நயனமே நான் தானடி-3
அத்தியாயம்-3
சோனாலி எங்கே எங்கே என்று கேட்டு, பிறகு டாக்டரே "அந்த பொண்ணு அப்பவே போயிடுச்சு. உங்களுக்கு கண்பார்வை போனதை சொல்லவும் குடும்பமா ஹாஸ்பிடல் பில்லை உங்க தலையில் கட்டிட்டு ஓடிட்டாங்க.' என்று கூறியிருக்க ராஜ்குமார் துவண்டவனாய், பார்வை பறிப்போனதற்கு கவலைப்படாமல் சிலையென மாறினான்.
அதன்பின் என்ன நினைத்தானோ, மாமா சசிகுமாராவது வந்தாரே என்று அவரது பொறுப்பில் இரண்டு மூன்று நாட்கள் மேற்பார்வையில் இருந்தான்.
கொஞ்சம் நிதர்சனம் ஏற்றவனாக டாக்டரின் கவுன்சீலிங் கேட்டவனாக, பார்வையற்றவர்கள் உபயோகப்படுத்தும் ஸ்டிக் ம்றும் சசிகுமார் மாமா உதவியோடு மனபாரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அதற்குள் அவன் பாதி களைந்திருப்தான்.
பணியாட்கள் ஒரு புறம் அன்று விபத்து நடந்ததை பற்றியும், இனி ராஜ்குமார் வாழ்க்கை எப்படி மாறுமோ என்று பேசி திரிய நேரம் போதவில்லை. ராஜ்குமார் மாடியில் இருக்க கூடி கூடி இந்த கதை தான் ஓடியது.
சசிகுமார் தான், "மாப்பிள்ளை... அங்க போட்டது போட்டப்படி வந்துட்டேன். உங்களை இங்க விட்டுட்டு போகவும் மனசில்லை. என்ன செய்யலாம்" என்று கேட்டார். இங்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலானது. அங்கே சந்திரா தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று கூறினார்.
ராஜ்குமார் இருந்த மனநிலையில், "நீங்களும் போங்க மாமா. நா..ன்.. நான் பார்த்துக்கறேன். இதுக்கு முன்ன தனியா தானே இந்த வீட்ல உலாத்தினேன்" என்று போக கூறினான்.
அவன் கூறும் பொழுதே மனமொடிந்து கூறியிருக்க, சசிகுமாருக்கு விட்டு செல்லவும் மனமில்லை.
அமைதியாக 'ஒய்வெடுங்க மாப்பிள்ளை' என்று தட்டி கொடுத்து நகர்ந்தார்.
டாக்டர் அறிவுரைப்படி கொஞ்ச காலத்திற்கு ஒரு கேர்டேக்கராக தேவா என்ற ஆணை நியமிக்க பேசியிருந்தார்கள். அந்த பையன் எப்படியும் வந்தப்பின் பொறுப்பில் விட்டுவிட்டு செல்ல நினைத்தார்.
சசிகுமாருக்கு ஓரளவு மனிதாபிமானம் எஞ்சியிருந்தது.
அதனால் மனைவியிடம் தெரிவித்து அடுத்த நாள் வருவதாக போனில் பேசினார்.
தனதறையில் மெத்தையிலேயே நாளெல்லாம் இருட்டை மட்டும் கண்டு பழக்கப்பட, ராஜ்குமாருக்கு வாழ்க்கையே வெறுப்பது போல தோன்றியது.
சசிகுமார் வந்து பேசும் போது கூட, பிடிப்பற்ற வார்த்தையை வீசினான். சசிகுமாருக்கு கூட எரிச்சலாக இருந்தது.
இவனுக்கு கண் போனா அதுக்கும் எரிந்து விழறான, காதலிச்சவ போனதுக்கும் முகம் தூக்கி வச்சிட்டு இருக்கான். உதவினா கூட சலிப்படையறான் என்று ஆதங்கம் கொண்டார்.
ராஜ்குமார் நிலையோ இத்தனை நாள் யாரின் உதவியின்றி வாழ்ந்த அழகான வாழ்க்கை, இரண்டடி எடுத்து வைக்கவும் அடுத்தவர் தயவு தேவைப்படுவதை தாங்க இயலாமல் மனவுளைச்சலில் திளைத்தான். என்ன தான் டாக்டர் கவுன்சீலிங் கொடுத்திருந்தாலும் அது அவனுக்கு போதவில்லை.
அப்படியிப்படி என்று கேர்டேக்கராக தேவா என்ற ஆண் வந்தான்.
சசிகுமார் அவனிடம் பொறுப்பை தந்துவிட்டு ராஜ்குமாரிடம் சொல்லிவிட்டு, விரைவில் அத்தையை அழைத்து வருவதாக கூறி சென்று விட்டார்.
தேவா இதற்கு முன் இப்படிப்பட்டவர்களுக்கு உதவியதால், கண் தெரியாத ராஜ்குமாருக்கு உதவுவதிலும் எளிதாக பழகினான்.
ராஜகுமார் மட்டும் எல்லாவற்றிற்கும் தேவாவின் உதவி நாடுவதில் எரிச்சலடைந்தான்.
சசிகுமார் சென்று இரண்டு நாள் இப்படி தான் மெத்தையில் உயிர் வாழ பிடிக்காதவனாக படுத்தேயிருந்தான்.
"சார்... குளிக்க உதவவா?" என்று கேட்டு நின்றதும், "அய்யோ... குளிச்சிட்டு நான் என்ன ஊர் சுத்தவா போறேன். இந்த ரூம்ல கண்ணு தெரியாம உட்கார்ந்த இடத்திலேயே இருக்க போறேன்." என்று சலித்திட, தேவாவோ, "அப்படி பேசாதிங்க சார். விபத்து நிகழ்ந்து பார்வை போனது வருத்தம் தான். அதுக்காக மனதை விட்றாதிங்க. உங்களுக்காவது ஆப்ரேஷன் செய்தா பார்வை திரும்ப வர வாய்ப்புண்டுனு பேசிக்கிட்டாங்க. பிறவியில இருந்து பார்வை இல்லாதவங்களை நினைச்சி பாருங்க.
இப்படியே முடங்கிட முடியாது. நீங்க எப்படி வேலைக்கு ஆட்கள் வச்சி இத்தனை நாள் சமைத்ததை சாப்பிட்டு ஓடியிருப்பிங்க. இப்ப கொஞ்சம் கஷ்டமான விஷயம் உங்களையும் பார்த்துக்கற பொறுப்பு மற்றவரிடம் வந்திருக்கு.
இப்படியே இருந்தா மனசு பாதிக்கும் சார். டாக்டர் உங்களை சோர்ந்துடாம பார்த்துக்க சொல்லி மருந்து மாத்திரையை சரியா கொடுக்க தான் என்னை உங்களுக்கு கேர்டேக்கரா அனுப்பியிருக்காங்க. ஒத்துழைச்சு பாருங்க. எப்படியும் குளிக்காம இருக்க முடியாது." என்று ஓரளவு சாமர்த்தியமாக பேசி பாத்ரூமிற்கு அழைத்து சென்றான் தேவா.
அவனது அனுபவம் ராஜ்குமாரை தற்காலிகமாக சரிசெய்தது.
பழக்கப்பட்ட தனதறை ஆனால் இன்றோ முற்றிலும் புதிதாக தட்டுத்தடுமாற, கண்ணீர் வழிந்தது. பாத்ரூம் வரவும், "சார் நான் குளிப்பாட்டவா" என்று தேவா கேட்க, "இல்லை... வேண்டாம்... டவல் இங்கவொரு கம்பில வச்சிடு, சோப் இங்க ஏதோ முதல் செல்ப்ல இருக்கும்." என்று தடவவும், கொஞ்சம் கஷ்டப்பட்டான்.
"இங்க சார். இங்க இருக்கு" என்று ராஜ்குமார் கரத்தை சோப்பில் வைத்து அப்படியே ஷவரில் கையை வைத்து காட்டினான் தேவா.
" பத்து நிமிடத்தில் நானே கூப்பிடறேன். நீ போ தேவா" என்று அனுப்ப, தேவா வெளியேறினான்.
ஷவருக்கு கீழே அழுதபடி தன்னிலை நொந்தான்.
செவியால் நீர் விழும் சத்தத்தை கேட்டபடி, தவிக்க, "சார்" என்ற தேவாவின் குரலில், "ஒன்னுமில்லை.. வந்துடறேன்" என்று கூறினான் ராஜ்.
எப்படியும் தான் வேதனைப்படுவதை அறிந்து' சார் சார்' என்று கதவுக்கு பின்னால் தேவா கூப்பிடுவதை அறிந்து குளித்தான்.
டவலை இடுப்பில் அணிந்து கதவை தொட்டு தடவி, தாழ்பாளை திறந்தவனை தேவா கைப்பிடித்து அழைத்து, மற்ற உடைகளை தர அணிந்தான்.
"சார் வெளியே எங்கயாவது போகலாமா?" என்று கேட்க ராஜ்குமார் மறுத்துவிட்டான்.
"இந்த நிலையில் வெளியே போய் எங்கயாவது முட்டி மோதி கீழே விழ நான் தயாராயில்லை தேவா" என்றான்.
ராஜ்குமாருக்கு உணவு வந்ததும் தட்டில் கையை வைத்து சாப்பிட கூற, முன்பு அலட்சியமாக தட்டில் என்ன உள்ளதென்று கூட பாராமல் விழுங்கியவன், தொட்டு தடவி காய்கறியை எடுத்ததும், "இது முறுங்கைகாய், இது கேரட்... ம்ம்.. சாம்பார்ல கேரட்... கண்ணுப் போனப்பிறகு கேரட்" என்று இகழ, "சார்.. சாப்பிடுங்க" என்று தேவா உந்தவும் கண்ணீரை துடைத்து சாப்பிட்டான். அவரைக்காயின் சுவை பொரியலில் உணர்ந்தான்.
"முன்ன தட்டில என்ன இருக்குன்னு கூட கவனிக்க மாட்டேன் தேவா. இப்ப பார்றேன். சாப்பாட்டில் தடவிட்டு இருக்கேன்." என்று கூறி விழுங்கினான்.
அதன்பின் மெத்தையில் ஆக்கிரமிப்பு செய்தப்படி, 'அலைக்ஸா'வில் பாடல் கேட்டிருந்தான்.
மனதை வருடும் காதல் பாடல் ஒலித்திட, ''அலைக்ஸா ஸ்டாப்" என்று கர்ஜித்தான்.
டாக்டர் மூலமாக ராஜ்குமார் ஒரு பெண்ணை காதலித்ததை அறிந்ததால், தேவாவுக்கு காரணம் புரிய, "சார்... இப்படியே ஏதாவது நினைச்சிட்டு கஷ்டப்படாதிங்க. வெளியே வாங்க நான் உங்களை பத்திரமா பார்த்துப்பேன். கொஞ்சம் வெளியே காற்று வாங்கிட்டு வருவோம்." என்று அழைக்க, அரை மனதாக ராஜ்குமார் தேவாவுடன் சென்றான்.
சின்ன குழந்தையை போல ராஜ்குமாரை கைப்பிடித்து தேவா அழைத்து செல்வதை கண்ட வேலைக்காரர்கள் ராஜ்குமார் நிலையை எண்ணி வருந்தினார்கள்.
தேவா ராஜ்குமாரை காரில் ஏற்றி சீட் பெல்ட் அணிவித்து மெதுவாக பயணத்தை துவங்கினான்.
"தேவா... இப்படி ஒரு பயணத்தில் தான் என் கண்ணு போச்சு" என்று ஆரம்பிக்க, தேவாவோ "உங்க கேஸ் ஹிஸ்ட்ரியை டாக்டர் சொன்னார் சார்." என்றான் அவன்.
"என் காதலி என்னை விட்டுட்டு போயிட்டா தேவா. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்" என்றான்.
தேவாவிடம் அமைதி, மெதுவாக காரில் பயணம் செய்ய, மெரீனா பக்கம் வண்டியை செலுத்தினான்.
காற்று சில்லென்று வீசவும், அதனை ஸ்பரிசித்தான். எத்தனையோ முறை காற்று வீசியதை உணர்ந்தாலும் இன்று அந்த காற்றை உணர்வால் அனுபவித்தான்.
கார் மெரீனா பக்கம் வந்தபின் காரை நிறுத்துமிடத்தில் தேடி சரியாக நிறுத்தினான்.
"தேவா ரொம்ப தூரம் போக வேண்டாம். எங்கயாவது உட்கார்ந்த போதும்" என்று கூற அதற்கு ஏற்றார் போல இருக்கும் இடத்தில் தேவா ராஜ்குமாரை அமர வைத்தான்.
குழந்தைகள் விளையாடுவதும், மாங்கா சுண்டல் என்று விற்கும் குரல்களை கேட்டான்.
தேவா ராஜ்குமார் அருகே அமர்ந்து, அங்கே நடக்கும் காட்சிகளை விளக்கினான். ''சார் சுண்டல்?" என்று கேட்க, "வேண்டாம் தேவா" என்றான்.
"சார் பஜ்ஜி? பிரட் ஆம்லெட்?'' என்று கேட்க, "வேண்டாம்" என்று மறுத்தான் ராஜ்குமார்.
"சார் மக்காசோளம்?'' என்று கேட்க, இவன் ஏதாவது வாங்கிவிட்டால் சும்மாயிருப்பான் என்று "பச் சரி வாங்கு போ" என்று கூறிவிட்டான்.
தேவாவோ "இங்கயே உட்கார்ந்து இருங்க சார்" என்று நகர்ந்தான்.
ராஜ்குமார் ஏதேதோ எண்ணத்தில் தடுமாறிக் கொண்டிருந்தான். சில மணி நேரமாய் வண்டி ஓட்டிய சம்பவங்கள் நினைத்தபடி இருக்க, தலைவலிக்கத் தொடங்கியது. மனதினுள் சோனாலியின் காதலை இழந்து தேடிக் கொண்டிருந்தான்.
"அவள் என்னை மறந்து விட்டாளா?" என்று அவன் மனசாட்சியிடம் இதையே பலமுறை கேட்டுக் கொண்டிருக்க, அருகில் அவன் இருக்கையில் சோனாலி அமர்ந்து அவன் இடது கரத்தின் மீது கைகள் வைத்ததாக உணர்ந்தான்.
அந்த கைகள் தன்னை தொட்டு தடவி, ஒரு மெல்லிய குரலில் "ஸாரி யாராவது இருக்கீங்களா?" என்றாள் நேத்ரா. இம்முறை கைகளை விடுவித்து கொண்டன அக்கைகள்.
ஒரு மென்மையான கரம் தனது கரத்தில் தொட்டு தடவி, எடுத்ததும், அக்கைகள் ஒரு இளம் பெண்ணுக்குரியது என்று குரலும் கேட்டு விட்டதும், யாரோ ஒருத்தி தீண்டியதில் அவனுக்கு கோபமே. ஒரு பெண் தானாக வந்து பேசுகின்றாளே என்ற எண்ணம் வேறு.
என்னயிருந்தாலும் தானாக பேச்சை கொடுத்த பெண்ணிடம் பதிலுக்கு "யாரு?" என்றான் ராஜ்குமார்.
"நான் நேத்ரா, என் பிரெண்ட்ஸ் கூட வந்தேன். நீங்கள் இங்க உட்கார்ந்து இருப்பதை இப்ப தான் கவனிச்சேன். நீங்க ஓகே வா? நான் இங்க உட்கார்ந்துக்கலாம் தானே?" என்று ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டாள். லேசான புன்னகை வீசிய கேள்விகள் என்று அறிந்து கொண்ட ராஜ்குமார் தோளைக்குலுக்கினான்.
"என்ன சார்? பதில் இல்லை? நான் உட்காரலாமா? உங்களுக்கு வருத்தமா இருந்தா வேறயிடத்தில் போவேன்" என்றுரைத்தாள்.
"இதென்ன கேள்வி? உட்காரணும்னா உட்காருங்க. கண்ணு தெரியலை என்றால் ஏன் ஓவரா கரிசனம்? ப்ளீஸ் என்னை எரிச்சல் படுத்தாதிங்க" என்றான். நேத்ரா "ஸாரி சார். என்னை போல கண் தெரியாதவங்க பக்கத்தில் உட்கார சிலர் தயங்குவாங்க. அந்த எண்ணத்தில் கேட்டேன். கோபப்படாதீங்க'' என்றாள்.
"என்ன?'' என்றவனுக்கு அவள் கூறியது புரிய, "உங்களுக்கு கண் தெரியாதா?'' என்று ஆச்சரியமாக வினவினான்.
"ஏன் சார் என்னை பார்த்தா தெரியலையா? என்றாள் நேத்ரா.
"இல்லை என்னால பார்க்க முடியாது. எனக்கும் கண் தெரியாது." என்றான் ராஜ்குமார்.
"ஓஹ் அதான் எரிந்து விழுந்திங்களா? எனக்கும் கண் தெரியாது சார். என் பிரெண்ட்ஸ் இங்க தான் வருவதா சொன்னாங்க. அதனால தான் இந்த இடத்தில் உட்கார வந்தேன்" என்று பரிவாய் பேசினாள்.
அந்த நொடியில் தான், ராஜ்குமார் கோபமும் இறுமாப்பும், மெலிதாய் மாறத் தொடங்கின. முதலில் அவன் பேச தயங்கினான், ஆனால் அவள் ஒளிரும் மனதோடு உரையாடியது மெதுவாக அவனை ஈர்த்தது.
தன்னை போல விபத்தில் பார்வை இழந்தவளா? அல்லது எப்படி என்று அறிந்திட நினைத்து, "உங்களுக்கு எப்பத்திருந்து கண் தெரியாம போச்சு?" என்றான்.
அடுத்த நொடியே தவறாக எடுத்துக் கொள்வாளோ என்று பயந்தான்.
"பிறவியிலயே கண் தெரியாது சார்." என்று கூறிவிட, "வாட்? பிறந்ததிலருந்தா?'' என்று கேட்டான். இங்கே கொஞ்சம் நாட்களாக கண் இல்லாமலே ராஜ்குமார் கஷ்டப்படுவதால் அவளது பதிலில் ஆச்சரியம் கொண்டான்.
அந்த நேரம் ஒரு பெண் நேத்ராவிடம் பஸ் டிப்போவிற்கு வழியை கேட்க, நேத்ராவும் வழி கூறினாள். இந்த பெண்ணுக்கு பார்வை இல்லை. அப்படியிருக்க பார்வையற்றவள் வழிக்கூறுவதை கேட்டு ஆச்சரியப்பட்டாலும் கேட்டுக்கொண்டான்.
அதற்குள் தேவா வர, "சார் மக்காசோளம்" என்று நீட்டவும், மறுபுறம், "ஹே நேத்ரா இங்க இருக்கா?'' என்ற குரலும், "நீ வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா நேத்ரா?" என்ற குரலும், "சே சே கொஞ்சம் நேரம் தான். எல்லாரும் வந்தாச்சா? என்று தன்னிடம் பேசிய பெண்ணின் குரலும் கேட்டு ராஜ்குமார் அவர்கள் பேச்சில் கலந்திட முடிவெடுத்தான். ஆனால் நேத்ரா கூட்டமோ,"தண்ணீரில் கால் நனைத்து விளையாட செல்வதாக பேசி செல்ல அமைதியுற்றான்.
"தேவா... இங்க ஒரு பொண்ணு இருந்தாலே, அவ கண் தெரியாதவளா?" என்று கேட்டான். தன்னிடம் பொய் சொல்லி பேசிவிட்டாளா என்ற சந்தேகத்துடன் கேட்டான்.
"ஆமா சார். கண் தெரியாத பொண்ணுங்க இருந்தாங்க. அந்த குரூப் எல்லா பொண்ணுங்களுக்கும் பார்வை குறைபாடு இருந்துச்சு சார். ஏன் சார்?'' என்று கேட்டான். அதன்பின்னே தன் அருகே அமர்ந்து இருந்தவள் மட்டுமில்லாமல் அங்கே வந்தவர்கள் எல்லாருமே அப்படி பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டான்.
"ஒன்னுமில்லை தேவா. சும்மா கேட்டேன்" என்று மக்காசோளம் சுவைத்தான். மனதிலோ பிறவியிலிருந்து பார்வை இல்லாமல் எப்படி வாழ்கின்றார்கள்? என்று குழம்பினான். அவர்கள் வாழும் முறையை அறிந்திட ஆவல் ஏற்பட்டது ராஜ்குமாருக்கு.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
Wow nethra pair for raj. Super super. Really blind people have more confidence than other people. But practically blind people life is so pathetic. But they survive with more confident. I also have some friends who visually impaired for somedays I had the opportunity to travel w8thh them. Really a very challenging life. Fantastic narration sis
நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 3)
நாம தான், உடம்புல ஏதாவது ஒரு பாகத்தை இழந்துட்டாலோ, அடிபட்டுட்டாலோ பெருசா ஒப்பாரி வைச்சு உடைஞ்சு போயிடறதோட, நம்மளை சுத்தி இருக்கிறவங்களையும் நொந்து போக வைச்சிடுறோம். ஆனால், பிறவியில இருந்தே குறைபாடுகளோட பிறந்தவங்க தங்களை சமாளிச்சிக்கிறதோட, தங்களை சார்ந்து இருக்கிறவங்களுக்கும் உதவி புரிஞ்சிக்கிட்டு, அடுத்தவங்களையும் சார்ந்து நில்லாமல், சுயமா தன் காலுலயே நிற்பதோட, சாதனையும் படைக்கிறச்ச அதிசயமாவும், ஆச்சரியமாவும் இருக்குது.
இதுக்குத்தான் நம்மளை விட மேல இருக்கிறவங்களை பார்க்கிறதை விட்டு, நம்மளை விட கீழ இருக்கிறவங்களைப் பார்த்தால் வாழ்க்கையோட தாத்பரியமும், அது நமக்கு கத்துக் கொடுக்க நினைக்கும் அனுபவப் பாடம்
புரியும்ன்னுத் தோணுது.
இந்த நேத்ரா தான் ராஜ்குமாரோட நேத்ரமாவும், நயனாமாவும் இருக்கப் போறவளோ ?
😴😴😴
CRVS (or) CRVS2797
-
நயமே நான் தானடி-5
43 minutes ago
-
நயனமே நான் தானடி-4
1 day ago
-
நயனமே நான் தானடி-2
3 days ago
-
நயனமே நான் தானடி-1
3 days ago
- 26 Forums
- 379 Topics
- 1,924 Posts
- 2 Online
- 442 Members
