Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-52

8 Posts
8 Users
2 Reactions
198 Views
(@praveena-thangaraj)
Posts: 260
Member Admin
Topic starter
 
[#256]

அத்தியாயம்-52

     காவல் நிலையத்தில் வசந்த் மற்றும் அவனது நண்பர்கள் மீது புகார் அளித்துவிட்டு, இனியன் அதியமானுடன் வெளியே வந்தான்.

வசந்த் போலீசாரின் கண்காணிப்பில் ஓரமாக நின்றிருந்தான்.

அவனை நோக்கி மெதுவாக நடந்துச் சென்ற இனியன், அவன் முன் நின்று அனல் தெறிக்கும் குரலில் பேச ஆரம்பித்தான்.

"இங்க பாருடா... என் தங்கச்சிக்கு உன்னைப் பிடிச்சிருந்தா, அவளாவே 'நான் இவனை காதலிக்கிறேன்'ன்னு சொல்லியிருந்தா. அகிலனும், எங்க சித்தப்பாவும் நீ நல்ல பையனானு விசாரிச்சு பார்த்து, ஒரு நிமிஷம் கூட யோசிக்காம கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க.

ஆனா... நீ பேசுற பேச்சு... நடந்துக்குற விதம்... எல்லாமே ஒன்னும் நல்லதா இல்லை" என்றதும் வசந்த் தலையை குனிந்தான்.

   இனியன் அவன் சட்டையைப் பிடித்து அருகே இழுத்தான். "என் தங்கச்சியை சீரழிப்பேன்னு பேசுற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா? அடுத்த தடவை அந்த மாதிரி ஒரு வார்த்தை இனி உன் வாயிலிருந்து வந்துச்சுன்னா...

உயிரோட இருந்தாலும், வாழ்நாள் முழுக்க நினைவில் இருக்கிற மாதிரி நிலைக்கு உன்னை ஆளாக்கி விட்டுடுவேன்.

அகிலன் மட்டும் அவளுக்கு அண்ணன் இல்ல... நானும் அவளுக்கு அண்ணன்தான்.

அவ இனியும் காலேஜுக்கு வருவா... போவா... ஒரு தடவை கூட அவ பின்னாடி சுத்துறதா... வம்பு வளர்க்கறதா... அவளை பயமுறுத்துறதா எனக்கு தெரிய வந்துச்சு... அவ்வளவுதான்." என்றான்.

இனியன் கண்களில் இருந்த எச்சரிக்கையைப் பார்த்த வசந்தால் பேசவே முடியவில்லை. போலீசாரும் அவனை உள்ளே அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த இனியன், அதியமானை பைக்கில் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

வாசலில் இறங்கியவுடன், "சித்தப்பா... ஏதாவது பிரச்சனைன்னா போலீஸ் நம்பரையும் சேவ் பண்ணிக்கோங்க. இது என்னோட நம்பரையும் சேவ் பண்ணி வைங்க. ஒரு கால் பண்ணுங்க அடுத்த நிமிஷம் நான் இங்க உங்க முன்ன இருப்பேன்." என்றான்.

அதியமான் நிம்மதியாக தலையசைத்தார். "அகிலன் வர்ற வரைக்கும். தூரிகாவை காலேஜுக்கு நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்துடுறேன்.

காலேஜ்ல எழிலரசன்கிட்டயும் சொல்லி வைக்கிறேன்." என்றான்.

"சரிப்பா." என்றார் அதியமான்.

மீனாட்சியோ "அகிலா வாப்பா... உள்ள வந்து சாப்பிட்டுட்டு போ" என்றார்.

  "இல்லை சித்தி மதுரா ரொம்ப நாளைக்கு பிறகு சமைச்சிருந்தா. நானுமே அவளே பரிமாறவும் நிறைய சாப்பிட்டுட்டு வந்துட்டேன்‌. வேண்டுமின்னா டீ போட்டு தாங்க சித்தி" என்றான் இனியன்.

மீனாட்சியுமே சற்று முன் மதுரா சமைத்து சாப்பிட்டதை தெரிவித்திருக்க, சிரித்தபடி டீ கொண்டு வந்து கொடுத்தார்.

அதை ஆற அமர அமர்ந்து பருகிக் கொண்டிருந்தான்.

அந்த அமைதிக்குள்... அதியமான் மெதுவாக கேட்டார்.

"மதுரா எப்படியிருக்கா இனியா?" என்று சம்பிரதாயத்நிற்கும் இவனிடம் அந்த ஒரு கேள்வி கேட்டார். என்ன தான் போனில் மதுரா நலமாக பேசினாலும், மருத்துவமனையில் கண்ட காட்சியில் இனியனும் ஆடிப்போயிருந்தானே. 

   இனியனின் தொண்டையை அடைத்தது. டம்ளரை கீழே வைத்தவன், மெதுவாக செருமிக் கொண்டான்.

"தெரியலை சித்தப்பா... நான்... இப்ப எதுவும் பொய்யா அவ நல்லாயிருக்கானு சொல்ல மாட்டேன் சித்தப்பா. ஒரு நாள்...

அவளாவே நல்லா இருக்கேன்னு உங்ககிட்ட பேசுவா. அந்த நாள் சீக்கிரம் வரணும்னு தான் எதிர்பார்க்கிறேன்." என்று சிரிக்க முயன்றான்.

ஆனால் அந்த சிரிப்புக்குள் வலி மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தூரிகாவின் தலையை வருடினான்.

"எனக்கும்... உன்னை மாதிரி கூடப்பிறந்த தங்கச்சி இருந்திருந்தா...

கட்டிக்கிட்டவளை இவ்வளவு காயப்படுத்த தோணியிருக்காதோ என்னவோ..." என்று சொல்லிவிட்டு பாதியில் நிறுத்திக் கொண்டான்.

"அப்பாவோட குணமா.. இல்லை என் நேரமா... எனக்குள்ள அரக்கன் மாதிரி, அவளிடம் மூர்க்கத்தனமாக நடந்திருக்கேன் போல." அவன் பார்வை வெறுமையாக எங்கோ நிலைத்தது.

அப்போது மீனாட்சி மெதுவாக பேச ஆரம்பித்தார்.

"இனியா... மதுராவுக்கு இளகின மனசுப்பா. யாரையும் காயப்படுத்தணும்னு நினைக்கிற பொண்ணு அவ இல்ல. அதனால தான்...

தன்னோட குழந்தையையே இழந்துட்டு இப்ப தினமும் உள்ளுக்குள்ள அழுதுட்டு இருக்கா. அவளுக்கும் வருத்தம் இருக்கு. கொஞ்சம் மனசு விட்டு பேசுப்பா." இனியன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

"வேல்விழி அக்காவுக்கு, நீயும் எழிலும் எப்படி இரண்டு ஆம்பள பிள்ளையா பிறந்து வளர்த்திருக்கிங்களோ. அதே மாதிரி உங்களுக்கும் இரண்டு குழந்தையாவது பிறக்கும். 

எங்களுக்கு நீயும் அகிலனும் ஒண்ணுதான்." அந்த வார்த்தை கேட்டதும் இனியன் கண்கள் கலங்கின.

"சித்தி... நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். அந்த கோபத்துல... உங்களையும்...

அகிலனையும்... நிறைய காயப்படுத்திட்டேன். சாரி சித்தி." என்றான்.

அதியமான் உடனே அவன் தோளைத் தட்டினார்.

"ஏய்யா... மன்னிப்பெல்லாம் எதுக்கு? எங்களுக்கு நீயும் அகிலனும் வேற வேற இல்ல. காவ்யாவை கட்டி வச்சது கூட அந்த பிள்ளையா அகிலனோட நல்லதை எடுத்து சொல்லி பிடிச்சிருக்குனு சொல்லவும் தான் கட்டி வைச்சோம்" என்று கூறியவர் "ஒரு நாள்...

மதுராவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாய்யா" என்றார். இனியன் மெதுவாக தலையசைத்தான்.

பல நாட்களாக மனதுக்குள் அடைத்து வைத்திருந்த பாரம் கொஞ்சம் இறங்கியது போல ஒரு பெருமூச்சு விட்டவன்,

"வர்றேன் சித்தப்பா. அடிக்கடி அவளிடம் பேசுங்க சித்தி. அத்தையிடம் கோபமா இருப்பதால பேசமாட்டேங்கறா. தூரிகாவை தவிர யாரிடமாவது பேசினா நான் திட்டுவேன்னு போனை எடுக்கமாட்டேங்கறா நீங்களும் பேசினா ஏதாவது சொல்லுங்க நான் அதே இனியன் இல்லைனு" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

அவன் சென்ற பாதையை பார்த்துக் கொண்டிருந்த மூவருக்கும். இனி இந்த வீட்டில் நல்ல காலம் திரும்ப வரப் போகிறது என்ற நம்பிக்கை மட்டும் மனம் நிறைய உதித்தது.

  இனியன் அண்ணா மனசு மாறுதும்மா" என்று கூற மீனாட்சியும் ஆமோதிப்பாக தலையாட்டினார். 

  கூடுதலாக அதியமானிடம் ''என்னங்க.. இவ படிப்பு முடிய எவ்ளோ நாள் இருந்தாலும் பரவாயில்லை. இவளுக்கு மாப்பிள்ளை பாருங்க" என்றார். 

  "அப்பா... நான் முதுகலை படிச்சு முடியற வரை கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்ல." என்றாள்.

அதியமானோ "அது அப்பம்மா. இப்ப நிலைமை சரியில்லையே. அதுக்காக எவனுக்கும் பொசுக்குனு கட்டி தர மாட்டேன். அகிலன் வரட்டும்" என்றார். 

  தூரிகாவோ அந்த வசந்தால என் படிப்பு போகுது. சே... எங்கிருந்தாவது வந்து காதலிக்கறேன்னு சொல்லிடறானுங்க. நோ சொல்லிட்டா, இப்படி அறிவுக்கெட்டத்தனமா பண்ண வேண்டியது. இதுல அப்பா அம்மா எனக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறாங்க.' என்று குமைந்தாள். 

    இங்கே வீட்டுக்கு வந்த இனியனிடம், "என்னாச்சு... அந்த பையனை நீங்களும் சின்ன மாமாவும் கூட்டிட்டு போனதா தூரிகா சொன்னா." என்று கேட்க, "போலீஸ் ஸ்டேஷன்ல விட்டாச்சு." என்றான் இனியன்.

"அய்யோ போலீஸ் ஸ்டேஷனா?" என்று பதறினாள். 

  "ஆமா அங்க போனா அகிலன் பிரெண்ட் ரகுவை அடிச்சியிருந்தாங்க. இதுல தூரிகாவை சீரழிச்சிடுவேன்னு பேசினான். 

  கோபமாயிடுச்சு... ஈவினிங் வரை ஸ்டேஷன்ல இருந்தா தான் புத்தி வரும். அதோட அவனோட அப்பா அம்மாவை வரவச்சி புத்தி சொல்லி அனுப்பட்டும்" என்றான்.‌

  மாடிக்கு அப்படியே படியேறி வந்தவன், ஷர்ட் உடையை களைத்து, ஹேங்கரில் வைத்தான். பின்னாலே வந்த மதுராவோ "நாளைப்பின்ன தூரிகா போற வரப்ப வம்பு பண்ணினா." என்று பதறினாள். 

  பேண்ட் பெல்டில் கையை வைத்து பெல்டை நீக்கியவனோ, "அகிலன் வர்ற வரை நான் தூரிகாவை கூட்டிட்டு போறதா சொல்லியிருக்கேன்.‌ எழிலரசனிடம் சொல்லி வைக்கணும்" என்றவன் மதுரா கைகளை பற்றினான். 

மதுராவோ வெற்று மார்புடன் நின்றிருந்தவனை கண்டும், அவனது வார்த்தையும் கண்டும் குழம்பி தான் நின்றாள். 

  தூரிகாவுக்காக இவர் பாதுகாப்பிற்கு செல்லப் போகின்றாரா? என்ற ஆச்சரியம். 

  மதுராவை இனியன் நெருங்கவும், பயத்தில் பின்னால் நகர, அவளது கைபுஜத்தை பற்றி நிறுத்தினான். 

'சாப்பிட்டியா இல்லையா?" என்றதும், "சா..சாப்பிட்டேன்" என்றாள்.

  "இப்ப எதுக்கு மிரண்டுட்டு இருக்க? நான் தான் உன்னை மிருகம் மாதிரி தொந்தரவு பண்ணலையே. பிறகும் பயப்படற?" என்று கேட்கவும், மதுராவோ "அதில்லை.." என்றாள். 

  "அதில்லையா?" என்றான

"அது வந்து?" என்று எச்சியை விழுங்கினாள்.‌

"எது வந்து?" என்று தாடையை நிமிர்த்தவும், மதுரா கண்ணில் கண்ட பயத்தையும் பதட்டமும் கண்டு, தன்னையே நொந்தவனாக மாறினான்.

"உனக்கு இன்னமும் என் மேல பயம் போகலைல? சடனா ஒருத்தன் திருந்திட்டான்னா ஆச்சரியமா தான் இருக்கும். இல்லை.. நம்ப முடியாம போகும். ஐ நோ... ஆனா நமக்கான தண்டனை ரொம்ப பெரிசு மதுரா... " என்றான் வலியுடன். 

  மதுராவோ இனியன் நகரவும் செய்வதறியாது நின்றாள். 

  ---

நியூயார்க் நகரம் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பரபரப்பின் நடுவிலும், சென்ட்ரல் பார்க் மட்டும் வேறொரு உலகம் போல அமைதியை தாங்கி நின்றது.

உயரமான மரங்கள் இருபுறமும் நிழல் விரித்திருந்தன. பச்சை புல்வெளியில் குடும்பங்களும், காதல் ஜோடிகளும், புத்தகம் வாசிப்பவர்களும், ஓடிக்கொண்டிருந்தவர்களும் தங்கள் உலகத்தில் மூழ்கியிருந்தனர்.

ஏரிக்கரையை வருடி வந்த குளிர்ந்த காற்று, மர இலைகளை மெதுவாக அசைத்தது.

காலை வெயிலின் பொன்னிற சூரிய ஒளி, மரக்கிளைகளின் இடைவெளியில் ஊடுருவி நடைபாதையில் பொன் துகள்களைத் தூவியது போல தெரிந்தது.

"அகில்... இங்க நிறைய முறை வந்திருக்கேன். ஆனா.. இன்னிக்கு தான் இந்த இடமே ரொம்ப அழகா இருக்கற மாதிரி பீல் பண்ணறேன்." என்று குழந்தை போல சுற்றி ரசித்தாள் காவ்யா.

"ம்... அமெரிக்காவுக்கு புதுசா வந்தவன் நான். நான் தான் இந்த இடத்தை எல்லாம் பார்த்து ஹௌ ப்யூட்டிஃபுல்னு சொல்லணும். ஆனா நீ நல்லா உலறு" என்று மட்டும் சிரித்தவன், அவளோடு மெதுவாக நடந்தான்.

"எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க? ஏதோ பேசணும்னு சொன்னிங்க" என்று கேட்டாள்.

"ம்ம் பேசணும்" என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. எப்படி ஆரம்பிப்பதென்ற யோசனையில் தவித்தான்.

"ஹலோ... என்னை டென்ஷன் பண்ணாதீங்க." என்று அவன் முன்னே வந்து நின்றாள்.

அகிலன் சிரித்தபடி "இன்னும் கொஞ்சம் நட... பேசுவோம்" என்றான்.

"ப்ச்..." என்று முகம் சுளித்தாலும், அவனோடு சேர்ந்தே நடந்தாள்.

சிறிது தூரம் சென்றதும், ஏரியை நோக்கி இருந்த அமைதியான ஒரு பெஞ்ச் அருகே நின்றான் அகிலன்.

அங்கே நின்று, "ரொம்ப கஷ்டமாயிருக்கும்னு நினைச்சேன் காவ்யா... ஆனா நீ பேசறது பழகறது, நெருங்கறது எல்லாமே என்னால... நான் பார்க்காத இன்னொரு உலகத்தோட... பெண்ணா முன்ன வந்துயிருக்க. 

    மனசுல ஒரு பொண்ணிடம் காதல் உண்டானதும் அதை சொல்ல தாமதப்படுத்தி, நான் எல்லாம் காதலிக்கவே முடியாத கேஸ். வேஸ்ட் ஃபெல்லோனு முடிவுக்கட்டியிருந்தேன். 

  'காதலை விட நம்ம விதி பாஸ்டா முந்திக்கிடுச்சுனு சொல்லி கூலா வந்து, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா'னு கேட்டதும், என்ன சொல்லறதுனு தெரியலை. பயங்கர ஷாக். 

  நமக்குள்ள செட்டாகுமானு யோசிக்கறதுக்கு முன்ன, முதல்ல அக்சப்ட் பண்ணப்போறியா அகிலானு மனசு கேட்டதும், தூக்கிவாறி போட்டுச்சு.

  எனக்கே தெரியாம இனியனை ரிவேன்ஜ் எடுக்கறோமோனு கூட பயந்தேன். 

  என்னால மதுரா இனியன் கஷ்டப்படக்கூடாதுனு முடிவெடுத்து நிறைய விஷயத்தை தவிர்த்தேன்.

  ஆனா எதை தடுத்தாலும், சிலது தடுக்கவே முடியாதுடானு ஒவ்வொரு சூழ்நிலையும் புரிய வைக்கவும் கொஞ்சம் கொஞ்சமா, 'என்னவோ கடவுள் எழுதி வச்சியிருக்கார். எப்படியோ போகட்டும்'னு எந்த பிளானும் போடாம இருந்தேன். பட் காட் கிரேஸ்... என்னை அவர் விதியென்ற பெயர்ல ஏமாத்தலை. என்னை நேசிக்கறவளா உன்னை தந்திருக்கார். உன்னை எனக்கும் பிடிக்க வச்சியிருக்கார். 

   நான் பயந்தமாதிரி லைப் சிக்கலாகாம தெளிவா தான் இருக்கு. என்ன மதுரா இனியன்‌ வாழ்க்கையும் சந்தோஷமா அமைஞ்சா நான் சந்தோஷப்படுவேன்." என்றான். 

  "ஹலோ அகில்.. அதெல்லாம் அவன் அவளை கரெக்ட் பண்ண தெரியாம சுத்திட்டு இருப்பான்.

   மத்தபடி, இனியன் மதுராவை இனியும் கஷ்டப்படுத்துவான்னு தோணலை. ஏன்னா... அன்னிக்கு ஹாஸ்பிடல்ல நான் இனியனை பார்த்தேன்ல.. அவன் எந்த ரியாக்ஷனும் கொடுக்காம மதுராவை தான் கண் சிமிட்டாம பார்த்தான். 

  அந்த பெயின்... அந்த கோபம்.. இரண்டிலும் உண்மை இருந்துச்சு. 

   மதுரா மேல அவனுக்கு குழந்தை போச்சேனு கோபம் வலி இருந்தாலும், ஏன் அவசரப்பட்ட மதுரா என்ற வேதனையும் ஒளிஞ்சுட்டு இருந்தது. 

  இதோ... நீ மனசை திறந்து பேசற மாதிரி, அவனும் மதுராவிடம் பேசுவான்... மேபீ பேசியிருக்கலாம்.. யார் கண்டா.. பட்.. மதுரா இனி திரும்ப அதே தப்பை செய்ய மாட்டா. அவளுக்கும் லைப் புரிந்திருக்கும்.

சோ... மை ஸ்வீட் ஹார்ட்.. நம்மளை பத்தி மட்டும் யோசிப்போம்." என்றாள். 

   அங்கே ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சிறிய பூங்கொத்தை அகிலன் கை அசைக்க கொண்டு வந்து தந்தனர்.

வெள்ளை லில்லி, இளஞ்சிவப்பு ரோஜா, பேபீஸ் பிரெத் மலர்கள் கலந்து கட்டப்பட்டிருந்த அந்தப் பூங்கொத்தை எடுத்தவன், மெதுவாக திரும்பி காவ்யாவை பார்த்தான்.

"காவ்யா... நம்மளை பத்தி மட்டும் யோசிக்க தான்... இங்க வந்தேன். நீ கேட்டியே... நேத்து கழுத்து வரை குடிச்சிட்டு டூ யூ லவ் மீ அகில்னு. எஸ்.. ஐ லவ் யூ பொண்டாட்டி." என்றான்.‌

"ம்.. அகில்." என்று அவள் சிரிப்புடன் ஆச்சரியமாக கண்ணை விரித்து பார்த்தாள்.

அவன் பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.

"எனக்கா...?" என்று மெதுவாக கேட்டாள். "உனக்குத்தான்.. இங்க வேற யாரையும் நான் மேரேஜ் பண்ணலையே. நீ தான் மோதிரம் மாத்தி கிஸ்ஸடிச்ச" என்றதும் அவள் சிரிப்புடன் பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள்.

"தேங்க்யூ. தேங்க்யூ அகில்.." என்று சொல்லிவிட்டு மலர்களை முகத்தோடு சேர்த்து நுகர்ந்தாள். "ரொம்ப அழகா இருக்கு." அகிலன் ஆழமாக மூச்சை இழுத்தான்.

காவ்யாவின் கண்களில் மெதுவாக நீர் திரண்டது.

"என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு நாளா. மறக்க முடியாத இடத்துல... காதலை சொல்லிட்ட.. ரியலி. இதுக்கு மேல என்னடா வேண்டும்" என்று காவ்யா பூங்கொத்தை இறுக பற்றி, அகிலனை கட்டிப்பிடித்தாள்.

"அகில்... இன்னொரு தடவை  லவ் யூ காவ்யானு சொல்லேன்" என்றதும்,  அவள் முகத்தை நிமிர்த்தினாள்.

  "ஐ லவ் யூ காவ்யா" என்றவன் நெற்றியில் ஆழமாக முத்தமிட்டான்.‌ இது தங்கள் மதுரை இல்லை. அதனால் தாராளமாக பொதுயிடத்தில், அதே நேரம் கண்ணியம் தவறாமல் நடந்துக் கொண்டான்.‌

"நான்தான் உலகத்துல ரொம்ப சந்தோஷமான பொண்ணு தெரியுமா." என்று அழுகையோடு சிரித்தாள்.

"ம்ம்‌" என்றான். 

அவனது கன்னத்தில் ஆழமான கடி ஒன்றை வழங்கி "இந்தா வேம்பையர் பைட் வாங்கிக்கோ" என்று செல்ல கடியையும் ப

தித்தாள். "ஆ.." என்று அலறினாலும் அவளது கடிகளுகாகு பழகினான். 

  சென்ட்ரல் பார்க் மரங்களும் அமைதியாக வீசிய காற்றும் அவர்கள் காதலுக்கு மணம் வீசியது. 

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ். 

 


 
Posted : August 2, 2026 4:22 am
(@kothaihari)
Posts: 124
Estimable Member
 

சூப்பர் 


 
Posted : August 2, 2026 4:33 am
(@guna-sundari)
Posts: 137
Estimable Member
 

Wow super super. Eniyian also open his heart to madura. Akil also open his heart to kavya. Cute romance..very intresting sis 


 
Posted : August 2, 2026 7:41 am
(@subhakumar85)
Posts: 111
Estimable Member
 

Kavya sonnathu correct than.  Yeppa dei eppovathu sonniye


 
Posted : August 2, 2026 9:46 am
(@crvs2797)
Posts: 187
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 52)

பரவாயில்லை, இனியன் இப்பத் தான் ஒரு அண்ணனனா தன் கடமையையும், பொறுப்பையும் சரியா செஞ்சிருக்கான்.

ஆனால், ஒரு பாடம் படிக்க எத்தனைப் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியதா இருக்கு.
சில நேரத்துல வலியும், வேதனையும் தான் நிறைய பாடங்களை கத்து கொடுக்கின்றன எனத் தோணுகிறது.

அப்பா டா...! அகிலன் ஒருவழியா எப்படியோ பொண்டாட்டி கிட்ட தைரியமா காதலை சொல்லிட்டான் டோய்...!

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : August 2, 2026 9:53 am
(@dharsinipriya)
Posts: 77
Trusted Member
 

Super sis nice epi 👌 😍 iniyan romba maaritan paravaella Madura vum adha purinjiru iniyavudhu santhoshama vaazhanum pa 🥺 akila unakulla eppdi oru lover boy ah therita po kavya romba happy 😊


 
Posted : August 2, 2026 10:11 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Iniyan unnoda indha matram rombhavae nalla iruku super super .

Akilan avan manasula iruku ah love ah sollitan athu varaikkum happy o happy 


 
Posted : August 2, 2026 6:50 pm
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi lovely 🤩 🤩 🤩 


 
Posted : August 11, 2026 10:05 pm

Scroll to Top