Forum

பேருந்தில் நீயெனக்க...
 
Notifications
Clear all

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-18

6 Posts
6 Users
5 Reactions
23 Views
(@praveena-thangaraj)
Posts: 269
Member Admin
Topic starter
 
[#362]

அத்தியாயம்-18

  லாவண்யா அவசரமாய் டிபன் பாக்ஸை கட்டவும், இலக்கியா "என்ன எக்ஸாம்ல எல்லாம் நல்ல மார்க்கா முகமே பிரகாசமா இருக்கு" என்றார். 

"அது வந்து சித்தி.. ஆ..ஆமா சித்தி. அக்காவுக்கு நிச்சயதார்த்தம், எக்ஸாம்லயும் நல்லா ரிசல்ட் அந்த ஹாப்பி" என்று கூறினாள். 

உண்மையில் அதுவும் காரணங்கள் என்றாலும், சாரதியிடம் காதலை சொன்னப்பிறகு வருகின்ற கூடுதல் மகிழ்ச்சி என்று லாவண்யாவுக்கு புரிந்தது.

  கல்லூரிக்கு கிளம்பியவள், வாசலை தாண்டும் நேரம், சாரதி பைக்கில் அவளை தாண்டியே சென்றான். 

   தேவியை அழைத்துக் கொண்டு டிப்போ வரவும், பதினைந்து நிமிட பயணத்தில் கழிய அதற்குள், சாரதி அவனுக்குண்டான கையெழுத்து போட்டு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து சேர சரியாக இருந்தது. 

ஏழு மணி பேருந்து பயணிக்க ஆரம்பித்தது. சாரதி பேருந்தில் ஏறியதும் விசிலித்து வண்டி கிளம்பியது. மெதுவாக டிப்போவிலிருந்து வெளிவந்த பேருந்தில், அவனது பணியை செவ்வென செய்ய, "என்ன முடிவு எடுத்திருக்கிங்க?" என்றாள். 

  "என்ன தைரியம் உனக்கு? ஆங்.. இதை இத்தோட நிறுத்திக்கோ. நமக்குள் செட்டாகாதுனு சொல்லிட்டேன் திரும்ப திரும்ப என்ன முடிவுன்னா என்ன சொல்லறதாம்." என்று கடிந்தான். வாயை திறக்காமல் சத்தம் கேட்காமல் இத்தனை கூட்டத்தில் பேசுவதற்கு கைதேர்ந்திருந்தான். 

  அவன் பாட்டிற்கு பேசிவிட்டு ஒரு இடத்தில் நில்லாமல் அவளை விட்டு தள்ளி சென்றியிருந்தான். 

வேண்டுமென்றே அவளை விட்டு விலகி நிற்பது நன்றாகவே தெரிய, லாவண்யாவோ கோபமாய் பார்வையிட்டாள். 

தேவியோ "கொஞ்சம் டைம் கொடுடி." என்று எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தாள். 

எப்படியோ அன்றைய நாளில் பெரிதாக மீண்டும் பேச்சை தொடராமல் கல்லூரி வரவும் இறங்காமல் இருக்க, தேவியோ "இரண்டு அபிராமி தியேட்டர் அண்ணா" என்று டிக்கெட் எடுத்தாள்‌. "இன்னிக்கும் காலேஜ் போகலையாம்மா" என்று கேட்டான் சாரதி. 

"படம் பார்க்க போறதா ஒரு வாரம் முன்ன பிளான் போட்டுட்டோம் அண்ணா." என்றாள். 

    தேவி அண்ணன் என்று கூறுவதால், சற்று உரிமை எடுத்தவனாக, "அவங்களுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க. இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு" என்றான். லாவண்யா அவனை உறுத்து விழித்தாள்.‌

  தேவி லேசாக சிரித்து, "அதெல்லாம் ஸ்டாப் தாண்டி பயணம் செய்ய ஆசைப்படறா அண்ணா. நீங்களாச்சு அவளாச்சு" என்றாள். 

  நிறுத்தங்கள் கடக்க, அவர்களுக்கான ஸ்டாப் வந்ததும் இருவரும் இறங்கிவிட்டார்கள். சாரதியோ அப்பொழுது தான் லாவண்யா படிக்கட்டில் இறங்குவதை பார்த்தான். நல்லபடியாக படியில் இருந்து இறங்கிவிட்டால் விசில் ஊத முயல, அவளோ ஒழுங்கு காட்டி சென்றாள். 

சாரதிக்கு உதட்டில் புன்னகை அரும்பியது. அவன் இதெல்லாம் காணாதவன் அல்ல. ஒரு காலத்தில் அவன் கல்லூரியில் அடியெடுத்து வைத்த போது இந்த மையல் பார்வைகள் எல்லாம் கல்லூரி பெண்கள் தன்னை நோக்கி வீசுவதை அனுபவித்து இருக்கின்றான். 

  'சாரதி சாரதி' என்று ஓடி வந்து பேசி, பாடத்தில் சந்தேகம் கேட்கும் சாக்கில், அவனோடு நிற்பதை கூட ஆனந்தமாக எண்ணும் பெண்களை எல்லாம் கடந்தவனே. அப்பொழுது எல்லாம் ஜம்பமாக தோன்றும்.   

இப்பொழுது அப்படியா... நண்பர்கள் கூட கண்டெக்டர் என்றதும் நட்பை குறைத்துக் கொண்டார்கள். மரியாதை அதுவும் சற்று குறைந்துவிட்டது. 

இத்தனைக்கும் நண்பன் ஒருவனிடம் 'சம்பளம் எவ்வளவு டா' என்று கேட்டப் பொழுது 16000 டா' என்று பெருமையாக கூறினான். 

சாரதி தன்னை விட குறைவான சம்பளம் என்று கூட கூற தோன்றியது. ஆனால் நண்பனின் மகிழ்ச்சியை அழிக்க அவன் விரும்பவில்லை. 

   இங்கே பெரும்பாலும் சொல்லப்படும் வேலைகள் பெருமையாக இருக்கவே மனிதர்கள் நினைக்கின்றனர். 

  மற்றபடி எல்லாம் 'இதானா' என்ற தாழ்வான பார்வை புரிவது வாடிக்கையாகிவிட்டது. 

அப்படியிருக்க இந்த லாவண்யாவிற்கு எங்கிருந்து தன் மீது காதல் வந்தது என்று புரியவில்லை. இனக்கவர்ச்சி என்பார்களே அப்படியும் தெரியவில்லை. அவள் தெளிவான பெண்ணாக இருக்கின்றாள். 

நிஜமாகவே அவள் தன்னை தன் குணத்தை நேசிக்கின்றாளா? என்று சிந்தனையுடன் பேருந்தை வழிநடத்தினான். 

--

     அபிராமி தியேட்டர் நடந்து வந்து லாவண்யா நின்றதும், டிக்கெட் எடுத்தார்கள். 

    "தேவி... லாவண்யா ஏன்டி சிரிச்சிட்டே இருக்கா" என்று கூட வந்த தோழி கேட்கவும், "அவளா.. அவங்க அக்கா கல்யாணம் முடிவாகிடுச்சு. அந்த சந்தோஷத்துல சுத்தறா" என்று மழுப்பினாள். 

லாவண்யாவை சுரண்டி தேவியோ "ஈஈ...ஈ..னு இளிக்காதடி. எல்லாரும் நீ லவ் பண்ணறதை கண்டுபிடிச்சிட போறாங்க" என்றாள். 

"படத்தை பாரு" என்று லாவண்யா கூறிட, "பைத்தியம் முத்திடுச்சு இவளுக்கு" என்று தேவி முனங்கிவிட்டு, படத்தை பார்த்தார்கள். 

ஏனோ அன்றைய சினிமாவில் கூட நாயகனாக சாரதியை தான் கற்பனை செய்துக் கொண்டிருந்தாள். 

  படம் முடிந்து வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட வந்தார்கள்.  

  எல்லாரும் பிரியாணியை ஆர்டர் செய்து விட்டு, ஸ்டார்டட் ஆர்டர் தந்துவிட்டு ஏசியில் ஜில்லென்று அமர்ந்தார்கள். 

"ஏன் தேவி... அந்த பஸ் இதே ரூட்ல திரும்ப எப்ப வரும்?" என்று கேட்க, சூப்பை ருசித்த தேவிக்கோ புரை ஏற, திக்குமுக்காட பார்த்தாள். 

  "நான் என்ன இதே வேலையா வச்சிட்டு சுத்தறேன்னா? நீயே அவரிடம் கேளு. அதான் நம்பர் வச்சிருக்கல?" என்றாள். 

  லாவண்யாவோ மற்ற தோழிகள் முன் காதலிப்பதை பகிரங்கப்படுத்த பிடிக்காமல், அமைதியாக இருந்தாள். ஆனால் "சாப்பிட்டிங்களா சாரதி" என்று அனுப்பியிருந்தாள்‌.

  இங்கே அன்னை தந்த காய்கறி சாதமும் வாழை வறுவலும், திறந்து சாப்பிட்டவன், போனை எடுத்து பார்த்தான். 

வாட்சப்பில் லயா என்ற குறுஞ்செய்தி வரவும், முத்து அண்ணாவையும் பக்கத்தில் சில டிரைவர் கண்டெக்டர் இருக்க, திருட்டுத்தனமாக அதை பார்வையிட்டான். 

படித்ததும் சிறுமுறுவல் கூடியது. அன்னை தந்தைக்கு பிறகு இந்த அக்கறையை லாவண்யாவிடம் தெரிய, பதில் அளிக்க முடியாது, அமைதியாக பேண்டில் வைத்தான். 

லாவண்யவோ 'பார்த்துட்டான்னு ப்ளூடிக் காட்டுது. ஆனா ரிப்ளை அனுப்பலை. இவனை' என்று சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள். 

  "நீங்க எங்க இருக்கிங்க? ரிட்டர்ன் வர்றப்ப உங்க பஸ் எப்ப வரும்" என்று கேட்டதற்கும் அவன் பதில் தரவில்லை. 

     ஹோட்டலில் பில் எல்லாம் ஒருத்தி மொத்தமாக தந்துவிட்டு, பிறகு டேலி செய்துக் கொண்டு தனி தனியாக காசை தந்துவிட்டனர். 

லாவண்யாவும் தேவியும் பேருந்திற்காக காத்திருந்தனர். 

"அந்த பஸ் எப்ப வரும்னு தெரிந்தா அதுலயே போகலாம். ரிப்ளை பண்ண மாட்டேங்கறார் தேவி" என்று சோகமாக கூறினாள்‌.

  "முதல்ல உன்னை காதலிக்கறேன்னு அந்த அண்ணா சொல்லுச்சா?" என்றாள்.

உதடு பிதுங்கி 'இல்லை' என்று நின்றவளிடம், "அப்ப வெயிட் பண்ணு. இப்ப பஸ் வந்துடுச்சு ஏறு" என்று சுட்டிக்காட்டினாள். அது சாரதி கண்டெக்டராக இருக்கும் பேருந்து இல்லை.

  ஆனால் சாரதி இந்த நேரம் எந்த இடத்தில் இருப்பானென தெரியாமல் தேவியையும் நிற்க வைக்க முடியாது. 

  பேருந்தில் ஏறியதும் பின்னிருக்கையில் இடம் கிடைக்க, லாவண்யா அமர்ந்துக் கொண்டு கண்டெக்டர் பக்கமே பார்வையை வீசினாள். 

   தேவியோ லாவண்யாவை சுரண்டி, "ஏன்டி... அங்கயே ஏன்‌ பார்க்கற. நீ சாரதி அண்ணாவை இமேஜின் பண்ணிட்டு வர்ற. ஆனா அங்க இருக்கற அந்த ஆளு. ஏதோ நீ அவரை வச்சகண்ணு வாங்காம பார்க்கறதா தலையை தலையை வாருறான். இந்த பக்கம் திரும்புடி" என்றாள்‌ தேவி.

   லாவண்யாவோ எரிச்சலோடு திரும்பி கொண்டாள். "பாரு.. இந்த கண்டெக்டருக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையாவது மினிமம் இருக்குமா? ஆனா பார்த்ததுக்கே தலையை வாருறான், திரும்ப சிக்னல் தர்றான். ஆனா அந்த மனுஷனிடம், என்‌ போன் நம்பர் இருக்கு. நான் காதலிக்கறேன்னு சொல்லியும், என்னை கண்டுக்காம தவிர்க்கறார். இத்தனைக்கும் வயசு பையன் தானே‌" என்று நியாயம் கேட்டாள். 

"அய்யோ இவளிடமிருந்து என்னை காப்பாத்து ஆண்டவா" என்று தேவி கூற, 'பட்'டென்று சத்தம் கேட்டு பேருந்து ஆடி அடங்கியது. பேருந்து நின்றதும் டிரைவர் வேகமாக கீழே இறங்கி பார்வையிட, மற்றவர்களும் எட்டி பார்த்தார்கள். 

"வண்டி இனி ஓடாது.... டயர் மாத்தணும் எல்லாரும் இறங்குங்க." என்றதும் கண்டெக்டரை சுற்றி இனிப்பில் மொய்த்த எறும்பாய் பணம் தந்து டிக்கெட் வாங்கியவர்கள் மாற்றும் விதமாக எழுதி தந்து வேறொரு பேருந்தில் ஏறினார்கள். அதற்கே இருபது நிமிடம் எடுத்துக் கொண்டது.

மற்றொரு பேருந்து வந்தபொழுது தேவி லாவண்யா, "பச்... இதுவாது சாரதி வண்டியா இருக்க கூடாதா?" என்று துவள, "ஏன்டி அந்த அண்ணாவுக்கு வேற டைம்மே இல்லையா? இதே ரூட் தான். அதுக்காக நீ வர்றப்ப எல்லாம் அவர் பஸ்ல போகணும்னு நினைக்கறது அநியாயம் டி" என்று நின்றுக் கொண்டு வந்தார்கள். இந்த வண்டியில் ஏற்கனவே அமர்ந்திருந்த நபர்கள், ஏராளம். அதனால் நிற்க தான் இடம் கிடைத்தது. 

  "வேர்குது" என்றாள். 

  அந்த நேரம் ஒரு பேருந்து இவர்கள் பேருந்தை முந்தி செல்லவும், "சாரதி பஸ்... அது சாரதி பஸ் தான்" என்று தலையை குனிந்து கூற, அதே நேரம் சாரதியும் முந்திய பேருந்தில் யாரோ தன் பெயரை ஏலமிட தலை குனிந்து கவனித்தான். 

  லாவண்யாவை கண்டதும் விளுக்கென கழுத்தை நேர்ப்படுத்தி கொண்டான். 

"அவர் பஸ் தான் சொன்னேன்ல... அவர் என்னை பார்த்தார்." என்று லாவண்யா கூறினாள்.

''அய்யோ... ஸ்டாப் தாண்டி போகுது. நாம அதை பிடிக்க முடியாது‌. வாயை மூடு" என்று கூறினாள் தேவி. 

  "எல்லாரும் உன்னை பார்க்கறாங்க லாவண்யா." என்று தேவி அதட்டவும் தான் பேருந்தில் இருந்தவர்கள் தங்களை நோட்டமிட அமைதியானாள். 

   லாவண்யாவோ டிப்போ வரை சோகமாய் வர, அங்கே ஏற்கனவே சாரதி பேருந்து இருக்கவும், கழுத்தை அங்கும் இங்கும் திரும்பி பார்த்தாள். 

சாரதியோ டிப்போ அதிகாரியின் அலுவலகத்தில் இருந்தவாறு அவளை ஏறிட்டான். அருகே செல்லவில்லை. அவனுக்கு ஏனோ நெருங்கி செல்ல பயமாக இருந்தது. 

  இன்னமும் இது சரியா தவறா என்ற நிலையில் அவன் குழப்பத்தில் துவண்டான். 

   லாவண்யாவோ சோகமாய் நடந்து செல்ல தேவியோ "என்ன லாவண்யா இது. தினமும் பார்க்கற தானே‌. ஏன் இன்னிக்கு ஓவரா பண்ணற. அந்த பஸ்ல இருந்தப்ப நீ கத்தினதும் ஆளாளுக்கு உன்னை ஒரும்திரி திரும்பி பார்த்தாங்க. இதுல அந்தண்ணா காதுக்கே கேட்டிருக்கும் போல அவரே குனிந்து பார்த்தார்." என்றாள். 

  லாவண்யா தன் தவறை உணர்ந்தவளாக "தேவி... அக்கா பங்ஷனுக்கு இன்னிக்கு நைட் ஊருக்கு கிளம்பிடுவேன்டி. இரண்டு நாள் சாரதியை பார்க்க முடியாது. அதனால தான் இன்னிக்கு அவரை பார்த்துட்டு போகலாம்னு ஆசையா இருந்தேன். தப்பா? அந்த நேரம் தெரியாம கத்திட்டேன்" என்று கலக்கமாய் கேட்டவளை, "ம்ம்.‌‌.. என்ன சொல்ல தெரியலை. ஆனா இங்க வந்து இந்த ஆறேழு மாசத்துல நீ இந்த வீக் முழுக்க, சாரதி சாரதி சாரதினு இருக்க. அந்த அண்ணா உன்னை உதாசினப்படுத்தறார். ஆனாலும் அவரிடம் உனக்கான அன்பான புரிதல் இருக்கு. காதலை தேடற. அவருக்கு உன் மேல ஏதோ அன்பு இருக்கு ஏன் சொல்ல மாட்டேங்கறார் தெரியலை. ஆனா ஓவர் ஸ்பீடா போகாத. இப்ப பாரு... பஸ்ல உன்னை மறந்து கத்திட்ட" என்று நடந்தார்கள். 

   தேவி வீடு வரவும், லாவண்யா தவறை உணர்ந்தவளாக, "கரெக்ட் தான். ஓவரா போறேன்ல... கொஞ்சம் நேரம் தந்திருக்கணும்." என்றாள் நாயகி.

தேவியும் "பைடி.. என் கூட போன்ல பேசு. நல்லபடியா பங்ஷன் முடியவும் திரும்பி வா" என்றாள். 

 வீட்டுக்கு நடந்து வந்தவள், சாரதி வரும் நேரத்திற்கு எட்டியெட்டி பார்த்தாள். 

இலக்கியாவோ 'லாவண்யா... ஊருக்கு போக எடுத்து வச்சிட்டியா?" என்று கேட்க, "எடுத்து வச்சிட்டேன் சித்தி நான் அந்த பிளவுஸ் வாங்கிட்டு வரவா?." என்றாள். 

"அட அதெல்லாம் நானே மதியம் போய் வாங்கிட்டேன். நீ இந்த வீட்டு பொண்ணு என்றதும் நான் தான் உன் சித்தி என்றதால காஞ்சனா அக்கா தந்துட்டாங்க." என்றார்.  

  சாரதி வீட்டுக்கும் செல்ல இயலாது, என்ற வருத்தமாய் நின்றாள். 

  சுரேஷ் இலக்கியா, இஷிதா, தாத்தா ஆவுடையப்பன் என்று நால்வருடன் லாவண்யா தன் உடைமைகளை, அள்ளியெடுத்துக் கொண்டிருந்தாள். 

   சாரதி அவனது சைக்கிளில், அவளிருக்கும் வீட்டை தாட்டி தான் புறப்பட, இலக்கியா வாசலில் இருக்கவும், நேர்பட சைக்கிளில் சென்றான். 

'பச் இவ்ளோ நேரம் இருக்கறப்ப இங்க வெளியே இருந்தேன். இப்ப சித்தி நிற்கறாங்க. இப்ப தான் க்ராஸ் ஆகறார். 

  கடவுளே... சரி நான் அவரை பார்த்துட்டேன். அதுவரை போதும்' என்று குதூகலித்தாள்.

சாரதிக்கு தான், இந்த பெண்ணிடம் இது செட்டாகாது, அந்த தங்கச்சியிடம் லயாவுக்கு புத்திமதி சொல்லுமானு எல்லாம் சொல்லறேன். ஆனா நான்... அவ பெயரை 'லயா'னு செல்லம் கொஞ்சிட்டு இருக்கேன். அவளை நானும் தான் பஸ்ல இருந்தப்ப தலையை குனிந்து பார்த்தேன். 

   இதெல்லாம் சரியா?' என்று மீண்டும் தனக்குள் கேட்டுக் கொண்டான். 

 

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்.

 

 

 

 


 
Posted : September 15, 2026 6:56 am
(@subhakumar85)
Posts: 116
Estimable Member
 

Aaga perum kuzhapathil avan erukiraan


 
Posted : September 15, 2026 8:10 am
(@crvs2797)
Posts: 192
Estimable Member
 

பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 18)

அட.. பைத்தியம் ரொம்பவே முத்தி போயிடுச்சு போல இந்த லாவண்யாவுக்கு. விட்டால், "எங்கும் சாரதி, எதிலும், சாரதி,
கண்ணில் சாரதி, என் எண்ணத்தில் சாரதி...
அம்மம்மா சாரதி...
அவன் தானே என் சரி பாதி" ன்னு
பாடவே ஆரம்பிச்சிடுவா போல.

சாரதி என்னடான்னா, இன்னமும்
"சரியா, இது தவறா...
சரியா, இது தவறா...
சரியா, இது தவறா...
இந்த உணர்வினை விளக்கிட
மனதுக்கு தெரியலை...
சரியா... காதல் தவறா..?
வரமா இது வலையா...
இந்த உறவினை புரிந்திட
மனதுக்கு தெரியலை..
வரமா இது வலையா..." ன்னு
டவுட்லயே சுத்திட்டு இருக்கான் டோய். ஆனாலும், இவங்க காதல் பாயிண்ட் டூ பாயிண்ட் ரொம்ப அழகா, இன்ச் பை இன்ச் ரசிக்கும்படி இருக்குது. அந்த பேருந்துல நாமளும் ஒரு பயணியா பயணிக்கிற மாதிரியே ஒரு குட் ஃபீலிங். என்னோட காலேல் டேஸ் ஞாபகம் எல்லாம் வருது. வெரி நைஸ் அண்ட்
சூப்பர், சூப்பர், சூப்பர்.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : September 15, 2026 8:14 am
(@guna-sundari)
Posts: 142
Estimable Member
 

Super super laya over speed sarathy very slow and has hesitation to accept her love. Very intresting sis 


 
Posted : September 15, 2026 9:22 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 131
Estimable Member
 

Lavanya unnaku muthidichu ipadi ah enga parthalum Sarathy nu pulambuva ah konjam unnoda love flow ah control pannuma ah 


 
Posted : September 15, 2026 11:13 am
(@kokila)
Posts: 6
Active Member
 

சாரதி யோசிக்கிறது சரி

லாவண்யா வயது அப்படி கொஞ்சம் நிதானிக்கணும்

படிக்க வந்த இடத்தில் சித்திக்கு தெரிந்தால்...

படிப்பு, அம்மாவின் கண்டிப்பு, சாரதி சூழ்நிலை எல்லாம் அவ மூளையில் இருத்தணும்

ஆனா காதல் வந்துட்டா தான் ஒன்னும் வேலை செய்யாதே

தேவி நல்ல பிரெண்ட் 

 


 
Posted : September 15, 2026 12:44 pm

Scroll to Top