Forum

வால்கனோ பூக்கள் -2
 
Notifications
Clear all

வால்கனோ பூக்கள் -2

3 Posts
2 Users
2 Reactions
37 Views
 Jai
(@jai)
Posts: 7
Active Member
Topic starter
 
[#144]

அத்தியாயம் - 2

Regenesis or soul transfer initiative: கூடு விட்டு கூடு பாயும் முறை.
பண்டைய காலங்களில் மாய மந்திரம் செய்யும் மாந்திரீக ஆட்கள் தங்கள் ஆன்மாவை அவர்கள் உடலை விட்டு பிரிய வைத்து வேறு பொருளிலோ அல்லது உயிரிலோ செலுத்தி மீண்டும் தனது உடலிலோ திரும்ப செலுத்தும் முறை இருந்ததாக கூறப்படுகிறது.
அதை இன்றைய நவீன மருத்துவ உலகம் ஆராய்ச்சி செய்து அதை சாத்தியம் அற்றது என்றும் மனித உயிரோடு விளையாடும் இத்தகைய ஆராய்ச்சிகள் குற்றமாகும் என தடை செய்யப்பட்டது.
அதனால் நிறைய நாடுகள் இந்த ஆராய்ச்சியை செய்ய விருப்பம் இருந்தும் அதற்கான பொருட்செலவு மற்றும் இல்லீகலாக செய்ய இடம் மற்றும் மனிதன் என ஏதாவது ஒன்று இல்லாத காரணங்களால் கைவிடப்பட்டது.

சில பேராசைக்கார அதிகாரம் மிக்க ஆட்களால் இதை உண்மை என நம்புவதாலும் மறைமுகமாக இன்றும் இது போன்ற நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுதான் வருகிறது.
அதற்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம்.

யோகேஷ் அழுதபடி பேச அவன் சொன்ன செய்தியில் அதிர்ந்து மொபைலை கீழே போட்டாள் யாழ்.
“யாழ் யாழ்” என்று மறுமுனையில் அவன் அலற கை நடுங்க மொபைலை எடுத்தவள்
“எ என்ன அண்ணா சொல்றீங்க? ஹ..ஹனி?” என்று அதற்குமேல் அவளுக்கு பேசக்கூட வரவில்லை.
அண்ணனுக்கு குழந்தை பிறக்கும் போது அவள் முதல் ஆளாய் போய் பார்க்கவில்லைதான் அவளது வேலைப்பளு அவளை போகவிடவில்லை ஆனால் அவள் சென்று பார்க்கும் போது அவளது அண்ணன் மகளை சிறு மலராய் சிவப்பு பூவாய் அவளை ஏந்தியவளுக்கு உலகமே அவளது கையில் இருந்தது போல இருந்தது.

அத்தை மருமகள் பாசத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது அதுபோலவே இவர்களது பாசமும்.
வேறு வேறு பிரதேசத்தில் வசித்தாலும் நினைத்த நேரத்தில் அவளை பார்க்க பறந்து சென்று விடுவாள் இருவரும் சண்டையிட்டு ஓய்ந்து சமாதானம் ஆகி ஒருவரை ஒருவர் வாயாடி வாரிக்கொண்டு தான் அடங்குவார்கள் அதன்பின் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை.
தாய் தந்தை இறக்கும் முன் அவளுக்கு பெங்களூரில் வேலை கிடைக்க அங்கு சென்று தங்க வேண்டும் என்று அவள் சொல்ல அவர்கள் தடுக்க அவர்களையே திட்டி தன் அத்தைக்காக சப்போர்ட்டாக பேசியவள் ஹனிஷாதான் அவ்வளவு பாசம் அத்தைமேல்.
யாழினிக்கும் அவள் என்றால் அவ்வளவு உயிர்.
அப்படிபட்ட அண்ணன் மகள் இப்போது காணவில்லை என்பதும் அவள் உயிர் இருக்கா இல்லையா என தெரியவில்லை பாடி கூட கிடைக்கவில்லை என்று அவளது அண்ணன் கூறுகையில் இது கனவுதான் கனவுதான் என்று கன்னத்தில் அடித்துக்கொண்டவளுக்கு லைனில் அழுதுகொண்டு இருந்த தன் அண்ணனின் கதறல் இது அனைத்தும் உண்மை என நிரூபனம் ஆனது.
உடனே கிளம்பி சுவிட்சர்லாந்து சென்றவளுக்கு நிலைகுலைந்து போன அண்ணனும் அண்ணியும் அழுது அழுது ஓய்ந்து போன குழந்தையும்தான் கண்ணில் பட்டனர்.
அவர்களை சமாதானம் செய்தவளுக்கு ஆறுதல் சொல்பவர்தான் யாருமில்லை.
அவர்களுடனே ஒருவாரம் இருந்தவளுக்கு அவர்களை தேற்றுவது பெரிய சிரமமாய் இருந்தது.
அப்படி இப்படி இருக்கும் இன்னொரு குழந்தையை காட்டி அவர்களை சமாதானம் செய்தவள் அங்கு இருந்தால் அவளது ஹனிஷா அவளை அழைப்பது போலவும் ஏதோ உதவி செய் அத்தை காப்பாத்து அத்தை என்று அழுவது போலவும் ஆனால் முகம் மட்டும் வேறு போல தோற்றம் கனவாக வந்து வந்து போக அவளது பிரிவும் அவளையே நினைத்தபடி இருப்பதால் அப்படி தோன்றுகிறது என எண்ணி தூக்கமில்லாமல் இரவை கழித்தவள் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

ஆனால் அங்கிருந்து வந்த நாள் முதலே அவளுக்கு ஏதோ அவளுடன் இருப்பது போலவும் அவளிடம் பேச துடிப்பது போலவும் கண்ணை மூடினாலே தன் அண்ணன்மகள் ‘அத்தை என்னை காப்பாத்து காப்பாத்துனு அவங்க என்னை கொல்ல பார்க்குறாங்க காப்பாத்து அத்தை’ என்று
அழுவது போலவும் தொடர்ச்சியாக தோன்றிக்கொண்டே இருந்தது.
முதலில் அவளது நியாபகமாகவே இருப்பதால் கனவு போல வருகிறது என்று நினைத்த யாழினிக்கு.
ஒரே கனவு தொடர்ந்து வருமா? என்ற சந்தேகமும் தோன்ற நேரே சென்று நின்றாள் அவளது மனோதத்துவ மருத்தவரிடம்.
அவளது கூற்றை கேட்ட மருத்துவர்
“மிஸ் யாழினி நீங்க சரியா தூங்காம உங்க ஆராய்ச்சில இருந்து இருக்கீங்க சரியா ஃபுட்டும் எடுத்துக்கல இதுல இடையில உங்க அண்ணன் பொண்ணோட மரணம் எல்லாம் சேர்ந்து உங்களோட மனநிலையை பாதிச்சு இருக்கு.
ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க அதான் இப்படி ஒரு ஒன் வீக் ஆர் டென் டேய்ஸ் லீவ் போட்டுட்டு எங்கேயாவது அவுட்டிங் போய்ட்டு வாங்களேன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவீங்க கொஞ்சம் சப்ளிமெண்ட்ஸ் எழுதி தர்றேன் அது உங்களுக்கு ஸ்டெரஸ் கம்மி பண்ண உதவும்” என்று கூறி
மருந்தை எழுதி கொடுத்து அனுப்பினார் மருத்துவர்.
ஒருவேளை ஹனிஷா பற்றியே யோசிப்பதால் அவளை பற்றி தினமும் கனவாய் வருகிறது போல என்று எண்ணியவள் மருத்துவர் ஆலோசனை படி இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து வெளியே சென்று வந்தவள் வேலையில் தன் கவனத்தை செலுத்தினாள்.
ஆனால் அந்த கனவு அவளை விடுவதாய் இல்லை.
ஒருசில நாட்களில் அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்து வழிந்துவிடும் அந்த அளவிற்கு அவளை படுத்தி எடுக்கும் அந்த கனவு.

சரி அண்ணனிடம் பேசலாம் என அவள் ஃபோன் செய்ய மறுமுனையில் எடுத்தவனிடம் நலம் விசாரிக்க அவனோ தான் நலம் ஆனால் அண்ணிதான் அவளுக்கு கனவுல ஹனிஷா வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என்னை கொல்லப்பார்க்குறாங்கனு கத்துற போல கனவு வந்துகிட்டே இருப்பதாகவும் அதனால பாப்பா உயிரோட தான் இருக்கிறானு புலம்பிகொண்டே இருக்கிறாள் என்று கூற திக்கென்று ஆனது யாழினிக்கு.
அவளுக்கும் அதே தானே கனவாய் வந்து கொண்டு இருக்கிறது.
“சரினா பார்த்துக்கோங்க நான் சீக்கிரம் வந்து பார்க்கிறேன் உங்களை” என்று விட்டு ஃபோனை வைத்தவளுக்கு யோசனை தீவிரமாய் ஆனது.

அதே நேரம் சுவிட்சர்லாந்தின் பனி சூழ்ந்த மலை நகரமான ஜெர்மத் மற்றும் மேத்தர்ஹார்ன் கிளேசியர்(Zermatt& Matterhorn glacier) பகுதியில் ஐந்தாவதாக காணாமல் போன இந்தியாவை சேர்ந்த கிளாரா என்னும் குழந்தை பள்ளியிலிருந்து கேம்ப்பிங்க்காக கேபிள் காரில் செல்வதற்காக காத்திருந்த வேளையில் இடையில் கேபிள்கார் பழுது என்ற தகவல் வர அங்கு சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி அதில் ஆசிரியரும் மற்ற பிரதேசத்தை சேர்ந்த குழந்தைகளும் மயக்கமாகி இருக்க அவர்களோடு இருந்த இந்தியப்பெண் கிளாரா மட்டும் காணவில்லை என்ற ததவல் வர உடனே மற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்தரவு வந்த நேரத்தில் காணாமல் போன அந்த குழந்தையை தேடும்பணியில் ஈடுபட்டு இருந்தான்.
ஆட்ரியன் கிம் (கிரிமினல் போலீஸ் ஆஃப் க்ரைம் பிராஞ்ச் (Adrian Kim - criminal police of crime branch, இந்தோ-கொரிய வம்சாவளியில் பிறந்து தாய் தந்தையின் வேலை காரணமாக பனிரெண்டு வயதிலேயே சுவிட்சர்லாந்து வந்து தங்கி படித்து அந்நாட்டின் ப்ரஜை ஆகி அங்கேயே க்ரைம் ப்ரான்ச்சில் பெரிய பதவியில் பணிபுரியும் இளைய ஆபீசர்)
அவனது தாய் தந்தை இருவரும் போலீஸ் துறையில் பணிபுரிந்தவர்கள்.

காணாமல் போன அனைத்து குழந்தைகளும் ஒரே வயதுடையவர்கள் அதும் எல்லோரும் இந்தியர்கள் அதும் பெண் பிள்ளைகள் அதும் எல்லோரும் ஓ பாசிட்டிவ் இரத்தவகை.
இத்துடன் அந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போன ஐவரில் கிளாராவும் ஒருவள்.
சுவிஸ் கவர்ண்மெண்ட்டின் ஸ்பெஷல் ரெக்கமெண்டில் தான் இந்த கேஸை விசாரிக்க மாற்றலாகி வந்துள்ளான் ஆட்ரியன் கிம்.
இந்தியாவையும் கொரியாவையும் கலந்து செய்த கலவைதான் ஆட்ரியன்.
அவனது கண்கள் கோலி உருண்டை போல அழகாக இருக்கும்.
அந்த நாட்டில் இருப்பதாலோ இல்லை அவனது தாய் மிகவும் வெள்ளையாக இருந்ததாலோ தெரியவில்லை அவனும் ரொம்ப வெள்ளையாகவே இருந்தான்.
அவனது தாய் தந்தையும் ஒரு தீவிரவாதியை பிடிக்க செல்லும் போது அடிப்பட்டதில் இருவரும் இறந்து போயினர்.
அம்மா வழி உறவு என்றவர்கள் அவனது பொறுப்பை ஏற்க மறுக்க அப்பா வழியில் உறவென்று யாருமே தெரியாது அதனால் அங்கிருந்த அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து தந்தையின் பணியையே வாங்கிய ஆட்ரியன் முதன்முதலில் செய்த என்கவுண்டர் அவனது தாய் தந்தையை கொன்ன தீவிரவாதிதான்.

தன் வேலையின் ஆபத்தை உணர்ந்தவன் அவனுக்கு நெருக்கமாக யாரையுமே வைத்துக்கொள்ளவில்லை.
தனக்கென்று வந்த ஒரு உறவையும் தன் வேலையால் இழந்திருந்தான் அதனால் அவன் அதன்பின் யாரையும் அவனை நெருங்க விடுவதில்லை.
“எனி இன்ஃபர்மேஷன் திஸ் கேஸு ஆட்ரியன்?(இந்த கேஸில் ஏதாவது விவரம் தெரிந்ததா ஆட்ரியன்?)” என்று அவனது உயரதிகாரி கேட்க

“நோ சர் ஐயம் க்ளூலெஸ் நீட் ட்டூ இன்வெஸ்டிகேட் மோர் பர்சன்ஸ்(இல்ல சர் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை இன்னும் நிறைய பேரை நான் விசாரிக்க வேண்டும்)” என்று ஆட்ரியன் கூற
“வாட் எவர் யூ வான்ட் ஐ வில் கிராண்டட் நீட் ட்டூ ஃபைண்ட் அவுட் திஸ் கேஸ் வித்தின் ஒன் மன்த்(உனக்கு என்ன வேணுமஃ செய் அதுக்கான அதிகாரம் தர்றேன் ஆனா இந்த கேஸை ஒரு மாசத்துல கண்டுபிடிச்சே ஆகணும்)” என்று அவர் கூறி செல்ல அங்கிருந்து கிளம்பியவன்.
இதற்கு முன் காணாமல் போன குழந்தைகளின் லிஸ்ட் அவர்களது பேக்கிரவுண்ட் அட்ரஸ் என்று அனைத்தையும் சரிபார்த்தவன்
முதலில் காணாமல் போன குழந்தையை பற்றி விசாரிக்க கிளம்பினான்.

இங்கு யாழினிக்கோ கனவின் தாக்கம் அதிகம் ஆகியது.
‘அத்தை என்னை காப்பாத்து உன்னாலதான் என்னை காப்பாத்த முடியும் உடனே கிளம்பி வா அத்தை என் உயிரை என்கிட்ட இருந்து பிரிக்க சதி செய்யுறாங்க நான் சாகலை அத்தை கோமால இருக்கேன்.
என்னை போல கடத்தின பொண்ணுங்க எல்லாம் செத்துட்டாங்க அத்தை நான் மட்டும் தான் உயிரோட இருக்கேன்
காப்பாத்து அத்தை என்னை நம்பு” என்று அதிகம் அவளுக்கு கேட்க ஆரம்பித்தது.
முதலில் கனவு என்று அவள் அதை தவிர்க்க எண்ணி மருத்துவர் கொடுத்த மருந்துகளையும் உண்டாள் ஆனால் பலன் பூஜ்ஜியம்தான்.
ஹனிஷாவின் அபயக்குரல் நாளுக்குநாள் அவளுக்கு அதிகம்தான் ஆனது.
இதை தவிர்க்க எண்ணி அவளது வேலையில் கவனத்தை செலுத்த எண்ணியவளுக்கு அவளது புரொபசர் சொன்ன செய்தி புதியது.

“மார்னிங் யாழினி.
என்ன ரொம்ப டல்லா இருக்குற?” என்று அவர் கேட்க

“மார்னிங் சர்.
என்னால தூங்கவே முடியலை சர் எனக்கு ஒரே இல்யூஷனா இருக்கு” என்று யாழினி சொல்ல

“வாட் ஹாப்பன்ட்?” என்று அவர் கேட்க
“இல்ல சர் நாளுக்கு நாள் செத்துபோன என் அண்ணன் பொண்ணு என்கிட்ட ஹெல்ப் கேட்கிற அந்த கனவு ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு.
என் உயிரை பிரிக்க பார்க்கிறாங்க காப்பாத்து அத்தைனு” என்று யாழினி சொல்ல
சிறிது யோசித்தவர்
“எனக்கு தோணுது உன் அண்ணன் பொண்ணு சாகலைனு” என்று அவர் கூற
அதிர்ந்து அவரை பார்த்தவள்
“சர் அந்த காட்டுல பெரியவங்க தொலைஞ்சாலே அனிமல்ஸ் சாப்பிட்டுடும் இதுல அவ குழந்தை சர் அவ பாடி கூட கிடைக்கல அப்புறம் எப்படி சர் அவ உயிரோட இருக்க முடியும்?” என்று கேட்டாள் யாழினி.
“தொலைஞ்சா பரவாயில்லை நீ சொல்றது நடக்க சான்ஸ் இருக்கு பட் யாராவது ஏதாவது ரீசன்க்கு கிட்னாப் செஞ்சு இருந்தா? அவங்க ஏதாவது ஒரு ரீசன்க்கு குழந்தையை கொல்லாம இருந்தா?” என்று அவர் கேட்க அதிர்ந்த யாழினி எழுந்து நின்றாள்.

“சர் என்ன சர் சொல்றீங்க?” என்று அவள் அதிர்ந்து கேட்க

“இட்ஸ் மை கெஸ் தான் யாழினி.
நீ சொல்ற இல்லியூஷனை பத்தி யோசிக்கும் போது எனக்கு தோணுனது இதுதான்.
யாராவது உங்க ப்ரோ வோட குழந்தையை கிட்னாப் செஞ்சு அவங்க நாம ஆராய்ச்சி செய்யுறமாதிரி soul detachment experimentக்கு யூஸ் செஞ்சு இருந்தா அவளோட ஆன்மா உன்னை கான்டாக்ட் செய்ய ட்ரை செஞ்சா?” என்று கேள்வி கேட்க
“சர் நான் இப்படி யோசிக்கவே இல்லையே ஆனா அப்படி இருந்தா கூட soul detachable ஆனா 7 seconds தானே சர் ரிட்டர்ன் ஆக டைம் எடுக்கும்.
அதுக்குள்ள இறந்து இறப்பாங்களே?” என்று கேட்டாள் யாழினி.
“ரேர் கேஸஸ் கோமாக்கு போய்டுவாங்க யாழினி.
இட்ஸ் ப்ரூவன்.
ஒரு கேஸ் அப்படி நடந்து இருக்கு.
அவங்க soul அவங்க குடும்பத்தோட தொடர்பு கொள்ள ட்ரை செஞ்சு இருக்கு பட் ஒன் வீக்ல இறந்துட்டாங்க.
ஆனா உன் அண்ணன் பொண்ணு கேஸை பொறுத்தவரை எனக்கு என்னமோ அவ இன்னும் உயிரோட இருக்கானு தோணுது.
அதனால்தான் ஆறு மாசமா உனக்கு உன் அண்ணிக்குனு தொடர்ந்து அதே கனவு வர்றது போல.
பிகாஸ் முழிச்சு இருக்கும்போது ஆன்மாவால நம்மள தொடர்பு கொள்ள முடியாது.
இதை பத்தி ஆராய்ச்சி செய்யுற உனக்கு நான் சொல்லி புரியவைக்க வேண்டியது இல்ல நல்லா யோசிச்சு பாரு யாழினி.
நான் சொன்னது போலவும் இருக்கலாம்” என்று அவர் கூற குழப்பமாய் பார்த்தவள்
“சர் ஆனா யுரோப் கண்ட்ரீஸ்ல இதெல்லாம் இல்லீகல் அங்க அதுக்கான அதிகாரம் யாருக்கும் கொடுக்கலை அண்ட் இது ஏன் யாராவது சைக்கோ கில்லரா இருக்கக்கூடாது?” என்று யாழினி கேட்க
“மே பி இருக்கலாம்.
ஏன் நம்ம கண்ட்ரில கூட இல்லீகல்தான் பட் நாம முயற்சி எடுத்துட்டு தானே இருக்கோம்.
லாஸ்ட் இயர் கூட ஒரு சயின்டிஸ்ட் ட்ரை செஞ்சு அரெஸ்ட் ஆனாரே.
பட் மத்த குழந்தைங்க பாடி கிடைச்சுடுச்சு உன் அண்ணன் பொண்ணு பாடி மட்டும் தான் கிடைக்கல அட்லீஸ்ட் காட்டு மிருகங்கள் அடிச்சு சாப்பிட்டு இருந்தா கூட ஒரு எலும்பாவது கிடைச்சு இருக்குமே.
அதுவும் தானே நடந்தது.
ஒரு குழந்தையோட பாடி காட்டு மிருகங்கள் சாப்பிட்டதுல அந்த குழந்தையோட எலும்பு கிடைச்சதுல?”.என்று அவர் கேள்வி கேட்க அவள் மேலும் குழம்பி போனாள்.
“நீ வேணும்னா உன் டிரீம்ஸ் ரெக்கார்ட் செய்யுற டெஸ்ட் செஞ்சு பாரேன் யாழினி உனக்கு ஒரு கிளீயரன்ஸ் கிடைக்கும்” என்று அவர் யோசனை சொல்ல ‘அதுவும் சரிதான் இவர் கூறுவது போலவும் இருந்தால் காலத்தை தாமதிக்காமல் தன் அண்ணன் மகளை காப்பாற்ற முடியுமே?’
என்று எண்ணிய யாழினி உடனே அந்த டெஸ்ட்க்கு அப்ளை செய்தாள்.


 
Posted : July 6, 2026 10:01 am
Kalidevi reacted
(@kalidevi)
Posts: 56
Trusted Member
 

something etho nadakuthu atha apadi thonuthu


 
Posted : July 7, 2026 4:03 pm
Jai reacted
 Jai
(@jai)
Posts: 7
Active Member
Topic starter
 

@kalidevi seekiram kandu pudichu sollungal


 
Posted : July 9, 2026 7:22 pm

Scroll to Top