Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-30

8 Posts
8 Users
1 Reactions
96 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#376]

அத்தியாயம்-30

லாவண்யா தனது வீட்டில் அங்கும் இங்கும் உலாத்தி "அம்மா... போரடிக்குமா. என்னம்மா பண்ணறது?" என்று அலுத்துக் கொண்டாள். 

அலமேலு கொலைவெறியில் மகளை பார்த்தார். இந்த கடந்த மூன்று நாளில் இரண்டு நாள் ஜோராக தனித்து திரிந்தாள். 

பிறகு சதா 'போரடிக்கு போரடிக்கு' என்ற பல்லவியை தான் பாடுகின்றாள்.

லாவண்யா காலையில் தாமதமாக எழுந்து, நிதானமாக டீ குடிக்கும் போது தந்தை வேலைக்கு கிளம்புவார். 

சாப்பிடும் நேரம் மகளும் தந்தையும் பேசுவார்கள். தந்தை சென்றதும் நிதானமாக சாப்பிட, அலமேலு மதியம் குழம்பு செய்வதில் மும்முரமானார். 

சாரதியிடம் ஒரிரு குறுஞ்செய்தியில் பேசகவிட்டு, தேவியிடம் கால் பண்ணுவாள். பேசி முடித்து, டிவியில் படம் பாட்டு பார்க்க அலமேலுவோ 'ஏதாவது சமைக்க கூட மாட வரலாம்ல' என்றதை காதில் வாங்காமல் மீண்டும் போனை எடுத்துக் கொண்டு திரிவாள். 

அலமேலுவும் மகள் மீது ஒரு கண்ணை பதித்து, வேலையில் முழ்கியபடி சீரியலையும் பார்ப்பார். 

மதியம் போல குளித்து, துணி துவைத்து, சாப்பிட்டு, பாத்திரம் விலக்கிவிட்டு, மாலை டீ குடித்து முடித்து, வீடு பெருக்கி, கூட்டி காய்ந்த துணியை மடித்து வைப்பதென செல்ல போரடிக்கும்மா' என்றவளை தான் "ஏன்டி.. ஒரு வருஷம் முழுசா இருக்காது. காலேஜிக்கு உங்க சித்தப்பா வீட்டுக்கு போய். இத்தனை வருஷம் இங்க தானே இருந்த. சொந்த வீடு போரடிக்கா? இன்னொரு முறை பேரடிக்குனா உன் வாயிலயிருந்து வந்துச்சு... குழம்புக்கரண்டியை திருப்பி வச்சி சூடுபடுத்தி வாயில வச்சிடுவேன் ஆமா.'' என்றதும் லாவண்யாவோ அந்த நேரம் இரவு வீட்டுக்கு வந்த தந்தையிடம், ''பாருப்பா.. சூடு வைக்கறேன்னு சொல்லறாங்க. அம்மாவுக்கு என்‌மேல பாசமேயில்லை இல்லைப்பா." என்றாள். 

"கூடமாட அம்மாவுக்கு வேலை செய் லாவண்யா. பொழுது போயிடும்" என்றார். 

"அப்பா." என்று அலுத்துக் கொள்ள, "என்னடி... நாளைப்பின்ன கல்யாணமானா சமைக்க தெரியணும். தேமேனு போக முடியாது. யாருக்கு எப்படி அமையுதோ? உனக்கு சீக்கிரம் அமைச்சிட்டா கட்டிக் கொடுத்துட்டு நாங்க நிம்மதியா இருப்போம்" என்றார். 

"இதப்பாரு... ஏதாவது சொல்லிட்டே இருக்க." என்று கதவை தாழிட்டு முடித்தாள். 

லாவண்யாவுக்கு நெஞ்சமெல்லாம் பயம் புகுந்தது. இனி வாயை வச்சிக்கிட்டு அமைதியா இருந்துடணும். போரடிக்குனு சொல்லக்கூடாது என்று முடிவெடுத்தாள். 

அதற்கு ஏற்றது போல இருக்கின்ற வேலையை இழுத்து போட்டு செய்தாள். 

பெரும்பாலும் சாரதி காலையில் வெகு சீக்கிரம் கிளம்ப, இரவில் அல்லது மாலையில் பேச சௌகரியமாக இருக்கும். அலமேலு எல்லாம் மாலையில் டிவி சீரியலில் பிசியாக இருக்க, அந்த நேரம் சாரதியிடம் பேசுவாள். 

யாரிடம் டி பேசற?" என்றாள். 'தேவியிடம் மா.' என்பாள். இல்லையேல் 'ரதியிடம் மா' என்பாள். 

இரண்டும் தோழிகள் என்று விட்டுவிடுவார். சாரதி பெயரை கூட Sa.Rathi என்று தான் பெயரையே போட்டு வைத்திருந்தாள் கேடி. 

இங்கு சாரதி லயா என்ற எண்ணில் லாவண்யாவை சேமித்து வைத்திருந்தான். கேலரியில் லாவண்யா புகைப்படம் சில இருப்பதாலும் வாட்சப்பில் அவளோடு பேசுவதாலும், இரண்டிற்கு மட்டும் லாக் செய்து வைத்திருந்தான். 

இதெல்லாம் கூட காஞ்சனாவுக்கு சந்தேகத்தை தந்திருக்காது. வயசு பையனின் போனை எடுக்க கூடாதென்ற எண்ணம் உடையவர். மகன் தினமும் இரவு கதவை தாழிடுவதில் தான் சந்தேகத்தை விதைத்தான் சாரதி. 

மாலை முதல் இரவு சிற்சில நேரம் போனிலேயே சிரிப்பது பேசுவது என்றிருக்க, காஞ்சனாவுக்கு கொஞ்ச நாள் முன் மறைந்த சந்தேகம் மீண்டும் துளிர்த்தது. 

மகன் யாரையோ காதலிக்கின்றானென கேட்டிட முடியாது இருந்தார். 

'ஆமா லவ் பண்ணறேன்மா' என்று கூறிவிட்டால் தாங்க இயலாதே.

அதனால் ஜாடை மாடையாக, ''கதவை பூட்டிட்டு யாரிடம் பேசற?" என்பார். 

பழைய புட்பால் பிரெண்ட்ஸ் கூடம்மா." என்று பச்சை பொய்யாக ஒரே போடாக போடுவான். 

காஞ்சனா அதன் பின் வாயை திறக்க யோசிப்பார். மகனின் கனவை தரைமட்டம் ஆனது. அதனால் அவனது வயசு பிள்ளைகளிடம் பேசட்டுமென நினைப்பார். ஆனால் மனதின் ஓரத்தில் பொண்ணுக் கூட பேசறானா?' என்று இரண்டு விதமாக தத்தளித்தார். சாரதியிடம் கேட்டுடும் துணிவு இன்னமும் வரவில்லை. 

சாரதியோ அதெல்லாம் அறியாது "நேத்து தேவியிடம் ஸ்வீட் மிக்சர் எல்லாம் தந்துவிட்ட அதுல உங்க அக்கா மாமா கல்யாண டேட் போட்டு விலாவரியா இன்னார் பொண்ணு மாப்பிள்ளைனு இருந்தது. அதனால பாக்ஸை தேவியிடமே தந்துட்டேன்." என்றான்.

"என் கிப்ட் பார்த்தியா? பிடிச்சிருந்ததா? அதை பத்தி ஒன்னும் சொல்லலை" என்றாள். 

"ரொம்ப அழகாயிருக்கு. ஆமா... எங்க இந்த மாதிரி ஐடியா எல்லாம் பிடிச்ச? எப்படி வாங்கின?" என்றான். 

ஏனெனில் சாரதிக்கு லாவண்யா ஒரு டைட்டன் கடிகாரம் தான் தந்திருந்தாள். ஆனால் அந்த கடிகாரத்தில் சின்ன முள்ளாக இருக்கும் முனை பகுதியில் பேருந்து வடிவம் கொண்டதும், பெரிய முள்ளில் முனையில் இதய வடிவமும் கொண்ட கடிகாரம் ஆர்டர் செய்து வாங்கியிருந்தாள். 

இதயம் கொண்ட பெரிய முள் லாவண்யாவாக கற்பனை செய்து சின்ன முள்ளாக பேருந்தினை அவள் சுற்று வரும் விதமாக, அதாவது சாரதி என்பதாக கருதி வாங்கியிருப்பதாக பறைச்சாற்றியது. 

லாவண்யாவோ, "அக்காவுக்கு நகை வாங்கறப்ப அந்த கடையில கடிகாரமும் இருந்தது சாரதி. அதுல மாப்பிள்ளை பொண்ணு முகமா வச்சி கடிகாரம் பண்ணி தருவோம்னு விவரிச்சு சொல்லவும், நான் அம்மாவை கழட்டிவிட்டுட்டு நைஸா கடைக்காரரிடம் இந்த இடத்துல பஸ் மாதிரியும், இங்க இதயமும் வேண்டும்னு கேட்டேன். அந்தண்ணா என்னை ஒரு லுக்கு விட்டுட்டு செய்ய முடியும்னு செய்து தந்தார். நேர்ல வந்து கொடுக்க எப்படியும் லேட்டாகும். அதான்.. தேவியிடமே தந்துட்டேன். உன் கையில போட்டுட்டு போட்டோ எடுத்து அனுப்பு சாரதி." என்றாள். 

"எதுக்கு இதெல்லாம். நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதா. உன் இதயம் என்னைமே சுத்துதுனு. இதுல எதுக்கு செலவு பண்ணிட்டு இருக்க?" என்றான். 

"நல்லா இருக்கா இல்லையா?" என்றாள். செல்லம் கொஞ்சம் விதமாக ஒருத்தி கேட்டால், ஆடவனான சாரதி என்ன சொல்வான். 

"ரொம்ப ரொம்ப. நான் கையில போட்டா அம்மா யார் வாங்கி தந்தா? இல்லைன்னா எப்ப வாங்கினனு கேட்பாங்க." என்றான். 

"சொல்லு... உங்க மருமக வாங்கி தந்தானு." என்று சிரித்தாள். 

"ஆல்ரெடி அம்மாவுக்கு என்‌ மேல சந்தேகம் வந்துடுச்சு தெரியுமா? இங்க அம்மாவுக்கு நான் மட்டும் தான் உலகம். என்னையே நோட் பண்ணயிருப்பாங்க போல. அன்னிக்கு அந்த சுடிதார் கவரை என் கப்போர்ட்ல பார்த்திருக்காங்க. பொய் சொல்லி லீவு வேற எடுத்தது. அடிக்கடி ரூமை லாக் பண்ணறேன்ல. முன்ன அந்த பழக்கமெல்லாம் இல்லை. இப்ப உன்னோட பேசவும் லாக் பண்ணறது எனக்கே வித்தியாசமா இருக்கு. அம்மா அடிக்கடி என்னை கண்டுக்காம இருக்கறது போல தெரிந்தாலும், உத்து பார்க்கறது எனக்கு தெரியுது. நானா சொல்லணும்னு நினைக்கறாங்களோனு தெரியுது." என்றான். 

"சொல்லிடுவியா?" என்றாள். 

"சொன்னா இப்பவே பிரச்சனை ஏதாவது வரும். உன் படிப்பு இடைஞ்சலாக இருக்கும். எங்க அம்மாவுக்கு உன் சித்தியை நல்லா தெரியும். எதுக்கு வம்பு? கொஞ்சம் போகட்டும்" என்றான். 

"ம்ம்ம்" என்றவள், "சாரதி... நேத்து நீ தந்த டிரஸை தான் போட்டேன்‌ பார்த்தியா?" என்றாள். 

"ம்ம். எது போட்டாலும் உனக்கு அம்சமா இருக்கு. சாதாரண டிரஸ் ஆனாலும் தூக்கலா இருக்கு" என்றான். 

"அம்மா கூட இந்த கலர் நல்லாயிருக்குடினு சொன்னாங்க. 

அக்கா அதுக்கு மேல எனக்கு தர்றியா... நான் ஒரு நாள் போடறேன்னு சொன்னா. தரலாம் முடியாதுனு சொல்லிட்டேன். ஏன்டி முன்ன டிரஸை மாத்தி மாத்தி போடுவோம் தானேனு கேட்டா. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இனி தரமாட்டேன்னு சொல்லிட்டேன். மூஞ்சை தூக்கிட்டு 'பே'னு சொன்னா." என்று கூறவும், சாரதியோ சிரித்தான். 

லாவண்யா தன் நகத்தை பார்வையிட்டு போனில் பேச, சம்பந்தமில்லாமல் மாலதியின் நககீறல் எல்லாம் நினைவு வந்தது. அதை அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் லாவண்யா வாய் சும்மா இல்லாமல், "சாரதி... நீ நகம் வளர்க்கறியா?" என்றாள். 

"ஏன்." என்றான்.‌

"இல்லை.... சும்மா தான்" என்றாள்.

சாரதியோ ''முன்ன காலேஜ் படிக்கறப்ப கட்டை விரல் மட்டும் வளர்ப்பேன். ஏன்னு தெரியாது.. பிடிக்கும். கண்டெக்டரா ஆனதும் டிக்கெட் தர்றப்ப அது மத்தவங்களை கீறிட்டா கஷ்டம்னு கட் பண்ணிட்டேன்.‌ அதுவுமில்லாம அம்மா மாசம் மாசம் இரண்டாவது சனி கிழமை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து விடுவாங்க. கால்ல கையில நகம் கட் பண்ணிவிடுவாங்க. நான் கூட 'சின்ன குழந்தையாம்மா நான். நானே கட் பண்ணிப்பேன்னு சொல்வேன். பொழுது போகலைடானு சொல்லுவாங்க. முன்ன சின்ன வயசுல ஸ்கூல் படிக்கறப்ப கேட்டதுக்கு 'பொம்பள பிள்ளையா இருந்தா மருதாணி போட்டு நெயில்பாலிஷ் வச்சி அழகு பார்ப்பேன். எனக்கு பொண்ணு இல்லையேடா. நீ ஒரே பையன் அதான் நகமாவது சீரா வெட்டி விடறேன்னு சொன்னாங்க. அது இப்பவரை பாலோவ் பண்ணறாங்க." என்றான்

லாவண்யாவோ "அதான் உனக்கு புஸுபுஸுனு கர்லீ ஹேர்ரா இருக்கா?" என்றாள். 

"ஆமா.. அப்பாவுக்கு சுருட்டை முடி இருக்கும். எனக்கும். என்ன அப்பாவை விட நான் நெற்றி மறைக்கற அளவுக்கு வச்சியிருக்கேன்னு அம்மா சொல்வாங்க. ஆமா... நீ ஏன் நகம் இருக்கானு எல்லாம் கேட்கற." என்றான்.‌

"அது.. அது வந்து.. சும்மா கேட்டேன்" என்றாள்.

"லயா... சும்மா கேட்க மாட்டாளே என்ன விஷயம். ஓய்.. உண்மையை சொல்லு?" என்றான்.‌

"வேண்டாம். அது சும்மா தான் கேட்டேன்." என்றாள்.‌

"சும்மா கேட்டியா? பொய்... நீ அப்படி வெட்டியா பேசற ஆளு இல்லை." என்று காரணம் கேட்க, "இல்லை... அது வந்து ஆப்டர் மேரேஜ் நகம் இருந்தா கையில கீறுமோனு யோசித்தேன்." என்று மழுப்ப, சாரதி 'ஆப்..டர்.. மேரேஜா..?' என்று முனங்கி, "ஓ..ஓஹோ.." என்றவன் சிரித்தான். 

"எதுக்கு சிரிக்கற?" என்று கேட்டாள். 

"நீ எதுக்கு கேட்டேன்னு புரிந்தது அதான் சிரிச்சேன். என்ன காரணம் எல்லாம் யோசிக்கற அளவுக்கு தேவையில்லாத கற்பனை அதிகம் பண்ணற‌? கல்யாண வீட்ல இருந்து கண்டதும் யோசிக்கற லயா. இப்படி எக்குதப்பா கற்பனை செய்தா, அப்பறம் கண்டபடி கனவு வரும்." என்றான். 

"ம்கூம்" என்றாள்.

"சலிச்சிக்கறதை பார்த்தா கண்டகண்ட கனவும் கண்டிருக்க போலயே" என்று போட்டு வாங்க முயல, "ஆமா.. வந்துச்சு." என்றாள் உண்மை விளம்பி. 

"என்ன நினைச்சு பார்த்த?" என்ற சாரதி குரல் கிசுகிசுப்பாய் மெல்லிய ஒலியில் ரகசியம் போல லாவண்யா செவியில் கேட்டதும், "சொல்ல மாட்டேன். ஆனா நீ மோசம்'' என்றாள்.

"என்ன கனவுனு சொல்ல மாட்டியாம். அது உன் கனவு. ஆனா நான் மோசமா? அது சரி" என்றான். 

பேச்சின் தித்திப்பு வயசுக்கேற்ற உணர்வை போட்டு தாக்கியது. இருவருமே பகிரங்கமாக பேச்சை நீட்டிக்காமல், வார்த்தையில் தேர்ந்தெடுத்தனர். 

லாவண்யா மாலதிக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் லாவண்யா மட்டுமே இருக்க, மெத்தையில் புரண்டு புரண்டு வெட்கம் கொண்டு தனியாக சிரித்தாள். 

சாரதியும் இங்கே அவனது மெத்தையில் படுத்து, இடது கையால் நெஞ்சில் தாளமிட்டபடி, லயாவிடம் எல்லையை தாண்டி பேசும் பேச்சுக்குள், அவர்கள் அறியாது மூழ்கினார்கள். 

-தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

Kindly register login to read 

Thank u 

 


 
Posted : September 25, 2026 9:17 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Wow laya cute creativity of watch. Cute love and romance. Laya give some importance to education also. Very intresting sis.


 
Posted : September 25, 2026 9:33 am
(@crvs2797)
Posts: 234
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 30)

எனக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குது, அம்மா வீட்ல சமையல் கட்டு பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் வழிச்சு கொட்டிக்க மட்டும் வந்துட்டு, காயகறியைக் கூட வெட்டிக் கொடுக்காமல் வெட்டியா பொழுதை போக்கிட்டு, போரடிக்குது போரடிக்குதுன்னு புலம்புறவங்க அதெப்படி புகுந்த வீட்டுக்கு போனவுடனே மட்டும் கிச்சன்குள்ள கரண்டியை தூக்கிக்கணும்ன்னு நினைக்கிறாங்களோ தெரியலை.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம்..
அந்த கதையா இல்ல இருக்குது.

ஆஹா... டைட்டன் கை கடிகாரத்துக்குள்ள, சின்ன முள் பேருந்து, பெரிய முள் இதயமா ?
இதிலெல்லாம் லாவண்யா எக்ஸ்பர்ட் தான் போல.

அடேயப்பா.! இந்த காலத்து பொண்ணுங்களே ரொம்ப எக்ஸ்ட்ரீம் தான் போல, ஆம்பிளைங்களே யோசிக்காத ஒரு விஷயத்தை, எவ்வளவு சர்வ சாதாரணமா லாவண்யா அவன் கிட்ட கேட்குறாள்... இந்த வேகத்தை படிப்புல காட்டினால் கோல்ட் மெடலீஸ்ட் ஆகிடுவாள் போல.

இப்ப மட்டும் இவங்க ரெண்டு பேர் வீட்லயும், இவங்க செல்போன் பேச்சை மட்டும் கேட்டாங்கன்னு வைச்சுக்கங்களேன், ரெண்டு பேர் பெத்தவங்களும் காண்டாயிடுவாங்க பாருங்க.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : September 25, 2026 11:16 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Over speed la poriye ma


 
Posted : September 25, 2026 2:53 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Phone pesura busy la nega la yae unga veetula mattipiga pola athuvum Lavanya veetula bore adikuthu nu sonnathukae karandi kaya vachi soodu vachiduven nu sonnaga iva pesurathu ah kooda ketka venam iva ivolo neram phone pesurathu ah partha la yae ava amma enna pannuvaga nu yae theriyala pa 


 
Posted : September 25, 2026 5:01 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

அச்சோ இரண்டு பேரும் எப்போ மாட்ட போறாங்களோ


 
Posted : October 4, 2026 8:09 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Acho


 
Posted : October 7, 2026 10:02 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 164
Estimable Member
 

dei ena da nadakuthu inga over ah poitu irukangle 


 
Posted : October 21, 2026 4:46 pm

Scroll to Top