Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-31

8 Posts
8 Users
1 Reactions
100 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#377]

அத்தியாயம்-31

அன்று மதியம் வீட்டில் வழக்கத்தைவிட சற்று அமைதியான சூழல்.

அலமேலு மாடியில் காயவைத்திருந்த துணிகளை மடித்துக் கொண்டிருக்க, லாவண்யா கீழே அறையிலிருந்து அறைக்கு ஏதோ தேடுவது போலச் சுற்றிக் கொண்டிருந்தாள்.

அவளுக்குத் தான் விடுமுறை நாட்கள் நகரவே மாட்டேன் என்று அடம் பிடிப்பது போலிருந்தது.

கல்லூரி திறக்க இன்னும் சில நாட்களே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒரு வாரம் போல நகர்ந்தது.

அந்த நேரத்தில் வாசலில் ஒரு நடுத்தர வயது ஆண் நின்று,
"அப்பா இல்லையாம்மா?" என்று லாவண்யாவிடம் கேட்டார்.

லாவண்யா அவரை ஒருமுறை பார்த்துவிட்டு, "அப்பா கடையில இருப்பாங்க அங்கிள். அங்க போனா பார்த்துக்கலாம். என்று இயல்பாக சொல்லிவிட்டு,
"அம்மா... அம்மா மாடில இருக்காங்க. இருங்க... கூட்டிட்டு வர்றேன்." என்று தண்ணீரை மட்டும் தந்துவிட்டு வேகமாக மாடிப்படிகளில் ஏறினாள்.

மாடியில் ஒரு மூலையில் காக்கைகளுக்காக சோறு வைத்துக் கொண்டிருந்த அலமேலு, மகள் அவசரமாக ஓடி வருவதைப் பார்த்து, "என்னடி" என்று கேட்டார்.

"அம்மா... தரகர் அங்கிள் வந்திருக்காரு."

''தரகரா?" என்ற அலமேலுவின் குரலில் அடுத்த நொடியே சிறு தயக்கம் கலந்தது.

"ஆமா... கீழே இருக்காரு. அப்பாவை கேட்கிறாரு." லாவண்யா சொல்லிவிட்டு மீண்டும் படியிறங்கத் தொடங்கினாள்.

அவள் கீழே இறங்கியதும், அலமேலு முந்தானையை சரிசெய்துகொண்டு மெதுவாக கீழே வந்தார்.

அவரைக் கண்டதும் அந்த மத்திய வயது மனிதர் மரியாதையாக எழுந்து நின்றார்.

"எப்படிம்மா இருக்கீங்க? சும்மா புருஷோத்தமன் இருந்தா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். தம்பி இல்லையாமே. நான் அவரைக் கடையில பார்த்து பேசிக்கறேன்." என்றார்.

"அண்ணா... டீ போடவா?" என்று அலமேலு கேட்டார்.

"இல்லம்மா... சின்ன பொண்ணு தண்ணி கொடுத்துச்சு. அதுவே போதும்." என்றபடி அவர் எழுந்தார்.

அப்போது தரகர் கூடவந்த மனிதரிடம் சற்றே நெருங்கி, குரலைத் தாழ்த்தினார்.

"பொண்ணு சென்னையில படிக்குது. இப்ப லீவுக்கு வந்திருக்கா. பெரிய பொண்ணுக்கு இப்பதான் கல்யாணம் முடிச்சிருக்காங்க. உடனே பண்ணறது சந்தேகம்தான். நீங்க கேட்டதால கூட வந்தேன். பொண்ணைப் பார்த்துக்கோங்க. அவசரம் ஏதுமில்லை." என்றார்.

அவளோ வாசலில் நின்றுகொண்டு அந்த மனிதர் எப்போது கிளம்புவார் என்ற பார்வையிலேயே இருந்தாள்.

அந்தப் பார்வையில் எந்த சந்தேகமும் இல்லை.

தன்னைக் காணத்தான் அந்த மனிதர் வந்திருக்கிறார் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை.

அவர் கிளம்பிச் சென்றதும், அலமேலுவின் பார்வை தன்னையும் அறியாமல் மகளின் மேல் நின்றது.

லாவண்யாவோ அதைக் கவனிக்காமல், 'அப்பாவிடம் காசு கொடுத்துட்டாரா? இல்லையா? கல்யாணம் முடிஞ்சதும் தரகர் அங்கிளுக்கு பணம் கொடுக்கணும்னு அப்பா சொன்னாரே...' என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய சிந்தனைக்கும், தன்னைச் சுற்றி நடந்த விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லை.

மதிய உணவு நேரத்தில் புருஷோத்தமன் வீட்டிற்கு வந்ததும், அலமேலு அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

"அந்த தரகர் வந்திருந்தாரே." என்று ஆரம்பித்ததும், புருஷோத்தமன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டபடி,

"ஆமா... அவர்தான். கூடவந்தவர் லாவண்யாவைப் பார்த்துட்டுப் போகத்தான் வந்திருக்கார்." என்றார்.

அந்த ஒரு வார்த்தை அலமேலுவின் முகத்தில் இருந்த தயக்கத்தை இன்னும் ஆழமாக்கியது.

"நான் தெளிவாவே சொல்லிட்டேன். இப்ப கையில காசு இல்லை. பெரியவளுக்குக் கல்யாணம் முடிச்சதுக்கே இன்னும் பைசல் பண்ண வேண்டியது இருக்கு. அதுக்கு இரண்டு வருஷம் ஆகும். அதுக்குள்ள அவசரம் காட்டலைன்னு சொல்லிட்டேன். கட்டி வைக்கிறதா இருந்தா தொடர்பு சொல்லச் சொன்னார். நல்ல இடமா இருந்தா, இப்பவே பேசிவச்சுக்கலாம். படிப்பு முடிஞ்சதும் பார்த்துக்கலாம்னு." அலமேலு சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.

"பெரியவளுக்கு அடுத்து நல்லது பொல்லது ஏதாவது நடந்தா செலவு இருக்கும். இப்பவே இன்னொரு கல்யாணத்துக்கு ஓட வேண்டிய அவசியமில்லை. இரண்டு வருஷம் போகட்டும்." என்றார்.

புருஷோத்தமனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவருக்கும் அந்த எண்ணம் உண்டே.

ஆனால் அந்தப் பேச்சு லாவண்யாவின் காதுகளில் விழுந்துவிட்டது.

அவள் அங்கே இருந்தபடியே சாப்பாட்டை எடுத்துக் கொண்டிருந்தாலும், மனம் மட்டும் வேறு எங்கோ போயிருந்தது.

தன்னைப் பற்றியா அந்தப் பேச்சு? என்ற கேள்வி ஒரு கணம் தோன்றியது.

ஆனால் அடுத்த நொடியே, ‘இல்ல... என்னைப் பற்றி இப்ப யாரும் பார்க்க மாட்டாங்க. படிப்பு முடியட்டும்னு அம்மா அப்பா தெளிவா சொன்னாங்க இல்ல.’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அவளுக்கு இன்னும் இரண்டு வருடம் காலம் இருப்பதாகவே நம்பிக்கை.

அந்த இரண்டு வருடங்களுக்குள்... சாரதியும் அவளும் இருவீட்டாரிடமும் நல்லபடியாக நல்ல சந்தர்ப்பத்தில் காதலை பகிர்ந்து அனுமதி வாங்க முற்படலாமென சாரதியிடம் மனம் தாவியது.

நாட்கள் வேகமாகச் சென்றன.

ஆனால் லாவண்யாவுக்கு மட்டும் அந்த நாட்கள் நத்தை ஊர்வது போல நகர்ந்தன.

கல்லூரி திறக்கும் நாளை காலண்டரில் குறித்துவைத்துக் கொண்டு தினமும் அதை எண்ணிக் கொண்டிருந்தாள்.

விடுமுறை முடிவதற்கு முந்தைய நாள் அலமேலு வழக்கம்போல பரபரப்பாகத் தொடங்கிவிட்டார்.

மகள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்தார்.

"இதையும் எடுத்துக்கோ... அதை மறக்காத...  சாப்பாடு எல்லாம் சரியா சாப்பிடு..." என்று சொல்லிக்கொண்டே, இடையிடையே வீட்டில் காய்த்த பழங்கள், வீட்டில் செய்த சில தின்பண்டங்கள் என்று பையை நிரப்பினார்.

லாவண்யாவோ பையைப் பார்த்தபடி, "அம்மா... நான் காலேஜிக்குத் தான் போறேன். வெளிநாட்டுக்குப் போகல." என்று சிரித்தாள்.

"ஆமா... நீ உன் சித்தப்பா வீட்ல தங்கற. அங்கே போறப்ப கை வீசிட்டா போக முடியுமா? உனக்கு இங்க சமைச்சுக் கொடுக்கற மாதிரி தரமுடியாது. இதெல்லாம் தந்துட்டு வர்றது பெட்டர்" என்ற அலமேலுவின் குரலில் அன்பும் கவலையும் கலந்து இருந்தது.

மறுநாள் மாலை. சூரியன் மெதுவாகத் தாழ்ந்து கொண்டிருந்த நேரம். சாலையோர மரங்களின் நிழல்கள் நீண்டு கிடந்தன.

லாவண்யா பையை தோளில் மாட்டிக்கொண்டு, அலமேலுவுடன் பழக்கடைக்குச் சென்றிருந்தாள்.

அவளது மனம் மட்டும் வீட்டைவிட்டு கிளம்பும் முன்பே கல்லூரிக்குப் போய்விட்டது.

அப்போது தூரத்தில் ஒரு பைக் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவள் இதயத்துக்கு மட்டும் பரிச்சயமானது.

திரும்பிப் பார்க்காமலேயே அவளது இதயம் வேகமாகத் துடித்தது.

ஆனால் அடுத்த நொடி அவள் திரும்பிப் பார்த்தாள். சாரதி. அவளைப் பார்த்ததும் அவனுடைய முகமே மலர்ந்தது.

பல நாட்களுக்குப் பிறகு தன் கண்முன் அவளைப் பார்த்த சந்தோஷத்தில், அவன் இயல்பாகவே பைக்கை அவள் பக்கம் திருப்பினான்.

லாவண்யாவின் முகத்தில் ஒரு கணம் கட்டுப்படுத்த முடியாத புன்னகை வந்தது. அடுத்த நொடியே அலமேலு அருகில் இருப்பது நினைவுக்கு வந்தது.

அவள் வேகமாகத் தலையை அசைத்து, 'பக்கத்துல வராதே.' என்று கண்களாலேயே எச்சரித்தாள். சாரதி உடனே புரிந்துக் கொண்டான்.

பைக்கின் வேகத்தை குறைத்து, சற்று தொலைவில் வண்டியை நிறுத்தினான்.

அவளைக் காண்பதற்கே போதுமென்று அவன் முகத்தில் ஒரு திருப்தி.

லாவண்யாவும் ஒரு நொடி அவனைப் பார்த்தாள். அந்த ஒரு பார்வையில் பல நாட்களாக பேச முடியாமல் இருந்த ஏக்கம் இருந்தது.

'இனிமேல் அடிக்கடி பார்க்க முடியும்’ என்ற எண்ணம் அவளது மனதை வருடியது.

அலமேலுவோ பழக்கடைக்காரரிடம், "இந்த மாதுளை ஒரு கிலோ கொடுங்க." என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பிறகு மகளை நோக்கி, "லாவண்யா.. இந்த லக்கேஜை எடு. நான் பழத்தை வாங்கறேன்" என்று சொல்ல, லாவண்யா உடனே பையை எடுத்தாள்.

சாரதி தொலைவில் நின்றபடியே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அடக்கிக்கொண்டு முன்னால் நடந்தாள்.

சில அடிகள் சென்ற பிறகு, யாரும் கவனிக்காதபடி ஓரக்கண்ணால் பின்னால் பார்த்தாள். சாரதி பைக்கை தள்ளிக்கொண்டு மெதுவாக வந்தான்.
 
  லாவண்யா பையை சுமந்துவர, அலமேலு வாங்கிய மாதுளை பையோ கணம் தாளாமல் பழம் கீழே உருண்டது.

சாரதி பைக்கை உடனடியாக நிறுத்த, ஸ்டாண்ட் போட்டுவிட்டு, உதவிக்கு வந்தான்.

"லாவண்யா பழம் கீழே விழுந்துடுச்சு. மாதுளை கொள்ளை விலைக்கு தந்தான். ஒரு கவரை உருப்படியா தந்தானா? ஒரு கிலோ கூட தாங்காம, இப்ப ரோட்ல உருண்டுடுச்சு. அச்சோ" என்று கடைக்காரனை திட்டியபடி, எடுக்கும் முன் சாரதி அதெல்லாம் எடுத்து முடித்து, கொடுத்தபடி, "ரோட்ல சகதி சேறு இல்லை ஆன்ட்டி. மாதுளை தானே கழுவி கட் பண்ணிட போறிங்க" என்று கூறினான்.

லாவண்யாவோ தோள்பையில் ஜிப்பை திறந்து அதில் திணிக்க முயன்றாள்.

"ரொம்ப நன்றி தம்பி. மண்ணுல தான் இந்த சாப்பிடற பொருள் எல்லாம் விளையுது. ஆனாலும் கீழே விழுந்துட்டு நாம எடுத்தா சிலர் அதையும் ஒரு மாதிரி பார்ப்பாங்களேனு தயங்கினேன். உண்மை தான்... மாதுளை தோலை திங்கப் போறதில்லை." என்றார்.

தலையாட்டி எழுந்துக் கொண்டவன், தனது பைக் பக்கம் செல்ல, அலமேலுவோ, அப்பவே இரண்டு கவர் வாங்ககயிருக்கணும்" என்று இன்னும் என்னடி முன்னாடி நட" என்று லாவண்யாவை அதட்ட, மெதுவாக நடந்தாள். சாரதி தான் பைக்கை எடுத்து பின்னால் இனியும் தள்ளி செல்ல முடியாதென்று, பைக்கை ஓட்டிக்கொண்டு  முன்னால் சென்றான்.
இலக்கியா வீட்டிற்கு வந்து, மறுநாள் மீண்டும் ஊருக்குப் திரும்புவதால், இன்று அங்கேயே தங்கியிருந்தார் அலமேலு.

வீட்டில் பெண்கள் பேசிக் கொண்டிருக்க, லாவண்யாவும் அங்கேயே இருந்தாள்.

அப்போது அலமேலு தன்னுடைய கவலையை இலக்கியாவிடம் மெதுவாகப் பகிர்ந்துகொண்டார்.

"இப்பதான் பெரியவளுக்குக் கல்யாணம் கட்டித் தந்திருக்கோம். இதுல சின்னவளைப் பார்த்து போட்டி போட்டு கேட்கிறாங்க.
கையில கொஞ்சம் பணம், நகைன்னு இருக்கு. ஆனா பெரியவளுக்கு ஏதாவது நல்லது, பொல்லதுன்னு நடந்தா நாமும் இருக்கணும். அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு செலவு பண்ண முடியாது. அதனால லாவண்யா படிப்பு முடியட்டும்னு நினைக்கறோம். இந்தா இலக்கியா.. இது லாவண்யா இங்க தங்கறதுக்கான செலவுக்கான பணம்." என்று அலமேலு தந்தார். முன்பும் புருஷோத்தமன் இங்கே லாவண்யாவை விட்டுவிட்டு சென்ற தருணம் பணத்தை தம்பி சுரேஷிடம் தந்துவிட்டே சென்றார். என்றைக்கும் மகள் யாருக்கும் சுமையாக இருக்க கூடாதே.

லாவண்யாவின் காதுகளில் அன்னை பேசிய பேச்சு தெளிவாக விழுந்தன.  ஏற்கனவே தாய் தந்தை இதை பற்றி விவாதித்து இருக்க, பெரிதுப்படுத்தாமல், அந்த இரவிலும் அவள் இஷிதாவோடு விளையாடி, சிரித்து, தன் மனதில் இருந்த பதற்றத்தை மறைத்தாள். ஆவுடையப்பனும் அதெல்லாம் கவனித்தபடி இருந்தார்.

மறுநாள் காலை. நீண்ட விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல லாவண்யா தயாரானாள்.

புத்தகப்பை தோளில், கையில் சிறிய கைப்பை. முடியை அழகாகச் சீவி பின்னியிருந்தாள். வீட்டைவிட்டு வெளியே வரும்போது ஒருமுறை தன் அறையைத் திரும்பிப் பார்த்தாள்.

அன்னையிடமும் சித்தியிடமும் கல்லூரிக்கு கிளம்பும்போது புறப்படுவதாக கூற, அலமேலு மகளை வாசல்வரை வந்து பார்த்தார்.

"போயிட்டு வா. நேரத்துக்கு சாப்பிடு. போன் பண்ணிக்கிட்டே இரு. நானும் கிளம்பிடுவேன். சித்தியிடம் நல்ல பெயரை எடு." என்றார்.

"சரி அம்மா."

"அங்கே போய் தேவியோட சேர்ந்து சுத்திட்டு படிப்பை மறந்துடாத."

"அம்மா...” என்று லாவண்யா முகம் சுளிக்க, அலமேலு சிரித்தார்.

"சரி சரி... போ." லாவண்யா நடக்கத் தொடங்கினாள்.

அவள் சில அடிகள் சென்றதும், அலமேலு வாசலில் நின்றபடியே மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். "அண்ணி அதெல்லாம் லாவண்யா நேரத்துக்கு போயிட்டு நல்லபடியா வந்துடுவா. அவளுக்கு இந்த ஊர் இப்ப பழகிடுச்சு." என்றார் சுரேஷ்.

"தெரியுதுப்பா... இருந்தாலும் மனசு கேட்கலை." என்று மகள் கண்ணுக்குத் தெரியாமல் போகும் வரை. அவருடைய முகத்தில் ஒரு தாயின் நிம்மதியும் இருந்தது.

அதே நேரத்தில்... தேவியும் வந்து சேர்ந்தாள். "ஹே வந்துட்டியா? எங்க மிஸ் பண்ணிடிடுவியோனு நினைச்சேன்" என்றாள்.

"அதெல்லாம் ஏழு மணி பஸ்ஸை தவற விடவே மாட்டேன்" என்று கூறிட, சாரதி டிக்கெட் தந்தபடி வந்தான்.

  "பஸ் பாஸ் தந்திருக்க மாட்டாங்க தானே? டிக்கெட் எடுங்க" என்று இருவரிடமும் கூற, லாவண்யாவோ மலர்ந்த புன்னகையோடு பணத்தை நீட்டினாள்.
  சாரதி கையில், லாவண்யா தந்த கைகடிகாரம் இருந்தது. "உனக்கு ரொம்ப அழகாயிருக்கு" என்று கையை வருட போனாள். 
  அவளை சுற்றி கூட்டமுள்ளதை உணர்த்தும் விதமாக விசிலை அடித்துவிட, முத்து அண்ணன் வண்டியை நிறுத்திவிட்டார்.

    இது எந்த நிறுத்தமும் இல்லாமல் போக, கூட்டமாக உள்ளதால் டிக்கெட் கொடுத்து முடிக்கும் வரை ஓரமாய் நிறுத்தி டிக்கெட் தந்து, மீண்டும் விசிலடித்து நின்றான்.‌ நிலைமையை சாதகமாக மாற்றிக் கொண்டான்.

  லாவண்யாவோ அவனை சிக்கலுக்குள் தள்ளுவதை எண்ணி, அமைதியாகிட, தேவியோ "என்ன பண்ணற லாவண்யா. அண்ணா இந்நேரம் தடுமாறிட்டார். நல்ல வேளை டிக்கெட் கொடுக்க நிறுத்தியதா நினைச்சிட்டாங்க." என்று கடிய, லாவண்யா முதல் நாளே மன்னிப்பு கேட்டும் விதமாக 'சாரி சாரி' என்று உரைத்தாள்.

சாரதியோ அவனது நடத்துநர் இருக்கையில் அமர்ந்தப்பின், 'இட்ஸ் ஓகே.' என்று மட்டும் போனில் குறுஞ்செய்தி அனுப்பினான். அதன்பின் கொஞ்ச நேரம் லாவண்யா அடக்கியே வாசித்திருந்தாள். இறங்கும் போது கூட, ஒரு சிறு புன்னகையை வீசி விடைப்பெற்றாள்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்


 
Posted : September 26, 2026 7:46 am
Kalidevi reacted
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Wow back to college. Laya u r too bold. Sarathy nee than da pavam. Very cute romnace sis. Very intresting sis.


 
Posted : September 26, 2026 8:17 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 31)

அது சரி, நினைப்புத்தான் புழைப்பை கெடுத்ததாம். ஒரு வீட்டுல வயசு பொண்ணுங்க இருந்தாலே, கல்யாண மார்கட்ல
அவங்கத்தான் பேச்சுப் பொருளாவே இருப்பாங்க. இதுல பெண்ணைப் பெத்தவங்க என்ன தான் உறுதியா இருந்தாலும்,
கட்டின புடைவையோட அனுப்பி வைச்சாக் கூட போதும்ன்னோ, இல்ல நகை நட்டு சீர்வரிசையை ரெண்டு வருசம் கழிச்சாவது செய்யுங்க, அப்படி இப்படின்னு நல்லாவே தூண்டில் போட்டு மயக்கிடுவாங்க இது தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களோட
வாய் சவாடல். இந்த மாதிரி பேச்சுல எங்க லாவண்யாவை லாக் பண்ணிடுவாங்களோன்னு கொஞ்சம் சஞ்சலமாத்தான் இருக்கு.

அடிப்பாவி மக்கா ! அவசரத்துல பக்கத்துல யாரு இருக்காங்க, இல்லைன்னு கூட கவனிக்காமல்
அவனோட கையைப் பிடிச்சு கடிகாரத்தை தடவ போறாள்..
ரொம்பத்தான் தில்லு இவளுக்கு.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : September 26, 2026 9:05 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Yemma konjam adakki vasi.. nee romba over ah pora


 
Posted : September 26, 2026 1:21 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Thatha lavanya ah va note pannuraru than nenaikiran silent ah yemma laya unnoda feelings ah control pannu ma ne excitement la idam ethu nu pakka ma unnoda love velipadutha tha ah 


 
Posted : September 26, 2026 3:12 pm
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

இந்த பொண்ணு ரொம்ப அவசரப்படுத்து


 
Posted : October 4, 2026 8:16 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super 


 
Posted : October 7, 2026 10:14 pm
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

one th pakama iruntha antha avasthai apadi thana irukum ipo pathum sariya pesika mudiyama iruka ekkam vera


 
Posted : October 21, 2026 5:05 pm

Scroll to Top