Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -7

2 Posts
2 Users
0 Reactions
34 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#119]

உதயம் 💏 7💏

 

" தியா தியா அவங்க வந்துட்டாங்க"

 

"என்ன சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்களா?"

 

"ஆமா. வா நாம போய் பார்க்கலாம்."

 

"இல்ல நான் வரல. அம்மா வந்து கூப்பிட வரைக்கும் நான் வர கூடாதுன்னு சொல்லி இருக்காங்க."

 

"அப்போ நான் போய் பாக்குறேன்."

 

மாயா ஒரு நொடியில் பறந்து விட என் மனதுக்குள் சிறகுகள் அடித்தன. அவன் வந்து விட்டான். எனக்கும் அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. மறைமுகமாக பார்ப்பதைப் பற்றி சரண்யா கூறியது நினைவுக்கு வந்தது.  பார்க்கலாமா? வேண்டாமா ? அவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே போனது. மறைந்திருந்து பார்க்க எண்ணினேன். துணிந்து எழுந்த போது அமைதியாக உள்ளே வந்த மாயாவை பார்த்தேன்.

 

"என்ன ஆச்சு?"

 

"அவ்ளோதான் தியா.உன் லைஃப் முடிஞ்சிருச்சு. உன்ன நெனச்சா பாவமா இருக்கு."

 

"ஏண்டி? ப்ளீஸ்.... என்னை பயமுறுத்தாத. எதுவாயிருந்தாலும் சொல்லு."

 

"அது எப்படி நான் சொல்லுவேன். ஆனா உங்க அப்பா உன்ன நல்லா மாட்டி விட்டுட்டாரு டி."

 

"ப்ளீஸ் மாயா. என்ன விஷயம்னு சொல்லு." என் மனதில்  பற்பல எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.

 

"நீ அந்த பையன கல்யாணம் பண்ணுனா கிளிய வளர்த்து குரங்கு கையில் கொடுத்த மாதிரி இருக்கும்.

 

அதனாலதான் உங்க அப்பா போட்டோ காட்ட இல்லைன்னு நினைக்கிறேன். உன் அப்பா ப்ரில்லியண்ட் ன்னு சொல்லும் போதே நாம கெஸ் பண்ணி இருக்கனும்."

 

மாயா பேசும்போது வார்த்தௌக்கு வார்த்தை விட்ட இடைவெளி என் இதயத்தை துளைத்துக் கொண்டிருந்தது.

 

"மாயா என்னன்னு சொல்லு."

 

"தியா அவன் எப்படி இருக்கான் தெரியுமா? பெரிய கண்ணு. அந்த பெரிய கண்ணை இன்னும் பெருசா காட்ட சோடாபுட்டி கண்ணாடி.

 

இவ்வளவு ரிச்சா இருக்கான் ஒரு லென்ஸ் வைக்கலாம்ல.இல்லேனா நல்ல ஸ்பேக்ஸ்ஸாவது வாங்கலாம்.

 

ஐயோ அவனும் அந்தக் கண்ணாடியும். அதுகூட பரவாயில்லை அவனோட பல்லு இருக்கே. வீட்டுக்கு தேங்காய் துருவி வாங்க தேவையே இல்லை. அதுக்கு மேல அவனோட டிரெஸ்ஸிங் சென்ஸ்.உன்னை நினைச்சா பாவமா இருக்கு. கொஞ்சம் நீயே கொஞ்சம் இமேஜின் பண்ணி பாரு."

 

அவள் கூற கூற என் கற்பனைகள் விரிந்து கொண்டே இருந்தன. நான் உலக அழகியாக இல்லாவிட்டாலும் உள்ளூர் அழகியாவாவது இருப்பேன்.

 

எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பார்க்க எப்படி அவர்களால் முடிந்தது. என் அப்பாவுக்கு மனசாட்சியே இல்லையா?

 

ஒருவேளை செய்த உதவிக்கு நன்றிக் கடனுக்காக என்னை தள்ளிவிட பார்க்கிறாரா?

 

ஐயோ கடவுளே என் கண்களின் ஓரத்தில் நீர் சுரந்தது. மாயாவின் சோக முகம் புன்னகையாக மாறியது. நான் ஒன்றும் புரியாமல் நின்றேன்.

 

"நீ நெஜமாவே நம்பிட்டியா? சும்மா சொன்னேன்." மாயா கூற மகிழ்ச்சியை ஒரு புறம் வைத்துவிட்டு அவளை முறைத்தேன்.

 

"சாரி தியா  சும்மா விளையாட்டுக்கு பண்ணுனேன். உண்மையா ஆளு செம ஹாண்ட்சம். கோட் சூட் எல்லாம் போட்டு மேன்லியா இருக்கான். ஜோடி பொருத்தம் செம தூள் தான் போ.

 

உனக்கு தெரியுமா அவன் மேலே இருந்து கண்ண எடுக்க முடியல.  இதுவரைக்கும் நான் சைட் அடிச்சதுலயே இவனுக்கு தான் பஸ்ட் பிளேஸ்."

 

"ஓய்."

 

"பார்ரா.கோவம்லா வருது. சரி சரி இனிமே சைட் அடிக்க மாட்டேன். ஃப்ரெண்டோட ஹஸ்பண்ட் பிரதர் மாதிரி.  இல்ல இல்ல ப்ரெண்டு மாதிரி. இந்த உலகத்துல நமக்கு பிரதர்ரே இருக்கக்கூடாதுங்கிற ஒரு கொள்கையை வாழ்ந்துகிட்டு இருக்கேன்."

 

ஆதித்யாவை பற்றி அவள் சொல்ல சொல்ல அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை கூடிக்கொண்டே போனது. மாயாவின் மனதை போல் என் மனதையும் கொள்ளை கொள்வானா?

 

"சொல்ல மறந்துட்டேன். உங்க அம்மா உன்னை டீ போட சொன்னாங்க."

 

 

அவள் கூறியதும் என் உதடுகள் மலர்ந்தன.கால்கள் துள்ளிக்கொண்டு சமையலறை பக்கம் சென்றது. ஏன் இவ்வளவு ஆர்வம்? ஏனெனில் சமையலறையில் இருந்து கூடத்தில் நடப்பதை எட்டிப் பார்க்கலாம்.

 

என்னுடைய அறையில் இருந்து என் அவரை பார்க்க இயலாது. மாயாவும் என்னை பின் தொடர்ந்து சமையல் அறைக்குள் வந்தாள்.

 

நான் டீ போட்டு கொண்டு இருந்தபோது மாயா கூடத்தை சமையலறையில் இருந்து  பார்த்தாள்.

 

சமையல் அறையில் இருந்த என் பாட்டி என்னை நெட்டி முறித்துவிட்டு  கூடத்திற்கு சென்று விட்டாள். 

 

எப்படி மாயாவிடம் அவரை பார்க்க ஆசையாக உள்ளது எனக் கூறுவேன். இவள் என்னை கேலி செய்வாளே என யோசித்துக் கொண்டிருக்க அவளே அதற்கு வழிவகை செய்தாள்.

 

"என்ன உன் ஆளை காணோம்"

 

"என்ன என் ஆளா?"

 

என் ஆள் என்றதும் சந்தோசப் பட்டாலும் அதிர்ச்சியாக கேட்பது போல் நடித்தேன்.

 

"ஆமா உன்னை பெண் பார்க்க வந்தா உன் ஆளு தானே. வேணாம்னா சொல்லு. என் ஆளுன்னு கூப்பிடுகிறேன்."

 

எங்கிருந்து வந்த கோபம் என்று தெரியவில்லை. அவளுடைய விளையாட்டுத் தனமான பேச்சு முதன் முதலில் என்னை காயப்படுத்திய வலியை உணர்ந்தேன்.

 

என்னை அறியாமல் அதை வெளிக்காட்டியும் விட்டேன்.

 

"உதை வாங்குவ பாரு."

 

ஆனால் அவள் கவலை படவில்லை. சிரித்துக் கொண்டே என் அருகில் வந்தாள்.

 

"யாரோ கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னாங்க. ஆனா இப்போ கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அதுவும் நிச்சயமாக ஆகுறதுக்கு முன்னாடியே பொஸஸிவ்வா. பலே தியா பலே." அவள் கூறியதும் வெட்கத்தில் என் கன்னம் சிவந்தது. அதை கவனிக்காத மாயா மீண்டும் ஆதித்யாவை காண சமையலறை ஜன்னல் அருகே சென்று விட்டாள்.

 

"பாரேன். மரியாதையா பாட்டிகிட்ட ஆசிர்வாதம் எல்லாம் வாங்குறாங்க."

 

மாயா எனக்கு லைவ் கமெண்டரி கொடுக்க நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 

"தியா இங்க வாயேன். வந்து பாரு மாப்பிள்ளைய. திருட்டுத்தனமாக பார்க்குறதுலயும் ஒரு சுகம் இருக்கு. பார்க்காட்டி அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவ."

 

"இல்ல பரவாயில்லை." ஆவலாக இருந்தாலும் அதை காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

 

"எவ்வளவு நல்ல சான்ஸை மிஸ் பண்ற." சமாதானம் செய்வாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் சமாதானம் ஆகி விட்டாள்.

 

நான் ஒரு முட்டாள். கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன். சரி முயற்சிப்போம்.

 

" ஏன் என்னை போர்ஸ் பன்ற."

 

"ஆமா. நான் அப்படிதான் போர்ஸ் பண்ணுவேன்." என்னுடைய முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டது. மாயா என்னை நோக்கி வந்தாள்.

 

என் அருகில் வந்து கையைப் பிடித்து இழுத்து சென்றாள். மனதில் பல எண்ணங்கள் தோன்ற மனசு இறக்கை கட்டி பறக்க மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு பார்த்தேன்.

 

இப்படியொரு அதிர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. அதே ஆள் கடவுளே.  யார் என்னுடன் மாலில் தவறாக நடந்து கொண்டானோ அவனேதான். கறுப்பு சூட்டில் கண்களால் வீட்டை அளந்து கொண்டே அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

 

அவனது கண்களில் அந்த திமிருதனம் இன்னும் தெரிந்து கொண்டிருந்தது. இவன்தான் ஆதித்யா வா?

 

 

இவனை எப்படி நான் திருமணம் செய்து கொள்வேன். மனிதர்களை மதிக்கத் தெரியாத பெண்களை மதிக்காத இவனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.

 

அவனை திருமணம் செய்து கொள்ளவதை நினைக்கும் போதே கடுப்பாக உள்ளது. என்னுடைய அதிர்ச்சியை பார்த்த மாயா என்னை மேலும் வெறியேற்றினாள்.

 

"என்ன மேடம், அவர் மேலே இருந்து கண்ணை எடுக்க முடியலயா?"

 

"ஷட் அப் மாயா"

 

மிகப்பெரிய ஏமாற்றத்துடன் நகத்தை கடித்துக் கொண்டு சமையல் மேடை அருகே நின்றிருந்தேன். என் கண் முன்னே என் ப்ரத்தியோக கப்பில் அவனுடைய டீ இருந்தது.

 

சிறிது யோசனைக்குப்பின் அதில் இரண்டு கரண்டி உப்பு சேர்த்து விட்டேன். என்னை கல்யாணம் செய்துகொள்ள மட்டும் அல்ல. என் கையால் சாப்பிட கூட அவன் பயப்படவேண்டும்.

 

டீயில் உப்பை நன்கு கலக்கிய பின்பு ஒரு சிரிப்புடன் நின்று கொண்டிருந்தேன்.

 

"தியா டீ போட்டது போதும். இங்க வாயேன். உன் ஆளு உன் மாமா காதுல என்னமோ ஊதுறாரு பாரு‌."

 

நான் வேகமாக சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். 

 

"தியா டீ எடுத்துட்டு வா. அவங்க கூப்பிடறாங்க" என்று சொல்ல,

 

" பாரு உன்ன பாக்க உன் ஆளுக்கு அவ்வளவு அவசரம்." என்று என் காதில் மாயா ஓத அவள் காலை  ஓங்கி மிதித்தேன்.

 

டீயை எடுத்துக்கொண்டு நான் கூடத்திற்கு சென்றபோது அவன் அலைபேசி யுடன் நட்பை தொடர்ந்து கொண்டிருந்தான்.

 

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் டீயை குடித்த பிறகு அவனுடைய நிலை என்னவாகப் போகிறது  என்ற ஆவல் இருந்தது.

 

விஷ்ணு அங்கிளுக்கும் அவரது மனைவிக்கும் டீயை கொடுத்து விட்டு அவனுக்கான பிரத்யோகய அதாவது அன்பு பாசம் கொண்டு கலந்த டீயை அவனிடம் நீட்டினேன். அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் என்னை பார்க்காமல் டீயை எடுத்துக்கொண்டான்.

 

"ஆதி, பொண்ண நல்லா பாத்துக்கோ. அப்புறம் சின்ன வயசுல பார்த்த மாதிரியே இல்லைன்னு சொல்லுவ." 

 

அவனுடைய அப்பா கேலி செய்ய நிமிர்ந்து ஒரு வினாடி என்னை பார்த்து விட்டு குனிந்து மீண்டும் அலைபேசிக்குள் நுழைந்தவன் சட்டென நிமிர்ந்து பார்த்தான்.

 

அவன் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. அந்த ஒரு வினாடி அதிர்ச்சியில் அவன் என்னை அடையாளம் கண்டு விட்டான் என்பது தெரிந்தது. அவனது கண்கள் இமைக்க மறந்தன.

 

ஆதித்யாவின் அம்மாவின் கட்டளைப்படி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தேன். அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை அங்கு உள்ள அனைவரும் கவனித்தனர்.

 

"என்னாச்சு ஆதித்யா?"

 

"நத்திங் அங்கிள்." என்று கூறியவன் அலைபேசியை அருகில் வைத்துவிட்டு ஓரக் கண்ணால் என்னை பார்த்த படி சோபாவில் தன் நிலையை சரிசெய்து உட்கார்ந்தான்.

 

"டீ சாப்பிடல..." அப்பா கேட்க அவன் ஒரு வெற்றுப் புன்னகை செய்து கொண்டே டீயை வாயில் வைத்தான்.

 

ஆனந்தமாக பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒன்று இரண்டு மூன்று நான்கு முறைக்கு மேல் குடித்து விட்டான். அவனது முகத்தில் ஒரு சுளிப்பு கூட இல்லை. சுரணை கெட்ட மனிதனா? நாக்கு செத்த மனிதனா? இந்த முறை நான் சோபாவில் என் நிலையை சரிசெய்து உட்கார்ந்தேன்.

 

"டீ எப்படி இருக்கு?"

 

"நைஸ் அங்கிள்." அப்பா கேட்ட கேள்விக்கு அவன் அளித்த பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

" டீ க்ளாஸ் மாறி விட்டதா" என்ற சந்தேகத்தில் அனைவரையும் நோட்டமிட்டேன்.

 

யார் முகத்திலும் மாற்றமில்லை. எல்லோரும் குடித்து முடித்தாகிவிட்டது. வேலைக்காரி கிளாஸ் எடுத்து சமையல் அறைக்குள் நுழைய நானும் அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

 

சமையலறையில் நுழைந்து வேலைகாரி யை அனுப்பி வைத்து விட்டு அவன் மீதி வைத்த டீயை ருசித்தேன். என் நாக்கை என்னால் நம்பமுடியவில்லை. சரியாக இருந்தது. சுவையாகவும் இருந்தது.

 

டீயில் போட்ட உப்பு என்ன ஆனது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.உப்பு போட்டேனே அது எப்படி மாயமாக மறைந்து இருக்கும்.

 

அப்போது சமையலறையிலும் யாரும் இல்லை. எப்படி உப்பு இல்லாமல் இருக்கும். புலம்பிக் கொண்டே வெளியே வருகையில் ஆதித்யாவை பார்த்த போது கோபம் வந்தது. அழுகையும் வந்தது.

 

என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு என் அறைக்கு சென்றேன். அங்கு என் அலைபேசி கத்திக்கொண்டிருந்தது. அதற்கு அனுமதி அளித்தேன்.

 

"ஹலோ தியா."

 

"சொல்லு சரண்."

 

"என்ன ஆச்சு. உன் வாய்ஸ் டல்லா இருக்கு. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரலையா?"

 

 

"வந்துட்டாங்க."

 

"இப்போ உனக்கு என்ன பிரச்சனை. உன் வாய்ஸ் ஏன் இப்படி இருக்கு."

 

"சரண் எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. உனக்கு தெரியுமா? மாப்பிள்ளை யார்ன்னு."

 

"யாரு?"

 

"அவன்தான் சரண்."

 

"அவன்னா எவன்.?"

 

"என்கிட்ட மால்ல மிஸ் பிகேவ் பண்ணுனான்ல அவன்."

 

"நிஜமாவா"

 

"ஆமா சரண்."

 

"சரி இப்ப அதுல என்ன பிரச்சனை"

 

அவன் என்கிட்ட எப்படி பிஹேவ் பண்ணுனான். மற்றவர்களை மதிக்க தெரியாதவன எப்படி நான் மேரேஜ் பண்ணிக."

 

"கமான் தியா. அவர் அன்னக்கி என்ன டென்ஷன்ல இருந்தாரோ"

 

"ஆனா..."

 

"தியா, ஒருத்தர ஒரு தடவை பார்த்துட்டு அத வச்சி முடிவு எடுக்காத. நீ தானே சொன்ன அஞ்சு நிமிஷம் பார்த்த உடனே அவர் பத்தி உன்னால எப்படி கேரக்டர் அனலைஸ் பண்ணுவ.

 

நான் உங்க அப்பாகிட்ட பேசி பார்த்தேன்.எனக்கு அப்படி தோணல. உன் அப்பா மேல் உனக்கு நம்பிக்கை இருக்குல்ல.  அவங்க நல்லவங்களா தான் இருப்பாங்க.  நீ வேணா இன்னொரு தடவா அவர் கிட்ட பேசி பாரு."

 

"அவன் கூடையா"

 

"கமான் தியா.ஒரு தடவை பேசி பாரு. அப்பதான் உனக்கு தெரியும்"

 

"ஓகே ."

 

"சரி நான் உனக்கு அப்புறம் கால் பண்றேன்."

 

சரண்யா கூறியது சரியாக இருக்கவும் வாய்ப்

புகள் அதிகம்.

 

அப்பாவுக்கு ஆதித்யாவைப் பற்றிய சிறு வயதில் இருந்தே தெரியும். நிச்சயமாக என் வாழ்க்கை துணையை தவறாக தேர்ந்தெடுக்க மாட்டார். ஆதியுடன் ஒரு முறை பேசினால் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் எப்படி பேசுவது.

 


 
Posted : July 1, 2026 2:53 pm
(@guna-sundari)
Posts: 59
Trusted Member
 

What happened to salt tea? Where is gone? Intresting 


 
Posted : July 1, 2026 6:08 pm

Scroll to Top