வால்கனோ பூக்கள்
அத்தியாயம் -1
வால்கனோ பூக்கள்
அத்தியாயம் - 1
அத்தை
சுவிட்சர்லாந்து அரசு மருத்துவமனை:
“சோ உங்களுக்கு ப்யூச்சர்ல சுவிட்சர்லாந்து பக்கம் செட்டில் ஆகுற ஐடியா ஏதாவது இருக்கா?” என்று அவன் கேட்க.
“அண்ணன் பிள்ளைய பலிவாங்க பார்த்த இந்த ஊர்லலாம் நான் செட்டில் ஆவேனா என்ன? வாட் ட்டூ யூ மீன்?” என்று தன் அண்ணனின் இரண்டாவது குழந்தையான ஜோ வை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவனுக்கு உணவு ஊட்டியபடி அவனை பார்க்காமலே பதிலை கொடுத்து கேள்வியும் கேட்டாள் யாழ்.
அவளது அண்ணனும் அண்ணியும் இருவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தனர்.
“ஐ மீன்… நத்திங் விடுங்க இல்லனா கொரியால கூட செட்டில் ஆகலாம் ரெண்டும் வேணாம் நான் இந்தியா பக்கம் செட்டில் ஆகிடுறேன்” என்று அவன் பதில் பேச
“நீங்க?” என்று அவள் அவனை நிமிர்ந்து பார்த்து சந்தேகமாய் இழுக்க
“அத்தை ஹீ ஈஸ் ப்ரபோஸிங் யூ. அதுகூட புரியாத மக்கா இருக்கீங்க?” என்று பெட்டில் அமர்ந்தபடி அவளது அண்ணன் மகள் ஹனிஷா கூற அப்போது தான் அவளுக்கு அவன் பேசியதன் சாராம்சம் விளங்கியது.
அவனை ஆவென அவள் பார்க்க.
“எஸ் யா..யா.. சாரி தட் வேர்ட் ஈஸ் அனேபில் ட்டூ ஸ்பெல் ஃபார் மீ சோ ஐ கால்ட் யூ ஆஸ் இனி ஓகே.
சீ இனி ஐ லவ் யூ அண்ட் ஐ வாண்ட் ட்டூ மேர்ரி யூ” என்று அவன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு அவள் பேச வாயெடுக்க அவளது பதிலை கூட கேட்காமல்
“ஐ க்நோ உனக்கு இது டிஸிஷன் எடுக்க கஷ்டம்னு பட் யோசிச்சு ஓகேனா கால் மீ அட் எனிடைம் ஐ வில் பீ தேர் ஃபார் யூ ஆல்வேய்ஸ் கீப் இன் டச் பேபி” என்று அவனே பேசிவிட்டு அவளை பேசவே விடாமல் அவனே பேசிவிட்டு
“ஐ ஹாவ் ட்டூ கோ. ஐ வில் கம் அண்ட் ஃபினிஷ் ஆல் ஃபாராமாலிட்டீஸ் ஆஃப்டர் ஓகே. பாய் ஹனி டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்” என்று குழந்தையிடம் சொல்லிவிட்டு ஸ்டைலாக தன் கூலிங் கிளாஸை அணிந்தவன் வைப்ரேட் ஆன தன் மொபைலை எடுத்து
“எஸ் சார் தட் சைல்ட் ஈஸ் ஆல்ரைட் ஜஸ்ட் நவ் ஐ செக்ட் வித் டாக்டர்ஸ் அண்ட் ஐ ஆல்சோ டாக்ட்டு ட்டூ ஹர்.
ஆல்ரெடி வீ ஆர் அரெஸ்டட் தோஸ் கேங்க் அண்ட் ஸ்டார்டட் ட்டூ ட்ரேஸ் தேர் லிங்க்ஸ் ஆல்சோ” என்றபடி ஆங்கிலத்திலேயே கம்பீரமாய் பதிலலித்து நடந்தான் அவன் தான் அவளது நாயகனும் நமது நாயகனுமான ஆட்ரியன் கிம்(டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஃபெடரல் கிரிமினல் போலீஸ்-சைபர் க்ரைம் டிவிஷன். பெர்ன் ஹெச் க்யூ(detective inspector federal criminal police-cyber crime division. Bern HQ)
(Adrian kim)
சாதாரணமாக காதலை சொல்லிவிட்டு எதுவும் நடக்காதது போல பேசிவிட்டு அவன் சென்றுவிட்டான் ஆச்சர்யமாய் நின்றிருந்த யாழினிக்கு தான் என்ன நடந்தது என்ற மனநிலை.
அவளையே பார்த்தபடி இருந்த அவளது அண்ணன் மகன் ஜோ “தா” என்று அவள் கன்னத்தில் ஒரு அடி கொடுக்க தன் சுயம் வந்தவள் அவனுக்கு உணவை ஊட்டியபடி யோசிக்கலானாள்.
அவளது அருகில் வந்த அவளது அண்ணன்
“அவர் செஞ்சது அவர் வேலையா இருந்தாலும் அவரோட கேரக்டர் அந்த வேலையிலேயே தெரிஞ்சுடுச்சு அவரோட ப்ரபோஸல கொஞ்சம் கன்சிடர் பண்ணுடா.
எனக்கும் உனக்கு ஒரு நல்லவர் துணையா கிடைச்ச நிம்மதி இருக்கும்.
நான் மட்டும் குடும்பமா இருக்கேன் உன்னை தனியா பார்க்க ஒரு மாதிரி இருக்குடா. உன் லைஃப்தான் நீதான் முடிவு எடுக்கனும்” என்றுவிட்டு அவளது தலையில் ஆதூரமாய் தடவி விட்டுஅவரது மகளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான் அவளது சகோதரன் யோகேஷ்.
இவர்களுக்குள் பழக்கமானது எப்போது? எப்படி?
அதை பார்ப்போம் கதையின் துவக்கத்திலிருந்து.
டிசம்பர் 14-2024:
சரியாக ஒரு வருடத்திற்கு முன் இரவு பனிரெண்டு மணி.
பெங்களூர்.
Nehru institute வளாகத்தில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் வரிசையில் இருக்கும் கோர்ட்டர்ஸ்ஸில் ஈ பிளாக்கில் இருந்த அவளது வீட்டின் உள்ளே அவள் நுழையவும்
கூடவே யாரோ வந்தது போல் உணர்ந்தாள் யாழினி.
சட்டென அவள் திரும்பி பார்க்க காற்று மட்டுமே.
ஏதோவென விட்டவள் கதவை தாழிட்டு உள்ளே சென்று குளியல் முடித்து விட்டு வந்து சமையல் அறையில் நுழைந்தவளின் கண்ணில் அந்த காரமான இன்ஸ்டன்ட் கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் தான் கண்ணுக்கு பட்டது.
“ஆந்திராகாரன்கூட இவ்ளோ காரம் சாப்பிட மாட்டான் இந்த கொரியன்காரனுங்க எப்படித்தான் சாப்பிடுறானுங்களோ? ட்ரை பண்ணி பாருனு இந்த கூட வேலை செய்யுற கொரியன் குரங்க நம்பி இதை வாங்கிட்டேன்.
இன்னைக்கு பொழுது இவனோட தான் நமக்குனு எழுதி வெச்சுட்டான் போல ம்ம்ம் வேற வழி இந்நேரம்லாம் ஆர்டர் போட்டு அது வர்றதுக்குள்ள நாளைக்கு பொழுது வந்துடும் எனக்கு வேற எக்கசக்க வேலை இருக்கு சீக்கிரமே போகணும்” என்று அவளுக்கு அவளே புலம்பியபடி வெந்நீரை சுடவைத்தவள் அதில் அந்த நூடுல்ஸை சேர்த்து மசாலாவை கொஞ்சமே சேர்த்து கலந்து கூடவே கொஞ்சம் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டவள் அதில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
கூடவே யாரோ இருப்பது போல உணர்வு வந்தாலும் எதையும் யோசிக்காமல் உண்டவளுக்கு உறக்கம் கண்ணை கவ்வ அதையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு அங்கேயே அமர்ந்தபடி உறங்கிபோனாள் யாழினி.
யாழினி(இந்திய பெண் வளர்ந்துவரும் மருத்துவ சயின்டிஸ்ட் தாய் தந்தை நான்கு வருடங்களுக்கு முன் இறந்து போக தந்தையாய் இருந்த அண்ணனும் அப்போது சுவிஸ் சிட்டிசன் ஆகி இருந்ததால் தனியாகவே இருந்து வந்த இருபத்தி ஒன்பது வயது பெண் மருத்துவ சயின்டிஸ்ட்)
கூடுவிட்டு கூடுபாயும் பழைய மன்னர்கால கதையை கேட்டவள் இப்போது ஏன் அதுபோல நடக்கவில்லை என எண்ணியதன் விளைவு அவளை soul-detachment பற்றி படிக்கத்தூண்டியது.
அதை படித்தாளே தவிர எதையும் ஆராயவில்லை ஏனெனில் அது உலகமெங்கும் தடை செய்யப்பட்ட ஆராய்ச்சி அதனால் அதை பற்றி தெரிந்து மட்டும் வைத்துக்கொண்டால் போதும் என தெரிந்து கொண்டாள்.
இப்போதைய ஏ ஐ அஸிஸ்டெண்ட் உதவியுடன் அதை செயல்படுத்த முடியும் என அவளது சீனியர் சொன்னது நினைவில் வந்து போனது.
ஆனால் உண்ட மயக்கம் வர உடனே எல்லாம் மறந்து உறங்கி போனாள் யாழினி.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு மங்கலாக சில நிகழ்வு வரத்துவங்கியது.
ஆறு மாதத்திற்கு முன் அவள் அண்ணனிடம் பேசியது
நினைவாய் வந்து போனது.
“ஹலோ… ஹான் சொல்லுடா அண்ணா இன்னைக்குத்தான் எனக்கு ஃபோன் பண்ண தோணுச்சா உனக்கு? ஒரு மாசம் ஆகுதுடா நீ ஃபோன் பண்ணி எப்படி இருக்கா என் வாயாடி? கூடவே என் சமத்து மருமகன் என்ன பன்றார்?” என்று எதிர்முனையில் இருப்பவனை பேசவே விடாமல் அவளே பேசினாள்.
மறுமுனையில் ஆழ்ந்த நிசப்தம்.
ஜாலியாக பேசுவதை விட்டு
“அண்ணா அண்ணா என்ன ஆச்சு? ஏதாவது பேசுடா?” என்று அவள் லேசாக பதட்டம் ஆக மறுமுனையில் இருந்த அவன் சகோதரன் யோகேஷ்
“யாழ் ஹ..ஹனி…. ஹனிஷா” என்று அவன் பேசத்தடுமாற
“ஹனி ஹனிஷாக்கு என்ன ஆச்சுடா?” என்று அவள் சத்தமாய் கேட்க அழுகையோடே
“ப்ரண்ட்ஸ் கூட ஃபாரஸ்ட் ஏரியாக்கு டூர் போன குழந்தையை காணோம்.
ப்ரண்ட்ஸ் எவ்ளோ சொல்லியும் கேட்காம டீப் ஃபாரஸ்ட் ஏரியாக்குள்ள போய் இருக்கா அவளை காணவே இல்ல…
உடனே ஹெல்ப்லைன்க்கும் எங்களுக்கும் தகவல் சொன்னாங்க ஃபாரஸ்ட் ஆபீசர்ஸ் தேடியும் அவ கிடைக்கலை ஒரு இடத்துல அவளோட கால்ல போட்டு போன ஷூ ஃபுல்லா இ..இரத்தமோட கிடைச்சுது கூடவே நாலைந்து ஓநாயோட கால்தடமும் கிடைச்சு இருக்கு.
நம்ம ஹ..ஹனி ஹனிஷாவை ஓநாய்ங்க துரத்தி கடிச்சு கொன்னு இருக்கும்னு சொல்றாங்கடா.
கா..காலையில ட்ரோன் வெச்சு தேடினதுல ஒரு இடத்துல கூட்டமா ஓநாய்ங்க இருந்தது வாயெல்லாம் இரத்தமோட நம்ம ஹனி…. ஹனி நம்மளவிட்டு போய்ட்டாடா…குழந்தையோட பாடி கூட கிடைக்கலைடா யாழ்” என்று அவன் அழுதபடியே கூற
அப்படியே அதிர்ந்து மொபைலை கீழே போட்டாள் யாழ் என்னும் யாழினி.
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 1 Online
- 329 Members
