நயனமே நான் தானடி-1
அத்தியாயம்-1
'இளந்தளிர் நர்சரி' என்று பனியனில் எழுதிய ஒருவர் அந்த நர்சரி மூலமாக அழகழகான வண்ணப்பூக்களை பூங்கொத்தாக வடிவமைத்த பார்சலை டோர் டெலிவெரியாக ராஜ்குமார் வீடு தேடி கொண்டு வந்தார். அதை பணியாள் ஒருவர் வாங்கி, வீட்டில் நடுநாயகமாக இருக்கும், கண்ணாடி மேஜையில் வைத்துவிட்டு மாடிபடி வளைவை எட்டியெட்டி பார்த்தார்.
"எதுக்குய்யா பூங்கொத்து? யாருக்கு" என்று பணியாட்கள் கிசுகிசுக்க, பூங்கொத்தை கொண்டு வந்த ஆளும் வெளியேறிட, அந்த கண்ணாடி மேஜையை துடைப்பது போல வேலைக்கார பெண்மணி வசந்தி மெதுவாக பூங்கொத்தை அருகே வந்து அதனை கண்டாள்.
அதில் 'ஐ லவ் சோனாலி' என்ற பெயரை தாங்கிய வாழ்த்து அட்டை நடுநாயகமாகவும், 'வித் லவ் ராஜ்' என்ற சிறு அன்பளிப்பு அட்டையும் தொங்கியது.
வசந்தி மெதுவாக கிச்சனுக்கு வந்து, 'சோனாலின்னு ஒரு பொண்ணை தம்பி பிரெண்டுனு வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாரே.. அந்த பொண்ணு பெயர் போட்டு காதலிப்பதா எழுதியிருக்கு. நான் சொன்னேன்ல அந்த பொண்ணு தான் இந்த வீட்ல முதலாளியா வரப்போவுதுன்னு" என்று அனுமானம் சரியாக போவதை எண்ணி பெருமைப்பட்டார்.
''உம்கும் அந்த பொண்ணை தவிர முதலாளி தம்பி யாரையும் வீட்ல அழைச்சிட்டு வரலை. அதனால் இப்படி ஈஸியா சொல்லற" என்று ஈஸ்வரி என்ற வேலைக்காரியும் பதிலுக்கு கிசுகிசுத்தனர்.
"அப்படின்னாலும் நான் சொன்னது சரியா இருக்கா இல்லையா?'' என்று ஆனந்தப்பட்டாள் வசந்தி.
மாடிபடிவளைவில் வொயிட் ஷர்ட், அதில் மெல்லிய பூவேலைபாடு கொண்ட டிசைன், கருப்பு பேண்ட் என்று அணிந்து வாட்சை மடக்கி கட்டி, மாடி கைப்பிடி வளைவில் கை வைத்து, மற்றொரு கையை பேண்டில் ஒயிலாக திணித்து, நடந்து வந்தான் ராஜ்குமார்.
பெயருக்கு ஏற்றது போல ராஜாகுமாரன் தான். நல்ல உயரம், அதிக சதை போடாத தேகம், நிறமும் பெண்கள் விரும்பும் கோதுமை நிறம்.
உறவென்று கூற, அப்பா அம்மா இல்லை. கொடைக்கானல் பகுதியில் வெளியாட்கள் தங்குவதற்கான விடுதி நடத்தப்பட்டு அதில் தனியாக வருமானம் வந்து சேர்ந்தது, ராஜ்குமார் அந்த கணக்கு வழக்கை எல்லாம் மேற்பார்வைக்கு, தாய்மாமன் சசிகுமாரையே நியமித்திருந்தான். சசிகுமார் மாமா-அத்தை சந்திரா, அவர்களுக்கு திருமண வயதில் அழகான மகளும் உண்டு. அவள் பெயர் சஞ்சனா.
சசிகுமாருக்கு அக்கா மகனை மாப்பிள்ளையாகவே கண்டதால் சஞ்சனாவை ராஜ்குமார் மணப்பதில் பகல்கனவு கண்டார்.
அதனால் தான் லாட்ஜின் கணக்கு வழக்கு கூட தன்னிடம் ஒப்படைத்ததாக நினைத்து கொண்டார். உண்மையில் கொடைக்கானலில் சசிகுமார் இருக்கவும் அவர் பார்வையில் தந்தையின் இந்த லாட்ஜை மேற்பார்வையில் விட்டுவிட்டு ராஜ்குமார் இங்கே சின்னதாக பிஸினஸ் ஆரம்பிக்க நினைத்தான். இதுவரை நண்பர்களோடு செய்த பிசினஸ் ஓரளவு நல்லபடியாக செல்கின்றது. ஆனாலும் கொடைக்கானலில் வருவாய் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு வரும்.
சசிகுமார் மகள் சஞ்சனாவை மணந்தப்பின் இந்த பணியை முழுதாக தானே பார்க்க நேரிடும் என்று பொறுப்பாய் கவனித்தார். ஆனால் ராஜ்குமார் கல்லூரியில் சோனாலி என்றவளை நட்பு ரீதியாக பழகி, அப்பெண்ணிடம் இன்னமும் பழக்கம் தொடர, அது மனதில் காதலென்ற அடுத்த கட்டத்திற்கு சென்றது.
அதன் காரணமாக அப்பெண்ணிடம் காதலை உரைப்பதற்காக இதோ இந்த பூங்கொத்தை ஆர்டர் தந்து வரவழைத்து விட்டான் நாயகன். இன்று சோனாலியை சந்திக்கும் போது அவளிடம் இந்த பூங்கொத்தை தந்து, வாங்கி வைத்த வைர மோதிரத்தை சினிமா பாணியில் ஒற்றை கால் மடக்கி, 'வில் யூ மேரி மீ' என்று கேட்டிட முடிவெடுத்தான்.
சோனாலி இப்பொழுதே ராஜ்குமாரிடம் பழகுவதில் அவளும் காதலிப்பதை உணர, வைரமோதிரம் வாங்கியது பெரிதாக தெரியவில்லை. எப்படியும் காதலை ஏற்பாளென்ற நம்பிக்கை. இல்லாவிட்டால் ராஜ்குமாருடன், படத்திற்கும், இது போன்று தனிமையில் பேச, இதற்கு முன்னும் வந்திருப்பாளா? என்ற எண்ணம்.
இதையெல்லாம் நினைத்து, கண்ணாடி மேஜையில் பலவண்ண மலர்களை தன் விழியால் பார்த்து ரசித்து வருடி கொடுத்தான். காதலை சொல்ல ஆர்வமாய் இருந்தவன் பணியாள் தந்த பழச்சாற்றை மட்டும் பருகிவிட்டு, பூங்கொத்தை கையில் எடுத்தவன், அதை காரில் பின்னிருக்கையில் வைத்து, காதலை வெளிப்படுத்தும் ஆர்வத்தோடு சென்றான்.
சோனாலி சொன்ன இடத்தில், காரை விரைவுப்படுத்தினான்.
'ரெயின்போ மால்' முன்னே சோனாலி காத்திருந்தாள். ராஜ்குமார் வரவும், மானை போல துள்ளி வந்தவள், "ஹாய் ராஜ்." என்றாள்.
"யூ லுக் கார்ஜியஸ் டியர்" என்று கார் கதவை திறந்து அழைத்து பேசினான்.
"யூ டூ ஸ்மார்ட் மேன்" என்றவள், அவன் காரில் அமர்ந்து, "எங்க போறோம் ராஜ். ஏதோ பேசணும்னு சொன்ன?" என்று ஆசையாக கேட்டாள்.
ராஜ் அலைப்பேசியில் பேசிய விதமே ஏதோ அவளுக்கான செய்தியை கூறியது. ராஜ் தனக்கு பிரப்போஸ் செய்ய போகின்றான் என்று. அப்படியிருந்தும் அதை வெளிக்காட்டாமல் வந்தாள்.
''என்ன ராஜ் ஏதோ பேசணும்னு சொன்னிங்க. என்ன பேசணும்" என்று ஆரம்பித்தாள்.
சொல்லப் போனால் இப்பொழுதே 'சொல்லிவிடேன்' என்ற ஆவல்.
ராஜ்குமாரோ, "ஏய்... சோனாலி.. என்ன அவசரம்? சொல்லறேன்" என்று சிரித்தான்.
இங்கிருந்து கடற்கரை சென்று கடலை ஒட்டி பூங்கொத்து தந்து அல்லவா காதலை சொல்ல பேராவல்.
அதை காரிலேயே சொல்ல முடியுமா என்ன?
பின்னால் இருந்த மலரை பார்த்தும் பாராதது போல சோனாலி காட்டிக் கொண்டாள்.
கார் கடற்கரை சாலையில் புயலாய் விரைந்தது.
சோனாலி காரில் பாடலை இசைக்க விட்டு 'வைப்' செய்தபடி வரவும், ராஜ்குமாரோ, சோனாலியின் அழகை பருகினான்.
சோனாலி கல்லூரியில் அழகி போட்டியில் முதல் பரிசை வென்றவள். கல்லூரியில் அவளை சுற்றி வண்டுகளாக ஆண்கள் கூட்டம் அலைமோதும். அப்பொழுது எல்லாம் சோனாலி மீது ஆர்வம் எழுந்ததில்லை. கல்லூரி முடிந்து, இதோ இப்பொழுது மீண்டும் சந்திப்பு அமைந்தப்பின் ஆறு மாதமாக பழகவும், அழகை தாண்டி அன்பும் நேசத்தோடும் இருப்பவளை, நட்பில் பழக கவனித்தவன், தனக்குள் காதலாகி தன் துணையாக சோனாலி வந்தாலென்ன என்றளவு வந்துவிட்டாயிற்று.
கார் சில சிக்னலை கடக்க காத்திருக்கும் சமயம், கண் தெரியாத பெண்ணும், ஒரு கை இல்லாத ஆணும் யாசகம் கேட்டபடி கார் அருகே வந்து சேர்ந்தார்கள்.
ராஜ்குமார் இருந்த மகிழ்ச்சிக்கு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து பார்வையற்று பிச்சை எடுத்த பெண்ணின் தட்டில் போட்டுவிட்டான்.
அருகே ஒரு கையை இழந்தவரோ நன்றி நவில்ந்து பார்வையற்ற பெண்ணை வழிநடத்தி சென்றார்.
"பாவம் ராஜ். கண்ணு தெரியாம இது மாதிரி சிக்னல் பக்கம் வந்து பிச்சை எடுக்கறது ரிஸ்க் தான். பேசாம கோவில் வாசலில் அமர்ந்து சேஃப்பா இருக்கலாம்." என்று பின்னால் திரும்பி பார்வையிட்டு கூறினாள்.
"அவரவர் வசதி எப்படியோ. இப்பலாம் கோவிலுக்கு போற மக்கள் குறைவு சோனாலி" என்று கூறியவன் சாலையில் கவனமாய் வண்டியை செலுத்தினான்.
"அதுவும் சரிதான்" என்று சோனாலி ஆமோதிப்பாக கூற, பின்னால் திரும்பியதால் பூங்கொத்து கண்ணில்பட்டது போல ராஜ்குமாரை பார்வையிட, அவனுமே இனியும் மறைக்க முடியுமா என்ன? என்று விழித்தான்.
"யாருக்கு ராஜ் பூங்கொத்து?" என்று திரும்ப, இதற்கு மேல் கடற்கரை வரும் வரை பொறுமை இருக்குமா? என்ற சந்தேகம் பிறக்க, ஒரு கையால் பூங்கொத்தை எடுத்து, "கடற்கரைக்கு போயிட்டு, இதமான நிழலில், சாவகாசமாக உட்கார்ந்து இதை உன்னிடம் தந்து, என் மனதில் உள்ளதை பகிரணும்னு நினைச்சேன். ஆனா அந்த பார்வையற்ற பெண்ணால் திரும்பி பார்க்க இப்ப இங்க சொல்ல வேண்டியதா போச்சு." என்றான்.
"என்னிடம் என்ன சொல்லணும்?" என்று அறிந்தே வெட்கத்தோடு கேட்டாள் சோனாலி.
"நான் உன்னை காதலிக்கறேன் சோனாலி. பிரெண்ட்ஷிப்பா பழகினேன். ஒரு கட்டத்துல உன்னை என் வாழ்க்கை துணையா இருந்தா என்னனு தோன்றுது. நீ அந்தளவு என் மனதில், நான் இமேஜின் பண்ணியிருக்கற தேவதையோட மேட்ச் ஆகற. இயற்கையோட கடல் அலை முன்ன கால்மடக்கி சொல்ல ஆசைப்பட்டேன். பட்... இப்ப கார்ல சொல்லிட்டேன். வில் யூ மேரி மீ?" என்றான்.
சோனாலியோ முகமெல்லாம் மலர்ச்சியாக, "ராஜ்.. நீ மட்டும் இன்னிக்கு பிரப்போஸ் பண்ணலைன்னா... நானே இன்னிக்கு காதலை வெளிப்படுத்தியிருப்பேன். நானும் உன்னை விரும்பறேன் ராஜ்." என்று ராஜ்குமாரின் இதயத்தை குளிர்வித்தாள்.
தன் பேண்ட் பேக்கெட்டிலிருந்து வைர நகைப்பெட்டியை எடுத்தவன், அவளிடம் நீட்ட, அவள் வாங்கும் பொழுது வேகத்தடை வரவும் கார் லேசாக தூக்கி போட்டது.
அதனால் வைர மோதிரம் கீழே விழவும், இருவரும் முன்முறுவலோடு குனிந்து எடுத்தனர்.
ராஜ்குமார் ஓரளவு சாலையில் பார்வை பதித்தபடி தான் இருந்தான். ஆனால் வைர மோதிரம் விழவும் அனிச்சையாக குனிந்து எடுக்க, கார் தறிக்கெட்டு போனது.
அதேநேரம் ஒரு மருத்துவ வண்டி சில பல வேதியல் குழாய்களை ஏற்றியபடி முன்னே வரவும் ராஜ்குமார் வண்டியால் அதுவும் கட்டுப்பாட்டை இழக்க, அந்த வண்டி சரியாக ராஜ்குமாரின் வண்டியோடு உரசியபடி சென்றது.
அதீத வேகமோ அல்லது உரசலோ, வேதியல் ஆய்வு குழாய் வெடிக்க, அவ்விடம் பயங்கர சத்தம் எழுப்பியது.
மின்னலாய் தன்னருகே வந்த வண்டி ஒலி எழுப்பி, ஒளியை உருவாக்கி, வெடிக்க, ராஜ்குமார் அதை பார்த்தவாறு வண்டியை திருப்ப தவித்தான். ஆனால் வண்டி கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வண்டியுடன் மோதி உருண்டது.
"ராஜ்'' என்ற சோனாலி குரலும், "சோனாலி" என்ற ராஜ் குரலும் அவ்விடத்தை கலவரமாக்கி கார் கவிழ்ந்தது. ஏர்பேக் கார் விபத்து நிகழவும் இருவரின் முன் மோதிடாமல் தாங்கியது. நல்லவேளை சீட்பெல்ட் அணிந்திருக்க அவர்களை காரோடு பிணைத்துக் கொண்டே உருண்டது. பூங்கொத்து துவண்ட நாறாக உதிர்ந்திருக்க, வைரமேதிரமோ காருக்குள் எங்கோ விழுந்திருந்தது.
வேதியல் குழாய்களை ஏற்றி வந்த வண்டியும் கவிழ்ந்ததால் அவ்விடமே பரபரப்பாய் மாறியது. அங்கே உடனடியாக மக்களில் சிலர் மருத்துவமனைக்கு போன் செய்து விட்டனர். ஆம்புலன்ஸ் அதிவேகமாய் அவ்விடத்தை வந்து சேர்ந்தது.
சோனாலி ராஜ்குமார் இருவரையும் ஸ்டக்சரில் ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றார்கள். வேதியல் குழாய் வெடித்திருக்க, தீ கொழுந்துவிட்டு எரிய ஆளாளுக்கு நெருங்க அஞ்சினார்கள்.
கூடவே மற்றொரு வண்டியில் உள்ள ஆட்களையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்.
"சோனாலி.. சோனாலி" என்றவன் வார்த்தை அந்த நிலையிலும் உச்சரித்தபடி இருக்க, இருவருக்கும் அவசர சிகிச்சை பார்க்கப்பட்டது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
இனிய ஆயூதபூஜை மற்றும் சரஸ்வதி திருநாள் நல்வாழ்த்துக்கள் பிரெண்ட்ஸ்.
நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)
அச்சோ !முதல் அத்தியாயத்துலயே
சோனாலி, காதல், பூங்கொத்து, ப்ரோபோஸல் டைமண்ட் ரிங்ன்னு... வரிசையா லிஸ்ட் அவுட் பண்ணி கடைசியில எல்லாமே கானலா போயிடும் போலவே.
எப்படியும் இனி ராஜ்குமாருக்கு ஏத்த ராஜ்குமாரி சோனாலி கிடையாதுன்னு நல்லா தெரிஞ்சிடுச்சு. சஞ்சனாவும் கிடையாது, அப்படின்னா யாரு ?
அது சரி, கவர் ஸ்டோரி பிக்ல ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே ப்ளைண்ட் க்ளாஸ் போட்டிருக்காங்க, அப்படின்னா ராஜ்குமாருக்கு விபத்துல கண் போயிடுதோ ? ஹீரோயினும் ப்ளைண்ட் தான் தோணுது.
பிகாஸ், டைட்டிலே 'நயனமே நான் தானடி'ன்னு வெளிச்சம் போட்டு சொல்லுதே. அப்ப என்னோட கெஸ்ஸிங் கரெக்ட் தானே ?
😴😴😴
CRVS (or) CRVS2797
-
நயனமே நான் தானடி-4
1 day ago
-
நயனமே நான் தானடி-3
2 days ago
-
நயனமே நான் தானடி-2
3 days ago
- 26 Forums
- 379 Topics
- 1,924 Posts
- 0 Online
- 442 Members
