Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-19

9 Posts
9 Users
3 Reactions
47 Views
(@praveena-thangaraj)
Posts: 184
Member Admin
Topic starter
 
[#246]

அத்தியாயம்-19

ருத்ரனின் கைதட்டல் சத்தம் அந்த வீட்டின் அமைதியை கிழித்தது. யதுநந்தன்-ஷ்ரத்தா இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

வாசலில் ருத்ரன் நின்றிருந்தான். ஒரு யூகத்தில் தான் ஷ்ரத்தாவின் தந்தை திவாகரின் வீட்டுக்கு வந்தான். விசாரணைக்கு என்று எல்லா பக்கமும் அலைந்து திரிந்ததால் இடமெல்லாம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.

அவனது முகத்தில் சிரிப்பு இருந்தது. ஆனால் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.கிண்டல், கோபம், ஏமாற்றம் எல்லாமே கலந்து இருந்தது.

"ரிலீஸ் ஆனதுக்கு காங்கிராட்ஸ் ஷ்ரத்தா." என்று சொன்னவன் மெதுவாக உள்ளே வந்தான்.

அவனது பார்வை முதலில் ஷ்ரத்தாவைத் தொட்டது.

பிறகு யதுநந்தனை நோக்கி மாறியது.

"நல்ல ஏற்பாடு, நான் மட்டும் முட்டாள் மாதிரி ஜெயிலுக்கு வந்து உன்னை தேடிட்டு இருந்தேன்." என்றதும் யதுநந்தன் புருவம் சுருக்கினான்.

"ருத்ரன்." என்று யதுநந்தன் ஏதோ பேசவர, "இல்ல லாயர் சார்... நான் அங்க பேசிக்கறேன். உங்களிடம் பேச நான் தயாரா இல்லை. ஏற்கனவே உன் மேல கோபத்துல இருக்கேன்" என்று அவனை நிறுத்தினான்.

"எனக்கு ஒரு சந்தேகம்."

அவன் நேராக ஷ்ரத்தாவை நெருங்கி வந்தான். "நீ ரிலீஸ் ஆகுறது எனக்கும் சந்தோஷம் தானே.. ஆனா உனக்கு ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லணும்னு தோணலையா?" என்றான்.

ஷ்ரத்தா அமைதியாக நின்றாள். அவளுக்கு இவன் வருவதே பிடிக்காத போது, இவனிடம் எப்படி அவளாக கூறுவாள்?

"என்கிட்ட சொல்லாம போனது ஏன் ஷ்ரத்தா" என்றவன் குரலில் வலி இருந்தது.

"இத்தனை நாளும்... வாரம் வாரம் வந்து உன்னையும்... ராயனையும் பார்த்தது... உனக்கு ஒரு அந்நியனா மட்டும் அறிமுகமாகி பழக்கமாகியிருக்கேனா?" என்றதும் ஷ்ரத்தா ஆழமாக மூச்சை இழுத்தாள்.

"ருத்ரன் சார்... நான் உங்களை எப்பவும் என்னை வந்து பாருங்க. என் குழந்தையை வந்து பாருங்கனு வரச் சொல்லலை" என்றாள்.

அவள் கூறியதில் ருத்ரனின் முகத்தை இறுக வைத்தது.

"நீங்களா வந்திங்க. நீங்களா பேசுனிங்க. அது உங்க விருப்பம். நான் அதுக்கு நன்றி சொல்றேன். அதை தாண்டி...

என்னோட வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயத்தையும் உங்களுக்கு சொல்லணும்னு எந்த கட்டாயமும் எனக்கு இல்ல." என்றாள். வீடு முழுவதும் அமைதியானது.

ருத்ரன் சிரித்தான். ஆனால் அந்த சிரிப்பில் வலி மட்டும் இருந்தது. "சரி.. எனக்கு உரிமை இல்ல..  சொல்லனுமென்ற அவசியம் இல்லை. ஆனா..." என்று யதுநந்தனை பார்த்தான்.

"இவருக்கு மட்டும் எல்லா உரிமையும் இருக்கா?" என்றதும் 

யதுநந்தனின் முகம் கடினமானது.

"ருத்ரன். வார்த்தையை அளந்து பேசுங்க" என்றாள். 

"ஏன்? உண்மைதானே. நான் வந்தா தகவல் சொல்லத் தேவையில்லை. இவர் வந்தா...

வீட்டுக்கே கூட்டிட்டு வரலாம்." என்று கசப்பாக சிரித்தான்.

ஷ்ரத்தாவின் பொறுமை உடைந்தது.

"போதும் ருத்ரன் சார். யது சார் என் அப்பாவோட லாயர்.

என் குடும்பத்துல ஒருத்தர் மாதிரி. அவரைப் பற்றி தப்பா பேசுற உரிமை யாருக்கும் இல்ல." என்று யதுநந்தனுக்காக கிட்டதட்ட வாதாடினாள். 

தன்னை விட யதுநந்தனுக்காக பேசவும் ருத்ரனின் இதயத்தில் நேராக வலியை இறக்கினாள்.

ருத்ரன் சில நொடிகள் ஷ்ரத்தாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு... நான் ஏன் வர்றேன்... எதுக்காக வர்றேன்னு... உண்மையாவே தெரியாதா?" என்று அவன் கேட்ட விதத்தில் இருந்த அர்த்தம்... ஷ்ரத்தாவுக்கு பல மாதங்களுக்கு முன்பே புரிந்திருந்தது.

அதனால் தான் அவள் விடுதலையாகும் விஷயத்தை அவனிடம் சொல்லவில்லை. அவளது பதட்டமும், விழிகள் உருளவும், அவள் அறிந்து வைத்ததை புரிந்த ருத்ரன் கசப்பாக சிரித்தான்.

"நல்லது...‌ அப்போ... நான் ஏன் உன்னை தேடி வந்தேன்... எதுக்காக வந்தேன்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அப்படித்தானே ஷ்ரத்தா?" என்றான். 

"எனக்கு என்ன தெரியும்? எனக்கு எதுவும் தெரியாது" என்று அவள் மேலும் பதட்டமாக மாறினாள்.

கூடுதலாக "தயவு செய்து... ஏதாவது பேசிட்டு இருக்காதிங்க. கீர்த்தனா ஆன்ட்டி இல்லாம... உங்களை தனியா சந்திக்கறதே எனக்கு பிடிக்கலை. நமக்குள்ள ஆரம்பத்திலிருந்தே ஒத்து வரலை. உங்கப்பாவை கொன்றது என் புருஷன் சத்ரியன் தான்‌. நீங்களே அதை ஆயிரம் முறை என்னிடம் சொல்லி சொல்லி வதைச்சியிருக்கிங்க. அப்படி இருக்கும் போது... நான் ரிலீஸ் ஆகுறதை ஏன் உங்ககிட்ட சொல்லணும்? அதை மறைச்சதுக்கு இப்ப வந்து ஏன் என்னிடம் சண்டை போடறிங்க. எனக்கு விடுதலை ஆகிடுச்சுனு நிம்மதியா இருக்கேன். அது பொறுக்காதா உங்களுக்கு" என்றாள். 

அவள் பேசிய வார்த்தைகள் ருத்ரனின் முகத்தை மொத்தமாக வாட வைத்தது.

யதுநந்தன் முன்னால் தான் நிராகரிக்கப்படுவது அவனுக்கு தாங்க முடியாத அவமானமாக இருந்தது.

அந்த நேரம் 'ஹாய்... ருத்ரா'  என்று மழலைக்குரலில் கத்திக் கொண்டு குழந்தை ராயன் ஓடி வந்தான்.

நேராக ருத்ரனின் கால்களை கட்டிக்கொண்டான்.

ருத்ரனும் இயல்பாக அவனைத் தூக்கிக் கொண்டான்.

"ராயன் குட்டி" என்று ருத்ரன் குழந்தைக்கு முத்தம் வைத்தான்.‌

"ருத்ரா' என்று அவனும் முத்தம் தந்து, குழந்தை ருத்ரனின் தொப்பியை எடுத்து குழந்தை தலையில் வைத்துக் கொண்டான்

சிறைச்சாலையில் பெரும்பாலும் கைதிகள் உடை, கார்த்திகாவின் சீருடையைப் பார்த்தே வளர்ந்ததால், ருத்ரனும் காக்கி உடை என்பதால் பழகினான். 

யூனிஃபார்ம் போட்ட எல்லாருமே அவனுக்கு ஹீரோ.

அதில் ருத்ரன் அடிக்கடி வந்து கொஞ்சி விளையாடியதால்,

அவன் மனதில் ஒரு தனி இடம் பிடித்திருந்தான். எல்லா ஆண் குழந்தைகளும் முதல் ஹீரோ அப்பா தான்.‌ இங்கு சத்ரியனை நேரில் காணாததால், ருத்ரன் அடிக்கடி வந்து பேசி சிரித்து விளையாடவும், ராயனுக்கு நெருக்கமானான். 

அதை பார்த்த ருத்ரன் வேதனையோடு சிரித்தான்.

"ஆடுபகை... குட்டி உறவாடான்னு.. எங்கம்மா ஒரு தடவை சொன்னாங்க. அப்போ புரியலை. இப்போ புரியுது. நான் தான்... முட்டாள் ஆடா இருக்கேன் ஆனா..." ராயனை இறுக்கமாக அணைத்தவன்,

"இவன் மட்டும் என்னோட உறவாயிட்டான்." என்று ஷ்ரத்தாவையே பார்த்து சொன்னான்.

அவள் நெற்றியை சுருக்கினாள். அதில் அதிருப்தியிருந்தது. 

"ராயன்... இங்க வா." என்று அழைத்தாள்.

ராயன் மறுப்பாய் தலையசைத்தான்.

"மாட்டேன் ருத்ரா கூட விளையாடணும்." என்று ருத்ரனின் தோளில் முகம் புதைத்தான்.

அதை பார்த்த ருத்ரன், "ஏன் பதறுற? "ராயனுக்கு... என் மேல பாசம் இருக்கு. அந்த பாசத்தையாவது அனுபவிக்க விடு. அவன் பிறக்கப் போறான்னு தெரிஞ்சதும்... உன்னை தூக்கிட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினது நான். அந்த பாசம்... உனக்கு இல்லாவிட்டாலும் அவனுக்கு இருக்கத்தானே செய்யும்." என்றவன் நேரடியாக காதலை சொல்லவில்லை.

ஆனால்... ஒவ்வொரு வார்த்தையிலும்... 'நான் உங்களுக்குரியவன்' என்ற உரிமை மறைந்திருந்தது. 

அந்த நிமிடம்... ஷ்ரத்தாவுக்கு எல்லாமே புரிந்தது. கீர்த்தனா ஆடு பகை குட்டி உறவா?' என்று கேட்டு சண்டையிட்டு இருக்க வேண்டும். மேலும் அவர் வராமல் செல்வதற்கு வேறு காரணமேயில்லை. 'ருத்ரன் தன்னை நேசிப்பதால் தான் கீர்த்தனா ஆன்ட்டிக்கு அது பிடிக்காமல், என்னை பார்க்க கூட வரவில்லை. இவன் மனசு மாறணும்னு நினைச்சுதான்... அவங்க விலகி இருக்கலாம்.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அப்போது யதுநந்தன் முன்னே வந்தான். "ருத்ரா... குழந்தையை கொடுத்துட்டு போ. ஷ்ரத்தாவுக்கு பிடிக்கலன்னா... விட்டுடு. அவங்களே இப்ப தான் வந்தாங்க. ரிலாக்ஸா உட்கார கூட விடலை‌ நீ வந்து நிற்கற." என்றதும் ருத்ரன் உடனே அவனை கோபமாக பார்த்தான்.

"ஏன்? அவளுக்கு... உன்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாளா? அதான் ரொம்ப துள்ளறியா?'' என்றான் எகத்தாளமாய். ருத்ரனிடமிருந்து ராயன் லேசாக கீழேயிருக்கியிருந்தான்.‌

அந்த கேள்வி அந்த ஹாலையே அமைதியாக்கியது.

ஷ்ரத்தா அதிர்ச்சியோடு யதுநந்தனை பார்த்தாள். ருத்ரன் பேசியதை கேட்டும் யதுநந்தன் மறுக்கவும் இல்லை.ஆமோதிக்கவும் இல்லை. அமைதியாகவே கையை பிசைந்து நின்றான். 

  தந்தையின் ஜூனியர் தனக்கு உதவுவதை கொச்சைப்படுத்துவதாக எண்ணி, ஷ்ரத்தா தான் கோபத்தை கட்டுப்படுத்த பிடிக்காமல், 'பளார்' என்று ஒரு அறை ருத்ரனின் கன்னத்தில் பதித்தாள். அவளும் எத்தனை நாள் தான் ருத்ரனின் பார்வை பேச்சை சகித்துக் கொண்டிருப்பாள். முன்பாவது சத்ரியனை பற்றி பேசுவான். அதனால் சகித்து கொள்வான். யதுநந்தனோடு இணைத்து பேசினால் அமைதிக்காக்கா முடியுமா?

அதிர்ச்சியில் ருத்ரன் அப்படியே நின்றான். "என்ன பேசுற? என்ன பேசுறடா நீ?" என்று ஷ்ரத்தாவின் குரல் நடுங்கியது.

ருத்ரனின் காக்கி சீருடையின் காலரை பிடித்து, "உன்னை பிடிக்கலைன்னா... இவரை பிடிக்கும்னு அர்த்தமா? எப்படி உன்னால இப்படியெல்லாம் பேச முடியுது" என்றவளது கண்களில் கோபத்தோடு கண்ணீரும் கலந்தது.

"நா...நான்...வாழ்ந்தாலும் செத்தாலும் சத்ரியனோட பொண்டாட்டி. மைண்ட் இட்." என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக சொன்னாள்.

ஷ்ரத்தா அறைந்த சத்தத்தில் கோபமாய் பேசியதில், குழந்தை ராயன் பயந்து போனான்.

உடனே ருத்ரனிடமிருந்து நழுவி ஓடி வந்து, ஷ்ரத்தாவின் கால்களை இறுக கட்டிக்கொண்டான்.

"அம்மா... அம்மா.." என்று அழுதான். அவனுக்கு அம்மா ஏன் கத்துகின்றார் கோபப்படுகின்றார் என்று அறியாமல் அன்னைக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென அவளது காலை கட்டிக் கொண்டான். 

  ஒருபுறம் கன்னத்தில் கை வைத்தபடி ருத்ரன் அவன் காதலை இலைமறையாக சொல்லிவிட்ட திருப்தியில் இருந்தான்.

மறுபுறம் அமைதியாக நின்ற யதுநந்தன் இத்தனை விரிவாக பேசியவளிடம் ருத்ரன்‌போல தானும் காதலிப்பதாக தெரிவித்தால் ஏற்பாளா? இல்லை... இனி ஏதேனும் உதவி செய்தால் ஏற்பாளா? இதே நட்புடன் தான் எதையும் தொடர்ந்து பழக வேண்டுமா? தனது காதலை கூறவும் அதை ஷ்ரத்தா ஏற்கவும் நாட்கள் அமையாதா? என்று சிந்தனையோடு, குழம்பியிருந்தான். 

    நடுவில் தன் கால்களை கட்டிக்கொண்டு அழும் ராயனை பார்த்ததும் ஷ்ரத்தாவால் தாங்க முடியவில்லை. 

இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். 'அம்மா. அம்மா.' என்று பிஞ்சு கையின் தொடுகையில் அவனை அணைத்து கொண்டு "இன்னும் என்னனென்ன கொடுமையை பார்க்கணும்னு என்னை தவிக்க விட்டுட்டு போயிட்ட சத்ரியா. இதுக்கு என்னையும் உன்னோட சேர்த்தே கூட்டிட்டு போயிருக்கலாமே." என்று கத்தி கதறினாள். 

அங்கிருந்த மூன்று கைதிகள் இப்பொழுது பணிப்பொண்ணாக மாறியிருக்க, "ருத்ரன் சார் இங்க இருந்து போறிங்களா? அவங்களே இப்ப தான், அவங்க அப்பா வீட்ல அடியெடுத்து வச்சியிருக்காங்க. சோ நிதானமா அவங்களை இருக்க விடுங்க. உங்க பழிவாங்கலும், காதலும் இப்ப அவங்களுக்கு தேவையில்லை. ப்ளீஸ் மூவ்" என்று வெளியே கதவை காட்டி கூறினார்கள். ஜெயிலில் கைதி உடையுடன் பார்த்த பெண்கள் இங்கே எப்படி என்று ருத்ரன் மெதுவாக ஷ்ரத்தா அழுவதை தாளாமல் தன் தொப்பியை எடுத்து பின்னால் நகர்ந்தான்.‌

யதுநந்தனிடமும், "நீங்க அவங்களை அழைச்சிட்டு வந்து இங்க விட்டிங்க. ரொம்ப நன்றி சார். பட் இப்ப நீங்களும் போனா தான் பெட்டர். அவங்களுக்கும் எங்க குட்டி பாஸ் ராயன்சத்ரியனுக்கும் தனிமை தேவைப்படலாம். ப்ளீஸ்" என்று வாசல் பக்கம் கையை காட்ட, யதுநந்தன் மறுக்காமல் சட்டென தலையாட்டி, "ஷ்ரத்தா...நான் அப்பறம் வந்து பார்க்கறேன்" என்று வெளியேறினான். 

   இருவரும் வெளியேறியப்பின், கதவு தாழிடப்பட்டது. 

  யதுநந்தன் கருப்பு நிற காரில் திறந்து ஏறினான்.‌

  ருத்ரனோ தன் புல்லட்டில் ஏறி உதைத்து, அவனை ஏறிட்டான். 

  இருவரும் அவ்விடம் விட்டு அகன்றனர்.‌

  ஒரு பெண்ணோ "ராயன் அம்மா கொஞ்சம் காம் ஆகட்டும். நாங்க உன்னை குளிப்பாட்டிட்டு டிரஸ் போட்டு விடறோம். வாங்க" என்று கூப்பிட, சென்றான். ஏற்கனவே பழகியவர்கள் என்பதால் மறுக்கவில்லை. 

   ஷ்ரத்தாவோ சத்ரியனின் புகைப்பட்ததை கட்டிக்கொண்டு சொல்ல இயலாத வலியுடன் கதறினாள். 

-தொடரும்‌

பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : July 29, 2026 11:21 am
(@guna-sundari)
Posts: 66
Trusted Member
 

Omg so dad. Sharadha pavam. Very intresting sis 


 
Posted : July 29, 2026 12:30 pm
(@dharsinipriya)
Posts: 65
Trusted Member
 

Super sis nice epi 👌 😍 ❤️ rudhran oru Pakkam yadhunandhan oru Pakkam nadula shratha nelama dhan romba paavam 🙄 chathriya nee erundha rppdi nadakka vitrupiya seekirama vaa pa🥺


 
Posted : July 29, 2026 12:40 pm
(@priyarajan)
Posts: 14
Active Member
 

பாவம் ஷ்ரத்தா.... 


 
Posted : July 29, 2026 2:27 pm
(@kalidevi)
Posts: 70
Trusted Member
 

Ruthran nee nadanthukurathu romba thappu nee aasai padurathu thappu illa aana nee compul panra mari iruku, ipo yathu konjam ushara aeitan


 
Posted : July 29, 2026 2:43 pm
(@crvs2797)
Posts: 111
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 19)

அடேய் தீவட்டி தடியனுங்களா..! ஒரு பொண்ணு தனியா இருக்க கூடாதே, உடனே காதல்ன்னு சொல்லிக்கிட்டு போட்டி போட்டுட்டு வந்து நின்னுடுவிங்களே. ஏன் ஒரு பொண்ணு தனியா, தன் குழந்தையோட வாழவே கூடாதா ?
அவ வந்து உங்க கிட்ட கேட்டாளா ? எனக்கு தனியா வாழப் பிடிக்கலை, உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் எனக்கு வாழ்க்கை கொடுங்க, எனக்கு துணையா நில்லுங்கன்னு சொன்னாளா ?
கிடையாது தானே ? அப்படியே துணையா இருக்கணும்ன்னா
புருசனாத்தான் வருவிங்களா ?
நண்பனா, அண்ணன் முறையா வரவே மாட்டிங்களா ? அதுவும் சத்ரியன் மாதிரி ஒருத்தன் கூட வாழ்ந்தவ, நீங்க கூப்பிட்டவுடனே எப்படி வருவாள்...?  நெருங்கின உறவா மாறித்தான் உதவி பண்ணனுமா ? தள்ளி நின்னுக்கூட பண்ணலாம் தானே ? அவளை அவளோட வாழ்க்கையை, அவ போக்குல வாழ விடுங்கடா. அதுவே அவளுக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : July 29, 2026 3:38 pm
(@subhakumar85)
Posts: 50
Trusted Member
 

Dei yathu marai mugama unnakana chance pochu.. leave her alone da


 
Posted : July 29, 2026 5:38 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 59
Trusted Member
 

Rudhran yadhu ivanga rendu per oda feelings thappu illa aana anga Shardha oda unarvum onnu iruku la ava life la avaluku chathriyan than ellamae nu nemachikitu iruku ah ava kita vandhu ivan unarvu ah sonnathu kooda thappu illa aana ava no solluva nu therinchum aval ah kayapadurathu thappu ah theriyala Rudhra unnaku 


 
Posted : July 29, 2026 5:55 pm
(@kothaihari)
Posts: 60
Trusted Member
 

ஏன்டா இப்படி இருக்க இஙக ... ஓரு பொண்ணு தனியா இருந்த காதல் வர வேண்டியது.... ஷ்ரத்தா எப்போதும் சத்ரியன் பொண்டாட்டி தான் ....


 
Posted : July 29, 2026 9:18 pm

Scroll to Top