Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் _3

1 Posts
1 Users
0 Reactions
51 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#108]

உதயம் 💏3💏

 

மஞ்சள் நிறத்தையும் ஆரஞ்சு நிறத்தையும் அள்ளிப் பூசிக் கொண்ட வானம்.

 

பரந்து விரிந்த வானத்தில் மறைய துடிக்கும் சூரியன்.

 

  நான் எப்படி என் சூழ்நிலையில் இருந்து மறைய துடிக்கிறேனோ அதே போல் சூரியனும் துடிக்கிறது.

 

கையில் காபி டம்ளருடன் என் அறையின் பால்கனியில் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன்.

 

இது என் வாழ்க்கை நானே முடிவெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன்.

 

எனக்கு என்ன பிரச்சனை என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் துவண்டு விட போவதில்லை. இன்று ஒரு நல்ல முடிவை எடுக்கவே போகிறேன்.

 

வாழ்க்கையில் எல்லா பெண்களுக்கும் நிகழவிருக்கும் சுபநிகழ்ச்சி திருமணம். அவர்கள் யாரும் அதற்கு பயந்து ஒதுங்கவில்லை. நான் மட்டும் ஏன் ஒதுங்க நினைக்கிறேன்.

 

எதற்காக இந்த பயம். எனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லையா? நம்பிக்கை இல்லையா? திருமண வாழ்வில் அல்லது இந்த உறவில் நம்பிக்கை நிஜமாகவே இல்லையா?

 

ஏன் இல்லை? சமூகத்தில் உள்ளவர்களை பார்த்து பயப்படுகிறேனா?

 

சரண்யா சொன்னது போல் உப்பு சப்பில்லாத காரணத்திற்காக விவாகரத்து கோருபவர்களை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டேனா?

 

எதனால் திருமணத்தின் மீது இவ்வளவு வெறுப்பு? ஏன் என்னால் ஒரு புது சூழ்நிலையை கையாள முடியாதா?

 

எத்தனையோ புதுமையான விஷயங்களை நிகழ்த்துபவள் அல்லவா நான்.

 

என்னால் ஏன் புது சூழ்நிலையை கையாள முடியாது. என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லையா?

 

நான் எதையும் எதிர்மறையாக யோசிப்பவள் அல்ல. பின் ஏன் இதில் மட்டும் இவ்வளவு எதிர்மறையான எண்ணங்கள். நான் ஏன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கிறேன்?

 

திருமணத்தால் என்ன பிரச்சனை வரும்? அப்படி வந்தால் என்ன?

 

என்னால் சமாளிக்க முடியாதா? எனக்கு அவ்வளவு தைரியம் இல்லையா? பொறுமை இல்லையா?

 

எதனால் பயப்படுகிறேன்?

 

காரணம்???

 

காரணம்????

 

ஐயோ கடவுளே எனக்கு உதவி செய். என் பெற்றோர் என்னிடம் எதையும் கேட்டதில்லை.

 

இதுநாள் வரை எதற்காக வும் திட்டியது கூட இல்லை. என் போக்கில் என்னை வளரவிட்டார்கள்.

 

நான் கேட்ட அனைத்து விஷயங்களுக்கும் அனுமதி அளித்தார்கள். இந்த திருமணத்தை தவிர.

 

என்னுடைய சந்தோசத்திற்காக நிறையவே செய்தார்கள். நான் ஏன் அவர்களின் சந்தோஷத்திற்காக திருமணம் செய்யக் கூடாது.

 

என் தந்தைக்கு என்னுடன் பேச நேரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு தேவையான அனைத்தும் செய்துள்ளார். அதுவும் பெஸ்ட் ஆக.

 

எனக்கு தேர்ந்தெடுத்த  மாப்பிள்ளையை எப்படி பெஸ்ட் இல்லாமல் தேர்ந்தெடுப்பார்.

 

அவர் என் திருமண முடிவு எடுத்திருந்தால் நிச்சயம் அதில் ஒரு காரணம் இருக்கும்.

 

எனக்காகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். 

 

நான் ஏன் இனி திருமணத்தைப் பார்த்து ஓடவேண்டும். சூரியன் வேண்டுமானால் மறைந்துக்கொள்ளட்டும். நான் மறைவதாக  இல்லை. விதியை யாரால் வெல்ல முடியும்.

 

எனக்கு இப்போது திருமணம் ஆக வேண்டும் என அந்த இறைவன் எண்ணியிருந்தால் யாரால் மாற்ற முடியும்.

 

திருமணம் சொர்க்கத்தில் போடப்படும் முடிச்சு. யாரால் அதை அவிழ்க்க முடியும். எல்லாம் நன்மைக்கே.

 

சூரியன் மறைந்த பின்பு புதிதாய் உதயமாகி விட்டேன். சூரியன் மறைந்த போது என் மனதில் எழுந்த சந்தேகங்களையும் மறைத்து எடுத்துக்கொண்டு சென்று விட்டது  போலும்.

 

மணி 9 ஆகிவிட்டது. இதைப்பற்றி யோசித்ததில் நேரம் கரைந்து போனதை உணரவில்லை.

 

எப்படியோ என் குழப்பத்திற்கும் சந்தேகத்திற்கும் வழியாவது  கிடைத்ததே.

 

இரவு உணவை முடித்துவிட்டு மீண்டும் என் படுக்கைக்கு வந்தபோது மணி பத்தரை. விளக்கை அணைத்து விட்டு படுத்துவிட்டேன்.

 

நேற்று குழப்பத்தில் தூங்காமல் இருந்ததால் இன்று தூக்கம் சீக்கிரமே ஆக்கிரமித்துக் கொண்டது.

 

என் ஆழ்ந்த தூக்கத்தை அந்த தொலைபேசி அழைப்பு கலைத்தது.

 

என் அருகில் மேஜை மீது இருந்த விளக்குக்கு உத்தரவு பிறப்பித்து நேரத்தை பார்க்கும்போது 11. 15..

 

இந்த நேரத்தில் தொலைபேசி அழைத்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

இந்த நேரத்தில் யார் என்னை அழைத்தது என தொலைபேசியை கையிலெடுத்து பார்த்தேன்‌.

 

சரண்யா. இவள் இன்னும் தூங்கவில்லையா? ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் அலைபேசிக்கு அனுமதி அளித்துவிட்டு காதில் வைத்தேன்.

 

" ஹலோ..."

 

" ஹலோ சரண்.என்ன இந்த நேரத்துல? நீ இன்னும் தூங்கலையா?"

 

" இல்ல.தூக்கம் வரல."

 

"அதுக்கு நான் தான் கிடச்சேனா""

 

"அப்டி இல்லப்பா. நாளைக்கு எங்க வீட்ல லன்ச்  அரேஞ்ச் பண்ணி இருக்கேன். அதான் உன்னை இன்வெயிட் பண்ணலாம்னு."

 

" உங்க வீட்லயா?"

 

" ஆமாம்."

 

"என்ன திடீர்னு?"

 

"நாளைக்கு எங்க அப்பா அம்மாவுக்கு அனிவர்சரி."

 

" ஓ அப்படியா. நான் விஷ் பண்ணுனேன்னு சொல்லு."

 

"கண்டிப்பா. நாளைக்கு நீ  கண்டிப்பா வரணும். என் அப்பா அம்மா உன்கிட்ட பேசணும்னு ஆசைப்பட்டாங்க."

 

" சரி வரேன்.ஆனா எனக்கு உன் வீடு தெரியாது."

 

" ஓகே, நீ கால் கட் பண்ணு. நான் அட்ரஸ் மெசேஜ் பண்றேன். மறக்காமல் சீக்கிரம் வந்துரு."

 

"ஓகே." அலைபேசியில் அவளது இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டேன்.

 

விசித்திரமாக இருந்தது. சரண்யாவை எனக்கு ஐந்து வருடங்களாகத் தெரியும். எலுமிச்சை நிறத்தில் குட்டையாக இருப்பாள். கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அவளது முகத்தின் பிரகாசம் அதை  குறை கூற  இடம் தராது. அவளது முகத்தில் லட்சுமி கடாட்சம் தெரியும்.

 

வேடிக்கையாக பேசினாலும் பக்குவப்பட்டவள். இருக்கும் சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதை ஒரு நிமிடத்தில் கலகலப்பாக மாற்றிவிடுவாள்.

 

கள்ளம் கபடமில்லாத உள்ளம், யாரின் வெறுப்பையும் சம்பாதிக்க தெரியாதவள், மக்களின் குணங்களை அறிந்து அதற்கேற்ப அவளை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்டவள்.

 

தன் எதிரே யார் கவலையாக தென்பட்டாலும் அதை தன் கவலையாக பாவித்து தீர்வு  காண்பவள். தெரிந்தவர் தெரியாதவர் என பாரபட்சம் பார்க்காமல் உதவும் குணம் கொண்டவள்.

 

 

நட்புக்காக தனது உயிரையும் பணயம் வைக்கும் ஒரு ஜீவி. அவளை பார்க்கும் போது சற்று பொறாமையாக இருக்கும்.

 

அவளுடைய அம்மாவின் சமையலை அடித்துக் கொள்ள யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

 

ஆனால் இதுவரை அவர்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஐந்து வருட பழக்கத்தில் முதல் முறையாக அவளது வீட்டிற்கு என்னை அழைத்துள்ளாள்.

 

இதுவரை அவளது வீட்டை பார்த்ததில்லை. முதல் முறையாக பார்க்கப் போகிறேன்.நாளை அதாவது இன்னும் சிறிது மணி நேரத்தில் அவர்களது பெற்றோரை சந்திக்க போகிறேன். ஏதாவது பரிசு வாங்க வேண்டும்.

 

அதை அவர்கள் பயன்படுத்தும் படியாக இருக்க வேண்டும். ஆண்டிக்கு சாரி எடுக்கலாம்.

 

அவள் அப்பாவிற்கு சிட்னி செல்டனின் எழுத்துகளின் மீது மோகம் இருப்பதாக கூறியிருக்கிறாள்.

 

அவர் எழுத்துகளில் ஏதாவது ஒன்றை பரிசாக அளிக்கலாம்.

 

மேலும் சில நேரம் அவர்களின் எண்ணம் என்னை தொற்றிக்கொள்ள எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

 

 

 

அழகான பச்சை பசேலென இருக்கும் புல் வெளிகள், அரும்பாக சிரித்துக் கொண்டிருக்கும் பூச்செடிகள், என்னை விட உயரம் யாருடா? என உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள், நான் இல்லையடா என மரத்தை விட சற்று சிறியதாக இருக்கும் சுவர்.

 

இவைகள் எல்லாம் தாண்டி என் வாகனம் போர்டிகோவில் சென்று நின்றதும் வண்டியை பூட்டிவிட்டு இயற்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு சேலை இருந்த பெட்டியையும் ஷெல்டனின் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய, ஒரு நிமிடம் நின்றேன்.

 

"தியா இன்னும் வரலையே."

 

" வந்துடுவாங்க.இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க." 

 

"எவ்வளவு நாளா அவ கிட்ட பேசணும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்பதான் சரண்யா அவள கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்கா."

 

சரண்யாவின் அம்மாவும் அப்பாவும் என்னை பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் எனத் தெரிந்ததும் யாரும் பார்க்காத அந்த இடத்தில் சிறிது புன்னகையின் செலவிட்டு மேலும் நடந்தேன்.

 

" உள்ள வரலாமா???" என நான் அனுமதி கேட்க,

 

"அடடே தியா வந்துட்டியா வாமா." என சரண்யாவின் அம்மா அன்போடு அழைக்க,பெரிய புன்னகையோடு உள்ளே நுழைந்தேன்.

 

"ஹாப்பி அனிவர்சரி அங்கிள் ஆன்ட்டி."

 

" தேங்க்ஸ் உட்காருமா." என சரண் அப்பா சொல்ல, அருகில் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன்.

 

என் கையில் இருந்த புத்தகத்தை சரண்யாவின் அப்பா முன்பு நீட்டினேன்.

 

" அங்கிள் இந்தாங்க.இந்த கிப்ட்ட வாங்கிக்கோங்க."

 

"என்னம்மா இது."

 

" உங்களுக்கு சிட்னி ஷெல்டன் புக்னா ரொம்ப பிடிக்கும்னு சரண்யா சொல்லியிருக்கா. அதனால 'தி ஸ்டார் ஷைன்ஸ் டவுன்' வாங்கிட்டு வந்தேன்."

 

" எதுக்குமா இதெல்லாம். சரி எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்திருக்க. அதை டேபிள் மேல வச்சுருமா." என கூற ஒரு வித  சலிப்புடன் அந்த புத்தகத்தை மேசையின் மீது வைத்தேன்.

 

ஒருவேளை அவருக்கு என்னுடைய பரிசு பிடிக்கவில்லையோ? இல்லை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. சரண்யா அப்பாவிற்கு ஷெல்டனின் புத்தகங்கள் பிடிக்கும் என்று கூறியிருக்கிறாள்‌.

 

அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும்  என் மன நிறைவிற்காகவாவது கையில் வாங்கிக் கொண்டிருக்கலாம்.

 

" உனக்கு தெரியுமா தியா, எனக்கு சிட்னி ஷெல்டன் புக்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த புக்கோட பேபர்பேக் என் கிட்ட இல்ல. சரண்யா கிட்ட எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன்‌. பேப்பர்பேக் வாங்கிட்டு வான்னு ஆனா மறந்துட்டேன்னு சொல்லுவா.

 

இன்னைக்கு நீ எனக்கு வாங்கிட்டு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்."

 

உண்மையாக கூறுகிறாரா இல்லை என் முக சுளிப்பை பார்த்த பின்பு கூறுகிறாரா என எனக்கு சந்தேகமாகவே இருந்தது. என்றாலும் சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு சரண்யாவின் அம்மாவுக்காக வாங்கிவந்த புடயை அவர்களிடம் நீட்டினேன்.

 

"ஆன்ட்டி உங்களுக்காக சாரி எடுத்தேன்." என அவர்களிடம் நீட்டினேன்.

 

" உங்களுக்கு எந்தக் கலர் பிடிக்கும்னு எனக்கு தெரியல. அதனால எனக்கு பிடிச்ச கலருலயே வாங்கிட்டு வந்துட்டேன்." சரண்யாவின் அம்மாவுடைய பார்வை எங்கோ வெறித்து கொண்டு,

 

"என்ன கலரா இருந்தா என்ன? தெரியவா போகுது."என  கூறியது குழப்பமாக இருந்தது.

 

" என்ன ஆண்டி சொன்..." நான் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு குரல் என்னை தடுத்தது.

 

" ஹாய் தியா. எப்போ வந்த?" என்று மாடிப்படியில் இருந்து ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டாள்.

 

"இப்பதான் மா.   எனக்கு சாரியும் அப்பாக்கு புக்கும் வாங்கிட்டு வந்து இருக்கா."

 

" அப்படியா..! எங்க காட்டுங்க. சாரி ரொம்ப அழகா இருக்கு மா."

 

"நெஜமாவா?" என சரண் அம்மா கேட்க,

 

அவள் "ஆமாம்." என்றாள்.

 

"இது என்ன புக்"என அவள் கை புத்தகத்தை நோக்கி சென்றன.

 

"தி ஸ்டார் ஸைன்ஸ் டவுன். அப்பா இது நீங்க பேசிட்டு இருந்தீங்களே அந்த புக். தேங்க்ஸ் தியா. இந்த புக்கை வாங்கிட்டு வான்னு எத்தனையோ தடவை சொல்லி இருக்காரு. நான் தான் மறந்து மறந்து போய்ருவேன்."

 

"சரண்யா, தியா முதமுதல் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா அவளுக்கு வீட்டை சுத்தி காட்டுமா."

 

" சரிமா" சரண்யா எனக்கு சமிக்ஞை செய்ய,

 

"வரேன் ஆன்ட்டி" என்று முறைக்காக கூறிவிட்டு சரண்யாவை பின்தொடர்ந்தேன்.

 

பெரிய ஹால், வலப்பக்கம் சமையலறை, இடது பக்கம் பூஜை அறை, சமையல் அறை வாயிலில் பாம்பைப் போல் வளைந்து வளைந்து மாடிப்படி, மாடியில் ஒரு ஹால் ஹால் கனிவுடன் புதிய முறை கொண்டிருந்தால் அதை மிகவும் நேர்த்தியாக இருந்தது.

 

அவளது பெற்றோர் அறை எளிமையாகவும் அழகாகவும் இருந்தது. இடதுபக்க நடுவில் ஒரு கட்டில், அருகே ஒரு மேஜை , கட்டிலின் எதிரே ஒரு சிறு சோபா, ஒரு பால்கனி.

 

பால்கனியில் இருந்து பார்க்கும்போது  அருகில் உள்ள பூங்காக்களில் விதவிதமான பூக்கள். அது தொட்டு விட்டு என்னையும் உரசிச் செல்லும் தென்றல் காற்று."

 

" செம்ம வியூ சரண்.  உங்க  அப்பா அம்மா ரொம்ப லக்கி."

 

லேசாக வெற்றுப் புன்னகையை உதறி விட்டு "லக்கி தான். ஆனால் இந்த விஷயத்தில் இல்ல."

 

"என்ன?" புரியாமல் என் விழி அவளை சந்திக்க, அவளின் சந்தித்தால் அவளது கூரிய கண்கள் என்னிடம் எதையோ சொல்ல முயற்சித்தது.

 

"தியா.." சிறிது தயக்கத்துக்குப் பின்

 

 

"They're blind."

 

எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.குழப்பம் மட்டுமே என்னை சூழ்ந்து உள்ளது .ஆனால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.

 

அவ்வளவு யதார்த்தம். சிறிது நிமிடங்களுக்கு முன் நான் பார்த்தவர்களால் என்னை பார்க்க முடியாதா? அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இருந்திருக்கிறது.

 

என் கண்களில் நீர் படர்ந்தது.

 

  " I am sorry

Saran." என்கிற வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டேன்.

 

அவள் லேசாக புன்முறுவல் செய்தாள். அந்த சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் வலியை என்னால் உணர முடிந்தது.

 

அவள் வலியை மறைக்க நினைப்பதை அவளது கண்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

 


 
Posted : June 27, 2026 10:40 am

Scroll to Top