Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 33

1 Posts
1 Users
1 Reactions
75 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#269]

அத்தியாயம் - 33

 

சிவன்யாவை அதிகம் காக்க வைக்காமல் அழைத்தார் ஷேக். அலுவலக ஊழிய ஷேக் அழைப்பதாக கூறியதும் படபடப்பாக அவனை பின் தொடர்ந்து ஷேக் இன் அறைக்குள் நுழைந்தாள். அவரின் அறையே ஒரு அரண்மனைக்குள் நுழைந்தது போல் தோன்றியது அவளுக்கு. 

 

பிரம்மாண்டமான அந்த அறையை பார்த்துக் கொண்டே தயங்கி உள்ளே நுழைந்தாள். அவர் இருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த ஒற்றை சோபாவை காண்பித்து, அவளை அமரும்படி ஆங்கிலத்தில் கூறினார். 

 

சிவன்யாவும் அவருக்கு வணக்கம் கூறி அமர, ஷேக்கும் கை இரண்டையும் கூப்பி அவளுக்கு பதில் வணக்கம் கூறினார். அதில் உண்மையிலேயே தேவ் சொன்னது உண்மைதான் போல, ஷேக் உண்மையில் ரொம்ப நல்லவர் என்று எண்ணம் அவளுக்குள் தோன்றியது. 

 

அவள் அமர்ந்ததும் அவள் அருந்துவதற்கு என்ன வேண்டும் என்றார். 

அவளோ மறுப்பாக எதுவும் வேண்டாம் என்று தலையாட்ட, அவள் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கண்டு "நீ பார்ப்பதற்கு களைப்பாக தெரிகிறாய்" என்று கூறிவிட்டு, அவள் குடிப்பதற்கு சூடான பானம் கொண்டுவர கட்டளையிட்டார். 

 

அடுத்த நொடியே அவர்கள் இருவருக்கும் சூடான தேநீர் பரிமாறப்பட, தயங்கி அமர்ந்திருந்த சிவன்யாவிடம் எடுத்து குடிக்குமாறு கட்டளையிட்டார். 

அவர் சாதாரணமாக பேசுவது கூட ஆணை இடுவது போல் இருக்க, பயத்துடன் எதிலிருந்து டீயை எடுத்து குடித்தாள் சிவன்யா. 

 

அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த ஷேக் அவர் காலி குவலையை மேஜையில் வைத்ததும், "உன் கணவன் செய்தது தவறு தானே! அப்படி இருக்க நீ ஏன் தினமும் அலுவலகத்திற்கு வந்து எங்கள் வேலையில் தொந்தரவு செய்கிறாய்?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 

 

"இல்லை சார், நிச்சயம் அவர் அப்படி செய்திருக்க மாட்டார். நீங்கள் கொஞ்சம் தீர விசாரியுங்கள். அவருக்கு பணத்தை கையாடல் செய்யும் அவசியம் இல்லையே!" என்றாள், அவரின் கண்களைப் பார்த்து தைரியமாக. 

 

சிறிது நேரம் அவளை ஆழ்ந்து பார்த்த ஷேக் "அப்படி என்றால் நாங்கள் தீர விசாரிக்காமல் தவறு செய்கிறோம் என்று சொல்கிறாயா?" என்றார் அவளிடம் நேரடியாக. 

 

நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் என் கணவர் நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார் என்றுதான் சொல்கிறேன். அவர் செய்யவில்லை என்றால் வேறு யாரோ தானே செய்திருக்க வேண்டும்" என்று உறுதியானப் பார்வையில் ஷேக்கை பார்த்தாள். 

 

அவளின் பேச்சில் மெச்சிய பார்வை பார்த்து, "இங்கு தவறுகளுக்கு தண்டனைகள் பலமாக இருக்கும் தெரியுமா? சாட்சிகள் எல்லாம் உன் கணவனுக்கு எதிராகத்தான் இருக்கிறது" என்றார். 

 

அதைப் பற்றி தெரிந்த தானே பயந்து கொண்டு இருக்கிறாள் சிவன்யா. ஆமாம் என்று பயந்தவாறு தலையாட்டி "அதனால் தான் தவறு செய்யாத என் கணவருக்கு கடுமையான தண்டனை கிடைத்து விடுமோ என்று பயமாக இருக்கிறது" என்றாள். "ஒருவேளை சாட்சிகள் அவருக்கு எதிராக உருவாக்கப்பட்டிருந்தால்!" என்று மீண்டும் அவரிடம் கேள்வியாய் கேட்டாள். 

 

அவளின் தைரியத்தில் அவருக்கு வியப்பு மேலிட தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி "பரவாயில்லை, கணவனுக்காக போராடுகிறாய்!" என்று சொல்லிவிட்டு "என்னை பார்த்தால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வேலை செய்பவன் போல் தெரிகிறதா உனக்கு? தீர விசாரித்து தான் ஒவ்வொன்றையும் செய்து கொண்டு இருக்கிறேன்" என்றதும் சிவன்யாவிற்கு பயம் வந்துவிட்டது.

 

அவள் பயந்த முகத்தைக் கண்டு சிரித்துக் கொண்டே "பயப்படாதே! நான் விசாரித்த வரையில் தேவ்விற்கு இதில் எந்த சம்பந்தமும் இருக்காது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் தான் காவல்துறையில் அவனை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். 

 

இன்னும் ஓரிரு நாளில் உண்மையான குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து விடுவேன். உண்மையில் தேவ் பணத்தை கையாடல் செய்யாவிட்டாலும் கவனக்குறைவாக இருந்தது அவன் தவறு தானே?" என்றார் அவளை பார்த்து. 

 

அவள் அமைதியாக இருக்க, 

"அதற்கு தண்டனையாக இது இருக்கட்டும். நீ கவலைப்படாதே! அவனுக்கு எந்த ஆபத்தும் வராது. ஆனால் அதே போல உடனேயும் அவனை விடுதலை செய்ய முடியாது. அவன் மேல் புகார் அளித்தது அளித்ததுதான். இனிமேல் அவன் தான் அதிலிருந்து வெளியே வர வேண்டும்" என்று சொல்லிவிட்டு "நீ போகலாம்" என்று வாசலை காண்பித்தார் ஷேக். 

 

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்து, காத்திருப்பு அறையில் இருந்து உன்னிகிருஷ்ணனுக்கு அழைத்தாள். ஷேக் கூறியது அனைத்தையுமே கூற, உன்னிகிருஷ்ணனுக்கும் மகிழ்வாக இருந்தது. 

"பரவாயில்லை மா, இன்று ஷேக் வந்து உன் கவலையை தீர்த்து வைத்து விட்டார். அவரே சொல்லிவிட்டார் அல்லவா இனிமேல் தேவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது" என்றான் உற்சாகமாக. 

 

மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்த சிவன்யா ஜோவிடமும் ஷேக் சொன்னதை பகிர்ந்து கொண்டாள். ஜோவும் மிகவும் மகிழ்ச்சியாக "நான் ஊருக்கு செல்வதற்குள் தேவ் வந்து விடுவான்" என்று கூறி லேசாக சிவன்யாவை அணைத்து விடுத்தான். 

 

மறுநாள் உன்னிகிருஷ்ணனிடம் தேவ்வை சந்திக்க எப்படி செல்ல வேண்டும் என்று விசாரித்துக் கொண்டு அவனை சிறையில் சென்று பார்த்தாள் சிவன்யா. 

"உன்னை யார் இங்கே வரச் சொன்னது. எல்லாம் கம்பெனியே பார்த்துக்கொள்ளும். நீ ஏன் தனியாக காவல் நிலையத்திற்கு எல்லாம் வருகிறாய்?" என்று சிவன்யாவை கண்டித்தான் தேவ். 

 

தன் மேல் அக்கறையில் தன் கணவர் தன்னை தண்டிக்கிறார் என்று நினைத்து மகிழ்ந்த சிவன்யா "உங்களை பார்க்க வேண்டும் போல் இருந்தது" என்று சொல்லிவிட்டு அடுத்து என்ன ஃபார்மாலிட்டீஸ் இருக்கிறது என்று காவல் நிலையத்தில் விசாரித்து வந்தாள். 

 

அதன்படியே மறுநாள் அவள் அலுவலகத்திற்குச் சென்று, தேவ்வை விடுதலை செய்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அதற்கு ஏற்பாடு செய்தாள். 

அவர்கள் கம்பெனியே அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் என்றாலும் உடனே காவல்துறைக்குரிய பணம் செலுத்தினால், அவனை சீக்கிரம் விடுதலை செய்து விடுவார்கள் என்று நினைத்து அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கேட்டாள். 

 

அவர்கள் கூறிய பணம் அவள் கையில் இல்லை. அது மட்டுமல்ல தேவ்வின் அக்கௌன்ட் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டதால், அதிலிருந்தும் பணம் எடுக்க முடியாது. என்ன செய்ய என்று தெரியாமல் யோசித்த சிவன்யா, தன்னிடம் உள்ள நகை சிலவற்றை விற்று விடலாம் என்று உன்னிகிருஷ்ணனிடம் கேட்டாள். 

 

"ஏன் நீ அவசரப்படுகிறாய்! கம்பெனியில் நிச்சயம் இதையெல்லாம் பார்த்துக் கொள்வார்கள். அவன் மேல் தவறு இல்லை என்றால் ஜெயிலில் அவனிடம் நிச்சயம் கடுமையாக எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள். அவனை நினைத்து வருந்த வேண்டாம். நகையை இப்பொழுது விற்கவும் வேண்டாம். நான் வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். அவன் வந்து எனக்கு தரட்டும்" என்றான் சற்று கோபமாக. 

 

"அவர் நல்லபடியாக இருந்தால் போதும் அண்ணா. நகை நட்டெல்லாம் எனக்கு எதற்கு? நீங்கள் இந்த பணத்தை இந்த நகையை விற்று அவர்கள் வக்கீலுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள். இந்த நகை விற்றாலும் சரி நீங்கள் வைத்துக் கொண்டாலும் சரி. உங்கள் இஷ்டம் ஆனால் நகையில்லாமல் நீங்கள் பணம் தர வேண்டாம்" என்று விட்டாள் முடிவாக. 

 

அதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாத உன்னிகிருஷ்ணன் அவள் கூறியபடியே ஏற்பாடு செய்தான்.

சின்யாவின் விருப்பப்படியே அனைத்தும் நடக்க, தேவ் என்றைக்கு வருவான் என்று காத்துக் கொண்டிருந்த சிவன்யாவிற்கு, நாளை தேவ் வீட்டிற்கு வந்து விடுவான் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

 

அவன் வருவதை கேட்டு மிகவும் மகிழ்ந்தது ஜோதான் நாளை இரவு ஜோவிற்கு அமெரிக்கா செல்லும் இருப்பதால் அதற்கு முன்பு எப்படியாவது தேவ்வை பார்த்து விட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருந்தான். 

 

இன்று சிவன்யா நாளை தேவ் வருவான் என்று சொல்லியதும், மிகவும் மகிழ்ந்த ஜோ மீண்டும் சிவன்யாவை இறுக்கமாக அணைத்து விடுத்தான். அதில் அதிர்ந்து அவனை பார்த்தாள் சிவன்யா. ஆனால் அது எதையும் கணக்கில் கொள்ளாத ஜோ, அவன் பாட்டிற்கு தேவ் வருவதை பற்றி பேசி மகிழ்ந்தான். 

"நாளை ஊருக்குச் செல்வதற்கு முன் அவனை பார்ப்பதில் ரொம்ப மகிழ்ச்சி சிவன்யா. எல்லாம் உன்னால் தான் நடந்தது ரொம்ப ரொம்ப நன்றி" என்றான் மன உருக்கமாக. 

 

இதற்கு எதற்கு தேங்க்ஸ் இவர் சொல்கிறார் என்று விழித்தாள் சிவன்யா. அவளின் கண்களைப் பார்த்த ஜோ "நான் போய் பெட்டியை அடுக்கி வைக்கிறேன்" என்று உள்ளே சென்று விட்டான். 

 

அங்கு நடந்தது பார்த்துக் கொண்டிருந்த உன்னிகிருஷ்ணன், "சரிமா, நாளை உன் கணவர் வந்துவிடுவார். இன்றாவது நிம்மதியாக உறங்கு" என்று சொல்லிவிட்டு சென்றான். 

 

அவனும் அவளை தினமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். இந்த ஒரு வாரத்தில் அவள் பாதியாக மெலிந்து விட்டாள். இதுவரை அவளுடன் தேவ் நல்லவிதமாக பேசியது கூட கிடையாது. இருந்தாலும் அவனுக்கு ஒரு ஆபத்து என்றதும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 

 

அவனை எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று தன்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அவனுக்காக ஓடிக்கொண்டு இருந்தால், நிம்மதியாக தூங்கி நாள்கள் ஆகிவிட்டது. 

 

இப்பொழுது தேவ் நாளை வந்து விடுவான் என்றதும், அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது அதே சந்தோஷத்தில் தனது படுக்கையில் படுத்து கண்மூடி உறங்க ஆரம்பித்தாள் சிவன்யா. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 5, 2026 8:35 pm
Kalidevi reacted

Scroll to Top