Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46

8 Posts
8 Users
1 Reactions
58 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#392]

அத்தியாயம்-46

காலையிலேயே இலக்கியா சுரேஷ் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான் சாரதி. 

"பத்து மணிக்குள்ள ரெடியா இருன்னு சொல்லியும் தேமேனு இருந்திருக்க" என்று சாரதி அதட்ட, "படபடப்புல இருந்தேன் சாரதி நைட் தூங்கவே முடியலை.." என்றாள். 

"படபடப்புல இருந்தேன் பயத்துல இருந்தேன்னு" என்று சாரதி முனங்க, "நான் வரவா மாப்பிள்ளை" என்று சுரேஷ் கேட்க, "அதெல்லாம் தேவைப்படாது மாமா. நானே ஸ்டேஷன்ல கம்பிளைன் பண்ணிட்டு பேசிட்டு வேலைக்கு கிளம்பணும். எதுக்கு உங்களுக்கு சிரமம். நீங்களும் வேலைக்கு கிளம்புங்க" என்றான். 

சுரேஷ் 'ஸ்டேஷன்ல கம்பிளைன் எல்லாம் தேவையில்லை' என்பதாக தேன்ற கூறயியலாது சரியென்று வேலைக்கு புறப்பட, இலக்கியாவோ "இன்னிக்கு தான் தலைக்கு குளிப்பியா? லேட்டாகுதுல" என்று கூப்பிட, "சித்தி எப்பவும் சனிகிழமை தானே தலைக்கு குளிப்பேன். நீங்க வேற ஏன் சித்தி அவன் எதிர ஏத்தி விடறிங்க. சும்மாவே முறைக்கறான்... பார்த்திங்கள்ல.. திட்டிட்டே இருக்கான்" என்று தலையை துவட்டி நின்றாள். 

"நீ ஒன்னும் சாரதியை பார்த்து பயப்படற மாதிரி தெரியலை. அவன் இவன்னு பேச்சு பேசற" என்று இலக்கியா கூற, "அது வேற.. பயம் வேற டிபார்ட்மெண்ட்." என்றாள். 

பத்தே கால் மணியாக, கைகடிகாரத்தை பார்த்து பார்த்து புஸுபுஸுவென மூச்சை விட, "நான் வாங்கி தந்த வாட்ச்." என்று சமாதானம் செய்து பேசி இளிக்க, அவளை ஏற்றிக் கொண்டு பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் வந்திறங்கினான். 

அங்கிருந்த காவலதிகாரியிடம் "ஸ்ஞேஷன் இன்ஸ்பெக்டரை பார்க்கணும்" என்று வந்து நின்றான். வெளியேயிருந்த காவலாளி உள்ளே விட, டேபிளில் அன்று பார்த்த அதே காவலதிகாரி கிருஷ்ணகுமார் என்று எழுதியிருந்தது.

"நீ... அந்த சைக்கிள் தொலைச்சிட்டு கால்ல விழுந்து அழுதவன்ல" என்று நினைவெடுத்து கேட்க, "ஆமா சார்" என்றான்.

"இப்ப என்ன தொலைச்ச" என்று கேலியாக சிரித்தார். 

"இப்ப தொலைக்கலை சார். எனக்குரியதை நான் எப்பவும் இழக்க கூடாதுனு முன்ன வேற முறையில தக்க வச்சிக்கிட்டேன். இப்பவும் வேற முறையில தக்க வைக்க உங்களிடம் பேச வந்திருக்கேன்" என்றான்.‌

"என்கிட்ட என்ன பேசணும்.." என்று கேட்க, "லாவண்யா" என்றான். 

லாவண்யா அவனுக்கு பின்னாலிருந்து முன்னே வரவும், "லாவண்யா நான் விரும்புற பொண்ணு சார். அவளுக்கும் என்னை பிடிக்கும். எங்க இரண்டு பேர் வீட்லயும் எங்க காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க

படிப்பு முடிய கல்யாணமென்று பேசி வச்சிருக்க, ஒருத்தன் வந்து இவளை காதலிப்பதா டார்ச்சர் பண்ணறான்.

அவனோட அப்பா அம்மாவோட வந்து பதினொறு மணிக்கு நிற்பானாம். லாவண்யா அவங்க எதிர்ல அவனை கல்யாணம் பண்ணிப்பதா சொல்லணும்னு இவளிடம் வற்புறுத்தறான்.‌ வசதியான பையன் என்றவரை தெரியும் வீட்டுக்கு பதினொன்று மணிக்கு வர்றான். நீங்க அவனிடம் பேசுங்க" என்று கடிகாரத்தை பார்த்து சொல்ல, சாரதி பேசியதை சங்கில் ஊதும் விதமாக கேட்டவர், ''உன் பேரு லாவண்யாவா" என்று காவலதிகாரி கிருஷ்ணகுமார் லாவண்யாவிடம் கேட்க "ஆமா சார்." என்றாள்.

"உன்னை பார்க்க தான் வரலாம்னு இருந்தோம்." என்று எழுந்தார்.

"நான் பவனோட அப்பா" என்று அறிமுகமாக, லாவண்யாவுக்கு திகில் கூடியது.

"ஏம்மா... பவன் உன்னை பிடிச்சி போய் தான் கல்யாணம் பேசறதா சொன்னான். நீ என்ன இப்படி பண்ணிட்ட. அதுவும் ஆப்ட்ரால் கண்டெக்டரை காதலிக்கறியா. இதெல்லாம் பவன் என்னிடம் சொல்லலையே" என்றவர் சாரதியை அப்பொழுது தான் பார்ப்பது போல மேலிருந்து கீழ்வரை பார்த்தவர், ''சைக்கிள் திருட்டு போய் கிடைச்சதுக்கு திருடன் கால்ல விழுந்தவன் மா இவன்" என்று இகழ்ந்தார்.

"ஏன்டா உனக்கு எம்மகன் ஆசைப்படறவ மேல தான் காதல் வருமா? உனக்கும் இவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு எழுதி தந்துட்டு போ. ஏதாவது போட்டோ எடுத்திருக்கானா? டேய்.. போனை காட்டு. இல்லை... ஏதாவது கேஸ்ல உள்ள தூக்கி போட்டுட்டு போயிடுவேன்." என்றார். மகன் விரும்பி கேட்கும் பெண்ணாக, லாவண்யா கண்ணுக்கு அழகாக இருக்க அவ்வாறு உரைத்தார்.

அதேநேரம் பவன் உள்ள வந்தான். "என்னப்பா டைம் ஆச்சு. இன்னும் இங்கயே இருக்கிங்க. அம்மா கார்ல இருக்காங்க" என்று வந்தவன் லாவண்யாவை பார்த்து "ஏய் உன்னை பார்க்க தான்" என்றவன் சாரதியை கண்டு, "ஓ.. இவனோட வந்தியா? உனக்கு அவ்ளோ சொல்லியும் இங்க அழைச்சிட்டு வந்திருக்க. அப்பா.. லாவண்யா.. பார்த்திங்கள்ல. 

ஜான்சி ராணி.. காம்பஸ்ல என்னை குத்தியது இவ தான். உங்களிடம் லவ் பண்றேன் சொல்லியதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்டானு சொன்னிங்க. இவனிடம் என்ன பேச்சு" என்று எகிறினான்.

"டேய் ஆப்ட்ரால் சைக்கிளுக்கே கால்ல விழுந்தவன். இப்ப அதட்டினா விட்டு கொடுத்துட்டு போவான். இருடா." என்று பேசினார் அவர். பவனுக்கு அதெல்லாம் தெரியாதே. 

சாரதியோ, "இங்க பாருங்க சார். லாவண்யா என்னை விரும்பறா. பஸ்ல அவளிடம் அத்து மீறியது உங்க பையன். நான் அன்னிக்கே பஸ்ஸை ஸ்டேஷன்ல வந்து இறக்கி விட்டு கம்பிளைன் பண்ணினா அன்னிக்கு தெரிந்திருக்கும். இப்ப லாவண்யாவையே மிரட்டிட்டு இருக்கான்.‌

அன்னிக்கு சைக்கிள் திருடினவரிடம் கெஞ்சியது நான் தான். அது வேற செண்டிமெண்ட். இப்ப என் லவாண்யாவை விட்டு தர முடியாது. இவ என் லைப். அந்த எமோஷன் வேற. இந்த எமோஷன் வேற. இதுக்கு கால்ல விழுவேன்னு எதிர்பார்த்தா சாரி.. மைண்டை மாத்திக்குங்க. லாவண்யா என்னை விரும்பறப்ப, உங்கப் பையனை எல்லாம் நீங்க அறிவுரை சொல்விங்கனு நினைச்சேன். ஆனா நீங்க ஏடாகூடமா பேசினா எப்படி ஹாண்டில் பண்ணணும்னு எனக்கு தெரியும்" என்றான்.

"என்னடா.. சவுண்ட் எல்லாம் விடற" என்று முன் வந்தார்.

லாவண்யாவோ "இங்க பாருங்க நான் சாரதியை விரும்பறேன். தேவையில்லாம பிரச்சனை பண்ணாதிங்க. எங்கப்பா அம்மாவுக்கு சாரதியை பிடிச்சிருக்கு." என்றாள். 

பனின் தந்தையோ "அப்படியா... அப்ப ஏதாவது கஞ்சா கேஸ் திருட்டு கேஸ் போட்டு உள்ள தள்ள வேண்டியது தான்" என்று பேச, "அதெப்படி தம்பி கேஸ் போட்டு உள்ள தள்ளுவ. எந்த கேஸ் என்றாலும் நான் தான் காரணம், எங்க பசங்க தான் செய்தாங்கனு அப்ரூவலுக்கு நான் ஆள் கொண்டு வருவேன். உங்க சௌரியத்துக்கு ஒன்னும் புடுங்க முடியாது. ஆளுங்கட்சி எதிர்கட்சி இரண்டுத்துலையும் தெரிந்தவங்க இருக்க, இந்த ஸ்டேஷன் மட்டும் கண்ட்ரோல்ல வச்சிட்டு இருக்கற நீ..‌ இப்படி பேசலாமா.. என்னை மறந்துட்டியே" என்று வந்தவர் பேசினார். 

சாரதியின் சைக்கிளை பொழுது போக்கிற்காக விளையாட்டுக்கு திருடியா கோவிந்தன். 

"என்னப்பா... பையனிடம் என்ன வம்பு" என்று கோவிந்தன் சாரதி தோளில் கையை போட்டார். 

பவனின் தந்தை கிருஷ்ணகுமார் கோவிந்தனை கண்டு, "இதுல நீங்க தலையீடாதிங்க" என்றார். 

"அப்படி தான் நினைச்சேன் தலையிடகூடாதுனு.. தம்பி வந்து பேசினப்ப மறுக்க முடியலையே." என்று அங்கிருந்த சேரில் அமர்ந்தார். 

சாரதியோ "லாவண்யாவை நான் விரும்பறேன். அவளும் விரும்பறா. நடுவுல பிரச்சனைனு வர்ற அவ குடும்பமும் எங்க காதலுக்கு ஆதரவா இருக்காங்க. இவன் ஏன் துள்ளறான்னு நேத்து என் பிரெண்டிடம்(சரிகாவிடம்) இந்த மாதிரி விசாரிக்க சொன்னேன்.

என் நல்ல நேரம் லாவண்யாவிடம் உங்க பையன் பேசினப்ப, அந்த பஸ்ல சிசிடிவி இருந்தது. டெப்போல அந்த பஸ்ஸில் நடந்த அந்த வீடியோ ஓடவிட்டு, உங்க பையன் முகத்தை க்ளிக் பண்ணி, என் பிரெண்ட்டிடம் காட்டி மடமடனு யாருனு பார்த்தா, உங்க பையன்னு விவரம் தெரிந்தது. ஓரளவு பணக்காரன் வசதியானவன், அதோட அதிகார பலம் இருக்கு என்றதால தான் பவன் துள்ளுறதை புரிஞ்சுக்கிட்டேன். அதோட உங்க எதிர்ல கோவிந்தன் அண்ணன் கால்ல விழுந்து சைக்கிளை கேட்டதால, உங்க மனசுல என் பிம்பம் எப்படி விழுந்திருக்கும்னு என்னால புரிச்சுக்க முடிந்தது. 

நீங்க கேஸ் போட்டுடுவதா மிரட்டுவிங்கனு தெரியும். அதான்.. அவரை நேர்ல வரச்சொன்னேன். ஆதரவுக்கு தான். 

அதோட.. சாதாரண கண்டெக்டர்னு நீங்க எடைப்போட்டா அது உங்க தப்பு. நீங்க போடற காக்கி உடுப்புக்கு எந்தளவு பவரோ, அதே அளவுல எங்க டிரைவர் கண்டெக்டர் உடைக்கும் பவர் இருக்கு சார். நானும் அரசாங்கத்துல சம்பளம் வாங்கறவன் தான். தேவையில்லாம கேஸ் போடுவதா விஷயம் சொன்னா எனக்கும் என் பக்கம் நிற்க டிப்போல ஆட்கள் உண்டு. 

அதெல்லள் பிரச்சனை தேவையில்லாம மீடியாவுக்கு தீனி போடும். ஒரு பொண்ணுக்காக போலீஸ் இப்படில்லாம் பண்ணுதானு பேசும். 

அதான்... நீங்க லாவண்யாவை பார்க்க வர்றதுக்கு முன்ன, நான் இங்க வந்துட்டேன். 

நீங்க தான் பவனோட அப்பானு தெரிந்து தான் இங்க வந்தேன்.

உங்க பையனை இதோட விலகி போக சொல்லுங்க. இல்தை அசிங்கப்படுவான்" என்றான் சாரதி. 

பவனோ "ஏய்.. என்ன பேசற. எனக்கு அவ வேணும். ஒரு கண்டெக்டரிடம் எல்லாம் என்னால விட்டு கொடுத்து போக முடியாது. அவளிடம் பேசினப்ப அவ படிப்பு முடிச்சிட்டு நல்ல வேலைக்கு சேர்ந்து வர சொன்னா. வந்துட்டேன்.

இவ என் பிரெண்ட்ஸ் முன்ன அடிச்சிருக்கா. அவங்க எதிர்ல இவளுக்கு தாலி கட்டி காட்டணும்" என்று பேச, சாரதி பக்கத்தில் இருந்த லாவண்யாவை இழுத்து, அவளிதழில் அழுத்தமாய் முத்தமிட்டு கீழ் உதட்டை மெதுவாய் இழத்து விடுவித்தான்.

"இவ எனக்கு சொந்தமானவ. புரிஞ்சுதா.... இதுக்கு மேல பேசின.. புட்பால் மேட்ச்ல பந்தை உதைச்சி தள்ளறது மட்டும் தான் கோல்னு பிக்ஸ் பண்ணி உதைக்கற மாதிரி, உன்னை உதைச்சிடுவேன். 

எந்த பொருளை கெஞ்சி கேட்டு வாங்கணும். எந்த இடத்துல உரிமையா திமிரா கேட்கணும்னு எனக்கு தெரியும். 

தப்பா டச் பண்ணியதுக்கு பிரெண்ட்ஸ் எதிர அடிச்சான்னா அவளையே கல்யாணம் பண்ணறது என்ன தீர்வு. பிரெண்ட்ஸ் எதிர முதல்ல எந்த பொண்ணையும் தப்பா தொட்டிருக்க கூடாது. கேடுக்கெட்ட பிரெண்ட்ஸ் இதுல அவங்களுக்காக இவளுக்கு தாலி கட்டணுமா? போடா.." என்று பவனிடம் பேசியவன், பவனின் தந்தையிடம், "உங்க ரேஞ்சுக்கு என்னை சீண்ட மாட்டிங்கனு நம்பறேன். நான் இங்க உங்களிடம் பேசிட்டு, உங்க பையனை பத்தி பேச தான் வந்தேன்.

ஆனா எப்ஐஆர் போட்டு சொல்லி எழுதி கொடுக்க வச்சிடாதிங்க.

கண்டபடி கையை வச்சான், இவ காம்பஸ்ல குத்தினா. இதுல காதல் எப்படி சார் வரும்? அதுவும் என்னை விரும்பிட்டு, லாவண்யாவை சேர்த்து வச்சா, பவன் தான் கஷ்டப்படுவான். 

புரிஞ்சுக்கோங்க... அவன் ஏதோ தன்னை தண்டிச்ச பொண்ணு மேல காதல் வந்து கல்யாணம் பண்ணணும்னு தாட்ஸ்ல இருக்கலாம். அதெல்லாம் வேண்டாம். ஒரு நல்ல அப்பாவா பையனுக்கு புரிய வையுங்க. உங்க ஸ்டேடஸுக்கு கிடைக்காத மருமகளா?" என்று கூறிட, பவன் தந்தை சாரதி லாவண்யாவுக்கு முத்தமிட்ட நேரத்திலேயே அந்த எண்ணத்தை கைவிட்டதாக தோன்றியது. 

பவனும் கணவரும் வராமல் போக, அவனது அன்னை வந்து சேர்ந்தார். அவரோ "ஏன்டா... எவனோ விரும்பற பொண்ணை நீ எதுக்கு கல்யாணம் செய்ய நினைக்கற. நான் என்னவோ நீயும் உன்னையும் காதலிச்ச பொண்ணை இல்ல பார்த்து முடிக்க போறதா நினைச்சேன்.  நம்ம ஸ்டேடஸ் என்ன? உங்கப்பா பொசிசன் என்ன?  நல்ல வரதட்சனை வர்ற பொண்ணா கட்டிட்டு, அதர் கன்ட்ரினு செட்டிலாக பாரு. பஸ்ல பார்த்தவ காதலிக்கறேன்னு சொன்ன, சொத்துல பத்து பைசா கிடைக்காது" என்று கூறினார்.

இனி பவனின் அம்மாவே பவனுக்கு புரிய வைத்திடுவாரென்று புரிய, கோவிந்தனிடம், "சாரி சார்.. நான் உங்க கால்ல விழுந்ததை வச்சி ஏதோ என்னை குறைச்சி எடைப் போட்டார். அதான் உங்களை கூப்பிட்டேன். 

ஒருத்தர் கால்ல விழுந்ததை அவங்க எகத்தாளமா நினைக்கலாம். எனக்கு என் சைக்கிள் கிடைக்கணும்னு அந்த உணர்வுக்கு நான் அப்படி செய்தேன். அது வேற... இது என் காதல் சார். இதுக்கெல்லாம் கால்ல விழக்கூடாது.. கெஞ்ச கூடாது. 

என்ன தான் நான் பார்த்துப்பேன் என்றாலும், லாவண்யாவை என்னை திரும்ப எதுக்கும் நோண்ட நினைக்க கூடாது. ஏதாவது ஒரு பலம் இருக்குனு தெரிந்தா அந்தாளு சும்மா இருப்பான். நகை தந்தப்பவே வேண்டாம்னு தான் அவரும் சொன்னார். அதனால புரிஞ்சுப்பார்." என்று பேச கோவிந்தனோ "அதென்னவோ தெரியலை தம்பி. உன்னை பார்த்தா உதவ தோணுது. நீ கூப்பிட்டதும் வந்தேன். பயப்படாத.. நீ சொன்ன மாதிரி ஒரு ஆள் துணைக்கு இருக்காங்கனு காட்டுக்கறதே தெம்பு தான். 

அதுக்குன்னு நம்மாள முடியாதுனு அர்த்தமில்லை. நீ சொல்ல வர்றது புரிது. கல்யாணத்துக்கு கூப்பிடு. குடும்பத்தோட வந்துடறேன்." என்று திருட்டு தொழிலை விட்டுவிட்டு தற்போது பதவியில் அமரும் அளவிற்கு கோவிந்தன் மாறியிருக்க நல்விதமாகவே பேசி சென்றார். 

சாரதியோ லாவண்யாவை பைக்கில் ஏற்றி, "என்ன யோசிக்கற" என்றான். 

"எதுக்கு என்னை அங்க வச்சி கிஸ் பண்ணின?" என்று பேந்த பேந்த முழித்து கேட்டாள் அவனது திடீர் முத்தத்தில் ஆடிப்போயிருக்கின்றாளே.. சாரதி புன்முறுவலை வீசி, "பவன் கேட்டதெல்லாம் கிடைக்கற பேமிலில வளர்ந்திருக்கான். நீ அடிக்கவும் உன்னையே கட்டிக்க ஆசைப்பட்டிருக்கான். ஆயிரம் முறை எடுத்து சொன்னா புரியுமா? இப்ப ஒரு கிஸ் தந்ததில முத்தம் மட்டும் தானா மெத்தமா முடிச்சிருப்பானானு டேர்டி மைண்ட்ல, இவ எனக்கு வேண்டாம்னு முடிவெடுத்திருப்பான். 

சரியோ தவறோ பிரச்சனை இழுக்காம இருக்கும். இது அவனை மாதிரி மைண்ட் ஸ்டடி இருக்கற ஆளுக்கு ஓர்க்கவுட் ஆகும்." என்றான். 

லாவண்யாவோ வீடு வந்ததும் இறங்கியபடி, "போடா... உன்னை புரிஞ்சுக்கவே முடியலை‌. நிஜமாவே சைக்கிள் தொலைஞ்சு போனப்ப, ஒரு திருடன்னு தெரிந்தும் கால்ல விழுந்து வாங்கியிருக்க. அந்த ஆவுடையப்பன் என்னிடம் தப்பா பிஹேவ் பண்ணினான்னு தெரியவும், அவன் கையை சைலண்சர்ல வச்சி சுட்டுட்ட, இந்த பவன் என்னை கண்ட இடத்துல தொட்டப்ப, நீயா என்னை அவனை அடிக்க சொல்லற மாதிரி, தூண்டி விட்டு வேடிக்கை பார்த்த. நானா காம்பஸ்ல குத்தவும், பார்வையால அப்ரிசேட் பண்ணி விசிலடிச்ச.

இப்பவரை படிச்சு டிகிரி வாங்கியும், எனக்கு கண்டெக்டர் ஜாப் போதும்னு பேசற. புட்பால் விளையாடி பிளேயராகவும் வேண்டாம்னு இருக்க, ஏதோ அந்த கோச் புண்ணியத்துல எந்த டீம் விளையாட வருதோ அவங்களோட விளையாடி, டிரைனரா மாறுவதுக்கு முயற்சி செய்யற." என்று சாரதி சில விஷயத்தில் இப்படி தான், என்று கணக்கு வைத்து பிடிவாதத்துடன் முடிவெடுத்ததை குறிப்பிட்டாள். 

"இவன் திரும்ப பிரச்சனை பண்ணறான் என்றதும் புகார் தந்து வார்னிங் பண்ண வந்தேன்னு நினைச்சியா, பவன் அப்பானு தகவல் எல்லாம் கலெக்ட் பண்ணிருக்கவும், அவருக்கான மிரட்டல் இது.

சிலருக்கு தேன் வச்சே கொல்லுவாங்கனு கேள்விப்பட்டதில்லை. அது மாதிரி. இது ஒரு விதமான மிரட்டல் தான். அவருக்கும் பையன் ஆசைப்படற பொண்ணை சேர்த்து வைக்க ஆசையிருக்கும்ல. இப்ப அந்த எண்ணம் மாறலாம். 

சில நேரம் சில விஷயம், சில சூழ்நிலைக்கும், நாம எடுக்கற முடிவும் எல்லாமே ஏதாவது காரணம் இருக்கலாம். ஆனா அது நமக்கே தெரியாது. மனசு மட்டும் இப்படி செய், இதான் சரி, இப்படி பேசுனு அடிச்சு சொல்லும். நான் அந்த வகையில தான் எல்லாத்தையும் செய்யறது. அன்னிக்கு அப்பா சைக்கிள் தொலைந்தப்ப ஆவேசமா திருடனை பிடிச்சி கத்த தோணலை. ஏதாவது கோபமா பேசி, சைக்கிளை இல்லாம சிதைச்சிட்டா... அது என் அப்பாவோட நினைவு. அதனால கெஞ்சினேன். 

ஆனா ஒரு காதலை... அதுவும் காதலிக்கற பொண்ணு எதிர்ல, என் காதலை எனக்கு பிச்சையா கேட்டா, அதுக்கு அர்த்தமில்லை. இந்த இடத்துல நான் காதலிக்கற பெண்ணே என் கூட இருக்கா. நீயாருடா எனக்கு நடுவுல வில்லன்னு தான் பேச தோணுச்சு. அவ்ளோ தான். உனக்கு நான் வித்தியாசமா தோணலாம். 

சரி நான் புறப்படறேன். உன்னை உங்க வீட்டில் இறக்கிட்டு வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு, டிரஸ் மாற்றிட்டு, அம்மாவிடமும், உங்க வீட்ல உங்க அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிட்டு கிளம்பணும்." என்று இறங்க கூறினான். 

லாவண்யா மனதில் அன்று காஞ்சனாவும் இதையே தான் கூறினார்கள். சாரதி அப்படியே வேறொரு சூழலுக்கு பேச, சாரதியின் தோற்றம் அவனது அப்பாவின் சாயலென்றால், மனமும் செயலும், அவனது அம்மாவின் ஜெராக்ஸாடா நீ என்று  மனதில் ஏறிக் கொண்டிருந்தான். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : October 9, 2026 7:02 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Well.sone sarathy super super fantastic.  Always powerful people misuse their power for their personal purpose. Bavan u deserve this punishment from sarathy. Sarathy u won everyone hearts by ur behaviour. Very intresting sis.sarathy roamncr also super. 


 
Posted : October 9, 2026 9:30 am
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

சரியான அடி பவனுக்கு ... சாரதி செம சூப்பர். .. எங்க எப்படி பண்ணனும் தெரிஞ்ச அடிச்சிட்டான் ... செம


 
Posted : October 9, 2026 10:41 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super super super super super super super super super 


 
Posted : October 9, 2026 10:51 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy kalakita po nalla pakka va plan panni problem ah solve pannitan ivan police station ku ponathu complaint panna illa andha police yae warn panna ippo than theriyuthu super da ne 


 
Posted : October 9, 2026 11:15 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 46)

அட... இதை நாங்க எதிர்பார்க்கலையே ? அந்த இன்ஸ்பெக்டர் தான் பவனோட அப்பாவோ. அதான் அந்த துள்ளு துள்ளுறாரோ ? ஆனால், சாரதி எல்லாத்தையும் விசாரிச்சு முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டு சரியான ஆள் பலத்தோடத்தான்
போலீஸ் ஸ்டேசனுக்கே வந்திருக்கிறான். குட் அப்ரோச்சிங்.
ஆனால், ரொமான்ஸே இல்லாமல் அநாவசியமா ஒரு கிஸ்ஸை வேஸ்ட் பண்ணிட்டானோன்னுத் தோணுது போங்க.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : October 9, 2026 12:17 pm
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Sema da dei sarathy  super


 
Posted : October 9, 2026 7:27 pm
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

SARATHY ROMBA THELIVA IRUKAN AVANUKU EN APANNANUM THONUTHO ATHA CRT AH PANRAN THAIRIYAMA IRUKAN UPER CHARACTER 


 
Posted : October 23, 2026 3:10 pm

Scroll to Top