அயலா... அயலா...-13
அத்தியாயம்-13
அயன் கோபப்படுகின்றானா, சாந்தமாக பேசுகின்றானா பிரித்தறிய இயலாத விதமாக பேசினான். ஆனால் அவன் பச்சை கண்கள் விழித் தெறித்திடும் அளவிற்கு விரியவும், லைட்டின் எதிரே இருக்க கண்கள் பிரகாசமாக இருக்கவும் தான் அவன் கோபமாக இருப்பதே ஆதினி அறிந்தாள்.
"அங்க போவதற்கு முன்னயே ஆயிரம் முறை படிச்சி படிச்சி சொன்னேன். நாம அங்க போக வேண்டாம்னு. நீ தான் என் பேச்சை கேட்கலை ஆதினி.
அங்க வந்தவங்க உனக்கு மட்டும் பிரெண்ட்ஸ் இல்லை. பிரதாப்கும் நண்பர்கள். அப்படியிருக்க அவனை பத்தி பேச தான் செய்வாங்க. அதிலும் ஆண் நண்பர்கள் அவனையும் உன்னையும் பேசாம கடந்து போவாங்களா? சான்ஸேயில்லை.. இதெல்லாம் தெரிந்து தான் முதல்லயே வேண்டாம்னு மறுத்தேன். உனக்கு நான் எந்த அர்த்தத்தில் சொல்ல வர்றேன்னு புரியலை ஆதினி.
இனியாவது நண்பர்கள்னு சொல்லிட்டு யாரையும் பார்க்காத. அது தான் உனக்கு நல்லது. உனக்கு நான் அக்ஷயா போதும்." என்று அழுத்தமாய் உரைத்தான்.
ஆதினி மெதுவாக அயனை ஏறிட்டாள். "அயன்... இந்த இடம், வீடு, ஸ்கூல், பிரெண்ட்ஸ் எதுவும் எனக்கு வேண்டாம். நாம எங்கயாவது போய் யாருக்கும் தெரியாத ஊரில் வாழலாம். முன்ன செல்வம் ஜமுனா ஆன்ட்டி இருந்தாங்க. அவங்களிடம் என் மனவருத்ததை சொல்வேன். அவங்க எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை பேசுவாங்க. அவங்களும் அவங்க பசங்களை பார்க்க போயிட்டாங்க. இங்க நமக்குனு நட்பா அன்பா பேச யாருமில்லை.
அதோட என்னால பிரதாப் முதல் கணவர். நீ இரண்டாவது கணவன் என்ற பேச்சை சகிக்க முடியலை.
பிரதாப் மேல அதே அன்பு இருக்கு, மரியாதை இருக்கு. அவர் இறந்ததால அவருக்கு அஞ்சலி செலுத்த கடமைப்பட்டிருக்கேன். ஆனா அவரை வச்சி என்னை சாகடிக்கற வார்த்தைகளை நான் அறவே ஒதுக்கறேன். என்னை எங்கயாச்சு கூட்டிட்டு போ.
உனக்கு... பிசினஸ் பார்க்கணும்னு சொன்னியே. அந்த ஊருக்கு போயிடலாம். நமக்கு கல்யாணமாகி ஐந்து வயசுல குழந்தையிருக்கு என்ற அறிமுகத்தோட நாம நம்ம வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கலாம். ப்ளீஸ்... நாம வேற இடத்துல போயிடலாம். எனக்கு இங்க வாழ மூச்சு முட்டுது.
நீ நான் குழந்தைனு, நாம மட்டும் வாழ்ந்துடலாம். இனி எந்த பங்ஷனும் வேண்டாம், நட்புறவுகள் வேண்டாம், நாம தனியா நின்று வாழ்வோம்." என்று கூற, அயன்ஆதினி நிதானமடைய தண்ணீரை புகட்டினான்.
அவன் கண்களும் ஆக்ரோஷத்திலிருந்து மீண்டது போல இருந்தது.
அவன் செய்த பிரெட் ஆம்லேட் எடுத்து, அவளுக்கு புகட்டியபடி, "போகலாம்... போயிடலாம். ஆமா.. நமக்கு கல்யாணமாகி மூன்று மாசம் இருக்குமா?" என்று கேட்க, நாலாவது மாசம் ஆகப் போகுது." என்றாள்.
"அம்மா... எனக்கு கூட ஐந்து வயசு இல்லை. ஆறு வயசாகப்போகுது. அடுத்து என் பெர்த்டே வருது. மறந்துடாதிங்க. எந்த பங்ஷனும் வேண்டாம்னு சொன்னிங்க. என் பெர்த்டேவை செலிபிரேட் பண்ணணும்." என்று அவளது கவலையை விவரித்தாள்.
ஆதினியோ புன்னகைத்து, "உன் பிறந்த நாளை மறப்பேனா?" என்று கொஞ்சினாள்.
அயனோ கணக்கிட்டவனாக, "சரி.. அப்ப அக்ஷயா பிறந்த நாள் முடிஞ்சதும் நாம இங்கிருந்து கிளம்பிடலாம்.
என் பிசினஸ் பிளேஸ், இடம்னு மாறினா, எல்லாம் மாறும். நம்ம மனுசு ரிலாக்ஸ் ஆகும். அங்க தனிமை, குளுமை, இனிமை இதான் உங்களுக்கு சாந்தியை தரும்" என்று கூறினான்.
"குட் ஐடியா" என்றாள் ஆதினி.
அக்ஷயாவோ "ஐ.. அப்ப புது வீடு புது இடத்துக்கு போவோம்." என்று குதூகலம் கொண்டாள்.
"ஆமா... நீங்க பிசினஸோட மெயின் பிராண்ச் எங்க ஒபன் பண்ணறிங்க. சொன்னா அதுக்கு ஏற்றது போல உடை வாங்கலாம். குளுமைன்னா.. ஸ்வெட்டர் வாங்கணுமா? கொடைக்கானல் ஊட்டி இப்படி ஏதாவது மலை பிரதேசமா". என்றாள்.
"என்ன" என்றான் அயன்.
"அதான்பா... என்ன பிசினஸ்? ஏதாவது ஊட்டி கொடைக்கானல்ல எஸ்டேட் வாங்கறிங்களா?" என்று குழப்பாய் கேட்டாள். இதுவரை அயன் தொழிலாக எதையும் உரைக்கவில்லையே.
"இவ்ளோ நாள் அமைதியா இருந்தல்ல. அப்படியே இரு. சர்பிரைஸா கூட்டிட்டா போறேன்." என்று பிரட்ஆம்லேட் ஊட்டி தண்ணீரை புகட்டி உறங்க கூறினான்.
அக்ஷயாவோ "அப்பா.. எங்க போனாலும் நான் உங்க கூடவே இருப்பேன்." என்று கழுத்தை கட்டிக்கொள்ள, அயனும் வாஞ்சையாக முத்தமிட்டான்.
ஆதினியோ எனக்கு முத்தம்' என்ற ரீதியில் அயனை நோக்க, ''குழந்தையை தூங்க வை ஆதினி. நம்ம கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடலாம்" என்று கண்சிமிட்டி கிசுகிசுப்பாய் கூறினான்.
"போங்க" என்று வெட்கம் கொண்டவள் கர்ம சிரத்தையாக மகளை உறங்க வைத்து அயனுடன் அவன் கூறிய கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடவும் மறக்கவில்லை.
இந்த கலவையான உணர்வில் அனிதா இரவு மூன்று முறை போன் போட்டதை ஆதினி எடுக்கவில்லை.
அடுத்த நாள் ஆதினி ஸ்கூலுக்கு கிளம்பும் நேரமும் அனிதா அழைக்க, துண்டித்து முடித்தாள்.
'எனக்கு எந்த நண்பர்களும் வேண்டாம். ஏன் பிரதாப் இறந்தா நானும் செத்துடணும்னு நினைக்கறாங்க. நானே அப்பா அம்மா இல்லாம அனாதையா வளர்ந்தேன். எனக்குனு ஒரு குடும்பம் என்றதில் காதல் கல்யாணம் செய்தேன். ஆனா பிரதாப் இப்படி இறப்பார்னு தெரியாதே. காதலிச்சது உண்மை தான். அதுக்காக மறுமணம் செய்து அயனை காதலிக்க கூடாதா? என்னவோ கள்ளத்தனமா அவரோட உறவில் ஈடுப்டுவது போல வாயுக்கு வந்த மாதிரி பேசறாங்க. எனக்கு எந்த நட்பும் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்' என்று மனதில் நினைத்து பள்ளிக்கு புறப்பட்டாள்.
அக்ஷயாவையும் அயன் பள்ளியில் விட்டுவிட்டு புறப்பட்டான். அதே போல மாலை ஆதினி வர தாமதமாகவும் அக்ஷயாவை அழைத்து வீட்டுக்கு நடையை கட்டியிருந்தான்.
இங்கே ஆதினிக்கு மீண்டும் அனிதா போனில் அழைத்தாள்.
"பச்.. நேத்து நைட்லயிருந்து காலையில, மதியம்னு இப்பவரை கால் பண்ணறா." என்று எரிச்சலில் அட்டன் செய்தாள்.
"என்ன?" என்றாள் ஆதினி.
"சாரி... ஆதினி. பிரெண்ட்ஸ் எல்லாம் குரூப்பா போட்டோ எடுக்க வந்தப்ப கேட்டேன். நீ அப்பவே போயிட்டதாக சொன்னாங்க.
நான் பேசியதால போயிட்டியோனு நினைச்சேன். அப்ப தான் அவங்களும் உன்னை காயப்படுத்தி பேசியதை பகிர்ந்தாங்க.
அப்பறம் ஆளாளுக்கு உன் பக்கம் யோசித்தப்ப தான் நாங்க செய்த தப்பே தெரிந்தது. மத்தவங்க எப்படியோ நான் பேசியது தப்பு தான் ஆதினி.
பிரதாப் இறந்துட்டான். இனியும் அவனை வச்சி பேசி உனக்கு இப்ப கிடைச்ச நல்ல லைப்பை நாங்க பேசும் பொருளா பேசியிருக்க கூடாது.
உனக்குனு மறுவாழ்வு வேண்டும். இந்த உலகமிருக்கே... பஸ்ட் மேரேஜ் செய்து புருஷன் செத்துட்டு தனிமரமா இருக்கறவங்களை, கல்யாணம் பண்ணுங்க. இன்னொரு லைப் இருக்கு. மூவ் ஆகுங்கனு சொல்லும். ஏன் இங்க ஒரு பையன் இருக்கான் அங்க ஒரு பையன் இருக்கான் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டு உசுரை வாங்குவாங்க.
ஆனா அதே....
புருஷனை இழந்தவங்க, மூவ் ஆன் ஆகி, வேறொரு லைப் சாட்டிஸ்பெக்ஷனா வாழ்ந்தா, அதுக்கும் என்ன சொல்லும் தெரியுமா? புருஷன் செத்த கவலையேயில்லை அதுக்குள்ள மினிக்கிட்டு இருக்கானு பேசும்.
இரண்டும் மனுஷ குணம் தான்.
இங்க பலருக்கும் இயல்பா கடந்து போறது சிலருக்கு பெரிய விஷயம்.
நீ மூவ் ஆன் ஆனது நாங்க ஏத்துக்க டைம் எடுத்துடுச்சு. பிரதாப் நண்பன் என்ற காரணமா இருக்கலாம் ஆதினி. நீ போனப்பிறகு பிரெண்ட்ஸ் கூட வருத்தப்பட்டாங்க. ஆளாளுக்கு அவங்க பேசியது தப்புனு மாத்தி மாத்தி சொன்னாங்க. ஆனா யாருக்கும் உனக்கு மறுபடியும் கால் பண்ணி பேச பயம்.
எனக்கு மனசு கேட்கலை. என்னோட பங்ஷனுக்கா வந்துட்டு நீ அழுதுட்டு போனது ஒரு மாதிரி பீலாகுது.
நீ மன்னிச்சு பேசினா தான் எனக்கு சந்தோஷம்" என்று அடுக்கினாள்.
ஆதினியோ அனைத்தும் கேட்டவளாக, "உண்மை தான்.. ஒரு கணவனை இழந்த பெண், சட்டுனு மூவ் ஆனாலும் தப்பு தான். அதை இந்த இடைப்பட்ட காலத்துல புரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக அயனை திட்டிட்டேன். அவர் இனியும் இங்க வேண்டாம். நாம வேற இடத்துக்கு ஷிப்ட் ஆகலாம்னு சொல்லிட்டார்.
எனக்கும் மனசு சரியில்லை அனிதா. அதனால எந்தயிடம் கூட கேட்கலை. அக்ஷயா பிறந்த நாள் முடியவும், அவர் பிசினஸ் பண்ணற ஊருக்கு போயிடுவேன்.
அங்கயாவது அயன் மனைவினு பேசிட்டு போவாங்க பாரு." என்று நடந்தபடி பேசினாள்.
பள்ளி முடித்து வீட்டுக்கு நடந்து சென்றாள்.
"ஓ... ஷிப்ட் ஆகப்போறிங்களா? குட் குட்" என்றாள் அனிதா.
"ம்ம்ம்" என்றாள் ஆதினி.
"ஆதினி.. அப்பறம் நான் இன்னோரு விஷயம் பேசணும். எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. நான் ஏதாவது கேட்டு இதுக்கு தான் இத்தனை சாரி சமாதானம்னு நினைச்சிடாத." என்று பம்மினாள். அனிதா.
ஆதினியும் "என்னனு சொல்லு" என்றாள்.
"அயன் உனக்கு ஒரு மோதிரம் பிரசண்ட் பண்ணினார்ல. அதை என் வுட்பிக்கு காட்டினேன். ஆக்சுவலி.. எங்கேஜ்மெண்ட் ரிங் அந்த மாதிரி மாடல் செய்ய தரலாம்னு நினைச்சு காட்டினேன்.
ஆனா நான் சர்ச் பண்ணினப்ப, இந்த மாதிரி மாடல் இந்த உலக்ததுலயே இல்லைனு சொல்லுச்சு. ஏதோ ஸ்பெஷலா ஆர்டர் செய்து இருக்கலாம்னு நகைக்கடைக்காரர் சொன்னார்.
உன்னிடம் அந்த மோதிரம் இருக்குல்ல அந்த மோதிரம் எந்த கடையில் வாங்கியது? இல்லை.... எப்ப அந்த மோதிரம் ஆசாரி செய்தாங்கனு சொன்னா. அதை போல ட்ரை பண்ணுவேன்.
ரியலி அந்த ரிங் ஏதோ வித்தியாசமா ரொம்ப யூனிக் பீஸா இருந்தது. அயனிடம் அதுப்பத்தி கேட்கறியா?" என்று கேட்கவும், ஆதினி மௌனமானாள்.
"ஆதினி" என்றதும், "அது அவரோட பரம்பரை ரிங் மாதிரி சொன்னார். ஸ்பெஷல் ரிங் தான். பட் எதுக்கும் அவரிடம் சொல்லறேன். தேங்க்ஸ்" என்று கூறி அணைத்து விட்டாள்.
ஆதினிக்கு ஏனோ நட்பும் கசந்தது. இந்த உலகம் தனக்கு தேவையானதை தான் கேட்டு பெருகின்றது. ஆனால் அதையே தான் நினைத்தால் மட்டும் பழியையும், தவறு தன்னுடையது என்ற குற்றச்சாட்டையும் அடுக்கிவிடுகின்றது.
அந்த இடமே ஆதினிக்கு இருட்டிக்கொண்டு வந்தது. வீட்டுக்கு வந்து கேட்டில் கை வைக்கும் நேரம் அவளுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது.
இதுவரை நடந்து வந்ததையே, அதிகமாக மூச்சு வாங்கியதை வைத்து, அப்பொழுது தான் அறிந்தாள்.
வீட்டின் அழைப்பு மணியோசையை அடிக்க கைகள் செல்ல, மயங்கி சரிந்தாள்.
அயன் ஆதினி வரும் நேரம் என்பதால் கதவை திறந்து எதிர்பார்க்க ஆதினி மயங்கி சரியவும் மின்னலாய் வந்து தாங்கி பிடித்தான் அயன்.
-தொடரும்.
-
அயலா... அயலா...-20 (முடிவுற்றது)
3 weeks ago
-
அயலா... அயலா...-19
3 weeks ago
-
அயலா... அயலா...-18
3 weeks ago
-
அயலா... அயலா...-17
3 weeks ago
-
அயலா... அயலா...-16
3 weeks ago
- 25 Forums
- 215 Topics
- 763 Posts
- 4 Online
- 329 Members
