பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-6
அத்தியாயம்-6
சாரதியின் தினசரி பணியும், லாவண்யாவின் கல்லூரிக்கு செல்லும் பயணமும், இரண்டு மாதங்களை நெருங்கியிருந்தது.
அதிலும் லாவண்யா தேவி டிப்போவிலிருந்து ஏறுவது சாரதிக்கு பரிச்சயமாக தான் இருந்தது.
பொதுவாக தினசரி ஏறும் கல்லூரி பெண்கள் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் காணவும், பேசி பழகாவிட்டாலும், இன்னார் இந்த கல்லூரியில் இந்த ஸ்டாப்பில் இறங்குகின்றனர் என்ற யூகத்தின் அடிப்படையில் அறிந்திடலாம். அது போல தான் சாரதி அறிந்திருந்தான். மற்றபடி அவனாக பேசி பழகியது எல்லாம் இன்னமும் சம்பவிக்கவில்லை.
அதே போல லாவண்யாவுக்கும், அதே கன்டெக்டர் டிரைவர், ஏழுமணி பஸ், அரக்கபரக்க, ஏறுவதும், காலி இருக்கையில் டிப்போவிலேயே அமர்ந்துக் கொள்வதுமென பழகியிருந்தது.
பெரும்பாலும் லாவண்யா அமர்வது, முன் படிக்கட்டில் ஏறியதும் அமரும் முன்னிருக்கையாக இருக்கும், அல்லது பின்படிக்கட்டில் சாரதிக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்வதற்கு இடம் கிடைக்கும்.
அதை தாண்டி சில நேரம் ஐந்து நிறுத்தம் நின்றுக்கொண்டு வர, பின்னரே பாதி வழியில் அமர்வதற்கு இருக்கை கிடைக்கும். இது தினசரியாக இருக்க, கல்லூரியில் சென்று வருவதால் ஸ்டூடண்ட் கன்ஸென்ஸஸ் பாஸ் கிடைத்தது.
அதாவது பாயிண்ட் டூ பாயிண்ட் செல்லும் பஸ் பாஸ். சலுகை முறையில் டிப்போவில் ரெனிவெல் செய்துக் கொள்ளலாம்.
அன்று "டிக்கெட்" என்று சாரதி கேட்டு கையை நீட்ட, "காலேஜ் பஸ் பாஸ் இருக்கு" என்றாள்.
''பஸ் பாஸ் தந்துட்டாங்களா? காட்டுங்க" என்றான்.
லாவண்யாவும் தேவியும் எடுத்து நீட்ட, அதில் ஒரு மாதத்திற்கான தேதியுடன் இருந்தது.
அதில் சின்னதாக பேனாவினால் டிக் போட்டு தந்தான்.
'ஓ.. டிக் பண்ணணுமா?' என்று லாவண்யா அவளை பார்த்து, அறியாமல் கேட்டுவிட, "ஆமா.." என்று பதில் தந்து பேனாவை செவிமடலுக்கு பின்னால் வைத்து விசிலை அடித்தான்.
லாவண்யா அவளது செவியை மூடவும், அதை கவனித்தான்.
அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றுவிட்டது. பயணிகள் ஏறியதும், வண்டியை மீண்டும் இயக்குவதற்கு விசிலை எடுத்து வாயுக்கு கொண்டு சென்றவன், லாவண்யா அவளதுசெவியை இரு கையால் பொத்திக் கொள்ள, சாரதியோ விசிலை அப்படியே விடுத்து, வாயை குவித்து விசிலடித்தான்.
இம்முறை விசிலடிக்கும் கருவி மூலமாக வரும் சத்தத்தை விட, சாரதியின் இரண்டு விரலில் உதட்டை வைத்து அடித்த விசிலின் சத்தம் சற்று குறைவாக தான் செவியை பாதித்தது.
முத்துவிற்கு விசில் சத்தம் கேட்டதும், வண்டியை இயக்க, சாரதி அங்கும் இங்கும் பார்த்து, டிக்கெட் தந்தான்.
லாவண்யா மெதுவாக செவியிலிருந்து கையை எடுத்துவிட்டு, சாரதியை ஓரவிழியில் கவனித்தாள்.
பெரும்பாலும் லாவண்யா யாரையும் ஏறிட்டு பார்க்கும் வழக்கமில்லை. ஊரை விட்டு ஊர் வந்து படிப்பதால், பயமும் எந்த வம்பிற்கும் போகக் கூடாதென்ற எண்ணமும் தான் இருக்கும். அதனாலேயே பஸ்ஸில் பயணிக்கும் எந்த ஆண்மகனையும் நேருக்கு நேர் பார்த்தது இல்லை. லாவண்யா இதே பேருந்தில் வந்ததிலிருந்து, குண்டு பெண்ணென கேலி செய்த ஆடவன் கூட லாவண்யாவை கவனித்து ஒருதலையாக காதலிக்க துவங்கினான்.
அந்த விவரம் கூட லாவண்யா அறியாததே.
தேவி தான் "அடப்பக்கி அந்த பயப்புள்ள உன்னை தான் பார்க்கு, அங்க பார்றேன்" என்று சுட்டிக்காட்டினாள்.
அதை கூட பார்க்காமல் தவிர்த்துவிட்டு, தான் உண்டு தன் வேலையுண்டு படிப்புண்டு என்று தான் இருப்பாள். ஏனோ மெதுவாக தனக்காக விசில் ஊதும் கருவியை விடுத்து தான் இறங்கும் வரை வாயை குவித்து சாரதி சத்தம் எழுப்பியது சற்று இதமாக இருந்தது.
லாவண்யா இறங்கியதும், மீண்டும் விசில் கருவியால் தான் சத்தம் கொடுத்தான்.
மனதிற்குள் பரவாயில்லை 'புரிந்து நடந்துக்கற பெர்ஸன்' என்று மெச்சுதலாக பாராட்ட கூட செய்தாள்.
ஆனால் கல்லூரி வந்ததும் மீண்டும் பேருந்தையோ கன்டெக்டரையோ நினைவேட்டில் இல்லாமல் பாடம், பாடம் நடத்தும் ஆசிரியர், தோழிகள், படிப்பு புத்தகம் என்று லாவண்யா மாறிவிடுவாள்.
மீண்டும் கல்லூரியிலிருந்து திரும்பும் நேரம் சாரதி வண்டியே வரவும் நேரத்தை பார்த்து இந்த பஸ் இந்த நேரத்தில் வருமென்று புரிந்துக் கொண்டாள்.
லாவண்யா அவளாக சாரதி பின்னால் சுற்றவில்லை. அதே போல அவன் பேருந்தில் தான் செல்ல வேண்டுமென மற்ற பேருந்தையும் அவள் தவிர்க்கவில்லை. எல்லாம் தானாக.. இயல்பாக, விதி நிகழ்த்தியது.
அதே போல சாரதியுமே லாவண்யாவை பின்தொடரவில்லை. ஆனால் தேவி லாவண்யா இருக்கும் பகுதியில் தான், அவர்களை தாண்டி மிதிவண்டியில் பயணித்து செல்வான்.
இரண்டு மாதம் நெருங்க, சாரதி அவ்வழியில் செல்வதை ஒரு நாள் தேவி லாவண்யா வீட்டு மாடியில் இருந்து பேசும் போது கவனித்து, "ஏய் லாவண்யா.. அந்த அண்ணா இப்படி தான் போறார். நான் சொன்னேன்ல இந்த ஏரியானு" என்று மாடியில் பேசும் போது சுட்டி காட்டினாள்.
மாடியில் நின்று பேசும் நிகழ்வு கூட தேவிக்கும் லாவண்யாவுக்கும் தினசரி வழமையாக இருந்தது.
சில நேரம் புத்தகம் எடுத்துக் கொண்டு வந்து மாடியில் கதை அளந்தபடி வாசிப்பார்கள். அதாவது படிப்பார்கள். வேடிக்கை பார்த்தபடி, எழுதுவது படிப்பது எல்லாம் நடக்கும்.
சிலர நேரம் ஊர் சுற்ற தேவி கூப்பிடுவான். லாவண்யா மறுப்பாள். இலக்கியாவின் மகள் இஷிதா ஐந்தாம் வகுப்பு படிப்பதால் லாவண்யாவை அதிகம் தொல்லை தரமாட்டாள். ஆனால் அதே பகுதியில் தேவி லாவண்யா ஊர்சுற்ற போனால் மட்டும் கூடவே ஒட்டிக் கொள்வாள் இஷிதா. அப்படி இஷிதாவை அழைத்துக் கொண்டு நடந்து சொன்றால் இலக்கியா கூட, ஏன் போற? எங்க போற? என்று தடையிட மாட்டார்கள்.
லாவண்யா இஷிதா கைப்பிடித்து, தேவியிடம் பேசியபடி, நடந்தார்கள்.
பக்கத்தில் பூங்காவிற்கு தான் இஷிதாவை அழைத்து சென்று விளையாட விட்டு, கூடவே வழக்கத்திற்கு மாறாக மாடிக்கு பதில், பூங்காவில் கதை அளப்பார்கள் தோழிகள்.
"நம்ம காலேஜ் போரடிக்குப்பா. பேசாம கோ எஜிக்கேஷன் சேர்ந்திருக்கலாம்" என்றாள் தேவி.
"லாவண்யாவோ கோஎஜிகேஷன் காலேஜா இருந்தா எங்கம்மா இந்த காலேஜ்லயே சேர்த்திருக்க மாட்டாங்க." என்றாள் லாவண்யா.
"உங்கம்மா ரொம்ப தான் டெரரா இருக்காங்க" என்று தேவி சலித்திட, லாவண்யாவோ சிரித்துவிட்டு, "நல்லவங்களா கெட்டவங்களானு கணிச்சு சொல்லவே முடியாது. அப்படியொரு கேரக்டர். எங்கக்காவை படிக்க வச்சது அப்பாவா இருக்கலாம். ஆனா வேலைக்கு போகாதனு அப்பா சொல்லறதை மீறி, வேலைக்கு போக அனுமதி கொடுத்தது எங்க அம்மா தான்." என்றாள்.
"வேலைக்கு போனா பணம் வருது. அதோட சும்மாவே வீட்ல இருந்தா உங்கக்காவை திட்டலாம். இதுன்னா வரன் அமையற வரை வேலைக்கு போறானு பெருமையா சொல்லிக்கலாம்னு விட்டு வச்சாங்களோ என்னவோ" என்றாள் தேவி.
"தெரியலை.. ஆனா அப்பா வேலைக்கு போகாதனு ஆயிரம் தடை போட்டதுக்கு அம்மா எல்லாத்தையும் உடைச்சிட்டு வேலைக்கு போன்னு சொன்னாங்க. அதுக்காக ஆம்பள பசங்க படிக்கற காலேஜ்ல சேர்க்க கேட்டிருந்தா நீ ஒன்னும் படிக்கவே போக வேண்டாம்னு சொல்லிருப்பாங்க. நான் தப்பிச்சிட்டேன். அக்கா மாலதி தான் மாட்டிக்கிட்டா." என்றாள்.
"உங்கக்காவை பத்தி நீ பெருசா பேசியதில்லை. போன் எல்லாம் பேசுவியா?" என்றாள் தேவி.
"நான் என்ன சண்டை போட்டு பிரிஞ்சா இங்க படிக்க வந்திருக்கேன். அதெல்லாம் ஈவினிங் அம்மாவிடம் கால் பண்ணி பேசுவேன். நைட்டு அக்காவோட கால் பண்ணி பேசுவேன். அப்பா கூட காலையில பேசுவேன். ஓரே நேரத்துல மூன்று பேரிடம் பேசறது கிடையாது.
அக்காவை வீட்ல வச்சி ஒருத்தன் நிறம் குறைவா இருப்பதா சொல்லி இருக்கானாம். அவ ரொம்ப வருத்தப்பட்டு எனக்கு கல்யாணமே வேண்டாம்னு கத்திட்டு இருக்க.
ஏன் தேவி... கலரா இருந்தா தான் மாப்பிள்ளை கொத்திட்டு போவாங்களா. கருப்பா நிறம் குறைச்சாலா இருந்தா பொண்ணு நிறமா இல்லையேனு காதுபட சொல்லிட்டு ஓடறாங்க.
அப்பா கருப்பா இருப்பார். நீ தான் பார்த்திருக்கியே. அம்மா நல்ல நிறம். அக்கா அப்பா மாதிரி வந்துட்டா. நான் அம்மா மாதிரி வந்துட்டேன்.
இதுக்காகவே என்னை இங்க நான் படிக்க போகட்டானு கேட்டதும் வீட்ல சரினு சொல்லிருப்பாங்க." என்று வாடியபடி கூறவும், தேவி "அதென்னவோ நிறம் பார்த்து வரன் தட்டி போறது நிஜம் தான் வாவண்யா. இவனுங்க இந்த பொண்ணு அப்படி, அந்த பொண்ணு இப்படினு தட்டி கழிப்பானுங்க. எவளாவது ஒருத்தி, அந்த ஆளையே சம்பளம் அதிகமில்லை, சொந்த வீடு இல்லை, படிப்பு குறைச்சல்னு நாலு பொண்ணுங்க தட்டி கழிச்சா தன்னால ஏதோ கல்யாணம் ஆனா போதும்னு கருப்போ சிவப்போ, களையான முகமோ, வத்தலோ, தொத்ததலோ பொண்ணு கிடைச்சா போதும்டா சாமினு ஒரு கட்டத்துல நிற்பானுங்க.
இவனுங்க நேரா வந்து பொண்ணு நிறம் கம்மியா இருந்தா என்ன? நிறம்னு ஒன்னு உடம்பை மூடற தோலோட நிறம் மட்டும் தான்னு புரிஞ்சுக்கவே, நம்மளை காலம் அழவச்சிடும்.
எங்கக்கா சரிகாவுக்கு கூட வரன் பார்த்தாங்க. ஆனா அவ இப்ப நாட் இன்ட்ரஸ்ட் மேல படிக்கணும்னு சொல்லிட்டா. அதோட அவளும் சப்பியா இருப்பா. இப்ப வெயிட் லாஸ் பண்ணிட்டு கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்னு தினமும் ஜிம்முக்கு போறா." என்று கூறவும், லாவண்யா தேவி பேச்சு தங்கள் அக்காக்களை பற்றி இருந்தது.
இதில் சரிகாவை லாவண்யா பார்த்திருக்கின்றாள். அப்படியொன்றும் அதிகப்படிய சதையாக தெரியவில்லை. சிலருக்கு எல்லாம் மரபு ரீதியாக உடல் பருமனாக இருக்கலாம் என்றெல்லாம் யோசித்தவளுக்கு, 'உருவ கேலி பண்ணறவனுங்க அவனவன் கண்ணாடில அவனுங்க மூஞ்சியை பார்த்துக்கணும்' என்றவளின் நினைப்பிற்குள், 'ஏம்பா படிக்கற பசங்க உருவ கேலி செய்யறது தப்பில்லை' என்றவனது ஆண் குரல் செவியில் கேட்டது. இதை யார் சொன்னா?' என்று இமை மூடி யோசிக்க லாவண்யாவுக்கு நினைவு வரவில்லை. 'பச்.. யாரோ ஒருத்தர் கொஞ்ச நாளைக்கு முன்ன இதை சொன்னார்' என்று நினைவேட்டில் மெல்ல மெல்லக்குரலை மீண்டும் ரீவைன்ட் செய்தாள். யார் அப்படி கூறியதென்ற விழிப்பு மூளைக்குள் வரவில்லை.
அந்த நேரம் பூங்காவில் நேரம் ஆகவும், விசிலடித்து, கதவை பூட்டுவதாக செக்கியூரிட்டி கடிகாரத்தை பார்த்து, 'நேரமாச்சு நேரமாச்சு பூங்காவை பூட்டணும் கிளம்புங்க" என்றதும் 'கண்டெக்டர்' என்று விசில் சத்தம் மனதில் இருந்து நினைவுப்படுத்தவும் உச்சரித்தாள்.
தேவியோ லாவண்யாவை கவனிக்காது, உச்சரித்த பெயரையும் கவனிக்காமல், "சரி நாம கிளம்பலாம் பார்க் பூட்ட போறாங்களாம். உங்க சித்தி பொண்ணை கூப்பிடு" என்றதும், 'ஆங்.' என்று இஷிதாவை தேடினாள்.
இஷிதாவோ தன்னை லாவண்யா அக்கா தேடம் வேலை கொடுக்காமல் மூச்சு வாங்க முன் வந்து நின்றாள்.
"போலாம் அக்கா" என்று மூவரும் நடந்து செல்ல, பூங்காவை தாண்டி ரோட்டில் நடந்து வரவும், லாவண்யா தேவி இருவரும் முன்னால் வர, இஷிதா பின்னால் வந்தாள்.
அதேநேரம் கண்டெக்டர் சாரதி மிதிவண்டியில் இவர்களுக்கு முன் கடந்து வந்தவன், லாவண்யாவை பார்த்து, 'ஏய்..ஏய்" என்று கத்திவிட்டு சைக்கிளை நிறுத்தி அவசரமாய் இறங்கி ஓடிவந்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 6)
அடப்பாவி ! கடமைத் தவறாத ஒரு கடமை வீரன், ஒரு காலேஜ் பச்சைக் கிளிக்காக விசிலை தியாகம் பண்ணிட்டு வாயில விசில் அடிக்க ஆரம்பிச்சிட்டானே ..
அந்தளவுக்கு போயிடுச்சா என்ன ?
ஓஹோ..இருக்கட்டும், இருக்கட்டும்
சுப்பிரியிர்ஸ் கிட்ட பெட்டிஷன்
போட்டுட வேண்டியது தான்.
பொண்ணுங்க மட்டும் தான் நிறம், ஹைட், சப்பி, படிப்பு, வேலை, வயசுன்னு... இதெல்லாம் பார்த்து மறுக்கப் படறது இல்லை, இப்ப ஆண்களும் அந்த நிலைமைக்கு எப்பவோ போயாச்சு, அது தான் உண்மை.
அது சரி, இப்ப யாருக்கு பிரச்சினைன்னு சாரதி சைக்கிளைப் போட்டுட்டு அரக்க பறக்க ஓடி வரான், இஷிதாவுக்கா, இல்ல லாவண்யாவுக்கா ?
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 2 Online
- 420 Members
