மதுர ஜில்லா... மச்சானே!-53
அத்தியாயம்-53
சூடான காபியின் மணம் முழு ரெஸ்டாரன்டையும் நிரப்பியிருந்தது.
நியூயார்க் நகரின் பரபரப்பான சாலையை ஒட்டி இருந்த அந்த கண்ணாடி சுவர்கள் கொண்ட உணவகம், வெளியிலிருந்த வாகன ஓசைகளை மெதுவாகவே உள்ளே அனுமதித்தது. ஜன்னல் ஓர மேசையில் அகிலனும் காவ்யாவும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.
ஜன்னலுக்கு வெளியே மஞ்சள் நிற டாக்ஸிகள் வரிசையாக கடந்து கொண்டிருந்தன. நடைபாதையில் அவசரமாக நடந்தவர்கள், சைக்கிளில் சென்ற இளைஞர்கள், கையில் காபி கோப்பையுடன் சிரித்தபடி உரையாடிய ஜோடிகள் என்று நகரம் தனது வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
அகிலன் காவ்யா இருந்த மேசையில் மட்டும் நேரம் மெதுவாக நகர்ந்தது.
மெனுவை மூடிய அகிலன், "என்ன சாப்பிடுற?" என்று கேட்டான்.
"நீங்க ஆர்டர் பண்ணுங்க."
"இல்ல... எனக்கு நம்மூர்னா மடமடனு சொல்லிடுவேன். இங்க.. நீங்களே சொல்லுங்க." என்றதும் காவ்யா சிரித்தபடி, "அப்ப எனக்கு ஒரு பெல்ஜியன் வாஃபிள்... உங்களுக்கு..." என்று அவனை பார்த்தாள்.
"எனக்கு இங்க எது டேஸ்டா இருக்கும்னு தெரியாதுனு சொல்லிட்டேனே. நீ என்ன சாப்பிட சொல்றியோ அதையே சாப்பிடறேன்." என்றான்.
"ஓஹோ... ரொம்ப நல்ல பிள்ளையா மாறிட்டீங்களே." என்று அவனை சீண்டும் விதமாக சிரித்தாள்.
"கல்யாணம் ஆனப்புறம் புருஷன் மனைவியிடம் கொஞ்சம் நல்ல பிள்ளையாத்தான் இருக்கணும். ஏன்னா... லைப் லாங் இன்ந்த ஒரு ஜீவன் கூட தான் டிராவல் பண்ண போறோம்." என்று உண்மையை வெகு எதார்த்தமாக கூறினான்.
"ஆமா... என் புருஷன் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை." என்று குறும்பாக சிரித்தாள்.
அவள் ஆர்டர் கொடுத்து முடித்ததும், இருவருக்கும் அதன் வருகைக்காக காத்திருந்தார்கள்.
கோப்பையை மெதுவாக கையில் எடுத்த அகிலன்,
"ஆமா பிசினஸ் பத்தி என்னென்னவோ சொன்னியே. என்ன ஐடியா" என்றதும் காவ்யாவின் முகம் விளையாட்டுத்தனத்தை ஏறக்கட்டியது.
"அதைப் பத்தி தான் பேசணும்னு நினைச்சேன். முதல்ல நமக்குள் இயல்பா பேசவே முடியலைனு தான் பிசினஸை நெக்ஸ்ட் இடத்துல வச்சிட்டேன்." காவ்யா காபியை மேசையில் வைத்துவிட்டு முன்னே சாய்ந்தாள்.
"அகில்... ரிசப்ஷனுக்கு வந்தவங்கள்ல நாலு... ஐந்து பேராவது ஆர்டர் பண்ணிருக்காங்க. பிசினஸ் ஆரம்பிச்சா போதும்" என்றாள்.
"என்ன பிசினஸ்? என்ன ஆர்டர்" என்றான்.
"நம்ம ஊர்ல விளையற பொருளுக்குப்பா..." என்றதும் அவன் புருவம் உயர்ந்தது.
"அதாவது... மிளகாய் வத்தல்... மிளகு... மஞ்சள்... முருங்கைக்காய் பவுடர்... கறிவேப்பிலை பவுடர்... காயவைத்த காய்கறிகள்... ஊறுகாய்... வீட்டுல செய்யற மசாலா... சொல்லிட்டே போகலாம். இதெல்லாம்." என்றதும் அகிலன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.
"இங்க இருக்கிற தமிழ்காரங்க மட்டுமில்லை. இந்தியன்ஸ் நிறைய பேர் வாங்குறாங்க. ஆர்கானிக் ஃபுட்க்கு இங்க டிமாண்ட் ரொம்ப அதிகம். நம்ம தோட்டத்துல விளையறதை அப்படியே விற்கிறதை விட... மதிப்பு கூட்டி இங்க விற்கலாம்." என்றாள்.
"எப்படி செய்வ?" என்றான். பிசினஸ் என்றால் சாதாரணமா?
"முதல்ல நல்ல தரமான பொருளை பிரித்து எடுக்கணும்." அவள் விரல்களை எண்ணியபடி சொல்ல ஆரம்பித்தாள்.
"அதுக்கப்புறம் சுத்தம் பண்ணணும். ட்ரையிங், டீஹைட்ரேஷன் மெஷின், வாக்கம் பேக்கிங், லேபிள்., எக்ஸ்போர்ட் குவாலிட்டி டெஸ்ட்.
அதுக்கப்புறம் கன்டெய்னர் இல்ல ஏர் கார்கோ." என்று அடுக்க, அகிலன் கண்களை சிமிட்டினான்.
"நம்ம ஊர்ல ஒரு பேக்கிங் யூனிட் போடணும். அதுக்கு தனியா இடம் வாங்கணும். புட் சேப்டி லைசன்ஸ், எக்ஸ்போர்ட் லைசன்ஸ், IEC, APEDA ரெஜிஸ்டரேஷன், GST, லேபிளிங், கஷ்டம் க்ளியரன்ஸ்.. அதுக்கப்புறம் தான் இங்க சேல்ஸுக்கு" அவள் மூச்சை இழுத்து சிரித்தாள்.
"இதெல்லாம் ஒரு நாள்ல நடக்காது." என்றாள் வருத்தமாக.
அகிலன் அவளை பார்த்தபடியே இருந்தான்.
"நிறைய மெஷின்ஸ் வாங்கணும். பேக்கிங் மெஷின் வாக்கியும் சீலர், ட்ரையர், கோல்ட் ஸ்டோரேஜ் அதை கொண்டு போக லாரி, அதுக்கப்புறம் மதுரையில நல்ல இடம் வாங்கி பிராசசஸிங் யூனிட் போடணும். அங்க வேலைக்கு ஆளுங்க தேவை. வேலைக்கு ஆட்களை எடுக்கணும்.
விவசாயிகள்கிட்ட கான்ட்ரேக்ட, அப்புறம் தான் பெரிய அளவுல எக்ஸ்போர்ட்'' என்று சொல்லி முடித்தவளை பார்த்த அகிலன் மெதுவாக சிரித்தான்.
"பெரிய பிளான் தான். நான் உன்னிடம் இதை எதிர்பார்க்கலை. உனக்கு எப்படி இந்த ஐடியா தோணுச்சு. ஏன்னா இதெல்லாம் நான் யோசிச்சதே இல்ல. நம்ம வயல்ல விளைஞ்சது நம்ம ஊர்ல விற்றா போதும்னு தான் நினைச்சேன். மேபீ.. அதுதான் எல்லாரும் நினைக்கறது. நான் ஊர் சந்தையில் சேல் பண்ண மட்டும் செய்திருக்கேன். நீ. என்னடான்னா அடுத்த லெவல்ல யோசிக்கற." என்று பாராட்டி பேச காவ்யா புன்னகைத்தாள்.
"நிஜமா நல்ல ஐடியா." என்றான்.
காவ்யாவோ "அகில்... இதெல்லாம் நடக்கும்னு தோணுதா?" என்றாள்.
"யா... முயற்சியும் உழைப்பும் போட்டா நடக்கும். ஏன் தெரியுமா? நம்மகிட்ட தரமான பொருள் இருக்கு. உழைக்கற மனசு இருக்கு. நேர்மையா அப்ரோச் பண்ணலாம் மீதியை கத்துக்கலாம்." என்றதும் அவளது கண்கள் மெதுவாக கலங்கின.
"ஆனா..." என்று சோகமானாள்.
"என்ன ஆனா?" என்று கேட்டான்.
"இது.. இது.. என்னோட ஐடியா இல்லை." என்றதும் அகிலன் காவ்யாவை 'என்ன' என்பது போல பார்த்தான்.
"ம்ம்.. இது என்னோட ஐடியா இல்லை. இது... இனியனோட ஐடியா." என்றதும் ஒரு நொடி இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது.
"நானும் அவனும் இதை சேர்ந்து பண்ணலாம்னு எவ்வளவோ பேசிருக்கோம். எல்லா டீடெயிலும் கலெக்ட் பண்ணியிருந்தான். ஆக்சுவலி நான் கூட இருந்தேன். ஆனா... அது அப்படியே நின்னு போச்சு. காலேஜ் டேஸ்ல கேன்டீன்ல சந்திக்கறப்ப தான் பேசுவோம். காதல் டயலாக் எல்லாம் ரேர் தான். இந்த மாதிரி ஆப்டர் மேரேஜ் பிறகு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு இனியன் பேசுவான்." அவள் வந்த வாபில்ஸை சுவைத்தபடி மெதுவாக கூறினாள்.
"இப்ப... அவனோட செய்ய முடியலன்னா என்ன? அந்த ஐடியாவில என்னால தான் இங்க சேல் பண்ண நினைச்சான். அதையே நான் பிசினஸா ஆரம்பிக்கறேன்" என்றதும் அகிலன் எதுவும் கூறவில்லை.
மேலே வெண்ணிலா ஐஸ்கிரீம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, மேப்பிள் சிரப் மெதுவாக வழிந்து கொண்டிருந்தது.
"அகில்..." என்றாள்.
"ம்ம்ம்?" என்றான்.
"இத சாப்பிடுங்க." சிறிய துண்டு வெட்டி, அவனிடம் நீட்டினாள்.
அகிலன் சாப்பிட்டான். பிறகு... "சென்னையில ஒருதடவை இதை சாப்பிட்டுருக்கேன்." என்று பேச்சை மாற்ற விரும்பினான்.
காவ்யா முகம் உடனே சுருங்கியது. "ச்சே... ஆக புதுசா உன்னை அசத்த முடியல." என்று அவளும் ஏதோ தன் பிசினஸ் தகட்டத்தை பகிர்ந்தப்பின் இயல்பாக பேச, அவன் சிரித்தான்.
"மேடம்... இனிமேல் அசத்தப் போறது நீங்க இல்ல. நான்." என்று புருவத்தை உயர்த்தி கண் சிமிட்டினான்.
காவ்யா சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களை பார்த்துவிட்டு மெதுவாக வெட்கப்பட்டாள். இங்கே அவர்கள் பேசுவது முக்கால் வாசி பேருக்கு புரியாது என்றாலும், காவ்யாவுக்கு வெட்கம் வந்தது.
முதல் முறையாக அல்லவா அகிலன் இவ்வாறு தன்னிடம் வார்த்தையை பார்த்து பார்த்து பேசாமல் இயல்பாக, இனிதாக பேசுகின்றான்.
அதன்பிறகு அந்த ரெஸ்டாரண்ட்டை விட்டு வெளியே வந்தபோது, மாலை நேர குளிர் நியூயார்க் நகரத்தை மெதுவாக ஆட்கொள்ள ஆரம்பித்திருந்தது.
சூரியன் மேற்கே சாய்ந்து கொண்டிருந்தான். வானம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறங்களை கலந்து ஓவியமாக மாறியிருந்தது. உயரமான கட்டிடங்களின் கண்ணாடிச் சுவர்களில் அந்த மாலைக்கதிர் பிரதிபலித்து நகரமே பொன்னிறமாக மின்னியது.
காவ்யா இரு கைகளையும் கோட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு, "அகில்... ஈவினிங் ஆனாலே இங்க குளிர் கொஞ்சம் அதிகமாயிடுதுல." என்றாள்.
"ம்ம்... மதுரையில இந்த நேரத்துக்கு வெயில் குறைய ஆரம்பிக்கும். இங்க காத்தே வேற மாதிரி இருக்கு."
"வின்டர் வந்தா இன்னும் தெரியும்." என்று சிரித்தாள்.
அவர்கள் காரை நோக்கி நடக்க, தெரியாமலே காவ்யாவின் கை அகிலனின் கையைத் தேடியது.
அவன் ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு, எந்த வார்த்தையும் சொல்லாமல் அவள் விரல்களை கோர்த்துக் கொண்டான்.
"என்ன?" என்று காவ்யா சிரித்தாள்.
"ஒண்ணுமில்லை..."
"என்ன ஒண்ணுமில்லை?"
"இப்படியே நடந்துட்டு போகணும்னு தோணுச்சு."
"ஆஹா... ரொமான்டிக் மோடா?"
"லேட்டாதான் வந்திருக்கு."
"பரவாயில்லை... வந்ததே பெரிய விஷயம்." என்று இருவரும் சிரித்தபடி காரில் ஏறினார்கள்.
வீட்டின் வாசலில் கார் நின்றது.
அந்த சத்தம் கேட்டதும், ஹாலில் அமர்ந்திருந்த ராஜாராம் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்.
காரிலிருந்து முதலில் இறங்கிய அகிலன், மறுபுறம் சென்று கதவைத் திறந்தான்.
காவ்யா கீழே இறங்கியதும், அவள் கை தானாகவே அவனது கையைப் பற்றிக் கொண்டது.
அதைப் பார்த்த ராஜாராமின் முகத்தில் தன்னிச்சையாக ஒரு நிம்மதிப் புன்னகை மலர்ந்தது.
"டேடி..." என்று உள்ளே வந்த காவ்யா சிரித்தபடி அழைத்தாள்.
"சாப்பிட்டிங்களாப்பா?"
"ஆச்சும்மா... நாங்க சாப்பிட்டாச்சு. நீங்க?"
"நாங்க வெளியிலயே சாப்பிட்டுட்டு வந்துட்டோம்." என்றாள் காவ்யா.
"சரி... போய் ரெஸ்ட் எடுங்க."
"ஓகே டேடி... குட் நைட் அட்வான்ஸா." என்று குறும்பாக சல்யூட் அடித்தாள். சிரித்துக் கொண்டே தலையசைத்தார் ராஜாராம்.
மகளும், மருமகனும் கை கோர்த்தபடி படிக்கட்டில் ஏறிச் செல்வதைப் பார்த்தவர்,
"இவ சிரிப்பு இப்படியே இருக்கணும்..." என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டார்.
அறைக்குள் நுழைந்ததும் ஹீட்டரின் வெப்பம் உடலை வருடியது. வெளியில் இருந்த குளிருக்கு மாறாக, அறை இதமாக இருந்தது.
காவ்யா தோளில் இருந்த கோட்டை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, "அப்பாடா..." என்று பெருமூச்சு விட்டாள்.
அடுத்த நொடி, கவுனின் பின்புற ஜிப்பை கழற்றுவதற்காக திரும்பியவள், அகிலன் தன்னை நோக்கி வருவதை கவனித்தாள்.
"என்ன?" என்று புருவம் உயர்த்தினாள். எதுவும் பேசாமல் அவளருகில் வந்தவன், மெதுவாக அவள் மணிக்கட்டைப் பற்றினான்.
"அ.. அகில்..." என்று உதடு தந்தியடிக்க, அகிலன் சிரித்தபடி,
"உனக்கு டிரஸ் கழட்ட நான் ஹெல்ப் பண்ணினா தான் ரொம்ப பிடிக்குமே." என்றான். அவள் கண்கள் விரிந்தன.
"அ...அது..." என்றவள் திணற, அவன் மெதுவாக ஜிப்பை கீழே இறக்க ஆரம்பித்தான்.
குளிர்ந்த காற்று முதுகை வருட, காவ்யா தன்னை அறியாமலே சிலிர்த்தாள்.
"அ... அகில்..." என்று கூப்பிட, "ம்... சொல்லு" என்று ஊக்குவித்தான்.
"அது... ஜஸ்ட்... சேரிக்கும்... ரிசப்ஷன் கவுனுக்கும் மட்டும்... இ.. இத நா... நானே..." என்று அநியாயத்திற்கு தடுமாறினாள். அகிலன் சிரித்தான்.
"அதென்ன போங்கு.. சேரி கட்டினப்ப... சோளக்காட்டு பொம்மை மாதிரி அசையாம நின்னது யாரு?" என்றான்.
"பொம்மையா நானா?" என்றாள்.
"ஆமாம்." என்று நெருங்க, "அ..அது அப்போ... நிஜமாவே டிஸ்டர்பா இருந்தேன். சேரி கிழிஞ்சிடுமேனு பயந்தேன். அதோட... நீங்க ஹேர்பின், ஊக் எல்லாம் ரிமூவ் பண்ணறப்ப, நான் நானுமே நடுங்கினேன். உங்களுக்கு தெரியலையா?" என்றாள்.
அகிலனோ சிந்திப்பவனாக யோசித்தான். அவன் எங்கே அன்று காவ்யா முகத்தை ஏறிட்டான். அவன் கவனம் முழுக்க ஊக் ஹேர்பின் என்ற இரண்டை தாண்டி எதிலும் கண் பதிக்காதே என்று கட்டளையிட்டு அல்லவா விதித்து உதவினான்.
அதை மீறியும் காவ்யா மேனியில் கண்கள் ஊர்ந்தது. ஆனால் அவளது கண்ணை நேர்க்கொண்டு பார்க்க முடியாது அல்லவா தவித்தான்.
காவ்யா வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள்.
"அகில்... அன்னிக்கு நீங்க மட்டுமில்லை.. நானும் உள்ளுக்குள்ள நடுங்கினேன் ஏன் தடுமாறினேன். தவிச்சேன். அய்யோ... இவரிடம் இப்படி வெட்கமில்லாம நிற்கறோமேனு பயந்தேன் தெரியுமா" என்றாள்.
அகிலனோ "ஏய்.. அப்ப நான் நடுங்கியது தவிச்சது தடுமாறியது எல்லாம் நீ கவனிச்சிருக்க தானே? பாவம்னு என்னை தவிர்த்திருக்கலாம்ல" என்றான்.
"அய்யோ அன்னிக்கு உங்களை வம்பிழுக்க தோணுச்சு" என்றாள் காவ்யா.
உடனே நம் முரட்டு காளை அகிலன் சும்மா இருப்பானா? "ஓ.. அப்ப மேடம்.. இன்னிக்கு நீங்க கொஞ்சம் தடுமாறுங்க, நடுங்குங்க.. அதுவும் நல்லாத்தான் இருக்கும்." என்று அவளை மெதுவாக இடையோடு இழுத்தான்.
"அகில்... வேண்டாம். கூசுது... ஒரு மாதிரி இருக்கு..." என்று அவன் மார்பில் கைகளை வைத்து தடுக்க முயன்றாள்.
அவனோ அவள் நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றையை ஒதுக்கி, "ப்ப்பாஆஆ இவ்வளவு வெட்கப்படுறது யாரு?" என்று மெதுவாக செவியருகே கேட்டான்.
காவ்யா பதில் சொல்ல முடியாமல் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள். அவளது வெட்கம், அவனது குறும்பு இரண்டும் கலந்து, அந்த அறையே காதலின் மென்மையான தேசத்தில் மூழ்கியது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 53)
காவ்யாவோட பிசினஸ் ஐடியாவெல்லாம் சூப்பராத் தான் இருக்கு, அதை நடைமுறைப்படுத்தினால்..
கூடிய சீக்கிரமே அகிலன் பணக்காரன் ஆகிடுவான்னுத் தோணுது. தவிர, அகிலன் இதுல இனியனையும் ஈக்குவல் பார்ட்னரா சேர்த்துப்பானோன்னு தோணுது. ஏன்னா, இதெல்லாம் காவ்யா கூட டிஸ்கஸ் பண்ணது அவன் தானே..? அதனால அகிலன் இனியனை அப்படியே விட்டுட மாட்டான்னுத் தோணுது. தவிர இனியனுக்கு நியூயார்க் எல்லாம் சர்வ சாதாரண விஷயம் தானே ?
அதனால உள்ளூரை அகிலனும், வெளிநாட்டை இனியனும் பார்த்துப்பாங்களோ ? இருக்கும், இருக்கும்... அண்ணன் உடையான்
பிசினஸ் செய்ய அஞ்சான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 2 Online
- 420 Members
