Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -5

2 Posts
2 Users
1 Reactions
28 Views
(@salmaamjathkhan)
Posts: 19
Trusted Member
Topic starter
 
[#116]

உதயம் 💏 5 💏

 

 

டைனிங் டேபிளில் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்க நான் எனக்கான பிரத்தியோக இருக்கையில் அமர்ந்தேன்.

 

என்னை பார்த்ததும் அம்மா ஒரு புன்னகையை உதிறவிட்டு என் தட்டில் இட்லியை வைக்க மெதுவாக அதை வாய்க்குள் திணித்தேன்.

 

படியில் இருந்து இறங்கிய அப்பா என்னை பார்த்ததும் டைனிங் டேபிள் அருகே வந்து என் எதிரே அமர்ந்தார்.

 

"குட் மார்னிங் தியா"

 

"மார்னிங் டாடி" என்றும் வராத குட் மார்னிங் இன்று வந்தது அதிசயமாக இருந்தது.

 

"சாப்பிடுறியா தியா?"

 

' இல்லை வாந்தி எடுக்கிறேன்' என்று சொல்ல தோன்றியது ஆனால் அப்படி சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டினேன்.

 

"என்னமா இட்லி ஆறி இருக்கு. பார்வதி சூடா இட்லி கொண்டு வா."

 

என் அப்பாவை நேராக பார்த்தேன். அவர் வெகுளியாக சிரித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. அவரது எண்ணம் எனக்கு தெளிவாக புரிந்தது.

 

அம்மா வந்ததும் எனக்கு இட்லி வைக்குமாறு சைகை செய்தார். ஆவி பறக்க இட்லியை என் தட்டில் தஞ்சமடைந்தது.

 

"தியா தக்காளி சட்னி போட்டுக்கோ." நான் பதில் கூறவில்லை. தலையை மட்டும் ஆட்டினேன். அப்பா எதையோ சொல்ல முனைய அம்மா சமயலறை பக்கம் செல்ல,

 

"அம்மா" என்றேன்.

 

நான் கூப்பிட்டதும் அம்மா ஒரு நிமிடம் நின்று என்னை பார்த்தாள். நான் என் கண்களை அம்மாவிடமிருந்து அப்பாவிடம் திருப்பினேன்.

 

"அப்பா எனக்கு சம்மதம்."

 

அப்பா முழிக்க, "ஆமா அப்பா. எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்."

 

அப்பாவின் சந்தேகம் சந்தோசமாக மாறியது. நாற்காலியிலிருந்து எழுந்து "நிஜமாகத்தான் சொல்றியா" என்று கேட்க, ஒரு சிறு புன்னகையோடு தலையை ஆட்டினேன்.

 

"பார்வதி, தியா என்ன சொன்னான்னு கேட்டியா??? கேட்டியா???" என் அப்பாவின் நடவடிக்கை குழந்தை தனமாக இருந்தது.

 

என் அருகே வந்து,

 

" எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தியா." என என் நெற்றியில் முத்தமிட்டார். நான் கண்களை மூடி அதை இரசித்தேன்.

 

"நான் இப்பவே விஷ்ணுக்கு கால் பண்றேன்." என என் அப்பா அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

 

அம்மா சமையல் அறையை விட்டு விட்டு பூஜை அறைக்கு சென்றுவிட்டார்.

 

நான் என் அறைக்கு சென்று அமர்ந்தேன். அம்மா அப்பா முகத்தில் அத்தனை சந்தோஷம். நான் எடுத்த முடிவு சரியாகத்தான் இருக்கிறது. இப்போது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

 

என் அலைபேசி ஒலிற  அதற்கு கட்டளை பிறப்பித்தேன்.

 

"கங்கிராட்ஸ் தியா."

 

"கங்கிராட்ஸா??? எதுக்கு??"

 

"நீ குட் நியூஸ் சொல்லாட்டி என்ன எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா. நீ மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டியாம்ல."

 

"அதுக்குள்ள உனக்கு எப்படி தெரியும்"

 

இப்பொழுது தான் இந்த விஷயத்தை தாய் தந்தையிடம் கூறினேன். அதற்குள் இந்த செய்தி சரண்யாவின் குடியரசு தெரிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

"அதெல்லாம் அப்படித்தான். ஐ அம் ரியலி ஹேப்பி பார் யூ தியா."

 

"தேங்க்ஸ் சரண். நானே உனக்கு கால் பண்ணனும்னு நெனச்சேன்."

 

"இட்ஸ் ஓகே டி." சரண்யாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்த போது அப்பா நின்று கொண்டிருந்தார்.

 

"என்ன ஆச்சு டாடி"

 

"ஒன்னும் இல்லமா. மாப்பிள்ளை வீட்டிலிருந்து நாளைக்கு வர்றாங்களாம்."

 

"என்ன??"

 

"ஆமாமா உனக்கு ஏதாவது ஷாப்பிங் பண்ணனும்னா இன்னைக்கே முடிச்சுடு. அவங்க நாளைக்கு மார்னிங் வரேன்னு சொல்லிருக்காங்க."

 

"ஆனால் டாடி நாளைக்கே எப்படி..."

 

"தியா, நீ எதுவும் பேசாதே. சீக்கிரம் ஷாப்பிங் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ. அப்பதான் நாளைக்கு ஃப்ரெஸ்ஸா இருப்ப." பட பட படவென பொரிந்து தள்ளிவிட்டு அவர் சென்று விட்டார்.

 

"ஹலோ... ஹலோ..." சரண்யாவின் சத்தம் என் காதருகே ஒலிக்க,

 

"சரண்!!!!"

 

"என்னாச்சு உனக்கு ? ஏன் அமைதியாகிட்ட?"

 

"நீ கேட்டியா சரண். நாளைக்கு பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்களாம்."

 

"என்ன நாளைக்கே வா? உன் அப்பா ரொம்ப ஃபாஸ்ட் தான்."

 

" ஆமாம் அதுக்குள்ள எப்படி மாப்பிள்ளை ரெடி பண்ணாங்க."

 

"என்னடி உளர்ற..."

 

"அடப்பாவிங்களா... பயபுள்ளங்க என்னையே ஏமாத்திருச்சுங்க."

 

"கொஞ்சம் புரியுற மாதிரி தான் சொல்லேன்டி."

 

" சரண். இவங்க ரொம்ப நாளா பிளான் போட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். இல்லாட்டி எப்படி அஞ்சு நிமிஷத்துல மாப்பிள்ளை கிடைப்பான். திட்டம் போட்டு சிக்க வச்சுட்டாங்க டி."

 

"எதுவா வேணா இருக்கட்டும். அப்போ மேடம நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்களா. சூப்பர்டி. ஆல் த பெஸ்ட்."

 

"உண்மைய சொல்லனும்னா எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலடி."

 

"இட்ஸ் ஓகே விடு.  நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ மாலுக்கு வரேல்ல."

 

"ஆமா சரண். எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியது இருக்கு."

 

"டன்.  நாம அங்க மீட் பண்ணலாம். டேக் கேர்."

 

"டேக் கேர்."

 

 

 

நாங்கள் வழக்கமாக சந்திக்கும் விஷால் தி மால் இன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பொருட்களை வாங்கினோம்.

 

கூட்டம் அதிகமாக இல்லாததால் எங்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருந்தது.

 

' இந்த லெஹெங்கா உனக்கு நல்லா இருக்கும்' 'தியா இது எப்படி இருக்கு' 'இந்த கலர் செம்ம' எல்லா கூச்சல்  குழப்பங்களுக்கும் பின்னால் எனக்கு தேவையான அனைத்தையும் வாங்கி விட்டேன்.

 

"ஐயோ! எனக்கு இப்பவே ரொம்ப டயர்டா இருக்கு." புலம்பிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள், மாயா.

 

"சரிதான்  ஷாப்பிங் பண்ணுனது நாங்க. சும்மா நின்ன உனக்கு டயர்டா இருக்கா."

 

"யார் சொன்னா சும்மா நின்னேன்னு. எத்தனை பசங்கள சைட் அடிச்சேன்னு தெரியுமா?"

 

"எத்தனை பசங்கள?" நான் கேட்டுக்கொண்டே பைகளை அருகில் இருந்த நாற்காலியில் வைத்து விட்டு உட்கார்ந்தேன்.

 

"அஞ்சு... பத்து...பதினைந்து... சாரிப்பா நான் கணக்குல கொஞ்சம் வீக்கு." நானும் சரண்யாவும் சிரிக்க…

 

" நீ அந்த ரெட் டீ சர்ட்டை பார்த்தியா?"

 

"எந்த ரெட் டி ஷர்ட்" என்று கேட்க,

 

" அதான் நீங்க லிப்ஸ்டிக் வாங்குனீங்கள அங்கிருந்த சேல்ஸ்மேன்..."

 

"அவனுக்கு இப்போ என்ன?"

 

"என்ன ஹாட்டா இருந்தான். செம ஹாண்ட்சம். நானும் என்ன என்னமோ பண்ணி பார்க்குறேன். திரும்பி பார்க்கவே மாட்டேங்குறான்.  சுத்த வெஜிடேரியனா இருப்பான் போல.

 

அதைவிட  ஜெகின் பார்க்கும்போது ஒருத்தன் ஃபார்மலா ட்ரஸ் பண்ணியிருந்தான்ல அவன் செம ஹாண்ட்சம்."

 

"அப்படியா?" நான் கேட்க,

 

" ஆமாம் பா அப்புறம் இன்னொருத்தன் ஃபங்கியா ட்ரெஸ் பண்ணி இருந்தானே.  அவனை பார்க்கும்போதே டிஸ்கோ ஞாபகமா இருக்குபா."

 

"சரி சரி போதும். உன் கண்ணுக்கு எல்லா பசங்களும் அழகா தான் இருப்பாங்க. எல்லாரும் ஹாண்ட்ஸம்மா தான் இருப்பாங்க."

 

"உனக்கு ரசனை இல்லை, சரண்"

 

"பரவாயில்லை. எனக்கு ரசனை இல்லாமலே இருக்கட்டும். சாப்பிட என்ன வேணும்னு சொல்லு நான் போய் வாங்கிட்டு வரேன்."

 

"ஹலோ மிஸ். சரண்யா. நீ எதுக்கு வாங்கிட்டு வரேன்னு சொல்ற.நான் போயிட்டு வரேன்."

 

"நீ தான சொன்ன டயர்டா இருக்குன்னு. உனக்கு ஹெல்ப் பண்ண தானே சரண் போறேன்னு சொன்னா." நான் அவளுக்கு சிபாரிசு செய்ய,

 

"ஹெல்ப்பா? அதுக்கு பேரு ஹெல்ப் இல்ல துரோகம். நானே ரொம்ப நாளா வினோத்க்கு ரூட் விட ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ஒரு மாசம் கழிச்சு போன தடவை தான் அவன் என்னை பார்த்து சிரிக்கவே செஞ்சான். அதுக்குள்ளே நடுல புகுற பார்க்குறா."

 

"யார்டி வினோத்..."

 

"அந்த பீட்சா கார்னர்ல இருக்குறவன்டி."

 

"மன்னிச்சிடுங்க மேடம். இனி உங்களுக்கு நடுவுல நான் வர மாட்டேன். நீங்க போங்க." சரண்யா கூற,

 

"சரி சரி ரெண்டு பேருக்கும் என்ன வேணும்னு சொல்லுங்க."மாயா கேட்டாள்.

 

"எனக்கு ஒரு சிம்பிள் வெஜ் அண்ட் கோக்."

 

"எனக்கும்."

 

நாங்கள் கூறிய பின் ஒரு கணமும் வீணாக்காமல் அவள் சென்றுவிட்டாள்.

 

நல்ல உயரம். மெல்லிய உடல் வாகு. மாடல் ஆவதற்கான தகுதி உடைய பெண். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க விருப்பமில்லாத பெண்ணும் கூட.

 

ஏன் என்று கேட்டால் அவள் சொல்லகூடிய பதில் வாயை பிளக்க வைக்கும்.

 

" காதலா??? ஐயோ!!!  நான் மாட்டேம்பா. காதலிச்சா அவனை மட்டும் தான் சைட் அடிக்கணும். காதலிக்கலேனா யார வேணா சைட் அடிக்கலாம்.

 

இருக்கிறவளுக்கு ஒரு காதலன். இல்லாதவளுக்கு உலகத்துல இருக்கிற எல்லோரும் காதலன் தான்."

 

எளிதில் எதையும் நம்புகிற பெண். ஆனால் பச்சோந்தியின் தன்மை சற்று அதிகமாகவே காணப்படும்.தப்பான பச்சோந்தி அல்ல. வெகுளியான பச்சோந்தி. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு பதில்.

 

"எப்படி இருக்காரு உன்னோட வினோத்."

மாயா வந்ததும் சரண்யா கேட்டாள்.

 

"அவனைக் காணும்." மாயா ஏமாற்ற குரலுடன் சொல்ல,

 

" அச்சோ பாவம். ஏமாந்து போயிட்டியா?"

 

"நானா? ஏமாந்தா? சான்ஸே இல்லை. அந்தக் கடையில அவனைவிட அம்சமா ஒருத்தன் இருந்தான். ஜிம் பாடி." மாயா கூற சரண்யா ஏமாந்து போனாள்.

 

"தியா அந்த பையன் பேர் என்ன?"

 

"எந்தப் பையன்?"

 

"எந்த பையனா? நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாதா சொன்ன அந்த பையன்."

 

" தெரியாது."

 

" தெரியாதா?"

 

"சரி விடு. என்ன பண்றான்?"

 

" தெரியாது."

 

"ம்ம்ச்ச்.. பாக்க அழகாவாவது இருந்தானா?" 

 

"எனக்கு எப்படி தெரியும். நாளைக்கு தானே பொண்ணு பார்க்க வராங்க."

 

" நாளைக்கு தான் வர்றாங்க. ஒரு போட்டோ கூட பாக்கலையா?"

 

" இல்ல." என்றேன். அவனை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாத என்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி.

 

" என்னடி பொண்ணு  நீ. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்ற. ஆனா அவன்  யாரு என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா?"

 

" மாயா சொல்றது சரிதான் தியா. நீ அவன பத்தி தெரிஞ்சுக்கணும்ல. உன் அப்பா அம்மா கிட்ட கேளு."

 

"சரி சரண்."

 

" ஒருவேளை அவன் நல்லா இல்லைனா என்ன பண்ணுவ."

 

" சும்மா இரு மாயா. அவளே இப்பதான் தெளிவா இருக்கா."

 

" நாளைக்கு எத்தனை மணிக்கு வராங்க."

 

"ஐ திங்க். 10 இல்ல 11 க்கு வருவாங்க. அவங்க வரதுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் வந்துருங்க."

 

"கண்டிப்பா. நான் மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்கே அங்க இருப்பேன்."மாயா உற்சாகத்துடன் கூறினாள்.

 

" குட்.சரண் நீ ? "

 

"அது வந்து நான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்ல. ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறேன்னு."

 

"ஆமா. ரிசல்ட் கூட நெக்ஸ்ட் வீக்ன்னு சொன்னீயே."

 

" ஆமாம்."

 

"எனக்கு அந்த ஜாப் கிடைச்சுருச்சு. அதுக்காக நான் இன்னைக்கு கேரளா போகணும்."

 

" கேரளாவா?"

 

" ஆமா. திருவனந்தபுரம்."

 

"அப்போ நீ வரமாட்டியா."

 

" நான் இல்லன்னா என்ன? நீ மாப்பிள்ளையே பாரு. பார்த்துட்டு எனக்கு கால் பண்ணு."

 

 

" ஓகே. நான் கால் பண்றேன். கங்க்ராட்ஸ்."

 

" தேங்க்யூ."

 

சரண்யா கேரளா செய்வது சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அது அவளின் வாழ்க்கையின் முக்கியமான முடிவு. எனக்காக அதை விட சொல்ல முடியாது. அவளது பல நாள் கனவு இது. அவளுக்காக சந்தோஷப்பட நினைத்தேன்.

 


 
Posted : June 30, 2026 1:00 pm
(@guna-sundari)
Posts: 59
Trusted Member
 

Intresting 


 
Posted : July 1, 2026 5:52 pm

Scroll to Top