நயனமே நான் தானடி-2
அத்தியாயம்-2
எங்கு திரும்பினாலும் வெள்ளை நிறம். சுத்தமாக துடைத்தெடுத்து பளிங்கு மாளிகை போல காட்சியளித்தது ராஜ்குமார் இருந்த இடம். பல ஒயர்களை உடம்பில் சொருகி, இமை மூடி படுத்திருந்தான்.
ராஜ்குமார் உடம்பில் சில இடத்தில் கட்டுப்போட்டு படுத்திருந்தவன் லேசாக வலி தெரிய, இமையை அங்கும் இங்கும் உருட்டினான். மெதுவாக இமை திறக்க முயன்றவன் எதிரில் கருமையே படர்ந்திருந்தது.
கஷ்டப்பட்டு தலையை அசைத்து இமை திறக்க முயன்றவனால் கருமையை தவிர எதையும் பார்க்க முடியவில்லை.
தன் உடலை தடவி பார்த்தான். தன் உடலில் ஊசி மூலமாக மருந்து செல்வதை உணர்ந்தான். மத்துவமனையில் இருப்பதை யூகித்து கொண்டான்.
சோனாலியிடம் தன் காதலை தெரிவிக்க ஆசையாக பூங்கெத்தும் வைர மோதிரத்தையும் வாங்கி காரில் பேசியபடி வந்தது நினைவில் வந்தது.
கடைசியாக பலவித வேதியல் குழாய் தாங்கிய வண்டி, மொத்தமாய் சாய்ந்திட, பக்கத்திலிருந்த ராஜ்குமார் கண்கள் எரிச்சலாகி விபத்து நிகழ்ந்தது படக்காட்சியாக மீண்டும் ஓட்டி பார்த்தான்.
"சோ... சோனாலி சோனாலி.." என்று கத்தினான். காதலை பகிர்ந்த அடுத்த நொடி, இப்படி ஆனதை அவனால் தாங்க முடியவில்லை.
"டாக்டர்... டாக்டர்" என்று அலறாத குறையாக கத்தவும் நர்ஸ் ஓடிவந்து, "மிஸ்டர் ராஜ்குமார் கத்தாதிங்க. நாங்க இங்க தான் இருக்கோம். டாக்டர் உங்க ரிப்போர்ட்டை பற்றி தான் டீனிடம் பேசிட்டு இருக்கார்." என்று கூறி அமைதிப்படுத்த முயன்றாள். காரில் டிரைவிங் லைசன்ஸ் இத்யாதியை போலீஸ் சமர்ப்பித்திருந்தனர். அதில் பெயர் இருக்க, ராஜ்குமாரென்று பெயரோடு செவிலி கூறினாள்.
"சிஸ்டர்... சிஸ்டர்.. எனக்கு கண்ணு திறக்க முடியலை. வெறும் பிளாங்கா... பிளாக்கா.. இருக்கு." என்று பதறினான். என்ன தான் விபத்து நிகழ்ந்தாலும் இமை திறக்க முடியாமல் கருமை சூழ்ந்திருந்தால்? வித்தியாசம் அறியாமலா போவான்.
"ஆமாங்க... அதுக்கு தான் ஐ டாக்டரிடம் பேசிட்டு இருக்காங்க. பதட்டப்படாம இருங்க" என்று ஆறுதலுரைக்க, கண்ணிற்கு ஏதேனும் ஆபத்தா என்று பயப்படுபவன், பதட்டமின்றி இருப்பானா?
அதைமீறி ஓரளவு வசதி வாய்ப்பால் பணத்தை தண்ணியாக செலவழித்திடலாம். இப்பொழுது எல்லாம் மருத்துவ வசதி தான் அபரிதமான மருத்துவ கண்டுப்பிடிப்புகள் உள்ளதே. எப்படியும் தன்னிலை மாறும் என்று உறுதியாக நம்பினான்.
அந்த நம்பிக்கையால் லேசாக நிதானமடைந்தான். மற்றொரு காரணம் ஏதாவது சின்ன பிரச்சனை இருக்குமென்று நினைத்தான்.
"என் கூட என் லவ்வர் சோனாலி இருந்தாங்க. அவளுக்கு என்னாச்சு'' என்று பயந்தான்.
"அவங்களுக்கும் ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கு சார். உயிருக்கு ஆபத்து இல்லை. தற்சமயம் கண் விழிக்க நேரமாகுது" என்று உரைத்ததும் அப்பாடி உயிருக்கு ஆபத்தில்லை" என்று சந்தோஷம் கொண்டான்.
இவனது கவனக்குறைவால் அவளை இழக்க நேரிட்டால் ராஜ்குமாரின் மனம் அவனையே மன்னிக்காது.
"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க சார். டாக்டர் வருவார். அதுக்குள்ள உங்க அப்பா அம்மா ரிலேட்டிவ் யாருக்காவது இன்பார்ம் பண்ணணும். நம்பர் கொடுங்க" என்று ராஜ்குமாரை சாய்விருக்கையில் படுக்க வைக்க, தடுமாறி மெத்தையில் வேறு வழியின்றி படுத்துக் கொண்டான்.
"எனக்கு அப்பா அம்மா இல்லைங்க. தாய்மாமா அத்தை மட்டும் தான். மாமாவும் இங்க சென்னையில் இல்லை. கொடைக்கானலில் இருக்கார்." தாய் மாமா நம்பர் என்று பத்து இலக்க எண்ணை கூறினான்.
அதை செவிலி குறித்துக் கொண்டார். "சோனாலியோட வீட்டு நம்பர்" என்று அதையும் குறிப்பிட்டான்.
"ஓகே சார் அவங்க பேரண்ட்ஸுக்கு இன்பார்ம் பண்ணிட்டு, உங்க வீட்டு தரப்பிலும் சொல்லிடறோம். இப்ப நாங்களே டேஷிப்ட் நைட்ஷிப்ட் நர்ஸ் வந்து பார்த்துப்போம். ஏதாவது அவசியம்னா இந்த பட்டனை ப்ரஸ் பண்ணுங்க" என்று கூறி அவன் கையில் கொடுத்துவிட்டு அகன்றாள் நர்ஸ்.
டாக்டர்கள் குழுவோ, "இல்லை சார்... ஆப்ரேஷன் செய்தா பார்வை கிடைக்க வாய்ப்புண்டு. ஆனா இந்த ஆப்ரேஷன் எந்தளவு சக்சஸ் ஆகும்னு தெரியலை. விபத்து நிகழ்ந்த இடத்துல ஏதோ கெமிக்கல் ஆய்வு குழாயை ஏற்றிட்டு போன வண்டி வெடிச்சதில் கருவிழி படலத்தை அதிகமா பாதிச்சிருக்கு." என்று கலந்து பேச, "வேற வழியில்லைன்னா பேஷண்டிடம் அவங்க சிட்சுவேஷனை சொல்லி தான் ஆகணும்." என்று டாக்டரும் கூறிட, ராஜ்குமாரிடம் இதை எப்படி கூறுவதென்று விழித்தனர்.
எப்படியும் பேஷண்டின் உறவுக்காரர் வந்ததும் அவர் மூலமாக உரைத்திடுவதில் சிக்கல் இருக்காதென்று நினைத்தனர்.
இதற்கிடையே சோனாலி வீட்டில் தகவல் தெரிவிக்க, அவளது அப்பா அம்மா ஓடோடி வந்து சேர்ந்தனர்.
ராஜ்குமாரின் தாய்மாமாவான சசிகுமாருக்கு அழைத்து மருத்துவமனை சார்பில் தகவல் உரைத்தனர்.
சாதாரணமாக கூறியிருந்தால் பரவாயில்லை. "சார் ராஜ்குமார் அவரோட காதலி சோனாலியுடன் கார்ல போறப்ப விபத்து நிகழ்ந்திருக்கு. அவர் தான் உறவினர் நம்பர் கேட்டப்ப உங்க நம்பரை தந்தாங்க. நீங்க கொஞ்சம் உடனே கிளம்பி வாங்க. உயிருக்கு ஆபத்தில்லை... ஆனாலும்... கொஞ்சம் பிரச்சனை தான் வாங்க" என்று கூறி அணைத்து விட்டனர்.
சசிகுமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதல் அதிர்ச்சி, ராஜ்குமார் காதலியுடன் பயணமா? அப்படின்னா காதலிக்கறானா? அப்ப என் மக சஞ்சனா நிலைமை? என்று ஒரு தகப்பனாக வருந்தினார்.
அடுத்து, அக்கா மகனுக்கு விபத்து நிகழ்ந்து உயிர் பிழைத்தாலும் பிரச்சனை என்று கூறுகின்றாரே, என்ன ஆனதோ ஏதானதோ என்று பயந்து மனைவி சந்திராவிடம் உரைத்தார்.
சந்திராவோ, ராஜ்குமார் நிலையை பற்றி சிந்திக்காமல், "உங்க அக்கா பையனுக்கு என்னவொரு இளக்காரம். நம்மிடம் பொறுப்பை ஒப்படைச்சிட்டு அவன் ஹாயா அங்க காதலிக்கறானா? இங்க லாட்ஜ் எல்லாம் வரவு செலவு பண்ணி பணத்தை மட்டும் அங்க நொட்டணும். இத்தனை நாள் மாப்பிள்ளையா வரப்போறவன்னு நினைச்சா, இன்னிக்கு அந்த எண்ணத்தில் மண்ணை அள்ளி கொட்டிட்டானே." என்று பொறுமினார்.
"முதல்ல நான் போய் என்னனு பார்த்துட்டு வர்றேன்" என்றார் சசிகுமார்.
"எதுக்கு... இல்லை எதுக்குன்னு கேட்கறேன். இப்ப தான் சொந்தக்காரங்கன்னு கண்ணுக்கு தெரியுதா? அவன் லவ்வரோட அப்பா அம்மாவே பார்த்து தொலையட்டும்" என்று புலம்ப, என்னயிருந்தாலும் அக்கா மகன், தாய்மாமன் இடத்திலிருந்து ராஜ்குமாரை அம்போவென விடுக்க மனமின்றி சென்னை செல்ல கிளம்பினார்.
சந்திரா புலம்பி தள்ளியபடி, கரித்து கொட்ட, சஞ்சனாவோ லேசான சோகத்துடன் அறைக்குள்ளே கேட்டுக்கொண்டு உடைந்தாள்.
அவளுக்கு ராஜ்குமார் என்றால் ப்ரியமுண்டு. தாய் தந்தையரை போல அவளுமே பல கனவு கண்டதால் வருந்தினாள்.
சசிகுமார் சென்னை வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு வர, அங்கே ராஜ்குமாரின் நிலையை கேட்டு டாக்டரை சந்திக்க வந்தார்.
ராஜ்குமார் மெத்தையில் அந்த நேரம் உறங்கியிருக்க, "அவர் எழுந்துக் கொள்வதற்குள் டாக்டரை பார்த்துட்டு வாங்க சார்" என்று அனுப்பினாள்.
அங்கே டாக்டரை சந்திக்க அறை வரை அழைத்து சென்று நர்ஸ் செல்ல, "ராஜ்குமாருக்கு கண் தெரிவதோ தெரியாததோ எங்களுக்கு பிரச்சனையில்லை டாக்டர். எங்க பொண்ணை நாங்க கூட்டிட்டு போகறோம். அவனால் தான் ஆக்சிடெண்ட் ஆச்சு. மருத்துவ செலவை அவனிடம் வாங்கிக்கோங்க. என் பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணுங்க." என்று சோனாலியின் தந்தை பேசுவதை கேட்க நேர்ந்தது.
"டாக்டர்... நான் ராஜ்குமாரோட மாமா" என்று சசிகுமார் வரவும், "ஆஹ்... பிளட் ரிலேட்டிவ் கூட வந்துட்டாங்க. எங்களை விடுங்க" என்றார் சோனாலி தாய்.
"கொஞ்சம் வெளியே இருங்க" என்று டாக்டர் கோபமாய் அனுப்பிவிட்டு சசிகுமாரை அமர கூறினார்.
"என் மாப்பிள்ளைக்கு என்னாச்சு டாக்டர்" என்று தான் கேட்டார்.
"சார் அவருக்கு ஆக்சிடெண்ட்ல பார்வை பறிபோயிடுச்சு. மெடிஸன் ட்ரீட்மெண்ட் பார்த்தா கொஞ்ச காலத்துக்கு பிறகு சில ஆப்ரேஷன் செய்தா பார்வை வரலாம்.
சிம்பிளா இதான் சார். இதை தான் ராஜ்குமார் லவ் பண்ணற பொண்ணோட அப்பா அம்மாவிடம் சொன்னேன். வாயுக்கு வந்தபடி பேசிட்டு அவங்க பொண்ணை கூட்டிட்டு ஓட பார்க்கறாங்க. மனிதாபிமானம் இல்லாதவங்க." என்று எரிந்து விழுந்தான்.
சசிகுமாருக்கு அதிர்ச்சி தான். ஆனால் சூழ்நிலையை கையாள வேண்டிய இக்கட்டு உள்ளதே.
"ராஜ்குமாருக்கு இது தெரியுமா?" என்று கேட்டார்.
ஆக்சிடெண்ட்ல எழுந்ததிலருந்து கண்ணு பிளாக்கா தெரியுதுன்னு சதா சொல்லிட்டே இருந்தார். இன்னமும் அவரிடம் நேரிடையா சொல்லலை. கண்ணை கட்டி வச்சியிருக்கு. அப்படி தான் இருக்கும் பொறுமையா இருங்கனு சொல்லி வச்சியிருக்கு. ஆக்சுவலி அவரோட ரிப்போர்டை ஒரு டாக்டரிடம் காட்டிட்டு பிறகு சொல்லலாம்னு வெயிட் பண்ணினோம். ரிப்போர்ட் இன்னிக்கு தான் அனுப்பி விஷயத்தை சொன்னார்.
ஏன்னா இந்த சோனாலி பேரண்ட்ஸ் டார்ச்சர்ல ராஜ்குமாரை கண்ட்ரோல் செய்ய எங்களுக்கு அவங்க உறவு சார்ந்த ஒருத்தர் தேவைப்படவும் நீங்க வரும்வரை அவருக்கு கண்ணு தெரியாது என்பதை சொல்லலை. நாங்க பக்குவமா சொல்லறோம். நீங்க ராஜ்குமாருக்கு மாரல் சப்போர்டா இருங்க." என்று கூற சசிகுமார் வேறென்ன கூறுவதென்று வேதனையுடன் சம்மதமாய் தலையாட்டினார்.
"நர்ஸ் அந்த சோனாலி பேஷண்டை டிஸ்சார்ஜ் பண்ணி தொலைச்சிடுங்க. போய் தொலையட்டும்." என்று எரிச்சலாக பேசினார்.
சசிகுமார் தயக்கமாய் டாக்டரிடம், "அந்த பொண்ணுக்கு என்னாச்சு டாக்டர்" என்று கேட்டார்.
"அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகலை ஆக்சிடெண்ட் ஆனப்ப ஏர்பேக் வந்து சேஃப்பா தான் இருந்தா. ராஜ்குமாருக்கு கூட அடியெல்லாம் இல்லை. ஏர்பேக் இருந்ததால் சேஃப்பா இருக்கார். ஆனா மோதின வண்டி ஏதோ வேதியல் குழாய்களை ஏற்றி வந்திருக்கு. ஆபத்தான கெமிக்கல் விபத்து நடந்து மோதவும் வெடிச்சிருக்கு. சோனாலி கண்ணை இறுக மூடியிருக்காங்க. ராஜ்குமார் கண்ணை திறந்தது தான் பிரச்சனை. கண்ணுல பார்வை இழக்கற அளவுக்கு கொண்டு போயிடுச்சு" என்று விவரித்தபடி ராஜ்குமார் இருந்த அறைக்கு அழைத்து வந்தார்.
டாக்டர் வரவும், "நர்ஸ் எனக்கு என்னாச்சுனு இப்ப சொல்ல போறிங்களா இல்லை. சோனாலி ஏன் என்னை பார்க்க வரலை. அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சா. ப்ளீஸ் எதுனாலும் சொல்லுங்க. நீங்க ஏதோ மறைக்கறதை பார்த்தா எனக்கு பயமாயிருக்கு. என் சோனாலிக்கு ஏதாவதுன்னா செத்து போயிடுவேன்." என்று பிதற்றினான்.
"டாக்டர்" என்று நர்ஸ் அழைக்க, "டாக்டர் வந்துட்டாரா? டாக்டர் டாக்டர் எனக்கு என்னாச்சு. நர்ஸ் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. நீங்களாவது சொல்லுங்க." என்று கெஞ்ச, "ராஜ்குமார்... இந்த விபத்துல உங்க சோனாலிக்கும் அவங்க உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு நிகழலை. அவங்க பேரண்ட்ஸ் வந்து சோனாலியிடம் ஏதேதோ சொல்லி பேசி கூட்டிட்டு போயிட்டாங்க." என்று கூற, "கூ..கூட்டிட்டு பேயிட்டாங்களா?" என்றவன் மெதுமெதுவாய் "பொய் சொல்லறிங்களா? என் சோனாலி என்னை விட்டு போயிருக்க மாட்டா." என்று கேட்க, "பச்.. இல்லை. அவங்களுக்கு எதுவும் ஆகலை. உங்களுக்கு தான் பார்வை தற்காலிகமா இழந்திருக்கிங்க" என்றார்.
"பார்வை.. தற்தாலிகமானா?" என்றவன் குரல் உள்ளுக்குள் செல்ல, "ஆமா.. நீங்க கண்பார்வை இழுந்திருக்கிங்க." என்று கூற ராஜ்குமார் முகத்தை தொட்டு தொட்டு பார்த்து கைக்கு அருகே இருந்தவையை தட்டி விட்டு "நோ" என்று அலறினான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 2)
அடேய்.. உன் சோனாலி, ஹாஸ்பிட்டல் பில்லைக் கூட உன் தலையில கட்டிட்டு அப்பவே ஓடிப் போயிட்டாள். நீ தான், என் சோனாலி சொக்கத் தங்கம்ன்னு கூறுகெட்டத்தனமா புலம்பிட்டு இருக்கே. எல்லாம் நம்ம கையில
இருக்கிற வரைக்கும்தான், நம்மளை சுத்தி சுத்தி வருவாங்க, ஏதாவதொண்ணு நம்ம கையை விட்டு போயிடுச்சின்னா நம்மளை சுத்தறவங்களும் நம்மளை விட்டு ஓடிப்போயிடுவாங்க, இது தான் நிதர்சனம்.
😴😴😴
CRVS (or) CRVS2797
-
நயமே நான் தானடி-5
41 minutes ago
-
நயனமே நான் தானடி-4
1 day ago
-
நயனமே நான் தானடி-3
2 days ago
-
நயனமே நான் தானடி-1
3 days ago
- 26 Forums
- 379 Topics
- 1,924 Posts
- 1 Online
- 442 Members
