மதுர ஜில்லா... மச்சானே!-32
அத்தியாயம்-32
மதிய சூரியன் மெல்ல மேற்கே சாயத் தொடங்கிய நேரம். டிராக்டரின் சத்தம் வீட்டின் முன் நின்றதும், மீனாட்சி வாசலுக்கு வந்தார். முதலில் இறங்கியது அகிலன். அவன் வழக்கம்போல அமைதியாக உரமூட்டையின் தூசியை தட்டிவிட்டு, டிராக்டரின் சாவியை எடுத்தான்.
அவனுக்குப் பின்னால் மெதுவாக இறங்கினாள் காவ்யா. அவளைப் பார்த்த மீனாட்சி... ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டார்.
காலை வீட்டை விட்டு சென்ற வெள்ளை சுடிதாரின் மீது... இப்போது அகிலனின் நீல நிற முழுக்கை சட்டை. அந்த சட்டை அவளுக்கு சற்றுப் பெரிதாக இருந்தது. கைகளை இரண்டு முறை மடித்திருந்தாள்.
மீனாட்சியின் பார்வை முதலில் காவ்யாவைத் தொட்டு, அப்படியே அகிலனிடம் திரும்பியது.
"என்னப்பா இது...?" என்று வாயால் கேட்கவில்லை.
ஆனால்... தாயின் பார்வையே அந்தக் கேள்வியை கேட்டுவிட்டது. அதைப் புரிந்துகொண்ட அகிலன் மெதுவாக கூறினான்.
"அம்மா... வயல்ல இருந்த தண்ணி தொட்டில கொஞ்ச நேரம் விளையாடிட்டாங்க. என்ன தான் ஸ்விம்மிங்பூல்ல பார்த்தாலும் நம்ம ஊரு தண்ணி தொட்டி வயல்வரப்பு பார்த்தா விளையாட தோனாம போகுமா. தண்ணில இறங்கிட்டாங்க. அப்பறம் தான் டிரஸ் எல்லாம் நனைஞ்சிடுச்சு. அப்படியே வந்தா ஊர்க்காரங்க ஒரு மாதிரி பார்த்தாங்க. அதான்... என் சட்டையை போட்டுக்க சொல்லிட்டேன்." என்று மிகவும் இயல்பாகச் சொன்னான்.
மீனாட்சி அமைதியாகத் தலையசைத்தார். 'அப்படியே இருந்தாலும்... இவன் சட்டை போட்டுட்டு வந்தா... அதுக்கும் பேசுவாங்களே...' என்ற எண்ணம் மனதுக்குள் எழுந்தது. யார் யார் இதை என்னவென்று திரித்து பேசுவார்களோ என்று பயந்தார்.
ஆனால்... அதற்கு மேல் எதையும் சொல்லவில்லை. "காவ்யா. உள்ள போய் டிரஸ் மாத்திடும்மா.. ஈரத்தோட இருந்தா எங்க ஊர் தண்ணி உனக்கு ஒத்துக்குமோ என்னவோ. சளிகிலி பிடிச்சிட போகுது" என்றார்.
"சரிங்க ஆன்ட்டி." என்று புன்னகையுடன் உள்ளே சென்றாள் காவ்யா.
வாசலில் நின்றிருந்த தூரிகாவோ அண்ணனையும், காவ்யாவையும்... மாறி மாறிப் பார்த்தாள். 'இவ எதுக்கு அண்ணன் கூட இவ்வளவு ஒட்டிக்கிட்டு சுத்துறா.?' என்று உள்ளுக்குள் எரிச்சலடைந்தாள். ஆனால் அண்ணனிடம் தான் இலகுவாக பேசாமல் முறுக்கிக் கொண்டதால் எதுவும் கேட்கவும் சொல்லவும் முடியாத வகையில் வேடிக்கை பார்த்தாள்.
காவ்யா அருகில் வந்தபோது கூட, முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.
அதை கவனித்த காவ்யா.. 'இந்தப் பொண்ணுக்கு என்ன கோபம். என் மேல.. ஒருவேளை மதுராவோட வாழ்க்கையில நான் குறுக்கே வந்துடுவேன்னு நினைக்கறாளோ' என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.
அந்த நேரத்தில் ராஜாராமும் அதியமானும் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்தனர்.
"ரொம்ப அழகான கோவில்." என்று ராஜாராம் ரசித்துக் கூறினார். அதியமான் சிரித்தார்.
"எங்க ஊர்ல இருக்கிற பழமையான கோவில் அது. " என்று சொல்லி அந்தக் கோவிலின் வரலாறையும், கிராமத்தின் பழைய கதைகளையும், மெல்ல சொல்லிக் கொண்டிருந்தார்.
இருவரின் பேச்சிலும்நெடுநாள் பழக்கம் இருந்தது போல ஒரு நெருக்கம் உருவானது.
மதிய உணவு நேரம் வரவும்,
மீனாட்சி வாழையிலை விரித்து, ஒவ்வொருவருக்கும் அன்பாக உணவு பரிமாறினார்.
"காவ்யா.. இது நம்ம வீட்டு செடி கொடில ப்ரஷ்ஷா காய்ச்ச காய்கறில செய்த குழம்பு கூட்டு. சாப்பிட்டு பாரு." என்றார்.
"ஓ.. வாவ் சூப்பர் ஆன்ட்டி." என்று சிரித்தாள். அவளது பார்வை மட்டும் அடிக்கடி அகிலனைத் தேடிக் கொண்டே இருந்தது. ஆனால்...
அகிலனோ அனாவசியமாக ஒருமுறை கூட அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தான்.
அது காவ்யாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. 'ஒரு தடவை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டாரா.?' என்று நினைத்தாள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தான் தந்தையிடம் இனியன் வந்ததையும் பேசியதையும் கூறவில்லை என்றதே நினைவு வந்தது.
திடீரென்று காவ்யா பேச ஆரம்பித்தாள்.
"அப்பா.. சொல்ல மறந்துட்டேன்" என்று வாயில் பொரியலை அதக்கிட, ராஜாராம் நிமிர்ந்து பார்த்தார். "இன்னைக்கு... வயல்ல... இனியன் வந்திருந்தான்." என்றாள்.
ஒரே நேரத்தில் அனைவரின் பார்வையும் அவள் மீது திரும்பியது. "என்னவாம் அவனுக்கு?" என்று ராஜாராம் அமைதியாகக் கேட்டார்.
காவ்யா ஒரு பெருமூச்சு விட்டாள். "பெருசா என்ன.. மன்னிப்பு கேட்டான். மதுராவை டிவோர்ஸ் பண்ணிட்டு... என்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு." அந்த ஒரு வாக்கியமே, அங்கே இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அகிலன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் கை ஸ்தம்பித்து நின்றது.
"அதுவும்..." என்று தொடர்ந்தாள் காவ்யா. "ஏற்கனவே... மதுராகிட்ட வெத்து பத்திரத்துல சைன் வாங்கியிருக்கேன்னு பெருமையா சொல்றான்." அதியமான் முகம் இறுகியது.
மீனாட்சியின் கையில் இருந்த கரண்டி மெதுவாக நடுங்கியது.
"அங்கிள்" என்று காவ்யா அதியமான் பக்கம் பார்த்து, "உங்க தங்கைக்கு இந்த விஷயம் தெரியுமா தெரியல. ஆனா...
மதுராவுக்கு அந்த வெத்து பத்திரத்துல இனியன் கையெழுத்து வாங்கினது தெரியும். இப்ப காரணமும் தெரிந்திருக்கு. ஆனாலும் உங்க தங்கச்சி பொண்ணு கல்லு மாதிரி லுக்கு விட்டுட்டு இருந்தாங்க. என்னை பார்த்து எல்லாம் அதிர்ச்சி ஆகலை. ஐ திங்க் அவங்களுக்கு ஏதோ தெரிந்திருக்கு" என்றாள்.
அகிலனின் நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்தியது போல இருந்தது. அவன் அமைதியாகத் தலைகுனிந்தான். அவனது கண்களில் தெரிந்த வலியை காவ்யா கவனித்தாள்.
'இவ்வளவு காதலிச்சி எப்படி தான் விட்டுக்கொடுக்க முடிந்ததோ.?' என்று அவளது மனமும் மெதுவாக வலித்தது.
"எப்படி இந்த இனியனால அந்த பொண்ணு வாழ்க்கையிலையும் விளையாட முடியுது. இதுல உன்னிடமும் பேசறான். அவனை இனி பார்க்கவோ பேசவோ வராதனு சொல்லிட்டியா.?" என்று ராஜாராம் கேட்டார்.
காவ்யாவோ "அதான் அப்பா புரியலை. இப்பல்லாம் இவனை மாதிரி இருக்கற ஆட்களுக்கு தான் ராஜபோகம். என்னிடம் பேச பேச ட்ரை பண்ணியதுக்கு போடான்னு திட்டிட்டு அனுப்பிட்டேன். இனி பேச மாட்டான்னு நம்பறேன். இதுல இவங்க வீட்ல ஏன் தங்கினனு வேற கேள்வி." என்றாள்.
"ஏன் தங்கினா அவனுக்கு என்னவாம்.?" என்று ராஜாராம் பொங்கினார்.
மீனாட்சியோ "என்னங்க இது... வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கியது இளையமதிக்கு எப்படி சொல்லறது? அய்யோ.. டீயை மதுரா மீது ஊத்தியதுக்கே துடிச்சிட்டா. இந்த அவலம் எல்லாம் தெரிந்தா தாங்க மாட்டா" என்று கூறினார்.
அதியமானோ "நாம என்னம்மா செய்யறது? அவளுக்கு அருளாளன் அண்ணன் குணம் தெரிந்தும் இனியன் தான் உசத்தியா தெரிந்தது. இப்ப அதுக்கான பலன் அனுபவிக்கறா. என்ன.. மதுராவுக்கு இந்த கஷ்டம் வந்திருக்க கூடாது. ரொம்ப நல்ல பொண்ணு... ஏதாவது பண்ணிக்குமோனு பயமா இருக்கு" என்று தன்பங்கிற்கு உரைத்தார்.
தூரிகாவோ மதுராவின் நிலையை எண்ணி அவளுமே கலங்கினாள்.
அதற்கு மேல் அகிலனால் அங்கே உட்கார முடியவில்லை.
அமைதியாக எழுந்து கையை கழுவிவிட்டு வெளியே சென்றான்.
அவனுக்குப் பின்னாலேயே...
தூரிகாவின் பார்வையும் சென்றது. இதுக்கு தான் அன்னிக்கே யாரையும் யோசிக்காம மதுராவை கட்டிக்க சொன்னது. இப்ப ஆளாளுக்கு அவளுக்காக கண்ணீர் விடறாங்க.' என்று மட்டும் தோன்றியது.
ஆளாளுக்கு அதன் பின் இலையில் இருந்ததை மட்டும் சாப்பிட்டு எழுந்தனர்.
மதியத்திற்குப் பிறகு அகிலன் வீட்டின் பின்புறம் இருந்த மாமர நிழலில் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவன் முகமே வாடிப் போயிருந்தது. எப்படி தான் மதுரா எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழ்கின்றாளோ? இனியன் அவளை கட்டாயப்படுத்தி நெருங்குவது முதல், தன்னை வைத்து இணைத்து பேசி கேள்விக் கேட்டதும், இளையமதி அத்தை வந்து அன்னையிடம் சொன்னப் பொழுதே அறிந்ததே.
இதோ இன்று வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு காவ்யாவை மணக்கும் திட்டத்தில் இருப்பதை எங்கணம் தாங்குவாள்? காவ்யா பேசியதை கேட்டதால், எப்படியும் அந்த பாவத்தை காவ்யா செய்ய மாட்டாள்.
ஆனால் விவாகரத்து வழங்கிவிட்டு, வேறு பெண்ணை மணந்தாலும் மணப்பானோ? கடவுளே.. மதுரா வாழவெட்டியாக வாழ்ந்தால் அதுவும் கஷ்டம் தானே! இதில் அவளது முகத்தில் பூ முகத்தில் டீயை ஊற்றியதை எண்ணிப் பார்த்து இமை மூடினான். தன்னை நேசித்த குற்றத்திற்கு அவளுக்கான தண்டனையா என்று கலங்கினான். அவளுக்கு உதவவும் இயலாத கையாளாகாத தனத்தில் நின்றியிருந்தான் அகிலன்.
அந்த நேரம் அதியமான் நேரங்கெட்ட நேரத்தில், சில புகைப்படங்களுடன் வந்தார்.
"அகிலா..." என்று அழைத்தார்.
"எ..என்னப்பா?" என்று எழுந்தான்.
"நம்ம தரகர் பாலுவிடம் வரன் இருந்தா சொல்ல சொல்லியிருந்தேன். இந்தப் புகைப்படம் எல்லாம் தந்தார். இதுல ஏதாவது பொண்ணுங்க யாரையாவது பிடிச்சிருக்கானு பாரேன்." என்றார்.
அகிலன் ஒரு பார்வைகூட பார்க்கவில்லை.
"வேண்டாம்ப்பா... என்னை இப்ப வற்புறுத்தாதிங்க." என்று மட்டும் சொல்லிவிட்டு அவ்விடமிருந்து நகர்ந்தான்.
அதியமான் மகனை நிறுத்தி ஏன் மறுக்கின்றாய் என்று கேட்க நா துறுதுறுத்தது. வீட்டில் காவ்யா ராஜாராம் என்று விருந்தாளிகள் இருந்ததால், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகப் புகைப்படங்களை மடித்து வைத்தார். அத்துடன் மதுரா நிலையை காவ்யா விவரித்திருக்க, மகனிடம் கட்டாயப்படுத்தவும் யோசித்தார். ஆனால் இதே நிலை தொடரவிடாமல் வரன் முடித்து கல்யாணம் செய்து முடிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தின்றி நின்றார். அகிலனுக்கு ஏற்கனவே தேர்தல் முடியவும் மதுராவை பேசி முடிக்க எண்ணியது தான். இன்று மதுரா இல்லாவிட்டாலும் வேறு பெண்ணை பார்க்க வேண்டும் என்று மீனாட்சியிடம் கலந்து பேச நினைத்தார்
இதில் அந்த நாள் முழுவதும் காவ்யா அகிலனையே உன்னிப்பாக கவனித்தாள்.
மீனாட்சியோ "அகிலன்" என்று அழைத்தாலே "இதோ வர்றேன்மா..." என்று ஓடிவந்தான்.
அதியமான் ஏதாவது பேசி எடுத்து சொன்னால் "சரிங்கப்பா செஞ்சிடுவோம். என்னனு பார்க்கறேன்" என்று உடனே பண்பாக பேசினான்.
தூரிகா அகிலனிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தாலும்... "தூரிகா அண்ணாவிடம் பேசுடா." என்று கெஞ்சினான்.
அவளோ அண்ணனைப் பார்த்தும் பார்க்காதது போல நகர்ந்தாள்.
அந்தக் குடும்பத்தின் ஒவ்வொருவரிடமும் அகிலன் காட்டிய பொறுமையைப் பார்த்த காவ்யாவின் மனதில். அவனைப் பற்றிய மதிப்பு. இன்னும் ஒரு படி உயர்ந்தது.
இனியனுக்கும் அகிலனுக்கும் உள்ள குணங்கள் மனக்கண்ணில் தெளிவாக விரிந்தது. இனியன் காதலித்த போது இருந்த நல்ல குணம் கண்டதுண்டு. ஆனால் இன்று நேரில் அவன் மதுராவிடம் காட்டிய முகத்தை கண்டதும், ஒரு பெண்ணாக இனியனை முற்றிலும் வெறுத்துவிட்டாள்.
அகிலனும் இனியனுக்கு தம்பி முறை என்றாலும், ஏனோ இனியனின் குணத்தை பொருத்தி பார்க்கவே முடியவில்லை.
எப்படி தான் மதுராவை இழந்துவிட்டு வாடிபோயிருக்க அவனிடம் ஆறுதல் உரைத்து பேச மனம் உந்தியது. ஆனால் வந்ததிலிருந்து தேவைக்கு மீறி அதிகப்படியாக தன் பக்கம் கூட திரும்பாதவனிடம் பேச நினைத்து நெருங்கவே முடியவில்லை.
அந்த மாலை வீட்டைச் சுற்றி வீசிய தென்றல் காற்றைப் போல... அமைதியாக ஒரு அவ்வெண்ணம் காவ்யாவின் மனதுக்குள் வேர் விடத் தொடங்கியது.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Kindly Register Login to Read
Share ur Valuable Comments
Thank U
Arulalan sonnathu seri than Madhi avangalukku avanga annan ah pathi therinchum ponnu ah valukattaiyama marriage panni vacha ga ippo athukana palan ah Madhura face panra ah enna ithula akilan um.athae alavuku vali ah anubavaikiran kooda avanuku kuttraunarchi yum serthu paduthuthu
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 32)
அடேயப்பா..! அவளுக்கு வாய் இல்லையா என்ன? இவன் மவுத் பீஸா வேலை பார்க்குறான். மதுரா இனி அகிலனுக்கு கிடையாது, அது கன்ஃபார்ம்ட்.
ஆனால், காவ்யா கண்ணு இவன் மேல திரும்பிடுச்சுன்னு தோணுது. தூரிகா மாதிரி எனக்கும் இந்த காவ்யாவை பிடிக்கலையே, அது ஏன்? மே பீ, அவன் இல்லாட்டி இவன், இவன் இல்லாட்டி அவன் என்கிற, காவ்யாவோட மேம்போக்கான மனநிலையும் கூட காரணமா இருக்கலாம்.வாட் கேன் ஐ டூ..?
😔😔😔
CRVS (or) CRVS 2797
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
