உருளைகிழக்கு பொரியல் செய்வது எப்படி?
நிறைய பேருக்கு இந்த டிஷ் தெரிந்திருக்கலாம். ஆனாலும் புதுசா கத்துக்க நினைப்போருக்கான வழிமுறை.
உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு வைத்து செய்யப்படும் பெரும்பாலான உணவுகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக எப்பொழுதும் இருக்கும்னு சொன்னா அது மிகையே இல்லைங்க.
உருளைக்கிழங்கை, சைடு டிஷ்ஷாக பருப்பு சாதம், சாம்பார், ரச சாதம், தயிர் சாதம் என எந்த உணவுடன் சேர்த்தும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
செய்வதற்கு தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 4
பெரிய வெங்காயம்-1 (சிறிய வெங்காயம் என்றால் கைப்பிடி அளவு)
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – ½ டீஸ்பூன் (விருப்பப்பட்டால் ம்டடுமே)
மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன் (விருப்பப்பட்டால் மட்டுமே)
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம்-1 ஸ்பூன்
பூண்டு-2 (நறுக்கியோ அல்லது இடித்தோ)
பெருங்காய தூள்- (சிறிதளவு)
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதை சமஅளவில் சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், சேர்த்து பொன்நிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு கருவேப்பிலை பொட்டு வாசனை வரவும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து உடனே நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
தேவையான அளவு பெருங்காயம், உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும். கூடவே பூண்டின் பல்லை நீக்கி நறுக்கியோ இடித்தோ சேர்த்து வதக்கவும்.
மிதமான தீயில் 8–10 நிமிடங்கள் பொன்னிறமாக வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக சீரகம் தூவி, விருப்பப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் மல்லித்தழை கண்டிப்பாக தூவி கிளறி இறக்கவும்.
குறிப்பு: ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்.
எளிமையாகவும், குறைந்த நேரத்திலும் செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பொரியல் உங்கள் வீட்டில் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
- 25 Forums
- 215 Topics
- 758 Posts
- 3 Online
- 329 Members
