Forum

வால்கனோ பூக்கள் - 3
 
Notifications
Clear all

வால்கனோ பூக்கள் - 3

1 Posts
1 Users
0 Reactions
23 Views
 Jai
(@jai)
Posts: 7
Active Member
Topic starter
 
[#167]

அத்தியாயம் - 3

கனவுகளை ரெக்கார்ட் செய்யும் ஏஐ தொழில்நுட்பம் தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை அதனால் இது என் கற்பனை மட்டுமே.
இதனால் நமக்கு வரும் கனவுகளை ரெக்கார்ட் செய்து அந்த நேரத்தில் ஏஐ நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து நமக்கு விழிப்பு வந்ததும் அந்த கனவினில் என்னவெல்லாம் நடந்ததோ அதை வீடியோவாக மாற்றி கோடிங் செய்து கொடுக்கும் அதனால் அப்போது என்ற நடந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
இதை தகுந்த பாதுகாப்பு முறையில்தான் டெஸ்ட் செய்வர் அதனால் அதற்கு முன்பே அப்ளை செய்ய வேண்டும்.
அதற்கான முறையான காரணமும் சொல்லி இருந்தால்தான் அவர்கள் இந்த டெஸ்ட் மேற்கொள்ள முடியும்.
அதனால்தான் அதற்கு உடனே அப்ளை செய்தாள் யாழினி.

அங்கு ஆட்ரியன் கிம் காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து விவரங்களை சேகரித்து கொண்டு இருந்தான்.
இதுவரை கிடைத்த தகவலில் சற்று முரண்பாடாய் இருந்தது ஹனிஷா கேஸ் ஃபைல் மட்டுமே.
இதுவரை காணாமல் போன குழந்தைகளின் பாடி கிடைத்தது அதும் வெவ்வேறு இடங்களில் ஒரு குழந்தையின் எலும்பை வைத்துக்கூட அந்த குழந்தையை கண்டு பிடிக்க முடிந்தது ஆனால் இந்த குழந்தையின் எலும்பு கூட கிடைக்கவில்லை அப்புறம் எப்படி இறந்ததாக அறிவித்து கேஸை முடித்தனர் என்றுதான் யோசித்துக்கொண்டு இருந்தான்.
குழந்தையின் தாய் அவரது மகள் இறக்கவில்லை என்று புலம்புகிறார் தந்தையோ குழந்தை இறந்ததில் இருந்து மனைவி இப்படி பேசுவதாக சொல்கிறார்.
அவர்களது பேக்கிரவுண்ட் கூட பெரியதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
எல்லோரும் இதை சைக்கோ கொலை என்னும் போக்கிலேயே பார்த்துக்கொண்டு இருப்பதால் இதன் உண்மையான காரண காரியங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறினான் ஆட்ரியன் கிம்.

அவ்வபோது தான் இந்தியா சென்றிருந்த போது பார்த்து வம்பிழுத்த அந்த பெண்ணின் முகம் மட்டும் நினைவு வந்து செல்ல ‘திடீருனு இவ நினைப்பு எதுக்கு வருது’ என்று தலையை குலுக்கிவிட்டு தன் வேலையை தொடர்வான்.(வாட் ஏ கோ இன்சிடன்ட்)
முதலில் இறந்த குழந்தை வீட்டிற்கு சென்று விசாரித்ததில் அவள் பள்ளியில் பிக்னிக் அழைத்து சென்றனர் அப்போது காட்டுப்பகுதியில் காணாமல் சென்றவள் தேடி கிடைக்காமல் அடுத்த வாரம் அதே பகுதியில் நடந்த ஆக்சிடென்டில் பற்றிய தீயில் பாதி கருகிய நிலையில் தான் கிடைத்தாள் என்பது ஆட்ரியனுக்கு சிறிது சந்தேக விதையை தூவியது.
அதன் விளைவாக அடுத்து அடுத்து என்று விசாரித்தவனுக்கு இதே தகவலே கிடைக்க அதில் உடல் கிடைக்காமல் போனது ஹனிஷாவின் உடல் மட்டுமே அதனால் அதை பற்றி மேலும் விசாரிக்காமல் காவல்துறை அந்த கேஸை காட்டு விலங்குகள் அடித்து சாப்பிட்ட லிஸ்டில் சேர்த்து அவளை இறந்தவளாக அறிவித்து விட்டது.
இந்த கேஸ் மட்டும் அவனுக்கு எங்கோ இடிக்க அதை மட்டும் தீவிரமாக கவனித்தான்.
ஆனால் அவனுக்கு இதை வேறு கோணத்தில் பார்க்க வேண்டுமோ என்ற எண்ணம் வந்தபடியே இருந்தது.
அப்போது அவனது ரகசிய மெயிலுக்கு ஒரு மெயில் வந்திருந்தது.
அதை பார்த்தவனுக்கு அதை அனுப்பியது யார் என்பது தெரிந்துவிட்டது.
காரணம் இல்லாமல் அந்த நபர் ரகசியமாக மெயில் அனுப்பமாட்டார் என்பதை புரிந்தவன் உடனே அதனை திறந்து பார்த்தான்.
பார்த்தவன் மேலும் குழம்பி போனான்.
‘இது தான் தடை செய்யப்பட்டது ஆச்சே?’ இதை எப்படி செய்ய இயலும்?’ என்ற குழப்பம்தான் அவனுக்கு.
கூடவே இதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும்வரை இதை பற்றி யாருக்கும் மூச்சு கூட விடக்கூடாது என்று அல்லவா குறிப்பிட்டு இருக்கிறார் என்று யோசித்தவனுக்கு தான் பார்த்துக்கொண்டு இருந்த ஹனிஷா ஃபைலும் இதுவும் ஒரே பாதையில் பயணிக்கிறதோ? என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.
ஏன் நாம் இந்த கோணத்தில் விசாரணையை துவங்ககூடாது என்றும் எண்ணியவன்.
இதன் பிண்ணனி பயங்கரமானதாக இருக்கும் என்று மட்டும் புரிந்து கொண்டான்.
உடனே அதற்கான வேலைகளில் இறங்கினான்.

அங்கு டெக்கார்ட் செய்ய முதலில் யாழினிக்கு ஈசிஜி மிஷின் பொருத்தப்பட்டது.
அவள் உறங்குவதற்காக அவளுக்கு மிகவும் லேசான சடைன்(தூக்க மருந்து) செலுத்தப்பட்டது.
அவளது ஆக்ஸிஜன் சீராக இருக்கும் படி செய்தவர்கள் ஏ ஐ உதவியுடன் அவளது மூளையின் செயல்பாடு மற்றும் கனவுகளை ரெக்கார்ட் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அவளுக்கு உடல்நலம் ஏதாவது பாதிக்கப்பட்டால் உடனே வையித்தியம் பார்க்கவும் பக்கத்திலேயே இரண்டு மருத்துவர்கள் இருந்தனர்.
அதும் இல்லாமல் இதுபோன்ற டெஸ்ட்க்குலாம் அவர் சொந்த விருப்பப்படி தான் இதற்கு ஒத்துக்கொண்டு உள்ளார் இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு வேறு யாரும் காரணம் அல்ல என்று குறிப்பிட்டு கையெழுத்து வாங்குவர்.
“சர் சப்போஸ் எனக்கு ஏதாவது ஆகிட்டா இந்த ரெக்கார்ட் அண்ட் என் பாடியை என்னோட அண்ணன்கிட்ட ஒப்படைக்குற பொறுப்பை நான் உங்களுக்கு தர்றேன் சர் மறந்துடாதீங்க” என்று விட்டு அந்த ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டாள்.

நம் காணும் கனவுகள் யாவும் பொதுவாக எலக்ட்ரிக்கல் சிக்னல்ஸ் அண்ட் நியூரோ ஆக்டிவிட்டி ஃபார்ம்லதான் ரெக்கார்ட் ஆகும்.
இதுல ஏ ஐ வோட வேலை அந்த எலக்ட்ரிக்கல் அண்ட் நியூரோ சிக்னல்ஸ்ல உள்வாங்கி அதை டிகோடிங் செய்து அதை நமக்கு அதுக்கு ஏற்ப விஷூவலாக மாற்றி ரெக்கார்ட் செய்து காட்டும்.
ஏற்கனவே ஏ ஐ க்கு அந்த அந்த சிக்னல்ஸ்க்கு ஏற்றவாறு அதை இமேஜினிங் செய்யும் அளவுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருக்கும்.
உதாரணமாக அந்த இடத்தில் காடு என்ற சிக்னல் கிடைத்தால் அதை தன் மெமரியில் தேடி அதை ஏதோ ஒரு காடு என காட்டும்.
ஆனால் அதே இடம் இப்போது இருப்பதை போலவே காட்டாது.
அதனால் இதில் சிறு சிறு சறுக்கல்களும் உண்டு ஆனால் அது காட்டும் விஷூவலை வைத்து ஓரளவுக்கு நாம் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.

அதன்படி யாழினி பெட்டில் படுத்ததும் அவளுக்கு சடைன் அவளது ஐவி(iv) வழியாக சிறுக சிறுக செலுத்தப்பட்டது அவளது நெஞ்சில் ஈசிஜி உபகரணங்கள் பொறுத்தப்பட அவளது தலையிலும் அதே போல பொறுத்தப்பட்டு அதை ஏஐ மற்றும் மானிட்டருடன் கனெக்ட் செய்தனர்.
மயக்கமருந்தின் விளைவால் லேசாக உறங்க ஆரம்பித்து இருந்தாள் யாழினி.

அவளது கரத்தை பற்றியபடி அமர்ந்தார் அவளை மகள்போலவே பார்க்கும் அவளது ஹெட் ஆருத்ரன்.
என்னதான் அவளுக்கு இந்த டெஸ்ட் பற்றி செய்ய சொல்லி விட்டாலும் அவருக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.
அவளது தாய் தந்தையர் இறந்த நேரம் அவளையும் அவளது அண்ணனையும் அவர்தான் தேற்றினார்.
அவரது வழிகாட்டலின்படி தான் யோகேஷ் சுவிட்சர்லாந்து சென்றது.
இப்போது அவனும் தன் மகளை இழந்து தவிக்கிறான்.
அவனது தங்கைக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்று அவரிடம்தான் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி இருந்தான்.
இந்த எக்ப்ரிமெண்ட்டில் யாழினிக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என மனிதர் அஞ்சினார்.
தாய் தந்தைஅண்ணன் மகள் இப்போது தூக்கம் என இழந்து தவிப்பவளை பார்க்கும்போது அவருக்கு மனம் வலிக்கும் அதனாலேயே அவளை இந்த டெஸ்ட் எடுக்க சொன்னார் ஆனால் கனவில் நேருவது நிஜத்தில் இருப்பது போல இருந்து அவளது உயிர் போவது போல இருந்தால் அதான் அவளது கையை பிடித்து அமர்ந்து விட்டார்.
அவள் உறங்கியதும் ஏஐ தன் வேலையை ஆரம்பித்தது. அவளது மூளையின் செயல்திறன் அது என்னவெல்லாம் யோசித்து இப்போது கனவு உலகத்திற்கு செல்கிறது என்பதையெல்லாம் டிகோடிங் செய்து அதை விஷூவலாக காட்டியது.
சற்று நேரம் ஒரு விதமான அமைதி நிலவ சட்டென யாழினியின் உடல் வேர்க்க ஆரம்பித்து அவளது இதயத்துடிப்பு அதிகம் ஆகியது.
‘அத்தை என்னை காப்பாத்து அத்தை என்னை சுத்தி என்ன என்னமோ நடக்குது அத்தை என் ஆத்மாவை பிரிக்குறாங்க அத்தை நான் இப்ப உயிரோட உணர்வு இல்லாம இருக்கிறேன் அத்தை காப்பாத்து அத்தை matterhorn glacierல இருக்கேன் அத்தை என்னைபோல நிறைய பேர் இருக்காங்க அத்தை இது பெரிய காடு அத்தை ஃபுல்லா ஐஸ்ஸா இருக்கு பெரிய பெரிய மிஷின் அதுல என்னை படுக்க வெச்சு என் மண்டையில ஏதேதோ கனெக்ட் செஞ்சு வெச்சு இருக்காங்க அத்தை ரொம்ப வலிக்குது காப்பாத்து’ என்று அதே கனவு வர யாழினியின் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.
இதயத்துடிப்பின் வேகமும் அவளது மூளை செயல்பாட்டின் வேகமும் அதிகமாக அவளுக்கு பிபியும் ஜாஸ்தி ஆகியது.

“ஹனிஇஇஇ… நீ எங்க இருக்க சொல்லு ஹனி?” என்று அவள் கேட்க
‘எனக்கு தெரியல நீதான் கண்டுபிடிக்கணும் இப்போ உனக்கு எப்படி தலையில மாட்டி வெச்சு இருக்காங்களோ அதே போல தான் என்னையும் ஒரு கண்ணாடி பாக்ஸ்ல படுக்க வெச்சு போட்டு இருக்காங்க.
என்னோட நாக்கு அடியில ஏதோ எழுதினாங்க அது என்னானு கண்டுபிடி சீக்கிரம் எழுந்திரு அத்தே’ என்று பதில் வர அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கவுமே ஆருத்ரன்.
“இட்ஸ் எனஃப் அவளுக்கு பிபியும் ஹார்ட்பீட்டும் அதிகம் ஆகுது டாக்டர்” என்று அவர் கத்த உடனே அவளுக்கு முழிப்பு வருவதற்காக ஊசி செலுத்தப்பட்டது.
அதே சமயம் அவளது கையை அழுத்தி தலையை தடவி
“ஒன்னுமில்லமா ஒன்னுமில்ல” என்று அவளுக்கு ஆறுதல்போல அவர் பேச அவளுக்கு இதயத்துடிப்பு நார்மல் ஆனது அதே சமயம் “ஹனிஇஇஇ” என்றபடி
அதிர்ந்து அலறி எழுந்தாள் யாழினி.

“நத்திங் யாழினி ஒன்னுமில்ல டென்ஷன் ஆகாதே” என்று அவளை சமாதானம் செய்த ஆருத்ரனை மலங்க மலங்க பார்த்தாள் யாழினி.
அப்படியே பார்த்தவள் மயங்கி விட்டாள்.
உடனே அவளை செக் செய்த டாக்டர் “இது அதிக டென்ஷன்ல வந்த மயக்கம் சர் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்” என்றுகூறியபடி அவளுக்கு சலைன் ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அவளது கனவை டிகோடிங் செய்து காட்சிகளாக மாற்றியதை ஒரு பெண் டிரைவ்வில் சேமித்து எடுத்து வைத்தார் ஆருத்ரன்.
அவளது அருகிலேயே அமர்ந்து இருந்தார் அவர்.
கூடவே அவர்கள் டீமில் வேலை செய்து வரும் மற்றவர்களுமே அங்குதான் இருந்தனர்.
அவர்களுக்கு தெரியும் தங்கள் டீமிற்கு யாழினி எவ்வளவு ஸ்பெஷல் என்று.
அவளது ஆராய்ச்சி விளக்கங்களும் ப்ராஜெக்ட் வேலைகளும் அவ்வளவு சூப்பராக இருக்கும்.
முழுதாக ஐந்து மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து கண்விழித்தாள் யாழினி. அவளது அருகிலேயே இருந்த ஆருத்ரன் அவள் கண் விழித்ததும்
“யாழினி ஆர் யூ ஓகே?” என்றபடி டாக்டரை பார்க்க இருவரும் அவளை முழுவதும் சோதித்து முடித்து அவளுக்கு எதுவும் இல்லை ஜஸ்ட் சடைன் சைட் எஃபெக்ட் மட்டுமே என்று சொன்னபிறகே அவருக்கு உயிர் வந்தது.
“தேங்க் காட்” என்றவர் மயக்கத்தில் மலங்க மலங்க விழித்த யாழினியை பார்த்து
“ஒன்னுமில்ல யாழினி மயக்கம் தான் நீ ரெஸ்ட் எடு” என்றுவிட்டு அவளை மீண்டும் படுக்க வைக்க படுத்தவளால் பேச முடியாத அளவுக்கு டயர்ட்டாக இருந்தது.


 
Posted : July 13, 2026 9:13 am

Scroll to Top