Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-32

12 Posts
11 Users
5 Reactions
182 Views
(@praveena-thangaraj)
Posts: 264
Member Admin
Topic starter
 
[#295]

அத்தியாயம்-32

    யதுநந்தன் ராயன் மற்றும் தியாவை சோபாவில் கிடத்திவிட்டு  மெதுவாக எழுந்தான். 

  "சரி... காபி டீ ஏதாவது போட தெரியுமா? இல்லை.. நான் போட்டு தரவா?" என்று கேட்க, "யதுசார்.. எனக்கு சமையல் எதுவும் தெரியாது. சத்ரியன் பங்களாவில் நிறைய சர்வெண்ட்ஸ் இருப்பாங்க. அதோட, சமைச்சதை டேஸ்ட் அண்ட் டெஸ்ட் பண்ணி பாடிகார்ட் ஓகே சொல்லிய பிறகு தான் சத்ரியா எனக்கு சாப்பாட்டையே தருவான்‌" என்று கூற, யதுநந்தன் சிரித்தபடி சமையலறைக்குச் சென்றான்.

சில நிமிடங்களில் காபியின் மணம் வீடு முழுவதும் பரவியது. ஷ்ரத்தாவும் குளித்து முடித்து வெளியே வந்தாள்.

"காபி... டீ... எது வேணுமோ எடுத்துக்கோ ஷ்ரத்தா. ஆ... டேஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ணி நான் குடிச்சிட்டேன். யூ மீன் பயப்படாம குடி." என்றான். அவள் சங்கடமாக டீயை எடுத்துக் கொண்டாள். 

டீ டம்ளரை அவள் கையில் கொடுத்தவன், தன்னுடைய கப்பிலிருந்து முதலில் ஒரு வாய் குடித்தான்.

   அதற்குள் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

   "இன்னைக்கு நான் கோர்ட்டுக்கு வர முடியாது. பாயிண்ட்ஸ் எல்லாம் மெயில்ல அனுப்பியிருக்கேன். சிவராமன் சார் ஆஜராகட்டும். நான் அங்க வந்தப்பிறகு ஜாயின் பண்ணிக்கறேன்."

என்று பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

போனை வைத்ததும் "இங்க இருக்கற வரை எங்கயும் வாதாட முடியாது‌ அதான்.." என்றான்.

"என்னால உங்க வேலையும் பாதிக்குது யதுசார்‌" என்றாள்.

"நீயும் குழந்தைகளும் தனியா இருக்க வேண்டாம். தியா சென்னை வர மத்த பார்மாலிடிஸ் பார்ப்போம்." என்று ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை பார்த்தான்.

"உங்க மூணு பேரோட சேஃப்டி முக்கியம்." அவனுடைய பதில் ஷ்ரத்தாவை அமைதியாக்கியது. அவளுக்கும் இந்த இரு குழந்தைகளின் சேப்டி முக்கியம் தான்‌.

ராயனும் தியாவும் டேபிளைச் சுற்றி ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். பாலை ஆற்றி வைக்கவும், "பிடிச்சிட்டேன்." என்று ராயன் சிரித்தபடி தியாவைத் துரத்த... தியா கிலுக்கிக் சிரித்துக் கொண்டு ஷ்ரத்தாவின் பின்னால் ஒளிந்தாள்.

"அம்மா..." என்று அவளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

அந்த வார்த்தை... இப்போது ஷ்ரத்தாவின் மனதை வலிக்க வைக்கவில்லை. மாறாக அவள் அறியாமலே தியாவின் தலைமுடியை வருடினாள. அதை பார்த்த யதுநந்தன் எதுவும் பேசவில்லை.

ஆனால் அவனுக்குள் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஹரிணி தன் குழந்தையை ஒப்படைத்தது வீணாகவில்லை.

அந்தச் சிறுமி தியா

ஏற்கனவே ஷ்ரத்தாவின் இதயத்திற்குள் தன் இடத்தை பிடிக்க ஆரம்பித்துவிட்டாளென புரிந்ததுக் கொண்டான்.‌

  இங்கே இப்படியிருக்க அங்கே ருத்ரன் 'அவனையும் காணோம், அவளையும் காணோம், என்று கேட்க, யதுநந்தனின் கூட வேலை செய்யும் வக்கீலோ, இறந்துப்போன சீனியர் திவாகர் சாரோட பொண்ணுக்கு ஏதோ உதவினு போனார்' என்று கேள்விப்பட்டான்.‌

உதவியா..‌ ஷ்ரத்தாவுக்கு என்ன உதவி தேவைப்படும்? என்று தீபாவிடம் வந்து நின்றான்.‌

  தீபாவோ, "ஏன் சார்... எங்க மேடத்தையே சுத்தி சுத்தி வர்றிங்களே அசிங்கமாயில்லை. உங்க டிபார்ட்மெண்ட்ல முடிக்கப்படாத கேஸ் எத்தனையோ இருக்கும் அதை பார்க்கலாமே" என்று இகழ்ந்தாள்.‌

"அதையும் தான் பார்க்கறோம். ரொம்ப யோசிக்காம ஷ்ரத்தா எங்கனு சொல்லறியா?" என்றான்

  நந்திதாவோ "ஹரிணி சிங்கப்பூர்ல இறந்துட்டாங்க. அந்த காரணத்துக்காக போயிருக்காங்க. என்ன பிரச்சனை சார். எல்லாமே உங்களிடம் சொல்லணுமா?" என்று காய்ந்தாள். 

"ஹரிணி இறந்துட்டாளா?" என்று அதிர, "ம்ம்." என்று தீபா நந்திதா கதவை அடைத்தனர்.‌

  ருத்ரன் நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். 

  அங்கே கீர்த்தனாவிடம் ஷ்ரத்தா யதுநந்தன் சிங்கப்பூருக்கு சென்றதை கூறினான்.‌

  கீர்த்தனாவும் ஏன் எதுக்கு என்று காரணம் கேட்க, "அந்த பொண்ணு ஹரிணி இறந்துட்டாளாம் அம்மா." என்றான்.‌

"என்னடா இது இந்த ஷ்ரத்தாவுக்கு நெருங்கிய உறவும் நட்பும் இறந்துட்டே வர்றாங்க." என்று கேட்டார்.

"தெரியலை.. இங்க வந்தா தான் கேட்கணும். இல்லைன்னா யதுநந்தனுக்கு போன் பண்ணி கேட்கணும். இப்ப கேட்டேன் ஓவரா சீன் போடுவான். பச்." என்று சலித்தான். 

  கீர்த்தனாவோ "பேசாம அந்த பொண்ணு ஷ்ரத்தா அந்த பையனே கல்யாணம் செய்யறது பெஸ்ட். அவங்க அப்பா பார்த்து வச்சவன். அவனும் தனிகட்டை. இவளும் இப்ப தனிகட்டை. சத்ரியன் பையனை அவன் பையனா வளர்ப்பான். இப்ப ஷ்ரத்தா மறுத்தாலும் பின்னாடி நேசிப்பா." என்று பேச பேச ருத்ரன் கோபமானான்.‌

"இப்ப என்ன... நம்ம வீட்ல அவ வாழ வந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்றான்.‌

"டேய்.. நீ ஒரு பொண்ணை காதலிக்கறேன்னு வந்து யாரை வேண்டுமின்னாலும் நிறுத்து. உங்கப்பாவை கொன்றவனோட மனைவியை நிறுத்தினா எப்படிடா.. ஏற்க முடியும்? நான் வாழறது கொஞ்ச நாள் என்றாலும் நீ சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறேன். உனக்கு ஒரு உறுத்தல்

அவளோட எப்ப வாழ்வ? உங்கப்பா கொன்றவனோட பையனுக்கு நல்ல தகப்பனா இருப்பியா. முட்டாளாட்டும் பேசாத ருத்ரா. 

  நீ இனி பிடிவாதம் பிடிக்காம நான் பார்க்கற பொண்ணுக்கு தாலி கட்டு. நீ பொண்ணு பார்க்க கூட வேண்டாம். நானே பார்த்துக்கறேன். அதோட நீ சொல்லறதுக்கு பதிலா என் பையனுக்கா கல்யாணமே வேப்பங்காயா கசக்குதாம். நானே சொல்லிடறேன். 

கீர்த்தனா கூறிய வார்த்தைகள் நீ தாலி கட்டு. இல்லைன்னு வை... நான் செத்துடுவேன்" என்று மிரட்டினார்.‌

ருத்ரனுக்கு அது எரிச்சலை ஏற்படுத்த, "நிறுத்துங்கம்மா... என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி இனிமேல் கட்டாயப்படுத்தாதீங்க." என்றார். 

"ஏன்டா? வயசு போயிட்டே இருக்கு." என்றார்.‌

"வயசு போனா போகட்டும். நான் என்ன சாதிச்சிருக்கேன்? அப்பாவை கொன்றவனை பிடிக்க நினைச்சேன். அவன் செத்துட்டான்னு சொல்றாங்க. வேலையில ஒரு முடிவுக்கும் வர முடியலை. காதல்னு நினைச்சதும் தோல்விதான். இப்ப எனக்கு எந்த கல்யாண பேச்சும் வேண்டாம்."

கீர்த்தனா அவனைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

"அந்த வக்கீல் தம்பியும் ஷ்ரத்தாவை விரும்புறாரு. நீயும் விரும்புற. ஆனா ஷ்ரத்தா யாரை தேர்ந்தெடுப்பாளோ தெரியல. அதுல நீ ஏன் உன்னை இப்படி தொலைச்சிக்கற?"

ருத்ரன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"என்னை கொஞ்ச நாள் நிம்மதியா விடுங்க."

அவன் பைக் சாவியையும் கழட்டிய சட்டையை எடுத்துக் கொண்டு அணிந்து வெளியே நடந்தான். வாசல் வரை வந்த கீர்த்தனா,

"இங்க பாருடா... நீ வரலன்னாலும், உன்னைப் பற்றி சொல்லி நானே பெண் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்."

என்றார்.

ருத்ரன் திரும்பியே பார்க்கவில்லை "பார்த்துக்கோங்க." என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

"அப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கணும்னு எதிர்பார்க்காதீங்க. செத்துடுவேன்னு மிரட்டினா அடுத்து நானும் சாக தயார்." என்று கூறிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டான்.

சாலையில் பைக் பறந்தது. அவன் மனம் மட்டும் ஒரே இடத்தில் நின்றிருந்தது.

ஷ்ரத்தா அவள் இப்போது யதுநந்தனுடன் சிங்கப்பூரில் இருக்கிறாள். 'இவன் வேற கூடவே போயிருக்கான்...' என்ற எண்ணமே அவனுக்கு நிம்மதியை கெடுத்தது.

யதுநந்தன் பேசும் விதம். புரிந்து நடந்து கொள்ளும் குணம். ஷ்ரத்தாவுக்கு ஆறுதலாக இருப்பது, இவை எல்லாமே ருத்ரனின் மனதில் பொறாமையை விதைத்தன.

'அங்கே அவளோட ஒவ்வொரு நாளும் பேசிப் பேசிக் காதலை வளர்த்துட்டா...?' என்று நினைத்தவுடன் அவன் கை தானாகவே ஆக்சிலரேட்டரை முறுக்கினது. பைக் வேகம் இன்னும் அதிகரித்தது.

'இல்ல... ஷ்ரத்தா அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏத்துக்க மாட்டா.' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்த நொடியே... 'சத்ரியன் இல்லன்னு நம்புறாங்க. அவளுக்கு ஒரு தோள் தேவைப்படுற நேரம் இது. அந்த இடத்தை யதுநந்தன் பிடிச்சிட்டான்னா...?' என்ற எண்ணம் மீண்டும் அவனை துளைத்தது.

  ருத்ரன் பல்லைக் கடித்தான்.

"ச்சே." என்று ஹெல்மெட்டுக்குள் முணுமுணுத்தான்.

அவனுக்கே புரியவில்லை.

இது காதலா... பொறாமையா...

இல்ல... தோல்வியை ஏற்க முடியாத பிடிவாதமா...? என்று.

---

இங்கு ஷ்ரத்தா தியாவிற்கென உடையை பார்த்து பார்த்து வாங்கினாள். 

யதுநந்தன் தான் ஒரு பாதுகாவலனாக இருந்து சுற்றிமுற்றி பார்த்தான். நேற்று போல யாரேனும் வந்து தூரத்திலிருந்தே துப்பாக்கியால் சுட்டு முடித்தால் இவனால் தாங்க இயலாது. அதனால் ஷ்ரத்தா அளவிற்கு அதிகமாகவே சுற்றி வந்தான்.‌

  "இரண்டு மூன்று முறை ஷ்ரத்தா மீதே மோதக்கூட வந்தான்.‌ "சாரி ஷ்ரத்தா... ஒரு பாதுகாப்புக்கு சுத்தினேன். தெரியாம தான் மோதிட்டேன்" என்று மன்னிப்பு கூட கேட்டான். 

  "பரவாயில்லை யதுசார். உங்க மேல எனக்கு தப்பான அபிப்ராயம் வந்ததில்லை." என்று கூறினாள்.‌

"இல்லை... ருத்ரன் ரொம்ப டார்ச்சர் பண்ணின‌ மாதிரி தெரியுது. அது போல நினைச்சிடக்கூடாது." என்றான். ஷ்ரத்தா லேசாக புன்னகைத்தாள். 

யதுநந்தனோ இது தான் சமயம் என்பது போல "ருத்ரன் மேல என்ன அபிப்ராயம் இருக்குனு தெரிந்துக்கலாமா?" என்று கேட்டான்.‌

ஷ்ரத்தாவோ, "அடபோங்க சார்.. கிட்டதட்ட டார்ச்சர் அவரு. என் லைப்ல இப்படி லவ் டார்ச்சர் செய்து நான் யாரையும் பார்க்கலை. நான் ஸ்கூல் படிக்கறப்ப ஒரு பையன் என்னை விரும்பினான். லெட்டர் கொண்டு வந்து அப்பாவிடம் தந்து இரண்டு பேரும் வாசித்து சிரிச்சோம். அதுக்கு பிறகு நான் அப்பாவிடம் லெட்டர்ஸ் எல்லாம் காட்டிடாவேன்னு எவனும் லவ் லெட்டர் தந்து பின்னாடி சுத்தியது இல்லை. எல்லாம் தூரத்துல இருந்து சைட் அடிச்சிட்டு லவ் பண்ணறேன்னு மத்த பசங்களிடம் சொல்லிட்டு கட்ஸ் இல்லாம ஓடிடுவாங்க‌.‌

  காலேஜ்ல கூட, நிரோஷ் எல்லாமா மனசுல பெரிய இவன்னு சுத்தினான். இரண்டு முறை அதட்டவும் ஓடிட்டான். அதோட சத்ரியன் ஜானை போட்டு விளாசியதுல கொஞ்சம் நாள் என்‌பக்கம் கூட திரும்பலை. 

  சத்ரியன்‌ என் வாழ்க்கையில என்ட்ரி ஆனப்பிறகு யாரும் நெருங்கலை. அட்த சேம் ஞத்ரியன் லவ் பண்ணறேன்னு எல்லாம் டார்ச்சர் பண்ணியதில்லை. சத்ரியன் வேற டார்ச்சர்.. பண்ணினான்." என்று வெட்கப்பட்டு சிரித்தாள்.

  "நீங்க கூட கண்ணியமா தான் காதலை தெரிவிச்சிங்க. ஆனா இந்த ருத்ரன்.. காலேஜ் பையன் மாதிரி விடாம பேசறது பார்க்கறப்ப, என்னடா இது தப்பிக்க வழியேயில்லையானு அலற தோணுது. 

  இப்ப பரவாயில்லை... முன்ன எல்லாம் ருத்ரன் தூரத்திலிருந்து பார்த்தாளே உடம்பெல்லாம் படபடனு பயத்துல அடிச்சிக்கும். என்னவோ வெறுப்பு கோபம் வந்து ஆட்டி படைக்கும். 

  அதென்னவே இப்ப இரண்டு முறை அவரை அறைந்ததுல அவர் மேல இருந்த பயம் போயிடுச்சு. ஆனாலும் அவர் மேல எந்த அபிமானமும் வரலை‌. அதுக்கு காரணம் கீர்த்தனா ஆன்ட்டியா கூட இருக்கலாம்." என்றவள் குரல் குறைந்தது. 

"அவங்க கணவரை சத்ரியன் கொன்னுயிருக்கான். ஆனாலும் அவங்க எனக்கு வளையல் போட்டு வளைகாப்பு நடத்தி, என் குழந்தையை.. இல்லை... அவங்க கணவரை கொன்ற  சத்ரியன் குழந்தையை அவங்க தான் முதல்ல கையில வாங்கினாங்க. அதுக்கெல்லாம் தனி மனசு வேண்டும் சார். அப்படி பார்த்தா.. ருத்ரனுக்குள்ளயும் ஒரு நல்ல மனசு இருக்கும். ருத்ரன் நல்ல மனிதன் தான்" என்று பாராட்டினாள். 

யதுநந்தனுக்கு ருத்ரனை இப்படி பதிந்துள்ளான் என்று தவிப்புடன் பார்த்தான். 

"யதுசார்.. என்ன உறைந்து நின்னுட்டிங்க. ருத்ரனுக்கு எந்த இடத்திலும் நீங்களும் குறைச்சல் இல்லை சார். 

   நீங்க எவ்ளோ மென்மையானவர், பொறுமையானவர், எதையும் முதிர்ந்த நிலையில யோசித்தா முடிவெடுத்து, சாதகம் பாதகம் பார்த்து நடக்கறிங்க. உங்களிடம் ஒரு கைண்ட் ஆப் மெச்சூரிட்டி இருக்கு. இந்த நேரத்துல எது பேசணும். எது பேசக்கூடாதுனு அடுத்தவங்க மனநிலையை பார்த்து நடக்கறிங்க. சொல்லப்போனா... எங்கப்பாவுக்கு உங்களை பிடிச்சிருப்பதில் ஆச்சரியமேயில்லை." என்றாள். 

யதுநந்தன் மனமோ திவாகர் சாரை விடு ஷ்ரத்தா... 'உனக்கு என்னை பிடிச்சிருக்கா? எனக்கு அதான் முக்கியம்' என்று கேட்க நா எழுந்தது. ஆனால்

ராயன் தியா இருவரும் சற்று தள்ளி விளையாடியிருந்தவர் அருகே வரவும் நிதானித்துக் கொண்டான். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்‌    

 


 
Posted : August 11, 2026 7:17 am
(@subhakumar85)
Posts: 111
Estimable Member
 

Aaga motham answer vaangrathileye erukaanga


 
Posted : August 11, 2026 8:37 am
(@kothaihari)
Posts: 124
Estimable Member
 

ஆக மொத்தம் யாருமே அவளோட மனநிலை கேக்கறது இல்லை தன்னோட காதலுக்கு அவள் என்ன சொல்ல போறாகறந்து தான் முக்கியமா படுது


 
Posted : August 11, 2026 9:06 am
(@guna-sundari)
Posts: 137
Estimable Member
 

Yadhu alos waiting for sharadha acceptance. Omg. Sharadha what will do now? Very intresting sis


 
Posted : August 11, 2026 9:34 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Interesting sis 


 
Posted : August 11, 2026 9:59 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super very interesting sister


 
Posted : August 11, 2026 10:10 am
(@crvs2797)
Posts: 187
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 32)

இந்த ருத்ராவுக்கு வேற வேலையே இல்லை, இம்சை பண்ணாலும் ஒரேயடியா இம்சை பண்ணுறான், டார்ச்சர் பண்ணாலும் ஒரேயடியா லவ் டார்ச்சர் கொடுக்கிறான், பிடிவாதம் பிடிச்சாலும் அதிகமா பிடிவாதம் பிடிக்கிறான்.இவனுக்கு அந்த யதுநந்தனே மேல். அதுக்குன்னு ஷ்ரத்தா யதுநந்தனை கட்டிக்கணும்ன்னு சொல்ல மாட்டேன். அட்லீஸ்ட் அவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியாவது செய்யுறான், டீசன்ட்டாவும் நடந்துக்கிறான். இந்த ருத்ரா போலீஸா இருந்தாலும் பொறுக்கி மாதிரி டீல் பண்றான். சரியான பொறாமைக்குப் பிறந்தவன். பொறாமையிலயே பொசுங்கிப் போயிடுவான் போல. சோ..இவங்க ரெண்டுப் பேருமே ஷ்ரத்தாவுக்கு வேணாம், சத்ரியன் வந்துட்டாலே போதும். ஷ்ரத்தாவையும் அந்த ரெண்டு குழந்தைங்களையும் நல்லபடியா பார்த்துப்பான்.
வருவானா....? அவன் வருவானா ?
அவள் உடைந்து போன மனம்
ஒட்ட வைக்க அவன் வருவானா ?

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : August 11, 2026 10:51 am
(@crvs2797)
Posts: 187
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 32)

இந்த ருத்ராவுக்கு வேற வேலையே இல்லை, இம்சை பண்ணாலும் ஒரேயடியா இம்சை பண்ணுறான், டார்ச்சர் பண்ணாலும் ஒரேயடியா லவ் டார்ச்சர் கொடுக்கிறான், பிடிவாதம் பிடிச்சாலும் அதிகமா பிடிவாதம் பிடிக்கிறான்.இவனுக்கு அந்த யதுநந்தனே மேல். அதுக்குன்னு ஷ்ரத்தா யதுநந்தனை கட்டிக்கணும்ன்னு சொல்ல மாட்டேன். அட்லீஸ்ட் அவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியாவது செய்யுறான், டீசன்ட்டாவும் நடந்துக்கிறான். இந்த ருத்ரா போலீஸா இருந்தாலும் பொறுக்கி மாதிரி டீல் பண்றான். சரியான பொறாமைக்குப் பிறந்தவன். பொறாமையிலயே பொசுங்கிப் போயிடுவான் போல. சோ..இவங்க ரெண்டுப் பேருமே ஷ்ரத்தாவுக்கு வேணாம், சத்ரியன் வந்துட்டாலே போதும். ஷ்ரத்தாவையும் அந்த ரெண்டு குழந்தைங்களையும் நல்லபடியா பார்த்துப்பான்.
வருவானா....? அவன் வருவானா ?
அவள் உடைந்து போன மனம்
ஒட்ட வைக்க அவன் வருவானா ?

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : August 11, 2026 10:51 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ithu than time nu kekura paru yathu neeum . intha ruthran shardha va love panala etho oru attraction than avanuku poramai athigama iruku ithukellam oru mudivu epo varumo


 
Posted : August 11, 2026 11:04 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Shathriyan eppo varuvan?


 
Posted : August 11, 2026 11:07 am
(@priyarajan)
Posts: 20
Eminent Member
 

Nice going.... Chathriya varuvana matana.... Waiting for nxt epi 😍 


 
Posted : August 11, 2026 4:11 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Yadhu ku Shardha mela feelings irundhum atha vachi mattumae avaluku avan uthavi seiyurathu illa avanuku Shardha oda bathil therinchikanum na ra ennam irundhalum aval ah force panrathu torture pannurathu nu ethuvum seiyurathu illa aana indha rudhran soppa ivan oda adamant kum love torture um end yae illama poguthu 


 
Posted : August 11, 2026 4:23 pm

Scroll to Top