பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-40
அத்தியாயம்-40
வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் லாவண்யா. அவளுக்கான டிக்கெட் வாங்கிட, அருகே ஒரு பெண் அமரவும், லேசாக புன்னகைத்து, மடியில் பையை வைத்தபடி உறங்க ஆரம்பித்தாள்.
மனமெல்லாம் தெளிவாக, உறங்கிவிட்டாள். அடிக்கடி லேசாக இமை திறந்து எந்த இடம் வந்தது என்று மட்டும் கவனித்தாள். பிறகு மீண்டும் உறக்கம். இப்படியே வேலூர் வந்து சேர்ந்தாள்.
இரவு நேரம் என்பதால் தந்தை புருஷோத்தமன் அழைத்து செல்ல வந்தார்.
"பகல்ல வந்திருக்கலாம்ல" என்று கடிந்தார்.
லாவண்யா என்ன சொல்வாள்? காஞ்சனாவிடம் பேசி முடித்ததும் தெம்பு வர இன்றே புறப்படும் தைரியமும் பெற்றாள். நாளை காலையில் தான் வர நினைத்தது. இரவுக்கு பயந்து தானே ஓடுகின்றாள்.
வீட்டுக்கு வந்ததும் அன்னையின் கையில் மணக்க மணக்க சாப்பிட்டு, அம்மா மடியில் படுத்தாள்.
"ஏன்டி எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதியிருக்க" என்றாள்.
போனை பார்த்தபடி, தம்ஸ் அப் செய்து, சூப்பரா என்றாள்.
தேவியிடம் சாட் செய்து பேசிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் மாலதி போன் போட்டு அலமேலுவை அழைக்க, எடுத்து பேசினார்.
"என்னடி சொல்லற... அப்படியா? உடனே உங்க அத்தைக்காரியிடம் சொல்லாத. முதல்ல நாளைக்கு கன்பார்ம் பண்ணிட்டு அப்பறம் சொல்லு. ஆங்.. காலையில பாரு" என்று பேசிக்கொண்டிருக்க, லாவண்யா அன்னையை திரும்பி பார்க்க, "என்னடி பார்வை திரும்பு" என்றார்.
லாவண்யா அந்த நேரம் போனில் பேட்டர்ன் போட்டு போனை திறந்தாள்.
'பச்.. இவ வேற உண்டாயிருக்காளா இல்லையா தெரியலை. நாள் மட்டும் தள்ளி போயிருக்குனு சொல்லறா. இங்க இருக்கறப்ப சரியா தலைக்கு ஊத்திக்காது. அவசரப்படாம இருப்போம்' என்று அலமேலு முடிவுக் கட்டினார்.
அன்றைய நாள் லாவண்யா நன்றாக சாப்பிட்டு படுத்தாள்.
சாரதியும் இங்கே பத்து மணிக்கு வந்திட, சாப்பாடு பரிமாறினார்.
"சாரதி... நாளைக்கு லீவு சொல்லிட்டியாப்பா" என்றார் காஞ்சனா.
"சொல்லிட்டேன்மா ஏன்மா.. நீங்க லீவு எடுக்க சொன்னிங்க. காரணம் கேட்ட பதிலில்லை" என்றான்.
காஞ்சனா என்னவென்று கூறுவார். லாவண்யா சொன்ன விஷயத்தை இவனிடம் பதமாக கூறவேண்டும். தனக்கு நேரம் அமைய வேண்டும். விடுமுறை எடுத்தாலாவது வேறுவழியின்றி உரைத்திடலாம். இவன் மனமும் விஷயம் கூறியப்பின் அந்த மனநிலையில் வேலைக்கு போக வேண்டாமென எண்ணினார்.
"சொல்லறேன்பா" என்றார்.
அன்னையாக லாவண்யாவுக்கு தான் தைய்த்த உடையை வரவழைத்து கொடுத்து விட்டிருக்கின்றார். அவளுமே ஆனந்தமாய் பேசி சிரித்தாள். இதற்கு மேல் அன்னை ஏன் அலைப்புறுதலில் இருப்பாரென எண்ணினாலும் நாளைக்கு தெரியும் என்று நினைத்தான்.
"அம்மா.. லாவண்யா போன் பண்ணினா. நான் தைச்ச டிரஸ் நீயா கொடுத்ததா சொன்னா. ரொம்ப சந்தோஷமா இருந்தா" என்றான்
"ம்ம்" என்றார் காஞ்சனா.
அவனாக லாவண்யாவை பற்றி கூடுதலாக பேசவில்லை. அன்னை முகம் இன்னமும் ஏதோ நெருடலில் உள்ளதே.
இரவு உறங்கும் போது, லாவண்யாவிடம் பேச, அவளோ 'அத்தை ஏதாவது பேசினாங்களா? எதுவும் சொல்லலை?" என்று கேட்க, "இல்லை... நாளைக்கு லீவு போட சொன்னாங்க. எமர்ஜென்ஸி லீவ் அப்ளை பண்ணிருக்கு. ஆல்டரா யாராவது கண்டெக்டரா போடுவாங்க.
ஆமா.. அத்தைன்னு எல்லாம் சொல்லற. அம்மா என்ன சொன்னாங்க?" என்றான்.
"சாரதி... நான் அத்தைனு சொல்லறேன்னா... என்ன அர்த்தம். அவங்க என்னை மருமகளா அக்சப்ட் பண்ணிட்டாங்க." என்று கூறினாள்.
''உனக்கென்ன அவங்க முகம் அப்ப கூட டல்லா இருக்கு." என்றான்.
லாவண்யாவுக்கு தான் தெரியுமே. ஆவுடையப்பனை பற்றி கூறியதால் அதை சாரதியிடம் கூற தயங்கி நிற்பதை அவள் அறிவாளே. அவளாக கூற முடியாது நின்றாள்.
போனில் கூற 'நா' எழுந்தது. ஆனால் காஞ்சனா அத்தையே பக்குவமாக கூறட்டுமென நினைத்தாள்.
''சரி.. சாரதி. நான் வைக்கட்டுமா?'' என்று கேட்க சரியென்று அணைத்தான்.
போன் பேசிவிட்டதால் கதவை திறந்துவைத்து, படுத்தான்.
காஞ்சனா நடுவில் நீரருந்த எழுந்தார். மகன் உறங்கும் அழகை காண வந்தார். சாந்தமான முகத்தை கண்டவரோ, நாளைக்கு ஏதாவது சொல்லப்போய் ரௌத்திரம் கொள்வானோ என்று பயந்தார்.
காஞ்சனா பயந்த அடுத்த நாள் காலையும் விடிந்தது.
ஏழுமணிக்கு தான் எழுந்தான். நிதானமாக குளித்து சாப்பிட்டான்.
ஒருபுறம் லாவண்யா வீட்டில் அலமேலு பெரிய மகளிடம், "என்னடி அந்த டெஸ்ட் எல்லாம் பார்த்தியா? இரண்டு கோடு வந்துச்சா. ஒரு கோடு வந்துச்சா?" என்று விசாரிக்க, "இரண்டு கோடு மாதிரி தான் தெரியுதும்மா. அவரிடம் சொன்னேன். அவரும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து அவங்க அம்மாவிடமும், உங்களிடமும் சொல்லிக்கலாம்னு சொன்னார்
பத்து மணிக்கு டாக்டரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கியிருக்கு." என்றாள்.
"அப்படியா சரி.. போயிட்டு வந்தே உன் மாமியாரிடம் சொல்லு. எல்லாம் நல்லா நியூஸா தான் இருக்கும்" என்று தெம்பாக பேசினார்.
லாவண்யாவோ அம்மா நல்ல முட்ல இருக்காங்க போலயே. இப்ப நிதானமா உட்கார வச்சி சொல்வோமா?' என்று எட்டியெட்டி பார்த்தாள் லாவண்யா.
தந்தை கடைக்கு செல்லவும் தனியாக அன்னையை அமர்த்தி பேசலாம் என்று முடிவுடன் இருந்தாள்.
இங்கு காஞ்சனாவும், மகனிடம் அவன் சாப்பிட்டதும் எடுத்து கூறலாமென இருந்தார்.
சாரதி சாப்பிட்டு முடித்து டிவியில் தொலைக்காட்சி சேனலை மாற்றி மாற்றி வைத்தபடி, சிந்தனையில் சிதற, லாவண்யா குளித்து முடித்து துணி காயப்போட மாடிக்கு நடந்தாள்.
'மணி பத்தரை ஆகுது இந்நேரம் பெரியவ டாக்டரிடம் போயிருப்பாளே... கால் பண்ணி பார்ப்போமா?' என்று போனை எடுத்தார்.
அலமேலுவின் போன் சார்ஜ் போடாமல் செயலற்று போகவும், 'இந்த நேரத்தில தான் இதுல சார்ஜ் இருக்காது" என்று முனங்கி சார்ஜ் போட்டுவிட்டார்.
மாலதி உண்டாகியிருக்கா. டாக்டர் என்ன சொல்லிருப்பாங்க. என்ற படபடப்பு அதிகமாக, லாவண்யா போனில் போட்டு பேச எடுத்தார். அதுவோ பேட்டர்ன் லாக் போடக் கூறியது.
அலமேலு நேத்து என்னவோ போட்டாளே என்று என்று L வரை போட்டார். லாவண்யா என்பதால் L போட்டுயிருப்பதாக எண்ணிட, பேட்டர்ன் தவறென காட்டியது. 'நேத்து இப்படி தானே ஏதோ போட்டா,' என்று சிந்திக்க, மூளையோ நினைவேட்டில், கூடுதலாக ஏதோ கிறுக்கினாளே என்று எடுத்துரைத்தது. மகள் அவளது பெயரான லாவண்யாவுக்கு L-லும், சாரதிக்கு Sஉம் இணைத்து பேட்டர் வைத்திருப்பது தெரியாது, ஏதோ வளைவு நெளிவில் 'LS' என்று பேட்டர் போட உடனடியாக போன் லாக் திறந்தது.
அலமேலுவோ போனில் மாலதிக்கா என்ற பெயரில் போட்டார்.
மாலதியும் உடனடியாக போனை எடுத்து, "அம்மா... கன்சீவா இருப்பதா தான் டாக்டர் சொல்லிட்டாங்க. ஆனா ஸ்கேன் பண்ணி பேபி க்ரோத் ஹார்ட் பீட் பார்க்க இருக்கேன். அப்பறமா நானே கால் பண்ணறேன்" என்று பேசி வைத்தாள்.
"சரிடி சரிடி.. பார்த்துக்கிட்டே பேசு. அவசரமில்லை" என்று துண்டித்துக் கொண்டார்.
'அப்பாடா.. பெரியவளுக்கு கடவுள் அருள் புரிஞ்சிட்டார்' என்று போனை வைக்க போகும் சமயம் கால் பதிவில் Sa.Rathi என்ற எண்ணிற்கு அதிகப்படியாக அழைப்பு இருக்க, 'அந்த தேவி பொண்ணை எல்லாம் மாலதி கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்தா. இந்த ரதி பொண்ணை அழைச்சிட்டு வரலை.' என்று வாட்சப் மூலமாகவும் சாட்டை வாசிக்க, மேலே இருந்து லாவண்யா வந்தாள்.
"துணியெல்லாம் காயப் போட்டுட்டேன் அம்மா." என்று நெருங்கி வர, 'சாரதி யாருடி?" என்றார்.
அன்னை தனது போனும் கையுமாக வைத்து சாரதி என்ற பெயரை கேட்க, "அது.. பிரெண்ட் மா." என்றாள்.
அலமேலு அங்கும் இங்கும் தலையை திருப்பி விளக்குமாத்தை எடுத்து வெளுத்தார்.
"பொய் சொல்லறியா.. பொய்யு. என்ன என்ன பேச்சு பேசி வச்சியிருக்க. எவனிடம் உன் போட்டோவா அனுப்பி நல்லா இருக்காடானு கேட்டு வச்சியிருக்க? ஹார்டின் அனுப்பியிருக்கான் ஹார்டின்." என்று வெளுக்க, அந்த நேரம் தான், காஞ்சனாவும், சாரதியிடம் ஆவுடையப்பனை பற்றி பேசி முடிக்க, சாரதி கோபமாக எழுந்து, ''இங்க இருக்கறப்ப என்னிடம் சொல்ல என்னவாம் அவளுக்கு. பைத்தியக்காரிம்மா அவ. நான் ஏதோ, நீ பேசியதால உம்முனு இருக்கானு பார்த்தேன். தூங்காம கொள்ளாம லூசா இவ. அந்த கிழவனை'' என்று காட்டு கத்தலாக கத்த, "முதல்ல அவளிடம் பேசு. அவளும் அவ அம்மாவிடம் சொல்ல சொல்லிருக்கேன்." என்று நிதானப்படுத்த முனைய, சாரதி அந்த நேரம் லாவண்யாவுக்கு அழைத்தான்.
"இந்தா.. கால் பண்ணிட்டான். பிரெண்டா பிரெண்ட் என்று லாவண்யா முன் போனை தூக்கி போட, அவளோ போனை பிடிக்க, கை பட்டு ஆன் ஆனது.
"இங்க நான் விளக்குமாத்துல அடிக்கறேன். அங்க அவன் போனை போட்டுட்டான்னு எடுக்கறே" என்று கூறி அடிக்க அடிக்க.. "அம்மா சொல்லறதை கேளும்மா. நான் காதலிக்கறேன். அதை சொல்ல தான் வந்தேன். அம்மா... அய்யோ வலிக்கும்மா" என்று லாவண்யா கத்துவதை கேட்டு துடித்தான்.
"கடவுளே... அங்க அவ அடிவாங்கிட்டு இருக்கா." என்று அன்னை காஞ்சனாவிடம் கூற, "படிக்கற புள்ள காதலிச்சா ஆரத்தி எடுத்து வரவேற்பாங்களா. பெத்தவங்க அடிவெளுக்க தான் செய்வாங்க" என்றார் காஞ்சனா.
காஞ்சனா அவ்வாறு கூறியதும், சாரதியோ தன்னால் லாவண்யா அடிவாங்குவதை கேட்டு பொறுக்க முடியவில்லை. கூடுதலாக இங்கே லாவண்யாவின் சித்தப்பா வீட்டில் அவளது ஒன்றுவிட்ட தாத்தாவினால் பாலியல் சீண்டலுக்கு மட்டும் ஆளாகியதை கண்டு கொதித்து கொண்டிருந்தான்.
'அந்த கிழவனை' என்று கோபம் கொள்ள, "டேய் டேய்... அவ அங்க அவங்க அம்மாவிடம் சொல்லியிருந்தா என்ன முடிவெடுக்கணும்னு அவங்க எடுக்கட்டும். நீயா குதிக்காத. முதல்ல கையை நீட்டிட்டா உனக்கு கெட்ட பெயர் வரும்டா'' என்று நிதானப்படுத்த முயன்றான்.
சாரதியோ கோபத்தை கட்டுப்படுத்தியவனாக இருந்தான். சிலபல நிமிடமாகியும் அவன் கோபம் அடங்கவில்லை என்று அவனது ஏற்றயிறக்க திண்ம தோள் கூறியது.
"நான் வெளியே போயிட்டு வர்றேன்மா." என்று கூறி எழுந்தான்.
"டேய் இலக்கியா வீட்ல போய் பிரச்சனை பண்ணாத" என்றார்.
"பண்ண மாட்டேன்மா.. வீட்ல போய் பிரச்சனை பண்ணவே மாட்டேன். அப்பா மேல சத்தியமா போதுமா" என்று கூறி பைக் சாவியை எடுத்து புறப்பட்டான்.
இங்கு துடப்பத்தால் அடிவாங்கிய லாவண்யாவோ, "அய்யோ அம்மா லவ் பண்ணறதை சொல்ல தான் வந்தேன். அதுக்கு முன்ன சொல்லறதை கேளு." என்று கத்தியதை பொருட்படுத்தாத அலமேலுவோ ''பெரியவ இப்ப தான் நல்ல விஷயம் சொன்னா. ஆனா நீ என் சந்தோஷத்துல மண்ணை வாறி போடறியே. அய்யோ அந்த மனுஷனிடம் எப்படி சொல்லறது." என்று பாதி விளக்குமாத்தை வைத்தபடி, புலம்ப, "இதுக்கே இப்படி புலம்பற. அங்க எனக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? சித்தப்பா வீட்ல அந்த ஆவுடையப்பன் கண்ட இடத்துல தொடறான்.
நான் தூங்கிட்டேன்னு நினைச்சி என் தொடையில கை வைக்கறான். மார்புல கை வச்சான். நான் உன்னிடம் சொல்லறதா சொன்னப்ப, 'சொல்லு சொல்லு... நீ காதலிப்பதை உங்கம்மாவிடம் சொல்லறேன்னு மிரட்டினார்.
இப்ப கூட இதை உன்கிட்ட சொல்ல முடியாம திணறினேன்.
சாரதியோட அம்மா தான் இதெல்லாம் அம்மாவிடம் சொல்லாம இருப்பியா. காதலிச்சா திட்ட தான் செய்வாங்க. அதுக்குனு பாலியல் சீண்டல் செய்யறதை கேள்விப்பட்டா தடுப்பாங்க. போய் நிதானமா சொல்லுனு சொல்லி அனுப்பினாங்க. அவங்க கொடுத்த தைரியத்துல தான், நான் நிம்மதியா வந்தேன். இல்லைன்னா நான் எந்த நிலையில இருந்தேன்னு எனக்கே தெரியாது" என்று தேம்பி தேம்பி கூறினாள்.
''நேத்து வந்தப்ப சிரிச்சிட்டு ஆடிட்டு இருந்த.. இந்த கதையை நான் நம்பணுமா? அதுவும் தாத்தா மேல பழிச்சொல்லற" என்று முறைத்தார்.
''நான் சொல்லறேன் உனக்கு அதுல நம்பிக்கையில்ல?" என்று அழுதபடி அறைக்குள் அடைந்தாள்.
அலமேலுவோ தலையை தாங்கி பிடித்து ஹாலில் இருந்தார்.
ஒருபக்கம் பெரியவள் மாலதி கல்யாணமாகி கருவுற்று நல்ல செய்தி சொல்லி, வீடே விழாக்கோலமாக இருக்க வேண்டும், ஆனால் லாவண்யா காதலிக்கின்றாளென குண்டை தூக்கி போட்டதும் இல்லாமல், கூடுதலாக சின்ன மாமனார் இவளிடம் வரம்பு மீறியதாக கூறுகின்றாளே என்ற குண்டை தூக்கி போட செய்வதறியாது இருந்தார்.
அதே நேரத்தில் சாரதி அவனால் லாவண்யா மீது கை வைத்து அச்சுருத்திய ஆவுடையப்பனை சும்மா விடவும் மனமின்றி பைக்கில் உறுமிக் கொண்டிருந்தான்.
ஆவுடையப்பனின் போதாத நேரமோ என்னவோ பூங்காவிற்கு நடந்தபடி வந்தார் ஆவுடையப்பன்.
பைக்கை திருகி திருகி கோபத்தை கூட்டியவன், முடிவெடுத்தவனாக ஆவுடையப்பனை இடிக்கும் விதமாக சென்றான்.
லாவண்யாவின் காதலன் சாரதி என்றறிந்தவர், சாரதி எதிரே வேகமாய் வரவும், அவரோ தடுமாறினார். முட்டியில் இடித்தவனாக, கீழே தள்ளிவிட்டவன், அவனாக பைக்கை அப்படியே விட்டுவிட்டு தாத்தாவை எழுப்ப கையை நீட்டினான்.
ஆவுடையப்பனோ கைத்தூக்கி நிறுத்தப் போகின்றானோ என்று கையை தர, பொசுக்கென சைலன்ஸரில் இரண்டு கையையும் வைத்துவிட்டு, ''சுடுதா.. நல்லா சுடுதா.. உன் வயசுக்கு பேத்தியிடம் விளையாடற விளையாட்டாயா? லாவண்யா பேத்தி தானே?" என்று கர்ஜித்திட, மதியம் நேரம் என்பதால் கூட்டம் எட்டி பார்த்து சூழ்ந்திடவில்லை.
அந்த ஆளை தூக்கி நிறுத்திவிட்டு, "இதான் கடைசி... வயசுக்கு ஏத்த வேலையை பாரு. இல்லை... வண்டியை மேல ஏத்திடுவேன்." என்று பைக்கை எடுத்து புறப்பட்டான்.
ஆவுடையப்பனோ 'அய்யோ கை.. அம்மாடி' என்று கையை உதறியவராக மற்றவர்கள் யாராவது பார்த்தார்களா என்று பயந்தார்.
'சிறுக்கி மவ, போறப்ப இவனிடம் சொல்லிட்டு போயிருக்கா.' என்று முனங்கியவர், சத்தமின்றி வீட்டுக்கு புறப்பட்டார்.
சாரதிக்கோ அப்பொழுதும் மனம் கேளாமல், "அம்மா.. நான் அவளை பார்க்க போறேன்." என்று கூற காஞ்சனாவோ, "எதுக்குடா?" என்றார்.
"அவ அடிவாங்கியது காதுலயே விழுதும்மா. நான் நேர்ல போய் பேசிட்டு வர்றேன்" என்றான்.
"அப்பறம் உன் இஷ்டம்" என்றதும் மடமடவென வேலூருக்கு புறப்பட்டான்.
மூன்று மணிநேர பயணம் லாவண்யாவிடம் கூறாமல் தான் வந்தான். வழகநெடுக, லாவண்யா தன்னிடம் சொல்ல முடியாது குறுக்கே நின்றது எது என்ற தவிப்பில் கிடந்தான். டேஷிப்ட், நைட் ஷிப்ட் எதுவாக இருந்தாலும் அவளிடம் இன்னும் அன்பாக நடந்துக் கொண்டிருந்தால் தன்னிடம் முதல் நாளே சொல்லியிருப்பாளோ? இந்த ஒன்றரை மாதம் தூக்கம் கெட்டு நின்றிருக்க மாட்டாள். தேவி கூட லாவண்யா பஸ்ஸில் உறங்கி வழிவதாக தெரிவித்தாள். தன்னால் தூக்கம் கெட்டு இருந்தாலென முடிவெடுத்து விட்டோமே, அவளை சந்தித்து பேசியிருக்க வேண்டுமோ என்ற குற்றவுணர்வில் திரிந்தான்.
வேலூர் வரவும், லாவண்யா வீடு கண்டறிந்து வந்தான். ஏற்கனவே அவள் விலாசமெல்லாம் தெரிவித்திருந்தாள்.
வீடு நிசப்பதமாக தான் இருந்தது. காலையிலேயே அலமேலு சமைத்து முடித்திருக்க, கதவை தட்டவும், அலமேலு, கதவை திறக்கும் முன் 'மாலதி மருமவப்பிள்ளையோட வரலாம். கொஞ்ச நேரம் உன் காதல் நினைப்பை துரத்தி விடு. வீடு வேற அலங்கோலமா இருக்கு" என்று முனங்கி கதவை திறக்க, அங்கே சாரதி நின்றிருந்தான்.
"நீங்க?" என்று ஏற்கனவே பார்த்த முகமாக தெரியவும் கேட்க, "லா..லாவண்யா... லாவண்யாவை காதலிக்கற சாரதி ஆன்ட்டி" என்றான்.
அலமேலுவோ "ஏன்டி.. பொசுக்குனு போனை போட்டு அவனை வீட்டுக்கே வரவச்சிருக்க?" என்று லாவண்யாவை பார்த்து கத்த, "இல்லை... நீங்க பேசறப்ப போன் ஆன் ஆகிடுச்சு. லாவண்யாவை நீங்க அடிக்கறது கேட்டுச்சு. வந்தேன். லாவண்யாவா கால் பண்ணலை." என்றான்.
துடைப்பம் பாதி அங்கும் இங்கும் கிடந்தது.
"வெளிய போப்பா... இவங்க அப்பா வந்துட்டா அவ்ளோ தான்." என்று சாரதியிடம் கூறிவிட்டு, "படிக்க அனுப்பினா காதலிச்சிட்டு, கண்டவனை வீட்டுக்கு வரவச்சிருக்க. இது அந்த பையன் தானே?" என்று லாவண்யாவுக்கும் திட்டு விழுந்தது. போன தடவை லாவண்யாவை விட்டுவிட்டு பணம் தந்துவிட்டு வந்தப்பொழுது பார்த்த பையன் என்றளவு நினைவு வந்தது.
"இப்ப எங்க காதலுக்கு போராட வரலைங்க. அவ அந்த வீட்ல ஆவுடையப்பனை அந்தாளை பத்தி சொன்னாளா? பேத்தியிடம் வரம்பு மீறியிருக்கான். தயவு செய்து அவளை அங்கயிருந்து வேறயிடத்துக்கு மாத்துங்க. வேறெதும் பிரச்சனை பண்ண வரலை. அவ என்னை காதலிச்சதுக்காக அவளை அடிங்க... திட்டுங்க. அவளை பெத்ததால உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதே போல தானே அவளை பாதுகாப்பா பார்த்துக்கற பொறுப்பும் இப்ப உங்களுக்கு தான் இருக்கு. ஒரே வீட்ல இருக்கறதால அட்வான்டேஜ் எடுத்துக்கறான் அந்தாளு. என்னை காதலிச்சதால, அதை உங்களிடம் சொல்லிடுவேன்னு ஒரு மாசம்கிட்ட மிரட்டியிருக்கார். இதுக்கு சரியான ஒரு தீர்வா எடுங்க. எங்க பிரச்சனையை அப்பறமா பார்க்கலாம்" என்றான்.
"என்னத்த அப்பறமா பார்க்க, படிக்கவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். இனி அவளை அங்க அனுப்பவும் போறதில்லை. உன் வேலையை பார்த்துட்டு போ" என்றார்.
லாவண்யா அறைக்கதவில் ஒன்றி இருக்க, வீட்டுக்குள் வந்தான். அவளை கைப்பிடித்து அழைத்து "படிப்பை நிறுத்தினா தாலி கட்டி அவளை என் கூட கூட்டிட்டு போயிடுவேன் அத்த.
படிப்பை நிறுத்தாம அவளை வேறயிடத்துல எங்கயாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க. அவ படிக்கட்டும். இந்த காதல் பிரச்சனையை இப்ப தவிர்க்க பாருங்க. இதுக்கு மேல ஏதாவது யோசித்து அவளை வேற எவனுக்காவது கட்டி வச்சா, உங்க பெண்ணை நீங்களாவே விபச்சாரத்துல தள்ளறதுக்கு சமம்.
என்னை மனசுல நினைச்சுக்கிட்டு... அவ வேறொருத்தனோட." என்று லாவண்யாவை பார்த்து முடிக்க, லாவண்யா சாரதியை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.
அலமேலுவுக்கு பகீரென்றது மகள் இவனை கட்டிப்பிடித்து அழுகின்றாளே என்று. சாரதியோ "நீங்களே முடிவெடுங்க." என்றவன் அலமேலுவிடம் உரைத்துவிட்டு, லாவண்யாவை தன்னிடமிருந்து பிரித்து, "ஏய் லூசு.. ஏதாவது செய்து ஏழரையை கூட்டாத. படிக்கறது முக்கியம். நானே ஒரு டிகிரி முடிச்சு தான் நிற்கறேன்.
டிகிரி இல்லாம இனி வேலை பார்க்க முடியாதுன்னு அர்த்தமில்லை. ஆனா ஒரு டிகிரியாவது முக்கியம். எந்த பெத்தவங்களும் குழந்தைக்கு பாலியல் சீண்டல் இருக்கற இடத்துல திரும்ப இருக்க விடமாட்டாங்க. அதான் வீட்ல தெரிந்துடுச்சுல நல்லதா முடிவெடுப்பாங்க. நான் புறப்படறேன். எனக்கு தண்ணி மட்டும் கொடு." என்றான்
லாவண்யா வேகமாய் தண்ணீர் கொண்டு வந்து நீட்ட, வாங்கி பருகியவன், "என்னிடம் வந்து காதலிக்கறதை சொல்ல தைரியம் இருக்கு. பஸ்ல எவனோ ஒருத்தன் பேட் டச் பண்ணறான்னு காம்பஸ்ல குத்த தெரிந்திருக்கு. வீட்ல ஒருத்தன், அதுவும் கிழட்டு ஆசாமி அவனை வீட்ல போட்டுக்கொடுக்க தெரியலை. ஒரு மாசமா ஒழுங்கா சாப்பிடாம தூங்காமா.. இருக்க. தயவு செய்து எப்ப தைரியம் தேவையோ அப்ப தெம்பா இரு. பெத்தவங்க அன்பு செலுத்தறவங்க கூடயிருப்பாங்க" என்றவன் சத்தமின்றி வெளியேறினான்.
அலமேலு இடி விழுந்தது போல சோபாவில் அமர்ந்தார். சாரதி பேசிய பேச்செல்லாம் இவருக்கு மகளை காத்திடுங்கள் என்ற ரீதியில் மட்டுமே இருக்க, சின்ன மாமனாரின் செயலை தான் ஜீரணிக்க முடியாமல் நின்றார்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 40)
அச்சோ.. ! கிழவனை போட்டுக் கொடுக்க வந்து கடைசியில இவளோட காதலே அம்பலத்துக்கு வந்துடுச்சா...? ஆனாலும் லாவண்யா அம்மா போனோட பேட்டர்னை போட்டு ஓபன் பண்ணி, வாட்சப் போய் படம் பார்த்து, சாட்டிங் படிச்சு.. அடேயப்பா... இந்தளவுக்கு புத்திச்சாலியா இருந்திருக்க வேணாம்.
ஆனால் பரவாயில்லை, சாரதி உடனேப் போய் லாவண்யாவை தொட்ட கிழவன் கையை பொசுக்கிற அளவுக்காவது பனிஷ்மென்ட் கொடுத்தானேஅந்த மட்டுக்கு சந்தோஷம் தான்.
தவிர, ஊருக்கே கிளம்பி வந்து லாவண்யாவுக்காக சப்போர்ட்டிவா பேசியது நல்லா இருந்தது.
இவ்வளவு தூரம் விஷயம் தெரிஞ்சப் பிறகு லாவண்யா அம்மா இனி அவளை படிக்க வைப்பாங்களா, இல்ல வீட்டுக்குள்ளயே சிறை வைப்பாங்களா ? அதே மாதிரி இலக்கியா வீட்டுக்கு வந்து கிழவனை போட்டு கொடுப்பாங்களா, இல்ல கமுக்கமா இருந்திடுவாங்களா ? கிழவனை போட்டுக் கொடுத்தால் தானே நல்லது, இல்லைன்னா அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசியில வீட்ல இருக்கிற இஷிதா இலக்கியா மேலயே கை வைச்சிட்டா ? கிழவனை அங்கேயிருந்தும் துரத்தி அடிக்கிறது தான் நல்லது. இந்த மாதிரி காமவெறி பிடிச்சவங்களையெல்லாம்
வீட்டுக்குள்ளேயும் வைக்கக் கூடாது, வெளியிலயும் விட்டு வைக்கக் கூடாது, ஒரேயடியா போட்டுத் தள்ளிடணும்.
😉😉😉
CRVS (or) CRVS 2797
Lavanya inga veetula andha kizhavan vishyatha eppudi veetula sollurathu nu thayagitu irundha aana ava amma whatsapp chat ah parthu ival ah adi veluka aarambichitaga apadi yum ava love ah mattum solla ma andha kizhavan ah pathi yum sollita pathathuku Sarathy ku vishayam therinchi kizhavan ku chinnatha oru punishment kuduthathu oda inga veetula vandhum pesitu poitan parpom.aatha alamelu enna than panraga nu
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-49-50
3 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-47
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-46
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45
4 hours ago
- 26 Forums
- 377 Topics
- 1,918 Posts
- 1 Online
- 442 Members
