Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-41

8 Posts
8 Users
0 Reactions
92 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#388]

அத்தியாயம்-41

   அலமேலுவோ பேறைந்தது போல இருக்க, லாவண்யாவோ துடப்பத்தை எடுத்து, ஒதுக்கி வைத்தாள்.

வீட்டை கூட்டி முடித்து நல்லவளாக அன்னையை ஏறிட்டாள். 

  "அம்மா... அ..அப்பா வர்றார்" என்று உலுக்க, அலமேலுவோ "இங்க பாரு...  அவன் வந்து பேசிட்டு போன திமிருல இருந்த, வர்ற வரனை முடிச்சிவிட்டு இப்பவே கல்யாண வேலையை பார்த்துடுவேன். உனக்கே தெரியும்... அக்கா கல்யாணத்தோட வீடு தேடி வந்து உன்னை கேட்டுட்டு இருக்காங்க. தரகரிடம் சொன்னேன். நாளைக்கே மாப்பிள்ளை வந்து நிற்பான். அமைதியா இருந்தா அட்லீஸ்ட் படிப்பையாவது கெடுத்துக்காம முடிப்ப" என்றார். 

"நீ சொல்லறபடி கேட்பேன்மா" என்றாள் நல்லவளாக.. 

  புருஷோத்தமன் வரவும், "என்ன ஆத்தாளும் மகளும் ஒரு மார்க்கமா இருக்கிங்க. மாலதியும் மாப்பிள்ளையும் போன் பண்ணினா... உண்டாயிருக்காலாம்." என்று கூற, "சொன்னாங்க." என்றார் அலமேலு. 

"சந்தோஷமா ஏதாவது செய்திருப்பனு பார்த்தா உம்முனு கிடக்க?" என்று ஸ்வீட் பாக்ஸை தர, "இப்ப தான் கல்யாண கடனே முக்காவாசி முடிச்சோம். அதுக்குள்ள அடுத்து பேறுகாலம் பார்க்கணும்னு யோசனை. அதோட மேலுக்கு முடியலைங்க" என்று ஸ்வீட்டை எடுத்து பூஜையறையில் வைத்து வணங்கினார். 

"அலமேலு... மாப்பிள்ளை வீட்ல ரொம்ப அலைச்சல் கூடாதுனு சொல்லறார். கொஞ்சம் நாம தான் இரண்டு எட்டு பார்த்துட்டு வருவோம். அப்பறம் அவங்களா வர்றப்ப பார்ப்போம்" என்று கூற, சரிங்க" என்றார். 

  லாவண்யா மெதுவாக அறைக்குள் செல்ல, புருஷோத்தமன் மனைவியிடம் "என்னடி உம்முனு இருக்க. பாட்டியாகற சந்தோஷமே இல்லை. ஏதாவது பிரச்சனையா?" என்று நெருங்கி வந்து கேட்டார். லாவண்யாவும் மனைவியும் உம்மென்று இருப்பது தான் அவருக்கு விளங்குகின்றதே.

  "உங்க பொண்ணு சென்னையில படிக்காயில்ல... அவ படிக்கற இடத்துல பக்கத்துல லேடிஸ் ஹாஸ்டலா இருந்தா தெரிஞ்சவங்களிடம் சொல்லி பாருங்க." என்று கிச்சனில் ரவை நெய் டப்பா எல்லாம் எடுத்தார். 

  "ஏன்டி? என் தம்பி வீடு இருக்கு. எங்க சித்தப்பா பிறவு கோச்சிப்பார். " என்று புருஷோத்தமன் கூறிட, "உங்க அப்பாவுக்கு நிகரா சித்தப்பா இருக்கார்னு நினைச்சிங்க. அந்த மனுஷன் லாவண்யாவை தப்பா பார்க்கறார்ங்க. தனியா இருக்கற பிள்ளையிடம் தப்பா நடக்கறாராம்.

     என்னயிருந்தாலும் சொந்த பேத்தி இல்லையே. இனி அந்த வீடு பாதுகாப்பு இல்லைங்க." என்று கூறி உறுதியாக, "ஹாஸ்டல் பாருங்க" என்றார். 

"எ..என்னடி சொல்லற?" என்று புருஷோத்தமன் நெஞ்சை பிடித்து அதிர்ந்தவராய் பேச, அலமேலு பின்னர் மகளிடம் தவறாக பேசி நடந்ததாக அனைத்தையும் தெரிவித்தார். 

  'லாவண்யா காதலிக்கறாளா?" என்று புருஷோத்தமனுக்கு கோபம் பொங்கியது. அவளை திட்ட வேகமாய் நடக்க "நில்லுங்க.. அவளிடம் எதுவும் கேட்காதிங்க. உங்களிடம் அவளுக்கு நடந்த சம்பவமும் இடத்தை மாத்தி ஹாஸ்டல் ஏற்பாடு மட்டும் சொன்னதா இருக்கட்டும். காதலிக்கறது தெரிந்ததா காட்டிக்காதிங்க. இல்லை ஏதாவது ஒன்னுக்கிடக்க ஒன்னு யோசிப்பா. 

  பெரியவ எல்லாம் நம்ம சொல்லறதை கேட்கற புத்தியுடையவ. சின்னவ அப்படியா... வம்புக்குனு அடிமிதியை கூட வாங்கிக்கும். ஆனா கமுக்கமா காரியத்தை சாதிக்க நினைக்கற குணமிருக்கும்.

இதே உங்களிடம் சொல்லலை என்ற பயம் இருந்தா படிப்பை முடியற வரையாவது யோசிப்போம். அதுக்குள்ள மாலதிக்கும் பேறுகாலம் இருக்கு" என்று கூற, புருஷோத்தமனோ "அன்னிக்கு வந்த வரனை வீட்டுக்கு வரச்சொல்லி முடிக்கவா?" என்று அபிப்ராயம் கேட்டார். 

"வேண்டாம்... இப்ப எதுவும் பண்ணினா கஷ்டம் தான். இப்பவே ஏதாவது அதட்டி, அதுக்கு எதிரா ஏதாவது பண்ணி தொலைக்க போறா.." என்றதும், "யார் அவன்? ஏதாவது சொன்னாளா? நம்ம சாதியா? என்ன படிச்சிருக்கான். என்ன வேலை? ஏதாவது சொன்னாளா?" என்று சத்தமின்றி கேட்க, "எதுவும் கேட்கலை. அவளும் எதுவும் சொல்லலை. ஆனா பையனை நான் பார்த்திருக்கேன். நல்லா வளர்த்தியா, சுருட்டை முடியோட, நல்லா நிறமா தான் இருப்பான்." என்றார். 

"எப்ப பார்த்த?" என்றார். 

இப்பொழுது ஒன்று சொன்னால் தன் பேச்சை கூட கேளாமல் வரனை வரக்கூறுவாரென, வீட்டுக்கு வந்ததை எல்லாம் கூறாமல், 'போன முறை லாவண்யாவை விடப் போனப்ப ரோட்ல பார்த்தேன். மாதுளை உருண்டு போகவும் எடுத்து தந்தான்.

ஆனா அப்ப தெரியாது. தெரிந்திருந்தா அப்பவே உங்க பொண்ணு காலை உடைச்சிருப்பேன்." என்று கோபமா பேச, "இப்ப என்னடி பண்ணறது. ஊர்ல நாலு பேருக்கு தெரிந்தது என்‌ மானம் போகும். பெரியவ கர்ப்பமா இருக்கா. சின்னவ தலையில நெருப்பை அள்ளி கொட்டறா." என்று அறைக்கதவை பார்த்தார். 

  லாவண்யா கதவை பூட்டினாலும் தந்தை வந்து கத்துவாரோ என்று அஞ்சி நின்றாள். 

  "அதுக்கு தான் சொல்லறேன். தெரியாத மாதிரி இருங்க. இல்லைன்னா குளிர் விட்டு போயிடும். கமுக்கமா பார்த்துக்கலாம். கடைசியா வந்த வரன் சென்னை தானே ஒரு பக்கம் யாரு என்னனு விசாரிச்சிக்கலாம். இப்ப அவளுக்கு இடம் மாத்தணும். அதான் முக்கியம்." என்றார். 

  "அப்பறம்... இப்பவே ஏதும் பேச வேண்டாம். நான் லாவண்யாவை ஊருக்கு அழைச்சிட்டு போறப்ப அப்படியே இலக்கியாவிடம் விஷயத்தை சொல்லி, லாவண்யா டிரஸ் புக்ஸ்னு எடுத்துக்கறேன். இந்த மாதிரி விஷயம் வெளிய தெரிய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார் அலமேலு.

புருஷோத்தமனோ ஏற்கனவே சித்தப்பா இப்படி செய்பவரா என்றதில் ஆடிப்போயிருக்க, இதில் லாவண்யா காதலிப்பது அடுத்த இடி. இந்த நேரம் மகளிடம் ஏதாவது பேசினால், தாத்தாவை வைத்து, இவ்ளோ பெரியவரே தப்பா தான் இருக்கார். நான் என் முடிவை எடுத்துக்கறேன்' என்று பேசினாலும் பேசுவாள். மனைவி சொல்வதை போல மாலதி போல லாவண்யா கிடையாது. எப்படியும் அடிமிதி வாங்கினாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து,  நினைத்ததை சாதிப்பவள் தான் லாவண்யா. அதனால் மனைவியிடம் ஆமோதிப்பாய் தலையாட்டி சரியென்றார். 

இரண்டு நாட்களாக லாவண்யா தந்தையை ஏறிட, அவரோ "என்னம்மா... படிப்பு முடிய இன்னும் எத்தனை மாசம் இருக்கு." என்று கேட்டுவிட்டு பதிலை பெற்று நகர்ந்தார். 

  புருஷோத்தமனுக்கு லாவண்யா மீது கடும் கோபம் இருக்க, ஆவுடையப்பன் சித்தப்பா மீதான அதிகபட்ச கோபம் எவனையோ ஒருத்தனை காதலிப்பதை குறைத்திருந்தது. 

சாரதியிடம் கூட லாவண்யா "அப்பா அம்மா இரண்டு பேரும் பேசினாங்க. அம்மா அந்த ஆவுடையப்பனை பற்றி மட்டும் சொல்லிட்டு நம்ம காதலை சொல்லாம விட்டதா சொன்னாங்க. தேவி மூலமா ஹாஸ்டல் பார்த்திருக்கு. தேவியிடம் கூட எதுவும் சொல்லலை. அவ வேற ஏன்டி. எதுக்குடினு கேட்கறா. அங்க வந்ததும் சொல்லறேன்னு முடிச்சிட்டேன். அம்மா கூட வந்து, ஹாஸ்டலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க‌. இனி உன்னை பார்க்கவே முடியாது சாரதி." என்றாள். 

சாரதியோ "ஏ லூசு... என்னை பார்க்கறது தான் இப்ப ரொம்ப முக்கியமா? சேப்பா தூங்குவ. சேப்பா இருப்ப‌ அதை யோசி.  

  உங்கப்பாவுக்கு என்னை பத்தி தெரியாப்படுத்தாம எல்லாம் இருக்க மாட்டாங்க. லவ் மேட்டர் எல்லாம்  தெரியப்படுத்தி இருப்பாங்க. ஆனா உன்னிடம் வெளிகாட்டாம இருக்கலாம். எதுக்கோ சொல்லறதை கேட்டுக்கற குட் கேர்ளா இரு." என்றான். 

"சரி சாரதி." என்று கூறினாள். 

தேவி தான் "ஏன்டி ஹாஸ்டல் பத்தி விசாரிக்கற, என்னாச்சு? லவ் மேட்டர் வீட்ல தெரிந்துடுச்சா?" என்று கேட்டு நின்றாள். 

  "நேர்ல சொல்லறேன் தேவி. இப்ப சாரதி பேச்சை எடுத்தா அம்மா திட்டும்." என்றாள் லாவண்யா. 

அதிலேயே வீட்டில் மாட்டியிருப்பதை யூகித்தாள். தேவியோ "ம்கூம்... நீ பேசற பேச்சும், ஓவர் துள்ளலும் இருந்தா மாட்டுவனு அப்பவே நினைச்சேன். பஸ்ல கடிகாரத்தை பார்க்கறேன்னு அண்ணன் கையை பிடிக்கபோன. வண்டலூர்ல அவரை கட்டிப்பிடிச்ச. நான் இருக்கும் போதே இப்படி. போன்ல என்னலாம் பேசி மாட்டின" என்று தான் ஓட்டினாள். 

"கேலி பண்ணாதடி. வந்து பேசறேன் என்றாள் தேவியிடம்.

அப்படியே விடுமுறை முடியவும், அலமேலு லாவண்யா இருவரும் புறப்பட்டனர். 

நேராக இலக்கியா வீட்டிற்கு வந்து, உடமைகளை எல்லாம் பேக்கிங் செய்ய கூறிட, "என்னாச்சுக்கா?" என்று இலக்கியாவும், "என்ன அண்ணி லாவண்யா இங்க இருப்பதால எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையே." என்று சுரேஷும் கேட்டார்கள்.

இலக்கியாவிடம் அலமேலு "இந்தா பெரியவர்னு ஒருத்தர் இருக்காரே அவரிடம் கேளும்மா. பொட்டப் பிள்ளையை பெரியவங்க பார்த்துப்பாங்கனு நம்பி விட்டா, அவளிடமே அத்துமீற முயற்சி பண்ணிருக்கார்." என்று கூற இலக்கியா திகைத்தார். 

  ஆவுடையப்பனும் அமைதியாக ஆமோதிக்கும்  விதமாக அறைக்குள் இருந்தார். 

"அண்ணி அப்பா மேல அபாண்டமா பழி சுமத்தாதிங்க" என்று சுரேஷ் பேச, "உங்கப்பா கை இரண்டும் வெந்திருக்கே.. ஏன் இப்படி ஆச்சுனு கேட்டிங்களா?" என்று கேட்டதும், "ஏதோ கீழே விழுந்து பைக்ல தெரியாம கை வச்சிட்டதா சொன்னார்." என்று சந்தேகமாய் கூற, "கிழிச்சார்... இவ காதலிக்கற பையன்.. லாவண்யாவிடம் இவர் வாலாட்டியதை வச்சி அவன் கையை பொசுக்கியிருக்கான். வயசானவர்னு விட்டு வச்சிட்டான். இல்லைன்னா அவனே அடிச்சிருப்பான். இப்ப போலீஸ்ல இருப்பார். 

  நான் கூட போலீஸ்ல புகார் தர நினைச்சேன். இந்த வயசுல இதெல்லாம் பார்க்கணுமானு என் பொண்ணை ஹாஸ்டல்ல சேர்க்கறேன். 

  இலக்கியா பார்த்து உனக்கு ஒரு பொட்ட புள்ள இருக்கு. ஜாக்கிரதை‌" என்று கூறிட, ஆவுடையப்பன் அறைக்குள் இருந்து வரவேயில்லை‌ 

  அலமேலு கூறியதற்கு எதையும் மறுக்காமல் தந்தை இருக்கவும் சுரேஷ் ஒன்றும் புரியாமல் தலைகவிழ்ந்தான். இதில் லாவண்யா காதலிப்பதாகவும், அந்த பையன் தந்தையின் கையை பொசுக்கியதை அறிந்து பேச்சற்று நின்றார்.

"ஏன்டி என்னிடம் சொல்லிருக்கலாம்ல" என்று இலக்கியா கேட்க, "பயமாயிருந்தது சித்தி. நான் சாரதியை விரும்பறதை சொல்விடுவேன்னு தாத்தா மிரட்டினார். தாழ்பாள் கூட உடைச்சிருக்கார். நான் ஏதாவது சொன்னா சாரதியை விரும்பறதா சொல்லி பேச்சையே மாத்தி, என்னை தான் அம்மா திட்டுவாங்க, நான் அவர் மேல பழி சொல்வதா அம்மா நினைப்பாங்கனு சொன்னார். 

  காதலிப்பது வீட்ல தெரிய வேண்டாம்னு இருந்தேன். ஆனா முடியலை.

  இப்ப தான் அம்மாவிடம் எல்லாம் சொல்லிட்டேன். எதுனாலும் அம்மா சொல்வதை கேட்டுக்கிட்டேன்." என்றாள்.

"சாரதி... ன்னா.. காஞ்சனா அக்காவோட பையனையா?" என்று இலக்கியா கேட்க, ஆமோதிப்பாய் தலையாட்டினாள் லாவண்யா. 

   "தேவையில்லாத விஷயத்தை பேசாத லாவண்யா. பேசினா அடுத்து எவனோடவாது கல்யாணம் பேசி முடிச்சிடுவேன்?" என்று அலமேலு அதட்டவும், "இல்லைம்மா இல்லைம்மா." என்று பதறினாள். 

லக்கேஜை தூக்கியபடி இலக்கியாவிடமும் சுரேஷிடமும் கூறிவிட்டு அலமேலு நகர, லாவண்யாவோ இஷிதாவை முத்தமிட்டு, "சித்தி இஷிதாவை  பார்த்துக்கோங்க.. வர்றேன் சித்தப்பா." என்று புறப்பட்டாள். 

அவர்கள் தலை மறையவும், இலக்கியாவோ "அன்னிக்கே கதவு தாழ்பாள் உடைந்ததுக்கு லாவண்யா அந்தளவு பதறினா. என்னடா இது இதுக்கா இப்படி அலறுறானு நினைச்சேன். இப்ப தான் தெரியுது. முன்னவே சொன்னேன் ஏதோ சரியில்லைனு." என்று அலுத்துக் கொண்டார். 

  சுரேஷோ தந்தையிடம் சென்று ''ஏன்ப்பா வயசுக்கேத்த வேலையா இது? போங்க சொந்த அண்ணன் மகனோட பொண்ணிடம் அத்து மீறி இந்த வயசுக்கு மேல தேவையா? இதுக்கு நாக்கு பிடுங்கிட்டு சாகலாம்." என்று திட்டிவிட்டான். 

  ஆவுடையப்பன் மீது ஏற்கனவே சில சந்தேகம் இருந்ததாக இந்த பிரச்சனையை இலக்கியா நம்பினார். 

  இதில் சாரதியை விரும்பியதால் வயசு பெண் ஹாஸ்டலில் போவதே நல்லதென இருந்துக் கொண்டார். 

தேவி தான் விடுமுறை என்பதால் கூடவே வந்தாள். லாவண்யாவிடம் துருவி துருவி, "என்னாச்சு?" என்று கேட்க, ஆவுடையப்பன் தீண்டல் முதல் சாரதி வீட்டுக்கு வந்தது வரை ஒப்பித்தாள். 

  "அதுக்கு தான் நீ தூங்காம கொள்ளாம பஸ்ல தூங்கினியா? அடிப்பாவி முதல்லயே சொல்ல என்னவாம்." என்று தலையில் தட்டினாள். 

  கூடுதலாக லாவண்யாவோ 'அதுக்கு தான் எங்க வீட்டுக்கு வந்தா ஷால் போடுனு சொன்னேன்." என்றாள். 

"எனக்கென்ன தெரியும். அந்த கிழம் இதெல்லாம் செய்யும்னு.  ஆனா ஒன்னு லாவண்யா. இங்க வயசு பசங்க கூட பரவாயில்லை. கிழடு கட்டுங்க தான் இப்படி திரியுதுங்க. அந்தாளு பார்வை குறுகுறுனு இருக்கும். 

  இப்ப தான் அதுக்கு அர்த்தம் புரிது. 

ஆனா ஒன்னு... துப்பட்டா போட்டா தான் அந்த மாதிரி ஆளுங்க நம்மளை பார்க்காம இருப்பாங்கனு அர்த்தமில்லை‌ துப்பட்டா போட்டாலும் போடாட்டினாலும் கண்ட நாயுங்க கண்டதை பார்ப்பாங்க. நாம ஒழுங்கா இருந்து ஒன்னும் யூஸ் இல்லை. நாம நம்ம கம்பர்டபிள்ல இருந்தா போதும். இது மாதிரி ஆட்களுக்கு நாலு பேர் எதிர சொல்லிட்டு காரி உமிழ்ந்துட்டு போயிடணும்." என்றாள். 

  இதெல்லாம் கேட்டபடி, டிப்போ வந்து பஸ்ஸில் ஏற, "சாரதி பஸ்" என்று லாவண்யா விழித்தாள்‌.

"அதனால என்ன?" என்றாள். 

"லூசு.. அம்மாவுக்கு சாரதியை விரும்பறதும் தெரியும்ல. அவர் எங்க வேலை பார்க்கறார். என்ன பார்க்கறார்னு நான் எதுவும் சொல்லலை. இப்ப சாரதி கண்டெக்டர்னு அதுவா தெரிய வரும்" என்று தலைகுனிய, "பச்.. இதுவும் போச்சா" என்று தேவி அலமேலுவை கவனிக்க, "டிக்கெட்" என்று சரியாக சாரதி வந்தான்‌.

அலமேலு சாரதியையும் அவன் உடையையும் கவனித்து, லாவண்யாவை முறைக்க, "அப்பறமா ஏன் போயும் போயும் கண்டெக்டரை காதலிச்சனு அவளை திட்டி முறைச்சிக்கோங்க. இப்ப டிக்கெட் எடுங்க" என்றான். 

பணத்தை எடுத்து "மூனு அண்ணாநகர்" என்றார். 

அவனோ ஒரு அண்ணா நகர் தந்துவிட்டு, "லயாவிடம் பஸ் பாஸ் இருக்கும். தேவி தங்கச்சியிடமும் இருக்கும். அதான் ஒரு டிக்கெட் உங்களுக்கு மட்டும் தந்தேன் மீதி சில்லரை" என்று கொடுத்தான். 

அலமேலுவோ முன்னால் இருந்த லாவண்யாவை பஸ்பம் ஆக்காத குறை. 

அண்ணாநகர் இறங்கும் வரை அவன் நின்ற தோரணை செயலை அடிக்கடி பார்த்து பொறுமினார். அவனுமே லாவண்யாவின் சூட்கேஸ் புத்தகம் என்று லக்கேஜை பார்த்து ஹாஸ்டல் போவதை யூகித்தான்.

  அலமேலுவோ பஸ்ல பார்த்து வந்த காதல் என்று முடிவெடுத்துக் கொண்டார். உண்மையில் அது தான் என்றாலும், ஏதோ இனகவர்ச்சி போல என்று லாவண்யா மீது கோபம் அதிகமானது. சில சூழ்நிலை அழகான கவிபடைக்கும், அந்த நேரம் யாரை யாரோடு இணைத்து பந்தத்தை உருவாக்குமென தெரியாதே‌!

  பேருந்து அண்ணாநகர் வரவும் இறங்கினார்கள். 

படியில் லாவண்யா இறங்க, "லயா.. ஹாஸ்டலுக்கு தானே.." என்றதும் ஆமென்று தலையாட்டா, "ஓகே..டேக் கேர்" என்று விசிலடிக்க, பேருந்து புறப்பட்டது. 

  லாவண்யாவோ அன்னையை கண்டு முழிக்க, "என்னடி சொன்னான். ஆங்.. என்ன சொன்னான். தலையாட்டற" என்று கையை பிடிக்க, லக்கேஜை சுமந்தவளோ "டேக் கேர்னு சொன்னார்மா இனியாவது பாதுகாப்பா இருப்பனு" என்றாள். 

"கண்டெக்டரை காதலிங்சது உங்கப்பாவுக்கு தெரிந்தது" என்று பொறும, "அவர் பி.காம் முடிச்சிருக்கார்மா. அவர் அப்பா கண்டெக்டர். சில சூழ்நிலையால அப்பாவோட அட்டாச் வேண்டும்னு,  கண்டெக்டரா இருக்கார். புட்பால் பிளேயர் கூட. வீட்ல ஒரே பையன் சொந்த வீடு இருக்கு. நல்ல கேரக்டர்மா. நானா தான் காதலிச்சேன். நானா தான் அவரிடம் சொன்னேன்." என்று நடந்தபடி விவரித்தாள். 

"படிச்சவன்னா... கட்டி கொடுக்க தகுதினு நினைச்சிட்டு கனவு காணாத. உங்கப்பா எதுக்கும் ஒத்துக்க மாட்டார்" என்று கூறிட, லாவண்யாவோ கண்கலங்கியவாறு நின்றாள். 

ஏற்கனவே சாரதி 'இங்க பாரு... என்னை ஏதாவது மட்டம் தட்டறாங்களா.. கேட்டுக்கோ.. எனக்காக சப்போர்ட் பண்ணறேன்னு வாயை திறக்காத. இப்ப உன் பிரச்சனை நீ ஆவுடையப்பன் வீட்ல இல்லாம நல்லபடியா இருக்கணும் அவ்ளோ தான். 

  கல்யாணம் அதுயிதுனு பேசினா அப்ப வந்து நானே புரிய வைக்கறேன். நீயா எதுவும் பேசி மண் அள்ளி போட்டுக்காத. சில இடத்துல அமைதியா போறதும் பணிந்து போறதும் கூட நல்லது தான்.' என்று கூறியிருக்க, அமைதியாக இருந்தாள். 

  -தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

  ரீடர்ஸ் கைன்ட்லி ரெஜிஸ்டர் லாகின் ஞூ ரீட். 

 

 


 
Posted : October 5, 2026 6:41 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Old man u deserve this insult. Very good laya mom. Laya hereafter u will be safe and have a good sleep. Sarathy laya father will accept u. So be happy. Very intresting sis.


 
Posted : October 5, 2026 9:22 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Parathyroid correct ah than solran.. konjam adangi poma


 
Posted : October 5, 2026 10:34 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 41)

அப்பா டா..! சொல்லாத காதல் மட்டும் தான் நிறைவேறாதுன்னு கிடையாது, சில சங்கடங்களை வெளியே சொல்லாமல் நமக்குள்ளேயே அழுத்தி வைச்சுக்கிட்டாலும் தீர்வுத் தெரியாது தான். ஆனால், சாரதி வந்து பூசணிக்காயை போட்டு உடைச்ச மாதிரி எல்லா விஷயத்தையும் சொன்னதால..
இப்ப தங்குற இடத்துக்கும் சொல்யூசன் கிடைச்சது, காதலையும் தெரிவிச்சாச்சு இல்ல.
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். சாரதி சொன்ன மாதிரி இப்பத்துக்கு படிப்புத் தான் முக்கியம், காதலுக்கு ஒண்ணும் அவசரமில்லை.

ஆனால் பாருங்க, மாமியார் கிட்ட சாரதியோட அப்ரோச்சிங் ரொம்பவே பிடிச்சிருக்கு, கொஞ்சம் கூட பயம் என்கிறதே இல்லை. அதுவும் ஸ்ட்ரெயிட்டா கட் அண்ட் ரைட்டா பேசறதெல்லாம் ரொம்பவே நல்லாயிருக்கு.
அதுவும் கோபத்துல அந்த கிழவன் கையை சைலன்ஸர்ல வைச்சதாகட்டும், லாவண்யா வீட்டுக்கு வந்து அந்த கிழவன் பண்ணதை, அவளை சேஃப்டியா ஹாஸ்டலை சேர்த்து வி்டுங்கன்னு சொன்னதாகட்டும், தங்களோட காதலையும் சொல்லி, மேற்கொண்டு படிக்க வைக்கலைன்னா கல்யாணம் பண்ணிப்பேன்னு மிரட்டி லயாவோட படிப்புக்கு எந்த பாதகமும் வராமல் அவளை காத்ததாகட்டும், கல்யாணத்துக்கு முன்னாடியே தான் காதலிச்ச பொண்ணு மேல தனிப்பட்ட அக்கறை காட்டறதாகட்டும்ன்னு
இந்த சாரதியை இன்னும், இன்னும் பிடிச்சிருக்கு, முன்னாடி வந்த ஹீரோஸையெல்லாம் இந்த சுருட்டை முடி சாரதி ஒரேயடியா தூக்கி சாப்பிட்டுட்டான் போங்க.
இந்த சாரதி எப்படிப்பட்ட பிரச்சினையையும் சமாளிச்சிடுவான்னுத் நம்பிக்கை வந்திடுச்சு.

"பிடிக்குதே... திரும்ப, திரும்ப இவனை....
பிடிக்குதே... திரும்ப, திரும்ப
இவனை...
எதற்கு இவனை பிடித்ததென்று
எனக்கும் தெரியலை..."

மனசு முழுக்க இந்த வரிகள் தான் ஓடுது போங்க.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : October 5, 2026 11:36 am
(@lachu-balu-varadhan)
Posts: 10
Active Member
 

Lavanya Ethukum amaithiya iru sarathy solura mathiri, kandipa sarathy vanthu unga v2la pesi marriage pannipan


 
Posted : October 5, 2026 4:09 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy eppudi correct ah laya oda amma vum appa oda mindset ah yum guess panrano ennavo andha kizhavan oda thollai la irundhu viduthalai kedaichathoda andha aalu pathi expose pannitu  vandhutaga ah 


 
Posted : October 5, 2026 7:28 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

நைஸ் ... இந்த கிழவன் எல்லாம் கொல்லனும் பேத்தி முறையிலிருக்க பொண்ணுக்கிட்ட போயி தவறா நடக்க பாக்கறான்


 
Posted : October 7, 2026 11:35 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super 😍 


 
Posted : October 8, 2026 2:55 pm

Scroll to Top