Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -9

2 Posts
2 Users
1 Reactions
21 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#141]

உதயம் - 💏 9 💏

 

பண்டிதரின் வரவுக்காக எல்லோரும் காத்திருந்தனர். மதுரையின் புகழ்மிக்க பண்டிதர். சாமியின் தரிசனம் கிடைத்து விடும். ஆனால் பண்டிதரின் தரிசனத்திற்காக காத்து இருக்க வேண்டும்.

 

எங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பண்டிதர் அனுமதி இருக்கும். ஜாதகத்தின் மீதும் பண்டிதர் மீதும் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.

 

எனக்கு நம்பிக்கை இல்லாத போதும் இன்று அவருடைய வருகைக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.

 

அவருடைய வருகை என் வாழ்க்கையை மாற்றி விடப் போகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் எப்படிப்பட்ட மாற்றம் வர போகிறது என்பதற் காக காத்துக் கொண்டிருந்தேன்.

 

நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் அவர் வந்தார். சரியான உயரம். சரியான எடை. நீண்ட காலமாக பொத்திப்பாதுகாத்த தாடி. கூர்மையான பார்வை. வளைவான மூக்கு. இறுகிய தாடைகளுக்கு நடுவே உதடுகள் இருக்கிறதா என்ற சந்தேகம். கழுத்திலும் கையிலும் ருத்ராட்ச மாலை.

 

பண்டிதரை பார்த்ததும் அப்பா அம்மா பாட்டி எல்லோரும் அவரது ஆசியை பெற்றனர். நானும் பெற்றுக் கொண்டேன்.

 

அப்பா என்னுடைய ஜாதகத்தையும் ஆதித்யாவின் ஜாதகத்தையும் பண்டிதரிடம் கொடுத்தார்.

 

என்னை ஒரு நீண்ட பார்வை பார்த்துவிட்டு ஜாதகத்தை ஆராய்ந்தார்.

 

நாங்கள் எல்லோரும் அங்கு இருப்பதை அவர் உணராமல் அவர்கள் தேடுதலைத் தொடர்ந்தார். எல்லோர் கண்களிலும் பயம். பதட்டம்.

 

நாங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவோ வருத்தப்படுவதற்காகவோ எந்த ஒரு முக பாவனையும் பண்டிதர் காட்டவில்லை.

 

அதுவே மேலும் பட படப்பை கூட்டியது. அவரது வார்த்தைகளில் என்னுடைய எதிர்காலம் அடங்கியுள்ளதை அவர் உணர்ந்தாரா என்பது எனக்கு தெரியவில்லை.

 

எல்லோருடைய உதடுகளும் கடவுளின் பெயரை உச்சரித்தன. எல்லோருடைய மனதிலும் இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் எனக்கு இந்த திருமணம் நின்று விட ஆசையாக இருந்தது. நேரம் ஆக ஆக இதயத் துடிப்பு அதிகமாகி கொண்டே இருந்தது.

 

எங்களுடைய மனப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பண்டிதர் ஜாதகங்களை மூடினார்.

 

எங்கள் அனைவரின் முகத்தையும் பார்த்தார். பின்னர் அவர் பெருமூச்சு விட்டுவிட்டு பேச தயாராக எல்லோரும்  காதுகளை கூர்மையாக்கி அதை கேட்க தயாராகினர்.

 

"தியா, ஏம்மா நிக்கிற. இங்க வந்து உட்காருமா." பண்டிதர் கூறிய பின்பு தான் நான் நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். பண்டிதரின் எதிரே அமர்ந்து கொண்டேன். அவர் அவருடைய பார்வையை மீண்டும் எல்லோரிடத்திலும் செலுத்தினார்.

 

"பொதுவா ஒரு கல்யாணம்னா மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் 6 பொருத்தம் சரி இருந்தால்கூட போதும். ஆனால்..."

 

பண்டிதரின் நீண்ட நேர அமைதி எல்லோரிடத்திலும் பாதிப்பை உண்டாக்கியது.

 

"ஆதித்யாக்கும் தியாக்கும்...." மீண்டும் இடைவெளி.

 

இவர் வேண்டும் என்று நம்முடைய இதயத்துடிப்பை அதிகமாக்குகிறாறோ என்ற எண்ணம் என்னை சூழ்ந்து கொள்ள அவர் மீண்டும் தொடங்கினார்.

 

"தியாவுக்கும் ஆதித்யா வுக்கும் அவங்க ரெண்டு பேருக்கும் 10 பொருத்தமும் அமோகமா பொருந்தி இருக்கு. இதுவரைக்கும் இப்படி ஒரு பொருத்தமுள்ள ஜாதகத்தை நான் பார்த்ததில்லை."

 

எல்லோருடைய உதடுகளும் மலர என்னுடைய இதயம் அழுதது. என்னுடைய இதயத்துடிப்பு நின்று விட்டதை போன்ற ஒரு உணர்வு. ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

 

அப்பா வானத்தில் பறக்க ஆரம்பித்து விட்டார் என்பதை அறிந்து இனி என்ன காரணம் சொன்னாலும் எடுபடாது என்பதை புரிந்து கொண்டேன்.

 

இருந்தாலும் இந்த திருமணத்தை  நிறுத்தியே தீர்வேன்.

 

"உண்மையாவா பண்டிதரே, என்னால் நம்பவே முடியல." அப்பா ஆனந்தத்தில் அலைமோதினார்.

 

"ஆமா விஸ்வநாதன் சில விஷயங்களை நம்மால் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை. அவங்க ரெண்டு பேரோட திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. யாராலும் தடுக்க முடியாது. எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும்  இந்த திருமணத்தை நிறுத்த முடியாது."

 

இல்லை நிச்சயம் இந்த திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டும். என்று கேட்டுக் கொண்டே இருந்தன 

 

நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருந்தேன்.

 

பண்டிதரின் விழிகள் என்னை ஆழமாக பார்த்தன. அவரது கண்கள் என்னை வசப்படுத்த முயன்றன. நான் பார்வையை தாழ்த்திக் கொண்டேன்.

 

அப்பா திருமணத்திற்கு நல்ல நேரம் குறிக்க சொல்ல பண்டிதர் பஞ்சாங்கத்தை கையில் எடுத்தார். எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில் குறிப்பாக இப்போது பார்த்த ஜாதகத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

 

அந்த ட்ராகுலாவுடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது. 

 

அடுத்த மாதம் பத்தாம் தேதி என  முகூர்த்த நாள் குறித்தார்,பண்டிதர்.

 

அப்பா தட்சணையாக பூ பழம் வெற்றிலை பாக்கு பணம் என ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டவர் ஜாதகத்தை மேலும் ஆராய வேண்டும் பிறகு கொடுப்பதாகச் சொல்லி எங்கள் ஜாதகத்தை கையில் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

 

அவர் போகும்போது என் மகிழ்ச்சியையும் எடுத்துக்கொண்டு போய் விட்டார்.

 

நான் என் அறையில் குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்க ஒரு யோசனையும் வராமல் வெளியே போய் யோசிக்கலாம் என கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினேன்.

 

 

 

 

மணி பதினொன்றை தாண்டி விட்டது. வருவதாக கூறியவன் ஏன் வரவில்லை. கையை பிசைந்து கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தேன்.

 

வயலில் அழைப்புமணி கேட்டு ஓடோடி சென்று பார்த்தேன். அவன் வந்து விட்டான். சொல்லியபடியே வந்துவிட்டான். அப்பாவும் அம்மாவும் அவனை வரவேற்க நானும் அவ்வாறே செய்தேன்.     அப்பாவும் அம்மாவும் அவனது ஆசையை பெற்றனர்.

 

"குழந்தாய் வா. வந்து என் ஆசியை பெற்றுக் கொள்." அவன் என்னை சுட்டிக்காட்ட நான் முறைத்துக் கொண்டே அவன் காலை தொட்டேன்.

 

"சாமி உங்களை பண்டிதர் அனுப்பி வைத்தாரா?" அப்பா கேட்டார்.

 

"ஆம் மகனே. அவரது கட்டளைக்கு இணங்கி உம்மை அருள வந்தோம்."

 

"சந்தோஷம். வந்து உக்காருங்க சாமி."

 

அவன் சோபாவில் கால் விரித்து உட்கார நான் முறைத்ததை  புரிந்து கொண்டு ஒடுக்கி உட்கார்ந்தான்.

 

"பண்டிதர் ஏதாவது சொன்னாரா?"

 

"ஆம்."

 

"என்ன சொன்னாங்க?"

 

"அதுவந்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பத்து பொருத்தமும் அம்சமாக உள்ளதாம்."

 

"அதை நேத்தே பண்டிதர் சொல்லிட்டாரு. தேதியைக் கூட குறிச்சு குடுத்துட்டாரு."

 

 

"அதுதாங்க பிரச்சனை. பொருத்தம் சரியா இருந்தாலும் நேரம் சரியில்லை. இந்த நேரத்தில கல்யாணம் நடந்தா பொண்ணு இல்ல பையன் உயிருக்கு ஆபத்து இருக்கும்."

 

"என்ன சொல்றீங்க?"

 

"ஆமா பண்டிதரும் ஒன்றுக்கு இரண்டு முறை ஜாதகத்தை பார்த்துட்டாரு. ஆனால் ஏதோ சரியில்லை. இந்த கல்யாணம் நடக்கக் கூடாது. அப்படி நடந்தா உங்க பொண்ணுக்கு ஏதாவது ஆயிடும்."

 

"என்ன சொல்றீங்க சாமி..."அப்பா அதிர்ச்சி அடைந்தார்.

 

"அப்போ இந்த கல்யாணம் வேணாம்ங்க..." அம்மா அழுது கொண்டே கூற  அப்பா தலையை சம்மதமாக ஆட்டினார்.

 

நான் கஷ்டப்பட்டது வீணாகப் போகவில்லை. நான் பட்டம் போல் பறந்து கொண்டிருந்தேன்.

 

"என்ன சாமி சொல்றீங்க?" பின்னால் இருந்து குரல் கேட்டு திரும்பினேன். பாட்டி எங்களை நோக்கி கூடத்திற்கு வந்தார்.

 

"உங்க வாயால நீங்க அப்படி சொல்லலாமா? நீங்க எப்பேர்பட்டவங்க." பாட்டி செல்ல அவன் பல் இழித்துக் கொண்டிருந்தான்.

 

"சாமி இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லையா?"

 

"பரிகாரமா?" அவன் என்னைப் பார்க்க நான் முடியாது என்பது போல சம்பாசனை செய்ய அவன் அதை புரிந்து கொண்டான்.

 

"அதெல்லாம் பண்ண முடியாதும்மா."

 

"சாமி அப்படி சொல்லாதீங்க. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏதாவது பரிகாரம் பண்ணுங்க."

 

"செலவா?" அவன் என்னை பார்க்க நான் முறைத்தேன்.

 

"பரிகாரம்  இருக்கு. ஆனா...."

 

"ஆனா என்ன சாமி?"

 

"ஆனா அதுக்கு ரொம்ப செலவாகுமே.

பரவாயில்லை சாமி எவ்வளவு ஆனாலும் பண்ணிடலாம்."

 

"சரி அப்போ ஒரு பத்தாயிரம் இருந்தா குடுங்க பண்ணிடலாம்." என்னை பார்க்காமலே.

 

"இவ்வளவுதானா சரிங்க சாமி. பரிகாரத்தை எப்படி எங்க பண்ணனும்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்."

 

"அது... அது..." என தடுமாறியவன்,

 

" அதை நானே பண்ணிக்கிறேன். பரிகாரத்தை சன்னதியில் வச்சு தான் பண்ணனும். அதுக்கு நீங்க எல்லாம் வரணும் கூட அவசியம் இல்ல. நானே பண்ணிருவேன். அது.. வந்து பண்டிதர் பண்ணிருவாருன்னு  சொல்ல வந்தேன்."

 

"அப்படியே ஆகட்டும் சாமி."

 

அவன் பணத்தைப் பார்த்ததும் பாதை மாற எனக்கு கோபம் அதிகமாயிற்று.

 

திருமணத்தை நிறுத்த என்னிடம் ஐந்தாயிரம் வாங்கிவிட்டு, அதை நடத்த என் அப்பாவிடம் பத்தாயிரம் கேட்கிறான்.

 

நம்பிக்கை துரோகி. அம்மா அறையில் இருந்து பத்தாயிரம் எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து விட்டு பின்பு  சாமியிடம் அதாவது அவனிடம் ஒப்படைத்தார்கள்.

 

என்னுள் கோபம் ஏனோ தீப்பிழம்புகள் ஆக எரிந்தது. என்னால அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.

 

அவன் என்னையும் என் குடும்பத்தையும் முட்டாளாக்கி கொண்டிருக்கிறான். இதை எல்லாம் தெரிந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

 

பெற்றோரிடம் சொன்னால் நான் மாட்டிக் கொள்வேன். வேறு வழியில்லாமல் நின்று கொண்டிருந்தேன்.

 

அவனைப் பார்க்க பார்க்க கோபம் அதிகமாகி கொண்டே இருந்தது. பணத்தை வாங்கிய அவன் வேகமாக நடந்து சென்றான்.

 

எப்படி படங்களில் மட்டும் இந்த மாதிரியான யோசனைகள் வெற்றி பெறுகின்றன. தமிழ் படங்களையும் அவனையும் நம்பி ஏமாந்து விட்டேன்.

 

வேறு ஏதாவது செய்ய வேண்டும். எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தியாக வேண்டும்.

 

யோசனை கொடுக்க கூட யாரும் இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. என்னை அமைதிப்படுத்த பால்கனியில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

 

என்ன செய்வது என்று ஆழமாக யோசித்தேன்.

 

என் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்காக ஒலிக்க, அதை பார்த்ததும், என் மனதில் ஒரு யோசனை தோன்றியது.

 

அலைபேசியை கையிலெடுத்து இன்டர் நெட்டை ஆன் செய்தேன். கூகுள் எனக்கு உதவி செய்யும் என நம்பினேன்.

 

"ஹவ் டு ஸ்டாப் மை மேரேஜ்" என டைப் செய்து என் தேடலை தொடங்கினேன்.

 

நிறைய யோசனைகள் கிடைத்தன. ஆனால் எதுவும் உருப்படியாக இல்லை.

 

என்னை அவனிடம் பேச சொல்கிறார்கள். நான் எப்படி அவனிடம் சொல்லுவேன். அவன்தானே நிறுத்தச் சொன்னான்.

 

அப்படி இல்லை என்றால் என் பெற்றோரிடம் பேச வேண்டுமாம். அது முடிந்தால் நான் ஏன் இவர்களிடம் நான் மன்றாடப் போகிறேன். என்னால் முடியவில்லை.

 

நெட்டை ஆஃப் செய்து விட்டு சோபாவில் சாய்ந்தேன்.

 

என் வாழ்க்கை திசை மாறிப் போவதை என்னால் தடுக்க முடியவில்லை.

 

என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

 

அப்பாவை அலைபேசியில் அழைத்து திருமணத்தை அடுத்த முகூர்த்தத்தில் வைத்த சொல்லி விட்டார், பண்டிதர்.

 

அடுத்த முகூர்த்தத்திற்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும். அதுவும் தனியாக.

 

எனக்கென யாரும் இல்லை உதவி செய்ய.

 

யோசித்து யோசித்து தலைவலி தலைவலி வந்துவிடும் போலிருக்கிறது.

 

இந்தத் திருமணம் நடக்காது. என் பக்கம் கடவுள் இருக்கிறார் என இப்போதைக்கு மனதை மட்டுமே தேற்றிக் கொள்ள முடிகிறது.

 

தேற்றிக்கொண்டேன்.

 

திருமணம் செய்து கொள்வேன். நிச்சயம் அந்த காட்சில்லாவை அல்ல.

 

என் கனவில் வந்தவன் போல என் மீது அன்பாகவும் அக்கறையாகவும்  பொறுமையாகவும் என் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு அளிக்க கூடியவனாகவும் எனக்கே என

க்கான தன் காதலை கொடுக்க கூடியவனாகவும் ராஜ குமாரன் போல் குதிரையில் இல்லை என்றாலும் நடந்தாவது என்னை கவர்ந்த செல்ல வருவான். என சிறிது நேரம் ஆதித்யா வை மறந்து என் கனவு நாயகனுடன் கனவில் சஞ்சரித்தேன்.

 


 
Posted : July 5, 2026 7:45 pm
(@guna-sundari)
Posts: 59
Trusted Member
 

Will ur dream boy come? Intresting 


 
Posted : July 8, 2026 10:09 am

Scroll to Top