Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 31

1 Posts
1 Users
1 Reactions
33 Views
(@arulmozhi-manavalan)
Posts: 48
Estimable Member
Topic starter
 
[#267]

அத்தியாயம் 31

தேவ்வுடன் வெளியே சென்று வந்த பிறகு அவனுடன் எங்கும் செல்வதை சிறிதும் விரும்பவில்லை சிவன்யா. அது மட்டும் அல்லாமல் அப்பா ஃபோன் பண்ணி சொன்னார். அதனால் தான் உன்னை கூட்டிக்கொண்டு சென்றேன் என்று சொல்லிய பிறகு, ஊருக்கு ஃபோன் பண்ணும் பொழுதெல்லாம் கணவன் மனைவி சந்தோஷமாக இருப்பது போலயே காட்டிக் கொண்டாள்.  

 

நாட்கள் கடந்தது, சிவன்யாவின் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 

சிவன்யா இங்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஓடி விட்டது ஜோ தனது வேலையை விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு செல்வதாக முடிவு எடுத்து அதற்கான வேலைகளை செய்ய இது கொண்டு இருந்தான். 

 

அதை அவளுக்கு தெரியப்படுத்தியது கூட உன்னிகிருஷ்ணன் தான். ஜோவும் தேவ்வும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்க, உன்னிகிருஷ்ணன் தான் அவளை அருகில் உள்ள இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று பழக்கினான். தன் வேலைகளை தானே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டாள் சிவன்யா. இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு தேவையா? என்ற எண்ணங்களும் அவளுக்குள் அடிக்கடி வரத்தான் செய்தது. 

 

வழக்கமாக காலையில் வேலைக்குச் சென்று விட்டால் சாயங்காலம் ஆறு ஏழு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவான். இதுவரை அவனாக ஃபோன் செய்து தாமதமாகவதையோ சீக்கிரம் வருவதையோ, என்ன வேண்டும் என்றோ! எதுவும் கேட்டது கிடையாது. 

 

அவர்கள் வேலைக்குச் சென்ற பிறகு தாமதமாக எழுந்து வந்து வேலையை தனக்குரிய வேலைகளை செய்து கொள்வாள் சிவன்யா. அன்றும் அது போல் தாமதமாகவே எழுந்து தன் வேலைகளை செய்ய தொடங்கினாள். 

 

காலை உணவு முடித்ததும் அம்மாவிற்கு பேசினாள். பின்னர் நளினிக்கும் ஃபோன் செய்து விசாரித்துவிட்டு, மதியம் தனக்கு ஒருத்திக்கு தான் சமைக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, அவளது போன் அலறியது. 

 

உன்னிகிருஷ்ணன் இந்நேரம் ஃபோன் செய்யும் பழக்கம் இல்லை. திடீரென்று அவன் அவளுக்கு ஃபோன் செய்ய குழப்பமாகவே எடுத்து "என்னண்ணா?" என்றாள் பயத்துடன். 

 

"தேவ்வை கைது செய்து விட்டார்கள்ம்மா" என்றான் அவன் மொட்டையாக. 

 

"என்னண்ணா சொல்றீங்க?" என்று சொல்லி, "எனக்கு புரியவில்லை, என்ன சொல்றீங்க? கைது செய்து விட்டார்களா? எதற்கு?" என்றாள் படபடப்பாக. 

 

"ஏதோ பணம் கையாடல் நடந்து உள்ளது. அதில் சந்தேகத்தின் பேரில் இவனது பெயரும் அடிபடுகிறது" என்றான் கலக்கமாக. 

 

'அவர் அப்படி செய்யக் கூடியவர் இல்லை' என்று நினைத்து"இல்லை அண்ணா, அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டார்" என்றாள். 

 

"நமக்குத் தெரியும், அவர்களுக்கு சாட்சி தானே வேண்டும்" என்று.  

 

"இப்பொழுது என்ன செய்ய அண்ணா?"

 

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை, ஐம்பதாயிரம் திராம்" என்கிறார்கள். அப்படியெல்லாம் எடுப்பவன் அல்ல தேவ். வேறு யாரோ செய்த தவறுக்கு தேவ் மாட்டிக் கொண்டான் என்று தான் நினைக்கிறேன். உடனே அவ்வளவு பணத்தை கொடுத்து விட்டால் அவனை விட்டு விடுவார்கள் என்று தான் தோன்றுகிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லைம்மா, நீ உடனே இங்கு வருகிறாயா?" என்றான்.

 

"நானா? தனியாகவா?" என்றாள் பயந்தபடி. 

 

"ஒன்றும் பயமில்லம்மா, நான் அன்று காண்பித்த பேருந்து நிலையத்தில் வந்து, 309 ஆவது பஸ் ஏறு. அல்குஷ் என்ற இடத்தில் இறங்கு, நான் அங்கு நிற்கிறேன். ஏறியதும் எனக்கு ஃபோன் செய்" என்று சொல்லி வைத்தான். 

 

தனியாக துபாய்க்கா என்ற பயம் இருந்தாலும், கணவன் கைது செய்யப்பட்ட பிறகு இப்படி தயங்க கூடாது என்று உடனே வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினாள். முதல் முறை தேவ்வுடன் துபாய்க்கு சென்றதோடு சரி. அதன் பிறகு அவள் அவனுடன் எங்குமே செல்லவில்லை. 

 

அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் டே டு டே, நெஸ்டோ போன்ற கடைகளிளேயே தேவையானவர்களை வாங்கிக் கொள்வாள். முதலில் அக்கடைகளை காண்பித்தது உன்னிகிருஷ்ணன் தான். ஓரிரு முறை லூலூவிற்கும் அழைத்துச் சென்றான் உன்னிகிருஷ்ணன். 

 

அப்பொழுதெல்லாம் அவர்கள் இருக்கும் ரோலா ஏரியாவில் இருந்து அவன் வேலைக்குச் செல்லும் பொழுது என்றாவது பஸ்ஸில் செல்வேன் இங்குதான் வந்து ஏற வேண்டும் என்று பேருந்து நிறுத்தத்தையும் காண்பித்திருக்கிறான். 

 

அதுபோல அங்கு வந்து நின்ற சிவன்யா 309 எண் கொண்ட பேருந்துக்காக காத்திருக்க, அவளை அதிகம் காத்திருக்காமல் ஐந்து நிமிடத்திலேயே வந்து நின்றது பேருந்து. அதில் ஏறியதும் வாகன நெரிசலுக்கு இடையே பேருந்து நகன்றது. 

 

அமர்ந்ததும் உன்னிகிருஷ்ணனுக்கு ஃபோன் செய்து தான் பேருந்து ஏறி விட்டதை தெரிவித்தாள். அவன் நேரத்தை பார்த்துவிட்டு, வரும் நேரத்தையும் சொல்லி நான் பேருந்து நிலையத்திலேயே நிற்பேன், வந்துவிடு" என்று சொல்லி வைத்தான். 

 

சொன்னது போலவே சரியான நேரத்திற்கு பேருந்தும் அங்கு சென்று நிற்க, அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அலுவலகத்திற்குச் சென்றான் உன்னிகிருஷ்ணன். 

 

அவர்கள் உள்ளே நுழையும் நேரம் காவலர்கள் தேவ்வை அழைத்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. இரண்டு காவலருக்கு இடையே நடந்து வந்த தேவ்வை கண்டு அவள் கண்கள் கலங்கியது. வேகமாக அவன் அருகில் வந்து பேச போக, ஒரு காவலர் குறுக்கே வந்து நின்று தடுத்தார். 

 

"சார், அவர் என் புருஷன் தான். அவர் எந்த தப்பும் செய்திருக்க மாட்டார். அவரை கைது செய்யாதீர்கள்" என்று படபடக்க தமிழில் பேசினாள். 

 

அதற்குள் உன்னிகிருஷ்ணன் வந்து அவளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு அவள் கூறியதை, அங்கு நின்று இருந்த அவர்கள் முதலாளியிடமும் கூற, 

அவரோ "நான் கம்ப்ளைன்ட் கொடுத்தது கொடுத்தது தான். அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும்" என்று சொல்லிவிட்டார். 

 

தேவ்வை அழைத்துக் கொண்டு காவலர்களும் சென்று விட்டனர். உன்னிகிருஷ்ணன் செய்வதறியாது சிவன்யாவை பார்த்தான். 

 

"நான் உங்கள் முதலாளி கிட்ட பேசுறேண்ணா. என்னை அவரிடம் கூட்டிட்டு போங்க" என்றாள். 

 

அவனும் அவளை அழைத்துச் சென்று அவரைப் பார்ப்பதற்கு அனுமதி கேட்டு நின்று இருந்தான். 

 துபாயில் இருக்கும் பெயர்பெற்ற கட்டுமான துறையில்தான் தேவ் வேலை பார்த்தான். அதன் முதலாளி ஒரு அரேபியர் மற்றும் இந்தியர்ஒருவரும் தான். 

 

முதலில் அவளை சந்திப்பதற்கு மறுத்தார். வெகு நேரம் காத்திருந்த பிறகு அவளை உள்ளே அழைத்துச் சென்றான் உன்னி கிருஷ்ணன். 

 

"நிச்சயம் என் கணவர் திருடியிருக்க மாட்டார் சார். நீங்கள் கொஞ்சம் கருணை செய்யுங்கள், உண்மையில் யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள்" என்று அவரிடம் மன்றாடினாள் சிவன்யா. 

 

"நாங்கள் எல்லாம் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கிருந்து எங்களிடம் பேசி வாதிடாமல் உங்கள் கணவரை எப்படி வெளியே எடுப்பது என்று பாருங்கள். அவரிடம் சொல்லி உண்மையை ஒத்துக் கொள்ள சொல்லுங்கள்" என்று அவளை வெளியே போகும்படி கூறினான்

 

சிவன்யா எவ்வளவோ கேட்டும் அவர் சிறிது கூட அவளின் பால் இறங்கவே இல்லை. சிவன்யாக்கு என்ன செய்வது என்றும் ஒன்றும் புரியவில்லை. இப்படியே அன்றைய நாள் ஓட சாயங்காலம் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் உன்னி கிருஷ்ணன். 

 

ஜோ தன் அமெரிக்கா கிளம்பும் வேலையில் பிஸியாக இருப்பதால் தேவ்வற்கு நடந்தது இதுவரை தெரியவில்லை. சோகமாக வீட்டிற்கு வரும் சிவன்யா மற்றும் உன்னிகிருஷ்ணன் குழப்பமாக பார்த்து, உன்னிகிருஷ்ணனிடம் "என்ன ஆயிற்று? நான் தேவ்விருக்கு ஃபோன் செய்து கொண்டே இருக்கிறேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது" என்று கேட்டுவிட்டு சிவன்யாவிடம் நீங்கள் அவனுக்கு ஃபோன் செய்தீர்களா?" என்று கேட்டான்.

 

சிவன்யா கலக்கமாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள். உன்னிகிருஷ்ணன் ஜோவிற்கு நடந்ததை கூற, அவன் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்குச் செல்வதால் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாதே என்று வருந்தினான். 

 

மேலும் சிலருக்கும் ஃபோன் செய்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விசாரித்து அதை உன்னிகிருஷ்ணனிடம் கூறினான். 

"தேவ் அவர்கள் முதலாளியான ஷேக் மிகவும் நல்லவர் என்று சொல்லி இருக்கிறான். அவரிடம் நடந்ததை கூறி தேவ்விற்கு இதில் சம்பந்தமில்லை என்று தெரியப்படுத்தி விட்டால் போதும், அவனை விடுதலை செய்து விடுவார்கள்" என்றும் தெரிவித்தான்.  

 

அவன் கூறியதும் அவர்களுக்கு உதவியாக இருக்க, "நாளை காலை நான் உங்களுடனே அலுவலகத்திற்கு வருகிறேன் அண்ணா" என்று உறுதியாக கூறினாள் சிவன்யா. 

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..


 
Posted : August 5, 2026 8:22 pm
Kalidevi reacted

Scroll to Top