பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-1
அத்தியாயம்-1
அதிகாலை ஐந்து மணிக்கே அலாரம் சத்தமிட்டு சாரதியை எழுப்பியது.
தூக்கக் கலக்கத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மெதுவாக கண்களைத் திறந்தவன், இருகைகளையும், விரித்து சோம்பல் முறித்தான்.
தன் இரு கைகளையும் நிதானமாக முகத்தில் அழுத்த தேய்த்து, எதிரேயிருந்த சதுரவடிவ பிரேமை கவனித்தான்.
தந்தை சண்முகத்தின் புகைப்படம், காலையில் எழுந்ததும் சாரதி முதலில் காண்பது தன் தந்தையின் புகைப்படத்தை.
அதில் பொட்டு வைத்து, தாயார் காஞ்சனா நேற்று வைத்த பூமாலை சூடியிருக்க அதையே வெறித்தான்.
சிலநொடிகள் வெறித்துப் பார்த்துவிட்டு, பெருமூச்சை வெளியிட்டு மொபைலை எடுத்துப் பார்த்தான்.
5:10 என்று சுவரில் இருந்த கடிகாரம் நேரத்தை காட்டியது.
'அடடா… அதுக்குள்ள பத்து நிமிஷம் ஆகிடுச்சா' தனக்குத்தானே முணுமுணுத்தபடி படுக்கையை மடித்து வைத்து, பல் விலக்க சென்றான்.
குளித்து முடித்து, சீராக இஸ்திரி செய்யப்பட்டிருந்த தனது கண்டெக்டர் சீருடையை அணிந்துக் கொண்டான்.
அப்பொழுது கன்டெக்டரின் அடையாள அட்டையை எடுத்து, சட்டையின் பாக்கெட்டில் எடுத்து வைத்தான். அவை எடுக்கும் பொழுது ஏதோ தோன்ற, அந்த அடையாள அட்டையை கவனித்தான். அது அவன் தந்தையின் அடையாள அட்டையாக இருக்க அதை பார்வையிட்டு எடுத்த இடத்தில் வைத்துவிட்டு, தன்னுடைய அடையாள அட்டையை குனிந்து உற்று நோக்கி எடுத்து பார்த்தான். அதில் சாரதி என்ற பெயருடைய கன்டெக்டர் அடையாள அட்டையென ஊர்ஜிதப்படுத்தி, தன் பேண்ட் பேக்கெட்டில் வைத்தான் சாரதி.
கண்ணாடி முன் நின்று பின்னந்தலை முடியை ஒருமுறை கையால் கோதிவிட்டான். சாரதிக்கு அலைப்பாயும் கேசமெல்லாம் இல்லை. ஆனால் கருகருவென இருக்கும் சுருட்டை முடி, நெற்றியை மறைத்துக் கொள்ளும் அளவிற்கு, ஒருவிதத்தில் அவன் முக அமைப்பிற்கும், ஏற்கும் விதமாக பார்க்க அழகாக இருக்கும்.
சாரதி ஓரளவு ஆண்களுக்குரிய உயரமான உடல்வாகு, இளைஞர்களுக்கே உரித்தான இறுக்கமான உடற்கட்டு, அதற்காக படிக்கட்டு தேகமெல்லாம் இல்லை. உடலில் தேவையற்று சதை போடாமல் பார்த்துக் கொள்வான். சுமாரான கோதுமை நிறம். முகத்தில் எந்தவிதமான செயற்கையான அலங்காரமும் இல்லாமல், இயல்பாகவே ரசிக்கும்படியாக இருப்பான்.
அதுவும் அமைதியாக இருந்தால் அவன் முகம் பார்ப்பவரை கட்டி இழுக்கும் வசீகரம் உண்டு.
சாரதி வெளியே கிளம்பும் நேரம் தான் காஞ்சனா வாசலில் கோலமிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
"என்னய்யா சாரதி அதுக்குள்ள கிளம்பிட்ட? அச்சோ.. உனக்கு ஈவினிங் ஷிப்ட்னு நான் டீ கூட போடலையே" என்று பதறி வந்தார்.
"இல்லைம்மா... இன்னில இருந்து மார்னிங் ஷிப்ட். நான் தான் உங்களிடம் சொல்ல மறந்துட்டேன். டீ எல்லாம் டிப்போக்கு முன்ன இருக்கற டீக்கடையில பார்த்துக்கறேன்." என்றான்.
"காலையில சாப்பாடுயா?" என்று கேட்டபடி, கோலமாவு டப்பாவை ஓரமாய் வைத்து கை அலம்பி கேட்டார்.
"அதுவும் வெளிய பார்த்துக்கறேன் மா." என்று அவசரமாக செருப்பை மாட்டினான்.
"ஒரு நிமிஷம் இருயா." என்று வேகமாக சாமிக்கு என்று வைத்த வாழைப்பழத்தை எடுக்க சென்றார். ஏனோ விளக்கு ஏற்றாமல் எடுக்க மனமின்றி, அவசரமாய் தீப்பெட்டி எடுத்து உரச, "எதுக்குமா? எனக்கு டைம் ஆச்சு" என்று அவசரப்படுத்தினான்.
"சாரதி ஒரு நிமிஷம்யா" என்று விளக்கேற்றி விட்டு விபூதியை எடுத்துக் கொண்டு, வாழைபழத்தையும் எடுத்துக் கொண்டு வந்து மகன் கையில் வைத்துவிட்டு விபூதி கீற்றை அவன் நெற்றியில் வைத்தார்.
''டீயும் குடிக்கலை. டிபனும் சாப்பிடலை. இந்த வாழைப்பழத்தை சாப்பிடு. இந்த முடி வேற நெற்றியை மறைச்சிட்டு. ஏய்யா.. முடி கண்ணை மறைச்சா ஒட்ட வெட்டிக்கலாம்ல" என்றபடி விபூதி கீற்றை மகனுக்கு வைத்தார்.
"கண்ணை எல்லாம் மறைக்கலம்மா. உங்களுக்கு பார்க்க அப்படி தெரியுது. எனக்கு கரெக்டா இருக்கு." என்று வாழைப்பழத்தை அன்னை காஞ்சனா எதிரே உறித்து சாப்பிட்டபடி, சைக்கிளை எடுத்தான். வாழைப்பழம் கண் எதிரில் சாப்பிடாவிட்டால், அது வேறு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சாப்பிட்டியா என்று கேட்பாரே. அதனால் மடமடவென விழுங்கினான்.
தந்தை சண்முகம் இருந்த பொழுது வாங்கி தந்த சைக்கிள், தந்தை தற்போது இல்லையென்றாலும், அவர் வாங்கி தந்ததில் தான் சாரதி டிப்போவிற்கு செல்வான்.
"பார்த்து மெதுவா போயா" என்று கூற "சரிமா." என்று குரல் தந்து விட்டு வேகமாய் சைக்கிளை மிதித்தான் சாரதி.
டிப்போவுக்குள் நுழைந்தபோது, அதிகாலை நேரத்திற்கே உரித்தான பரபரப்பு அங்கே ஏற்கனவே ஆரம்பித்திருந்தது. சைக்கிளை நிறுத்துமிடத்தில் நிறுத்தினான்.
பஸ் டிப்போவில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளை
இரவு முழுவதும் ஓடி வந்து ஓய்வெடுத்த சில பேருந்துகள்.
புதிய நாளின் முதல் பயணத்திற்காக தயாராகிக் கொண்டிருந்த சில பேருந்துகள்.
டிரைவர்கள் தங்களுக்கான வண்டிகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்க, கண்டக்டர்கள் தங்களுடைய ட்யூட்டி விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"சாரதி!" குரல் கேட்டு திரும்பியவன், கையில் டீ கப்புடன் நின்றிருந்த முரளியைப் பார்த்தான்.
"என்ன முரளி அண்ணா?"
"என்னப்பா... இன்னையிலருந்து டே ஷிப்டா?" என்று கேட்க, "அண்ணே ஒரு டீ" என்று டீ கடைக்கிரரிடம் கூறிவிட்டு, "ஆமா அண்ணன் ஏழு மணிக்கு எடுக்கணும்" என்று டீ ஆவி பறக்க, வாங்கி பருகினான்.
"எல்லாம் ஸ்கூல் காலேஜ் வேலைக்கு போற கூட்டம் மோதும்" என்றார்.
"கூட்டம் இருந்தா என்ன? எல்லாருக்கும் டிக்கெட் கொடுக்கணும். எந்த பயணியோட நகை பணம் தொலையாம, உயிருக்கு சேதாரம் இல்லாம சேப்பா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும். அவ்வளவுதான்." என்றவன் டீயை ஊதிக்கொண்டிருந்தான்.
முரளி அண்ணனோ "உங்கப்பா மாதிரியே இருக்க. பேச்சும் அப்படியே இருக்கு" என்று தோளில் தட்டி சென்றார்.
தந்தையை நினைத்தவன் டீ டம்ளரை கடைக்காரர் முன் வைத்துவிட்டு, பணத்தை வைத்துவிட்டு, டிப்போவில் கையெழுத்து போட்டுவிட்டு அரசாங்க டிக்கெட் பேகையும், பணப்பையையும் எடுத்துக் கொண்டு, அவனுக்கான பேருந்து வண்டியை நோக்கி விரைந்தான்.
டிரைவர் முத்து ஏற்கனவே தயாராக நின்றிருந்தார்.
டிரைவர் முத்து கையிலிருந்த காட்டன் துண்டை எடுத்துக் கொண்டு வந்தார்.
"என்ன சாரதி.. சரியா நேரத்துக்கு வந்துட்ட" என்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.
"ஆமா அண்ணா." என்றவாறு சாரதி தன் டிக்கெட் பேக்கை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான்.
பேருந்து மெதுவாக டிப்போவை விட்டு வெளியே வந்தது. ஏற்கனவே சிலர் பேருந்தில் ஏறியிருந்தனர். ஏழு மணி பேருந்து என்பதால், பள்ளி மாணவர்கள் சிலரும், கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் இருந்தனர்.
ஒரு கல்லூரி பெண்ணோ ஒரு பையை தன்னருகே வைத்துவிட்டு, நகம் கடித்தபடி, ஜன்னல் புறம் பார்த்தாள்.
"எம்மா... பையை எடு." என்று மத்திய வயது பெண்மணி கூறவும், "இந்த சீட்டுக்கு ஆள் வருதுங்க" என்றாள்.
சுற்றி முற்றி பார்த்து "யாருமில்லையே" என்று கூற, "அட... டிக்கெட் எடுத்துட்டு, இந்தா வர்றேன்னு சொன்னா." என்று கூற, "அட பஸ்ஸே மூவ் ஆகுது. பையை எடும்மா" என்றார்.
அந்த நேரம் பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறச் சுடிதார் அணிந்த பெண் மூச்சு வாங்க படிக்கட்டில் ஏறினாள்.
"இந்தா.. வந்துட்டா என் பிரெண்ட். எக்கா.. அந்த சீட் முன்ன காலி பாருங்க. அதுல உட்காருங்க" என்று அனுப்ப, "ம்கூம்.. டிப்போலயிருந்து புறப்படவும், காலேஜ் பிள்ளைங்க நேரா சீட்ல உட்கார்ந்துட்டு சிநேகிதிக்கு வேற இடம் பிடிக்குதுங்க" என்று முனங்கிக் கொண்டே முன்னே காலியாக இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தார்.
"ஏன்டி லேட்டு." என்றாள்.
"அம்மா டிபன் கட்ட லேட் பண்ணிட்டாங்கடி." என்றாள்.
"இந்நேரம் அந்தக்கா என்னை கத்தியிருக்கும். நல்லவேளை வந்துட்ட." என்றதும், ஓடிவந்தவளோ "தேவி தேவி... ஜன்னல் சீட் வேண்டும்டி" என்று கையை சுரண்டினாள்.
இடமும் பிடித்து மடத்தையும் கொடுத்தபடி, "எங்கிருந்துடி பெத்தாங்க. வர்றதும் லேட்டு. இதுல ஜன்னல் சீட்டு தான் வேண்டும்னு என்னையும் எழுப்பிடற. லாவண்யா என்ற பெயருக்கு ஜன்னல் சீட்டுனு எழுதி வச்சிடு" என்று சலித்தபடி, தேவி இடம் மாறி அமர்ந்தாள்.
லாவண்யாவோ ஜன்னலோரம் அமர்ந்து, 'அப்பாடா' என்று சிரித்தாள்.
"டிக்கெட் டிக்கெட்" என்று சாரதி குரல் கொடுத்து வர, தேவியோ "அச்சோ.. லாவண்யா.. எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுடி. பர்ஸை வீட்லயே வச்சிட்டு வந்துட்டேன்." என்றாள் கலக்கமாய்.
"அரசாங்கத்துல பொண்ணுங்களுக்கு ப்ரீனு சொன்னாங்க." என்றாள் லாவண்யா.
"அது ஆர்டினரி பஸ். நாம ஏறியது எக்ஸ்பிரஸ்" என்றாள் தேவி.
"டிக்கெட் வாங்கியாச்சா?" என்று சாரதி கேட்டான்.
"சரி சரி எடுக்கறேன்." என்று தேவியிடம் உரைத்துவிட்டு, சாரதியை பார்த்து ஐம்பது ரூபாய் நீட்டி, "இரண்டு அண்ணா நகர்" என்றாள் லாவண்யா.
"தேங்க்ஸ்டி." என்று தேவி உரைத்திட, இரண்டு டிக்கெட்டை கிழித்து தந்தவன், மீதி சில்லரையும் தந்தான். அவன் தீண்டியபோது சரியாக இரும்பு கம்பியில், கை முட்டி இடித்தது. சில நேரம் கை முட்டி எதிலாவது இடித்தால் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு உருவாகும். அப்படி தான் சாரதிக்கு லாவண்யாவிடம் சில்லரை தந்த பொழுது மின்சாரம் பாய்ந்தது போல தோன்ற, அவளை தீண்டிவிட்டு கையை உதறி, முட்டியை தடவி வலியை பொறுத்தான்.
லாவண்யாவுமே லேசான அதிர்வடைந்து, சாரதியை கண்டாள். கை முட்டியை தேய்த்தபடி டிக்கெட் கொடுக்க நகரவும், அவனை பார்த்து தேவியிடம், "எனக்கு சென்னையே புதுசு. இதுல எது ப்ரீ பஸ்? எது எக்ஸ்பிரஸ்னு கண்டுபிடிக்க?" என்றாள்.
"அதுவா..." என்று பிரித்தறிவதற்கு தோதாக "வொயிட் போர்ட் ப்ரீ டி. எல்லா ஷ்டாப்லயும் நிற்கும். எக்ஸ்பிரஸ் பஸ்ல ஓரளவு காசு தரணும். ப்ரி கிடையாது இதுக்கு அடுத்து ஒன்னு இருக்கு. டீலக்ஸ் காசு அதிகம். எல்லா ஸ்டாப்லயும் நிற்காது.." என்று கூறினாள்.
முதல் சில நிறுத்தங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஆனால் நகரத்தை நெருங்க நெருங்க பேருந்துக்குள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.
"அண்ணா… நாலு டிக்கெட்.
"எங்கம்மா போகணும்?" அதை சொல்லாம நாலுனு நீட்டறிங்க" என்றான்.
"சாரிண்ணா.. கலெக்டர் நகர்" என்றார். பணத்தை வாங்கிய சாரதி, டிக்கெட்டை கிழித்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்.
"இரண்டு புருஷவாக்கம்" என்று
"ஒரு தாலுகா ஆபிஸ்" என்று ஆளாளுக்கு அவர்கள் செல்லும் இடத்திற்கு டிக்கெட் கேட்டு நிற்க சாரதி பிசியாகவும் பொறுப்பாகவும் பணியாற்றினான்.
"அண்ண.. சில்லறை இல்ல." என்று ஆண்களிடம் சரியான சில்லறை வேறு கொடுத்து வாங்க கூறினான்.
"தம்பி.. உள்ள போங்க.. படில நிற்காதிங்க." என்றவன் குரலில் கண்டிப்பு இருந்தது.
"அண்ணே.. முன்னாடி ஒரு சீட் இருக்கு பாருங்க." என்று கூற,
"தம்பி அது லேடிஸ் சீட் எப்படியும் யாராவது வந்து எழுப்பி விட்டுடுவாங்க." என்று அமர மறுத்தார்.
"ஓ… சரி சரி." என்று சிரித்தான்.
பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று மீண்டும் கிளம்பிக் கொண்டிருந்தது.
சாரதி ஒருபக்கம் டிக்கெட் கொடுத்துக்கொண்டும், இன்னொரு பக்கம் புதிதாக ஏறும் பயணிகளிடம், "உள்ள போங்கம்மா… வாசல்ல நிக்காதீங்க. கொஞ்சம் முன்னாடி போங்க தம்பி.
பையை மேல வைங்க
அம்மா, வயசானவங்க படியில நிக்காதீங்க." என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அது வேலை மட்டும் இல்லை. இத்தனை வருடங்களாகச் செய்து பழகிப்போன ஒரு இயல்பான வாழ்க்கை.
ஒரு வயதான தாத்தா பேருந்தில் ஏற முயன்றபோது, சாரதி உடனே கையை நீட்டி அவரை மேலே ஏறச் செய்தான்.
"மெதுவா தாத்தா" என்றான். "நன்றி பா." என்று ஏறமுடியாமல் ஏறினார்.
"நன்றி எதுக்கு? உட்காருங்க." என்றவன் அவனது இருக்கையை தந்துவிட்டு வாயில் விசிலடித்து வண்டியை கிளம்பினான்.
அருகிலிருந்த லாவண்யாவோ செவியை மூடி, "அச்சோ.. காது போச்சு." என்று கூற "அதெல்லாம் போக போக பழகிடும்." என்றாள் தேவி.
-பயணிப்போம்.
-பிரவீணா தங்கராஜ்.
ஹாய்... ஏற்கனவே என்னுடைய ரீடர்ஸ் கதை வாசிக்க வந்தா ரொம்ப சந்தோஷம். நீங்க ரெஜிஸ்டர் லாகின் செய்து வாசிங்க. கஷ்டமாயிருந்தாலும் ரெஜிஸ்டர் பண்ணினா தானே எனக்கும் சந்தோஷமா இருக்கும். நமக்காக சிலர் வந்து ரெஜிஸ்டர் செய்து வாசிக்கறாங்கனு ஆனந்தப்படுவேன். அதோட சைட்ல கமெண்ட்ஸ் பண்ணற ரீடர்ஸ் பெயர்கள் மனசுல பதியுது. அவங்க பிரதிலிபி முகநூல் எதுல பார்த்தாலும் அட இவங்க என்ற புன்னகை அரும்புது.
புது ரீடர்ஸ் நீங்களும் சிரமம் பாராது ரெஜிஸ்டர் லாகின் செய்து கமெண்ட்ஸ் பண்ணுங்க. கதைகள் மூலமாக உங்கள் கருத்துகள் மூலமாக அனுங்களை அறிய ஆசைப்படறேன். கீப் சப்போர்டிங்.
எதார்த்தங்கள் கொண்ட கதைகளம். காதலும் வரும். மட்கும் வாழ்வில் மட்காத காதல் கதையில் துப்புரவு தொழிலாளியை நாயகனா நிறுத்தி எழுதினேன். நான் அவனுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் அந்த கதை உங்க மனதில் இடம் பிடித்ததையும் நினைச்சி சந்தோஷப்பட்டேன். ஏன்னா கதைக்காக சிலர் வாசித்து ஆதரவு தருவது தான் எனக்கு பிடித்திருந்தது. இந்த கன்டெக்டர் கூட உங்களுக்கு பிடிக்க வைக்கணும். பார்ப்போம்... எப்படி வர்றான்னு.
இந்த கதை இன்னிக்கு பதிவிடணும்னு நினைச்சேன். ரெகுலர் எபிக் எழுதணும். ட்ரை பண்ணறேன். எப்படியும் கதைபதிவிடற குரூப் மற்றும் வாட்சப்ல இணைந்து இருங்க. எப்ப கதை போட்டாலும் அதுல லிங்க் சட்டுனு வரும்.
இதுவரை என் கதையே வாசிக்காதவங்க தளத்தில் முடிவுற்ற கதைகளில் சிலதை வாசித்து பாருங்க.
105 கதை முடிவுற்று இருக்கு. எந்த கதை பெயர் சொல்லி கேட்டிங்கன்னா நான் லிங்க் எடுத்து தர்றேன். சிலது சைட்லயும், சிலது பிரதிலிபிலையும் இருக்கு புதுக்கதை மேகஸினுக்கு கொடுத்த கதைகள் மட்டும் இருக்காது.
குறிப்பு:பேருந்து பயணம் செய்து பலவருடங்கள் ஆகுது. சில லாஜிக் சொதப்பினா சொல்லுங்க. இப்ப சில மாற்றம் இருக்கலாம். ஆனா அதை நான் இந்த கதையில் தேவைப்படறப்ப எழுதுவேன். அட மெட்ரோ வந்துடுச்சு இந்த ஸ்டாப் இங்க இல்லை அப்படின்னா இப்ப நடப்பதை வச்சி சொதப்பினா சொல்லறேன். நான் பொதுவான தகவலுடன் தான் எழுதாவேன். ஆனாலும் மெட்ரோ பணி இருப்பதால சிலது மாறுபடலாம். இப்ப எல்லாம் சிசிடிவி சில பஸ்ல இருக்கு. அதெல்லாம் அதற்கேற்றது போல எழுதுவேன். அதனால எதுனாலும் பொறுமையான விஷயத்துடன் எழுதறேன்.
Super sister..
Intha story ku nan wait pannunan WhatsApp la intro padichathula irrunthu ...
Wow Excellent start sis. They are our daily heros. We didnt realise them sis. Super start. Eagerly waiting for next episode sis.
Nice start.. yentha velaya erunthaalum atha neenga portray panrathu nalla erukkum
Nice start sis ❤ bus la travel panni romba romba naal aachu.. Intha kadhai en school and college times ay remember panna vaykuthu ❤ kutty spelling mistakes um iruku paathukonga.. Sarthy and lavanya kuda thodarnthu payanika waiting 🤩
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)
அட.. பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்...
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்....
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்...
பின் வாசல் முற்றத்திலே
துளசி மாடம்....
விடுமுறை நாட்களில்
பள்ளிக்கூடம்....
விளையாட்டுப் பிள்ளைகளின்
செல்லக் கோபம்....
ஆள் இல்லா நள்ளிரவில்
கேட்கும் பாடல்...
அன்பே, அன்பே..நீயே..!
டைட்டிலோட வரியே அருமை.
அதுவும் இந்த பாடல் வரிகள் எல்லாம் பேருந்துப் பயணத்தில் கேட்கும் போது செம்மையா தாலாட்டு கேட்குற மாதிரி இருக்கும், தூக்கமே வராதவங்களுக்கு கூட நல்ல தூக்கத்தை இழுத்து விட்டுடும்.
கண்டக்டர் சாரதி & பயஒி லாவண்யா என்கிற இன்ட்ரோவோட ஆரம்பிச்சிருக்கிங்க... அப்படியே
அசத்திப் பூடுங்க. அதுசரி, அம்மணி இந்த ஊர் கிடையாது போலயிருக்கே, சென்னைக்கு புதுசு போலயிருக்கு. இருக்கட்டும், இருக்கட்டும் வந்தாரை வாழவைக்கும் சென்னை,
காதலையும் கை கூட வைப்பதில் அன்னை... கரெக்ட் தானே.
எனக்கு கூட பேருந்து பயணம் எல்லாம் போய் ரொம்ப நாளாகிடுச்சு. அரும்பாக்கம், நுங்கம்பாக்கம்ன்னு வேலை பண்றச்ச போனதெல்லாம் செமையா ஞாபகம் வருது.
அதெல்லாம் மறக்க முடியாத முண்டியடிச்சு ஓடி, ஜன்னலோர சீட்டுக்காக சண்டைப் பிடிச்சு இடம் பிடிச்ச நாட்கள் எல்லாம் அப்படியே கண்ணு முன்னாடி வந்து நிக்குது போங்க. அதுலயும் அந்த ஜன்னலோர முடி கலையுற பேயான காத்து இருக்கே அதுக்கு
ஈடு இணையே கிடையாது போங்க.
குட் அட்டெம்ப்ட், தொடர வாழ்த்துக்கள்.
😐😐😐
CRVS (or) CRVS 2797
அழகான தொடக்கம்
காலையில் எழுந்து நானும் சேர்ந்து கிளம்பிய உணர்வு
சாரதி 💕🌹
எப்போதும் இயல்பான நாயகன்களுக்கு நான் ஒரு தீவிர ரசிகை
😍😍😍😍😍
எதிர்பார்ப்புகளுடன்...
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
4 hours ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13
1 day ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11
2 days ago
-
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10
2 days ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
