பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-29
அத்தியாயம்-29
அலமேலு லாவண்யாவை நெருங்கி வந்து, "ரதியோ மதியோ.. அடிக்கடி கீழே வராத. முக்கியமா இஷிதாவை கீழே அனுப்பாத. பாத்ரூம் வெளியே யூஸ் பண்ணிக்கோ. சித்தி சித்தப்பா உங்க சின்ன தாத்தா நீ எல்லாம் படுத்துக்கோங்க. ஏதாவது தேவைன்னா போன் பண்ணு. உங்க சித்தி, அக்கா மாலதியை ரூமுக்கு அனுப்பிட்டு வருவா. இஷிதாவை சாப்பிட வச்சி நீயே தூங்க வை. நானும் அப்பாவும் இனி மேல வர்றது சந்தேகம். மொய் பணம் எண்ணிட்டு இருப்போம். மொய் பணத்துல தான் சிலது கடனை எல்லாம் அடைக்க வேண்டியது இருக்கு. கணக்கு தடையாகும்" என்று கூறிவிட்டு செல்ல, லாவண்யா இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டாள். அன்னை போனதும், சாரதி போனில் சத்தமின்றி இருக்க, "சா.. சாரதி.. நல்ல வேளை மாட்டிருப்பேன். ஜஸ்ட் மிஸ்ஸு அம்மா.. ஏதோ ரதினு ஒரு பொண்ணு கூட பேசறதா நினைச்சிக்கிட்டாங்க." என்று நெஞ்சில் கை வைத்தாள்.
சாரதியோ "வகையா மாட்ட வேண்டியது தப்பிச்சிட்டே இருக்க. லக்கு தான்" என்றான்.
"சாரதி நான் மாட்டினா உனக்கு தான் கஷ்டம். நான் பாட்டுக்கு மூட்டை முடிச்சி கட்டிட்டு வந்துடுவேன். எனக்கு ஒரு தாலி போதும்" என்றாள்.
சாரதியோ... "தைரியம் தான்... ஆளைப்பாரு ஆளை. நல்லா சரவெடி பட்டாசு மாதிரி பட்டு பட்டுனு பேசற. தாலி மட்டும் போதுமா? உங்க அக்கா கல்யாணத்தை பார்த்துமா தாலி மட்டும் போதும்னு சொல்லற.
கல்யாணம்னா ஊர் கூடி, உறவு கூடி, சொந்தமும் நட்பும் வாழ்த்தி, இரண்டு மனசு இணைவதை, அந்த கல்யாணத்துக்கு வந்தவங்களும் மனசு நிறைய, வயிறு நிறைய வாழ்த்தறது.
அத்தனை பேரோட வாழ்த்தை வாங்கி இரண்டு உள்ளங்கள் வாழ்ந்து காட்டணும். அதை விட்டுட்டு தாலி மட்டும் போதுமா? நான் எல்லாம் ஓடி போலாம்னோ, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணவோ கூப்பிட மாட்டேன். முடிந்தளவு போராடி மாமனார் மாமியாரிடம் திட்டு வாங்கி அசிங்கப்பட்டாவது உன்னை அவங்க அரை மனதோட கட்டி தர கேட்பேன்." என்றான்.
லாவண்யா உதட்டில் புன்னகை மலர்ந்தது. அவள் ஒரு பேச்சுக்கு தான் தாலி மட்டும் போதுமென உரைத்தாள். ஆனால் உண்மையில் அவளுமே ஓடி போய் கல்யாணம் செய்யும் தவறை செய்ய மனமற்றவளே.
"சாரதி... இதுக்கு தான்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கு." என்றாள்.
"சரி.. சரி.. போய் தூங்கு" என்றான்.
"எங்க தூங்க... எல்லாம் கீழே இருக்காங்க. மேல வர்ற வரை போரடிக்கும். அம்மா சாப்பாடு கூட மேல கொண்டு வந்துட்டாங்க. எடுத்து போட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியது தான் பாக்கி. இதுல கீழே வேற வராதனு சொல்லிட்டாங்க" என்று சலித்திட, "பின்ன சின்ன பொண்ணு கீழே இருந்தா சங்கடம்ல" என்று சிரித்தான்.
"நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை." என்றாள்.
சாரதிக்கு ஏனோ தனிமையும், லாவண்யாவின் பக்கத்தில் இல்லாத பசலை நோயும் தாக்க, "அப்ப சாந்தி முகூர்த்தம் பத்தி தெரிந்து வச்சிருக்க" என்றான்.
"ஆ.. மா ஆங்.. இ..இல்ல இல்ல" என்று மறுத்து தலையாட்ட, அவளது பதற்றத்தை கற்பனையில் ரசித்தவனாக, சிரித்தான்.
"சரி.. போனை வைக்கட்டுமா. இதுக்கு மேல பேசினா வார்த்தைகள் அவுட் ஆப் கண்ட்ரோல்ல போகலாம்." என்றான்.
லாவண்யாவோ 'போனா என்னவாம்.' என்று நினைத்தாலும், இதயக்கூடு காலியானதாக தோன்ற, "ம்ம்ம் குட் நைட்" என்று கூறினாள்.
"குட் நைட்" என்றான்.
சரியாக காஞ்சனா வீட்டுக்குள் நுழைந்து, 'வீடு தேடி பிளவுஸ் வாங்கிட்டு காசை தர சொன்னா, அக்கா அக்கா குழந்தைக்கு காய்ச்சல், டைமில்லை. நாளைக்கு பால் காய்ச்சற வீடு. வீட்டுக்கு கொண்டானு கெஞ்சாத குறை. ஸப்பா.. பணத்தை வாங்கிட்டு வர்றதுக்குள்ள நேரம் போச்சு. ஏன்யா... பசிக்குதா?" என்று வந்தார்.
"இல்லைம்மா... நீ உட்காரு. நான் சுடறேன். தோசை தானே." என்று தோசை வார்த்திட சென்றான். ஏற்கனவே காலையில் வைத்த தக்காளி குழம்பை சூடுபடுத்தி, தோசை சுடவும், காஞ்சனாவோ மகன் போனை தேடினார். அவனோ கையோடு கொண்டு சென்றதை அறிந்து, "போனை கையிலயே வச்சிருக்கணுமா சாரதி. மாவு சட்டில போட்டுட போற" என்று எச்சரிக்க சாரதிக்கு போனில் சார்ஜர் இல்லையென கூறி அவனது அறையில் சார்ஜ் போட்டுவிட்டு வந்தான்.
காஞ்சனாவோ இருந்த அசதியில் மகன் தோசை ஊற்றி தர சாப்பிட, அவனும் சாப்பிட்டு படுக்க முனைந்தனர்.
காஞ்சனா எப்பவும் போல சாமி படமருகே இருந்த இடத்தில் படுத்துக் கொள்ள சாரதி அறைக்குள் தாழிட்டு மீண்டும் மீண்டும் லாவண்யாவின் புகைப்படத்தை பார்த்தான்.
இப்பொழுது எல்லாம் கதவை தாழிடுவது அவனது வழக்கமாயிற்று. முன்பு இது போல இல்லை. அறைக்கதவை வெறுமென சாற்றியிருப்பான்.
சாரதி எப்பொழுது உறங்குவான், எழுந்திரிப்பான், குளித்து தயாராகிக் கொண்டிருக்கின்றானா என்றெல்லாம் காஞ்சனா அவனது சத்தமும் நடையும் வைத்தே கிரகித்துக் கொள்வார்.
புகைப்படத்தை பார்வையிட்டாவாறு உறங்கியவனுக்கு கல்யாண கனவுகளாக வந்தது.
இங்கு லாவண்யாவுக்கும் விபரீதமான கனவுகள் வந்து துரத்தியது.
முதலிரவுக்கு என்று கீழே அலங்கரித்து முடித்து தங்களை மாடியில் படுக்க வைத்திருக்க, மெல்லிய காற்றில் அவளது மனம் முழுக்க காதல் நாயகனே நிரம்பியிருந்தான்.
வண்டலூர் ஜூவில், சாரதியின் கையை பற்றியதும், அவனை அணைத்து நின்ற கோலமும் தேவையற்று சிந்தனையில் இந்த நிமிடம் வந்து நினைவூட்ட, விரல்கள் சூடாக உணர்ந்தாள்.
'அச்சோ.,. தூக்கமே வரலையே.' புரண்டு புரண்டு படுக்க, இம்முறை சாரதி தன்னை அணைத்துக் கொண்டு நெருங்குவதாக நினைத்து பார்த்து திகைத்தாள்.
'மண்டு மண்டு.. இஷ்டத்துக்கு எல்லாம் நினைச்சி பார்த்து பயப்படறது' என்று திரும்ப, எதிரே இலக்கியாவும் அலமேலுவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
'மாப்பிள்ளை வீட்ல நாளைக்கு கறிவிருந்துக்கு கொஞ்சம் பேர் தான் வர்றாங்க. மாடில பரிமாறிடலாமா?" என்று அபிப்பராயம் சென்றது.
லாவண்யாவோ 'கண்ணை திறந்தேன்.. அலமேலு அம்மா இன்னும் தூங்கலையாடினு கட்டைக்குரல்ல கேட்பாங்க. கண்ணை திறக்காத லாவண்யா' என்று தனக்கு தானே கூறிக்கொண்டு தலையணையை இறுக பற்றினாள்.
சாரதி லவாண்யாவின், தலை முடி, நெற்றி, கூர்மையா மூக்கு, சிவந்த உதட்டை, சுட்டுவிரலால் ஊர்வலம் நடத்தி கழுத்தில் இறக்கி கடத்திட, தலையை அங்கும் இங்கும் திருப்பி, 'அம்மா' என்று எழுந்தாள்.
அலமேலுவோ "இன்னும் தூங்கலையா? கனவாடி" என்று அதட்ட, ''ஆமா அம்மா" என்று பதறினாள்.
"தண்ணியை குடிச்சிட்டு தூங்கு" என்று கட்டளையிட, வேகமாய் வாட்டர் பாட்டிலால் நீரை பருகினாள்.
தண்ணீர் வழிந்து கழுத்தில் நீர்த்துளியாக இறங்கியது. சாரதி வருடலாகவே தோன்ற, வேகமாய் துடைத்து, போர்வையை நெஞ்சோடு சேர்த்து படுத்துக் கொண்டாள்.
'ஒரு நல்லவனை என் கனவுல எக்குதப்பா நினைக்க வைக்குதே.' என்று அதிர்ந்து இமை திறக்காமல் விழியை மூடிக்கொள்ள, லாவண்யாவுக்கு அக்கனவுகள் தொடர்ந்தது.
கனவுக்கு பழகிக் கொண்டாளா? அல்லது ஏக்கத்தை ஏற்றவளாகவோ ஒருவழியாக உறங்கியது நள்ளிரவை தாண்டியே.
அடுத்த நாள் விருந்து என்று அந்த நேரமும் இறக்கை கட்டி பறந்தது.
மாலதி தான் லாவண்யாவிடம் இருந்தாள். அவளை விட்டுவிட்டு தான் மாடியில் பந்தி நடந்தது.
லாவண்யாவோ அக்காவை மேலிருந்து கீழ்வரை நோட்டமிட்டு, பழத்தை உறித்து முடிக்க, அக்கா மாலதி மாமாவின் வீட்டு ஆட்களை எல்லாம் மரியாதையுடன் பேசி சிரித்து, தலையாட்ட வெகுவாய் ரசித்தாள்.
ஆங்காங்கே அக்காவின் நிறத்தை தாண்டி கருப்பாக தெரியவும், 'ஏய். இங்க ஏதோ கருப்பா கீறியிருக்கு" என்று கையை நீள, "அதொன்னும் இல்லை." என்று வேகமாய் மறைத்தாள் மாலதி.
நகக்கீறல் என்பதால் மாலதி தங்கையிடம் மழுப்பவே செய்ய, லாவண்யாவோ என்னவா இருக்கும் என்று சிந்தித்தாள். அறிந்தப்பின் சிரிப்பு தான் வந்தது. அந்த வயது கண்டதையும் நினைத்தது.
ஒருவழியாக மாலை வரை, நேரம் சிட்டென பறக்க, இலக்கியாவும் சுரேஷும் புறப்பட தயாரானார்கள்.
ஆவுடையப்பன் இஷிதா எல்லாம் வாசலில் இருந்தார்கள்.
"வர்றப்ப கூட வந்த. இப்ப... நாங்க மட்டும் தான். லீவு முடியவும் சட்டுனு வா" என்றாள் இலக்கியா.
இஷிதாவோ "அம்மா அப்ப அக்கா வராதா?" என்று கேட்டாள்.
"வரமாட்டா லீவுக்கு இருந்துட்டு வருவா" என்றார்.
''அதென்னவோ லாவண்யா இருந்தவரை இஷிதாவும் அவளும் தான் தனிரூம்ல படுத்துப்பாங்க. இனி லாவண்யா திரும்பி வர்ற வரை என்னோடவே அட்டை மாதிரி ஒட்டிப்பா" என்று சிரித்தாள்.
லாவண்யாவுமே 'என் சாரதியை பார்க்க இப்ப கூட வர்றேன்யா. எவன்டா லீவை கண்டுபிடிச்சா காலேஜ் வைங்கடா' என்று மனதோடு வேண்டினாள்.
அலமேலுவோ 'நேரமாகுது... பார்த்து பத்திரமா போங்க" என்று நேரத்திற்கு அனுப்ப, தனியாக இருந்தால் லாவண்யா. ஏதோ இஷிதா இருக்க போரடிக்காமல் அவளோடு நேரம் அமைந்தது. அவளை பார்த்துக்க சொல்லி பொறுப்பில் தனித்து நின்றாள். இன்றோ அதற்கெல்லாம் சேர்த்து வைத்து அலமேலு வேலையில் பெண்டை நிமிர்த்தினார்.
கல்யாணத்திற்கென்று பழகிய பாத்திரம் எல்லாம் கழுவி கவுத்தி துடைத்து பரணையில் எடுத்து வைப்பதற்கே நேரம் சரியாக போக, சாரதிக்கூட பேசவும் முடியலை.
'பேசாம இரு.' நைட்டு கண்டமேனிக்கு கனவு காணற?' சாரதி அப்படியெல்லாம் செய்த மாதிரி கனவுல என்ன நினைப்பு' என்று மனசாட்சி அதட்டியது.
லாவண்யா வயசுக்கேற்ற சலிப்புடன், இந்த பாத்திரம் எல்லாம் இன்னிக்கே விளக்கணுமா?" என்று பித்தளை பாத்திரம் கூட புளி போட்டு தேய்த்தாள்.
ஆசையாக வளர்த்த நகம் கையை கீறிட, பச் இது வேற' என்று கையை கவனித்தாள். அக்காவுக்கும் இது போல கீறல் தானே? என்று மாலதி கையை பார்வையிட, மாலதியோ நகம் வளர்ப்பதில் ஆர்வமின்றி கத்தரித்து இருக்க, வெங்கடேஷ் தான் நகம் வைத்திருப்பதை கவனித்தாள்.
இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்பது போல அலமேலு, மகளது தலையில் நங்கென்று கொட்டி, "ஆகற வேலைமை பாரு" என்றார்.
தனது பார்வைக்கு அர்த்தம் கித்தம் தெரிந்துவிட்டதா என்ன? அன்னை இந்த கொட்டு கொட்டுகின்றாரென தலையை தடவிவிட்டு, பாத்திரத்தில் புளியை போட்டு தேய்த்தாள்.
அப்படியிப்படி அக்கா மாலதியும் வெங்கடேஷும், இருக்க அவர்கள் தேவைக்கு சில வேலைகளை ஏவிட, அதை செய்தபடி லாவண்யா பொழுது போனது. அன்று மாலதி மறுவீடு சென்று விட்டுவிட்டு வர முடிவெடுத்தனர்.
மாலதி வீட்டில் வெங்கடேஷ் ஒரே பையன் என்பதால் மகளை விட்டுவிட்டு நேரத்திற்கு கிளம்பினார்கள்.
வீட்டுக்கு வந்ததும், "அப்பாடி ஒரு கடமை முடிஞ்சதுங்க. அடுத்து இவ படிப்பு முடியற வரை மூச்சுவிடலாம்" என்றார் அலமேலு.
புருஷோத்தமனோ "என்னத்த மூச்சு விட, அடுத்து பெரியவ ஏதாவது உண்டான வேலை இருக்கு. அதோட லாவண்யாவை இரண்டு பேர் கட்டி வைக்க கேட்டாங்க. இப்ப தான் பெரிய மக கல்யாணமே முடிந்ததால சின்ன மகளுக்கு படிப்பு முடியற வரை பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன்.
சேலையில பெரிய பொண்ணா கல்யாணத்துக்கு வந்தவங்க கண்ணுல உறுத்தியிருக்கா. இதுக்கு தான் சுடிதாரு இல்லை தாவணி கட்டிக்கட்டும்னு படிச்சு படிச்சு சொன்னேன்." என்றார்.
அலமேலுவோ "அதெல்லாம் வயசுக்கு வந்த பொண்ணு இருந்தா நாலு பேரு கேட்கறது தான். தாவாணி போட்டா பரிசம் போட கேட்க மாட்டாங்களா. எல்லாம் படிப்பு முடிய வந்தா முடிப்போம்." என்று பேச பேச, லாவண்யாவோ, 'அடேய் என் வாழ்க்கைக்குள்ள எவன்டா குறுக்கா வர்றது. நல்லவேளை அம்மா அப்பா இரண்டு பேருமே படிப்பு முடியட்டும்னு யோசிக்கறாங்க' என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்தாள்.
சாரதியுடன் போனில் பேசி சிரிக்க, மகள் காதல் கனவை தாண்டி கல்யாண கனவு வரை போனது தெரிந்தால் அலமேலு எல்லாம் 'வந்த வரணை முடிச்சிடுங்க." என்று ஒரே போடு போட்டு விடுவாரென தெரிந்து லாவண்யா அடக்கத்தின் மறுபிறவியாக பாவித்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Kindly register login to read friends
Keep supporting Thank u
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 29)மாலதியாவது படிச்சும் முடிச்சிட்டாள், கல்யாணமும் பண்ணிட்டாள், அதனால கல்யாண கனவுகளும் காணலாம், கனவுகள்ல வரது நிஜத்துலயும் நடக்கலாம், ஆனால், இந்த லாவண்யா இன்னும் படிப்பையே முடிக்கலை, கல்யாணமும் நடக்கலை, இதுல கலர்ஃபுல்லா கில்மா கனவுகள் எல்லாம் காணறது ரொம்பவே அநியாயம். இது சாரதிக்கு தெரிஞ்சால்,
அடிப்பாவி நான் எப்படி உன்னை உரசினேன், கண்ட இடத்துல தொட்டேன், முத்தம் கொடுத்தேன்னு எகிறிட்டு வருவான் பார்த்துக்க, அம்புட்டு அப்பாவி புள்ளை சாரதி, நீ தான் அவனை அடப்பாவி புள்ளைன்னு
சொல்ற அளவுக்கு கனவுல அவனோட கில்மா பண்ணிட்டு திரியுற. போடி, போடி... இப்போதைக்கு படிக்கிற வேலையை மட்டும் பாரு, கில்மா கனவுக்கு எல்லாம் தடா போடு.(அது சரி, மாலதியோட மணவாளன் பேர் விக்னேஷா, வெங்கடேஷா ..? கரெக்சன் ப்ளீஸ்)
😉😉😉
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
9 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
20 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
41 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-43-44
51 minutes ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-42
1 hour ago
- 26 Forums
- 377 Topics
- 1,916 Posts
- 2 Online
- 442 Members
