Forum

அயலா... அயலா...-19
 
Notifications
Clear all

அயலா... அயலா...-19

3 Posts
3 Users
1 Reactions
89 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#78]

அத்தியாயம்-19

  செல்வமும் ஜமுனாவும் அதேயிடத்தில் இருந்தனரே தவிர, ஆதினிக்காக பேசவில்லை.

ஆதினி என்னாச்சு?" என்று பார்க்க, அயனும் செல்வமும் பார்வையால் அவர்கள் பேசிக்கொள்வதை பார்த்தாள்.

"அங்கிள்?" என்று அழைக்க, "நான் இப்ப செல்வம் இல்லை. நானும் அயனை போல பாரலல் யூனிவர்ஸ்ல ஹூமன். இங்க வந்தப்பவே செல்வமும் ஜமுனாவும் உனக்கு ஒன்னுன்னா உதவிக்கு வந்ததை பார்த்தோம்.
   எங்களுக்கு அது தடையா இருந்தது. அதனால அவங்களை சரியான நேரத்திற்கு, அயனோட நீ பேசி பழக சாதகமா பேசுவதற்காக, அவங்க உருவத்தில் நாங்க வந்து பேச வச்சோம்.

  இப்பவும் செல்வமும் ஜமுனாவும் எங்களோட வசியத்துல ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்காங்க. இப்ப பேசறது எங்க கூட்டத்தின் தலைவன் அயனோட வருகைக்காக காத்திருந்து, தாமதமானதால, செல்வம் ஜமுனா உருவத்தில் நேரிடையா வந்தோம்." என்று பேச, ஆதினி பேயறைந்தது போல நின்றாள்.

  அப்படியானால்... செல்வமும் ஜமுனாவும், அயனை என் வீட்டில் தங்க வைத்து பேசியது, அவனை மணக்க தனக்கு அறிவுறுத்தியது, அக்ஷயாவோடு பழக விட்டாலும் நல்லதென்று கூறியது எல்லாம் அயனின் திட்டத்தின் ஒரு பகுதியா?" என்று மகளை பார்த்தாள்‌.

அக்ஷயாவோ தன் அணைப்பிலிருந்து அயன் கைவளைவுக்குள் நின்றியிருக்க, "அக்ஷயா... இங்க வந்துடு. அவர் மனுஷன் இல்லை." என்று கத்த, அயன் நகைத்தான். அக்ஷயாவோ ''எனக்கு தெரியும் அம்மா. அயலா..‌. மனுஷன் இல்லை. ஹீ இஸ் அயலா இட்ஸ் மீன் அயலான்." என்று மற்றொரு அதிர்ச்சியை தந்தாள்.

  ஆதினி உறைந்து நின்றவளாக காண, அயனோ "ஏன் ஆதினி... அக்ஷயா எத்தனை விதமான ஓவியம் வரைந்தா... அதுல முதல் இரண்டை பார்த்துட்டு அப்படியே விட்டுடுவியே... ஒழுங்கா.. அவ வரைந்த மொத்த ஓவியத்தையும் ஒரு நாளாவது பார்த்தியா?

  இங்க பாரு" என்று அக்ஷயா வரைந்த டிராயிங் நோட்டை எடுத்து பக்கத்தை திருப்பினான்.  

  அதில் அயன் வேற்றுகிரக வாசியாக இருக்கும் உருவத்தில் அக்ஷயா படம் வரைந்து வண்ணம் தீட்டியிருந்தாள்.
  அதை பார்த்ததும் ஆதினி மகளை கண்டாள்.
"உன்னிடம் தான் நான் என் வேஷத்தை போட்டேன் ஆதினி. குழந்தையிடம் என்னால தொடர்ந்து போடமுடியாது. அதனால ஒரு கட்டத்தில் தனியா இருந்தப்ப நான் அவளுக்கு ஏற்ற விதமா, கதையா சொல்லி, அவளை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அவளுக்கு மனிதனாக நடமாடிய பிரதாப் அப்பாவை விட, என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா... நான் அவளை முழு மனசா மகளா பார்க்கறதை அவ உணருறா.

  அக்ஷயா குழந்தை எப்பவோ என் கூட வர தயார். ஆக்சுவலி அவளோட பிறந்த நாளுக்கு என் உலகத்துக்கு அழைச்சிட்டு போறேன்னு தான் சொல்லியிருக்கேன்.

  இந்த உலக்ததுல எல்லா அப்பாவும், குழந்தைக்காக  நிலாவை நட்சத்திரத்தை பிடிச்சி தரவா? உலகத்தை உருவாக்கி தரவானு கேட்பாங்க. ஆனா என் பொண்ணு அக்ஷயாவுக்கு நான் நிலவும் நட்சத்திரத்தையும் நெருக்கமா போய் காட்டுவேன். புது உலக்ததையே அவளுக்கு பரிசா தரப்போறேன். என் உலகத்துல நான் ராஜான்னா... என் மக அக்ஷயா இளவரசி.

   அக்ஷயா எப்பவோ, என் கூட, என் உலகத்துக்கு வர தயார் ஆதினி. நீ தான் இப்ப முடிவெடுக்கணும்.
 
  நீ தானே சொன்ன... எனக்கு இந்த உலகம் வேண்டாம் அயன். என்னை மறுமணம் செய்த ஒரே விஷயத்துக்காக அசிங்கமா பேசி காயப்படுத்தறாங்க.

நமக்குனு ஒரு உலகம். அதுல நீ நான் அக்ஷயா.. இது போதும். எனக்கு நீ மட்டும் போதும்னு சொன்னியே ஆதினி.
 
  இப்ப அதை தானே தயாரா கொண்டு வந்து இருக்கேன். நாம நமக்கான உலகம். அந்த உலகத்துல நீ ராணி. உன்னை ஒரு வார்த்தை காயப்படுத்த மாட்டாங்க. நீ சொல்வதை கேட்பாங்க.

உனக்குன்னு மரியாதை தருவாங்க. என்னோட தலைவியா நீ கீரிடம் சூடலாம்." என்று விவரிக்க, மறுப்பாய் தலையசைத்தாள்‌.

  "அக்ஷயா... நீ அம்மாவிடம் வா‌. உன்னை அயன் கொன்னுடுவான். உன்னோட அப்பா பிரதாப்பை சாகடிச்சதே அயனும் அவன் ஆட்களும் தான்.
  இங்க வா" என்று கையை நீட்டி அழைக்க, குழந்தையோ அயனை கண்டு "அயலாப்பா" என்று என்ன செய்வது? என்பதை கேட்டாள்.

  அயனோ செல்வத்தை பார்த்து ஏதேதோ கூறிட, அவர் அக்ஷயாவை நெருங்கினார்.

  "அக்ஷயா குட்டி...‌ நீங்க செல்வம் அங்கிளோட, மாடில போய் இருங்க. நான் அம்மாவை நம்ம உலக்ததுக்கு போக சம்மதிக்க வச்சி அழைச்சிட்டு வர்றேன்." என்று அனுப்பினான்.

"ஓகே அயலப்பா..  அம்மா... அயலப்பா சொல்லறதை கேளுங்க" என்று கூறி செல்வத்தின் கையை பிடித்து நடந்தாள்.

  ஆதினிக்கு திகிலாக இருந்தது. அக்ஷயாவை தடுக்க செல்ல, அயனோ முன்னால் வந்து மறைத்தான்.

"உட்காரு... நாம போசலாம்‌" என்றான்.‌

  அக்ஷயாவையும் அயனையும் பார்த்து மிரண்டவளாக நின்றாள்.
  குழந்தை வரைந்த ஓவியத்தை முன்னரே பார்த்திருந்தால் கூட தனக்கு இந்த விஷயம் லேசாக சந்தேகத்தை கிளப்பியிருக்கும். குழந்தை எது காட்டினாலும் சற்று கவனத்துடன் தான் ஆராய வேண்டுமோ என்று முதல் முறை அனுபவ பூர்வமாக உணர்ந்தாள்‌. அத்துடன் குழந்தையை அயனுடன் பழக விட்டது தவறாகவும் தோன்றியது.

    "அக்ஷயா.. போகாத. நில்லு அக்ஷயா." என்று மாடியை பார்த்து கத்த, செல்வமோ அக்ஷயாவை கீழே பார்க்க விடாமல் அழைத்து சென்றார்.‌

"உட்காரு ஆதினி. நீ இப்ப கன்சீவா இருக்க. அடிக்கடி நினைவுப்படுத்தணுமா? ஒரு உயிருக்கு இரண்டு உயிரை சுமந்தவளா நிற்கற. இந்த அதிர்ச்சியான விஷயம் கேட்டு தள்ளாடி மயங்கினா தரையில சரிந்திடுவ. பிறகு உனக்கு தான் ஆபத்து." என்றான்.‌

  ஆதினியோ தன் குழந்தை அக்ஷயாவை வைத்து இவன் காய் நகர்த்தும் போது, தான் இவனது குழந்தையை வைத்து மிரட்டினால் அடிபணிவானா என்று யோசித்தவள், "அயன்... இப்ப என்னையும் அக்ஷயாவையும் நீ விட்டு போகலை. உன்னோட குழந்தைகள்.. இரண்டு என் வயிற்றுல வளருது. அதை அழிச்சிடுவேன்." என்று மிரட்டினாள்.

  வாய் வார்த்தை தான் அப்படி கூறியதே தவிர, அயனின் காதல் அம்பால் மலர்ந்து, தன் கருவில் உருவான கருவை அழிக்க மனமின்றி மிரட்டினாள்.

   எந்த உலகத்து குழந்தையாக இருந்தால் என்ன? அது தனது வயிற்றில் குழந்தையாக படைக்கப்பெற்றது என்ற இரக்கம் ஆதினிக்குள் உண்டானது. ஆனாலும் அயனை மிரட்ட வேறு எதுவும் அவளுக்கு தெரியவில்லை‌.

  அயனோ அவ்விடம் அதிர நகைத்தவன், "ஆதினி... உனக்கு புரிய மாட்டேங்குது. 

  நான் வேற உலகத்து மனிதன். வேற்றுகிரகவாசி. நமக்குள்ள ஜெனிடிக் மேட்ச் இருக்கு. ஆனாலும் நான் வேற... நான் மனிதன் இல்லை ஆதினி...
உங்க உயிரியல் வகைப்பாட்டில் நான் வேறு ஸ்பீஷிஸ். அப்படியிருக்க... மனித குழந்தை மாதிரி கலைச்சிட முடியுமா?

  டாக்டரிடமே போகாம நான் தந்த மாத்நிரையை நீ நாள் தவறாம எடுத்திருக்க.

  அதோட பேக்ட் சொல்லணும்னா... அக்ஷயாவுக்கு கிப்ட் வாங்க போனப்ப கீழே விழுந்து ஸ்கிட் ஆகி ஹாஸ்பிடல் போனியே... அன்னிக்கு பச்சை கலர்ல ஜெல் இருந்ததே... அதென்ன... உன்னை ஸ்கேன் செய்தப்ப இருந்த ஜெல்லா? நோ ஆதினி... அது என் குழந்தையோட ரத்தம்.

  அன்னிக்கு லேசா.. என்னை பயமுறுத்திட்ட. ஆனா நான் அன்னிக்கு அதை சரிசெய்ய முயன்றப்ப, அந்த ரத்தம் என்ன சொல்லுச்சு தெரியுமா... கவலைப்படாதிங்க.. நான் ஹெல்தியா வளர்ந்துட்டேன். இனி என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கான்பிடன்ஸ் தந்துடுச்சு.

   நீ என்னை உன் வயிற்றுல இருக்கற குழந்தைகளை வச்சி மிரட்ட முடியாது ஆதினி.

   நான் அக்ஷயாவை வச்சி மிரட்டினேனா? பட் நீ ஏன் ஆதினி மனிதினியா இருக்க? ஒ மை காட்... இதான் மனுஷனோட புத்தியா?

நான் தீவிபத்து நடந்தப்ப என் கூட வந்தவங்க தெரியாம தான் அங்க விபத்து ஏற்பட்டது,தீயில துடிச்சதை பார்த்தேன். அதனால தான் கொன்றாங்களே தவிர... தானா சாகடிக்க திட்டமிடலை. பாதி உயிர் போனப்பிறகு இருக்கற மீதியை வலியில்லாம சாக வச்சி ஆத்மா சாந்தியடைய செய்தாங்க. அதுக்கே நான் ஒரு தலைவனா அப்ஜெக்ஷன் செய்தேன்.

நீ என்னடான்னா... ஒரு யூனிவெர்ஸோட தலைவனின் குழந்தையை சுமந்துட்டு, அதை கலைக்க பிளான் போடற. அழிக்க திட்டமிடற. ரொம்ப தப்பு ஆதினி.

  அதோட... என் ஸ்பீஷிஸ் மூளை.. பவர்... என்ன சொல்லுது தெரியுமா... நீ வார்த்தைக்கு தான் அந்த குழந்தையை வச்சி மிரட்டுற. அதர்வைஸ்.. நீ அந்த குழந்தைகளை உன் குழந்தைகள் என்ற கண்ணோட்டத்தில பார்க்கற. குழந்தைகள் என்று இல்லை.. என் மனித முகத்தை பார்த்த கூட உனக்கு என்னை பார்த்தா கோபம் இல்லை. காதல் தான் வருது.

உனக்கு தடையா இருப்பது, என் ஸ்பீஷிஸ் பேஸ், தோற்றம், உலகம். இதான்.

  பயப்படாம என் உலகத்துக்கு வா ஆதினி. நான் உன்னை அப்படி பார்த்துப்பேன்.

  ஆனா..‌ நீ வரமறுத்தா.. அக்ஷயாவை மட்டும் கூட்டிட்டு போயிடுவேன். ஏன்னா அவ என் குழந்தையா நான் வளர்த்துப்பேன். அவளுக்கு அயலா போதும். அயலப்பா சொல்வது வேதம்" என்று கூறினான் அயன்.

அயனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கோபமாக வந்து விழவில்லை, திமிராக இல்லை, மிரட்டவில்லை ஆனால் மறைமுகமாக அவளை இக்கட்டுக்குள் தான் தள்ளுகின்றது.

    மகளை வேறு செல்வத்திடம் அனுப்பியிருக்க, இங்கே அயன் வேறு தன்‌முன் பாந்தமாக அமர்ந்திருக்க, முடிவெடுக்க இயலாத சூழலில், யாரின் உதவியும் இல்லாத கையறு நிலையில் வீற்றிருந்தாள்.

அப்பொழுது தான் அனிதாவின் எண்ணம் தோன்றியது. போனில் ஏதாவது தகவல் தரலாமா? என்று போனை இறுக பற்றினாள்.

  அயனோ அவளது சிந்தையில் வண்டு போல புகுந்து பார்த்து, அவள் எண்ணத்தை அறிந்தவனோ, "அய்யோ ஆதினி... அனிதாவிடம் உதவி கேட்பது எல்லாம் வேஸ்டு. ஆல்ரெடி ஊர் முழுக்க நாம பாப்பா பிறந்த நாளுக்கு பிறகு அயன் சொந்த ஊருக்கு போய் பிசினஸ் பார்ப்பதா நீயே தண்டோரா போட்டாச்சு.
   கதிர் எல்லாம் அனிதாவோட கதையை நம்புவான்னு நினைக்கற? அப்படியே அனிதா மட்டும் உன் நலனை தேடி இங்க வருவானு நினைக்கறியா? ஆனா அனிதா உன்னை தேடி வருவா. ஆனா இங்கயில்லை‌ அவளுக்கு கல்யாணமாகி, நம்ம உலகத்துக்கு தான் வருவா. ஏன்னா..‌ அவ மேரேஜ் பண்ணற பையன் எங்க ஸ்பீஷிஸ் உருவத்துல இருந்து மாறிய மனிதன். ஆப்டர் மேரேஜ் அங்க தான் வருவா. ஏன்னா..‌ அவளும் பொண்ணாச்சே. பிரதாப் இறப்புக்கு வந்தப்ப அணிதவுக்கு கல்யாணம் ஆகலை என்றதால அங்க ஒரு மிஷன் போட்டாச்சு. எங்க இனத்தை விருத்தி செய்ய வருவா. அவ வர்றது பெரிசில்லை ஆதினி.

என் உலகத்துக்கு நான் ராஜா. நீ ராணி. ஏற்கனவே ராணி இல்லாம நான் அங்க வரமாட்டேன்னு தான் காலம் கடத்தியது. காலம் கடத்தினா கூட நேரா இனத்தை விருத்தி செய்து, என் குழந்தைகளை அங்க பிறக்கற நேரம் சரியா அழைச்சிட்டு வருவேன்னு என் அம்மாவிடம் பிராமிஸ் பண்ணிருக்கேன்.

   அதனால தான் நான் டிலே ஆனாலும், என்னோட தேர்வு ஆய்வு சக்சஸ் என்றதில் இங்க சுத்திட்டு இருக்கேன். இல்லைன்னா... எனக்கு என்ன இந்த உலகத்துல வாழ இனிக்குமா?

  எனக்கு என்‌ உலகம் தான் முக்கியம். என் தலைமை பண்பு என் உலகத்துல இனவிருத்தி அழியாம பாதுக்காத்து கூட்டத்தை பெரிதுப்படுத்தணும்.
 
   நீ வரலைன்னா அக்ஷயாவுக்கு பருவம் வந்ததும் அவளை எங்க ஸ்பீஷிஸ்ஸுக்கு கட்டி தருவேன். அதனால நீ வந்தாலும் வராட்டினாலும் என் ஆய்வு வெற்றி. ஆனா...‌ நீ வந்தா தான் எனக்கு முழு வெற்றி. ஆதினிக்கு எப்படி வசதி?" என்று அபிப்ராயம் கேட்டான்‌

-தொடரும்.

https://onlinetamilnovels.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be-19/


 
Posted : June 16, 2026 3:17 pm
(@crvs2797)
Posts: 103
Estimable Member
 

அடப்பாவி ..! கிட்டத்தட்ட ப்ளாக்மெயில் பண்றானோ...?

😔😔😔

CRVS (or) CRVS 2797


 
Posted : June 17, 2026 9:13 am
(@dharsinipriya)
Posts: 59
Trusted Member
 

Eppo adhini enna mudivu yedupa evan enna eppdi meraturaan😐 aga motham ellamey plan🥺


 
Posted : July 6, 2026 4:32 pm

Scroll to Top