Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -4

1 Posts
1 Users
0 Reactions
33 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#114]

உதயம் 💏4💏

 

" செம்ம வியூ சரண். உங்க அப்பா அம்மா ரொம்ப லக்கி."

 

லேசாக வெற்றுப் புன்னகையை உதறி விட்டு "லக்கி தான். ஆனால் இந்த விஷயத்தில் இல்ல."

 

"என்ன?" புரியாமல் என் விழி அவளை சந்திக்க, அவளின் சந்தித்தால் அவளது கூரிய கண்கள் என்னிடம் எதையோ சொல்ல முயற்சித்தது.

 

"தியா.." சிறிது தயக்கத்துக்குப் பின்

 

"They're blind."

 

எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.குழப்பம் மட்டுமே என்னை சூழ்ந்து உள்ளது .ஆனால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.

 

அவ்வளவு யதார்த்தம். சிறிது நிமிடங்களுக்கு முன் நான் பார்த்தவர்களால் என்னை பார்க்க முடியாதா? அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இருந்திருக்கிறது.

 

என் கண்களில் நீர் படர்ந்தது.

 

" I am sorry Saran." என்கிற வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டேன்.

 

அவள் லேசாக புன்முறுவல் செய்தாள். அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் வலியை என்னால் உணர முடிந்தது.

 

அவள் வலியை மறைக்க நினைப்பதை அவளது கண்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

 

" நீ என் அம்மாகிட்ட கலர்ர பத்தி கேட்டல்ல. அவங்களுக்கு கலர்னா என்னன்னே தெரியாது.

 

ஒரு தடவை என் அம்மா என்கிட்ட கலர் நா என்னன்னு கேட்டாங்க.

 

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.

 

காலையில வர சூரியனை பார்க்க முடியாதவங்ககிட்ட, நைட் வர நிலாவை பார்க்க முடியாதவங்ககிட்ட,

 

இந்த அழகான வானத்தை பார்க்க முடியாதங்ககிட்ட, அதுல ஓடி ஆடுற மேகத்தை பாக்காதவங்க கிட்ட,

 

எப்பவுமே சிரிசிட்டே இருக்க இந்த பூக்களை பார்க்க முடியாதவங்ககிட்ட, எல்லாருக்கும் பிடிச்ச வானவில்லை பாக்காதவங்க கிட்ட,

 

பச்சை பசேல்னு இருக்கிற செடி கொடிகளை பார்க்க முடியாதவங்ககிட்ட கலர் னா என்னனு, எப்படின்னு எக்ஸ்பிளைன் பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தேன்."

 

ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன். நிறங்களை பார்க்காதவர்களுக்கு அவர்களிடம் எப்படி நிறங்களைப் பற்றி விவரிக்க முடியும்.

 

"உண்மையிலேயே இது கஷ்டமான கேள்வி சரண். நிறங்களை பார்க்க முடியாதவங்க கிட்ட எப்படி எக்ஸ்பிளைன் பன்றது."

 

"ஆனால் இது சரண்யாவுக்கு அவ்வளவு கஷ்டமான கேள்வி இல்ல."

 

குரல் கேட்டு திரும்பி பார்த்தபோது சரண்யாவின் அம்மா கையில் கேரட் அல்வா உடன் நின்று கொண்டிருந்தாள்.

 

என் கண்கள் அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களை பார்த்தால் பார்வை அற்றவர் என கூற முடியாது.

 

சரண்யாவின் அம்மா நேரே உள்ளே வந்து கட்டிலுக்கு அருகிலிருந்த டேபிளின் மீது கேரட் அல்வாவை வைத்துவிட்டு எங்களை அழைத்தார்கள்.

 

எப்போதும் என் மனதை கொள்ளை கொள்ளும் கேரட் அல்வாவை விட அவளது பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதே எனக்கு ஆவலாக இருந்தது.

 

அதை  அவர்களிடம் கேட்ட போது கையில் அல்வாவை தந்து முதலில் அல்வா பிறகு பதில் என்றார்.

 

உடனே நானும் அல்வாவை ருசித்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சரண்யாவின் அம்மா பதிலைக் கூறினார்கள்.

 

"எப்படி நாம்ம சாப்பிடற  பொருட்களோட வெவ்வேறு சுவையை நம்ம நாக்குல இருக்குற பேஸ்ட் பட் உணர்த்துதோ.  அதே மாதிரிதான் நாம பார்க்கிற ஒவ்வொரு பொருளோட நிறங்களையும்  நம்முடைய கண்கள் உணர்த்தும். 

 

எப்படி நம்ம சாப்பாடுற பதார்த்தத்தோட சுவையை பார்த்து கண்டுபிடிக்க முடியாதோ. அதே மாதிரி நம் பார்க்கிற பொருட்களோட நிறங்களை தொட்டு பார்த்து உணரமுடியாது.  எப்படி நாக்குக்கு சுவையோ. அதே மாதிரிதான் கண்களுக்கு நிறம்."

 

" பிரில்லியன்ட் ஆன்சர் சரண்."

 

"அதெல்லாம் விடு அல்வா எப்படி இருக்குன்னு சொல்லு. உனக்கு பிடிக்கும்னு அம்மா ஸ்பெஷலா பண்ணினாங்க."

 

"ஆண்டி உண்மையாவே சொல்றேன். உங்க கையில எதோ மேஜிக் இருக்கு. இந்த அல்வாகவே உங்களுக்கு அடிமையாக இருக்க கூட நான் தயங்க மாட்டேன்."

 

"அடிமையா ??? இந்த உலகத்துல யாரும் யாருக்கும் அடிமை இல்லை. டேஸ்ட் அப்படிங்கறது சாப்பாட்டில இல்லை. அதை சாப்பிடுறவங்க மனசுல இருக்கு."

 

இப்பொழுது தான் புரிகிறது சரண்யா ஏன் தத்துவம் மலைகளை பொழிகிறாள் என்று.

 

பெயருக்காக சிரித்து விட்டு கேரட் அல்வாவை ருசித்தேன்.ருசி அல்வாவிலா மனதிலா என தெரியவில்லை. ஆனால் ருசியாக இருந்தது.

 

சரண்யாவின் அம்மா விடைபெற்றுக் கொள்ள, நானும் சரண்யாவும் அவளது அறைக்குச் சென்று சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.

 

இயற்கையில் ஆரம்பித்த எங்கள் அரட்டை ஓவியம், புதினம், இசை என கடந்து, மீண்டும் திருமணத்திற்கு வந்தது.

 

"தியா, சில நேரம் எனக்கு சந்தேகமாக இருக்கு. நான் உன்ன புரிஞ்சிக்குறேனான்னு..."

 

"இதுல என்ன டவுட் வருது, சரண். இந்த உலகத்திலேயே உன்னால மட்டும் தான் என்னை முழுசா புரிஞ்சுக்க முடியும். "

 

"நேத்து நீ என்கிட்ட ஒரு கேள்வி கேட்டா ஞாபகம் இருக்கா. இந்த இருபத்தி நாலு  வருஷத்துல என்னோட அப்பா அம்மாவால என்னை புரிஞ்சுக்க முடியல நா புதுசா வர்ற ஒருத்தனால எப்படி என்னை புரிஞ்சுக்க முடியும்ன்னு‌‌.

 

சோ சிம்பிள். இப்பவும் நீ தான் சொல்ற. என்னால மட்டுமே இன்னும் முழுசா புரிஞ்சுக்காம முடியும்னு. இந்த அஞ்சு வருஷத்துல என்னால உன்னை புரிஞ்சுக்க முடிஞ்சதுனா... புதுசா வர்ற ஒருத்தரால  ஏன் உன்னை புரிஞ்சுக்க முடியாது.

 

தியா சில வருஷமாவே உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும் இடையே இருக்கிற பாண்டிங்க் குறைஞ்சிடுச்சு.

 

அதனால கூட உன்னை  அவங்களால புரிஞ்சுக்க முடியாம இருக்கலாம்.

 

ஆனால் நீ கொஞ்சம் டைம் எடுத்து முயற்சி செய்தா கண்டிப்பா உன்னால உன் கணவர புரிஞ்சுக்க முடியும். அவராலயும் உன்னை புரிஞ்சுக்க முடியும்.

 

நான் உனக்கு ஒரு ஸ்டோரி சொல்லட்டுமா..."

 

"ம்ம் ம்ம்.."

 

"இது ஒரு பழைய கதை தான் இருந்தாலும் உன்கிட்ட சொல்ல ஆசைப்படுறேன். நாம ஸ்கூல் டைம்ல  படிச்சுருக்கோம். 

 

'தி லாஸ்ட் லீப்.' ( The last leaf )

 

இப்ப இருக்குற கொரோனா மாதிரி ஒரு கொடூரமான நோய் ஒரு நாட்டுக்கு வந்தது. அதுல ஒருத்தர் உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தார். 

 

ஆனால் அவருக்கு அவர் உயிர் பிழைப்போம் அப்படிங்கற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அவர் இருந்த  ரூம்ல இருந்த ஜன்னல் வழியா ஒரு மரம் தெரியும்.

 

அதுல சில இலைகள் மட்டும்  இருந்தது. அது இலையுதிர்காலம் வேற. மரத்திலிருந்து இலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா  உதிர ஆரம்பிச்சது. அப்போ அந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர் அந்த மரத்துல இருக்குற கடைசி இலை உதிரும் பொழுது நம்மளோட மரணமும் வந்திருக்கும் அப்படின்னு நெனச்சாரு.

 

நாட்கள் ஆக ஆக அந்த மரத்துல இருந்த எல்லாமே இலையும் வரிசையா உதிர்ந்துகிட்டே இருந்தது.

 

கடைசியா ஒரு இலை மட்டும் உதிராம இருந்தது. அதுக்கு அடுத்த நாள் ஒரு பெரிய புயல் வந்தது.

 

அந்த புயல் காற்றில் கூட அந்த இலை உதிராம இருந்தது அந்த நோயாளிக்கு ஒரு தைரியத்தை கொடுத்தது. ஒரு மனவலிமையை கொடுத்தது.

 

அந்த இலை எப்படி அந்த மரத்தை தாக்குப்பிடித்ததோ அதே மாதிரி நாமளும் நம்மளோட வாழ்க்கையில தாக்குப்பிடிப்போம் அப்படிங்கற  ஒரு எண்ணம் அவருக்கு வந்தது.

 

அந்த mind-set அவரோட உடல்நிலையை இம்பிரூவ் பண்ணுச்சு.

 

கடைசில அவரு முழிச்சா குணமாகி மீண்டும் அவருடைய வாழ்க்கையை அழகாக வாழ ஆரம்பிச்சாரு‌.

 

ஆனால் அவருக்கு தெரியாத ஒரு விஷயம் அந்த கடைசி இலை உதிர்ந்து விட்டது. அவரோட நம்பிக்கையை பொய்யாக்கவே  அந்த கிளையில் பொய்யா சித்தரிக்கப்பட்டு அங்கே ஒத்திவைக்கப்பட்டது அப்படிங்கறது அவருக்கு தெரியாது.

 

ஒருவேளை அதை வருக தெரிஞ்சிருந்தா அவருடைய உயிரும் இந்த உலகத்துல எல்லாமே இருந்திருக்கும்."

 

 

 

"தியா இந்த ஸ்டோரி நான் எதுக்கு சொன்னேன்னு புரியுதா.

 

வாழ்க்கையில எதிர்மறையான எண்ணங்களோட பார்க்கிற எல்லா விஷயமும் எதிர்மறையாக தான் இருக்கும். அது அவங்களுடைய வாழ்க்கையை அழிக்க தான் செய்யும்.

 

அதுவே நேர்மறை  பார்க்கும் பொழுது நமக்குள்ள ஒரு நம்பிக்கையும் வரும். நம்ம வாழ்க்கையிலயும் முன்னேறவும் முடியும்.

 

எல்லோருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள் இருக்காது. எல்லோரும் அவங்க அவங்க பார்வைக்கு ஏத்த மாதிரி தான் பார்ப்பாங்க.

 

நாம சரி நீ நினைக்கிற விஷயம் சிலநேரம் தப்பா போய்டும். அதே மாதிரி நாம தப்புன்னு நினைக்கிற விஷயம் சரியா இருக்கும்.

 

இதுக்கெல்லாம் நாம fed up ஆக கூடாது. கொலை பண்றது தப்பான விஷயம் தான். ஆனால் சிலநேரம் கொலைகாரனோட கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது அந்தக் கொலை கூட சரியாத்தான் படும்.

 

ஏதேதோ சொல்லி உன்னைய நான் கன்ப்யூஸ் பண்ணுறன்னு என நினைக்கிறேன். நான் சொல்ல வர்றது எல்லாம் ஒண்ணுதான். நீ ஒரு நிமிஷம் உன்னோட கண்ணோட்டத்திலிருந்து பார்க்காமல் அப்பா அம்மா கண்ணோட்டத்திலிருந்து யோசிச்சு  பாரு. அப்போதான் உன்னால ஒரு முடிவு எடுக்க முடியும்."

 

நான் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டேன். அதை நான் சரண்யாவிடம் கூறவில்லை.

 

சரண்யாவின் பேச்சுக்களில் ஆழ்ந்து இருந்தபோது சரண்யாவின் அம்மாவின் அழைப்பு எங்களை தடுத்தது‌.

 

"சரண்யா,தியா சாப்பிட வாங்கம்மா.."

 

நானும் சரண்யாவும் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்த இருக்கையில் அமர்ந்தோம்.

 

மேஜையின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை பார்த்ததுமே நாக்கு வெளியே எட்டிப் பார்த்துவிட்டு தன்னுடைய விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

 

"வாவ்...  சாப்பாட்ட பார்க்கும் போது வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கு."

 

சரண்யா கூற,

 

"அப்போ சாப்பிடாத." சரண்யா அப்பா செல்லமாக கூற,

 

"ம்ம்... நான் சாப்பிடாமல் இருந்துருவேன். அப்புறம்  என்னை ஏன் சாப்பிடலாம்னு சாப்பாடு கோச்சுக்குமே. எனக்காக இல்லாட்டியும் சாப்பாடு கஷ்டப்பட கூடாதுங்குறதுக்காக  சாப்பிடுறேன்." சரண்யாவின் பதிலை கேட்டு கடைவாய்ப்பல் தெரியும்வரை சிரித்தார், சரண்யாவின் அப்பா.

 

சரண்யா எழுந்து எல்லோருக்கும் பரிமாறிவிட்டு அவளும் சாப்பிட முனைந்தாள்.

 

சாதம் 5 வகையான கூட்டு நான்கு வகையான குழம்பு,பாயாசம்,அப்பளம் என கல்யாண வீட்டு விருந்து போல் இருந்தது. 

 

அசைவத்தை எதிர்பார்க்க வேண்டாம். சரண்யா சுத்த சைவம்.

 

"அப்பா, நீங்க எப்படி எல்லா வேலைகளையும் கரெக்டா பண்றீங்க. உங்கள பார்த்தா பிளைன்ட் மாதிரியே தெரியலையேன்னு தியா கேட்குறா.."

 

சரண்யா மெதுவாக என்னை மாட்டி விட நான் அவளை முறைத்தேன்.

 

"எல்லாமே கான்ஃபிடன்ஸ் தான் மா. இது எங்க வீடு. எது எது எந்த இடத்துல இருக்குன்னு எனக்கு தெரியும்.

 

நீங்க கண்ணால பாத்து போவீங்க. நாங்க கணக்கால போவோம்.

 

இங்கே இருந்து 15 ஸ்டெப்  ரைட் ல போயி நாலு ஸ்டைப் ஸ்ட்ரைட்டா போனா கிச்சன் அவ்வளவுதான்‌"

 

"அப்போ வெளியே போகும்போது அடிபட்றாதா அங்கிள்."

 

நான் கேட்ட கேள்விக்கு சிரித்த அவர், "கீழே விழுந்துருவோம்னு நினைச்சா யாராலயும் நடக்க முடியாது. யாராவது கீழே விழாம நடக்க பழகி இருக்காங்களா என்ன. இதுமாதிரிதான் உன் பிரச்சனையும்."

 

'என் பிரச்சினையா' எனக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது.

 

"தியா பிளைட்ல போனால்

ஆக்ஸிடென்ட் ஆக வாய்ப்பு இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும். அதுக்காக யாரும் பிளைட்ல போற தே இல்லையா என்ன. 

 

வாழ்க்கைனா பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பயந்துகிட்டு ஒரு விஷயத்தை பண்ண முடியாதுன்னு சொல்றது கோழைத்தனம்.

 

உனக்கு தெரியுமா எனக்கும் உன் ஆண்டிக்கும் அரேஞ்ச் மேரேஜ் தான்.

 

சில நாட்கள் எங்களுக்குள்ள இருந்த காதலை நாங்க புரிஞ்சுகிட்டோம்.

 

கண்ணில்லாத எங்களுக்கே காதல் வரும்போது, உனக்கு ஏன் வராது. காதலுக்கு கண் தேவையில்லை மனசு மட்டும் போதும்.  அது  உன் கிட்ட இருக்கு. நம்பிக்கை வை"

 

இப்படிப்பட்ட தத்துவஞானி குடு

ம்பத்தை இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. நான் ஏற்கனவே எடுத்த முடிவு இன்னும் பலமாக இருந்தது. இவர்களைப் பார்த்ததும் முதலில் பரிதாபப்பட்ட நான் இப்பொழுது அவர்களை பார்த்து கர்வம் அடைகிறேன்.

 


 
Posted : June 29, 2026 1:42 pm

Scroll to Top