மதுர ஜில்லா மச்சானே!-50
அத்தியாயம்-50
அடுத்த நாள் காலை ஜன்னல் திரை வழியாக சூரிய ஒளி அறைக்குள் பரவியபோதுதான் காவ்யா மெதுவாக கண் திறந்தாள்.
தலை லேசாக விண்விண்ணென்று தெறித்தது.
"அவுஃச்..." என்று நெற்றியைப் பிடித்துக் கொண்டவள், நேற்றிரவு நடந்ததை நினைக்க முயன்றாள்.
ரிசப்ஷன் நடைப்பெற்ற போது, விருந்தினர்கள் வருகையில், அகிலனுக்கு மோதிரம் மாற்றி முத்தமிட்டப்பிறகு அதன் சந்தோஷத்தை தாளயியலாமல், வொயின் எடுத்திருந்தாள்.
அகிலன் இருக்க அளவுக்கு அதிகமாக எடுத்ததும், அதற்கு மேல் நினைவு மங்கலாக இருந்தது.
பக்கத்தில் கை நீட்டிப் பார்த்தாள். படுக்கை காலியாக இருந்தது. 'அகில்...?' என்று மெதுவாக அழைத்தாள்.
பதில் இல்லை என்றதும், குளியலறையைப் பார்த்தாள். அங்கும் இல்லை. "எங்க போயிட்டார்?" என்று அவசரமாக எழுந்தவள், பல் கூட சரியாக தேய்க்காமல், ஒரு நீளமான மேக்ஸியின் மேல் ஓவர் கோட் அணிந்து கீழே இறங்கி வந்தாள்.
ஹாலில் ராஜாராம் மட்டும் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
"Good morning, Dad."
"Good morning, Kavya."
"அகில் எங்கப்பா?" என்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். ராஜாராம் செய்தித்தாளை மடித்து வைத்தார்
மகளை சில நொடிகள் அமைதியாகப் பார்த்தார்.
"காவ்யா..." அவரது குரலே கொஞ்சம் மாறியிருந்தது.
"நீ தெரிஞ்சு பண்ணறியா... தெரியாம பண்ணறியான்னு எனக்கு தெரியலை." என்று புதிரிடும் வார்த்தையால் காவ்யாவின் புருவம் சுருங்கியது.
"என்னப்பா அவர் எங்க?" என்றாள்.
"நேத்து ரிசப்ஷன்ல நீ நடந்துக்கிட்டது... சரியில்லைமா" என்றதும் காவ்யா எதுவும் பேசவில்லை.
"இனியன் மாதிரி இங்க படிச்சு வளர்ந்த ஒரு பையனே இருந்தாலும் கூட, அத ஏத்துக்க மாட்டான். அப்படியிருக்க மாப்பிள்ளை அகிலன் மதுரையில பிறந்து வளர்ந்தவர். அவரோட வாழ்க்கை, பழக்கம், கலாச்சாரம் வேற. நீ உன் பாட்டுக்கு குடிச்சிட்டு, நண்பர்களோட ஆடிட்டு இருந்த. அவர் என்ன நினைச்சிருப்பாரோ." என்றதும் காவ்யா உடனே பதறினாள்.
"அகில் ஏதாவது சொன்னாராப்பா?" என்றாள்.
"இல்ல." ராஜாராம் மெதுவாக தலையசைத்தார்.
"காலையில எழுந்ததும் 'Good Morning, மாமா'ன்னு சிரிச்சு சொல்லிட்டு வெளியே போயிட்டார். வீட்டைச் சுற்றி இருக்கிற பூச்செடிகளை பார்த்துக்கிட்டு இருக்கார். இங்க எல்லாம் வித்தியாசமன பூவும் இருக்கு. காலையில கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்னு சொன்னார். என்கிட்ட உன் நடவடிக்கை பத்தி ஒரு வார்த்தை கூட பேசலை." சிறிது இடைவெளிக்குப் பிறகு "நானும் எதுவும் கேட்கலை. ஆனாலும் மாப்பிள்ளையிடம் போய் ஒரு 'சாரி' கேளு." என்றார்.
காவ்யா அமைதியாக நின்றாள்.
"அகிலன் ரொம்ப நல்ல பையன். ஆனா... தெரியாம நீ ஏதாவது செஞ்சு... உன் வாழ்க்கையையே கெடுத்துடுவியோன்னு பயமா இருக்கு." அவள் தந்தையை உறுத்திப் பார்த்தாள்.
"ஜேனட் வழியா உனக்கு இந்த நாட்டுப் பழக்கம் வந்திருக்கலாம். ஆனா தமிழ்நாட்ல இதெல்லாம் தப்பு தான்.
நம்மள புரிஞ்சுக்கிற மனுஷன் கிடைச்சிருக்கார். அவரை கஷ்டப்படுத்திடாத." என்று சொல்லிவிட்டு ராஜாராம் மெதுவாக வெளியே நடந்தார்.
காவ்யா வேகமாக தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
காலையின் பனித்துளிகள் இன்னும் புல்லில் ஒட்டியிருந்தன. தூரத்தில் ஒரு செடியின் அருகே நின்று அதன் மலரை குனிந்து நுகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன். ஒரு கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்தபடி, அந்த மலரையே ரசித்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் காவ்யாவின் நடை வேகமானது.
"ஹாய்... குட் மார்னிங்." என்றவள் குரல் கேட்டதும்...
அகிலன் திரும்பிப் பார்க்காமலேயே, "மார்னிங்." என்றான்.
காவ்யா உதட்டைச் சுழித்தாள்.
"ஹலோ..." இப்போது அவன் திரும்பிப் பார்த்தான்.
"நான் 'குட் மார்னிங்' சொன்னேன். நீங்க 'மார்னிங்' மட்டும் சொல்றீங்களே?"
அகிலன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
"எனக்கு எப்பவுமே மார்னிங் குட்டாத்தான் ஆரம்பிக்கும்." என்றான்.
"சாரி." என்று கூற அகிலன் திரும்பி நேராக பார்த்தான்.
"நேத்து கொஞ்சம் சந்தோஷத்துல வொயின் குடிச்சிட்டேன். அப்பா நீங்க தப்பா எடுத்துக்க போறிங்களோனு சாரி கேட்க சொன்னார்." என்றாள்.
"ஓ.. இந்த சாரி அப்ப மாமா கேட்க சொன்னதுக்காகவா?" என்றான்.
''ம்ம்... எனக்கு நான் ஏதும் தப்பு பண்ணியதா தெரியலையே. என் புருஷன் அகிலை நான் முதல் முறை உதட்டில் முத்தமிட்டேன். அந்த சந்தோஷத்துல அளவுக்கு அதிகமாக டிரிங்க்ஸ் எடுத்துக்கிட்டேன். டிரிங்க்ஸ் இங்க நார்மல் தானே." என்றாள்.
அகிலன் "நான் ஏதும் சொல்லலையே." என்றான்.
"இல்லை.. அப்பா சொன்னார்.. நீங்க ஏதாவது தவறாக நினைக்க வாய்ப்பிருக்குனு சொல்ல சொன்னார்.
நீங்க தப்பா எடுத்துக்கிட்டிங்களா." என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
"நான் கட்டின தாலியை டிரஸுக்கு மேட்சா இருக்காதுனு கழட்டி வச்சியிருப்பனு நான் நினைச்சேன். ஆனா தாலி தமிழர் பாரம்பரியத்துல கட்டியது. அதுவும் தாலி கட்டி முப்பது நாள் கூட முடியலைனு யோசித்து, அதுக்கு மதிப்பு தந்து, உன் ரிசப்ஷன் டிரஸ்ல, அந்த வொயிட் கவுனுக்கு அணிந்தப்பவும், மத்தவங்க கண்ணுக்கு தெரியாம பார்த்துக்கிட்ட, அப்படியிருக்க எங்க எப்படி நடக்கணும்னு உனக்கு தெரியாதா." என்று அவள் மேக்ஸி உடையிலிருந்து வெளியே மஞ்சளாக அவன் கட்டிய தாலி மார்பில் புரள, அதை சுட்டிக் காட்டினான்.
"சோ... நேத்து நடந்துக்கிட்டதுல நான் தப்பா யோசிக்கலை போதுமா..?" என்று அவள் முகத்தில் அலைப்பாய்ந்த சிகையை செவி மடலுக்கு ஓதுக்கி வைத்து கூறினான்.
காவ்யா உடனே அகிலனை கட்டிக் கொண்டாள்.
அகிலனோ "காவ்யா.. கார்டன்ல இருக்க." என்றான்.
"சோ வாட் மேன். நீ எனக்குரியவன்" என்று கட்டிக் கொண்டாள்.
"ம்கூம்.. அதான் நேத்தே உலறிட்டே இருந்தியே" என்றான்.
"எ...என்ன உலறினேன்." என்று பயந்தாள்.
"அகில்.. அகில்னு.. ஐ லவ் யூடா... டூ யூ லவ் மீ? ஐ லவ் யூ காவ்யானு சொல்லு. நான் உன்னை ரொம்ப லவ் பண்ணறேன்.
இதுவரை யாரிடமும் இந்த மாதிரி பழகியது இல்லை. இனியன் எல்லாம் அபெக்ஷன். நீ தான் ட்ரூ லவ். ப்ளா ப்ளா.." என்று தோளைக் குலுக்கினான்.
காவ்யா மெதுவாக தலைகுனிந்து, "நான் உலறிட்டேனா.. காதலிப்பதா சொல்லிட்டேனா?" என்று கேட்டாள்.
''ம்ம்ம்." என்றான்.
''பச்.. சர்பிரைஸா எங்கயாவது போய் பெருசா அசத்தி சொல்ல நினைச்சேன். பச்.. புஸ்ஸுனு சொல்லிட்டேனா?" என்றாள் வருத்தமாய்.
"நீ எப்பயிருந்தோ உன் லவ்வை சொல்லிட்ட காவ்யா. நேத்து தான் வாயை திறந்து சொல்லியிருக்க." என்றான்.
"எப்பயிருந்தேவா? என்று குழம்ப, "என்னை கல்யாணம் செய்ய பிடிச்சிருக்குனு தானே உங்கப்பாவிடம் புஷ் பண்ணின. மேபீ.. அப்பவே உன் வாழ்க்கையை அரை மனதா என்னிடம் ஒப்படைக்க நினைச்சிருக்கலாம்.
ஆனா கல்யாணத்துக்கு பிறகு நீ நிறைய என்னை மொத்தமா நேசிக்கறனு தெளிவா தெரியும்.
அதுலயும் நேத்து நைட்டு உலறதுக்கு முன்ன, ரிசப்ஷன்ல லிப் கிஸ்ஸடிச்சியே" என்றான்.
காவ்யா தலைகுனிந்து உதட்டை கடிக்க, "அந்த அதிர்ச்சியை நான் சத்தியமா எதிர்பார்க்கலை. அதுவும் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு என்னை திரும்ப திரும்ப கேட்டியே. அதுவும் எதிர்பார்க்கலை." என்று சிரித்து வீட்டுக்கு நடந்தபடி முன்னேறினான்.
அகிலன் ஹாலில் நடந்து படிக்கட்டில் நடக்க, காவ்யா வேகமாக பின் தொடர்ந்தவாறு, "அகில் அகில் அப்ப உன் பதில் என்ன?" என்று ஹாலில் நிறுத்தி கேட்டான்.
மகளும் மாப்பிள்ளையும் ஏதோ நேற்றைய விஷயங்களை பேசிக்கொள்கின்றனர் என்று அறிந்து, ராஜாராம் அவர்களை ஏறிடாமல் நாசூக்காய் ஏற்கனவே படித்த பேப்பரை பார்வையிட்டார்.
"பதிலா.. இங்க வா சொல்லுவாங்க" என்று கோபமானவனாக படிக்கட்டில் ஏறினான்.
"பச்.. அகில்" என்று பின்னாலே செல்ல, 'மாப்பிள்ளை கோபமா இருக்காரோ? நாம நடுவுல போய் பேசலாமா?' என்று ஏறிட்டார்.
காவ்யா அகிலன் பின்னால் அகில் அகில் என்று செல்வதை கண்டு, 'மாப்பிள்ளை ஒருவேளை கண்டிச்சா, நாம தடுப்பது போல இருக்கும். வொயின் என்றாலும், இனி அங்கயே வாழறவளுக்கு இந்த பழக்கம் வேண்டாம். ஏதாவது பெரிதா நம்மிடம் வந்தா பார்ப்போம். காவ்யா அந்தளவுக்கு விடமாட்டா. மாப்பிள்ளையும் அந்தளவு போகமாட்டார்னு நம்புவோம்' என்று அவருக்கே கூறிக்கொண்டார்.
"அகில் டூ யூ லவ் மீ? நீ பதில் சொல்லாம வந்தா என்ன அர்த்தம்? நான் உனக்காக காத்திருக்கேன்னு சொன்னேன். ஆனா என்னால காத்திருக்க முடியலைப்பா.
'டேய் நீ என்னோட பெட்டர் ஆஃப். பக்கத்துல படு. என் மேல கையை போடு. நாம ஒன்னும் லவ்வர்ஸ் இல்லை. எட்டி எட்டி கண்ணியத்தோட பழக. நான் உன் பொண்டாட்டி என்னை ஹக் பண்ணு. என் கையை டைட்டா பிடிச்சிட்டு ஊர் சுத்தணும். நிறைய நிறைய ஆசை வருது அகில்" என்று வரிசையாக கூற, தங்கள் அறைக்கு வந்ததும் கதவை சாற்றினான் அகிலன்.
"ஸ்டாப் ஸ்டாப்.. போய் குளிச்சிட்டு வா. ஊர் சுத்தலாம்" என்றான்.
"நான் என்னென்வோ சொன்னேன். லாஸ்டா பேசியதுக்கு மட்டும் ஆன்சர் பண்ணற" என்றாள்.
"ஒவ்வொன்னா அப்பறம் ஆன்சர் சொல்லறேன். இப்ப குளி. ஆங்.. ஏய்.. எங்கம்மாவுக்கும் தங்கைக்கும் இந்த பழக்கத்தை கொண்டு வராம, மதுரையில இதே பழக்கம் இல்லாம பார்த்துக்கோ" என்று கேலி செய்தான்.
''அகில்" என்று துரத்த, அவளை மெத்தையில் கிடத்தி, அவனும் இணைந்தே உருண்டான்.
திண்மம் கொண்ட தோள் அகிலனுடையது மூச்சு வாங்க, மென்மையான காவ்யா தேகமும், மேக்ஸி அணிந்து மூச்சு வாங்கினாள்.
காவ்யாவின் கண்களில் தெரிந்த ஏக்கமும், குழந்தைத்தனமான பிடிவாதமும் அவனை இன்னும் தூரம் நிற்க விடவில்லை. இதுவரை அவளைத் தானாக நெருங்க தயங்கியவன், அந்த நொடி எல்லா தயக்கத்தையும் ஒதுக்கி வைத்தான்.
அகிலனின் முதல் இதழ்முத்த மழையில், சுவாசிக்க நேரம் கூட ஒதுக்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தனர். அகிலன் விலக நினைத்தாலும், காவ்யா அவனை விடுவதாக இல்லை
அகிலனாகவே "போ.. குளிச்சிட்டு வா. உன்னோட பேசணும். ஊரை ரவுண்ட்ஸ் அடிச்சிட்டே பேசலாம்" என்றான்.
காவ்யாவோ அவன் சட்டை காலரை இறுகப் பற்றியிருந்தவள், "பேசி தான் ஆகணுமா?" என்று கேட்க, "கண்டிப்பா... அப்பறமா வேண்டுமின்னா நீ ஏதோ கேட்டியே.. அதுக்கு பதில் சொல்லறேன்" என்றான்.
பதில் என்றதும் காவ்யாவோ 'ஏதோ கேட்டேனா.. அடேய்.. இப்பவே சொல்லிடேன்' என்ற விதமாக பார்வை பார்த்தாள்.
அகிலனோ இது சரிப்பட்டு வராதென, காவ்யாவை அள்ளிக் கொண்டு குளியலறைக்கு கொண்டு சென்று பாத் டப்பில் போட்டுவிட்டு, 'கம் குயிக்' என்று சிரித்து நகர்ந்தான்.
"அகில்.. அகில்.. நில்லு." என்று கூப்பிட கூப்பிட, "நோ.. நோ.. உன் பார்வையே சரியில்லை. நேத்து அடிச்ச வொயின் இன்னும் உன் கண்ணுக்குள்ள இருக்கு. முதல்ல குளிச்சிட்டு வா" என்று குளியலறை கதவை சாற்றி வெளியேறினான்.
'யூ லவ்வி இடியட்.' என்று உலறி பாத்டப்பில் அகிலன் தந்த இனிப்பான முத்தத்தில் பாகாக கரைந்தவளாக நினைத்து பார்த்து மீண்டும் நினைவுக்குள் மூழ்கி ஏங்கினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 50)
இந்த ஊர்ல இருக்கிறவரைக்கும் தான் ரெட் வைன், க்ரீன் வைன் எல்லாம், மதுரைக்கு வந்துட்டால் வெறும் கழனி தண்ணித்தான்னு
இப்பவே உனஇ பொண்டாட்டிக்கு அழுத்தி சொல்லிடு அகில்.
அது சரி, இவன் அவ கிட்ட அப்படி என்ன பேசப்போறான் ? இன்னுமா இவங்க பேசிக்கிட்டே இருக்கிறாங்க. சரியான வாய்ச்சொல்லில் வீரன் தான் இந்த அகில்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
6 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
2 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 325 Topics
- 1,578 Posts
- 2 Online
- 420 Members
