நின் பார்வை தவமல்லவா!-10 (முடிவுற்றது)
அத்தியாயம்-10
செழியன் டாக்டர் உடையை எடுத்துக்கொண்டு புறப்படவும், கண்ணில் அவனது அலங்கார தோரணையை நிரப்பி வழியனுப்பி வைத்தார் சுகந்தி.
வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றான். தாங்கள் விரும்பியது போலவே நல்ல மருத்துவனாக வந்துவிட்டான். ஆனால் அவன் பார்வையில் தரம் தாழ்ந்தது சுகந்தி மட்டுமே.
சுகந்தி மனமெங்கும் வர்ஷினியே ஆட்சிப்புரிந்தாள். அவளை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும். நேரில் ஒருமுறை ஒரேமுறை மன்னிப்பு கேட்டு விட்டால் கூட சுகந்தி மனம் நிம்மதியடையும்.
வர்ஷினியை காணும் வாய்ப்பு அமையுமா? என்று காத்திருந்தார்.
செழியன் டூயூட்டிக்கு வந்து கிடைத்த தனிமையில், "வர்ஷூ" என்று மட்டும் அனுப்ப, "ஹாய்... சொல்லுங்க டாக்டர்" என்று அனுப்பியிருந்தாள்.
செழியனுக்கு வந்தது கோபம். ஆனாலும் அதை வெளிப்படையாக காட்ட முடியுமா?
"டாக்டர் மேடம் சென்னை ரீச் ஆகிட்டிங்களா?" என்று அவனுமே 'டாக்டர்' என்று அழுத்தி கேட்கும் விதமாக பதிலுக்கு அனுப்பினான்.
"ஏன் கிண்டல் பண்ணறிங்க. அடுத்த நாளே ரீச் ஆகிட்டேன். உங்களிடம் சொல்ல ஆசைப்பட்டேன். பட்... தேவையில்லாம நான் மெஸேஜ் செய்து உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமேனு தவிர்த்தேன்" என்று அனுப்பினாள்.
அதை செழியன் பார்த்துவிட்டு பதில் அனுப்பவில்லை.
'தொந்தரவு' என்றதும் மீண்டும் சினம் துளிர்த்தது. உண்மையில் அவள் நினைப்பை அவனிடம் கிளறிவிட கூடாது என்று வர்ஷினி தவிர்த்தாள். அதை அவனிடம் உரைத்திட முடியுமா?
'என்ன பதிலே வரலை?' என்று அடிக்கடி தொலைப்பேசியை கவனித்து ஏமாந்தாள்.
காலையில் அனுப்பியதற்கு மதியம் வரை அவனிடமிருந்து எதிர்ப்போ கண்டிப்போ எதுவுமின்றி வாடினாள்.
ஏதாவது சொல்வானென்று வஞ்சி மனம் தவித்தது. மாலை டூயூட்டி முடிந்து வெளிவர, எதிரே டீக்கடையில், காரில் சாய்ந்து டீ குடித்திருந்தான்.
தனக்காக தன்னை தேடி வந்துவிட்டானா, என்று ஆர்வமாய் வர, "ஹலோ டாக்டர் மேடம்." என்று தான் வரவேற்றான்.
"இங்க வருவதா சொல்லவேயில்லை." என்று கூறி செழியனையே பார்த்தாள்.
நாகர்கோவிலில் பார்த்தை விட பளிச்சென்ற புன்னகையில் கவர்ந்தான்.
"உங்களிடம் ஏன் சொல்லணும். இங்க என் கிளாஸ்மேட் ஒருத்தனை பார்க்க வந்தேன்" என்று பொய் உரைத்தான்.
'ஓ என்னை பார்க்க வரலையா' என்று வர்ஷினி துவண்டு பிறகு இல்லை இவர் என்னை தான் பார்க்க வந்திருப்பார்' என்று புரிந்துக்கொண்டாள்.
"பிரெண்டை பார்த்தாச்சா" என்றதும், "யா... பார்த்து பேசிட்டேன்." என்று கூறியவன் ''உட்காரு.. நான் டிராப் பண்ணறேன்" என்று காரை சுட்டிக்காட்டினான்.
மறுக்காமல் வர்ஷினி காரில் ஏறினாள்.
அவனாகவே 'அன்னைக்கு ஹோட்டல்ல இருந்தப்ப அப்பா கால் பண்ணினார். அப்பாவிடம் பேசாம தவிர்க்க மாட்டேன். அப்பா போன்ல அம்மாவுக்கு உடம்பு முடியலை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கேன். நீ சென்னை போயிட்டியானு கேட்டார். இல்லைன்னு சொல்லவும் என்னை அம்மாவை பார்க்க கூப்பிட்டார். முதல்ல மனசு போகக்கூடாது பேசக்கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சது. ஆனா நீ சொன்னியே... ஒருத்தர் இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுன்னு. அந்த பர்டிகுலர் காரணத்தால் போனேன்." என்று சற்று நிறுத்தினான்.
"தப்பில்லை." என்று கூறினாள் வர்ஷினி.
"ம்ம்ம் அங்க போனா எலும்பும் தோலுமா இருந்தாங்க. உடம்புல ரத்தமே இல்லை. வெளிறி போய் ஒல்லியா, அது அவங்களே கிடையாது என்ற ரீதியில் இருந்தாங்க. பார்க்கவே கஷ்டமா இருந்தது.
இதுல ஹாஸ்பிடல் அப்சர்வேஷன்ல நாலு நாள் இருக்க சொன்னதும், அப்பா என் கூட இருய்யானு கெஞ்ச, நானும் இருந்தேன். உனக்கு ஒரு மெஸேஜ் கூட அனுப்பலை. அவங்களோட இருக்கறப்ப அனுப்ப மனசு வரலை." என்றான்.
"இட்ஸ் ஓகே.. புரியுது." என்றாள்.
இங்க வந்ததும் அதுவும் ஹாஸ்பிடல் வந்ததும் தான் உனக்கு மெஸேஜ் பண்ணினேன்." என்றவன் மெதுவாக கார் டிராபிக்கில் நின்றதும் "அம்மா அப்பா கூட வந்திருக்காங்க." என்றான்.
வர்ஷினி லேசான அதிர்ச்சியோடு சமாளித்தாள்.
மீண்டும் தன்னோடு பேசுவது அவர்களுக்கு தெரிந்தால் பகரச்சனை கிளம்பும் என்று அவளுகாகு தெளிவானது.
வர்ஷினி எதுவும் பேசாதது செழியன் அவன் பாட்டிற்கு காரை இயக்கினான்.
"என் வீட்டுக்கு வலது பக்கம் போகணும்" என்று கூறினாள்.
செழியனோ "நான் உன்னோட பேசணும்" என்று தெரிவித்தான்.
ஆக இன்று செழியன் ஏதோ காரணத்தோடு தன்னை காண வந்தது தாமதமாக உரைத்தது.
அவனாக பேசட்டும் என்று காத்திருந்தாள். ஆனால் செழியன் எதுவும் பேசாமல் அவனது வீட்டுக்கு அழைத்து சென்றான்.
"செழியன் உங்க வீட்டுக்கா. நோ வே.. நான் எங்க வீட்டுக்கு போகணும்." என்று பயந்தாள். சுகந்தியின் விஸ்வரூபத்தை தான் கல்யாண மண்டபத்தில் கண்டது இன்னமும் கண் முன் தாண்டவமாடியது.
''உள்ளவா" என்று அழைத்தான் செழியன்.
கையை பிசைந்து அரை மனதாய் அவனுடன் வந்தாள்.
ஹாலில் தான் கிருபானந்தன் அமர்ந்திருந்தார்.
"வாப்பா.. வாம்மா.. உன்னை அழைச்சிட்டு வருவதா சொல்லவேயில்லை" என்று அவசரமாய் அவள் அமர இருக்கையை முன் நகர்த்தினார்.
வர்ஷினிக்கு தர்மசங்கடமாய் இருந்தது. மாமா என்று உறவு முறை சொல்லி அழைப்பதா? இல்லை அங்கிள் என்று பட்டணத்தில் கூப்பிடுவது போல கூப்பிடுவதா? சார் எதை கூறி அழைப்பது.
சுகந்தியோ "யாருங்க பையன் வந்துட்டானா?'' என்று குரல் கொடுத்தார். ஆவலாக ஹாலுக்கு நடந்தும் வந்தார்.
"உட்காரு வர்ஷு" என்று செழியன் கூற, சுகந்தி குரலில் பயந்தாள், அடுத்து சுகந்தியை கண்டு ஆடிப்போனாள்.
அந்தளவு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தேய்ந்து இருந்தார்.
வர்ஷினியை கண்டதும் "அம்மாடி... வந்துட்டியா? என்னை மன்னிச்சிடு" என்று தான் முதலில் உதிர்த்தார்.
வர்ஷினி செழியனை காண, "சில விஷயம் மனதை செல்லா அரிக்கும் வர்ஷு. அந்த நேரம் ஆளே மாறிடுவாங்க. அன்னைக்கு இவங்க செய்த தப்புக்கு நீ என்னிடம் மன்னித்ததா பேசின. பட் அவங்க நேர்ல மன்னிப்பு கேட்டா தான் சரியா வரும்.
தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிப்பது நியாயம். அதோட தப்பு செய்தவங்க சம்பந்தப்பட்டவங்களிடம் மன்னிப்பு கேட்கறதும் என்னை பொறுத்தவரை நியாயம் தான். சாரி... உன்னிடம் அனுமதி கூட கேட்காம இங்க கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா எனக்கு வேற வழி தெரியலை" என்றான்.
காலில் விழ வந்த சுகந்தியை பிடித்து நிறுத்தி உட்கார வைத்த வர்ஷினியோ, "ஏன் இப்படி... அய்யோ என்னை கூனிகுறுக வைக்காதிங்க" என்றாள்.
கண்ணீர் தாரை தாரையாக நடந்தவையை எல்லாம் அசைப்போட வைத்தது.
"உங்க மேல தப்பில்லைம்மா.. அப்பா நிறைய தடவை சொன்னார். படிப்பு பத்தி தெரிய வந்ததும், மாப்பிள்ளை பேசியதை கேட்டு அமைதியா விட்டுடேன். என்னயிருந்தாலும் பெத்தவங்க பக்கம் நின்று யோசித்து அவங்களிடமும் சொல்லியிருக்கணும்னு அடிக்கடி சொல்வார்." என்று தந்தை தன்னிடம் முன்பு பேசியதை தெரிவித்தாள்.
"நல்ல மனுஷன்மா அவரு. அவங்களை எல்லாம் நிற்க வச்சி அவமானப்படுத்தி, உங்க அம்மா இறப்புக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன் தாயி. என்னை மன்னிச்சிடு." என்று சுகந்தி மீண்டும் அழுதார்.
"இல்லை... அம்மாவுக்கு முன்னவே நூரையீரல்ல சுவாசப்பிரச்சனை இருந்திருக்கு. எங்களுக்கு தெரியப்படுத்தாம விட்டிருக்காங்க. சொல்லப்போனா அவங்களுக்கு அதோட சீரியஸ்னஸ் தெரியலை.
அன்னைக்கு நடந்த கலவரத்தில் அது தீவிரமா ஆகியிருக்கு. சுவாசிக்க கஷ்டப்பட்டு இறந்துட்டாங்க. உங்களால இல்லை. நீங்க மனசு உடைந்து போகாதிங்க" என்று தேற்ற முயன்றாள்.
"அந்த கலவரத்தை ஏற்படுத்தியது நான் தானே. நான் தானே." என்று ஒப்பாரி வைக்க, "அச்சோ.. முதல்ல இப்படி பிஹேவ் பண்ணாதிங்க. பயமா இருக்கு. என்னால ஏதாவது நடந்தா... என்னால தாங்க முடியாது. இவர் முகத்துல எப்படி முழிப்பேன். உங்களுக்கு வேற இப்ப தான் உடம்புக்கு முடியலைன்னு அவர் சொன்னார். நிதானமா பேசுங்க." என்று மார்பில் அடித்து அழுத சுகந்தியை சாந்தப்படுத்த முயன்றாள் வர்ஷினி.
செழியன் இருவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்த்தான். அம்மா மனதில் உள்ள பாரம் களையட்டும்.
முக்கியமாக வர்ஷினி மனதை திறப்பாளா என்று ஆவலாக நின்றான். கிருபானந்தன் தண்ணீரை கொண்டு வந்து மனைவியிடமும், வர்ஷினிக்கும் கொடுத்தார்.
இருவருமே வாங்கி பருகி சமநிலை அடைய நேரம் எடுத்தனர்.
சுகந்தி அவசரவசரமாய் நீரை பருகி, செழியனின் அறைக்கு வர்ஷினியை அழைத்து சென்றார்.
அங்கே ரிசப்ஷனில் செழியன் வர்ஷினி எடுத்த புகைப்படம் அவனது பெட்ரூமில் மாட்டப்பட்டிருந்தது.
"பாரும்மா... நீயே பாரு.. அவன் உன்னையே நினைச்சிட்டு காலம் முழுக்க வாழறான். என் பையனுக்கு வாழ்க்கை கொடு தாயி. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ பொண்ணுங்க போட்டோவை , டாக்டர் பிள்ளையா காட்டிட்டேன். எனக்கு ம் வர்ஷினிக்கும் கல்யாணமாகிடுச்சுனு போட்டோ கூட பார்க்காம தவிர்த்துட்டான்.
பத்து வருஷம்... நான் தண்டனை அனுபவிப்பது சரி. எந்த தப்பும் செய்யாம நீயும் என் மகனும் ஏன்மா தண்டனை அனுபவிக்கணும்?
எல்லாரையும் போல கல்யாணம் செய்து குடும்பமா வாழ்ந்திருந்தா என் பையனுக்கு ஒரு குழந்தையாவது பிறந்திருக்கும். இப்படி இரண்டு பேரோட வாழ்வையும் அழிச்ச பாவிம்மா நான்" என்று கூற, வர்ஷினி கண்களில் தாரை தாரையாக கண்ணீர் மடை திறந்தது போல வெளிவந்தது.
ரிசப்ஷனில் எடுத்த புகைப்படத்தை வைத்து, இன்னமும் நான் எங்கே இருக்கின்றேன், எப்படி இருக்கின்றேன் என்று கூட தெரியாமல் என் நினைவோடு வாழ்கின்றாரா! என்று ஸ்தம்பித்து பார்த்தாள்.
செழியனும் கண் கலங்க கண்ணீரை அடக்க, கிருபானந்தனோ இனி மகனும் அந்த பொண்ணும் பேசி முடிவெடுக்கட்டும் என்று சுகந்தியின் கைப்பிடித்து, "நீ வா. அவங்க பேசட்டும்" என்று அழைத்து சென்றார். கதவையும் சாற்றி தனிமை தந்தார்.
சுகந்தியும் கிருபானந்தனும் செழியனின் வாழ்வு இனிமேல் மலர்ந்திடும் என்று அகமகிழ்ந்தனர்.
வர்ஷினி வாய் விட்டு கதறி போட்டோவை கையில் வைத்து அழுது அப்படியே சுவரோடு சரிந்து அமர்ந்தாள்.
அவளது அழுகை செழியனுக்குள் வலியை கொடுக்க, அவனுமே அவளது அருகே அமர்ந்து, "ஏய்.. வர்ஷு.. வர்ஷு.." என்று தாடை பிடிக்க, அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்ப ஆரம்பித்தாள்.
செழியனோ அவளை அணைத்துக்கொண்டு, அவனுமே கண்ணீரை சுரக்கவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிதானப்படுத்தி கண்ணீரை துடைத்து, "வர்ஷு... நீயும் தானே என்னையே நினைச்சிட்டு வாழற. நாம பிரியலைம்மா. நினைவால் வாழ்ந்துட்டு தான் இருக்கேன்." என்று கூற, "அன்னைக்கு அம்மா இறந்த அன்னைக்கு நீங்க வந்திங்க. அம்மா இறந்த துக்கத்தில் அந்த நேரம் கோபத்தில் என் முகத்தில முழிக்காத போடானு சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. என்னை போல தான் நீங்களும் காதல் வலியோட வாழ்விங்கன்னு புரியாம போயிடுச்சு" என்று அழுகையோடு பேசினாள்.
"புரியுதும்மா... நான் பொறுமையா வந்து பேச நினைச்சப்ப மாமா வீடு வாசல் நிலம் வித்துட்டதாக பக்கத்துல சொன்னாங்க. உன்னை அதுக்கு பிறகு சந்திக்கற வாய்ப்பு அமையலை." என்றான்.
"எனக்கும் அப்ப இருந்த கோபத்துல உங்களை தேட தோணலை. அப்பா இறந்தப்பின்ன, உங்களை தேட முயன்றேன். நீங்க வேற இடத்துல வேலைக்கு மாற்றல் ஆனதால சட்டுனு கண்டுபிடிக்க முடியலை." என்றாள்.
"இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே.." என்று அணைத்து பிறை நெற்றியில் முத்தமிட்டான்.
"கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்.
வர்ஷினியோ "உங்கம்மா" என்று சொல்ல தயங்க, "அவங்க தான் என்னோட உன்னை தனியா விட்டுட்டு அப்பாவோட வெளியே போயிருக்காங்க. அவங்களுக்கு இந்த மருமக பையனை ஏத்துக்கிட்டா போதும்னு தவம் இருக்காங்க.. உன் விருப்பத்தை சொல்லு.." என அவளது வாய்மொழி சம்மதம் வேண்டி தவம் கிடந்தான்.
வர்ஷினி மட்டும் என்ன அவனது *நின் பார்வை தவமல்லவா!* என்று செழியனின் மனையாளாக தவமிருக்கின்றாள்.
விழியில் உறுதியாக அவன் கரம் பற்றும் நாளுக்கு காத்திருப்பதாக தெரிவிக்க இருவரும் மனம் ஒன்றிய காதலர்களாக ரிசப்ஷனில் எடுத்த புகைப்படத்தை தடவி சுவரில் மாட்டி விட்டு அணைத்துக் கொண்டனர்.
இருவரின் தவ வாழ்வு இனி முடிவுப்பெற்று, திருமண வாழ்வு மலரும்.
-சுபம்.
பிரவீணா தங்கராஜ்.
Kindly Register & Login to Read
And Share ur Comments Thank U
உண்மையிலேயே, ரெண்டு பேருமே தவம் தான் பண்ணிட்டிருந்திருக்காங்க.
😊😊😊
CRVS (or) CRVS 2797
நின் பார்வை தவமல்லவா ..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயங்கள் - 1 to 10)
நாயகன் செழியன் டாக்டர், அதனால பெத்தவங்க டாக்டர் பெண்ணையே மணமுடிக்க நினைக்கிறான்ங்க. பட்..
நாயகி வர்ஷினி, நாயகியோட போட்டோ மாறி இன்னொரு ஜாதகத்தோட இணைஞ்சதால ஹீரோவும் குழம்பிப் போய் போட்டோவில இருக்கிற பெண்ணையே பொண்ணு பார்க்க வந்து அவளோடவே கல்யாண தேதியும் குறிச்சிடறாங்க. ஹீரோவும் ஹீரோயினும் செல்போன்லயே காதலை வளை்த்துக்கிட்டதோட, கனவுலகத்துல வேற டூயட் பாடிட்டு இருந்திருக்காங்க. பெண்ணோட அப்பா பத்திரிக்கை அடிக்கும் போது தான் உண்மையே தெரிய வரது. அது என்னென்ன செழியனுக்கு பார்த்தது டாக்டர் பொண்ணு, அவ பேரும் வர்ஷினி தான். பட்.. செழியன் கையில கிடைச்ச போட்டோவில இருந்த பொண்ணு பி.பார்ம். சொந்தமா மெடிக்கல் ஷாப் நடத்துறாள்.
அதுவும் அந்த டாக்டர் பொண்ணு ஹாஸ்பிட்டல் பக்கத்துலயே நம்ம ஹீரோயின் மெடிக்கல் ஷாப் வைச்சிருக்காள். உண்மை தெரிஞ்சப் பிறகு ஹீரோவுக்கு குழப்பமில்லை, அவன் ரொம்பத் தெளிவா இருக்கிறான். ஏன்னா, அவன் தான் அந்த மெடிக்கல் அழகியை நேசிக்க ஆரம்பிச்சிட்டானே. பட்..
இது கல்யாணத்தன்னைக்கு தெரிய வந்த, ஏகப்பட்ட பிரச்சினைகளாகி, கல்யாணம் நின்னு, நாயகியோட அம்மா இறந்து, நாயகி என் மூஞ்சிலயே முழிக்காதன்னு சொல்லப்போய், நாயகன் வருத்தத்தோட அவளோட வார்த்தையை காப்பாத்த பத்து வருசமா ஊரு பக்கமே தலையை காட்டாமல் சென்னைப் பக்கம் போயிடறாரு.
நாயகனும் நாயகியும் பத்து வருசத்துக்கப்புறம் திரும்பவும் சந்திக்கும் போது, இப்ப நிசமாவே நம்ம நாயகி டாக்டர் தான்.
பட்.. ரெண்டு பேருக்குள்ளேயும்
நிறைய கேள்விகள், குழப்பங்கள், தயக்கங்கள்ன்னு எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு வெளியே வரதோட, மீண்டும் அவர்கள் விதி இணைச்சு வைக்குறது தான் கதை.
இதுல பாவம் நாயகனும், நாயகனோட குடும்பமும் ஒரு விதத்துல பாதிக்கப் படுறாங்கன்னா, நாயகியும், நாயகியோட குடும்பமும் இன்னொரு விதத்துல பாதிக்கப் படறாங்க. நாயகன், நாயகி ரெண்டு பேருமே பாவம் தான். ரெண்டு பேரையும் சேர்த்து இப்படி விதி பாடாய் படுத்திருக்க வேணாம். இதுக்கு அப்பவே சேர்த்து வைச்சிருக்கலாம்.
ம்.. என்ன பண்றது சில பேருக்கு வாழ்க்கை இப்படித்தான் அமையணும்ன்னு எழுதி வைச்சிருக்கோ என்னவோ..? அதுவும் பத்து வருச தவம்.
அதனால் தான், "நின் பார்வை தவமல்லவா" ன்னு வித்தியாசமான டைட்டிலையும் கொடுத்து அசைச்சிருக்காங்க நம்ம ரைட்டர் ஜீ.
கதையில ஹீரோ ஒரு டயலாக் சொல்லுவான், நெத்தியடி பஞ்ச்.
'தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிப்பது நியாயம், அதோடு தப்பு செய்தவங்க சம்பந்தப்பட்டவங்களிடம் மன்னிப்பு கேட்கறதும் நியாயம்'
இந்த வரிகளிலேயே செய்த தப்புக்கான தண்டனையையும் பரிகாரத்தையும் சேர்த்தே தெரியப்படுத்தி இருப்பாங்க ரைட்டர். அழகான எழுத்து நடை.
அதே நேரத்துல மனசையும் தொட்டுடுச்சு .
உண்மையில் இதுவொரு ஃபீலிங் குட் ஸ்டோரி தான்.
'கண்ணுமணியே பிரவீணா ஜீ கலக்கிப்பூட்டிங்க..
வழக்கம் போல நல்ல கதையை குடுத்து அசத்திப்பூட்டிங்க..
இன்னும் எழுதுங்க...
நிறைய எழுதுங்க...
மேலும் வளருங்க....
எங்களையும் சந்தோஷப்படுத்தி
நீங்களும் சந்தோஷமா இருங்க'
வாழ்த்துக்கள் பிரவீணா சிஸ்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Paiyan doctor nu doctor ponnu pakka nenachathu thappu illa aana partha ponnu ipadi doctor illa ma aagi athu la prachanai vandhu kalyanam ninnu again pathu varusham.kazhichi pakkum.pothu andha ponnu nijamavae doctor ah iruku aana enna avangalukula innum kadhal irundhum avangaloda thayakam atha solla vida thaduthu ippo andha thayakam poi avanga thava vazhkai mana vazhkai la mudiya poguthu super o super .
-
நின் பார்வை தவமல்லவா!-9
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-8
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-7
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-6
3 weeks ago
-
நின் பார்வை தவமல்லவா!-5
3 weeks ago
- 25 Forums
- 215 Topics
- 754 Posts
- 1 Online
- 329 Members
