Forum

Notifications
Clear all

வெளிச்சம் - 02

3 Posts
2 Users
2 Reactions
50 Views
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 
[#135]

அத்தியாயம் 02

 

இரவு உணவு முடிந்ததும் சிவன்யாவின் கையில் ஒரு கவரை கொடுத்தார் சிவநேசன். 

என்ன கவர் என்று குழப்பமாக திறந்து பார்த்தாள். அதில் ஒரு பையன் புன்னகையுடன் நின்றிருந்தான். யாருப்பா இந்த பையன் என்று தந்தையிடம் கேட்க, 

"உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை டா" என்றார். 

 

இன்று தான் கல்லூரி படிப்பே முடிந்து இருக்கிறது. அதற்குள் திருமணமா? என்று அதிர்ந்த சிவன்யா, "அப்பா, என்ன சொல்றீங்க? இன்னும் நான் படித்தே முடிக்க வில்லை. அதுக்குள்ள கல்யாணமா? ப்ளீஸ் பா நான் என்னோட மாஸ்டர் டிகிரி படிக்கணும்" என்றாள். 

 

"நல்ல பையன் டா. நல்லா விசாரிச்சிட்டோம். குடும்பமும் நல்லா குடும்பமா தான் தெரியுது. நம் குடும்பம் மாதிரிதான். அண்ணன், ஒரு தங்கச்சி இருக்காங்க. தங்கச்சிக்கு கல்யாணம் எல்லாம் முடிவாயிடுச்சு. அப்பொழுது ஜாதகம் பார்க்கும் பொழுது தான், இவருக்கும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் திருமணம் செய்ய வேண்டும், இல்லையென்றால் இன்னும் பத்து வருடங்களுக்கு மேலாகிவிடும் என்று இருக்கிறார்கள். உனக்கும் இப்பொழுது திருமண நேரம் கைகூடி இருக்கு. ஜாதகமோ நல்லா பொருந்திருக்கு" என்று அவளுக்கு புரியவைக்கும் நோக்கில் பொறுமையாக கூறினார். 

 

தந்தையின் குரலில் இருந்த உறுதியை கண்டு கலங்கிய சிவன்யா, "அப்பா, மேல்படிப்பு கூட வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு ஒரு வருஷம் வேலைக்காவது போகிறேனே! அதன் பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று அழுது விடும் நிலையில் தந்தையிடம் மன்றாடினாள். 

 

அப்பொழுது அங்கு வந்த மேகநாதன் தங்கை அழுவத போல் இருப்பதைக் கண்டு, "ஏய் வாலு, கல்யாணம் தானே பண்ண சொல்றாங்க! இதற்கு எதற்கு அழுதுகிட்டு இருக்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு, மேலே படிக்கவும், வேலைக்கு போகவும் முடியாதா என்ன? அதெல்லாம் உன் விருப்பம் போல் இருக்கலாம். 

 

பெரியவங்க நமக்கு எது செய்தாலும் நல்லதாகத்தான் இருக்கும். அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப டென்ஷன் படுத்தாம, கல்யாணம் கட்டிக்கிற வழிய பாரு" என்று அவளை கண்டித்து, 

"நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணி போனா தான், என் வழி கிளியர் ஆகும்" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான். 

 

"ஓஹோ, உனக்கு கல்யாணம் வேணும்னா நீ பண்ணிக்கோ! என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாய படுத்துற?" என்றாள் கோபமாக.  

 

சிவன்யா அழுவது மூவருக்குமே வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் நேரம் கூடி வரும் பொழுது திருமணம் முடிக்க வேண்டுமே என்று மீண்டும் அவளிடம் பேசினார் அவரது தந்தை. 

 

"என்னங்க, அவதான் கொஞ்சம் டைம் கேட்கிறாளே! இந்த வரன் இல்லன்னா விடுங்களேன். வேற வரன் பார்க்கலாம். இந்த பையன் கல்யாணம் முடிச்சுட்டு துபாய்க்கு நம்ம பொண்ணை கூட்டிட்டு போயிடுவான்னு சொல்றாங்க. எனக்கும் கடல் தாண்டி பொண்ணை அனுப்ப அவ்வளவு விருப்பம் இல்லை. கொஞ்சம் யோசிங்க" என்றார்.  

 

"ஏய் நீ வேற, என்னடி? அவளை பேசி சம்மதிக்க வைப்பேன்னு பார்த்தாக்கா! இப்ப கல்யாண வேண்டாம் என்று சொல்லுற" என்று மனைவியிடம் ஆரம்பித்து, 

"இங்கே பாரு சிவன்யா, அப்பா பார்த்திருக்கிற மாப்பிள்ளை, நல்ல இடம். உனக்கு படிப்பதுதான் பிரச்சினை என்றாலும் அவர் அதை பற்றி கவலை படமாட்டார். நீ தொடர்ந்து படிக்கலாம், அதற்கு அவர்கள் வீட்டில் இருந்து எந்த மறுப்பும் வராது" என்று மகளிடம் முடித்தார் சிவநேசன். 

 

"எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்" என்று வாய் விட்டு அழ ஆரம்பித்தாள் சிவன்யா. 

 

"சிவன்யா" என்று கோவமாக அழைத்தான் மேகநாதன். 

"சிவன்யா" என்று அழைத்த அண்ணனின் குரல் ஏன் வேறு மாதிரி இருக்கிறது என்று ஒரு நொடி குழப்பமாக நிமிர்ந்து பார்க்க, கருப்பு கோர்ட் அணிந்த அவர்களது வக்கீல் "சிவன்யா" என்று மீண்டும் அழைத்தார். 

அவரது குரலில் பழைய நினைவில் இருந்து வெளியே வந்தாள் சிவன்யா. 

 

"அடுத்தது நம்ம கேஸ் தான். வாங்க உள்ளே போகலாம்" என்று அவர்களை அழைத்தார் அவர்களது வக்கீல்.

அவரை பார்த்த பிறகு தான் இவ்வளவு நேரம் தான் பழைய நினைவில் இருந்ததை உணர்ந்தாள் சிவன்யா. 

 

"சொல்லுங்க சார்" என்று எழுந்த சிவன்யாவை,

'இப்ப தானே சொன்னோம். மீண்டும் இப்பெண் கேட்கிறாளே' என்று நினைத்து, விசித்திரமாக பார்த்துக் கொண்டே "அடுத்தது நம்முடைய கேஸ் தான். வாருங்கள்" என்று மீண்டும் கூறி, அழைத்துச் சென்றார். 

 

தன் வாழ்நாளில் தாம் இங்கெல்லாம் வருவோம் என்று கொஞ்சம் கூட நினைத்திராத சிவன்யா, கண்களில் மிராட்சியுடன் வக்கீல் அழைத்துச் சென்ற குடும்ப நல கோர்ட் வளாகத்திற்குள் நுழைந்தாள். 

 

இவர்கள் உள்ளே செய்யவும், வழக்கு எண், பெயர் சொல்லி அழைக்கவும் சரியாக இருந்தது. 

 

தந்தை வக்கீலின் அருகே நின்றுவிட, சிவன்யா மட்டும் நீதிபதியின் எதிரே நின்றாள். நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வயதிற்குள் இருக்கும் நீதிபதி பெண்மணிக்கு. கருணையே வடிவாக அமர்ந்திருக்க, "உன் பெயர்தான் சிவன்யாவாமா?" என்றார் அன்பாக. 

 

ஆமாம் என்று தலையை ஆட்டினாள் சிவன்யா. 

 

"வாயைத் திறந்து பதில் சொல்ல வேண்டும்" என்றார் நீதிபதி அம்மையார். 

 

அவளும் சரி என்று தலையாட்டி, ஆழ்ந்து மூச்சு எடுத்து கண்களை மூட, 

"சிவன்யா" என்று நீதிபதி அழைக்க…

அது அவளது காதுகளுக்கு அண்ணன் கோபமாக அழைப்பது போல் கேட்டது. 

 

"இப்போ எதற்கு சிவன்யா இப்படி அழுது கொண்டு இருக்கிற, அப்பா உனக்கு கல்யாணம் தானே பண்ண போகிறேன் என்று சொன்னார். அதற்கு ஏன் இந்த அழுகை?" என்றான் கோபமாக.  

 

"அண்ணா, நான் இப்ப தான் டிகிரி முடித்து இருக்கிறேன். அதற்குள் கல்யாணம் பண்ணனுமா? அடுத்த டிகிரி படிக்க வேண்டாமா? வேலைக்கு போக வேண்டாமா? நீ மட்டும் படித்து, வேலைக்கு போகிறாய்! நான் மட்டும் கல்யாணம் பண்ணனுமா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள். 

 

தங்கை கேட்பது நியாயமாக இருந்தாலும், தாயும் தந்தையும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதால், "அப்படி இல்லம்மா, எப்ப வேண்டுமானாலும் படிக்கலாம். இப்பொழுது கல்யாணம் கைகூடி வருகிறது என்று அப்பாவும் அம்மாவும் சொல்கிறார்களே! கல்யாணத்தை பண்ணிட்டு அப்புறம் கூட படிக்கலாமே! என்றான் தங்கைக்கு புரிய வைக்க வேண்டும் என்ற நோக்கில். 

 

"அப்புறம் எப்படி அண்ணா படிக்க முடியும்?" என்று அண்ணனிடம் கேட்டுவிட்டு, 

"அப்பா ப்ளீஸ் பா, மேற்கொண்டு படிக்கிறேன்" என்றாள் மீண்டும். 

 

இப்பொழுது சிவநேசனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியை பார்த்தார், உதவி செய்யும் படி. 

 

சிவகாமிக்கு கூட மகளின் நிலைமை புரிய, அவருக்குள் மீண்டும் இந்த திருமணம் அவசியமா? என்று ஓடியது. இருந்தாலும் தானாக வரும் சம்பந்தத்தை விடவும் மனதில்லை. 

 

"இங்கே பாருடா, உனக்கு கல்யாணத்திற்கு தானே பேசுகிறோம். படிப்பும் முடிந்துவிட்டது. அடுத்து என்ன செய்ய? உன் கல்யாண வேலையை பார்த்தால் எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் அல்லவா? அதனால் தான் உனக்கு திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தோம். உன் தோழிகளிடமும் வேண்டுமானால் நீ கேட்டுப்பார். எல்லோர் வீட்டிலும் இதுதான் நடக்கும். நீ ஒன்றும் சின்ன பிள்ளை இல்லையே! இருபத்தியோர் வயது ஆகிவிட்டது அல்லவா? என்று பொறுமையாக கூறினார் சிவகாமி. 

 

"என்னமோ போங்கம்மா, என் பேச்சை யாருமே கேட்க மாட்டேங்கிறீங்க!" என்று அவளது அறைக்கு சென்று விட்டாள். 

 

கோபமாக செல்லும் சிவன்யாவின் முதுகை கவலையாக பார்த்தனர் மற்றும் மூவரும்.

 

தாய், தந்தை முகத்தில் இருந்த கவலையை கண்டு, "நீங்க எதற்கும் கவலைப்படாதீர்கள். அவளுக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும் இல்ல! யோசிச்சிட்டு நல்ல முடிவா சொல்லுவா. நீங்க போய் ஓய்வெடுங்கள்" என்று கூறிவிட்டு அவனது அறைக்கு சென்று விட்டான் மேகநாதன். 

 

அறைக்கு வந்த சிவன்யா தன் தோழிகளிடத்தில் தங்கள் வீட்டில் திருமணம் பற்றி பேசுவதாக கூற, 

"ஏய் சூப்பர் டி, நம்ம செட்டில் உனக்கு தான் முதல் கல்யாணம், வாழ்த்துகள்" என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதைக்கண்டு இதுதான் உலக நியதி போல. படித்ததும் அடுத்து கல்யாணம்தான், என்று அவளுக்குள்ளும் எண்ணம் வந்தது. மேலும் தாய் தந்தையரை கஷ்டப்படுத்த விரும்பாத சிவன்யா, அப்பா அம்மா விருப்பப்படி கல்யாணத்தை செய்து கொள்வோம் என்று முடிவுக்கு வந்தாள். 

 

மகள் என்ன சொல்வாளோ என்று கலக்கமாக உறங்கிய சிவநேசன், சிவகாமி தம்பதியினர். இன்று கல்லூரி இல்லாததால் காலையில் அவளை தொந்தரவு செய்யவில்லை சிவகாமி. 

 

மேகநாதன் வேலைக்குச் செல்லும் பொழுதும், 

"அம்மா, அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் கொஞ்ச காலம் விட்டு விடுவோம் அம்மா, இவர் இல்லையெனில் வேறு வரன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றான். 

 

அவர்களும் நேற்று இரவு அதே முடிவு தான் எடுத்திருந்தார்கள். ஆகையால் சரி என்று சொல்லி அவனை வேலைக்கு அனுப்பினார். 

 

சிவநேசனும் மகன் பேசியதை கேட்டு, மனைவியிடம் "நேற்று நாம் எடுத்த முடிவு சரிதானே சிவகாமி" என்றார். 

 

"ஆமாங்க, அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் நாம் விட்டு விடுவோம். பொறுமையாக அவள் திருமணத்தை பண்ணிக் கொள்ளலாம். நீங்கள் எதையும் யோசிக்காமல் வேலைக்கு போயிட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தார். 

 

ஆண்கள் இருவரும் வேலைக்கு கிளம்பியதும் தன் மகளது அறைக்கு சென்றார். ஆழ்ந்து உறங்கும் மகளின் அருகில் அமர்ந்து, அவளது தலையை கோதிவிட்டபடியே, "சிவன்யா, நேரம் ஆகிடுச்சு எழுந்திருடா" என்றார் அன்பாக. 

 

தாயின் குரலில் லேசாக கண்விழித்த சிவன்யா, அவரது மடியில் தலையை வைத்துக்கொண்டு, "இன்னும் கொஞ்சம் நேரம் அம்மா, ப்ளீஸ்" என்று கெஞ்சியபடியே உறங்கினாள். 

 

மகளின் செயலில் சிரித்துக் கொண்ட சிவகாமி, "நேரம் ஆயிடுச்சு டா, காலையில இவ்ளோ நேரம் சாப்பிடாம இருக்கக் கூடாது. எழுந்து பல் துலக்கி, சாப்பிட்டுட்டு பிறகு தூங்குகிறாயா?" என்று அவளிடம் தன்மையாக கேட்டார். 

 

சிவன்யாவிற்கும் தாயைப் பற்றி நன்கு தெரியும். காலையில் கல்லூரிக்கு செல்லும் பொழுதோ அல்லது முக்கியமாக எங்கும் வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்தால் தவிர, மற்ற நாள் அவளை அவள் விருப்பத்திற்கு தான் இருக்க விடுவார். ஆகையால் "சரி மா" என்று சொல்லி, மெதுவாக எழுந்து, தாயை கட்டி பிடித்து, கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, "நான் போய் பிரஷ் பண்ணிட்டு வரேன்" என்று வேகமாக குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.  

 

"பல்லு தேய்க்காம கன்னத்துல முத்தம் கொடுக்காதே எத்தனை தடவை சொல்றது" என்று சிவகாமி கூறும் வார்த்தை காதில் விழுவதற்குள், கதவை சாற்றி விட்டாள் சிவன்யா. 

 

மகளின் செயலில் புன்னகைத்துக் கொண்டே, மகள் வரவுக்காக காத்திருந்தார். 

அவள் வந்ததும் காலை உணவு, அவளுக்கு தேவையானதை செய்து கொடுக்க, சாப்பிட்டு முடித்ததும், "அம்மா" என்றாள். 

 

அவளே சொல்லட்டும் என்று அமைதியாக என்ன? என்று அவள் முகம் பார்க்க, "உங்கள் விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே. 

 

அவளின் வெட்கமே, அவள் கட்டாயத்தின் பேரில் சொல்ல வில்லை என்று சிவகாமிக்கு புரிந்தது. இருந்தும் 

"உண்மையாகவா? நாங்கள் சொன்னதற்காக இல்லையே!" என்றார், அவள் கன்னங்கள் இரண்டையும் உள்ளங்கையில் தாங்கியபடி. 

 

"இல்லை அம்மா, எப்படியும் கல்யாணம் பண்ணித்தானே ஆக வேண்டும். அதற்கு இப்பொழுதே பண்ணிக் கொள்கிறேன். இதில் என்ன இருக்கிறது" என்று சாதாரணமாக கூறினாள் சிவன்யா. 

 

மகள் திருமணம்

செய்து கொள்கிறேன் என்று கூறியதும், மகிழ்ச்சி அடைந்தார் சிவகாமி.

 

- தொடரும்..

 

- அருள்மொழி மணவாளன்..

 


 
Posted : July 3, 2026 3:23 pm
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

ipo avanga avaloda ishtathuku vidalam ninacha iva ipo samathichita


 
Posted : July 6, 2026 5:10 pm
(@arulmozhi-manavalan)
Posts: 22
Trusted Member
Topic starter
 

@kalidevi thank you 😊😊


 
Posted : July 8, 2026 1:42 pm

Scroll to Top