Forum

நயனமே நான் தானடி-6
 
Notifications
Clear all

நயனமே நான் தானடி-6

3 Posts
3 Users
0 Reactions
8 Views
(@praveena-thangaraj)
Posts: 316
Member Admin
Topic starter
 
[#418]

அத்தியாயம்-6 

 

ராஜ்குமார் நேத்ரா பழக ஆரம்பித்து இன்றோடு இரண்டு மாதம் தாண்டியிருக்கும். நடுவே உங்க காதலியை பார்த்திங்களா சார் என்று கேட்டதற்கு மட்டும் 'இல்லை... அவளுக்கு நான் தேவையில்லாதப்ப, அவளை தேடி போக எனக்கு இஷ்டமில்லை.' என்றதற்கு, 'போய் பாருங்க சார். ஒருவேளை அவங்க அப்பா அம்மாவால் அவங்க ஹவுஸ் அரஸ்ட்ல இருந்திருந்தா என்ன செய்விங்க?" என்று கேட்கவும் ராஜ்குமார் சிறு நேரம் யோசனைகளுக்குள் சென்றான்.

 

"சார்... ஒருவேளை அவங்க உங்களை ஏமாத்த நினைச்சா, நீங்க அதை தெரிந்துக்கொண்டாலும், நீங்க மனசுல போட்டு அழுத்திட்டு இருக்கற அந்த காதல் விடுப்பட்டு, ரிலாக்ஸ் ஆகலாம். ஏன்னா... எனக்கு தெரிந்து, பார்வை பறிப்போனதை விட, உங்க காதலி விட்டுட்டு போனது உங்க மனதை வெகுவா பாதித்திருக்கலாம். யாராவது கூடயிருக்கணும்னு உங்க மனசு ஏங்குது." என்றதும் ராஜ்குமார் கைப்பிடி நழுவியது. போன் கீழே விழுந்திட, அதை தரையில் தடவி கிடைக்காமல் "தேவா.. தேவா.. போன் கீழே விழுந்துடுச்சு. கொஞ்சம் எடுத்துக்கொடு." என்ற குரல் நேத்ரா செவியிலும் கேட்டது. 

 

தேவா உடனடியாக வெளியே இருந்து வந்து போனை எடுத்து தந்து, "இந்தாங்க சார். நான் வெளியே இருக்கேன்" என்று எப்பவும் போல் வெளியேறினான்.

 

"என்ன சார்... போன் நழுவிடுச்சா?" என்றதற்கு, "ஆமா.. உண்மையில் சோனாலி என் பக்கத்தில் இல்லாதது என்னால தாங்கமுடியலை. மனசுக்கு பிடிச்சவங்க கூடயிருந்தா எந்த கஷ்டத்தையும் தாங்கியிருப்போனோனா மனசு நினைக்க தோனுது." என்று கூறவும் நேத்ரா சன்னமான சிரிப்பில் ராஜ்குமார் நிலையறிந்த மிதப்பு. 

 

"சோனாலியை சந்திச்சிட்டு வாங்க சார் பேசுவோம்" என்றாள் நேத்ரா. அதன்பின் போனை அணைத்து விட்டனர். 

 

தேவா உதவியோடு செல்ல முயன்றவனை, "சார்... உங்க காதலி முன்னவே உ...உங்களை உதறிட்டு தான் போனாங்க. எனக்கு தெரியும் சார். அவங்க அப்பா அம்மா சொன்னதை மீறி நைஸா உங்களை பார்க்க வந்தாங்க. ஆனா நீங்க தட்டுதடுமாறி ஹாஸ்பிடல் ரூம்ல என் கையை பிடிச்ச அன்னிக்கு எட்டி பார்த்துட்டு, அதிர்ச்சியா இருந்தாங்க. அவங்க அம்மா தான் இழுத்துட்டு போனாங்க. அப்ப கூட உங்க காதலி அவங்களோட போனாங்க. அப்ப கட்டாயப்படுத்தலை. தானா தான் கேஸூவலா போனாங்க. 

அவங்க போனதும் நான் நர்ஸிடம், அவங்க யாருனு கேட்டேன். பார்வை பறிப்போச்சே அவரோட லவ்வர். அவரோட தான் அந்த பொண்ணும் விபத்துல சிக்கிச்சு. அது அதிர்ஷ்டம் தப்பிச்சிடுச்சு. பாவம் இவருக்கு அடிமட்டும் பட்டிருக்கலாம். கண்ணு போச்சுனு' நர்ஸ் சொன்னாங்க சார். 

 

எனக்கென்னவோ நாம உங்க காதலியை தேடி போறது தேவையற்றதுனு தான் தோனுது சார்" என்று சோனாலி வீட்டிற்கு செல்ல வேண்டாமென தேவா உரைத்திட, ராஜ்குமார் அதை செவிமடுத்தால் தானே?!

 

"இருக்கட்டும் தேவா. சோனாலியை ஒருமுறை சந்திக்கணும்" என்று கீழே விழுந்த ரெக்கார்ட் போல, அதையே கூறவும் தேவாவும் அழைத்து சென்றான். 

 

"சார்... நீங்க சொன்ன சோனாலி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்." என்றான். 

 

"தேங்க்ஸ் தேவா." என்று தேவா கைகளை பிடித்து அடியெடுத்து வைத்தான். கையில் பார்வையற்றவருக்கான ஸ்டிக்கும் இருந்தது. 

 

சோனாலியும் ஓரளவு வசதி என்றாலும், வீட்டுக்கு வாட்ச்மேனோ சமையல்காரர்களோ வைத்திருக்கும் அளவுக்கு அப்படியொன்றும் வசதியில்லை. அதன் காரணமாக அழைப்பு மணியோசை அடித்து காத்திருக்க, சோனாலி தாய் கதவை திறந்தார். 

 

கருப்பு கண்ணாடியும் கையில் ஸ்டிக்கும் இருப்பதிலேயே அது ராஜ்குமாரென கண்டறிந்து விட்டாலும், "யாரு.. யாரு வேண்டும்?" என்றார் தெரியாதவரை போல. 

 

"என்னை பார்த்தும் அடையாளம் தெரியலையா? நான் ராஜ்குமார். எனக்கு சோனாலியை பார்க்கணும்" என்றான் நேரிடையாக. 

 

''சோனாலி.. சோனாலியையா? ஓ.. நீங்க ராஜ்குமாரா? அன்னிக்கு கட்டெல்லாம் போட்டதில் தெரியலை." என்று கூற பேசிக்கொண்டே ராஜ்குமாரை தேவா உள்ளே அழைத்து வரவும் உட்கார கூறினார் சோனாலி தாய். 

 

"எனக்கு சோனாலியை பார்க்கணும். இரண்டு நிமிஷம் பேசணும்." என்றதும், மாடியை மாடியை பார்த்து, "சோனாலி இங்க இல்லை. அவ அவங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டா." என்று பதில் தர, டக்டக் என்று நடந்துவரும் ஓசை, அது சோனாலி என்று அறிந்தான் ராஜ்குமார். 

 

சோனாலி திருட்டு முழியோடு, அன்னையை காண, சோனாலி தாயாரோ கண்களால் அதிருப்தியாக ராஜ்குமாரை காணவும், "சோனாலி இங்க இருப்பதா கேள்விப்பட்டேனே." என்று அவள் அங்கே இருப்பதை அறிந்தும் அவனும் பேச, "இல்லை சார்... விபத்து நிகழ்ந்தது எங்களுக்கு சரியாப்படலை. எங்க பொண்ணுக்கு மறுஜென்மமா நினைச்சு அவ பாட்டி வீட்டில் விட்டாச்சு" என்றார் கறார் குரலில். 

 

தேவா சும்மா இல்லாமல், "அப்ப அவங்க யாரு?" என்று சோனாலியை பார்த்து கேட்க, "இது.. இது என் தங்கச்சி பொண்ணு." என்று அவசரமாய் கூறவும், ராஜ்குமாருக்கு சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. 

 

ராஜ்குமாராகவே "சரிம்மா.. சோனாலியிடம் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க. அவ காதலை காப்பாத்த முடியாத பாவியா என்னோட நிலை. இனி அவளை என்னால கல்யாணம் செய்ய முடியாது. அவளுக்குனு ஒரு லைப்பை நீங்களா அமைச்சி தாங்க. என்னை காதலிச்சதால எனக்கு இப்படி ஆனதால அவ ஏதாவது மனசை போட்டு குழப்பிக்க வேண்டாம். இந்த உலகத்துல பிறந்தவங்க ஒவ்வொருத்தருக்கும் தான் ஆசைப்படற வாழ்க்கை வாழ எல்லா சுதந்திரமும் இருக்கு. ஏதாவது ஒரு கமிட்மெண்ட் இருந்து அதனால என்னை அவாய்ட் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க. மேபி.. இப்ப அவ இங்க இருந்தாலும் அவளிடம் காதலை பத்தியோ கல்யாணத்தை பத்தியோ நான் பேச மாட்டேன். எனக்கு ஒரு தோழியா இருப்பியானு தான் கேட்டிருப்பேன். ஆனா இனி தோழியாவும் சோனாலியால இருக்க முடியாதுனு தெரியுது. ஏன்னா.. காதலுக்காவது துரோகம் இருக்கலாம். நட்புக்கு அந்த துரோகம் இருக்க கூடாது. எனிவே. உங்க தங்கச்சி பொண்ணு உபயோகித்த பெர்ஃப்யூம் நான் சோனாலிக்கு வாங்கி தந்த பெர்ஃப்யூமும் ஒன்னு போல தெரியுது. பிகாஸ் இந்த பெர்ஃப்யூம் ரேர். நானா அவளுக்காக வாங்கியது. சோனாலியிடம் சொல்லுங்க. நான் இனி அவளை தொந்தரவு பண்ண மாட்டோன்னு." என்று வணக்கம் வைத்தான். 

 

"ராஜ்" என்று சோனாலி ஏதோ பேச வர, சோனாலியின் தாயோ அவள் வாயை பொத்தினார். 

 

"தேவா நாம போகலாம்" என்று கூற தேவா சோனாலியை கண்டும் அவள் தாயை கண்டும் இப்படியும் மனிதர்கள் என்ற பார்வையை வீசி கடந்தான். 

 

காரில் ஏறவும், தேவா பொறுக்கமாட்டாமல் "சார் அங்கிருந்த பொண்ணு தான் அன்னிக்கு ஹாஸ்பிடலில் உங்களோட அட்மிட் ஆன பொண்ணு. இன்னிக்கு தங்கச்சி பொண்ணுனு பச்சை பொய் பேசுதுங்க. கடைசியா பேச வந்தும் அந்தம்மா தடுத்து பேசாதனு தலையாட்டவும் அமைதியாகிடுச்சு சார்" என்று கோபமாய் கூறினான். 

 

ராஜ்குமாரோ "வாழ்க்கையில சில நேரம் எதிர்தரப்புல இருக்கறவங்க நினைப்பது போல நாம பேசி நடந்துக்கிட்டா அவங்க நம்மிடம் நடிக்க வேண்டியதில்லை பாரு. அதனால தான் சோனாலியை என்னால கல்யாணம் செய்ய முடியாதென்று சொல்லிட்டு வந்தேன். இனி நட்பாக கூட அவளை சந்திக்க மாட்டேன்னு நானா சொல்லவும், அவங்களுக்கு நிம்மதி வந்திருக்கணுமே" என்று ராஜ்குமார் கூறவும், தேவாவும் ஆமோதிப்பதாக ''ஆமா சார் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அப்படியொரு நிம்மதி. ஆனா சார்‌.. உங்களை மாதிரி மனசு உள்ள ஒருவருக்கு நல்ல பொண்ணு அமையணும் சார். இந்த பொண்ணு எல்லாம் வேண்டாம்." என்று கூறி பேசிட, ராஜ்குமாருக்கு நகைக்க தான் தோன்றியது. 

 

தனக்கு இனி பெண்ணே கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இதில் நல்ல பெண்ணிற்கு எங்க போவது. காதலித்தவளே தன்னை மறுத்து வேடிக்கை பார்க்க, என் வாழ்வில் இனி பெண் என்பவளுக்கு இடமில்லை.' என்று ராஜ்குமார் எண்ணினான். 

 

வீட்டுக்கு வந்தப்பின் ஏனோ மனபாரம் குறைந்தது போன்ற எண்ணம். சோனாலியை நேரில் சந்தித்து தன் மனதை பகிர்ந்ததால்... 

அவள் அவளை அடையாளம் காட்டாமல் மௌனமாக நின்றியிருந்தாலும், தன் மனதை திறந்து பேச தானே சென்றது. அதனால் ராஜ்குமார் மிகவும் இலகுவான மனநிலையில் இருந்தான். 

 

ஓரளவு அறைக்குள் சில இடத்தை மனதிற்குள் வரைப்படம் போல உருவகப்படுத்தி வைத்திருக்க, இங்க மெத்தை என்றால் அதற்கு பக்கத்தில் ஒரு டேபிள், அங்கிருந்து வலது புறம் நேரே சென்றால் பாத்ரூம். இடதுப்புறம் பால்கனி, நேரெதிரே அறையின் கதவு, என்றளவு தனியாக தனதறையில் நடமாடினான். 

 

அதே போல வீட்டின் ஹாலில் படிக்கட்டு இறங்கி பத்தடியில் சோபா, அதற்கு வலதுப்புறம் உணவு மேஜை என்றும், குறிப்பிட்ட சதுரடிகளை கணக்கில் கொண்டு வீட்டின் மெயின் கதவுவரை செல்ல பயிற்சி எடுத்திருந்தான். தேவா இருக்கும் பொழுது பயிற்சியிலும் நேரம் போனது. 

 

புதுயிடம் சென்றால் தான் லேசான நடுக்கம் பயம், மற்ற மனிதர்களை, பொது இடங்களை எப்படி கையாள்வது என்று தவிப்பது. அதுகூட தேவா இணைப்பிரியாமல் நிழல் போல வருவான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவா போன்றவன் பாதுகாவலனாக கிடைத்ததும் அதிர்ஷ்டமே.

 

ஒருமுறை ராஜ்குமார் தேவாவிடம் "உன்னோட அப்பா அம்மா கூடபிறந்தவங்க இருக்காங்களா தேவா?" என்று கேட்டதற்கு "அதெல்லாம் இருக்காங்க சார்.‌ எனக்கு முன்ன என் தம்பி லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டான். என் தங்கைக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அப்பா அம்மாவுக்கு நான் கொஞ்சம் அதிர்ஷ்டக்கெட்டவன்னு நினைப்பு. தம்பியையே தூக்கி வச்சிப்பாங்க. எனக்குன்னு ஆத்மார்த்தமா பீல் பண்ண யாருமில்லை சார். அதனால சோஷியல் சர்வீஸோட இந்த மாதிரி வேலையை பார்த்துப்பேன். 

தங்க இடம், சாப்பாடு, மாசம் மாசம் அக்கவுண்ட்ல சம்பளம், இது தவிர தனி மனுஷனான எனக்கு என்ன வேண்டும் சொல்லாங்க?" என்றதும், ராஜ்குமாரோ தேவாவுக்கும் ஏதோ வலிமை தரும் பின்கதை ஏதேனும் உண்டோ? என்று நினைத்திருக்கின்றான். ஆனால் ராஜ்குமார் அதை தேவாவிடம் கேட்கவில்லை. 

 

நாட்கள் கருப்பு வண்ணத்தை கூட அழகாக ராஜ்குமாருக்கு பரிசளித்தாலும் அவன் அதை ஏற்க பழகியிருந்தான்.

 

அன்று தேவாவே "இப்பலாம் நீங்க பாஸிடிவா யோசிக்கறிங்க சார். முதல் முதல்ல சந்தித்தப்ப அழுகை கோபம், வாழ்க்கையில ஒரு வெறுப்பு விரக்தி நிறைய இருந்தது‌. இப்ப அப்படியில்லை சார். நீங்க மாறியிருக்கிஙக் எனர்ஜியா இருக்கிங்க." என்று புகழ்ந்தான். 

 

"நேத்ரா கூட பேசினா எல்லாவிதமான பாஸிட்டிவ் எண்ணமும் வந்துடும் தேவா. அவ குரலுக்கு ரசிகையா மாறினா எல்லாம் சாத்தியம்" என்றான் ராஜ்குமார் ஆத்மார்த்தமாக. 

 

"சார்... அந்த பொண்ணுக்கூட நீங்க பேசறதுயில்லையே. பிறகு எப்படி?" என்று ஆச்சரியமாக கேட்டான். 

 

"நானா நேத்ராவிடம் பேசலை. ஆனா அவ குரலை தினமும் கேட்கறேன்." என்று ரகசியம் உடைத்தான் ராஜ்குமார். 

 

"எ..எப்படி சார்." என்று கேட்க, "நேத்ரா தினமும் வானவில் எப்.எம்.ல ஒன்பது டூ பத்து நிகழ்ச்சி தொகுப்பாளினியா இருக்கா. அவ பேசறதை ப்ளூடூத்ல கேட்பேன். அந்த குரலில் ஏதோ இருக்கு தேவா. பாஸிடிவ்வா பேசறதுக்கு எல்லாராலையும் முடியாது. அந்த நிகழ்ச்சில, பாட்டு போடறதுக்கு முன்ன ஒரு கதை சொல்லிட்டு, நீதியா சில ஆறுதலா, அவ பாணில சொல்வா பாரு. சான்ஸே இல்லை. நடக்கமுடியாதவன் கூட மராத்தான்ல ஓடணும்னு ஆசையும் முயற்சியும் செய்வான். அவ புத்திசாலி. சோனாலியை சந்திச்சு பாருங்கன்னு சொன்னது கூட அவ தான்" என்று நீண்ட உரையாக பேசினான். 

 

தேவாவோ "சார்... அவங்களிடம் போன்ல பேசலாமே? ஏன் அதை செய்வதில்லை? இத்தனை நாள் நீங்க ஏதோ புரோகிராம் கேட்கறிங்கனு நினைச்சேன் " என்று காரணம் அறிய கேட்டான்.‌

 

முன்பு அடிக்கடி நேத்ராவுக்கு போனை பேச போட்டு கொடுத்துவிட்டு தேவா உறங்கியது உண்டே!

 

"இல்லை தேவா... நம்பர் இருப்பதால் தினமும் டார்ச்சர் பண்ணறேன்னு நேத்ரா நினைச்சிட்டா. நேத்ரா மாதிரி இருக்கற பொண்ணிடம், நான் கெட்ட பெயரை வாங்க வி

ரும்பலை. நேத்ரா எனக்கு ஸ்பெஷல்" என்று ராஜ்குமார் சிலாகித்தான். 

 

-தொடரும். 

 

 


 
Posted : October 25, 2026 12:01 pm
(@crvs2797)
Posts: 239
Reputable Member
 

நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)

ம்.. ஏதாவது குறை இருந்துட்டாலே
ஆட்டோமெடிக்கா நிராகரிப்பு செய்ய தோணிடும் போல சோனாலியைப் போல. என்ன பண்றது, இதானே உலகம்.

சோனாலி போனால் என்ன ?/அதான் இப்ப நேத்ரா கிடைச்சிட்டாள் தானே.?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : October 25, 2026 2:42 pm
(@guna-sundari)
Posts: 185
Estimable Member
 

Wow raj nethra cleared ur mind. Also Sonali didnt worth for ur love. So leave it. Raj ur life will.change very soon. Very intresting sis.


 
Posted : October 25, 2026 3:23 pm

Scroll to Top