வால்கனோ பூக்கள் அத்தியாயம் -4
அத்தியாயம் - 4
அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.
“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.
அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்கி போனாள்.
அவள் எழும்போதெல்லாம் சுவாசிக்க சிரமம் படுவதால் ஆக்ஸிஜன் ஸ்பீட் கம்மி செய்து அவளுக்கு செலுத்தப்பட்டது.
“ஏன் சர் இப்படி இருக்கா?” என்று ஆருத்ரனிடம் அவளது அந்த கொரியன் ப்ரண்ட் கேட்க
“தூக்கத்திலேயும் அவளது மூளை ரொம்ப வேலை செஞ்சுட்டு இருந்ததுல அதனால தான் இப்படி இருக்கா நல்லா தூங்கி எழுந்தா சரி ஆகிடுவா ஆனா அவதான் சரியா தூங்குறது இல்லையே அதான் வீக்கா இருக்கா அதுக்குத்தான் அவளுக்கு கம்மியான சடைன் கொடுத்து இருக்கேன் கொஞ்சம் நல்லா தூங்குவா.
ஓகே நீங்க போங்க நான் அவளை பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்ல
“இல்ல சர் நாங்களும் இருக்கோம் ப்ளீஸ்” என்று கேட்க அவள்மீது அவர்களது பாசத்தை உணர்ந்தவர்.
“ஓகே வொர்க் ஹியர்” என்று சொல்லி விட்டு அவரும் தன் லேப்டாப்போடு அமர்ந்து விட்டார்.
நம் மூளைக்கு போதிய அளவு உறக்கமும் ஆக்ஸிஜனும் கிடைக்காவிட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது.
அப்படி ஒரு மனநிலையில் தான் இருந்தாள் யாழினி.
அதனாலேயே அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து உறங்க வைத்தனர்.
அங்கு,
தனக்கு வந்த ஈமெயிலை பார்த்தவனுக்கு இதில் பெரிய தலை ஏதோ வேலை செய்கிறது அதனால்தான் இது இவ்வளவு இரகசியமாக யாருக்குமே தெரியாமல் இருக்கிறது இதை கண்டுபிடிப்பதற்குள் தனக்கு பெரிய பெரிய ஆபத்துகள் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவன்.
அவர்கள் வழியாக தான் இன்வெஸ்டிகேட் செய்வதை பார்த்தால் நிச்சயம் இது எல்லோருக்கும் ஆபத்தை விளைவிக்கும் அதனால் அவர்களது வழியை விட்டு வேறு வழியில் தான் விசாரணையை துவக்க வேண்டும் என்று உணர்ந்தவன்.
ஒரு பெருமூச்சை விட்டு தனக்கு வந்த மெயிலை டெலீட் செய்தவன் தனது பேக்பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
எங்கு என்று பார்த்தால் டிரக்கிங்கும் பங்கி ஜம்ப்பிங்கிற்கும் சென்றுவிட்டான்.
அவனது அஸிஸ்டென்ட் அவனுக்கு ஃபோன் செய்ய
“ஐயம் சாரி ஜார்ஜ் டோன்ட் கால்மீ ட்டூ டேய்ஸ்(i am sorry George don't call me two days)” என்று கூறினான்.
“வாட் ஹாப்பன்ட் சர்? ஆர் யூ கோயிங் ட்டூ இன்வெஸ்டிகேட் திஸ் கேஸ் சம்வேர்?(wat happens sir? Are you going to investigate this case somewhere?)” என்று அவன் கேள்வி கேட்க.
“நோ நோ ஐ டுக் மை ஹாலிடேய்ஸ்(no no i took my holidays)” என்று விட்டு கட் செய்துவிட்டான்.
ஃபோனை பார்த்த ஜார்ஜ் ‘இவருக்கு பையித்தியம் ஏதாவது புடிச்சுடுச்சா? கேஸ் எவ்ளோ பீக்கா இருக்கு அதை கண்டுபிடிக்காம ஹாலிடேய்ஸ்னு போய்ட்டாரே இவர நம்பி கேஸை கொடுத்து ஏமாந்துட்டாங்களே இந்த ஆபீசர்ஸ்’ என்று தான் எண்ணினான்.
நேராக Matterhorn glacier பகுதிக்கு சென்றவன் அங்கு பனிசருக்கு சென்றான்.
இரண்டு நாள் டிரக்கிங் ஸ்கேட்டிங் என்று செய்தவன் புத்துணர்ச்சியாக திரும்பி வந்தான்.
அவனை விசித்திரமாக பார்த்த ஜார்ஜை பார்த்து கண் அடித்தவன்
“எனக்கும் ரிப்ரஷ்மெண்ட் வேணும் ஜார்ஜ்” என்று சொல்லி விட்டு சென்றவனுக்கு புதிய கோணத்தில் இந்த கேஸை பார்க்க ஐடியா கிடைத்தது.
இங்கு,
நீண்ட நேரம் தூங்கி எழுந்த யாழினிக்கு சற்று தெம்பாக இருந்தது.
எழுந்தவள் பார்த்தது அவளது கூட பணியாற்றும் அனைவரும் அவளது டீம் லீடர் ஆருத்ரன் உட்பட எல்லோரும் அவள் அருகிலேயே அமர்ந்து வேலை பார்த்து கொண்டு அப்படியே உறங்கிவிட்டதை தான்.
அதை பார்த்தவள் அவர்களை தொந்தரவு செய்யாமல் எழுந்து அமர பார்க்க அவளது அசைவில் அனைவரும் விழித்துக்கொண்டனர்.
“ஆர் யூ ஓகே யாழினி யாழ்?” என்ற கேள்விகள் அவளை சூழ
“யா ஐயம் ஓகே நீங்கலாம் ரெஸ்ட் எடுக்காம என்ற செய்யுறீங்க?” என்று கேட்டாள் மெதுவாக.
“நான் போக சொன்னேன் ஆனா அவங்கதான் போகமாட்டோம் உன்கூடவே இருப்பேன்னு இருந்துட்டாங்கமா” என்றார் ஆருத்ரன்.
தான் தனியாக இல்லை என்று உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியது.
அதை உணர்ந்தவர் போல அவளது கையை தட்டி கொடுத்தவர்.
“ஓகே எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கேட்க.
அனைவரும் ஓகே என்று கூற அவளையும் தங்களோடு அழைத்து சென்றனர் கைதாங்கலாக.
அனைவரும் சாப்பிட அமர ஆருத்ரனை பார்த்தவள்
“சீஃப் ஏன் எனக்கு இவ்ளோ டயர்டா இருக்கு?” என்றாள்.
“அது நீ ஆல்ரெடி வீக் பாடி சடைன் கொடுத்ததால இன்னும் லீன் பாடி ஆகிட்ட அதான் டயர்ட்டா இருக்க” என்று அவளை கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்க அவளோ ஆவென பார்த்தாள்.
“உன் ப்ரெயின நீ ரெஸ்ட்டே இல்லாம ஓவர ஸ்டெரியின் செஞ்சு இப்போ ரெஸ்ட் கொடுக்கவும் அதுக்கு ரெஸ்ட் இன்னும் தேவைப்படுது அதான் டயர்டா இருக்க” என்று சொல்ல
அமைதியானவள்
“அப்போ ரெக்கார்ட் ஆகலையா சர்?” என்று கேட்க
அவளை பார்த்தவர்
“நாங்க எப்போ சொன்னோம்?” என்று எதிர்கேள்வி கேட்டார்.
அதில் அவரை அதிர்ந்து அவள் பார்க்க
“ம்ம் ரெக்கார்ட் செஞ்சு அதை ஏஐ டிகோடிங் செஞ்சு விஷூவலா மாத்தி கொடுத்துடுச்சு நீ சரியான அப்புறம் போட்டு காட்டலாம்னு இருக்கேன்” என்று அவர் சொல்ல அதிர்ந்து எழுந்து அமர்ந்தவள்
“சீஃப் எனக்கு உடனே அதை பார்க்கணும்” என்றாள்.
“நீ இப்போ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் யாழினி உன்னோட ப்ரெயின் எந்த விதமான அதிர்ச்சியையும் தாங்க முடியாது அது நிறைய சைட் எபெஃக்ட்டை தரும் யாழினி இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கலாம்” என்று அவர் கூற
“இல்ல எனக்கு இப்பவே பார்க்கணும் சைட் எஃபெக்ட் பத்திலாம் எனக்கு கவலை இல்லை சர் எனக்கு உடனே பார்க்கணும்” என்று அவள் கேட்க.
“நீ வேணா உன்னை பத்தி கவலை படாம இருக்கலாம் யாழினி பட் எங்களுக்கு இருக்கு நாளைக்கு தான் அதை உன்னால பார்க்க முடியும் லெட்ஸ் கோ கைய்ஸ்” என்றுவிட்டு அவர் எழுந்து சென்று விட அனைவரும் அவரது பின்னே செல்ல
“ஹே ப்ளீஸ்” என்ற அவளது கெஞ்சல்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போனது.
அனைவரும் சென்றுவிட எழுந்து அமர்ந்தவள் தன் மொபைலை எடுத்தாள்.
அதில் அவள் ரெக்கார்ட் செய்ய கனெக்ட் செய்து இருந்த கேமிராவின் ஆப் இருந்தது.
அதை ஓபன் செய்தவள் தனது செட் செய்த கேமிராக்களை திரும்ப வரும்படி செய்தாள் அதன்படி இரண்டு கொசு போன்ற கேமிராக்கள் பறந்து வந்தது அவளிடம்.
அதனை கனெக்ட் செய்து எல்லா மெமரியும் மொபைலுக்கு மாற்றியவள் அதனை ஆஃப் செய்தாள்.
இரண்டு நாட்கள் தனது மொபைல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறதே என்பதை உணர்ந்தவள் அதனை சார்ஜில் போட்டாள்.
அப்படியே அதை ப்ளே செய்தாள்.
முதலில் அவளை ஆராய்ச்சி அறைக்கு கொண்டு செல்வது தான் இருந்தது.
அப்போது முதல் இப்போது வரை ஆருத்ரன் மற்றும் அவளது நண்பர்கள் அவளுடனே தான் இருந்தனர் என்று தெரிந்து அவளுக்கு கண்கள் கலங்கியது.
ஆருத்ரன் அவளை விட்டு நாகராமல் அவளது கையை பற்றியபடி இருந்தது அவளுக்கு அவளது தந்தையே அவளுடன் இருந்தது போல இருந்தது.
இருந்தாலும் கலங்கினால் தன்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது என்று எண்ணியவள்
கலங்கிய கண்களை அப்படியே நீரை உள்ளிழுத்து தன் கண்களை சரி செய்தவள் அதை தொடர்ந்து பார்க்கலானாள்.
அதை பார்க்க பார்க்க அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
புகை மண்டலம் போன்ற பகுதி அதில் ஐஸ் மலை அவ்வளவு தான் தெரிந்தது. அதன்பின் தன் அக்கா மகள் ஹனிஷா ஏதோ ஒரு கண்ணாடி பெட்டியில் படுத்து இருப்பது போலவும் ஏதேதோ ஒயர்கள் கனெக்ட் செய்யப்பட்டு அவள் உறங்குவது போலவும் அவளை சுற்றி நிறைய மருத்துவர்கள் இருப்பது போலவும் பக்கத்திலேயே இன்னொரு கண்ணாடி பெட்டியில் வேறு ஒரு ஆள் படுத்து இருப்பது போலவும் அவரும் அதேபோல இருப்பது போலவும் அடிக்கடி ஹனிஷாவின் உடல் தூக்கி போடுவதை பார்த்தவளுக்கு
“ஹனிஇஇஇ” என்று அழுகையே வந்துவிட்டது.
இதையெல்லாம் பார்த்தவள் முன் அவளது அண்ணன் மகள் ஹனிஷாவின் முகம் வந்தது.
எழுந்திரு அத்தை அங்கதான் நான் இருக்கேன் நான் சாகலை அத்த.
இன்னும் உயிரோட தான் இருக்கேன் ஆனா என்னால எதையும் டச் பண்ண முடியல கரன்ட் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு வலி ஆனா என்னால எழுந்துக்கவே முடியல.
என்னை போல நிறைய பசங்க இங்க இருக்காங்க எல்லாரும் இண்டியன்ஸ் வேற.
காப்பாத்து அத்த.
நான் உன் பக்கத்திலேயே தான் இருக்கேன் ஆனா பேச முடியல உன் கனவுலதான் பேச முடியுது.
என்னோட முகத்துல ஏதோ மார்க் இருக்கு அண்ட் என்று நாக்கை காட்டினாள் அதோடு இவள் ஹனிஇஇஇ என்ற அலறலில் ஹனிஷாவின் உருவம் மறைந்து போனது திரையில்.
இவ்வளவும் தான் அவளுக்கு தினம் வரும் கனவு.
அதைதான் ஏஐ டிகோடிங் செய்து விஷூவலாக அவளுக்கு மாற்றி கொடுத்து உள்ளது.
அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவளுக்கு மண்டையே வலிப்பது போல் ஆனது.
அவளது மூளை ரெஸ்ட்டே இல்லாமல் இப்போதும் வேலை செய்ததன் பக்கவிளைவு அவளை மயக்கத்திற்கு தள்ள முற்பட உஷாராக தன் மொபைலை லாக் செய்தவள் அப்படியே மயங்கிவிட்டாள்.
ஆருத்ரன் அனுப்பிய அந்த கொரியன் பையன் வந்து பார்த்தபோது மொபைல் சார்ஜில் இருந்தது அவளோ தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று தான் நினைத்தான்.
அதையே போய் சொல்லவும் யோசனையோடு ஆருத்ரன் “மொபைல் சார்ஜ்ல இருந்தது ஓகே ஆனா எந்த பொஷிஷன்ல இருந்தது யாழினி பெட் பக்கத்துலயா? இல்ல அவ கையிலயா?” என்றார் அதற்கு அவன்
“அவ கையில் இருந்தது சீஃப்” என்று கூற அவசரமாக எழுந்து சென்றார் அவளது அருகில் சென்றவர் அவளை
“யாழினி யாழி” என்று எழுப்ப அவளிடம் தூக்கத்தில் இருக்கும் அசைவுகூட இல்லை என்பதை உணர்ந்தவர் உடனே டாக்டரை அழைத்தார்.
அவர் வந்து பரிசோதனை செய்து அவர் வீடியோவை பார்த்தாரா என்று விசாரிக்க
இல்லை இன்னும் அவளுக்கு காட்டவே இல்லை என்ற பதில் வர உடனே மருந்தை செலுத்தியவர்
“அப்போ அவங்க அகெய்ன் அந்த கனவு கண்டாங்க போல அதான் அவங்க ப்ரெயின் ரொம்ப ஸ்டெரியின் ஆகி இருக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நார்மலா தூங்க முடியல போல மருந்து கொடுத்து இருக்கேன் நல்லா தூங்கட்டும் நர்ஸ் நீங்க கூடவே இருங்க பல்ஸ் அண்ட் பிபி ட்டூ அவர்ஸ் ஒன்ஸ் செக் செய்ங்க” என்று விட்டு
“ரொம்ப வீக்கா இருக்காங்க சர் அவங்க ப்ரெயின் ரெஸ்ட்லெஸ் ஆனா மயக்கம் வரும் சர்.
இது இந்த டெஸ்ட்டோட சைட் எஃபெக்ட்ஸ் நான் ஒரு டேப்ளட் தர்றேன் அதை இந்த மாதிரி ஆகுற நேரம் கண்டிப்பா எடுத்துக்க சொல்லுங்க”என்றுவிட்டு அவர் செல்ல.
தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார் ஆருத்ரன்.
“நான் தான் அவளுக்கு இந்த டெஸ்ட் பத்தி சொல்லி தப்பு செஞ்சுட்டேனோ?” என்று பேச
“சர் அவ ரொம்ப ஃபோர்ஸ் பண்ணதால தானே இந்த டெஸ்ட்டே செஞ்சீங்க எல்லா எக்ஸ்பீரிமெண்ட்ஸ்லயும் வர்ற டிராபேக்ஸ் தானே சர் இதுலயும் அவளை நல்லா பார்த்துகலாம் சர் டோண்ட் வொர்ரி” என்று எல்லாம் சேர்ந்து அவருக்கு ஆறுதல் அளிக்க
அவளைவிட்டு எங்குமே நகராமல் அமர்ந்து விட்டார் ஆருத்ரன்.
மற்றவர்களும் அவரோடே அமர்ந்துவிட்டனர்.
அப்படியே எல்லோரும் உறங்கிவிட அவளை நர்ஸ் செக் செய்யும் போதெல்லாம் ஆருத்ரனும் சேர்ந்து செக் செய்தார்.
அவளது வைட்டல்ஸ் நார்மலாகவே இருப்பதை உணர்ந்தவர் அதிகாலையில் உறங்கி போனார்.
காலையில் எல்லோரும் எழ ஆருத்ரனும் யாழினியும் மட்டும் உறங்கி கொண்டிருந்தனர்.
ஷிப்ட் நர்ஸ் வர ஏற்கனவே இருந்தவர் போக கிளம்ப ஆருத்ரனை ஒருவன் எழுப்ப போக
“அவர் தூங்கட்டும் சர் அவர் நைட்டு ஃபுல்லா தூங்காம அந்த பொண்ணை செக் செஞ்சுட்டே இருந்தாரு.
மார்னிங் ஃபைவ் ஓ கிளாக் தான் தூங்கினார்.
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்” என்று சொல்லி செல்ல அனைவரும் எழுந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தனர்.
அவர்களுக்குள் அமைதியாக பேசியபடி காஃபி ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் வேலையை துவங்க நீண்ட நேரம் கழித்தே விழித்தனர் இருவரும்.
ஆருத்ரன் எழுந்ததும் யாழினியை செக் செய்ய அவளும் எழுந்தாள்.
அவளை பரிசோதனை செய்த டாக்டர் இந்த சைட் எஃபெக்ட் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதுபோல் ஆவதற்கு முன் இந்த மருந்தை எடுத்தே ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்பினார்.
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
