தகிக்கும் நிலவொன்று-38
அத்தியாயம்-38
சில நிமிடங்களுக்குப் பிறகு... ருத்ரனின் பைக் சத்ரியனின் பங்களா முன் வந்து நின்றது.
அவன் மருத்துவக் கல்லூரியில் நடந்ததை நினைத்தபடியே ஷ்ரத்தாவை பின்தொடர்ந்து வந்திருந்தான்.
ஷ்ரத்தா மயங்கி விழுந்த அந்த நொடி அவளது உடல் முழுவதும் அதிர்ந்த காட்சி. ஆர்மரில் சிக்கியிருந்த அந்த தோட்டா, எல்லாமே அவன் மனதை விட்டு அகலவில்லை.
'புல்லட் ப்ரூஃப் இல்லன்னா..' என்று நினைத்தவன் அடுத்த நொடியே அந்த எண்ணத்தை நிறுத்திக் கொண்டான்.
"ச்சே..." தலையை உலுக்கினான்.
அவள் நலமாக இருக்கிறாளே. பாதுகாப்பாக வீட்டுக்கும் வந்து விட்டாளென என்பதை நேரில் பார்த்துவிட வந்தான்.
ஆனால் பங்களாவின் பெரிய இரும்புக் கேட் முன்பே அவனை நிறுத்திவிட்டனர்.
"சார்... மேடம் உள்ளே போயிட்டாங்க. உங்களை உள்ளே விடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க." என்றதும் ருத்ரனின் தாடை இறுகியது.
"நான் போலீஸ்." என்றான்.
"தெரியும் சார்." என்றான்
"அவளுக்கு இப்பதான் கன் ஷாட் பட்டிருக்கு."
"அதுவும் தெரியும் சார். இங்க உடனே மெஸேஜ் பாஸாகிடுச்சு. பாதுகாப்பு பலப்படுத்தியிருக்கோம்." என்று கூறி பாடிகார்ட் அமைதியாக நின்றான்.
ருத்ரன் சில நொடிகள் அவனை முறைத்துப் பார்த்தான். பிறகு பின்வாங்கி நின்றான்.
கதவுக்குள் அவள் பாதுகாப்பாக இருக்கிறாள். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. அந்த எண்ணமே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
மனசு கேட்காமல் மொபைலை எடுத்தான். யதுநந்தனின் எண்ணிற்கு அழைத்தான்.
"ஹலோ ருத்ரா வேலையாயிருக்கேன்" என்றான் யதுநந்தன்.
"யது." ருத்ரனின் குரலில் இருந்த கோபத்தை கேட்டவுடனே யதுநந்தன் அமைதியானான்.
"என்னடா.. பிசியா இருக்கேன் சொல்ல வந்ததை உடனே சொல்லு?" என்றான்.
"இவ கைதிகளோட கைதியாவே இருந்திருக்கலாம். இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சாகறதுக்காகவே வெளிய நடமாடுறா" என்றான் சம்பந்தமே இல்லாமல்..
"ஏதாவது சொல்லணும்னா ஒழுங்கா சொல்லு. நான் க்ளைண்ட் மீட் பண்ண போறேன்" என்று அவசரம் காட்டினாள்.
"ஷ்ரத்தாவை இன்னிக்கு யாரோ மறைந்துயிருந்து கன் ஷூட் பண்ணிருக்காங்க. அவ புல்லட் ப்ரூப் போட்டிருந்ததால உயிர் தப்பிச்சா. அது இல்லன்னா இந்நேரம்." அதற்கு மேல் சொல்ல முடியாமல் பற்களை கடித்தான்.
"இவ டாக்டர் படிச்சே ஆகணுமா? உயிரோட இருக்கணும்னு ஆசையே இல்லையா அவளுக்கு? நீயாவது சொல்லலாம்ல" யதுநந்தன் அவன் பேச்சை முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தான்.
"ஷ்ரத்தா இப்ப எப்படியிருக்கா? பயந்துயிருக்காளா? இப்ப நீ எங்க இருக்க?" என்றான் யதுந்நதன்.
"அவ வீட்டு பங்களா முன்னாடி நாய் மாதிரி நிக்கிறேன்." கோபத்தில் உண்மையை தான் உரைத்தான். அவ வீட்டுக்கு முன் பைக்கை நிறுத்தி பேசிக் கொண்டிருக்கின்றானே!
"அவ பாட்டுக்கு உள்ள போயிட்டா." யதுநந்தன் பெருமூச்சு விட்டான்.
"சரி.. நான் தீபாவிடம் பேசறேன். நீ கிளம்பு" என்றதும் ருத்ரன் உடனே, ''யதுநந்தன்... கொஞ்சம் கான்ஃபரன்ஸ் கால் போடுங்க. பேசறதை கேட்கறேன்" என்று இறைஞ்சினான்.
"சரி." என்றவாறு யதுநந்தன் உடனே தீபாவை அழைத்தான்.
சில நொடிகளில் அழைப்பு இணைந்தது. "ஹலோ சார்." தீபாவின் குரல் கேட்டது.
"தீபா, ருத்ரன் ஏதேதோ சொன்னான். ஷ்ரத்தாவுக்கு என்னாச்சு?" என்று விசாரித்தான்.
"சார்... இது நாங்க எதிர்பார்த்ததுதான். ஷ்ரத்தா மேடமை சிங்கப்பூர்ல கொல்ல முயன்றப்பின் இங்கயும் நடக்கும்னு எதிர்பார்த்தோம்" என்றாள்.
"எதிர்பார்த்ததா?" ருத்ரனின் குரலில் நம்ப முடியாத அதிர்ச்சி.
"ஆமாம் சார். சத்ரியன் பாஸோட அம்மாவுக்கு இதே மாதிரி நாலு அட்டாக் நடந்திருக்கிறது. வெவ்வேறு ஆட்கள். வெவ்வேறு இடங்கள். எல்லாமே கொலை முயற்சிதான்." சிறிது இடைவெளி விட்டு, "ஷ்ரத்தா மேடம் இப்போ அந்த வாழ்க்கைக்குள்ள வந்துட்டாங்க. முதல் முறைதான் இப்படி நேரடியாக சுட்டிருக்காங்க. அதனாலத்தான் சத்ரியன் பாஸோட அம்மாவுக்கு முன்னாடி வழங்கிய இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இப்ப மேடமுக்கு கொடுக்கறோம்." என்றாள்.
ருத்ரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்
யதுநந்தனோ மெதுவாக, "என்ன தீபா பேசறிங்க. அவ ஒன்னும் கிங்பின் குடும்பத்துல பிறந்து வளர்ந்தவ இல்ல." அவனது குரலில் கோபத்தைவிட வேதனை அதிகமாக இருந்தது. "ரத்தமும் சதையும் பார்த்து வளர்ந்தவ இல்ல. மரணம் பக்கத்துல நடக்குறதை பார்த்து பழகியவளும் இல்ல. அம்மா இல்லாத பொண்ணு தீபா. திவாகர் சார் வளர்ப்புல பட்டாம்பூச்சி மாதிரி அழகான சின்ன உலகத்துக்குள்ள வாழ்ந்தவ.
அவளுக்கு இந்த வாழ்க்கை பழகணும்னு சொல்லி சொல்லி... இன்னும் எத்தனை தடவை அவளை உயிரோட மோத கற்றுக்கொடுக்கப் போறீங்க? பேசாம டாக்டர் எல்லாம் படிக்க வேண்டாம். வீட்டுக்குள்ளயே இருக்க சொல்லுங்க" என்றான். தீபா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
அப்போது "யதுசார்..." ஷ்ரத்தாவின் குரல் கேட்டது.
அவள் போனை ஸ்பீக்கரில் வைத்திருந்தாள். ஷ்ரத்தா அருகில் வந்து அமர்ந்திருந்தாள்.
ஷ்ரத்தா மெதுவாகப் பேச ஆரம்பித்தாள். "சிங்கப்பூர்ல இருந்தப்போ வீட்டுக்குள்ளேயே இருந்தேன். அதனால என்ன? கொலை முயற்சி நடக்கலையா?" அவளது குரலில் எந்த நடுக்கமும் இல்லை.
"நீங்க சொன்ன மாதிரி... இதெல்லாம் பார்த்து வளர்ந்தவ இல்லை நான். ஆனா.." அவளது பார்வை சத்ரியனின் புகைப்படத்தில் நிலைத்தது.
"என் கண்ணுக்கு முன்னாடியே ஒருத்தனை கொலை பண்ணி, ரத்தமும் சதையும் வழிய உயிர் போறதை பார்த்திருக்கேன். ஏன் அதை செய்த அந்த மனிதனோட வாழ்ந்திருக்கேன்." அவளது குரல் இன்னும் உறுதியானது.
"அதனால இப்ப என்ன வந்தாலும் பார்த்துக்கறேன் சார்." ருத்ரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
"தீபா இருக்காங்க. நந்திதா இருக்காங்க. லட்சுமி இருக்காங்க. வீட்டுக்குள்ளேயே போதுமான பாதுகாப்பு இருக்கு. அந்த போலீஸ்கிட்ட சொல்லுங்க..." அவள் ஒரு நொடி நின்றாள்.
"அவர் வேற மப்டியில வந்து என் பின்னாடி வேலை பார்க்க வேண்டாம்." ருத்ரனின் புருவம் சுருங்கியது.
"அவர் அவரோட வேலையை பார்க்க கிளம்ப சொல்லுங்க." என்றாள். அடுத்த நொடி... "ஏன்டி சாகடிக்கற?" என்ற ருத்ரனின் கர்ஜனை போனில் ஒலித்தது.
தீபா உடனே ஷ்ரத்தாவை பார்த்தாள். ஷ்ரத்தா ஒன்றும் சொல்லவில்லை. ஒரே ஒரு கண்சாடை. தீபா உடனே அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அறையில் சில நொடிகள் அமைதி. யதுநந்தன் ருத்ரன் மட்டும் போனில் இருந்தனர்.
"ருத்ரன்..."
"என்ன?"
"நீங்க கிளம்புங்க." என்றான்.
"நான் இங்கயே இருக்கேன்." என்றான்.
"இல்ல ருத்ரா அவ உன் மேல கோபமா இருக்கா. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு 'டி' போட்டு பேசற. அதெல்லாம் தப்பு ருத்ரன்." என்று கூற யதுநந்தன் குரலை அழுத்தினான்.
"நான் உடனே போய் ஷ்ரத்தாவை பார்த்துக்கறேன். எனக்கு வெளியே ஒரு கிளைன்ட் இருக்காங்க. அவங்களை இன்னொரு நாள் பார்த்துக்கறேன்னு சொல்லிடறேன்." ருத்ரன் எதுவும் பேசவில்லை.
'அவ பாதுகாப்பா இருக்கா என்பதை நான் பார்த்துக்கணும். எனக்கு நிம்மதியில்லாம அவளை எப்படி தனியா விடறது?' என்று துவண்டவனாய் அங்கேயே இருந்தான்.
மாலை நேரம் மெதுவாக இருளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்களுக்கு முன்பு வரை வெயில் இருந்த வானம், திடீரென்று கருமையாக மாறியது.
மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டு திரண்டன. காற்றும் வேகமாக வீசத் தொடங்கியது.
பங்களாவை சுற்றியிருந்த உயரமான மரங்களின் கிளைகள் சலசலத்தன. அதற்குள் அதிவேகமாய் சாரல் ஆரம்பித்தது.
அந்த சாரலும் சடசடவென மழையாக மாறியது.
ஆனால் இயற்கையே துரத்தினாலும் இங்கிருந்து போக மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் ருத்ரன் மட்டும் அங்கேயே நின்றிருந்தான்.
பங்களாவின் பெரிய இரும்புக் கேட்டை விட்டு ஒரு அடிகூட நகரவில்லை. அவன் பைக் அருகில் நின்று, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, மழையைப் பொருட்படுத்தாமல் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.
முதலில் சட்டையில் சில துளிகள் மட்டுமே விழுந்தன.
பிறகு மழை அதிகரித்தது. அவனது தலைமுடி முழுவதும் நனைந்தது. சட்டை உடலோடு ஒட்டியது.
முகத்தில் வழிந்த மழைத்துளிகளை கூட துடைக்காமல், அவன் அதே இடத்தில் நின்றான்.
அங்கே இருந்த பாடிகார்ட்ஸ் சிலர் அவனை கவனித்தனர்.
ஒருவன் அருகில் வந்து, "சார்... மழை அதிகமா வருது. நீங்க கிளம்பலாமே?" என்றதற்கு ருத்ரன் பதில் சொல்லவில்லை.
அந்த மனிதனையே ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பங்களாவை பார்த்தான்.
பாடிகார்ட் புரிந்து கொண்டு விலகினான். அங்கே இருந்த பாதுகாப்பு வீரர்கள் ரெயின்கோட் அணிந்து கொண்டு தங்களது நிலைகளுக்குத் திரும்பினர்.
யாரும் மழையை பொருட்படுத்தவில்லை. அவர்களது வேலை வெயில் மழை புயல் என்றாலும் பாதுகாப்பு வளையத்தில் நின்று காப்பாது.
அந்த பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே நின்றிருந்த ஒரே மனிதனின் மனநிலை மட்டும் அவர்களுக்கு புரியவில்லை.
பங்களாவின் உள்ளே, கண்ணாடி சுவரின் அருகே நின்றிருந்தாள் ஷ்ரத்தா.
வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. அவளது பார்வை தற்செயலாக வெளியே சென்றது.
அடுத்த நொடி அவள் புருவத்தை சுருக்கினாள். ருத்ரன் இன்னும் அங்கேயே இருந்தான். தொப்பலாய் நனைந்து போய், பைக்கில் சாய்ந்தபடி, கைகளை கட்டிக்கொண்டு, அவள் இருக்கும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"காட்..." என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள். அவள் வேறு பக்கம் திரும்பினாள்.
இரண்டு நிமிடங்கள் கழித்து. மீண்டும் அந்த கண்ணாடி வழியாக பார்த்தாள். அவன் அங்கேயே இருந்தான். "இவனுக்கு வேற வேலையே இல்லையா?" என்று பற்களை கடித்தாள்.
அருகில் நின்றிருந்த தீபா எதுவும் பேசவில்லை.
ஷ்ரத்தா அவளை பார்த்து, "அவன் ஏன் இன்னும் போகலை? எந்த பாடிகார்ட்டிடமாவது சொல்லி இடத்தை விட்டு அப்புறப்படுத்துங்க." என்றாள்.
தீபா சற்று தயங்கினாள்.
"சொன்னோம் மேம் ருத்ரன் சார் கேட்கலை." என்றதும் ஷ்ரத்தா கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்தாள்.
"இரிட்டேட்டட் இடியட்.." மீண்டும் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள். மழை இப்போது இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது.
ருத்ரனின் பைக் முழுவதும் நனைந்து கொண்டிருந்தது.
அவன் மட்டும்... அவள் இருக்கும் இடத்தைவிட்டு பார்வையை நகர்த்தாமல் நின்றுகொண்டிருந்தான்.
ஷ்ரத்தாவின் முகத்தில் எரிச்சல் அதிகரித்தது. "இவன் நனைஞ்சு நின்னா எனக்கென்ன?" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் நின்றாள். திரும்பிப் பார்த்தாள். அவனது உடல்நிலை அவளது கண்களில் பட்டது. நனைந்த தலைமுடி, சட்டையில் வழியும் தண்ணீர், மழையில் குளிர்ந்து போன முகம். அப்படியிருந்தும் அவன் இன்னும் அசையவில்லை. அவளது உதடுகள் இறுகின.
"சரியான பைத்தியக்காரன்." என்று முணுமுணுத்தாள்.
இரண்டு அடிகள் சென்றதும் மீண்டும் திரும்பி வந்தாள். கண்ணாடி அருகே நின்றாள்.
இந்த முறை ருத்ரனை நேராக பார்த்தாள். ருத்ரனும் அந்த நொடியே அவளை பார்த்தான்.
இருவரின் பார்வையும் கண்ணாடியின் இருபுறமும் சந்தித்தது.
மழை... அவர்களுக்கிடையே மட்டும் ஒரு திரையாக விழுந்து கொண்டிருந்தது.. அவன் பார்வையில் இருந்த பிடிவாதம் மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது.
'நான் போக மாட்டேன்.' என்று அந்த பார்வையே சொல்லியது. ஷ்ரத்தா எரிச்சலுடன் தலையை ஆட்டினாள். "இவனை திருத்தவே முடியாது..." என்று உதட்டுக்குள் முணுமுணுத்துவிட்டு, இந்த முறை அவளது நடை முன்பைவிட சற்று வேகமாக இருந்தது.
அவளுக்கே மனம் கேளாமல், அவனுக்கு ஒரு டவல் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் வந்து சென்றது.
தன்னை புல்லட் தாக்கிய நேரம், அவன் துடித்த துடிப்பும், அவன் கையில் ஏந்தி அறைக்கு அழைத்து சென்றதும் நினைத்து பார்த்தாள்.
இதற்கு முன் கூட, ராயன் வயிற்றில் இருந்த சமயம், பிரசவவலி ஏற்பட, அவளை அள்ளிக்கொண்டு பதட்டமாய் ஓடினான்.
அதெல்லாம் நினைத்து, மனிதாபிமானம் துளிர்க்க, தீபாவை பார்த்து, ''அவனை உள்ள கூப்பிடுங்க" என்று ஆணையிட்டாள்.
தீபா புரியாமல் ஆச்சரியப்பட, நந்திதாவோ "இதோ.. அழைச்சிட்டு வர்றேன் மேம்" என்று ஓடினாள்.
லட்சுமியிடம் "மழைக்கு சூப் போடுங்க. அப்பறம் ராயனிடம் டவலை கொடுத்து டிரஸ் மாத்த ஏற்பாடு செய்யுங்க" என்றாள்.
லட்சுமியும் தீபாவை பார்த்து ஷ்ரத்தாவின் செய்கைக்கு அர்த்தம் புரியாது தலையாட்டினார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 38)
அடேய்.. பிடிவாதத்திற்கு பிறந்தவனே..! ஷ்ரத்தா உனக்கு கிடையாது, அவ சத்ரியனுக்கும் அந்த குழந்தைகளுக்கும் மட்டும் தான். அந்த குழந்தைகள் தங்களுக்கு ஒரு அப்பா வேணுமின்னோ, ஷ்ரத்தா தனக்கொரு புருசன் வேணுமின்னோ என்னைக்கும் சொல்லப் போறதில்லை. அப்படியிருக்கும்பொழுது நடுவில நீ எதுக்குடா வரணும்ன்னு நினைக்கிற..? உங்கம்மாவும்
அந்த குழந்தைகள் ராகவனோட வாரிசா வரதை விரும்பப் போறதில்லை. வீண் முயற்சி எதுக்கு ? பேசாமல் உன் வேலையைப் பார்த்திட்டு போவியா...! அவ எப்ப சத்ரியனுக்கு கழுத்தை நீட்டினாலோ... அந்த நிமிசத்திலிருந்து அவ வாழ்க்கையில இது மாதிரி அட்வான்சரெல்லாம் நிறைய சந்திச்சே ஆகணும். நித்ய கண்டம் பூரண ஆயுசு தான் அவளோட தினசரி வாழ்க்கை முழுக்க.
அவளை அவ போக்குலயே வாழ விடுங்கடா.. வாழு, வாழ விடு.
😐😐😐
CRVS (or) CRVS 2797
Ruthran u idiot. Sharadha is having soft corner with u in humanitarian aspect. Dont think too much. If chatriyian arrives he will stop this idiotic things. Very intresting sis.
Interesting sister
Seekirama sathiyan vantha inum interesting ah irrukum sister
intha ruthran kapathuran un mela care panren solli veruppu vara vachitan puriutha illaya unnoda pathukappu vida chathriyan ellam panitu tha poi irukan nee avan vantha adanguva pola athuvarai ippadi tha loose thanama panitu irupa pola
Ivan pidivatham konjam illa rombhavae athigam than .
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 329 Topics
- 1,582 Posts
- 0 Online
- 420 Members
