Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-48

7 Posts
7 Users
1 Reactions
42 Views
(@praveena-thangaraj)
Posts: 312
Member Admin
Topic starter
 
[#394]

அத்தியாயம்-48

சாரதி லாவண்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, வாசலிலேயே அலமேலு அவனை பார்த்துவிட்டார்.

"வாங்க மாப்பிள்ளை வாங்க சம்பந்தி" என்று முகம் நிறைய புன்னகையுடன் வரவேற்றவர், அவன் கையில் இருந்த பழமும் பூவும் கொண்ட பையை நீட்டவும் வாங்கிக் கொண்டார்.

அதற்குள் வெளியே வந்த புருஷோத்தமனும், "வாங்க மாப்பிள்ளை... வாங்க. நல்ல நேரத்துல வந்துட்டீங்க." என்று அவன் தோளைத் தட்டிக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

சாரதி உள்ளே நுழைந்தவுடனே சுற்றிலும் பார்த்தான். இதற்கு முன் லாவண்யா அலமேலு அத்தையிடம் அடி வாங்கியதை போன் வழியாக கேட்டு வந்த அன்று நுழைந்தான். ஆனால் எதுவும் சரியாக கவனத்தில் இல்லை. இன்று இவ்வீடு பரபரப்பாக இருந்தது.

இன்று மாலதிக்கு வளைகாப்பு என்பதால், பதினோரு மணிக்கே விழா ஆரம்பமாகிவிடும்.
வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள்.

"லாவண்யா" என்று அலமேலு குரல் கொடுக்க,

"ம்மா" என்று உள்ளிருந்து பதில் வந்தது.

"இங்க வாடி. வேலை இருக்கு." லாவண்யா வெளியே வந்தவள், ஹாலில் ஜோராக அமர்ந்த சாரதியை பார்த்ததும் ஒரு நொடி ஆனந்தப்பட்டாள்.

அவன் இன்று வழக்கமான சட்டை, பேண்ட் அணிந்திருந்தாலும், அந்த எளிமையே அவனுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்திருந்தது.

முழுக்கை சட்டை, அதற்கு ஏற்ற பேண்ட், சுருட்டை முடியை கைகளால் கோதியபடி, தந்தை புருஷோத்தமனுடன் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்ததும் லாவண்யாவின் கண்களில் ஒரு சிறிய புன்னகை வந்து போனது.
"என்னடி அங்கேயே நின்னுட்ட?" அலமேலுவின் குரலில் திரும்பியவள், ''வர்றேம்மா..." என்று அவரிடம் சென்றாள்.

"முதல்ல மேடையில பழத்தட்டுலாம் அலங்காரம் செய்து தட்டை ரெடி பண்ணு. ஒத்த எண்ல அமையணும். இருபத்தியோரு தட்டு வரணும்.
அப்புறம் போய் நல்லா சேலை கட்டிக்கிட்டு வா. இன்னைக்கு நீயும் முன்னாடி நிக்கணும்." என்றார்.

"நானா சேலையா கட்டிக்கணும்" என்று கேட்டாள்.

"ஆமாம் நீ தான். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாரும் வருவாங்க. நீ அப்படியே வீட்டுல இருக்கிற மாதிரி சுடிதார் ஷாலுனு இருக்கக் கூடாது. உங்கப்பா வேற சாரதி மாப்பிள்ளையை சொந்த பந்தத்துக்கு அறிமுகப்படுத்துவார். நல்ல சேலை கட்டு" என்று அலமேலு அவளை வேலைக்குள் இழுத்துக் கொண்டு கூறினார்.

காஞ்சனாவும் இலக்கியாவும் ஏற்கனவே அங்கே நலன் விசாரித்து உபசரித்து அமர்ந்தனர்

லாவண்யா அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்ததும், அலமேலுவின் பேச்சு வழக்கம் போல் மகளிடம் அதட்டியபடி ஓயவே இல்லை.

"அந்த தட்டுல பூ வைச்சாச்சா?"

"வைச்சாச்சு அம்மா"

"மாம்பழம் எங்கே?"

"அதோ இருக்கு."

"அதை இப்படி போடாதீங்க. நல்லா அடுக்கி வைங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி நம்ம வீட்டு தட்டு பளிச்சினு தெரியட்டும்" என்று சொல்லிக்கொண்டே, ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டிருந்தார்.

சாரதி ஒரு பக்கமாக நின்று அந்த வீட்டின் பரபரப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு எல்லாமே புதிது. இவ்வளவு பேருடன் சேர்ந்து ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்வது அவனுக்கு ஒரு விதமான தயக்கத்தையே கொடுத்தது. தந்தை இருந்தவரை கூட பெரிதாக குடும்ப விழாவில் கலந்துக் கொண்டதில்லை.

ஆனால் அந்த தயக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றான்.

சிறிது நேரத்தில் அவனது தேவதை லாவண்யா சேலை கட்டி வந்தாள். அவளை பார்த்த சாரதியின் பார்வை அப்படியே ஸ்தம்பித்து நின்றது.

எப்போதும் சுடிதாரிலேயே பார்த்துக் கொண்டிருந்தான். மாலதியின் திருமணத்தில் சேலை உடுத்தி புகைப்படமாக அனுப்பி, ஹார்டின் விட்டாலும், நேரில் பார்க்க கொள்ளை அழகில் மிளிர்ந்தாள்.

கையில் வளையல்கள். முகத்தில் மெல்லிய அலங்காரம்.
நெற்றியில் சிறிய பொட்டு. முடியை ஒழுங்காக வாரி மல்லிகை பூவை சூடியிருந்தாள்.
அவள் சாரதியை பார்த்ததும், அவன் பார்வை தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, சட்டென்று பார்வையை தாழ்த்தி வெட்கத்துடன் திருப்பினாள்.

அவன் மட்டும் அசையவில்லை.
"மாப்பிள்ளை" என்ற புருஷோத்தமனின் குரலில் தான் சாரதி தன்னுடைய பார்வையை விலக்கினான்.

"ம்... மாமா." என்று அதிர்ந்தவன் "வேன் வந்துடுச்சு. எல்லாரும் கிளம்பலாம்." என்று அவர் கூப்பிட, லாவண்யாவை கண்டு மாமனாரை பின் தொடர்ந்தான்.

சிறிது நேரத்தில் அனைவரும் வேனில் ஏறி மண்டபத்திற்குப் புறப்பட்டார்கள்.

மண்டபத்தை அடைந்ததும், சாரதிக்கு இன்னொரு புதிய அனுபவம் காத்திருந்தது.

வந்தவர்களைப் பார்த்துப் பார்த்து அவனுக்கே தலைசுற்றியது. அவன் சொந்தம் பந்தம் கல்யாண விழா வளைகாப்பு விழா என்று சென்று பத்து வருடத்திற்கு மேலாக இருக்கலாம். அதனால் வேடிக்கை பார்த்தான்.

யார் யாரோ வந்து கொண்டிருந்தார்கள். லாவண்யாவின் சொந்தக்காரர்கள், நெருங்கியவர்கள், தூரத்து உறவினர்கள், அலமேலுவின் சொந்தங்கள், விக்னேஷின் வீட்டார் என்று மண்டபமே உறவுகளால் நிரம்பியிருந்தது.

அதிலும் புருஷோத்தமன் சாரதியை தனியாக விட்டுவைக்கவே இல்லை.

அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு வரவேற்பில் அழைத்துச் சென்றார்.

"இவர் யாரு?" என்று கேட்பவர்களுக்கு "இவர் நம்ம லாவண்யாவுக்கு பார்த்து வச்சிருக்கற மாப்பிள்ளை. படிப்பு முடியவும் கல்யாணம்" என்று 'சின்ன மாப்பிள்ளை' என்ற உறவிலேயே சொல்லியே அறிமுகப்படுத்தினார்.

அடுத்து இன்னொருவர், மீண்டும் இன்னொருவர் சங்கத்து ஆட்கள், கூட அறிந்தவர் தெரிந்தவரிடம் அப்படி தான் தெரிவித்தார்.

"இவர் அலமேலுவோட அண்ணன்..."

"இவர் நம்ம சொந்தம்... எங்க அப்பாவுக்கு ஒன்னு விட்ட அத்தை வழி சொந்தம்"

"இவர் மாலதி வீட்டுக்காரங்க..." என்று ஒவ்வொருவருத்தரையும் சாரதிக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.

சாரதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒவ்வொருவரிடமும் சிரித்து வைத்தான், மரியாதைக்கு வணக்கம் சொன்னான்.

அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னான். அதற்குள் இன்னொருவர் வந்து நிற்பார்.

அவனுக்கு மயக்கம் வராத குறைதான். ஆனால் அந்த மயக்கத்தைவிட, லாவண்யாவை சுற்றி நடந்துகொண்டிருந்த சில பார்வைகள் அவனுக்கு இன்னும் தெளிவாகத் தெரிந்தன.

விக்னேஷ் வீட்டாரும் அங்கே இருந்தனர். லாவண்யாவை முன்பே பெண் கேட்டிருந்தவர்கள். அவர்களிடம் புருஷோத்தமன் எந்த தயக்கமும் இல்லாமல் சாரதியை அழைத்துச் சென்றார்.

"இவர் தான் சாரதி. லாவண்யா படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை. பி.காம் முடிச்சிருக்கார். அப்பாவோட வேலையை ஆத்ம திருப்திக்காக கண்டெக்டரா பார்த்துட்டு, புட்பால் கோச்சிங் கொடுக்கறார்." என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

அந்த வார்த்தைகள் சிலருக்கு முகத்தில் ஒரு நொடிக்காவது மாற்றத்தை ஏற்படுத்தியது. சாரதியோ தவிப்பாய் மாமனாரை பார்த்து, "கண்டெக்டர்னு சொல்ல கஷ்டமா இருக்கா மாமா?" என்று கேட்டான்.

"இல்லை மாப்பிள்ளை... என் பொண்ணு உடம்பு முடியாம வாந்தி எடுத்தப்ப, முகம் சுளிக்காம அவளை பார்த்துக்கிட்டப்பவே இந்த வேலையால இழிவா நான் பெசி உங்களுக்கு கஷ்டத்தை தரக்கூடாதுனு முடிவெடுத்துட்டேன்." என்றார்.

விக்னேஷ் வீட்டாட்கள் சிலர், லாவண்யாவை தங்களுடைய வீட்டிற்கு எதிர்பார்த்திருந்தவர்கள், இப்போது அவள் வேறொருவருடைய மனைவியாகப் போகிறாள் என்பதை நேரடியாகக் கேட்க வேண்டிய நிலை. அவர்களின் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.

ஆனால் விழா என்பதால் வெளிக்காட்டவில்லை. சாரதிக்கு அந்த மாற்றம் புரிந்ததோ இல்லையோ, புருஷோத்தமனின் கையில் இருந்த சாரதியின் கையை மட்டும் அவர் மெதுவாக இறுக்கிக் கொண்டார்.

இவ்வளவு பேருக்கு நடுவுல என்னை ஏன் இப்படி நிறுத்தி வைக்கறார் என்ற சலிப்பில் இருந்தான். மாமனார் கையை பிடித்திடவும், பேசவும், அடுத்த நொடியே புருஷோத்தமனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்ததும், அந்தச் சலிப்பை அப்படியே மறைத்துக் கொண்டான்.

மாலதிக்கு வளைகாப்பு விழா ஆரம்பமானது.

முதலில் மாலதிக்கு அவளுடைய மாமியார் வீட்டு பக்கத்தினர் நலங்கு வைத்து, வளையல்கள் அணிவித்தார்கள். பெண்களின் சிரிப்பும் பேச்சும் கலந்து அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

லாவண்யா காஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

"அத்த... நீங்களும் வாங்க" என்று தனது மாமியாருக்கு முதலிடம் தர விரும்பினாள்.

காஞ்சனா உடனே மறுப்பாய் தலையசைத்தார்.

"இல்லைடா... நீ போ" என்று மறுத்தார்.

"ஏன் அத்தை. எல்லாரும் மேல இருக்காங்க." என்று அழைக்க, காஞ்சனாவோ "இல்லைடா. சிலர் என்னை மாதிரி ஆட்களை விரும்பமாட்டாங்க. இது உங்க அக்கா மாலதி பங்ஷன். அதனால தவிர்ப்பது நல்லது. நீ போ. உன் வளைகாப்புக்கு நான் எல்லாத்திலும் முன்ன நிற்பேன்." என்று மெதுவாக மறுத்து அனுப்பினார்.

லாவண்யாவின் முகம் சற்றே வாடியது. அவள் அப்படியே அலமேலுவைப் பார்த்தாள்.

அதைப் புரிந்துகொண்ட அலமேலு, "போடுங்க சம்பந்தி" என்று காஞ்சனாவிடம் சொன்னார்.

"இருக்கட்டும் அண்ணி... சின்ன பிள்ளை ஆசையா கூப்பிடுறா. சில நேரம் பொண்ணை கொடுத்துட்டு ஏதாவது நீங்க பேச்சு வாங்க வேண்டாம். சில நேரத்துல ஒதுங்கி நின்றா கூட நல்லது தான்" என்று சாரதி போலவே பேசினார்.

அதற்குள் சாரதி அம்மா காஞ்சனா அருகே வந்தான், "நீ போடா... லாவண்யாவை கூட்டிட்டு போ. நம்ம சாரதி வந்துட்டான் அவனோட போ" என்று சொல்லிவிட்டார்.

லாவண்யாவின் முகம் உடனே மலர்ந்தது.

அவள் சாரதியின் கையை இழுத்துக் கொண்டு சென்றாள்.

சில நிமிடங்களில் அவளுடைய கைகளிலும் அழகான வளையல்கள் மின்னின. லாவண்யா உரிமையாக இழுத்து செல்லவும் தான் அது காதல் கல்யாணம் என்ற சந்தேகத்தை விதைத்தது. ஆனால் அதே கேஸ்ட் என்பதால் இலக்கியா வழியில் உறவினர்களாக இருப்பார்களோ என்றும் தோன்றியது.

சந்தனம் பூசிக் கொண்டு, முகத்தில் மென்மையான புன்னகையுடன் லாவண்யா அக்கா முன் அங்கே நின்றாள். இஷிதாவும் சந்தனம் பூசி வளையல் அணிந்து கையை குலுக்க அழகாக இருந்தது.

சாரதியின் பார்வை மீண்டும் லாவண்யாவிடம் சென்று நின்றது. இந்த முறை அவன் பார்வையை மறைக்கவே முயலவில்லை.

அவள் கைகளில் மின்னிய வளையல்கள்... அந்த வளையல்களுக்கு நடுவே தெரிந்த மென்மையான விரல்கள்... நெற்றியில் இருந்த சிறிய பொட்டு... முகத்தில் படர்ந்த சந்தனத்தின் மஞ்சள் நிறம்... எல்லாவற்றையும் தாண்டி அவள் முகத்தில் இருந்த அந்த இயல்பான வெட்கம்... அவளை பார்த்துக் கொண்டே இருந்தான்.

கண்ணை எடுக்கவே மனம் வரவில்லை.

லாவண்யாவுக்கும் அவன் பார்வை புரிந்தது. அவள் நேராக அவனைப் பார்க்காமல், கீழே பார்த்தபடியே சிரித்தாள்.

அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் சாரதியின் முகத்திலும் தானாக ஒரு புன்னகை மலர்ந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு புருஷோத்தமன் சாரதியை தனியாக அழைத்துச் சென்றார்.

"மாப்பிள்ளை..."

"சொல்லுங்க மாமா." அவர் சில நொடிகள் அவனைப் பார்த்துவிட்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

"லாவண்யாவை பிளஸ் டூ முடிச்சப்பவே சொந்தத்துல கட்டிக் கொடுக்க கேட்டு வந்தாங்க." சாரதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"அவ படிக்கணும்னு சொல்லி தான் அப்போ மழுப்பினேன். அவளுக்கு படிப்பு முக்கியம்னு தெரியும். அதனால யாருக்கும் எந்த பதிலும் சொல்லாம இருந்தேன். ஆனா மாலதி கல்யாணத்துக்குப் பிறகு தினமும் ஏதாவது ஒரு வீடு தேடி வரன் வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுல அந்த பவன் வேற வந்து நின்னதும்... அப்பவே ஒரு முடிவுக்கு வந்துட்டேன்."

சாரதியின் முகம் சற்றே இறுக்கமடைந்தது. பவனால் பயந்திருப்பது தெரிந்தது‌

"அவ படிப்பு முடியவும் கல்யாணம் பண்ணிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.
லாவண்யா ஜாதகத்துல... அவ மனசுக்கு முரணா ஏதாவது நடந்தா, அவ இல்லாம போயிடுவான்னு சொல்லியிருந்தாங்க." சாரதி உடனே அவரைப் பார்த்தான்.

"அந்த வார்த்தை எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு மாப்பிள்ளை." அவருடைய குரல் சற்று தளர்ந்தது.

"அதுவும் அவ காதலிக்கறான்னு சொன்னதும் இன்னும் பயந்துட்டேன். நீங்க வேற சாதில யாராவதா இருந்திருந்தா கூட, இந்தக் காதலுக்கு நான் ஒத்துக்கிட்டிருப்பேனா தெரியாது." சாரதி அமைதியாக இருந்தான்.
"அன்னிக்கு சித்தப்பா இறப்புக்கு, நாம சம்மதமா பேசிட்டு வந்த கொஞ்ச நாள்லேயே பவன் வந்து நிக்கறதை கேட்டதும்... என் மனசு படபடன்னு இருந்துச்சு. ஆனா..." என்று அவனைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தார்.

"அப்ப நீங்க பார்த்துப்பீங்கன்னு நம்பினேன்." அந்த வார்த்தை சாரதியின் மனதைத் குளிர்வித்தது..

"இருந்தாலும்... கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சிடணும்னு மனசு அடிச்சுக்குது." அவர் சாரதியின் தோளைத் தட்டினார்.

"இன்னிக்கு உங்களை எல்லாருக்குமே அறிமுகப்படுத்தி, குடும்பத்துல ஒருத்தரா பார்த்தாச்சு. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்." என்றார்.

சாரதி லேசாகப் புன்னகைத்தான். "நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை." என்று சொன்ன புருஷோத்தமன் அடுத்த நொடியே சாரதியைக் கட்டிக் கொண்டார்.

''லாவண்யா இனிமே உங்க பொறுப்பு." அந்த வார்த்தைகளில் ஒரு தந்தையின் நிம்மதியும், நம்பிக்கையும் இருந்தது.

சாரதி என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே நின்றான். அவனுக்கு இதுப்போன்ற பேச்சு பழக்கமற்றதாயிற்றே.

விழா முடியும் நேரம் நெருங்கியது. அலமேலு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரோ "மாப்பிள்ளை சாரதி எங்க? கிளம்பிட்டாரா?" என்று கேட்டார்.

அதைக் கேட்ட லாவண்யா உடனே முகத்தைச் சுளித்துக் கொண்டு, "ஆங்... வளைகாப்பு விழாவுக்கு வாங்க வாங்கன்னு கூப்பிட்டுட்டு... ஐந்து வகை சாதம்னு கருவேப்பிலை சாதம், லெமன் ரைஸ், புளியோதரை, தேங்காய் சாதம், பிரிஞ்சுன்னு போட்டா... போகத்தான் செய்வாங்க." என்று அன்னையை ஓட்டினாள்.

அலமேலு மகளை முறைத்தார்.
"என்னடி பேசற?" அவள் பின்னால் நின்றிருந்த சாரதியை பார்த்ததும் அலமேலு சட்டென்று அமைதியாகி, "சரி... நான் அங்கே போறேன்." என்று நைஸாக நழுவினார். சாரதி போனால் கையில் கொடுத்துவிட, பழமும், சில பல பண்டமும் தந்துவிட தான் கேட்டார்.

லாவண்யா அன்னை ஏன் திரும்ப பேசாமல் போனார் என்று திரும்பிப் பார்த்தாள். சாரதி அங்கே கையை கட்டிக்கொண்டு அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.

அந்தப் பார்வையே, 'என்னடி பேசற? வெஜ்னா கோபமா போவேனா' என்று கேட்பது போல இருந்தது.

லாவண்யா உடனே சிரித்தாள். "இஇஇஇ.. பின்ன என்ன சாரதி..."
என்று ஆரம்பித்தவள், "அக்கா கல்யாணத்துல அழகழகா டிரஸ் போட்டு உனக்காக அனுப்பி, 'அழகாயிருக்கேனானு கேட்ட' சாட்டை எல்லாம் பார்த்துட்டு ஹார்ட் விடறானா ஹார்ட்? எவன்டி சாரதினு துடைப்பத்தால முழங்காலுக்கு கீழே அடிவெளுத்துட்டு... இப்ப பாரு வரவேற்பை" என்று சொல்லி சிரித்தாள்.

"இப்போ மாப்பிள்ளை போறாரானு சோகமா கேட்கறாங்க. ஏன் கறியும் மீனுமா வச்சாங்க" என்று நக்கலாக பேச,

"ம்ஹூம்..." ன்று சாரதி இவளை என்னத்த சமாளிக்க என்று நின்றான்.

"அப்ப நான் பார்த்த முத்தக்காட்சியை எல்லாம் சம்பந்தியிடம் சொல்லிட்டா... உன் முதுகு தோலையே உரிச்சு எடுத்திருப்பாங்களா லாவண்யா" என்று பின்னால் இருந்து காஞ்சனா வந்து கேட்டார்.

'ஏன்மா...' என்பது போல சாரதி பாவமாக அவரைப் பார்த்தான்.

லாவண்யா உடனே சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"அத்த... ஏன் ஏன் இந்தக் கொலைவெறி?" என்று சாரதியை கண்டு அவன் பின்னால் மறைந்து சிணுங்க, காஞ்சனா லாவண்யாவைப் பார்த்து சிரித்தார்.

"எல்லாம் நீ பண்ணி வச்ச வேலைதான்டா." என்று கேட்க, அம்மா.. ஏன்மா..' என்ற ரீதியில் அசடு வழிந்தான்.‌

"சரி... நாங்க கிளம்பறோம். நீ லீவு முடிச்சிட்டு வா." என்று லாவண்யாவிடம் தெரிவித்தான்.
காஞ்சனா லாவண்யாவை அணைத்துக் கொண்டார்.

சாரதியும் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்புவதற்காக வந்திருந்தான்.

ஆனால் அவனுக்கு தனிமை என்பதே கிடைக்கவில்லை. ஒன்று லாவண்யாவை சுற்றி யாராவது இருந்தார்கள்.
இல்லையென்றால் சாரதியை யாராவது குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் அவனிடம் பேசி விட்டு சென்றார்கள்.

சிலர் அவனைப் பார்த்து ஏதோ மற்றவர்களோடு பேசிக்கொண்டு சிரித்தார்கள்.

வேறு சிலரின் பார்வை அவனைப் பின்தொடர்ந்துக் கொண்டே இருந்தது.

இத்தனை நேரமும் உறவுகள், விழா, பேச்சு என்று பரபரப்பாக இருந்தவன், இப்போது தான் ஒரு விஷயத்தை உணர்ந்தான்.

இந்த வீட்டில் அவன் விருந்தாளியாக மட்டும் வரவில்லை. லாவண்யாவின் வாழ்க்கைக்குள் அவனும் சேர்ந்துவிட்டான்.

அந்த எண்ணம் மனதிற்குள் ஏதோ ஒரு இனிய சுமையை ஏற்படுத்தியது. லாவண்யாவை கடைசியாக ஒரு முறை பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரின் பார்வையும் ஒரு நொடி நேர்க்கோட்டில் சந்தித்தது. சொல்ல வேண்டிய வார்த்தைகள் எதுவுமில்லை.
ஆனால் அந்த ஒரு பார்வையே நிறைய சொல்லிவிட்டது.

சாரதி மெதுவாகத் திரும்பி நடந்தான்.

அவளிடம் சொல்லி விடைபெற்றுச் செல்ல வந்தவன்... வார்த்தைகளால் அல்ல, விழிகளாலேயே விடைபெற்று சென்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

அடுத்த அத்தியாயமும் பதிவிடறேன். வாசித்துடுங்க. 


 
Posted : October 11, 2026 9:15 am
Kalidevi reacted
(@guna-sundari)
Posts: 181
Estimable Member
 

Laya father happy about sarathy. Next marriage.  Fantastic narration family and relatives in a family function sis. Me too attend the malathi baby shower function while read it. Wonderful narration sis.


 
Posted : October 11, 2026 9:30 am
(@kothaihari)
Posts: 158
Estimable Member
 

சூப்பர் செம


 
Posted : October 11, 2026 10:07 am
(@aishu-selva)
Posts: 78
Trusted Member
 

Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super 


 
Posted : October 11, 2026 10:24 am
(@crvs2797)
Posts: 235
Reputable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 48)

அட.. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என்கிற மாதிரி, வளைகாப்புக்கும் கூப்பிட்ட மாதிரியாச்சு, அதேநேரம் சாரதி தான் ரெண்டாவது மாப்பிள்ளைன்னு சொந்த பந்தத்திற்கும் அறிமுகப்படுத்தின மாதியாகிடுச்சு போங்க.

😉😉😉
CRVS (or) CRVS 2797


 
Posted : October 11, 2026 12:06 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 165
Estimable Member
 

Sarathy ah intro panna than valaikaappu ku ivolo force panni koopitathu pola


 
Posted : October 12, 2026 9:50 am
(@kalidevi)
Posts: 170
Estimable Member
 

INTHA KANNALA NADAKURA PAARVAI PARI MATRATHUKU EDU ENAIYE KEDAIYATHU 


 
Posted : October 23, 2026 3:33 pm

Scroll to Top