மதுர ஜில்லா... மச்சானே!-51
அத்தியாயம்-51
இனியன் அறைக்குள் வந்தவன், தன் மொபைலை எடுத்து மதுராவிடம் நீட்டினான். "உங்க சின்ன மாமாவோட பையன்... என் தம்பி... உன்னோட சின்ன மச்சானோட ரிசப்ஷன் வீடியோ... ஜஸ்ட் லைவ்ல என் தம்பி பொண்டாட்டி காவ்யா போட்டிருக்கா. பாரு... நல்லா பாரு." என்று இனியன் மதுரா முன் காட்டினான்.
எதற்கு இத்தனை உறவுமுறை கூறி அகிலன் மச்சான்-காவ்யா வீடியோவை திடீரென காட்டவேண்டுமென மதுராவுக்கு புரியவில்லை.
இனியனுக்கு இருக்கும் கோபத்திலா...? வலியைக் காட்டவா...? இல்லை ஏதோ சொல்ல வருகின்றாரா..? என்ற குழப்பத்தோடு போனை வாங்காமல் எட்டிப் பார்த்தாள்.
திரையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடை தெரிந்தது. எல்லாம் வெளிநாட்டு முகங்கள். இதில் வெண்ணிற கவுனில் தேவதை போல நடந்து வந்தாள் காவ்யா.
கருநீல கோர்ட் சூட்டில் கம்பீரமாக நின்றிருந்த அகிலன், சினிமா காட்சியைப் போல அவளிடம் கையை நீட்டினான். புன்னகையுடன் அவனருகே சென்ற காவ்யா, அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
அகிலன் மெதுவாக அவளது விரலில் மோதிரத்தை அணிவித்தான். அங்கே கரவொலி எழுந்தது. அது வீடியோவில் சப்தமாய் கேட்டது.
இதில் முத்தமிடுமாறு முழுங்குவதை அறிந்து தயங்க, அடுத்த நொடியே காவ்யா, யாரையும் பொருட்படுத்தாமல் அகிலனின் உதட்டில் முத்தமிட்ட காவ்யாவை கண்டு வாயை பிளந்தாள்.
அந்தக் காட்சியைப் பார்த்த மதுராவுக்கு ஒரு கணம் சொல்ல இயலாத தயக்கம் கூடியது.
அகிலனின் முகத்தில் இருந்த வெட்கமும், பலர் முன்னிலையில் ஏற்பட்ட சங்கடமும், அதையும் தாண்டி மனைவியின் மகிழ்ச்சிக்காக அமைதியாக நின்றிருந்த பக்குவமும் தெளிவாகத் தெரிந்தது. அகிலன் மச்சான் வாழ்வில் அவர் அவராக எல்லாவற்றையும் மறந்து வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு முன்னெடுத்து செல்வதை ஒரு வீடியோ புரிய வைத்தது.
வீடியோ முடிந்ததும் இனியன் அமைதியாக போனை பேக்கெட்டில் வைத்தான்.
"பார்த்துட்டியா...?" மதுரா மெதுவாக அவனை அச்சத்துடன் ஏறிட்டாள்.
"யார் வாழ்க்கையும் யாராலையும் பாதிக்கப்படலை மதுரா. சில நேரம் நாம நினைச்சதெல்லாம் நடக்கணும்னு அவசியமில்லை. ஆனா... அவங்க அவங்க வாழ்க்கை சிதைந்தாலும் நல்லபடியா அவங்க அமைச்சிக்கிட்டாங்க.
இங்க நாமளும் குழப்பிக்கிட்டு, ஒரு பாதையில பயணிச்சாலும், நல்லபடியா வாழ்க்கையை ஆக்சுவலி அமைச்சிக்கணும்." அவ்வளவுதான் சொன்னான்.
மதுராவோ எதுவும் பேசவில்லை. இவர் என்ன கூறுகின்றார். இந்த குழப்பமான பாதையில் தங்கள் பயணம், நல்லபடியா அமைத்துக் கொள்ள கூறுகின்றாரா? ஆனால் இவருக்கு தன்னை பிடிக்காதே என்று எண்ணினாள். மற்றொரு மனமோ அந்த வெத்து பத்திரம் கூட கிழித்து விட்டார். அப்படியிருக்க எவ்விதமான மனநிலையில் இனியன் இருக்கின்றானென மதுராவுக்கு குழப்பம் தான்.
சில நொடிகள் அமைதியாக நின்றவள், "மதியம் சோறு ஆக்கப் போறேன்... என்ன குழம்பு வைக்கட்டும்?" என்று பேச்சை மாற்ற கேட்டாள்.
இனியன் புருவம் சுருக்கினான். இங்க வாழ்க்கையை பத்தி கேட்கறேன். இவ சோறாக்கவா குழம்பு என்ன வைக்கனு கேட்கறேளே என்று தான் தோன்றியது.
மதுராவோ "எது வச்சாலும சாப்பிட மாட்டேங்கறீங்களாம். 'உன் புருஷனுக்கு நீயே சமைச்சுப் போடு... அப்பவாவது மிச்சம் வைக்காம சாப்பிடறான்னு பார்ப்போம்'ன்னு அத்தை என்னை திரும்பவும் சமையக்கட்டுக்கு அனுப்பிட்டாங்க. என்ன சமைக்கட்டும்?" சொல்லுங்க என்று கையால் சேலை நுனியை திருகிக்கொண்டு கேட்டாள்.
"எதுனாலும் வை." என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தான். வீட்டுத் தோட்டத்தில் இருந்த காய்கறிகளைப் பறித்துக் கொண்டு வந்து சமைத்தாள் மதுரா.
சாப்பாடு தயாரானதும் அமைதியாக கணவருக்கு பரிமாறினாள்.
இனியன் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
ஒவ்வொரு காய்கறியையும் ருசித்து நிதானமாக சாப்பிட்டான். துளிசோறும் மிச்சம் வைக்கவில்லை.
தண்ணீரைக்கூட இரண்டு மூன்று டம்ளர் குடித்து முடித்தான். அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.
"என்ன பார்க்கற? இத்தனை நாள்... ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிட்டேன். நீ ஒரு விதத்துல கண்டதையும் திண்ணு, தண்டனை தந்துட்ட.
நானே எனக்கு கொடுத்துக்கிட்ட தண்டனை சிலது இருக்கு. அதுல ஒரு நாளைக்கு ஒரு வேளைனு தான் சாப்பிட்டது. அதான் எனக்கு இன்னிக்கு செம பசி." சிறிது இடைவெளி விட்டவன், "அதுவும்... நீ சமைச்சதுக்குப் பிறகு எதையும் மிச்சம் வைக்க மனசே வரலை." என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
அவன் போன பிறகும் மதுரா அதே இடத்தில் நின்றிருந்தாள். 'கரு கலைஞ்சு இங்க வந்த நாள்ல இருந்து... இத்தனை நாளா ஒரு வேளைதான் சாப்பிட்டாரா...?' என்று நினைத்தவளுக்கு மனம் கனத்தது.
அதற்குள் வேல்விழி வந்து, "ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப கூட சரியா சாப்பிடலம்மா... என்னவோ மாதிரி இருந்தான். என் மகனை இப்படி மாறி நான் பார்த்ததில்லை" என்று சொல்லிச் சென்றதும், மதுரா அப்படியே உறைந்து நின்றாள்.
அந்த நேரமே அவளது கைபேசி ஒலித்தது. இனியன் தான் இரண்டு நாட்களுக்கு முன் வாங்கி தந்திருந்தான். தூரிகாவை தவிர யாருக்கும் எண்ணை தராமல் இருந்தாள் மதுரா.
இன்று தூரிகாதான் அழைத்திருந்தாள். அவளை தவிர மதுராவிடம் நேரம் காலமின்றி பேசுவதற்கு ஆள் ஏது.
அவள் பதற்றமாக ஏதோ சொல்ல மதுராவோ "உன்னை கொல்ல போறேன் பாரு. அகிலன் மச்சான் இருக்கறப்ப அவரிடம் சொல்ல வேண்டியது தானே? என்ன கேடு வந்துச்சு" என்று அதிர்ச்சியடைந்தாள்.
"இல்லை அண்ணி... அண்ணன்-அண்ணி ரிசப்ஷன்னுக்கு தேவையில்லாம தடங்கல் ஆகக்கூடாதுனு நினைச்சேன்" என்று அழுதாள்.
"நான்... நான் உடனே அவர்கிட்ட சொல்லி பார்க்கறேன். அழாம தைரியமா இரு." என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
வாசலை நோக்கி ஓடினாள். "ஏங்க... ஏங்க..." பைக்கை ஸ்டார்ட் செய்யப் போன இனியன், அவள் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். எங்கே சென்றிடுவானோ என்று வேகமாய் வந்தவளை
"என்ன? எதுக்கு இப்படி ஓடிவர்ற" என்றான்.
"அது... அது வந்து..." என்று கூறத்தயங்கினாள்.
"சொல்லு." என்று இனியன் மதுராவின் விழிகளை தான் அளந்தான். அவள் எது கூறவந்தாலும் செவித்தீட்ட காத்திருந்தான்.
"தூ... தூரிகா வீட்டுல." என்று தயக்கத்தோடு ஆரம்பித்தாள்.
மதுரா கூறவும், இனியன் முகம் இறுகியது.
"அகிலன் மச்சான் வெளிநாடு போறப்பவே சொல்ல நினைச்சாளாம். ஆனா காவ்யா அவங்க, தூரிகா ஏதாவது வேண்டும்னே பண்ணறதா நினைச்சு திட்டுவாங்களோன்னு பயந்துட்டாளாம்." என்று கூறிட, ஒரு நொடி அமைதியாக நின்ற இனியன்.
"தூரிகா வீட்ல சித்தப்பா சித்தி இருக்காங்க தானே?" என்று கேட்க, "அவங்க இருக்காங்க... ஆனாலும் தூரிகா பயந்துட்டு போன் போட்டா. நீங்க வாங்கி தந்த போன்ல தான் போட்டா. அவளை தவிர யாருக்கும் நம்பர் தரலை. எங்க அம்மா அப்பாவுக்கு கூட தரலை. சாமி சத்தியம்.
நம்ம கல்யாணத்துல.. எனக்காக மட்டும் வந்தவ... கல்யாண சாப்பாடு சாப்பிட்டுட்டு போக கூட சொல்ல முடியாம அனுப்பியிருந்தாலும் அவ அதை எல்லாம் யோசித்தது கூட இல்லை." என்று கூறினாள்.
இனியன் சிறிது நேரம் சிந்திக்க, "இங்க பாருங்க... உங்க பழிவாங்குற பிரச்சனையை இதுல இழுக்காதீங்க. அப்படியிருந்தா சொல்லுங்க. எப்படியும் சித்தப்பா ஏதாவது வழி பண்ணிருப்பார்." என்று உறுதியாகச் சொன்னாள்.
இனியன் அவளை ஒரு பார்வை முறைத்து பார்த்தான். அந்தப் பார்வையிலேயே மதுராவின் குரல் அடங்கியது. எந்த நேரம் எப்படி மாறியிருக்கின்றான். இப்படி பேசுகின்றாளே என்ற முறைப்பு அது.
"சரி நீ வீட்ல இரு. நான் என்னனு பார்த்துக்கறேன்" என்று கூறி பைக்கைத் திருப்பி தூரிகா வீட்டை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.
தூரிகா வீட்டில் மீனாட்சி, அதியமான் இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த தூரிகா கதறிக் கொண்டிருந்தாள். கதவு பூட்டி உள்ளே இருந்தாலும் ஜன்னல் வழியாக வந்தவனை பார்வையிட்டனர்.
வாசல் முன் நின்றிருந்த இளைஞன் வசந்த் சிரித்தபடி, "அவ்வளவு சொல்லியும் திமிரா போயிட்டியே... நான் உன்னை காதலிக்கறேன் தூரிகா. அப்பா அம்மா சம்மதத்தோட கட்டிக்கணும்னு ஆசைப்படறேன். நீ என்னன்னா என்னை தப்பு பண்ண வச்சிடுவ போலயே" என்று கூறிட தூரிகா உடல் கூச அன்னையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
"இங்க பாரு... வார்த்தை எல்லை மீறி போகுது. எங்க வீட்டு பையன் வந்தான்னா.. இப்படி பேசற வாயை உடைச்சி கையில தந்துடுவான் பார்த்துக்கோ" என்றார் அதியமான்.
"ஏன் பெருசு. பத்து நாளைக்கு மேல வருவார் தானே உன்ற மகன். நான் உன்ற மகளை இன்னிக்கோ நாளைக்கோ சீரழிச்சிட்டா என்ன செய்வியாம்?" என்று கூற, மீனாட்சியோ ரௌத்திரம் பொங்க "பேச விட்டு வேடிக்கை பார்க்கிங்க. நீங்களே நாலடி விளாசுங்க. போலீஸுக்கு போன் போடுங்க" என்றார் அன்னையின் கோபமாக.
"இரும்மா ரகுவிடம் போன் பண்ணி சொல்லியிருக்கேன். நம்மூர் போலீஸ் நம்பர் எனக்கு தெரியாது. நேர்ல போய் புகார் தர நினைச்சேன். இவன் இங்கயே இருக்கான்" என்றார்.
அதற்குள் ரகு வந்து சேர்ந்திருப்பான் போல. "என்னல.. என் நண்பன் இல்லாதப்ப வந்து என்ன பேச்சு பேசற. நாக்கை ஓட்ட அறுத்தெடுத்துடுவேன்" என்று கூற, எதிரேயிருந்த வசந்த் என்பவனோ ரகுவோடு கைகலப்பு ஏற்பட, ரகு ஓரமாய் விழுந்து ரத்தம் துளிர்க்க, விழுந்தான். வசந்தோ, "நான் என்ன கை வீசிட்டு வந்தேன்னு நினைச்சியா. இன்னிக்கு இரண்டுல ஒன்னு தெரிந்தே தான் வந்திருக்கேன். ஒன்னு தாலி கட்டி தூக்கிட்டு போவேன். இல்லை தூக்கிட்டு போய் அவளை சீரழிச்சிட்டு தாலிகட்டுவேன். நீங்களே சொல்லுங்க. எல்லாம் கொஞ்ச நேரம் நேரம் தான் அவகாசம். பிறவு கதவை உடைச்சிடுவேன்." என்று கூறினான்.
அடுத்த நொடியே புல்லட் சத்தம் கேட்க திரும்பி பார்த்தான். இனியன் வந்தவன் "யாருல நீங்களாம்.." என்று பைக்கை நிறுத்தி, கை முஷ்டியை மடக்கி நடந்து வந்தான்.
ஏற்கனவே ரகுவை அடித்த மூவர் வசந்தை பார்த்தனர்.
"தூரிகாவோட பெரியப்பா பையன்ல நீ. உனக்கு இங்க என்ன வேலை. உனக்கும் இவங்களுக்கும் தான் ஆகாதுனு கேள்விப்பட்டேன்." என்று கூறியதற்கே அகிலன் வளர்த்த மாட்டு தொழுவம் பக்கம் போயிருந்தான். எல்லாம் இனியன் எட்டி மிதித்த ஒரு மிதிக்கு.
"என்னங்கடா... அங்காளி பங்காளி சண்டைன்னா உங்களுக்கு எதுக்கும் வரமாட்டாங்கன்னு நினைப்போ. என் தங்கச்சிக்கு ஒன்னுன்னா வந்து நிற்பேன்." என்று வசந்தின் கூட்டாளிகள் இனியனை அடிக்க முனைய அனைவரையும் மாற்றி மாற்றி பின்னி பெடலெடுத்து, கையை முறுக்கி நிறுத்தியிருந்தான்.
"அவ தான் பிடிக்கலைனு காலேஜ்லயே சொல்லிட்டாளாமே. என்ன தைரியத்தில இங்க வந்து பொண்ணு கேட்கறிங்க." என்று மிதித்தான்.
அதற்குள் அதியமான் தெம்பு வந்தவராக "விடு தூரிகா. இப்பவாது என்னை வெளியே விடு. இனியன் வந்துட்டான் பாரு" என்று உதறிக்கொண்டு கதவை திறந்து வந்தார். தூரிகா இவ்வளவு நேரம் தந்தையையும் விடவில்லை.
"தாலி கட்ட விடு. இல்லை தூக்கிட்டு போய் சீரழிப்பேன்னு பேசறான் இனியா." என்றதும் இனியனுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த பித்தளை குடத்தால் ஒங்கி வசந்தின் முதுகில் போட்டான்.
"எங்க வீட்டு பொண்ணுக்கு பிடிச்சா கட்டி வைக்கலாம். அதான் அவளுக்கு பிடிக்கலைன்னு செல்லறாளே. அதென்ன தாலிகட்டிட்டு. இதுல தாலிக்கட்டலைன்னா சீரழிப்பியா?
நீ ஏதாவது செய்துட்டு அடுத்து உசுரோட இருப்ப? ஒன்னுக்கு இரண்டு அண்ணனுங்க இருக்கோம். நீ எங்க வீட்டு பிள்ளை மேல கையை வச்சாளே கையை வெட்டி கூறுப்போட்டுட மாட்டோம்" என்றதும், வசந்த் எழ தள்ளாடினான். பித்தளை பாத்திரத்தினால் ஏற்பட்ட அடி விண்ணென்று வலியை தர, மற்றவர்களோ இனியனோடு மோத முயல, ரகுவும் இனியனும் மாறி மாறி வந்தவர்களை துவைத்தனர். இதில் கொஞ்ச நேரத்திலேயே போலீஸும் வந்தது.
பிடிக்கவில்லை என்று கூறியப்பின்னும் வீடு தேடி வந்து மிரட்டுவதாக கூறி புகார் தருவதாக கூறி வசந்தையும் அவனது மூன்று கூட்டாளியையும் பிடித்து சென்றார்கள். போலீஸோ 'நம்ம அகிலன் வீட்லயே வந்து அக்கிரமம் பண்ணறிங்களே' என்று உதைத்து சென்றனர்.
மற்ற விவகாரம் எல்லாம், போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்திட்டு புகார் தருவதாக இனியன் கூற வசந்தை அழைத்து சென்றனர்.
ரகுவும் இனியனும் இருக்க, தூரிகாவோ இனியன் அண்ணனை ஓடி வந்து கையை பிடித்துக் கொண்டாள். இனியனோ "லேசான ரத்தம் சொட்டுது" என்று ரகுவை காட்டினான்.
"ரகு அண்ணா.. சாரி.. என்னால உங்களுக்கு வேற கஷ்டம்" என்று தூரிகா கவலைக் கொண்டாள்.
" அட அகிலன் இல்லாதப்ப நான் உனக்கு அண்ணனா முன்ன வந்து நிற்கறது சரி தானே. ஏன் தங்கச்சி அழுவற. இதெல்லாம் இரண்டு மூனு நாளில் ஆறிடும்." என்றான் ரகு.
அதியமானோ ரகுவை அணைத்து விடுவித்து கொண்டவன் இனியனை நோக்கி வந்து, அவனையும் கட்டிக்கொண்டு கண்ணீரை உகுத்தினார்.
"சித்தப்பா... என்ன சித்தப்பா நீங்க. இதுக்கு போய் குழந்தை மாதிரி அழுவறிங்க. இங்க பாருங்க.. தூரிகாவுக்கு திடமா தைரியமூட்ட வேண்டியவர் நீங்க தானே" என்றான்.
அதியமானோ "இல்லைய்யா.. அந்த வசந்த் இன்னிக்கு மட்டும் விட்டா நம்ம வீட்டு பொண்ணை வீடு புகுந்து தூக்க ஏற்பாடோட வந்துட்டான். அகிலனும் இல்லை. கொஞ்சம் பயந்துட்டேன். எனக்கே தைரியமில்லாதப்ப தூரிகாவுக்கு எப்படி தைரிமூட்டுவேன்." என்று துவண்டார்.
மீனாட்சியோ "மதுரா கூட ஹாஸ்பிடல்ல இருந்து லீவு எடுத்ததால இவ வராததை தேடி ஏங்கிட்டானாம். கட்டையில போறவன். காலேஜ் வந்ததும் வராததும் இவளிடம் நான் உன்னை காதலிக்கறேன் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஏழரை கூட்டியிருக்கான்.
அகிலன் இருந்தப்பவே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பரவாயில்லை. இவ அப்ப எதுவும் சொல்லலை. திடீர்னு அழுதுட்டு காலையில காலேஜ் போனவ, பாதியிலயே வந்துட்டா. ஏன்னு கேட்கவும் அழுதுட்டு விவரம் சொல்லறா. இவ சொல்லி முடிக்கவும் அவன் வந்துட்டான். நாலு இளவட்ட பசங்க என்றதும் கதவு பூட்டினேன். பக்கத்துல இருந்தவங்க வேற வயல் வரப்புனு போனதால இவனுங்க ஆட்டம் துள்ளறானுங்க. ரகுவுக்கு போன் போட்டேன். தூரிகா மதுராவுக்கு போன் போட்டா. நீ வருவனு தெரியாதுப்பா. அதான் பேயறைந்தது போல மிரண்டு அடிவாங்கி நிற்கறாங்க" என்றார்.
"சித்தி.. தூரிகா பயப்படறா பாருங்க. முதல்ல உட்கார வச்சி தண்ணி கொடுங்க. இதோ இவருக்கும் மருந்து தாங்க. முதலுதவி பண்ணுவோம்" என்றான்.
"உள்ள வாய்யா" என்றதும் இனியன் மறுக்காமல் வந்தான்.
ரகுவுக்கு முதலுதவி செய்தவன், தூரிகாவிடம் தண்ணியை புகட்டி, "இரண்டு மூன்று நாளா நோட்டமிட்டு இருக்கான். அகிலன் இல்லைன்னு எல்லாம் விசாரிச்சு துள்ளியிருக்கானுங்க. விடுங்க சித்திப்பா வார்ன் பண்ணி சொல்வோம். இல்லைன்னா இன்னிக்கு கேஸ் கொடுப்போம்" என்றான்.
இதில் காலேஜ் போகணும்னா அகிலன் வர்ற வரை என்னோட வா. இவனுங்க என்ன கிழிஞ்சிடுவாங்கனு பார்த்திடுவோம். இவனுங்களுக்காக காலேஜ்லயிருந்து ஏம்மா வந்துட்ட. அங்கியிருந்தாலும் ப்ரின்சிபால் போலீஸை வரவழைச்சிருப்பார். அப்படியொன்னும் மத்த பசங்க சும்மாயிருப்பாங்களா? அகிலன் தங்கச்சினு கூட நின்றுருப்பாங்க" என்றான்.
தூரிகாவோ இனியன் அண்ணன் வந்து பேசியதை கேட்டு தைரியம் பெற்றவளாக நின்றாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 51)
அடேயப்பா..! எப்பத்துலயிருந்து இந்த இனியன் இம்புட்டு நல்லவனா மாறினான்...?
இப்பத்தான் பொண்டாட்டியோட அருமையும் தெரிஞ்சிருக்கு, உறவுகளோட அருமையும் புரிஞ்சிருக்குப் போல. நல்லது தான். நானும் ஒரு ரௌடி தான் என்கிற இனியனோட மாற்றம் நல்லாவே இருக்குது. இப்படியே நல்லபடியா மாறட்டும், வாழட்டும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
