Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-23

5 Posts
5 Users
0 Reactions
27 Views
(@praveena-thangaraj)
Posts: 275
Member Admin
Topic starter
 
[#368]

அத்தியாயம்-23

சாரதி மெதுவாக "அப்பா... நான் காலேஜ் படிக்கறப்ப இறந்துட்டார்." என்றான்.‌ அவனது பார்வை இன்னும் அந்தப் புகைப்படத்தின் மீதே இருந்தது.

"நீங்க காலேஜ் படிச்சிங்களா?" லாவண்யாவின் குரலில் உடனே ஆர்வம் எட்டிப் பார்த்தது.

"என்ன படிச்சிங்க?" என்றவள் கேட்ட விதத்தில், சாரதியின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது. அதே நேரத்தில் தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற பயமும் இருந்தது. ஏனெனில் சாரிதியின் படிப்பை பற்றி இதுவரை லாவண்யா கேட்கவில்லை. 

சாரதி அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தான். "பி.காம். செகண்ட் இயர் வரைக்கும் நார்மலா கிளாஸ் போய் படிச்சேன். தேர்ட் இயர் மட்டும் அப்படி படிக்க முடியலை. எக்ஸாம் மட்டும் போனேன்."

"அப்போ... நீங்க பி.காம் முடிச்சிருக்கீங்களா?" என்று கேட்டாள். 

"ம்ம். நான் பி.காம் முடிச்சிருக்கேன் லாவண்யா." என்றவன் சாதாரணமாகச் சொல்லிவிட்டு அமைதியாக இருந்தான்.

ஆனால் லாவண்யாவின் முகத்தில் ஆச்சரியம் தெளிவாகத் தெரிந்தது.

"அப்ப ஏன் பஸ் கண்டக்டரா இருக்கிங்க? ஏதாவது ஜாப் தேடலாமே." அவள் அவசரப்பட்டு கேட்டதும் சாரதி அவளை கூர்ந்து பார்த்தான்.

அந்தப் பார்வையை உணர்ந்தவள் உடனே சற்றுத் தடுமாறினாள்.

"இல்லை... இத்தனை நாளா நீங்க டிகிரி முடிச்சவர்னு எனக்குத் தெரியாது. கண்டக்டர்னு தெரிந்ததால படிப்பை பற்றி கேட்கலை. டென்த் டூவெல்த் முடிச்சிங்கனு நினைச்சுட்டேன். நீங்க பி.காம் முடிச்சிருக்கீங்கன்னா வேற வேலை தேடலாமேன்னு நல்லதுக்குனு கேட்டேன்." என்று சாரதி தவறாக எண்ணக்கூடாதென அவசரமாக விளக்கினாள்.

சாரதி மெதுவாகச் சிரித்தான். "கண்டக்டர்." என்று அந்த வார்த்தையைச் சிறிது நேரம் மனதுக்குள் உருட்டிப் பார்த்தவன்,

"எங்கப்பா சண்முகம். கண்டெக்டரா பார்த்த வேலை லாவண்யா." என்றான்.

அவள் புரியாமல் பார்த்தாள். "அவரோட வேலையை, நான் என் ஆறுதலுக்காகப் பார்க்கறேன். மத்தபடி இந்த வேலை எனக்கு எங்கப்பாவோட கனெக்ட் ஆகுற மாதிரி ஒரு ஃபீல்." அவனது குரல் மெதுவாக மாறியது.

"எங்கப்பாவை... நான் காலேஜ் டேஸ்ல என்னோட முதல் எதிரியா பார்த்திருக்கேன்." அந்த வார்த்தை லாவண்யாவை அமைதியாக்கியது. சாரதி தன் நினைவுகளுக்குள் மூழ்கியபடி தொடர்ந்தான்.

"எல்லா பசங்களும் அவங்க அவங்க அப்பா இந்த வேலைல இருக்காரு, அந்த வேலைல இருக்காருன்னு பெருமையா சொல்லும்போது... நான் மட்டும் எங்கப்பா என்ன வேலை பார்க்கிறாருன்னு பெருமையா சொல்ல முடியாம தவிர்த்திருக்கேன்." அவன் உதட்டில் கசப்பான புன்னகை வந்தது.

"அம்மா, அப்பா... நாங்க மூணு பேர்தான். பெருசா குடும்பச் செலவு எதுவும் கிடையாது. அதனால என்னை நல்லா படிக்க வைக்கணும்னு அப்பா நிறைய கஷ்டப்பட்டார். ஆனா அந்த நேரத்துல எல்லாம் எங்கப்பாகிட்ட பைக் கேட்டுட்டே இருப்பேன். 

  காலேஜ்ல எல்லாரும் பைக்குல வருவாங்க. நானும் பைக்குல போகணும்னு ஆசை. 

  எங்கப்பா வாங்கித் தரல.?எங்கப்பா என்ன சொல்வார்னு தெரியுமா?" சாரதியின் குரலில் பழைய குரலைப் போலவே ஒரு மாற்றம் வந்தது.

"ஸ்கூலே இப்ப தான் முடிச்ச. அதுக்குள்ள பைக்கா? மீசை முளைச்ச உனக்கு அவசரம்...  பஸ்ல போடா!'ன்னு அதட்டுவார். அப்ப எல்லாம் அவர் பெரிய வில்லன்.." லாவண்யா சிரிக்க முயன்றாலும், அவனது முகத்தில் இருந்த நினைவின் வலியைப் பார்த்ததும் சிரிப்பு வரவில்லை.

"அவர் பஸ் கண்டக்டர். நான் யூஸ் பண்ணற சைக்கிள்ல தான் முன்ன போவார். அதனால அவருக்கு அது போதும்னு தோணியிருக்கும். எனக்கு இன்னும் வயசிருக்கு அதுகுள்ள கொஞ்சம் பணம் சேர்த்து வைக்க நினைச்சார்." சாரதி தலையைக் குனிந்தான்.

"நானும் அப்போ அப்பாவை புரிஞ்சுக்கல. படிக்கறப்ப காலேஜ்ல நான் பெரிய பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் எல்லாம்  கிடையாது லயா ஆவரேஜ் தான்.

   ஆனா பாடத்தை கவனிச்சா ஓரளவு நல்லா படிப்பேன். 

  கம்யூனிகேஷன் மட்டும் நல்லா இருக்கும். பிரெண்ட்ஸ் நிறைய இருந்தாங்க. அந்த வயசுல பொண்ணுங்ககிட்டயும் ஓரளவுக்கு பழக்கம் இருந்துச்சு."

லாவண்யா புருவத்தை உயர்த்தினாள்.

"அப்படியா?" என்றாள் மிதப்பாக. 

"ஆமா... இந்த சுருட்டை முடிக்கு பேன்ஸ் கூட உண்டு" என்றதும் அவன் சிரித்தான். லாவண்யா குறுகுறுவென பார்க்க, "சொல்லப்போனா... ‘சாரதி, இது புரியல. சொல்லித்தாடா’ன்னு லஞ்ச் டைம்ல என்னைத் தேடி வந்து பேசின பொண்ணுங்க கூட இருந்தாங்க." என்றதும் உதடு கோணித்து கதை கேட்டாள்.

லாவண்யாவின் குரலில் சிறிய பொறாமை கலந்திட. "அப்பறம் அப்பறம்" என்றாள்‌

அதை கவனித்த சாரதி சிரித்தான். "அப்போ நீ இல்லையே.." என்றான். 

"இப்ப நான் இருக்கேன்ல பொண்ணுங்க சாப்டரை கட் பண்ணிட்டு மேலே சொல்லுங்க." என்று அவள் உடனே கட்டளையிட்டு கூறிவிட்டு, தானே வெட்கப்பட்டாள்.

சாரதியின் சிரிப்பு இன்னும் பெரிதானது. தன்னையும் ஒருத்தி உரிமையாக அதட்டுகின்றாளே. "பார்டா" என்றவன் பிறகு மீண்டும் கடந்த காலத்துக்குள் சென்றான்.

"பைக் இருந்தா நானும் கெத்தா இருப்பேன்னு ஆசைப்பட்டிருக்கேன். ஆனா எங்கப்பா பைக் வாங்கித் தரவே இல்லை." அவன் கால்களைப் பார்த்தபடி பேசினான். "இப்ப நாம யூஸ் பண்ணற சைக்கிளை கூட எட்டி மிதிச்சுட்டு கோபமா கத்தி, அப்பாகிட்ட இன்டரக்ட்டா சண்டை போட்டிருக்கேன். அவர் மனசை காயப்படுத்தியிருக்கேன்.." லாவண்யாவின் முகத்தில் அந்தக் காட்சியை கற்பனை செய்து பார்த்தாள்‌. 

"அம்மாதான் நடுவுல அம்பயரா வருவாங்க." 

"அம்பயரா வா?" என்றாள்.

"ம்ம் பின்ன.. சண்டை வந்தா அப்பா கோபப்படுவார். நானும் கோபப்படுவேன். இரண்டு பேருக்கும் நடுவுல மாட்டறது அவங்க தானே. அதுக்கு முன்கூட்டியே நடுநிலையா இருந்து சண்டையை தணிச்சிட்டா பெட்டர்ல" என்று சிரித்தான்.

அவன் சிரித்தாலும், அடுத்த நொடியே அந்தச் சிரிப்பு மெல்ல மறைந்தது.

"ஒருமுறை பஸ்ட் இயர் முடியறப்ப, யாருக்காக காசை சேர்த்து வைக்கறீங்க? எனக்கு பைக் வாங்கித் தரக்கூடாதா?'ன்னு கூட அப்பாகிட்ட பெருசா  கத்திருக்கேன். ஏன்... கோச்சிக்கிட்டு ஒரு நாள் பிரெண்ட் வீட்ல தங்கிட்டேன்." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் ம்கூம்... கோபம் வருமோ என்ற எண்ணம் ஓடியது.

"அப்போ எல்லாம் அம்மா சமாதானப்படுத்துவாங்க. டேய்... உன் கல்யாணத்துக்கும், உன் மேல்படிப்புக்கும் சேர்த்து வைக்கறாருடா’ன்னு. எனக்கு அப்பவும் கோபம் தான் வரும்.

அப்பா சமாதானம் எல்லாம் பண்ண மாட்டார். எதுவும் சொல்லாம போயிடுவார்." சாரதி பேசிக்கொண்டிருக்க  லாவண்யா விரல் சாரதி விரலோடு ஒன்றோடொன்று உரசியது.

அவன் வார்த்தையை விழுங்கிக் கொண்டான்.

"நான் செத்த பிறகு எல்லா பணத்தையும் யூஸ் பண்ணிக்க'ன்னு அப்பா கோபத்துல கூட சொன்னார்."

அந்த வார்த்தையைச் சொன்னதும் அவனது குரல் உடைந்து போனது. லாவண்யாவின் முகத்தில் கொஞ்சம் நஞ்சமிருந்த விளையாட்டுத்தனமும் முற்றிலும் மறைந்தது.

அவள் எதுவும் பேசவில்லை.

"இப்படியெல்லாம் இருந்தப்போதான்... ஒருநாள்... டிப்போல அப்பா கால் தடுமாறி கீழே விழுந்துட்டாரு. அப்ப டிப்போ பழையதை ஆல்டர் பண்ணிட்டு இருந்த நேரம்." என்றதும் லாவண்யா கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"தலையில அடிபட்டுச்சு. ஆனா சாதாரணமா கீழே விழுந்துட்டோம்னு தான் அப்பா நினைச்சிருக்கார். அதைப் பெருசா எடுத்துக்கவே இல்லை. ஏன் எங்க அம்மாகிட்ட கூட சொல்லலை. 

  பேஸிக்கலி அவருக்கு உடம்புல ஏதாவது சின்ன பிரச்சனைன்னா கூட அம்மா பதறிடுவாங்கன்னு நினைச்சிருப்பாரோ... என்னவோ. சில நாட்கள் கழித்து... நாளாக நாளாக அப்பாவுக்கு பார்வை கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுச்சு.

  அதோட அடிக்கடி தலை சுத்துற மாதிரியும், மயக்கம் வர்ற மாதிரியும் இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சார். சாதாரணமா அப்படி ஆகியிருந்தா அப்பா எப்பவும் போல அதை இக்னோர் பண்ணிட்டு வேலை பார்த்திருப்பார். 

  ஆனா அன்னிக்கு ஸ்கூல் பையன் ஒருத்தன் பஸ்ல இறங்கறப்ப அப்பா தவறுதலா வாயில விசில் வச்சப்ப, மயக்கம் வந்திருக்கு. அவர் விசிலடிச்சிட்டு பட்டுனு மயங்கிருக்கார். படில இறங்க ட்ரை பண்ணின பையன் கீழே விழற அளவுக்கு போயிட்டு படிலயே உட்கார்ந்துட்டான். 

பஸ்ல இருந்த பலரும் அப்பாவை ரொம்ப திட்டினாங்க. ஆனா அப்பா அப்படியே உட்கார்ந்த இடத்துல இருந்து சரிந்துட்டார். பஸ்ல இருந்தவங்க கண்டெக்டருக்கு ஏதோனு பதற, முத்து அண்ணாவை தெரியும்ல.. அவர் தான் என்ன ஏதுனு வண்டியை நிறுத்திட்டு பார்த்தார்."

அவன் அந்தக் காலத்தை நினைத்தபடி பேசினான். சாரதிக்கான குரல் கமறியது. 

"அப்போ எப்படியோ தண்ணி கொடுத்து அதுயிதுனு சமாளிச்சு டிப்போ வரை வந்துட்டார். அதுக்கு பிறகு லீவு சொல்லிட்டு, அம்மாவை வரவச்சி அப்பாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனாங்க." சாரதியின் பார்வை வெறுமையில் நிலைத்தது.

''தலையில் ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போது தான். அப்பா கீழே விழுந்ததையே சொன்னார். அது கூட லேசா அடிப்பட்டதுங்கனு டாக்டரிடம் தெரிவித்தார். ஆனா டாக்டர் அப்படி தலையில் அடிபட்டதால மூளைக்குள்ள ரத்தம் கசிந்து ரத்தக்கட்டி உருவாகியிருக்குன்னு சொன்னாங்க." லாவண்யா மூச்சை மெதுவாக இழுத்தாள். சாரதி கண்களில் கண்ணீர் திரண்டது.

"அதுக்கு ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னாங்க

அப்போதான் அப்பாவுக்கும் எங்களுக்கும் அந்த சீரியஸ்னஸ் தெரிந்தது.

  அப்பா சேர்த்து வச்ச பணம் தான் மெடிக்கலுக்கு உபயோகிச்சோம். அப்பாவுக்கு பணம் கரைவதுல பெரிய வருத்தம். அது என்‌ மேல் படிப்பு செலவுக்கும், பைக்கும், கல்யாண செலவுக்கும்னு சிறுக சிறுக சேர்த்து வச்சது. ஆனா மொத்தம் மொத்தமா போகுதேனு கவலைப்பட்டார். 

அவன் பாக்கெட்டில் இருந்த புகைப்படத்தை மெதுவாகத் தொட்டான்.

  "அவர் ஆபரேஷன் தியேட்டருக்குப் போற வரைக்கும் கூட.. மாத்திரை மருந்துனு எடுத்துக்கிட்டு, எனக்காக கவலைப்பட்டார் லாவண்யா. அவருக்கு சரியாகணும்.. திரும்ப வரணும் என்ற எண்ணமே இல்லை. அம்மாவை பத்தியும் கவலையில்லை.. என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டார். அதுவும் அம்மாவை நல்லா பார்த்துக்கோடா. நாளைக்கு உனக்குனு ஒருத்தி வந்தா இவளை விட்டுடாத. அம்மா சொல்படி கேளு.. நல்லா படி, இதையே சொல்லிட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்கு போனார். திரும்பி வரலை. ஆப்ரேஷன் அவருக்கு பெயிலியர். எங்களை எல்லாம் விட்டுட்டு போயிட்டார்." என்றவனது குரல் அங்கேயே நின்றது.

லாவண்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாரதியின் கண்களில் பல வருடங்களாக அடங்கிக் கிடந்த ஒரு வலி மெதுவாக மனதிலிருந்து மேலே வந்தது.

இம்முறை அவன் கரத்தை ஆறுதலுக்காக அழுத்தம் தந்து, நான் இருக்கேன் என்று கூறுவது போல செயலில் உணர்த்தினாள். 

சுற்றி மரமும் செடியும் இருக்க, காற்று இருவரையும் மெதுவாகத் தழுவிக் கடந்து சென்றது.

சுற்றிலும் குழந்தைகளின் சிரிப்பும், தொலைவில் கேட்கும் மனிதர்களின் பேச்சுச் சத்தமும் இருந்தாலும், அவர்களுக்குள் மட்டும் அந்த நொடி முழுவதும் ஒரு அமைதி உருவானது. 

சாரதியாகவே தன்னை மீட்டுக்கொண்டு, இதுக்கு நடுவுல என்னால படிக்க முடியலை.. கோச்சிங்கும் போக முடியலை. தேர்ட் இயரையாவது எழுதி பாஸ் பண்ணுவோம்னு எழுதினேன்.

  இரண்டு அரியர் வச்சி தான் பாஸ் பண்ணினேன். 

  ஆனா என்னால படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போக முடியலை. சட்டுனு வேலை அப்பாவோடது கிடைச்சது. அதுக்கு ஏத்த மாதிரி மத்த பார்மலிடிஸும் அதுல முடிச்சேன். 

  கண்டெக்டரா வேலை பார்க்க ஆரம்பிச்சேன். அம்மாவுக்கு சுத்தமா பிடிக்கலை. அப்பா இருந்தா இப்படியாடா உன்னை இருக்க விடுவார்னு அழுதாங்க. 

  நான் தான் இந்த வேலையில தான் நான் அப்பா கூடவே இருப்பதா உணருறேனு சொல்லிட்டேன். அப்பா இருந்தவரை அருமை தெரியாம, செத்தப்பிறகாவது அப்பாவோட கனெக்ட் இருக்கட்டும்னு சொல்லவும் அம்மா அதுக்கு பிறகு எதுவும் சொல்லலை.

  இதுலயும் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமா வருஷ வருஷா ஏறுது. எட்டு பத்து வருஷமானா கூடுதலா ஆகும். இப்ப இது ஐந்தாவது வருஷம்.

    நான் பி.காம் முடிச்சிட்டு தான் கண்டெக்டரா இருக்கேன். ஆனா அதென்னவோ என் பிரெண்ட்ஸுக்கே என் வேலை சொல்லிக்கற அளவுக்கு இல்லையாம். கொஞ்சம் கெஞ்சமா ஒதுங்கிட்டாங்க. அதை பத்தி யோசிக்க நேரமில்லை. நான் அம்மா தனியா நிம்மதியா வாழறோம். 

   இதுவரை காதல் கல்யாணம்னு யோசித்ததில்லை. என்னை யோசிக்க வைக்கற அளவுக்கு எந்த பொண்ணும் திரும்பி பார்த்ததில்லை. 

   நீ தான்... விரட்டி விரட்டி பிரப்போஸ் பண்ணிட்ட. முதல்லயே மறுத்தேன். ஆனா நான் என்ன படிச்சிருக்கேன். என்ன சம்பளம் வாங்கறேன், இது எதையும் யோசிக்காம, நான் நல்லவனா தெரியறேன். அதனால காதலிக்கறேன்னு ஒரு விதமான பிளைண்டா, நீ லவ் பண்ணின பாரு. அதனாலயும், உன்னை பார்க்காம இரண்டு நாள் தேட வச்சதும் காதலை சொல்லிட்டேன்." என்றான். 

லாவண்யாவோ "சத்தியமா நீங்க டிகிரி முடிச்சவர்னு தெரியாது. முதல்ல கண்டெக்டர்னு தெரிந்தே தான் காதலிச்சேன். நீங்க சொன்ன மாதிரி ஒரு குருட்டுத்தனமான எண்ணம். ஆனா நீங்க சரியான பெர்ஸன்னு மனசு இப்பவும் சொல்லுது." என்றாள். 

  இருவரது கைகளும் இணைந்தது எப்பொழுதோ. ஆனால் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கவும், பயந்து விலக தோண்றாது இருந்தனர். 

மீண்டும் பந்து வந்து சாரதி காலில் இடம் பிடிக்க, இம்முறை சிறுவனின் தந்தை பந்தை பிடிக்க காத்திருந்தார். 

  சாரதியோ பந்தை காலால் எட்டி உதைக்க அது சரியாக அவர்பிடிக்கும் விதமாக சென்றது. 

"பார்டா... நைஸ் ஷாட்" என்றாள். சாரதி சிரித்தவாறு, அவளை ஏறிட்டான். 

 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்‌

படிக்கற ரீடர்ஸ் கமெண்ட்ஸ் பண்ணுங்க. ரெஜிஸ்டர் பண்ணாத வாசகர்கள் ரெஜிஸ்டர் செய்து ஆதரவு தாங்க. 


 
Posted : September 20, 2026 8:05 am
(@crvs2797)
Posts: 198
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 23)

அச்சோ..! சாரதி இப்படி எல்லாரோட மனசையும் வலிக்க வைச்சிட்டானே. நிறையப் பசங்க கேட்டதை வாங்கி கொடுக்கலைன்னா இப்படித்தான் பெத்தவங்களை விரோதியாவே நினைச்சுடறாங்க, பெத்தவங்களை நக்கலும் நையாண்டியும் பண்ணிட்டு மதிக்கிறதும் இல்லை, மரியாதை கொடுக்கிறதும் இல்லை. இதுல ரொம்ப பாதிக்கப்படறது அப்பாக்கள் மட்டுமே. அப்பாவுக்கும் பிள்ளைங்களுக்கும் ஏழாம் பொருத்தம் தான். நடுவில அம்மாக்கள் பசங்க நடுவில மீடியேட்டராகி, பசிக்கு சோறு கொடுத்து சமாதானப்படுத்தி எப்படியாவது நல்ல பேரை கொஞ்சமாச்சும் தட்டிக்கிட்டு போயிடறாங்க. வாயில விழறது அந்த பாவப்பட்ட ஜென்மம் அப்பாக்கள் மட்டுமே. நிறைய பேரு அப்பாக்கள் இறந்த பிறகு தான் ரியலைஸே பண்ணுறாங்க. காலம் கடந்த ஞானதோயம், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள் ப்ளீஸ். ஒரேயொருமுறை அப்பா
(பெற்றோர்கள்) திரும்பி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லா தப்பையும் சரி பண்ணிடலாமே என்னும் கேட்டகரியை சேர்ந்தவன் தான் சாரதியுமட போல. ஆனால், காலம் முன்னோக்கித்தான் நகருமே தவிர, அது என்றும் பின்னோக்கி நகருவதில்லை.
வாய்ப்புகள் ஒருமுறைத்தான் கிடைக்கும். அதை தவறவிட்டு நம் பிள்ளைகளின் மூலம் திருத்திக் கொள்ளலாம் என்று, என்றும் நினைக்க வேண்டாம். பாவத்திற்கு தண்டனைத்தான் உண்டே தவிர பரிகாரம் கிடையாது. காலம் இருக்கும்போதே விழித்துக் கொள்ளுங்கள்.

சாரதியோட ஸ்டோரி என்னை ரொம்பவே டச் பண்ணிடுச்சு.

😴😴😴
CRVS (or) CRVS 2797


 
Posted : September 20, 2026 8:33 am
(@subhakumar85)
Posts: 122
Estimable Member
 

Athu yenna antha vayasula yella pasangallukum appa ethiri than.. 


 
Posted : September 20, 2026 9:06 am
(@guna-sundari)
Posts: 148
Estimable Member
 

Sarathy so emotional da. Really many boys dont know their father while with them. Fantastic.  Conductor also government job. There is no low grade thought in it. Very intresting sis.


 
Posted : September 20, 2026 10:55 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 137
Estimable Member
 

Sarathy ku irukum pothu appa oda arumai theriyala avar illa num pothu ippo feel panra but avar ah ninavu ah mattumae than avan manasula ippo iruku ah mudiyum 


 
Posted : September 20, 2026 5:56 pm

Scroll to Top