Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -8

2 Posts
2 Users
1 Reactions
30 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#122]

உதயம் - 💏 8💏

சரண்யா கூறுவது சரியாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். அப்பாக்கு ஆதித்யாவை பற்றி சிறு வயதில் இருந்தே தெரியும். நிச்சயமாக அப்பா எனக்கான தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மாட்டார்.

  நான் தான் ஆதித்யாவை பற்றி  தவறாக புரிந்து இருக்க வேண்டும். அன்று அவர் எந்த சூழ்நிலையில் என்னிடம் அப்படி நடந்து கொண்டாரோ.அவரிடம் ஒருமுறை பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் எப்படி  அங்கு சென்று அவரிடம் நான் பேச வேண்டும் என்று கூறுவது. அவர்கள் என்ன நினைப்பார்கள்.

"தியா, உன் மாமா, அதான் ஆதித்யாவோட அப்பா உன்னை கூப்பிடுறாரு."

"இதுதான் சரியான சந்தர்ப்பம். இதை நழுவ விடக்கூடாது. எப்படியாவது ஆதியுடன் பேச இந்த வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.

நான் கூடத்திற்கு சென்ற போது ஆதித்யா அங்கு இல்லை.என் கண்கள் அவனை தேட வலை விரித்தன.

போர்ட்டிக்கோவில் காதில் அலைபேசி உடன் நின்று கொண்டிருப்பதை கவனித்தேன். ஆதித்யாவின் அப்பா என்னை சோபாவில் உட்கார சொன்னதும் உட்கார்ந்தேன்.

என்னை பற்றி கேள்விகள் கேட்டார். நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் என் கண்களும் மனதும் ஆதித்யாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

உண்மையிலேயே ஆதி அழகன் தான்.

சிறிது நேரத்திற்குப் பின்  தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விட்டு கூடத்தை வந்தடைந்தான். அவனுடைய கண்கள் என்னைப் பார்த்தன. என் கண்கள் அவனை பார்த்ததும் பார்வையை திருப்பிக் கொண்டான்.

"ஆதித்யாவும் வந்துட்டான். ஒன்னும் பண்ணுங்களேன். ரெண்டு பேரும் தனியா ஏதாவது பேசணும்னுனா பேசிக்கோங்க." ஆதித்யாவின் அப்பா கேட்க என் உதடு புன்னகைத்தது.

"டாட்" என்றான் ஆதித்யா சிடுசிடுப்பாக.

"என்னடா இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறிங்க. ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கணும்ல. அப்ப தானே லைஃப் புல்லா சந்தோசமா இருக்க முடியும்." என ஆதித்யாவின் அப்பா அவனுக்கு கட்டளையிட அவன் எழுந்தான்.

"தியா, அவரை உன் ரூமுக்கு கூட்டிட்டு போமா."

"சரிப்பா." என்று சொல்லிக்கொண்டே  கண்களால் சைகை செய்து அவரை என் அறைக்கு அழைத்து சென்றேன். படியின் அருகே நின்றிருந்த மாயா என்னை பார்த்து கண்ணடித்தாள்.

  கண்களால் அவளை முறைத்துக் கொண்டு நான் என் அறைக்கு சென்றேன்.

ஆதித்யா அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு பால்கனியை நோக்கி நடக்க நானும் அவனை பின் தொடர்ந்தேன்.

அவன்  எதுவும் பேச போவதாக எனக்கு தோன்றவில்லை. நானே பேச்சை தொடங்கிவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

"நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல ஒன்னா விளையாடி இருக்கோம்னு அம்மா சொன்னாங்க. எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல உங்களுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா?"

நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

அவன் பார்வை கூறிய வார்த்தைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு வேலை நான் கோபமாக இருப்பேன் என்று நினைத்த அதிர்ச்சியா? இல்லை.  இவ கூட விளையாடிற்கோமா என்ற யோசனையா? இல்லை. இல்லாமல் என்ன கேள்வி கேக்குறாலே ங்குற வெறுப்பா என தெரியவில்லை.

அவன் பதில் கூறுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் பதில் கூறாமல் பார்வையை வேறுபக்கம் செலுத்தினான். இந்த அமைதியை நான் குழைத்தாக வேண்டும் என எண்ணினேன்.

"அப்பா நாளைக்கு பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னதும் ஷாக்காயிட்டேன்.அதுவும் மாப்பிள்ளை நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. உங்களுக்கு ஞாபகம் இருக்கா அன்னைக்கு மால்ல நடந்த மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். அதுக்கப்புறம் உங்களை இன்னக்கு மாப்பிள்ளையா பார்த்ததும் நான் பயந்துட்டேன். எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க  இஷ்டமே இல்லை. அதுக்கப்புறம் என் ஃப்ரெண்ட் சரண் தான்...."

நான் சரண்யாவை பற்றி சொல்வதற்குள் அவன் என் கண்களைப் பார்த்து இல்லை முறைத்து என் பேச்சில் குறிக்கிட்டான்.

"போதும் நிறுத்து.  கேட்குறேங்குறதுக்காக  பேசிக்கிட்டே போற.

நீ என்ன என்னை புடிக்கல ன்னு சொல்றதுக்கு.

உனக்கு என்ன உலகழகின்னு நினைப்பாடி. உள்ளூர் கிழவியா கூட நிக்கமுடியாது. உன் மூஞ்சிய என்னைக்காவது கண்ணாடில பாத்திருக்கியா நீ‌.

தோல் கொஞ்சம் வெள்ளை யாவும் பார்க்க கொஞ்சம் அழகாகவும் இருந்தா  என்ன வேணாலும் பேசலாம் எப்படி வேணாலும் பேசலாம்ன்னு நினைச்சியா.

உன்ன பாத்தாலே எனக்கு புடிக்கல.

உன்னை முதமுதல எப்போ பார்த்தேனோ அப்பவே உன்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஏதோ போன தடவை உன் நல்ல நேரமா இருந்ததால நீ தப்பிச்ச.

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க அலைஞ்சு இங்க வந்தேன்னு நினைச்சியா?

என் அப்பா அம்மா கட்டாயப்படுத்தி கூப்ட்டதால தான்  வந்தேன்.

உன் வீடுன்னு தெரிஞ்சுருந்தா வந்துருக்கவே மாட்டேன்.

அன்னைக்கு அவ்வளவு பேசியும் கொஞ்சம்கூட சொரணையே இல்லாமல் திரும்பி வந்து இழிச்சுக்கிட்டு நிக்குற.

உங்க அப்பா கிட்ட போயி உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு சொல்லிடு. அதை  விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்ங்குற ஐடியா வச்சுக்கிட்டு சுத்துன அவ்வளவுதான். இந்த கல்யாணத்தை நிறுத்திறது உன்னோட முழுப்பொறுப்பு."

நான் அதிர்ச்சியில் கண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்‌.

நான் என்ன தவறாக கூறினேன். அவன் சம்பந்தமில்லாத விஷயங்களை பேசுகிறான். நான் அவனை கல்யாணம் செய்து கொள்ள நாக்கைத் தொங்கப் போட்டுத் திரிகிறது போல பேசுகிறான்.

சுரணை இல்லாமல் அவனை பார்த்து இளிக்கிறேன் என்கிறான். என்னை பார்த்தால் அவனுக்கு எப்படி தெரிகிறது. என் நடத்தையை தவறாக கூறுகிறான்.

இதில் நான் கல்யாணத்தை நிறுத்த வேண்டுமாம். அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவன் தான் நிறுத்த வேண்டும். நான் ஏன் நிறுத்த வேண்டும்.

என்னை பார்த்து உள்ளூர் கிழவியாக கூட நிற்க முடியாது என்கிறான். அவ்வளவு கேவலமாகவா நான் இருக்கிறேன் என்று என் ட்ரெஸ்சிங் டேபிளின் கண்ணாடியில் என்னை நானே பார்த்து கொண்டேன்.

நான் ஒன்றும் மோசமில்லை. என் கல்லூரிக் காலத்தில் நடந்த பேஷன் ஷோவில் ப்யூட்டி கிவின் பட்டம் வென்றேன்.

என்னை பார்த்து உள்ளூர் கிழவி என்கிறான்.

என் மூளை வேலை செய்யவில்லை. இங்கு  ஒன்றும் நடக்காதது போல் அப்பா அம்மாவிடம் நல்லவன் போல் நடந்து கொள்கிறான்.

  ஒரே குழப்பமாக இருந்தது. இங்கு என்னிடம் பேசிய ஆதித்யாக்கும் அப்பா அம்மாவிடம் பேசும்  ஆதித்யாக்கும் எத்தனை வித்தியாசம். சரியான ஃபிராடு‌. சரண்யாவிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் முடியாது.

அவள் ஏதாவது கூறி நம்மை மூளைச் சலவை செய்து விடுவாள்.இதை பற்றி யாரிடமும் பேசக்கூடாது.

இப்படிப்பட்ட மோசமான மனிதனை நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியே தீர்வேன்.

மனதை ஒருநிலைப்படுத்தி யோசித்தால் நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

இரவு தூக்கம் இல்லாததால் காலை நேரம் தாழ்ந்து தான் எழுந்தேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. மாயா அழைத்தும் மறுத்துவிட்டேன்.

நேற்றிரவு சரண்யா அலைபேசியில் அழைத்தபோது அவளிடம் எதுவும் சொல்லவில்லை. என் மனதில் ஏதேதோ எண்ணம் அலை பாய்ந்து கொண்டு இருப்பதை அறிந்து மீண்டும் மீண்டும் கேட்டாள்.

எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை திருமணத்தில் எந்தவித தயக்கமும் இல்லை என்று கூறினேன். அவளுக்கு சந்தேகம் இருந்தும் எனக்காக நம்பியது போல் நடித்தாள். அதை என்னால் உணர முடிந்தது.

நான் என் அப்பாவிடம் சென்றபோது அவருடைய மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் இருந்தது. அவர் தரையில் நிற்க கூட நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்தார்.

இவ்வளவு மகிழ்ச்சியான அவரது முகத்தை இதற்கு முன் பார்த்த ஞாபகம் இல்லை. அவரது உணர்ச்சிகளை கொல்ல எனக்கு மனம் இல்லை.

வீட்டில் நேரத்தை செலவிட விரும்பாதவர் வீட்டிலேயே  உலவிக் கொண்டிருந்தார்.

என்னிடம் பேச யோசிப்பவர் என்னை பார்த்ததும் உற்சாகத்துடன் என்னை அணுகுகிறார்.

அம்மா வழக்கத்தைவிட அதிகமாக பூஜை செய்கிறாள். பாட்டி பார்க்கும் போதெல்லாம் என்னை அணைத்துக் கொள்கிறாள்.

என் திருமணத்திற்காக ஆசையோடும் கனவுகளுடன் இருப்பவர்களின் இதயத்தை உடைக்க முடியும்.

அதற்காக திமிரு பிடித்த ஆதித்யாவையும் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. என் மனதிற்குள் நீயா நானா நடந்து கொண்டிருந்தது. கோபிநாத் இடத்தில் நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.

கோபிநாத்தை போல் பிரித்து அறியும் தன்மை என்னிடம் இல்லை. அதற்காக கோபிநாத்தை அணுக முடியுமா என்ன? சந்தோசத்திற்காக திருமணமா? திருமணத்திற்காக சந்தோசமா?

என் வாழ்வில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான திருப்புமுனை. தவறான முடிவு என் மீதி வாழ்க்கை நரகமாக கக்கிவிடும். யோசித்து எடுக்க வேண்டிய முடிவு. மூளை வேலை செய்ய தயங்குகிறது.

திருமணம் வேண்டாம். ஆதித்யா வை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து அப்பாவிடம் கூற அவர் அறைக்கு சென்றேன்.

"தியா, ஏன்மா வெளியே நிற்கிற உள்ளே வா. நானே உன்ன வந்து பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். உனக்கு தெரியுமா?

அது என்னன்னா ஆதித்யா குமாரோட அப்பா விஷ்ணு போன் பண்ணி இருந்தான். அவங்க எல்லாரும் உன்ன சீக்கிரம் அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு ஆசை படுறாங்களாம்.

அதனால கல்யாணத்த எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா."

அப்பாவின் குரலில் இருந்த மயக்கத்தில்,

" ஆதித்யா என்ன சொன்னாருப்பா?" தாழ்ந்த குரலில் கேட்டேன்.

"ஆதித்யாக்கு என்னம்மா அவர் எப்போவோ சம்மதம் சொல்லிட்டாரு. நீ என்னம்மா சொல்ற?"

ஆதித்யா எப்படி சம்மதம் கூறியிருப்பான்.

தனது மனதில் இருப்பதை பெற்றோரிடம் சொல்லக் கூட தைரியம் இல்லை போலும். அப்பா கேட்ட கேள்விக்கு என்ன பதில் தருவது 'எனக்கு பிடிக்கவில்லை.' என்று கூறிவிட போகிறேன்.

"என்னமா யோசிக்கிற? உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?"தயக்கத்துடன் கேட்டார்.

சம்மதம் கூறிவிடு என்ற ஏக்கம் அவர் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.

'ஆம்' என்று சொல்லி விட நினைத்தேன்.

"அப்படியெல்லாம் இல்லப்பா. எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்." உதட்டில் வழிய வந்த புன்னகையோடு கூறினேன்.

நான் பதில் கூறிய வினாடி என் அப்பா என்னை அணைத்துக் கொண்டார்.

"உன்னால யோசிக்கக்கூட முடியாதுமா. அப்பா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு. இது போதும் தியா. இந்த உலகத்துல வேற எதுவும் வேணாம்.

இந்த ஊரையே திரும்பிப் பார்க்கிற மாதிரி பிரம்மாண்டமா ஒரு திருவிழா மாதிரி உன் கல்யாணத்தை நடத்தி எல்லாரையும் பொறாமைபட வக்கிறேன்.

இப்பவே அடுத்த நல்ல முகத்தை பார்த்து கல்யாணத்த வச்சிக்கலாம்." என கூறியவர் நான் அங்கு இருப்பதை மறந்து என்னை தனிமையில் விட்டுவிட்டு சென்றார்.

எனக்கு என்ன ஆச்சு. அவரது இதயத்தை உடைக்க மனமில்லாமல் எனது இதயத்தை உடைக்க தயாராகி விட்டேன்.

என்னை  தைரியமான பெண் என்று நினைத்தேன். என்னுடைய வாழ்க்கையின் முடிவுகளை சுயமாக எடுக்க முடியும் என்கிற தைரியமும் சாமர்த்தியமும் இருப்பதாக நம்பினேன். ஆனால் நானும் ஒரு சராசரி தமிழ் பெண் என நிரூபித்து விட்டேன்.

பெற்றோர்களின் மகிழ்ச்சிக்காக என் வாழ்க்கையை இழக்க தயாராகி விட்டேன்.

சாவி கொடுத்த பொம்மை போல் திருமணத்திற்கு பரிபூரண சம்மதம் என்று நான் எப்படிக் கூறினேன்.

என்னை யாரும் தடுக்கவில்லை.

திருமணத்திற்கு சம்மதமா என்றுதானே கேட்டார்.

சம்மதம் இல்லை என்று நான் ஏன் கூறவில்லை.

அப்பா அம்மா பாட்டி எல்லோரும் கூடத்தில் இருக்க அனைவரின் முகத்திலும் புன்னகை. என்னைத் தவிர.

  இவர்களின் சந்தோசத்திற்காக நான் என் வாழ்க்கையை தியாகம் செய்ய முனைந்து விட்டேனா? என்ற குழப்பம் என்னை சூழ்ந்து இருந்தது.

இவர்களின் இதயத்தை உடைக்காமல் இருக்க யாரை வேண்டும் என்றாலும் திருமணம் செய்து கொள்வேன்.

ஆதித்யா வின் அன்றைய பேச்சும் இன்றைய பேச்சும் காதில் ரிங்காரமிட, ஆனால் ஆதித்யா வை மட்டும் திருமணம் செய்ய மாட்டேன். திருமணத்தை நான் நிறுத்தப் போகிறேன்.

ஆனால் இதை நான்தான் நிறுத்தினேன் என்று யாருக்கும் தெரியப்போவதில்லை.

அப்பா என்னிடம் பண்டிதர் நாளை வருவதாக கூறினார். பார்க்கலாம் அவர்  என்ன கூறுகிறார் என்று.

என் பெற்றோர்கள் கடவுளின் மீதும் ஜாதகத்தில் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டவர்கள்.

ஒருவேளை ஜாதகம் பொருந்தவில்லை எனில் நான் இந்த திருமணத்தை நிறுத்த தேவையில்லை.

அவர்களே நிறுத்திவிடுவார்கள். அவனுக்கும் எனக்கும் நிச்சயம் ஜாதகம் பொருந்த போவதில்லை. இந்த இரு எதிரெதிர் துருவங்களும் ஒன்றும் சேர வாய்ப்பே இல்லை.

எனக்கு ஜாதகத்தின் மேல் என்றும் நம்பிக்கை இருந்ததில்லை. இருந்தாலும் இந்த முறை ஆவலாக இருந்தது. என் எதிர்காலத்தை அறிய நாளை வரை காத்திருக்க வேண்டும்.


 
Posted : July 2, 2026 3:24 pm
(@guna-sundari)
Posts: 59
Trusted Member
 

We too waiting 


 
Posted : July 8, 2026 10:00 am

Scroll to Top