Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-45

8 Posts
8 Users
1 Reactions
54 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#391]

அத்தியாயம்-45

   ஆவுடையப்பனின் இறப்புக்கு வந்து, லாவண்யா இலக்கியா வீட்டிலேயே தங்கிவிட்டாள். 

    முன்பு போல இங்கிருந்தபடி தான் கல்லூரிக்கு கிளம்ப, பாதி உடல்நிலையை அதுவாகவே சரியானது. 

  அதுவும் கொசுக்கடியின்றி, ஆவுடையப்பனும் இல்லாமல் நிம்மதியாக உறங்க, லாவண்யாவுக்கு ஒரிரு நாளிலேயே வாந்தி மட்டுப்பட்டது. 

  சுரேஷ் கூட லாவண்யாவோடு மகள் இஷிதா சென்று உறங்கும் நேரம், "எனக்கு இஷிதா எப்படியோ அப்படி தான்மா நீ. அவரை வச்சி என்னை முடிவுப் பண்ணிடாத." என்று கூறினார். 

"அப்படி நினைக்க மாட்டேன் சித்தப்பா" என்று லாவண்யாவும் கூறினாள்.

  இதில் சாரதி போகும் போதும் வரும் போதும் ஜூஸ் பழங்கள் என்று வாங்கி வந்து வைத்துவிட்டு செல்ல, இலக்கியாவோ "என்னப்பா... வரப்போற பொண்டாட்டிக்கு பலமான கவனிப்போ" என்று கேலி கூட செய்தார். 

"அதில்லை அத்த... நீங்களே பார்த்திங்களே.. எதையும் சாப்பிடாம அவாய்ட் பண்ணறா. பழம்னா கஷ்டப்பட்டு சாப்பிடறா. அதுவும் நான் வாங்கினா கொஞ்சம் வேஸ்ட் பண்ணாம இருக்கா." என்றவன், "இது என் சின்ன வாலுக்கு" என்று சாக்லேட்டை இஷிதாவுக்கு தந்தான். 

  "மாமா... என்கிட்ட தாங்க" என்று இஷிதா ஓடிவந்து வாங்க, சாரதி மென்புன்னகையோடு விடைப்பெற்றான். 

லாவண்யா தான் காலையிலேயே கல்லூரிக்கு சென்றிருந்தாள்‌. இஷிதா இதோ ஸ்கூலுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். 

  சாரதி நிதானமாக அவனது வீட்டுக்கு சைக்கிளில் சென்றான். 

  அடிக்கடி மனதில் வேறு வேறு சாதியாக இருந்தால் இந்நேரம் லாவண்யாவுக்கு யாருடனாவது திருமணம் நடந்திருக்குமோ என்று கூட யோசித்தான். அதை அன்னையிடம் தெரிவித்தான்.

  காஞ்சனா தான் 'ஏன்டா... உனக்கு என்ன? நீ வேற சாதி அவ வேற சாதினு இருந்து, பெரிய சண்டை சச்சரவு எல்லாம் நடத்தி, பிறகு சேரணும்னு ஆசையா... ஏன் ஒரு காதல் சண்டையில்லாம சேரக்கூடாதா?' என்று பேச, சாரதிக்கு மாமனார் மாமியாரை நினைத்து பார்த்தான். 

  லாவண்யா அடம் பிடித்து அவர்கள் போராடி தனக்கு அவளை கட்டி கொடுத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்து சிரிப்பான். 

  அடியெல்லாம் வாங்கி நொந்து நூடுல்ஸாகி லாவண்யாவின் கரம் பிடிக்கும் தருணம் வராமலே போனதே என்று லாவண்யாவிடமே கூறினான். 

"சாரதி... நானே அப்பாடா.. எந்த வில்லங்கமும் இல்லாம காதல் கைக்கூடப்போகுதேனு சந்தோஷமா இருக்கேன். நீ அடிவாங்கி தர்றதில்லையே இருக்க. அப்பா அம்மா அத்தையிடம் நல்லபடியா பேசி, படிப்பு முடியவும் கல்யாண பேச்சு பேசலாம்னு சொல்லிட்டு போகவும் நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா?" என்று சிணுங்குவாள். 

  இப்படியாக ஷிப்ட் சென்று முடிக்க, முத்து அண்ணாவோ தனியாக சிரித்த சாரதியிடம், "ஏம்பா சாரதி காதலிக்கறேன்னு ஒரு வார்த்தை சொல்லாம மறைச்சிட்ட. எப்ப தான் கல்யாண சாப்பாடு போடப் போற?" என்பார். 

அவனோ "அவ படிப்பு முடியட்டும் அண்ணா... கல்யாண சாப்பாடு போட்டுடுறேன்." என்பான்.

இவனே இப்படியென்றால் அங்கே லாவண்யா டெங்கு வந்து பழமாய் சாப்பிட்டு, சாரதியை தன் தாய் தந்தைக்கு பிடித்துள்ளதென்று தெரிந்தப்பின், கையில் பிடிக்க முடியாமல் நின்றாள். சொல்லப்போனால் ஒரே வாரத்தில் முகத்தில் ஏகப்பட்ட தெளிவும் மலர்ச்சியுமாக இருந்தாள்.

அதுவும் தேவியோடு பயணம் என்று மீண்டும் வர, பேசி பேசியே அறுத்து தள்ளினாள். பேருந்தில் மழையில் ரசித்தபடி, கையை ஆட்டி ஆட்டி, ரசித்து கதை அளப்பாள்.

  "அம்மாடி.... பேச்சை கொஞ்சம் குறை டி" என்று தேவியே கூறும் அளவிற்கு.

    ஆவுடையப்பனுக்கு  காரியம் செய்யும் நாளும் வந்தது. இம்முறை புருஷோத்தமன் அலமேலு வந்தவர்கள், சாரதியிடம் மாப்பிள்ளை என்ற ரீதியிலே பேசவும் வந்தார்கள். 

  படிப்பு முடியவும் லாவண்யாவை மணந்துக் கொள்வதாக அவனும், அதுக்குள்ள பெரியவளுக்கு பேறுகாலம் பார்த்துடுவோம் என்று இவர்களும் பேசிக் கொண்டார்கள்.

    சாரதி சுவரோடு சுவராக நின்று அன்னையும் லாவண்யா பெற்றவர்களும் பேசிக்கொள்ள, கைகட்டி வேடிக்கை பார்த்தான். 

   எல்லாம் சுமுகமான முறையில் சென்றது. 

   சாரதியும் கூட புட்பால் பிளேயராக இருந்த சமயத்தில் கோச் டிரைனர் வந்து, "நான் ஒரு புட்பால் சென்டர் நடத்தறேன் சாரதி. ஸ்கூல் பசங்களுக்கு நீ டிரையினிங் தர்றியா. பிளேயரா தான் முடியாது. என்னை மாதிரி கோச்சா மாறலாமே. பார்ட் டைமா வந்து சொல்லிக் கொடு. 

  மார்னிங் ஷிப்ட்ல வேலை இருந்தா ஈவினிங் கிளாஸ் சொல்லி தா. ஆப்டர்னூன் ஷிப்னா மார்னிங் கிளாஸ் எடு. எனக்கு நீ இந்த துறையில எதுலையாவது கால் பதிக்கணும். இது கோச்சாக மாற கோர்ஸ் முடிக்கணும்" என்று விலாசம் தந்து கோரிக்கை வைத்தார். 

முதலில் மறுத்த சாரதியோ, பின்னர் காஞ்சனாவின் அறிவுரையில், "போயேன்டா. நாளைக்கு லாவண்யாவுக்கும் உனக்கும் கல்யாணமாகறப்ப, பொறுப்பு கூடும். உனக்குனு குழந்தை குட்டினு வரும். செலவெல்லாம் எகுறும். அந்த கோச்சும் உன்னை இதுல சேர்க்க ஆசைப்படறார்." என்று புத்திமதி கூற, "அந்த கோச் அப்பா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப என்னை விளையாட அழைச்சிட்டு போனார்ல அந்த கில்ட் பீலிங்ல கூப்பிடறார்மா" என்று மறுத்தான். 

"சரிடா.. ஏதோ ஒன்னு. ஒன்னுக்கு இரண்டு வருமானம் பார்க்கறதுல என்ன தப்பு." என்றார்.

"ஏன் எனக்கு தான் தைக்கவும் தெரியுமே. பேசாம சாரதி டையிலரிங் ஷாப் இவ்விடம் ஜாக்கெட் பிளவுஸ் தைச்சு தரப்படும்னு போடு போடேன்" என்று கத்தினான். 

   காஞ்சனாவோ நிதானமாக "எல்லா விஷயமும் ஈஸியா கிடைச்சிட்டா அதோட அருமை தெரியாதுனு சொல்வாங்க. உனக்கு உன் காதல் ஈஸியா கிடைக்குதுல்ல... இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ" என்று முறுக்கி கொண்டார். 

  சாரதி கோபத்துடன் அங்கும் இங்கும் உலாவினான். 

  புருஷோத்தமன் மாமா ஏதாவது சொல்லிட்டு போனாரா? இல்லை இந்த அலமேலு அத்தை ஏதாவது எதிர்பார்க்கறாங்களா? கண்டெக்டர் வேலைக்கு என்ன குறைச்சல் கண்டாங்களாம்.' என்று முகம் தூக்கி வைத்து திரிந்தான். 

  ஒரு வாரம் அப்படி தான் எரிச்சலோடு நகர, புட்பால் விளையாட கிரவுண்டுக்கு வந்தான். 

  எல்லாம் பிளேயராக இருக்க, தான் மட்டும் சும்மா வந்து பார்வையிடவும் கோச் அவர்களோடு விளையாட விட்டார். 

  அதெல்லாம் பழகியது மறக்காமல் விளையாடினான். 

  விளையாடவும் அவனுக்கே ஆசை பிறந்தது. 

  யோசித்து சொல்வதாக கூறினான். அதற்கான கோர்ஸில் சேருவதற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கோச் ஏகாம்பரம் நீட்ட, அதில் பூர்த்தி செய்தான். 

  எல்லாம் நல்லபடியாக முடிய அதற்கான வேலை விஷயம் கோர்ஸில் சேர ஆரம்பித்தான். 

ஒரு புறம் லாவண்யா படிப்பு, மறுபுறம் தனக்கான கோச்சிங் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கான பயிற்சி சான்றிதழ் பெற, அதற்கான வகுப்பு என்று சாரதி நேரம் கரைந்தது. 

  அன்று லாவண்யா தேவி பேசிக்கொண்டு வர, அவளது மடியில் ஒரு ஆஃபர் லெட்டரை வைத்துவிட்டு அவளது பேச்சை தடைப்படும் விதமாக கையை அசைத்தான் பவன். 

லாவண்யா பேயறைந்தது போல நிற்க, தேவியோ "இவன் அவன்ல?" என்று கேட்க, "ஹாய் லாவண்யா. எனக்கு வேலை கிடைச்சிடுச்சு" என்று ஐடீ பீல்டில் பெயர் போன கம்பெனியின் பெயரை உச்சரித்து, மாத சம்பளத்தை கூறினான். 

   "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்டு நின்றான்.‌

லாவண்யாவோ எச்சி கூட்டி விழுங்கியவள், "நான்.. நான் வேறொருத்தரை காதலிக்கறேன்" என்றாள். 

  "யாரு அந்த கண்டெக்டரையா?" என்று பவன் இழிவாக ஆரம்பிக்க, "இங்க பாரு.. எனக்கு அவரை பிடிச்சிருக்கு. காதலிக்கறேன். அவரும் காதலிக்கறார். எங்கப்பா அம்மா கூட அவரோட கட்டி வைக்க பேசிட்டாங்க" என்று கூறினாள். 

"அப்ப நான் என்ன விரல் சுப்பனுமா" என்று கேட்டவன், "நான் ஒழுங்கா உன்னை தொந்தரவு பண்ணலை.. பண்ணலை தானே?" என்று கேட்க ஆமோதிப்பாய் தலையாட்டினாள். 

"ஜெனுவா காதலிப்பதை சொன்னேன். நீ அப்ப மறுத்து சொல்லலை. முதல்ல படிங்க.. நல்ல வேலைக்கு போங்கனு சொன்னியா இல்லையா?" என்று கூற, "நான் ஓகேன்னும் சொல்லலையே" என்று திருத்தினாள். 

"என்ன... புத்திசாலியா பேசறதா நினைப்போ?" என்று பவன் பல்லை கடிக்க, "இங்க பாருங்க. நான் அன்னிக்கே இதெல்லாம் நமக்கு சரிவராதுனு சொல்லிட்டேன். நீங்க தான் சிரிச்சிட்டே போனிங்க." என்றாள். 

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ எனக்கு ஓகே சொல்லிட்ட. நான் படிச்சி முடிச்சி, நல்ல வேலைக்கும் சேர்ந்துட்டேன். என்னை அடிச்ச நீ தான் எனக்கு மனைவியா வரணும். இல்லைன்னா என் பிரெண்ட்ஸ் என்னை கேலி பண்ணுவாங்க" என்று கூறி, "நாளைக்கு பதினொறு மணிக்கு அப்பா அம்மாவோட வருவேன். ஓகே சொல்லற" என்று கூறிவிட்டு அகல, லாவண்யா கையை பிசைந்து நின்றாள்‌. 

  தேவியோ "இவன் என்ன லூசா?" என்று படிக்கட்டில் இறங்கி சென்ற பவனை காட்டி பேசினாள

"இ.. இல்லை தேவி. முன்னயே காதலிப்பதா சொன்னான். நான் நோ சொல்லாம அமைதியா இருந்தேன். அவன் அதை சம்மதம்னு எடுத்துக்கிட்டானோ என்னவோ. ஆனா இதெல்லாம் சரிவராதுனு சொன்னேன்" என்று தலையில் கையை வைத்தாள். 

"எருமை மாடே... அவன் காலேஜ் முடிச்சி போனதா மட்டும் சொன்ன." என்றாள். 

"இல்லை காதலிப்பதா சொல்லிட்டும் போனான். நான் தான் முதல்ல படிங்க.. நல்ல வேலையில சேருங்கனு சொன்னேன். அது ஜஸ்ட் அறிவுரையா சொன்னேன். இவன் இப்ப இப்படி வந்து நிற்கறான்." என்றாள்.

"சூப்பர்.. சூப்பர். என்கிட்ட எதையும் சொல்லாத. 

  சாரதி அண்ணாவிடமாவது சொன்னியா?" என்றாள் தேவி. 

  "இ‌‍.. இல்லை.. இவனாவது பரவாயில்லை. அந்த சாரதி ஓவரா கத்துவான்னு சொல்லலை.. வரவர ரொம்ப மோசம் தெரியுமா? டெங்கு வந்ததிலருந்து என்னை திட்டிட்டே இருக்கார்" என்றாள்.‌

தேவியோ "நீ ஆவுடையப்பன் விஷயத்தை மறைச்சதுக்கே அந்தண்ணா உன்னை தூக்கி போட்டு மிதிக்காம விட்டாரேனு நான்‌ பீல் பண்ணறேன். மேடம் இதுல இன்னொரு வில்லனை வளர்த்து வச்சிருக்கிங்க. போ... போய் சாரதி அண்ணாவிடம் இந்த விஷயத்தை சொல்லு. நானா சொன்னா அதுக்கும் திட்டு வாங்குவ." என்றாள். 

தலையை தலையை ஆட்டி கூறுவதாக சொன்னாள். 

   தேவியோ 'இவளை நம்பக்கூடாது. நாம போட்டு தந்துடணும். சாரதி அண்ணா பிறகு உனக்கு தெரிந்தும் ஏன்மா சொல்லலைனு கேட்பார்' என்று மனதோடு கூறிக்கொண்டாள். 

  அன்றைய மாலையில் வீட்டிற்கு வந்ததும் மாடியில் தேவியோடு பேச, "அண்ணாவுக்கு இப்பவே கால் பண்ணு" என்று கூற, "டிக்கெட் கொடுத்துட்டு இருப்பான்." என்று மறுக்க, "அடிச்சேன்னா பாரு. நாளைக்கு பதினோறு மணிக்கு அந்த பவன் வர்றேன்னு சொல்லறான். 

இம்பார்டன் இஸ்ஸு. பவன் பத்தினு சொல்லணும்னு ஷார்டா சொல்லு. அண்ணா பொறுமையா மெஸேஜ் பார்த்துட்டு போன்‌ பண்ணுவார்" என்று கூற அது சரியாக வருமென லாவண்யா 'சாரதி ஒரு இஸ்ஸு பவன் பத்தி சொல்லணும். ப்ரி ஆனதும் கால் பண்ணு. பேசணும்' என்று அனுப்பிவிட்டு, "அனுப்பிட்டேன் போதுமா?" என்று லாவண்யா கூறிய அடுத்த நொடி, 'மின்சாரம் என் மீது பாய்கின்றதே... உன் கண்கள் என் கண்கள் மேய்கின்றதே" என்ற பாடல் இசைக்க சாரதியிடமிருந்து அழைப்பு வந்தது.

"அண்ணா தானே." என்றதும் லாவண்யா ஆமென்று தலையாட்டிவிட பேசு பேசு" என்று கூற, அலைப்பேசியை ஏற்றாள். 

"பவனை பத்தி என்ன பேசணும். அவன் ஏதாவது பிரச்சனை பண்ணறானா?" என்றான் அமைதியாக.‌ டிக்கெட் கொடுத்தபடி பேசுவதை யூகித்துக் கொண்டாள். 

லாவண்யாவோ ''சாரதி அந்த பவன் ஒரு நாள் கிட்ட வந்து காதலிக்கறேன்னு பேசினான் டா.  நான் உன்னை காதலிக்கறேன்னு சொன்னேன். ஆனா அவன் அதை பெருசா எடுத்துக்கவே இல்லை. அதனால படிப்பை முடிங்க‌ நல்ல வேலையில சேருங்கனு சொன்னேன். 

  ரொம்ப நாளா ஆளை காணோம். நான் கூட அப்பாடா மறந்துட்டான்னு நினைச்சேன். காலையில ஏதோ பெரிய கம்பெனில வேலை கிடைச்சிடுச்சு. அப்பா அம்மாவை கூட்டிட்டு வர்றேன். அதுயிதுனு பேசறான். நான் மறுத்து பேசவும் ரூடா பேசிட்டு என்னமோ உரிமையா மிரட்டிட்டு போறான். பயமாயிருக்கு சாரதி." என்றாள். 

"அறிவிருக்காடி உனக்கு. முதல்லயே பேசினப்ப சொல்ல என்னவாம். சரி விடு... காலையில லீவு தானே.? பார்த்துக்கலாம். இல்லாத மூளையை போட்டு ரொம்ப உருட்டாத" என்று கூற, "சாரதி" என்று இழுக்க, "எப்ப அந்த கிழவன் எல்லாம் உன்னை மிரட்டியதுக்கு பயந்தியோ அப்பவே உனக்கு மூளை இல்லைனு தான் அர்த்தம். வேற ஏதாவது சொல்லணுமா? இல்லை மிச்சத்தை மறைச்சி வச்சிருக்கியா?" என்று கேட்டான்.

"இல்லை." என்று ஸ்ருதி குறைந்து கூறிட, போனை அணைத்துவிட்டான். 

அதன்பின் இலக்கியாவிடம் கூறிவிட்டு அப்படியே வீட்டில் வீடியோ காலில் கூற, புருஷோத்தமனோ "யாரவன்? என்னனு விசாரிச்சியா? அப்பா வரட்டுமா?" என்று கேட்க, "சாரதி பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார்பா" என்றாள். 

"சரி நானும் மாப்பிள்ளையிடம் பேசறேன்." என்று அணைத்துக் கொண்டார். 

லாவண்யா பேசி முடித்து, தேவியிடம் "சொல்லிட்டேன்." என்றாள்.

   புருஷோத்தமன் உடனடியாக சாரதிக்கு அழைத்தார். 

  இதுவரை ஏனோ தானோ என்று தான் சாரதியிடம் அவன் பேசியது.

  அதனால் போன் போட்டு பேச காத்திருக்க, "வேலையில இருக்கிங்களா?" என்று கேட்டார் புருஷோத்தமன். 

"பிராட்வே டிப்போல வந்துயிருக்கேன். இருபது நிமிஷம் வண்டி நிற்கும். சொல்லுங்க மாமா" என்றான். 

"லாவண்யா போன் போட்டா" என்று ஆரம்பிக்க, "அந்த பவன் லாவண்யா மேல கை வச்சப்பவே லாவண்யா காம்பஸ் வச்சி குத்திட்டா. அந்த கோபத்துல சுத்தினான். காதலிப்பதா சொன்னதை எல்லாம் லாவண்யா சொன்னதில்லை. இன்னிக்கு மிரட்டியிருக்கானாம் மாமா. ஒன்னும் பிரச்சனையில்லை. எப்படியும் உங்களை சந்திக்க வரணும். அவன் நாளைக்கு வர்றதா சொல்லறான்னா.. சுரேஷ் மாமா தான் அப்பானு நினைச்சிட்டு இருக்கலாம். நேர்ல சந்திச்சா பார்த்துக்கறேன். 

   லாவண்யா நினைச்சு நீங்க பயப்பட வேண்டாம். அந்த பவனை எல்லாம் காம்பஸ்ல கீறினவ, நடுவுல சில அசம்பாவிதம் நடந்ததுல லேசா பயந்துட்டு இருப்பா." என்றான். 

சாரதி பெரிதாக அலட்டாமல் பேசவும், "சரிங்க மாப்பிள்ளை பார்த்துக்கோங்க. நான் வரணும்னா சட்டுனு சொல்லுங்க வர்றேன்" என்றார். 

சாரதி போனை அணைத்துவிட்டு, 'இந்த பவன் எந்த தைரியத்துல இப்படி துள்ளறான்' என்று யோசித்தான். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

 

 


 
Posted : October 8, 2026 9:01 am
Kalidevi reacted
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

very interesting 


 
Posted : October 8, 2026 9:11 am
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Wonderful sarathy u understand laya very well. Laya u r doing mistake often. Sarathy u expect villain so bavan came. Waiting for ur hero effect sarathy. Very intresting sis.


 
Posted : October 8, 2026 9:26 am
(@subhakumar85)
Posts: 143
Estimable Member
 

Athane evan orediya poitano u pathen. Prachana venunu ketalla tho vanthiruku..


 
Posted : October 8, 2026 11:08 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 45)

அடப்பாவி ! நினைச்சேன் என்னடா இந்த பவன் சத்தமே காட்டாமல்
இருக்கான்னு.... இதோ வந்துட்டான்ல, வந்துட்டான்ல.

ஆனால் இந்த லாவண்யா எல்லாத்தையும் தானா சமாளிச்சு கிழிச்சிடற மாதிரி ஆரம்பத்துல கமுக்கமா இருக்க வேண்டியது, கடைசி நிமிசத்துல வந்து நிலைமை கை மீறி போயிடுச்சுன்னு பதற வேண்டியது. சரியான கிறுக்கச்சி. இந்த சாரதி தான் ஓவரா செல்லம் கொடுத்து, கொடுத்து ரொம்ப இடம் கொடுத்திட்டான் போல.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : October 8, 2026 12:54 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Prachanai pavan roobathula vandhu iruku enna da ivan silent ah irukan yae nu partha ipadi  meratitu poran athuvum ava sarathy ah love panren nu solli yum .


 
Posted : October 8, 2026 3:28 pm
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Very interesting..

 


 
Posted : October 8, 2026 3:43 pm
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

villain yarum illanu last ah intha pavan vanthutan pola but nee panalum worout agathu pavan


 
Posted : October 23, 2026 2:49 pm

Scroll to Top