஷிப்ட் கேட்டிருக்கேன் லயா. வந்ததும் சொல்லறேன். ஆல்ரெடி இப்ப வர்ற பஸ்ஸுக்கு பதிலா முத்து அண்ணா ஓட்டற வண்டிக்கு ஏசி பஸ் அலார்ட் பண்ணறதா பேசிக்கிட்டாங்க. அது வர்றப்ப அப்படியே டே ஷிப்ட் மாத்திடுவாங்க. அப்பறம் உன் சாரதி காலையில போயிட்டு ஈவினிங் வந்துடுவான். பிறகு ஈவினிங்ல டிரைனிங் கிளாஸ் மாத்தி எடுக்க போயிடுவேன். நைட் குயிக்கா உன்‌ மடியை தேடி வந்துடுவேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. சப்போஸ் நீ கன்சீவா ஆனா... வேலைக்கு போறதுக்கு பதிலா வீட்ல இரு." என்றான். 

"நிஜமாவா?" என்றாள்.

"நிஜமா அதுவரைக்கும் பொறுத்துக்கோ." என்றான்.

"அப்ப இதுக்காகவாது குயிக்கா கன்சீவா ஆகிடவா?" என்று கேட்க, அவளுடைய தலையை செல்லமாய் மெதுவாகத் தட்டினான்

"கண்டதையும் யோசிக்காம வீட்டுக்கு போ." என்று சிரித்தான்.

லாவண்யாவோ அவனைப் பார்த்தபடி அவள் வீட்டை நோக்கி நடந்தாள். அவனோ லயா பேசியதை கேட்டபடி, பேருந்தை நோக்கி சென்றான்.

ஆனால் இருவரின் மனமும்...

மீண்டும் அந்தப் பேருந்திலேயே சென்று அமர்ந்திருந்தது.

ஜன்னலோர இருக்கை.

அதன் அருகில் லாவண்யா.

அவள் சாய்ந்து கொள்ள சாரதியின் தோள்.

பயணம் செல்லும் வழியில் அவள் ரசிக்கும் உலகம்.

அவளை ரசித்தபடி ஓடும் சாரதியின் விழிகள்.

காதல் தொடங்கிய இடமே...

அவர்களின் வாழ்க்கையிலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

மீண்டும் மீண்டும் சாரதியின் பேருந்துப் பயணத்தில் விரும்பியே தொலைந்து போனாள் லாவண்யா.

சாரதிக்கோ... 'பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் இருக்கையாக' அவள் இருப்பதே வாழ்நாள் முழுவதற்குமான சுகமான காதல் பயணமாகிப் போனது.

-சுபம்.

-பிரவீணா தங்கராஜ். 

கதை முடிந்தது. எதார்த்தமான மனிதர்களின் காதல் உங்களுக்கு பிடிச்சிருக்கா? நான் ஆண்டிஹீரோ, அடமன்ட் ஹீரோ போலீஸ் ஹீரோ டாக்டர் ஹீரோ நடிகன், பலவிதமான காதல் கதைகள். வித்தியாசமான தொழில் சார்ந்த கதை எல்லாம் கொடுக்க ஆசைப்பட்டு தான் எழுதறேன். ஆனா அதுக்கான அங்கீகாரம் கிடைக்குதானா தெரியலை. ஆனா முயற்சி கைவிடாம விமர்சனம் இல்லாவிட்டாலும் சிவனேனு எழுதிட்டு இருக்கேன். அதோட உழைப்புக்கு ஏற்ற பலன் தான் புத்தகமாக மாறும் தருணமாக பாவிக்கறேன். ஏதோவொரு இடத்துல அங்கீகாரம் கிடைக்கின்ற மகிழ்ச்சி. ஆனா முகநூலில் தினசரி கதைப்போடறப்பவே சில விமர்சனம் அங்கீகாரம் கிடைச்சா இன்னும் ஆனந்தமாக இருக்கும். 

மேபீ.. ரீடர்ஸுக்கு பிடிச்ச கதை ஏதாவது ஒரு கட்டத்தில் சைலண்ட் ரீடரின் மனதையும் உடைத்து பேச வைக்கும்னு நம்பறேன்.

நம்பிக்கை அதானே வாழ்க்கை. 

அடுத்த கதையில் சந்திப்போம். எனது பழைய தளம் மற்றும் இந்த புதிய தளத்தில் முடிவுற்ற எண்ணற்ற கதைகள் இலவசமாக வாசிக்க இருக்கு. இந்த கதை பிடித்து, மற்ற கதை வாசிக்க விரும்புவோர் வாசிங்க. நன்றி. 

ஆதரவும் அன்பும் தரும் வாசகருக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும். என் துவக்கத்தில் இருந்து கதை வாசித்து கருத்தளித்த வாசகருக்கு லவ்யூ. ❤️❤️❤️

 


 
Posted : October 11, 2026 9:32 am
Kalidevi reacted
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Ethu romba yethartha mana story.. naa kooda caste issues varunu nenachen.. but antha direction pola.. konjam thrill aagavum erunthuchi.. Good 👍 


 
Posted : October 11, 2026 10:12 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super starting to ending story..

 

WhatsApp pota photos sama 

Thank you 


 
Posted : October 11, 2026 10:31 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Fantastic narration sis. Like sarathy w ecan see many common man in our life. Love starts in bus and end sin bus. Awesome narration.  Cute romance.  Wonderful love. Very very real.world life love story. All.the charecters were portrayed well.espececially sarathy curly hair super. Ur creativity of sarathy and laya images were excellent sis. Fantastic journey with our lovable sarathy and laya. Action, comedy, sentiment,  romance, love, freindhsip,etc narrated very well.sis. another diamond in your crown sis.


 
Posted : October 11, 2026 11:34 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 49 & 50 Final)

ஐய்.. கல்யாணம் கூட ஆகிடுச்சா ?
சூப்பர். ஆனால், எந்தவித அடிதடியோ, பிரச்சினைகளோ, களேபரமோ அப்படி எதுவும் இல்லாமல், இத்தனை அமைதியா, அமர்க்களமா, தடபுடலா, ஆர்ப்பாட்டமா சாரதி & லாவண்யா கல்யாணம் நடக்கும்ன்னு நாங்க யாருமே எதிர்பார்க்கவேயில்லை.
ஏன்னா, இது காதல் கல்யாணம் வேறயா, ஆனால் ஒரே சாதி என்கிறதால இத்தனை சுமுகமா நடந்திருக்கு.

அது சரி, கண்டக்டர் வேலையா இருந்தாலும் சாரதி இப்ப கவர்மெண்ட் மாப்பிள்ளையாச்சே
இந்த வேலைக்கு என்ன குறையாம் ?

ஆனால், இந்த லாவண்யா இத்தனை நாள் ஜாலியா காலேஜ் படிப்புன்னு சுத்திட்டிருந்திட்டு
இப்ப கல்யாணம், கணவன், குடும்பம், சமையல், வேலைன்னவுடனே... ரொம்பத்தான் சலிச்சுக்கிறாள் பாருங்களேன். அடியேய், பொண்டாட்டின்னா சும்மான்னு நினைச்சியோ...? எனிஹவ், ரெண்டுபேரும் இதே காதலோட, சந்தோஷமா, நிம்மதியா வாழட்டும்.

"கண்ணுமணியே பிரவீணா தங்கராஜ் அசத்திப்பூட்டிங்க..
சொக்க வைக்கும் கதையை கொடுத்து கலக்கிப்பூட்டிங்க..
எழுதுங்க, எழுதுங்க..
இன்னும் எழுதுஙக...
எழுதுங்க எழுதுங்க..
நிறைய எழுதுங்க....
எழுதி, எழுதி... மேலும் வளர்ந்து
சந்தோஷமா இருங்க..
எங்களையும் சந்தோஷப்படுத்துங்க.."

வாழ்த்துக்கள் பிரவீணா..!

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : October 11, 2026 1:00 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

சூப்பர் யதார்த்தமான கதை ... எப்போதும் போல உங்கள் கதை மாஸ் 


 
Posted : October 11, 2026 10:47 pm
(@niranjana)
Posts: 5
Active Member
 

    Arumai. From the beginning till the end, you nailed it.. Characters super.. Matkum vazhvil matkatha kadhal pola romba azhaga ezhuthirukeenga.. Wish u come up with more real characters like this. 


 
Posted : October 12, 2026 9:45 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy laya pidikathu definte ah sollavae mudiyathu sis nama dhinam um pakkura oruthar oda vazhkai ah partha feel kuduthuchi sis athu vum unga style neraiya edathula avan ah nega real hero nu sollura alavuku design panni irukum pothu easy ah nama maanasu la attacha aagitaga pa ithae pola story innum neraiya ezhuthunga sis padika nanga ready .


 
Posted : October 12, 2026 11:53 am
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

VERY VERY SUPER AND INTERESTING DIFERENT STORY SISY . EPOUM POLA UNGA KATHAI DIFFERENT AH ELUTHI IRUKINGA UNGA KATHAI PADIKUM NIRAYA NALLA NIYABAGAMNGAL UM SARI ORU SILA NIYABAGANGALUM VARUM BUT LOVE NU VANTHUTA ATHA PADIKUM NAMAKUM IPPADI ORU VENUM NU THONUM APADI THA IRUKUM ALAGANA LOVE PASAM KUDUMBAM NU ELLAME IRUKUM UNGA KITTA PIDICHATHE ATHU THAN KAMAM IRUNTHALUM ATHU ALAGANA UNARVAI THARA MARI THAN IRUKUM.

 

   CONGRATULATIONS SISY 


 
Posted : October 23, 2026 4:01 pm

Scroll to Top