Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-48

8 Posts
8 Users
4 Reactions
60 Views
(@praveena-thangaraj)
Posts: 184
Member Admin
Topic starter
 
[#245]

அத்தியாயம்-48

இருபத்தி இரண்டு மணி நேர நீண்ட பயணம். 

பயணத்தின் ஆரம்பத்தில் ராஜாராம் காவ்யா அகிலன் மூன்று பேரும் ஒரே சீட்டில் அமர்ந்தனர்.

தந்தையோடு, கணவனோடு இரண்டு பக்கம் பேசிக் கொண்டிருந்த காவ்யா, விமானப் பணிப்பெண் பானங்களை கொண்டு வந்திருந்தார்.

"Sir... would you like some wine? Beer? Whiskey?" என்று கேட்டதும் அகிலன் மரியாதையாக, "No... No Thank you." என்று மறுத்துவிட்டான். அந்த பெண்மணியோ அகிலனை பார்த்து புன்னகைத்து பார்வையிட, காவ்யாவோ மெனுவைப் பார்த்தபடி,"Red wine." என்று கேட்டு வாங்கிக் கொண்டாள்.

அகிலன் லேசாக அடிக்கண்ணில் பார்வையிட, காவ்யா அதை கவனிக்க தவறினாள். ராஜாராம் மறுக்குமா விதமாக மகளை பார்த்து கூற நினைத்தார். காவ்யா அவரையும் பார்த்தால் தானே? 

கண்ணாடிக் கோப்பையை உதட்டருகே கொண்டு சென்று ஒரு சிறிய சிப் மட்டும் பருகினாள். ஒவ்வொரு சிப்பில் உதட்டை ஈரப்படுத்தி கொண்டாள். அதை அகிலன் ஓரக்கண்ணால் பார்த்தான்.

அந்த நிமிடமே எதுவும் பேசவில்லை. அவன் மனதுக்குள் மட்டும், 'இவளுக்கு இந்த பழக்கம் இருக்குமா.?' என்ற கேள்வி ஒரு நொடி எழுந்தது.

அடுத்த நொடியே அதை அவனே அடக்கிக் கொண்டான்.

மதுரை மாதிரி இடத்துல பிறந்து வளர்ந்து இருந்து இதை செய்தா யோசிக்கலாம். அமெரிக்காவுல பிறந்து வளர்ந்தவளுக்கு இதெல்லாம் பழக்கமிருந்தால் தான் என்ன செய்ய இயலும். இது அவ வாழ்க்கை... அவ வளர்ந்த சூழ்நிலை. நான் எதுக்கு இதைப் பற்றி யோசிக்கணும்?' என்று நினைத்தவன், தன் முன் வைக்கப்பட்டிருந்த உணவை அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தான்.

காவ்யாவும் அவன் மனதில் ஓடியதை அறியாமல், இயல்பாகவே உணவை முடித்தாள். ராஜாராம் தான் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்ததால், அகிலன் என்ன நினைப்பானோ என்று அஞ்சினார்.‌ இதே இனியன் என்றால் அவன் ஒருவிதமாக புரிந்துக் கொள்வானோ? என்று கூட நினைத்தார்.‌ மகளை மெதுவாக கையில் தட்டி, 'இது.. வேண்டாம்' என்று தடுக்க முனைந்தார். ஆனால் காவ்யா இதற்கு பிறகு கேட்க மாட்டாள் என்று அவரே அமைதியானார். 

எங்கே பக்கத்து பக்கத்தில் அமர்ந்து ஏதாவது அகிலன் செவிக்கு எட்டி, தவறாக போகுமென்ற அச்சம். 

பிறகு விமானம் அமெரிக்க மண்ணை மெதுவாகத் தொட்டது

ஒரு நாள் முழுவதும் நீண்ட பயணக் களைப்போடு அவர்கள் அமெரிக்க விமான நிலையத்தை அடைந்தனர்.

குடியுரிமைச் சோதனை, லக்கேஜை வாங்குதல் என எல்லா நடைமுறைகளும் முடிவடையவே சிறிது நேரம் ஆகிவிட்டது.

வெளியே வந்ததும் ராஜாராம் அவருக்கான காரை வரவழைத்திருந்தார்.

"வாங்க மாப்பிள்ளை." என்று புன்னகையோடு அழைத்தார். லக்கேஜ் அனைத்தும் காரில் ஏற்றப்பட்டன.

நகரத்தின் அகன்ற சாலைகளையும், உயரமான கட்டிடங்களையும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான் அகிலன்.

அவன் வெளிநாட்டை காணாதவன் அல்ல. அமெரிக்க நாடு புதிது. புதிய மனிதர்கள் காவ்யாவுடன் புதிய வாழ்க்கை, அனைத்துமே அவனுக்குப் புதிதாக இருந்தது.

சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு கார் ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. இரும்பு கேட் தானாகத் திறந்தது.

பசுமையாக வெட்டிய புல்வெளி, இருபுறமும் மலர்த் தோட்டம்., நடுவே கம்பீரமாக நின்றிருந்த இரு தள வீடு.

அதைப் பார்த்த அகிலன் ஒரு கணம் அமைதியாக நின்றான். தன்னிரு கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தபடி மெதுவாக வீட்டை நோக்கி நடந்தான்.

அகிலனுக்குள் மட்டும் ஒரு எண்ணம் தோன்றியது. 'இது இனியன் வாழ வேண்டிய இடம். கடவுளோட ஆட்டத்துல அவன் மதுராவுக்கு கணவனா மாறிட்டான்

இன்று நான் இங்க காவ்யாவோட நிக்கறேன்.' அந்த எண்ணமே அவனுக்குள் ஏதோ ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. காவ்யா தான் பேசி தன்னை தலையாட்ட வைத்ததை நினைவுப்படுத்தினான். 

'சரியான வாய் ஜாலம்' என்று எண்ணினான்.

ராஜாராம் அகிலன்‌அருகே வந்து, "வாங்க மாப்பிள்ளை... வீட்டை சுத்தி பாருங்க." என்றார்.

வீட்டை முழுவதுமாகச் சுற்றிக் காட்டிக் கொண்டே, "இதெல்லாம் ஜேனட் வழியா கிடைச்ச சொத்து. அவ போனதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாத்தி, இப்ப இருக்கற மாதிரி பெருசுப்படுத்திட்டேன்." என்று கூறினார்.

சிறிது நேரம் அமைதியாக நடந்தவர், "மத்தபடி நான் பெரிய பணக்காரனெல்லாம் இல்ல மாப்பிள்ளை. நானும் இந்த நாட்டுக்கு வேலைக்கு வந்தவன் தான். வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி... இப்ப இந்த நிலை." என்று எளிமையாகச் சொன்னார். 

அகிலன் மரியாதையுடன் தலையசைத்தான். "அப்படின்னாலும் அதெல்லாம் உங்க உழைப்பு மாமா." என்றான்.

வீட்டை பராமரிக்க ஒரே ஒரு பணியாளர் இருந்ததால், வீடு முழுவதும் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. ஒவ்வொரு பொருளும் அதற்கான இடத்தில் அழகாக அடுக்கப்பட்டிருந்தது.

"முதல்ல எல்லாரும் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. மாலைக்கு கோர்ட், சூட் ரெடியா இருக்கான்னு டிரையல் பார்க்கணும். நாளை ரிசப்ஷனுக்கு நேர்ல இன்வைட் பண்ண வேண்டிய சில பேர் இருக்காங்க. அதையும் பார்த்துட்டு வந்திடலாம்." என்று ராஜாராம் கூறிவிட்டு மேலே சென்றார்.

அகிலன் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான்.

பெரிய ஜன்னல் வெளியே பனிபோல வெண்மேகங்கள் அமைதியான சூழல். அறைக்குள் யாரும் இல்லை. மெதுவாக அறை முழுவதும் நடந்தான். சூட்கேஸை ஒரு மூலையில் வைத்துவிட்டு ஜன்னலருகே நின்றான்.

அத்தனை பெரிய வீட்டிலும் அவனுக்கு மட்டும் ஏதோ வெறுமையாக இருந்தது.

அதே நேரத்தில் வீட்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை ஓடிக் கொண்டிருந்தாள் காவ்யா. அவளது குரல் மட்டும் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. அகிலன் கதவின் அருகே நின்றபடி அவளைப் பார்த்தான்.

'மதுரையில அமைதியா இருந்த பொண்ணு... இங்க வந்ததும் சிட்டுக்குருவி மாதிரி பறக்கிறாளே.' என்று மனதுக்குள் நினைத்து சிரித்தான்.

முதல் நாளே இப்படி பரபரப்பாக இருக்கிறாள். இன்னும் பத்து நாள் எப்படி சமாளிக்கப் போறாளோ... இல்லை... நான்தான் எப்படி சமாளிக்கப் போறேனோ.? என்று நினைத்தவன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டான்.

---

மறுபக்கம் மதுரையில் இரவு முழுவதும் வீடு அமைதியாக இருந்தது. திடீரென்று விழித்துக் கொண்டாள் மதுரா.

அறைக்குள் மங்கலான மஞ்சள் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில், ஜன்னல் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த இனியனைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

அவன் இன்னும் தூங்கவே இல்லை. கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருந்தன. முடி கலைந்திருந்தது. ஒரே நிலையில் அமர்ந்து வெறித்தபடி வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

மதுரா மெதுவாக எழுந்து அமர்ந்தாள். "ஏதாவது... சாப்பிடறீங்களா?" இனியன் மறுப்பாய் தலையசைத்தான்."வேண்டாம்." என்றான். "இல்லை.. தண்ணி கொண்டு வரவா?" மீண்டும் மறுப்பாகத் தலையசைத்தான். அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே மீண்டும் அமைதி மட்டுமே.

இந்த சில நாட்களில்... அவன் எப்போது சாப்பிடுகிறான். எப்போது தூங்குகிறான். எதுவுமே மதுராவுக்குத் தெரியவில்லை. அவன் கண்களில் இருந்த சிவப்பைப் பார்த்தவளுக்கு முதல் முறையாக லேசான பயம் தோன்றியது.

எதுவும் பேசாமல் மீண்டும் மெதுவாகப் படுத்துக் கொண்டாள். ஏதாவது கேட்டு இனியன் வெடிக்கும் விதமாக பேசினாள். இந்த இரவில் அவளால் வாதம் செய்ய முடியாது. மதுரா படுத்துக் கொண்டாள். இருவரில் யாருக்குமே அந்த இரவு தூக்கம் வரவில்லை. இதில் வேல்விழியோ 'அவன் சாப்பிடறானா இல்லையானு எனக்கும் தெரியலை மதுரா. சாப்பிட கூப்பிடறப்ப வரமாட்டேங்கறான். ஏதோ பிசினஸாவது ஆரம்பிக்கணும்னு வீட்ல இல்லாம கிளம்பிடறான். இனியனை பார்க்க கஷ்டமா இருக்கும்மா. அவன் மனதளவில ரொம்ப உடைஞ்சிருக்கான்.‌ என்னடா அத்தை அவங்க பையனுக்காக பேசறாங்க. நம்ம நிலைமை தெரியலையானு யோசிக்காத. நான் இரண்டு பேருக்காகவும் தான் கவலைப்படறேன்.‌ உங்க மாமா வேண்டுமின்னா அகிலனை கட்டிக்க கூடாதுனும் தங்கை பொண்ணை கட்டி வச்சிட்டு, வெளிநாட்டு பொண்ணு வேண்டாம்னு நினைக்கறது அவரு.‌ நான் எந்த மருமவ வந்தாலும் இனியன் சந்தோஷமா இருக்கணும். வர்றவளும் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறவ. 

தயவு செய்து இன்னொரு முறை வாரிசை அழிக்கணும்னு நினைக்காத. 

ஏற்கனவே மீனாட்சி உண்டாயிருந்தப்ப ஒரு‌ உசுரு உங்க மாமனார் மூலமா போச்சு. அந்த பாவத்தையே நான் சுமந்துட்டு இருக்கேன்.‌ இப்ப நீயும் நம்ம குடும்பத்து வாரிசை அழிச்சிட்டு வந்து நிற்கவும், உங்க மாமா நானும் அதிர்ச்சில இருக்கோம்.' என்றார்.

ஏனோ நினைக்க நினைக்க நெஞ்சடைக்கவும் மார்பை பிடித்தவள், தண்ணீர் குடிக்க எழ முற்பட்டாள். ஆனால் அங்கே தண்ணீர் பாட்டலுடன் இனியன் நின்றிருந்தான். 

"துக்கம் தொண்டையை அடைக்க, தூக்கம் வராது. தண்ணியை குடிச்சு நிலைமை சமாளிக்க ட்ரை பண்ணலாம்.'' என்று நீட்டினான்.‌

மதுரா அவனை ஏறிட்டு வாங்கி பருகினாள். தண்ணீர் பாட்டிலை மெத்தை அருகேயிருந்த மேஜையில் வைத்துவிட்டு, திரும்ப இனியன் அவளிடையை கட்டிக்கொண்டு படுத்தான். 

அவன் கரத்தை விடுவித்து தன்னை பிரித்திட முனைய மதுரா நினைக்கவில்லை. ஏதேனும் கையை பிரித்தெடுக்க முயன்று அதற்கும் கோபப்படுவானோ அல்லது வீட்டிற்கு வந்த அன்று பேசியது போல கண்ணீர் விட்டு பேசுவானோ என்று மௌனமானாள். 

இனியன் கண்ணீர் விட்டு அழுததெல்லாம் இதுவரை கண்டதில்லை. பெரிய மச்சானா அதெல்லாம் ஓவரா ஆட்டம் ஆடும், சீன் போடும், ஜம்பமா பேசும், கண்ணு கலங்காது, கலங்கவும் விடாம பெரிய மாமா வீட்ல பார்த்துப்பாங்க. வெளிநாட்ல படிச்சதால கேட்டது அடுத்த செகண்ட் வீட்டுக்கு வந்துடும்.' இப்படி தான் அறிந்து வைத்திருந்தாள். வேல்விழி கூட 'இனியன் கலங்கி நின்று நான் பார்த்ததில்லை மதுரா. ஆனா கலங்கி நின்றுட்டான். உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்த அன்னிக்கு பிள்ளை கலங்கி நின்னுட்டான். எனக்கென்னவோ குழந்தைக்காக கலங்கியது போல தெரியலை. உனக்காக கலங்கி நின்றது போல தான் தெரிந்தது.‌' என்றல்லாம் கூறினார். 

அதெல்லாம் பொய்யாக இருக்குமென நினைத்திருக்க, இனியன் பேசியது எல்லாம் கேட்டு அசைவற்று நின்றவளுக்கு இதெப்படி சாத்தியம் என்று கூட ஆச்சரியம். 

மெதுவாக தலை கோத முயன்று தோற்றாள். அவ்வளவு எளிதில் காயங்கள் மறுத்து போகவும் மதுராவுக்கு முடியவில்லை. 

அப்படியே உறங்கிவிட முடியாது கண்ணை இறுக மூடிக் கொண்டாள். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : July 29, 2026 11:08 am
(@kothaihari)
Posts: 60
Trusted Member
 

சூப்பர். .. இனியன் திருந்தி மதுரா கூட சந்தோசமா இருக்கட்டும். ... யாருக்கு யாரு என்று விதி முடிவுப் பண்ணட்டும்


 
Posted : July 29, 2026 11:17 am
(@guna-sundari)
Posts: 66
Trusted Member
 

Akilan enjoy the new place. Dont think too much. Eniyan has realised his mistake. Hereafter madura life will go smooth. Very intresting sis 


 
Posted : July 29, 2026 12:24 pm
(@dharsinipriya)
Posts: 65
Trusted Member
 

Super sis nice epi 👍 👌 😍 iniyan inimelavudhu thirundhi madura kooda nallabadiya vaazdha sari🙄 enga enna Akilan ku vandha sodhanai wine k eppdi adhirchi aana eppudi pa ennum enenna Panna poralo😂


 
Posted : July 29, 2026 12:33 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 72
Trusted Member
 

akila romba yosikatha athu palagina edam apadi but wine thana , puthu edam verumaiya irukum than sariyana aal kuda iruntha athu sorgama irukum ipo intha nimisham nee sorgama ninaikalanalum anniyama ninaikatha kavya unakanava apadi ninachiko. iniyan konjam thiruntha try panran kandipa madhura va purinji life start panuvanga neeum athe mari start pannu


 
Posted : July 29, 2026 3:05 pm
(@crvs2797)
Posts: 111
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 48)

அய்யய்யோ..! ரெட் வைனா...?
அகிலன் பயந்துட்டானோ..? அதான் வாயே திறக்கலையோ ?

மாற்றம் ஒன்றே மாறாதது.
பரவாயில்லையே, இம்புட்டு சீக்கிரம் இனியனுக்குள்ள மாற்றம் வந்துடுச்சே. அதாவது ஏதாவது ஒண்ணை பெருசா இழந்தாத்தான்
இழப்போட அருமையே தெரியும் போல. இப்பவாவது பொண்டாட்டியோட அருமை புரிஞ்சா சரி.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 29, 2026 3:20 pm
(@subhakumar85)
Posts: 52
Trusted Member
 

Dei ethukke malappa eruntha yepdi.. ennum 10 naal erukku. Iniyanukul maatram vanthal.sari


 
Posted : July 29, 2026 5:29 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 59
Trusted Member
 

Go with the flow apadi na ra thu pola life ah athu pokku la vazha aarambichi irukaga anga Akilan um.inga iniyan um 


 
Posted : July 29, 2026 5:48 pm

Scroll to Top