வெளிச்சம் - 37
அத்தியாயம் 37
சிவன்யா கிளம்பிச் சென்ற பிறகு அப்படியே அமர்ந்து விட்டான் தேவ். தாம் செய்த தவறு சிவன்யாவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை நன்கு உணர்ந்துதான் இருந்தான். ஆரம்பத்தில் திருமணத்தை எப்படியாவது தடுத்துவிடலாம் என்று தான் நினைத்தான்.
ஆனால் அவனால் அவன் தாய் தந்தையரின் ஆசையை கண்டு திருமணத்தை நிறுத்த முடியவில்லை. பின்னர் சிவன்யாவிடம் பேசி எப்படியாவது தடுத்துவிடலாம் என்றுதான் நினைத்தான். அதையும் அவனால் செய்ய இயலவில்லை.
அவனைப் பொறுத்த வரையில் அவனுடைய செயல் தவறு இல்லை என்று தான் நினைத்தான். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர் பாலினத்தின் இடையே ஏற்படும் ஈர்ப்பு இயற்கையானது. ஆனால் தேவ்விற்கு எதிர்பாலினத்தின் மீது ஏனோ ஈர்ப்பு ஏற்படவில்லை.
ஆரம்பத்தில் தனக்கு தோன்றும் எண்ணத்தை கண்டு அதிர்ந்து வருந்தினான். பின் அதைப் பற்றிய செய்திகளை எல்லாம் இணைய தளத்தில் அலசி ஆராய்ந்தான். அதன்பிறகு தன்னால் ஒரு பெண்ணுடன் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டான். தாய் தந்தையருடன் இருந்தால் திருமணத்திற்கு தன்னை கட்டாயப்படுத்துவார்கள் என்றுதான் வெளிநாட்டு வேலைக்கு வந்தான்.
இங்கு வந்தும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தான், ஜோவை பார்க்கும் வரை. கிட்டத்தட்ட அவனது நிலை தான் ஜோவிற்கும். இருவரும் எண்ணமும் ஒன்றாக இருந்தது. இருவரும் ஒன்றாக வாழ தொடங்கி விட்டார்கள். அவர்கள் இருக்கும் நாட்டில் ஓர் பால் உறவு என்பது சட்டத்திற்கு புறம்பானது.
அதுபோல தேவ்வாலும் தன் பெற்றோரிடம் தன் உணர்வை பற்றி பேசுவதற்கு தயக்கமாக இருந்தது . இன்னுமே ஓர் பால் உறவை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் பலர் இல்லையே. அதுபோல் தன் பெற்றோர்களும் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினான் தேவ்.
ஆகையால் அவர்கள் ஜோவின் ஊரான அமெரிக்காவிற்கு சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள். இருவரும் தங்களது வேலையை விட்டுவிட்டுஷ அமெரிக்க சென்று புது வேலை கிடைத்ததும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். அதற்கான வேலைகளைத்தான் கடந்த ஆறு மாதங்களாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அதற்குள் தேவ்விற்கு தன் தங்கையை திருமணத்தை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில்தான் அவன் தந்தை போன் செய்து நளினியன் திருமணத்தைப் பற்றி கூறினார். அதில் மகிழ்ந்து தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டால், தான் நிம்மதியாக அமெரிக்கா சென்று விடலாம் என்று ஜோவிடம் தெரிவித்து விட்டு தான் இந்தியா வந்தான்.
ஆனால் அவன் நினைத்தது வேறு அங்கு நடந்தது வேறு. வந்ததும் பேச முடியாமல் திருமணத்தையும் முடித்துக்கொண்டான் தேவ்.
திருமணம் முடிந்த பிறகு கூட அதனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளிடம் இருந்து எப்படியாவது விலகிவிட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டேன் இருந்தான். ஆனால் எப்படி என்று தான் அவனுக்கு தெரியவில்லை.
அனைவரிடமும் அலட்சியமாக நடந்து, மரியாதை இல்லாமல் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விடலாம் என்றும் நினைத்தான். பிறந்ததிலிருந்து அனைவருக்கும் மரியாதை கொடுத்து, அனைவரிடமும் அன்பாக பழகியவனால் அதையும் சரிவர செய்ய முடியவில்லை. என்ன செய்வது என்று தனக்குள்ளேயே கடந்து தவித்தான்.
முடிவாக ஜோ, உன்னுடைய இயல் தன்மையை மாற்றி, அவர்களிடம் வெறுப்பாக நடந்து கொண்டு வருவது சரி கிடையாது. நம் நிலைமையை உன் பெற்றோரிடம் சொல்லுவோம். அவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள் என்று எவ்வளவோ கூறினான். தினமும் ஜோ அவனுக்கு ஃபோனில் மெசேஜ்ஜில் அவனுக்கு தைரியம் கூறிக் கொண்டே இருந்தான்.
முடிவாக அவன் அங்கிருந்து கிளம்புவது என்றும் உறுதியானது. இங்கு வந்து பிறகு உடனே தன் வேலைகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தான் துபாய்க்கு விமானத்தில் ஏறினான்.
ஜோவிற்கு வேலை சுலபமாக முடிவது போல் இருந்தது. ஆனால் தேவ்விற்கு வேலையை முடிக்க தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.
சிவன்யா வருவதற்கு முன்பே அவனால் சிவன்யாவிடம் கூட தன்னைப் பற்றி சொல்ல முடியவில்லை. அப்படியே நாள்கள் கடக்க சிவன்யாவும் துபாய் வந்துவிட்டாள்.
சீக்கிரம் தங்களது வேலையை முடித்துவிட்டு அவளிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்று இருவரும் முடிவு செய்து இருக்க, எதிர்பாராமல் தேவ்வின் கைது நடந்து விட்டது.
ஜோ நினைத்தால் அப்பொழுதே அவனை விடுதலை செய்திருக்க முடியும். ஆனால் அவன் வேலைகளை முடித்து அமெரிக்கா செல்ல தயாராக இருக்கும் பொழுது தேவ்வின் கேசில் சம்பந்தப்பட்டால், அவனால் வெளியே எங்கும் செல்ல முடியாது என்பதால், தேவ் அவனை ஒதுங்கி இருக்கும் படி சொல்லிவிட்டான்.
அந்த நாட்டில் தவறுகளுக்கு தண்டனை எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்த தேவ், தன்னை அவர்கள் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாமல் அமைதியாக இருப்பதில், தன் மேல் தவறு இல்லை என்பது நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கிறது என்றுதான் பொறுமையாக இருந்தான்.
அதற்குள் சிவன்யாவும் ஷேக் உடன் பேசி அனைத்தையுமே விரைவாக முடி முடித்துவிட்டாள். அதில் விடுதலையாகி வீட்டிற்கு வந்ததும் இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்ததால் இருவரும் தங்களை மீறி உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள். அதை சிவன்யாவும் பார்க்கும் படி ஆகிவிட்டது.
அவளுக்காக தாம் எதுவும் செய்யாவிட்டாலும், தனக்காக போராடி தன்னை விடுவிக்க போராடியவள் சிவன்யா. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவளை இப்படி இவ்வளவு நாள்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமே என்று அவனுக்கும் வருத்தமாக தான் இருந்தது.
ஆனால் எப்படியும் ஒரு நாள் அவளுக்கு தெரிய வேண்டிய விஷயம் தானே என்று தன் மனதை தேற்றிக் கொண்டான். ஜோவும் இரவு அமெரிக்கா கிளம்பிய பிறகு தனிமையில் இதுவரை நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்துக்கொண்டு இருந்தான்.
இந்நேரம் சிவன்யா வீட்டிற்கு சென்று இருப்பாள். அங்கு தன்னை பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். இனிமேல் நான் அவர்களை எதிர்கொள்வது மட்டும்தான் என்னுடைய வேலை என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, இந்தியாவில் இருந்து வரும் போனிற்காக உறங்காமல் காத்திருந்தான் தேவ்.
சிவன்யாவின் தந்தையிடமிருந்து ஃபோன் வரும் என்று காத்திருந்த தேவ்விற்கு, தனது தந்தையிடம் இருந்து வந்தேன் ஃபோனை கண்டு, ஒரு மகன் தந்தையிடம் பேச தயங்கக்கூடிய விஷயத்தை அல்லவா செய்து விட்டான். அதில் தயக்கமாகவே எடுத்து,
"ஹலோ" என்றதும்
"என்னப்பா நடக்குது? சிவன்யா வீட்டிற்கு வந்துவிட்டாலாமே! ஏன் என்னாச்சுப்பா? அந்தப் பிள்ளை எதுனா தப்பா பேசிச்சா? அவர்கள் வீட்டிலிருந்து ஃபோன் வந்தது, எது என்றாலும் உன்னிடமே கேட்டு சொல்லிட்டாங்க. தயவுசெய்து சொல்லுப்பா, அப்பா மேல எதுவும் கோவமா இருந்துச்சுன்னா அதை அந்த பிள்ளை மேல காண்பிக்காதே! தங்கமான பிள்ளை" என்று கலக்கமாகவே பேசினார் விஸ்வநாதன்.
"சிவன்யாவின் மீது எந்த தவறும் இல்லை அப்பா, தவறு என் மீது தான்" என்றான் தேவ்.
"நான் நினைச்சேன் டா, இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன உனக்கு வற்புறுத்தி திருமணம் முடித்து வைத்தேன். அதனால் நீ அந்த பிள்ளையை ஏதோ கஷ்டப்படுத்தி பேசியிருக்கிறாய், அதானே!" என்றார்.
"சிவன்யாவிடம் பேசினீங்களா? அவள் ஏதாவது சொன்னாளா?
"அவளிடம் பேசவில்லை, மேகநாதன் தான் பேசினான். இனிமேல் சிவன்யா உன்னுடன் வாழ மாட்டாளாம், விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கூறினார்கள். இதுவரை மரியாதை பேசிய பையன். இன்று ஒரு வார்த்தை கூட முறை சொல்லி கூப்பிடுவதில்லை. அதிலேயே தெரிகிறது அவர்களுக்கு உன் மீது உள்ள கோபம்.
சொல்லு, அப்படி என்னதான் நடந்தது? என்னதான் செய்தாய் அந்த பிள்ளையை?" என்று சற்று கோபமாக கேட்டார் விஸ்வநாதன்.
பெருமூச்சு விட்ட தேவ் "அவர்கள் சொல்வது போலவே செய்து விடுங்கள் அப்பா" என்றான்.
"என்னடா சொல்ற!?" என்றார் அதிர்ச்சியாக
"ஆமா அப்பா, விவாகரத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கள்" என்று கூறி ஃபோனை வைத்தான் தேவ்.
- தொடரும்..
- அருள்மொழி மணவாளன்..
-
வெளிச்சம் - 43
2 weeks ago
-
வெளிச்சம் - 42
2 weeks ago
-
வெளிச்சம் - 41
2 weeks ago
-
வெளிச்சம் - 40
4 weeks ago
-
வெளிச்சம் - 39
4 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
