அயலா... அயலா...-14
அத்தியாயம்-14
ஆதினி கண்விழித்தப் பொழுது அயன் ஆனந்தத்துடன் அருகே வீற்றியிருப்பதை கண்டாள்.
"இப்ப எப்படியிருக்கு?" என்று ஆனந்தமாய் கேட்க, "தெரியலை... வீட்டுக்கு நடந்தே வந்துட்டு இருந்தேன். அதனால ஒரு மாதிரி ப்ளர்ரா ஆகிடுச்சு. மயக்கம் வந்துடுச்சு" என்றாள் ஆதினி.
அயனோ "நடந்தே வந்துட்டு இருந்தியா. உனக்கென்ன பைத்தியமா? ஸ்கூல்லயிருந்து ஆட்டோ பிடிச்சி வர என்னவாம்? இல்லை ஒரு போன் பண்ணினா நான் வந்திருப்பேன்." என்று கடிந்தான்.
"அனிதா போன் பண்ணினா அயன். போன் பேசிட்டே வந்தேன். எனக்கு ஆட்டோ பிடிக்கணும் என்றது தோன்றலை." என்றாள்.
"அனி..தா..? பிரதாப்போட பிரெண்ட்?" என்று கண்ணை சுருக்கி கூர்ந்து கேட்க, "என்னோட பிரெண்ட் அயன்" என்று ஆதினி முகம் தூக்கி கூறினாள்.
அயனுக்கு யாருக்கு பிரெண்டா இருந்து என்ன யூஸ்? என்று "இப்ப என்னவாம்? நிச்சயத்துக்கு வந்து நீ கஷ்டப்பட்டது போதாது. கல்யாணத்துக்கு வந்து அசிங்கப்பட சொல்லறாளா?" என்று நக்கலாய் கேட்டவன், "அவளை விட்டு தள்ளு. தயவு செய்து இனி இப்படி ரொம்ப தூரம் நடந்து வராத." என்றான்.
"ம்ம்ம்ம்... ஆங்.. அயன்... அனிதா நிறைய சாரி கேட்டா. பிரெண்ட்ஸ் எல்லாரும் கூட வருத்தப்பட்டதா சொன்னா." என்று கூற அயனோ காதில் வாங்கவில்லை.
"நீ அணிவிச்ச மோதிரத்தை பத்தி கேட்டா. அவ மேரேஜிக்கு நகை வாங்க ஆசைப்பட்டாலாம். என்னோட மோதிரம் அவளுக்கு வித்தியாசமா இருந்ததாம். அதை மாதிரி செய்ய ஆர்டர் தரலாம்னு நெட்ல கூகுள் லென்ஸ் மூலமா தேடியிருக்கா. அந்த மாதிரி டிசைனே இல்லைனு சொல்லியிருக்கு. அதோட இது ஒரு யூனிக் பீஸ், யாரிடமும் இருக்காத ரேர் பீஸ்னு ஏதேதோ சொன்னா." என்று கூறவும், "இந்த மோதிரம் யாரிடமும் இருக்காது. அதோட இது போல அவளிடம் செய்ய நகையை போட்டோ எடுத்து அனுப்பாத. இந்த மோதிரம் ஸ்பெஷல்.. ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆதினி." என்று கட்டளையிட்டான்.
ஆதினியோ "சரி.. நான் டீ போடறேன்" என்று எழ, ''இல்லை... நீ ரெஸ்ட் எடு. நான் டீ போடறேன்." என்றான்.
"ஏன் தலைசுத்தல் மயக்கம் வந்துச்சோ" என்று தலையை பிடித்தவள், "அயன்... நா.. நான்..." என்றவள் திக்கி திணறி தடுமாறினாள்.
ஆதினி மனதில் 'ஒருவேளை பிரகனென்டா இருந்தா? ஆனா உறுதியா தெரியாம அயன் மனசுல ஆசை விதைச்சா அப்பறம் கஷ்டப்படுவார்.
எனக்காக அக்ஷயாவை மகளா பார்க்கறவர். வேற எந்த கஷ்டத்தையும் அவர் அனுபவிக்க கூடாது. டாக்டரிடம் போய் செக் பண்ணிட்டு வந்து கன்பார்ம்னா சொல்லலாம்.' என்று நினைக்க, அயன் அவளது முகமாறுதலை கவனித்து, "ஆதினி... ஏதோ சொல்ல வந்து மறைக்கற. என்னனு சொல்லு?" என்றான்
அவன் பேச்சே என்னிடம் ஏதும் மறைக்காதே என்ற பொருளிருக்க "இல்லை.. பிரகனென்ட்டா இருப்பேனோனு டவுட்டா இருக்கு. நமக்கு மேரேஜ் முடிந்து ரொம்ப நாளாகுது" என்று நாணினாள்.
அயனோ "மேபீ.... கண்ணாம்பூச்சி ஆட்டம் வேலை செய்திருக்குமோ?" என்று மேலும் நாண வைத்தான்.
''போங்க அயன்." என்று கூறியவள், "மெடிக்கல் ஷாப்ல கிட் வாங்கிட்டு வர்றிங்களா? எதுக்கும் செக் பண்ணிடறேன். இல்லைன்னா டாக்டரை பார்க்க போகலாமா? நாலு தெரு தள்ளி அக்ஷயா பிறந்த ஹாஸ்பிடலே இருக்கு" என்று ஆசையாக கேட்டாள்.
அயனோ "ஆசையா தான் இருக்கு. ஆனா இங்க எந்த டாக்டரும் பார்க்க வேண்டாம் ஆதினி. ஒரு கணவனா நீ கன்சீவா இருந்தா சந்தோஷப்படப் போற முதல் ஆள் நான் தான். ஆனா இங்க எந்த டாக்டரும் வேண்டாம்.
இங்க எங்கயாவது போனா... ஆதினி பாப்பா பிறந்தப்ப ரெக்கார்ட்ஸ்ல பிரதாப் அப்பானு இருக்கும். இப்ப என் பெயர் அயன்னு சொல்லறப்ப அவங்க பார்க்கற பார்வை. பேசற பேச்சு. எதுவும் என்னால தாங்க முடியாது.
பாப்பா பிறந்த நாளுக்கு பத்து நாள் இருக்குல்ல. அது முடியவும், நாம இனி இருக்கப்போற இடத்துக்கு கூட்டிட்டு போறேன். அங்க போய் மத்ததை பார்த்துக்கலாம்.
தற்சமயம் நான் கால்சியம் ஐயரன் டெப்பிளட்ஸ் மட்டும் வாங்கிட்டு வர்றேன். அந்த மெடிஸன் மட்டும் போடு. ஸ்கேன் எல்லாம் அங்க போய் பார்க்கலாம். நான் சொல்லறது ஓகே தானே?" என்று அவள் மடியில் கைவைத்து கேட்டான்.
ஆதினியோ எத்தனை இடத்தில் அயன் மனவருத்தம் அடைந்தாரோ, இனியும் அவரது விருப்பம் போல நடந்துக்கொள்வோமென சம்மதமாய் தலையாட்டினாள்.
ஆதினிக்கு பட்டும் படாமலும் உதட்டில் முத்தம் வைத்து, அவளுக்கு டீ போட அயன் கிச்சன் அறைக்கு சென்றான்.
'நீ மயங்கினப்பவே கன்சீவா இருக்கேனு சொல்ல ஆசை தான் ஆதினி. ஆனா எதுவும் முழுமையா தெரியாம இப்ப ஆசையை விதைக்க கூடாதுன்னு இருந்தேன். ஆனா உனக்கே கர்ப்பம்னு சந்தேகம் வந்து கேட்டப்பிறகு சொல்லாம இருக்க முடியாது.
நீ என்னை அப்பா ஆக்கிட்ட, நீ என் குழந்தைக்கு அம்மாவாக போற.' என்று மகிழ்ச்சியாக அயன் டீயை போட்டு கொண்டு வந்து ஆதினிக்கு கொடுத்தான்.
"அயன்... டீ சூப்பர்." என்றாள் ஆதினி.
அக்ஷயாவோ "அயலா... எனக்கு பால்? வரவர ம்மமியை தான் கவனிக்கற. நீயும் நானும் ஐஸ்பாய் விளையாடினோம். நான் ஹன்ட்ரட் வரை கவுண்ட் பண்ணிட்டு வர்றேன்னு வந்து கதவுக்கிட்ட கண்ணை மூடினிங்க. இப்பவரை வரலை.
என்னாச்சு அயலப்பா வரலைனு நான் கப்போர்ட்ல இருந்து வந்து பார்த்தா. நீங்க அம்மா கூட கதை பேசிட்டு இருக்கிங்க. சரி பேசிட்டு என்னை தேடுவிங்கனு, அங்கயிருந்தே எட்டி பார்த்தா... டீ போட வந்துட்டிங்க." என்று குட்டி மனுஷி கோபம் கொண்டாள்.
"குட்டி மனுஷி.. சாரி.. அப்பா ஹாப்பி மூட்ல நாம ஐஸ் பாய் விளையாடியதே மறந்துட்டேன். இதோ உங்களுக்கு பால் ஆத்திட்டு நாம விளையாட்டை கண்டினியூ பண்ணலாம்." என்றான்.
"நோ அயலப்பா... நான் டிராயிங் வரைய போறேன். நீங்க பால் ஆத்தி கொண்டு வாங்க" என்று ஓடினாள்.
அயனும் அக்ஷயாவும் பேசும் அழகை நாளெல்லாம் பார்த்து ரசித்தவள், வயிற்றை தடவி புன்னகைத்தாள்.
அயனோ மிகத்தீவிரமாக குட்டி மனுஷிக்கு பாலை ஆத்தி பவ்யமாக நீட்டினான்.
அன்றிலிருந்து, வாழ்க்கை என்றால் இது தான் எண்ணும் அளவிற்கு ஆதினி வாழ்க்கை அமைந்தது.
அக்ஷயா பிறந்தநாளுக்கு பிறகு இந்த வீட்டை விட்டு ஏரியா விட்டே செல்வதால், அதை கொண்டாட, பள்ளிக்கூடத்தில் வேலை செய்பவர்களை அழைத்திட நினைத்தாள். ஆனால் அனிதா பங்ஷனில் ஏற்பட்ட அனுபவம், இனி தன் வீட்டில் யாரையும் அழைக்க ஆதினி தயாராகவில்லை. அதே போல மற்றவர்கள் பங்ஷனுக்கும் அவள் செல்வதுமில்லை என்று முடிவெடுத்திருந்தாள்.
ஆனால் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டாம் பிடிக்குமே. அதனால் வீட்டை அலங்கரித்து, கேக் வெட்டி, பிறந்த நாள் பரிசாக நிறைய தந்து தானே அசத்திட வேண்டுமென நினைத்தாள்.
அயனுடன் சேர்ந்து அக்ஷயா பிறந்த நாள் உடை வாங்குவதால், அவளுக்கு பரிசாவது வாங்க விரும்பினாள்.
பரிசு வாங்கும் கடையில் நின்று, அக்ஷயாவுக்கு எந்த பொம்மை வாங்குவதென்று ஆசையாக ஒவ்வொன்றாக பார்வையிட்டாள். அப்பொழுது தான் பிரதாப்பிற்கும் தனக்கும் திருமணமான நாளை முன்னிட்டு, வீட்டை அலங்கரித்து பிரதாப்பிடம் பேசிய நேரம், அக்ஷயாவுக்கு சரியாக பேச தெரியாத சமயம், தந்தை எங்கே வேலை செய்கின்றார் என்றால் இஸ்ரோவில் பராமரிப்பு பிரிவில் என்று சொல்லத் தெரியாது. ஆனால் 'ராக்கெட்டை தான் அப்பா விடுவார்' என்று எண்ணி, பிரதாப்பிடம் ராக்கெட்டை கேட்டு நின்றாள். ராக்கெட் என்றால் அவ்வளவு ப்ரியம். இப்பொழுது கூட பெரியவளாக மாறியப்பின் என்னவாக போகின்றாய் என்று கேட்டால் 'ஸ்பேஸ் சயின்டிஸ்ட்' என்பாள்.
பிரதாப்பிடம் அக்ஷயா பேச தெரியாத பொழுதா கேட்ட கடைசி பரிசு. ஆனால் கடைசியாக அதை கூட வாங்கி தராமல் பிரதாப் இறந்தது நியூஸ் தான் வந்தது.
அதனால் மகளுக்கு அவள் விருப்பமான பொம்மை ராக்கெட்டை வாங்க விரும்பினாள்.
அத்துடன் ஸ்பேஸ்டாய்ஸ், சோலார் சிஸ்டம் ராக்கெட் என்று வாங்கி மூன்றையும் கிப்ட் பேக்கிங் செய்ய கூறினாள்.
அப்படியே நடந்து வந்தவளுக்கு, பிரஷ்பென் கண்ணில்பட்டது. தற்போது அயன் வந்ததிலிருந்து பெரும்பாலும் டிராயிங் வரைதலில் தீவிரமாக இருக்கின்றாள். அயனும் கிரையான்ஸ், கலர் பென்சில், வாட்டர் பெயிண்ட், ஸ்கெட்ச், வொயிட் போர்ட், என்று வாங்கி தந்திருக்க பிரஷ்பென் வாங்கியவள் அதையும் பேக்கிங் செய்து முடிக்க கூறினாள்.
வரிசையாக பொம்மைகளை பார்த்து வந்தவள், அங்கிருந்த டாய்ஸில் தெரியாமல் கால் வைக்க, கால் இடறி கீழே விழுந்தாள்.
அங்கிருந்த கூட்டம் அவளை கீழேயிருந்து எழுப்பி நிற்க வைத்து, அடிப்பட்டதா என்று கேட்டார்கள்.
கடையில் உள்ள பணிப்பெண்ணோ "சாரிக்கா.. டாய்ஸ் பேக்கிங் கலைந்து அப்படியே இருக்கு." என்று மன்னிப்பு வேண்ட, "இட்ஸ் ஓகே என்று சமாளித்து பணத்தை செலுத்தி நடந்தாள்.
மனதில் லேசான பயம் முளைத்தது. கர்ப்பமாக இருக்கின்ற பொழுது கால் இடறியதால் தப்பும் தவறுமாய் எண்ணம் தோன்றி கரு கலைந்ததாகவே முடிவுக்கட்டி காட்சியாக கண்டு துவண்டாள்.
ஆதினி கையில் பரிசுப் பொருளுடன் பயத்தையும் ஏந்தியிருக்க, அயனுக்கு தெரியாமல் ஸ்கேன் செய்ய மனம் உந்தியது.
ஏற்கனவே பிரகனென்சி கிட் கூட எடுத்து உறுதியாகாத கரு, டாக்டரிடமும் காட்டவில்லை. இன்று கால் இடறி விழுந்ததில் பயந்து மனதில் அழுத்தம் கூட்டிக்கொள்ள வேண்டாமென பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலில் தனியாக ஸ்கேன் செய்ய சென்றாள்.
பெயரை பதிவு செய்துவிட்டு, டாக்டரை பார்க்க காத்திருந்தாள்.
அயனிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது தவறோ? அவனுக்கு கோபம் வருமா? ஆனால் இதுவரை அயன் எதற்கும் கோபம் கொண்டதில்லை. அயனிடம் தனக்கு கால் இடறியதை கூறி காரணத்நை கூறினால் ஏற்றுக்கொள்வான். அத்துடன் டாக்டரை பார்ப்பது தவறில்லை.' என்று தனக்கு தானே சமாதானம் செய்து அமர்ந்திருந்தாள்.
அயன் ஆதினி வரதாமதமாகவும் காரணம் கேட்க, அக்ஷயாவுக்கு பரிசுபொருள் வாங்குவதாக குறுஞ்செய்தியில் கூறினாள்.
அதனால் அயன் ஆதினியை தேடவில்லை.
டாக்டரும் சற்று நேரத்தில் ஆதினியை பரிசோதித்தார்.
ஆதினி தனக்கு ஏற்கனவே ஐந்து வயதில் குழந்தை உள்ளதாகவும், தற்போது மீண்டும் கருவுற்றதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததாகவும், டாக்டரை கணவரின் சொந்தவூருக்கு சென்று கன்சல்டிங் பார்க்கலாமென்பதால் இங்கே எந்த டாக்டரிடமும் காட்டவில்லை.. ஏன் பரிசோதிக்கவும் இல்லை என்பதை மட்டுமே தெரிவித்தாள். அதோடு இன்று கால் இடறி கீழே விழுந்ததில் லேசான பயம் தோன்றியதால் வந்ததாக கூறினாள்.
டாக்டரும் அதனால் பெரிதாக தோண்டி துருவாமல் ஸ்கேன் எடுத்துட்டா தெரியும். நீங்க சேலையை தளர்த்தி படுங்க" என்று கூறினார் டாக்டர்.
ஆதினியும் அதற்கேற்றவாறு படுத்திருக்க, டாக்டர் குழந்தையை ஆராய துவங்கினார்.
ஸ்கேன் உபகரணங்கள் கொண்டு வயிற்றில் ஜெல் தடவி, அழுத்தி அழுத்தி பார்த்திட, "லே..லேசா வலிக்கு டாக்டர்." என்றாள்.
"ம்ம்ம்." என்றவர் ஸ்கேனை ஆராய்ந்துவிட்டு, "கன்சீவா தான் இருக்கிங்கம்மா. ஆனா குழந்தை வளர்ச்சி அதிகமா தெரியுது. நீங்க டேஸை தப்பா கூட்டியிருக்கலாம். அப்பறம்... இந்த ஸ்கேன் ரிப்போர்டை விட, முழு ஸ்கேன் எடுங்க. அது புதன் கிழமை தான் எங்க ஹாஸ்பிடலில் வெளியேயிருந்து வருவாங்க.
சோ... நீங்க விருப்பப்ட்ட வர்ற புதன் வாங்க இல்லைன்னா... உங்க கணவரோட ஊர்ல போனதும் நல்ல டாக்டரிடம் செக்கப் போங்க. எந்த ஊர்?" என்றார்.
"அவர் சர்பிரைஸ்னு சொல்லலை டாக்டர்" என்றாள் வெகுளியாக.
"நல்ல பொண்ணுமா நீங்க. ஓகே.. டேப்ளட்ஸ் ஆல்ரெடி ஐயர்ன் கால்சியம் சாப்பிடறிங்க தானே. அதையே கன்டினியூ பண்ணுங்க. மத்தபடி ஒன்னுமில்லை." என்று டிசு பேப்பரை எடுத்து நீட்டினார்.
வயிற்றில் தடவிய ஜெல்லை துடைத்தவள், டாக்டர் பீஸ் செலுத்திவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள்.
வரும் வழியெல்லாம் குழந்தை நன்றாக வளர்ந்துள்ளதாக கூறியதே செவியில் தாக்கியது. முதலில் ஆனந்தமாக உணர்ந்தாள் ஆதினி.
குழந்தை உள்ளதா இல்லையா என்ற குருட்டு கணிப்பில் அல்லவா மருந்தை விழுங்கினாள். இன்று குழந்தை உள்ளதென்று கூறியதால் ஆனந்தம் வந்தது. ஆனால்.. குழந்தையின் வளர்ச்சி அதிகமாக, கூறவும், நாட்கள் அதிகப்படியாக இருக்கலாம் என்றதும், ஆதினிக்கு திருமணமான நாளை யோசித்தாள்.
சரியாக நான்கு மாதம் முடிவடைந்திருக்கும். ஆனால் ஐந்து மாதங்கள் அளவுள்ள குழந்தை வளர்ச்சி உள்ளதாக அல்லவா கூறினார்.
அப்படியென்றால் எப்படி? கணக்கு இடிக்கின்றதே என்று குழப்பினாள்.
-தொடரும்.
-
அயலா... அயலா...-20 (முடிவுற்றது)
3 weeks ago
-
அயலா... அயலா...-19
3 weeks ago
-
அயலா... அயலா...-18
3 weeks ago
-
அயலா... அயலா...-17
3 weeks ago
-
அயலா... அயலா...-16
3 weeks ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 4 Online
- 329 Members
