Forum

சிவப்பு தண்டு கீரை ...
 
Notifications
Clear all

சிவப்பு தண்டு கீரை பொரியல்

1 Posts
1 Users
1 Reactions
31 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#168]

சிவப்பு தண்டு கீரை பொரியல் செய்வது எப்படி? இன்னிக்கு நாம அதை பார்ப்போம்.

  தண்டு கீரை பச்சையாகவும் இருக்கும். சிலது சிவப்பு தண்டு கீரையும் கடைகளில் கிடைக்கும்‌. கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும் வாங்கியது.

தேவையான பொருட்கள்

சிவப்பு தண்டு கீரை – 1 கட்டு (அகலமான பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்ளி சுத்தம் செய்து நன்றாக கழுவி பிகு பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 2 பல்

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

அதன் பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். நறுக்கிய சிவப்பு தண்டு கீரையை தண்ணீர் வடித்து சேர்த்து நன்றாக வேக வைக்கவும். 

தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து 5–7 நிமிடங்கள் வேகவிடும் பொழுது கூடவே பூண்டை லேசா இரண்டு இரண்டு துண்டாக வெட்டி கீரையுடன் சேர்க்க வேண்டும். 

தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கீரை நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து அதிகமான நீர் இருந்தால் வற்றும் வரை கிளறிவிடவும். 

இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.

அவ்வளவு தான் பிரெண்ட்ஸ்.


 
Posted : July 13, 2026 11:11 am
Kalidevi reacted

Scroll to Top