மொஹபத் முதல் நிக்காஹ் வரை-1
❤️🌜மௌஹபத் முதல் நிக்காஹ் வரை🌜🎷
அத்தியாயம்-1
"இந்த உலக வாழ்க்கையே ஒரு சோதனை." -குர்ஆன் 67:2
"மனிதர்களில் சிறந்தவர் மற்ற மனிதர்களுக்கு உதவுபவரே." -நபிகள் நாயகம்
வானத்தை வெட்டி பறந்த விமானம் மெதுவாக கீழிறங்கத் தொடங்கியது. நாயகன் பிரணவ் ஜன்னல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
கீழே தெரிந்த அந்த துபாய் நகரம் ஒளியில் மூழ்கியிருந்தது.
இரவா? இல்லை ஒரு மின்னும் கனவா? அவனுக்கே புரியவில்லை.
பொன்னிற விளக்குகள் நீண்ட கோடுகளாகப் பரவி இருந்தது. சரியாக ஸ்கேல் கொண்டு வெட்டிய கோடு போல அமைந்த சாலைகள். அசையாமல் நிற்கும் கட்டிடங்கள் கூட ஒரு ஒழுங்கை காட்டியது.
"லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன், வீ ஆர் நௌவ் லேண்டிங் அட் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்" என அந்த அறிவிப்பு ஒலிக்கும்போது, பிரணவ் இதயத்துடிப்பு சற்று அதிகமானது.
துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கப் போகின்றான் பிரணவ்.
'இது தான் தன் வாழ்விற்கான ஆரம்பமா… இல்ல மாற்றமா?' என்று தன் மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.
விமானம் தரையை தொடும் அந்த நொடியில், பிரணவ் வாழ்க்கையும் புதிய நிலையை தொடும் என்பதை தன் உள்ளுணர்வால் உணர்ந்தான்.
விமானத்திலிருந்து வெளியே வந்து, பலவிதமான செக்கிங் முடித்து, பொறுமையாக வெளியே வந்தவுடன், குளிர்ந்த ஏர்-கண்டிஷன் காற்று முகத்தில் பட்டது. வெளியே இருந்த வெப்பத்துக்கு மாறாக, இந்த விமான நிலையமே ஒரு உலகம் போல இருந்தது.
உயர்ந்த சுவர்கள், மின்னும் தரை, எல்லாம் ஒரு லக்ஸரி பீலாக உணர்ந்தான்.
பிரணவ் கையில் இருந்த பாஸ்போர்டை பிடித்துக் கொண்டு இமிக்கிரேஷன் குயூவில் நின்றான்.
அங்கிருந்த பலரையும் வேடிக்கை பார்த்தபடி, தன் ஆனந்தத்தை, பதட்டத்தை மறைத்தபடி முயன்றான். அங்கே பலத்த அமைதியும் ஒழுங்கும் இருந்தது.
அப்படியிருந்தும் ''பஸ்ட் டைமா?" என்று பின்னால் நின்றவர் கேட்டார். பிரணவோ கண்டறிந்து விட்டாரே என்று மென்மையாக சிரித்தான்.
"ஆமா சார்.. தமிழா?" என்றான்.
"எஸ்... தமிழ் தான். இங்க துபாய் என்றதும் நம்ம தமிழ் ஆட்கள் இல்லையேனு பயந்துடாதிங்க. இங்க நிறைய தமிழ் பேசறவங்க உண்டு." என்று பிரணவ்வின் மனவோட்டத்தை புரிந்தவராக பேசினார்.
எந்த ஊரிலும் நம் மொழி பேசுபவர் கண்டால் வரும் பூரிப்பும் நிம்மதியையும் ஏற்பட "ஆமா சார் தமிழ் பேசறவங்க நிறைய இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்" என்றுரைத்தான்.
அவனோட பயமும், ஆசையும், எதிர்பார்ப்பும் எல்லாம் இருந்தது. இமிக்கிரேஷன் முடிந்து பின்னால் இருந்தவரிடம் புன்னகையை பதிலாக தந்து, விடைப்பெற்று, வெளியே வந்தவுடன், ''டாக்ஸி?" என்று ஒருவர் கேட்டார்.
துபாயில் பப்ளிக் டிரான்ஸ்போர்ட் இருந்தாலும், முதல் முறை வந்ததால் லக்கேஜூடன் டாக்ஸியில் செல்வதே சரியென்று "எஸ்." என்று பிரணவ் தலை அசைத்தான்.
டாக்ஸி கதவு திறந்தது. "வேர் ஷூட் வீ கோ சார்?" என்று டிரைவர் கேட்க, பிரணவ் தனது போனில் உள்ள அட்ரஸை ஓபன் செய்து வாசித்து காட்டினான்.
"ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்" என்று கூறவும், "பைவ் ஸ்டார் ஹோட்டல்" என்று கூடுதலாக டிரைவர் கேட்க, "எஸ்" என்றான் பிரணவ்.
"வெல்கம் டூ துபாய் சார்" என்று கூறி டாக்ஸி மெதுவாக நகர ஆரம்பித்தது. பிரணவ் நிதானமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.
வெளியே பிரணவ் இதுவரை பார்த்ததே இல்லாத ஒரு அழகான நகரத்தின் காட்சிகள்.
நீண்ட சாலைகள். ஒவ்வொரு இடத்திற்கும் உள்ள ஒழுங்கு. என்ன தான் விமானம் இறங்கும் பொழுது கவனித்தாலும் இன்னும் அதன் நேர்த்தி அவனை ஈர்த்தது.
எங்கும் ஹார்ன் சத்தம் இல்லை. இந்தியா மாதிரி கூச்சல் இல்ல. அதுவே அவனை அன்னியமாக காட்டியது. இதுவே இந்தியாவில் அதிலும் அவன் வாழ்ந்த சென்னையில் இப்படி அமைதியான சூழல் இல்லை என்றாலும், அது என் ஊர், என் மக்கள் என்ற அன்னியோன்யம் இருந்தது.
இன்று துபாய் தூய்மையாக இருந்த போதிலும், அன்னியமாக காட்டி ஆச்சரியமும் மிரட்சியும் படவைத்தது பிரணவை.
உயர்ந்த கட்டிடங்கள் இரவிலும் பிரகாசமாக நின்றன. கண்ணாடி பில்டிங் ஒளியை ரெப்லெக்ட் செய்து நின்றது. பிரணவ் ஜன்னலின் அருகில் சாய்ந்து இமைக்க மறந்து பார்த்தான்.
'இங்க தான், இந்த நாட்ல தான், நான் வேலை பார்க்க போறேன்' என உள்ளுக்குள் ஒரு சின்ன பெருமை வழிந்தது.
டாக்ஸி சாலையில் வழக்கியபடி நகர்ந்தது. ஒரு பக்கம் வெறுமையான பாலைவனம் மாதிரி இடமும் வந்தது. மற்றொரு பக்கம் மாடர்ன் பில்டிங்ஸும் இருந்தது.
இந்த இரண்டும் அவனை ஆச்சரியப்படுத்தியது.
காரில் "ஆர் யூ ஃப்ரம் இந்தியா?" என்று டிரைவர் கேட்டார். பிரணவின் முகத்தோற்றம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும்.
"எஸ் சென்னை. ஐ ஹேவ் கம் இயர் டூ வொர்க் அட் தி ஜஃப்ரான் பேலஸ்ல ஹோட்டல்" என்று புன்னகைத்தான்.
"வாவ்.. சென்னையா... குட் ஆப்சர்நியுட்டி ஹேர் சார்." என்று வாழ்த்தவும், "தேங்க்யூ சார். தமிழ் பேசுவிங்களா?" என்று பிரணவ் அமைதியாக கேட்டு சிரித்தான்.
"தமிழ் பேசுவேன் சார். நானுமே சென்னை தான். வேலைக்காக வந்தது. உங்க முகத்தை பார்த்ததும் லேசா தோணுச்சு. நீங்க எத்தனை நாள் சார் இங்க வேலையில இருப்பிங்க? இல்லை இனி இங்க தானா?" என்று தமிழிலேயே உரையாற்ற, "இனி இங்க தான் சார். வேலை எவ்ளோ நாளோ அவ்ளோ நாள்." என்றவன் அமைதியானான்.
"அப்ப குடும்பத்தை மிஸ் பண்ணுவிங்க" என்று டிரைவர் தன் முன்னால் இருந்த புகைப்படத்தை ஏக்கமாய் பார்த்தார். அதில் மனைவி குழந்தையுடன் டிரைவர் இருந்தார்.
"ஆமா சார்.. எனக்குஅப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அண்ணன் அண்ணி அவங்களுக்கு ஒரு பிள்ளை. ஊரு பிரெண்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணுவேன்" என்று கூறியவன் வார்த்தைகளில் உறவும் ஊரையும் விட்டு வந்தது மனதில் நின்றது.
வேலைக்காக ஊரை விட்டு வருவது எல்லாம் கஷ்டம் தான். ஆனால் ஊரிலேயே இருந்தாலும் சிலரால் உச்சம் பெற்று, பொருளாதாரத்தில் ஏற்றம் பெற முடியவில்லை. அதற்காகவாது திரைக்கடல் தேடி திரவியம் தேடி தானே ஆகவேண்டியுள்ளது.
சில நிமிடங்களில் டாக்ஸி ஒரு பிரம்மாண்டமான பில்டிங் முன் நின்றது.
டாக்ஸிக்கான வாடகை பணமாக அவ்வூர் திர்ஹம் தந்துவிட்டு, "முடிந்தால் திரும்ப சந்திப்போம் சார்" என்று இறங்கினான். டிரைவரும் தன்னை போல வேலை தேடி இங்கே பிழைக்க வந்தவர் என்ற எண்ணத்தில் உண்டான சிநேகம்.
"கண்டிப்பா சார்" என்று டாக்ஸி டிரைவரும் புறப்பட்டார்.
பிரணவ் முன்னே ஒரு பெரிய நுழைவு வாயில் இருந்தது. அதுவும் கண்ணாடி தடுப்பு கொண்ட கதவுகள்.
அங்கிருந்த செக்யூரிட்டி தலைகுணிந்து கதவை திறக்க, பிரணவ் தனது லக்கேஜை தள்ளியபடி உள்ளே நடந்தான்.
லாபியில் அமைதியான ஆடம்பரம். மெல்லிய நறுமண வாசனை. மென்மையான வெளிச்சத்தை உமிழும் விளக்குகள், தரைத்தளமே கண்ணை குளிர்ச்சியாக்கியது.
அங்கிருந்த அமைதியும் பிரணவிற்கு புதிதாக இருந்தது.
ரிசப்ஷன் டெஸ்கிற்கு அருகே சென்றான். அங்கே ஒரு பெண் ரிசப்ஷனிஸ்ட் நின்றிருந்தாள்.
கருப்பு உடையணிந்த யூனிஃபார்ம். அதை தாண்டி முகத்தை மட்டும் காணும் விதமாக பர்தாவை நேர்த்தியாக கட்டி பின் செய்தியிருந்தாள்.
பிரணவ் அவளெதிரே நின்றதும் வேலைக்குண்டான கனிவான புன்னகை முகத்தில் தவழ்ந்தது.
பிரணவிற்கு அந்த புன்னகையை தாண்டி அப்பெண்ணின் சோர்வும் எட்டி பார்த்தது போல பிரம்மை.
அடுத்து "குட் ஈவினிங் சார்" என்றவள் குரலில் அவளது வேலைக்கான துள்ளலையும் மென்மையாக வெளிவந்தது.
பிரணவ் ஒரு நொடிக்கு தயங்கினான். "ஐ.. ஐ ஹேப் பீன் செலக்டட் ஃபார் தி போஸிட்ஷன் ஆஃப் செஃப் இன் திஸ் ஹோட்டல் திஸ் இஸ் மை அப்பாயின்மெண்ட் லெட்டர். ஐ நீட் டூ சீ தி மேனேஜர்" என்று ஆங்கில வார்த்தையை தேடிக்கொண்டு பேசினான்.
அவள் உடனே பிரணவை மேலிருந்து கீழாக பார்த்து புரிந்துகொண்டவள் போல "தமிழா.. நியூ ஜாயினிங்கா" என்று கேட்டதும் ஆச்சரியமாக பார்த்தான். "ம்ம்ம் தமிழ் தான்" என்றதும்
அவள் சன்னமான சிரித்தாள்.
அந்த சின்ன சிரிப்பே, அந்த பெரிய நகரத்தில் அவனுக்கு ஒரு ஆதரவை கொடுத்தது.
"உங்க நேம் சார்." என்றாள்.
"பிரணவ்" என்றான். ரிசப்ஷன் பெண்ணான அவளும் கணினியில் பிரணவ் பெயரை தேடினாள்.
"செஃப்-னு சொன்னிங்க ரைட்?" என்று மீண்டும் ஊர்ஜிதப்படுத்த கேட்டாள். "எஸ்..." என்றதும் அவள் ஒரு பைலை எடுத்தாள்.
"ஆங்.. உங்க பெயர் இதுல இருக்கு… மேனேஜர் அன்வர் சார் வர இன்னும் ஒன் ஹவர் ஆகும். வெயிட் பண்ணுங்க, வந்ததும் மீட் பண்ண தகவல் சொல்லறேன்." என்று
அவள் பேப்பர் கொடுத்தாள்.
அவன் எடுத்துக்கொண்டான்.
"தேங்க்யூ" என்றவன் திரும்பப் போனான். "மிஸ்டர் பிரணவ்" அவள் அழைத்தாள். அவன் திரும்பிப் பார்த்தான்.
"அந்த லாபில வெயிட் பண்ணுங்க." என்று இடத்தை சுட்டிக்காட்டினாள். அங்கே அமர்வதற்கான இருக்கைகள் இருந்தது.
அவனது பெயரை துபாயில் வந்ததும் அழைத்த முதல் பெண். அந்த ஒரு வார்த்தை பெயரிட்டு அழைத்து இருந்தாலும், ஒரு தெம்பு கூடியிருந்தது.
அவன் பக்கத்தில் சற்று தள்ளி லாபியில் வந்து அமர்ந்து சிரித்தான்.
சுற்றிலும் தொட்டியில் செடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் செயற்கை ஊற்றும் அங்கே மிதமான நீரோடை சத்தமிட்டு நீரை வழிய விட்டது.
இடத்தை கொஞ்சம் கொஞ்சமாய் பார்வையிட்டவனுக்குள், இந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில், தனக்கு செஃப்பாக பணியாற்றும் வேலை என்றதை இன்னமும் நம்ப முடியவில்லை. ஆனால் கனவெல்லாம் நிஜமாக கண்முன்னே விரிந்திருக்க மகிழ்ந்தான்.
அப்படியே அவள் அந்த ரிசப்ஷன் பெண்ணை எதார்த்தமாக பார்க்கும் வாய்ப்பு வந்தது.
ரிசப்ஷன் என்றாலே பெண்ணை நிறுத்தி விடுகின்றார்கள். அதுவும் அழகான பெண்ணை என்று கண்கள் அவள் புறம் சென்றது.
அவள் பெயரை இதயமிருக்கும் பக்கம் பேட்சில் எழுதியிருந்தது. அதை சற்று கூர்ந்து பார்வையிட்டான்.
'Diyana' என்று எழுதியிருக்க, 'தியானா?' என்று மனதில் உச்சரித்தான்.
இங்கே துபாயில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லை என்றால் தண்டனை கடுமையானது என்ற விதிமுறை நினைவு வரவும், என்ன தான் தவறான நோக்கத்தில் பார்க்காவிட்டாலும் ஒருவித பயத்தில் தலையை குனிந்தான்.
அவள் பெயர் தியானா, முகத்தை மட்டும் பார்க்க வைத்து முழுதாக தலை முடியை கூட கவர் செய்திருக்க, முஸ்லிம் பெண் என்றவரை அறிந்தது போதுமென அவள் அழைப்புக்காக காத்திருந்தான்.
பிரணவ் இங்கேயே பார்த்து முடித்து தலை கவிழ, அதை உணர்ந்தவளாக தியானா பிரணவை கண்டாள்.
அவள் அவனை ஒரு நொடிக்கு பார்த்தாள். அவன் தலை கவிழ்ந்து ஏதோ யோசித்திருக்க, தியானா மீண்டும் கணினி திரையில் கவனம் செலுத்தினாள். அத்துடன் ரிஸப்ஷன் பெண் என்பதால் வேலையும் அடுத்தடுத்து இருந்தது.
பிரணவ் மீண்டும் தலை நிமிர்ந்து, தான் இங்கு வந்துவிட்டதை தனது வீட்டிற்கு சொல்ல போனை எடுத்தான். 'சிம் வேற மாற்ற வேண்டுமென்பதால் அமைதிக் காத்தான்.
அந்த நேரம் "பிரணவ்.. மிஸ்டர் பிரணவ்." என்ற இனிமையான குரலில் சுற்றம் உணர்ந்து தியானாவை பார்த்தான்.
"மேனேஜர் சார் வந்துட்டார். நான் அவரிடம் கால் பண்ணி கேட்டுட்டேன். அவர் உங்களை வரச்சொன்னார். அதோ அந்த ரூம்" என்று சுட்டிக்காட்டினாள்.
"தேங்க்யூ" என்று தள்ளாடி எழுந்தான். லக்கேஜ் அவன் பாதத்தை தட்டியது.
"அது இங்க இருக்கட்டும். அதோ பெல் பாய் பார்த்துப்பார். நீங்க போங்க" என்றதும் நன்றியுரைக்கும் புன்னகையுடன் அவ்வறைக்கு சென்றான்.
'பிரணவ்... நைஸ் நேம்' என்று தியானா எண்ணிட, அதே நேரம் 'ஸ்வீட் கேர்ள்.. கனிவான முகம்' என்று பிரணவும் மனதில் உச்சரித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
மௌஹரம் பண்டிகை வாழ்த்துகள் ரீடரஸ்.. இது உங்களுக்கான ஸ்பெஷல் கதையும்
கூட. ஏதேனும் தப்பும் தவறுமான பழக்கவழக்கம் இருந்தால் கூறுங்கள் எடிட் பண்ணிடுவோம். இல்லைன்னா உற்சாகமான கமெண்ட்ஸ் தந்து ஆதரவு தரவும். நன்றி.
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)
அட.. முதலாம் சந்திப்பில் அவள் முகத்தை பார்த்தேனே...ன்னு
விட்டா பாட்டாவே பாடிடுவான் போலவே இந்த பிரணவ்.
ஆனால், இது துபாய் என்கிறதால
எதுக்கும் கொஞ்சம் அடக்கியே
இருக்கச் சொல்லுங்க. இல்லைன்னா மொஹரத்துக்கு ப்ரியாணி ஆக்கிடுவாங்கன்னு
சொல்லி வைங்க.
அது சரி, பிரணவ் ஹீரோன்னா, தியானா தான் ஹீரோயினா...? முஸ்லீம் பொண்ணு தமிழ் பையன் கதையா...? அப்படின்னா கதையோட பேரைக் கூட
'காதல் முதல் நிக்காஹ் வரை'
'மொஹபத் முதல் கல்யாணம் வரை' அப்படின்னுத்தானே வித்தியாசமா மிக்ஸிங் பண்ணி வைச்சிருக்கணும்...? காதல் கல்யாணத்துல மட்டும் கலப்பு கொண்டு வந்தால் போதுமா..
டைட்டில்லயும் கொண்டு வரணும் தானே..? ஜஸ்ட் ஃபார் பன். உங்க
டைட்டில் நல்லாவே இருக்கு.
😃😃😃
CRVS (or) CRVS2797
மொஹபத் முதல், நிக்காஹ் வரை!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 1)
அட.. முதலாம் சந்திப்பில் அவள் முகத்தை பார்த்தேனே...ன்னு
விட்டா பாட்டாவே பாடிடுவான் போலவே இந்த பிரணவ்.
ஆனால், இது துபாய் என்கிறதால
எதுக்கும் கொஞ்சம் அடக்கியே
இருக்கச் சொல்லுங்க. இல்லைன்னா மொஹரத்துக்கு ப்ரியாணி ஆக்கிடுவாங்கன்னு
சொல்லி வைங்க.
அது சரி, பிரணவ் ஹீரோன்னா, தியானா தான் ஹீரோயினா...? முஸ்லீம் பொண்ணு தமிழ் பையன் கதையா...? அப்படின்னா கதையோட பேரைக் கூட
'காதல் முதல் நிக்காஹ் வரை'
'மொஹபத் முதல் கல்யாணம் வரை' அப்படின்னுத்தானே வித்தியாசமா மிக்ஸிங் பண்ணி வைச்சிருக்கணும்...? காதல் கல்யாணத்துல மட்டும் கலப்பு கொண்டு வந்தால் போதுமா..
டைட்டில்லயும் கொண்டு வரணும் தானே..? ஜஸ்ட் ஃபார் பன். உங்க டைட்டில் நல்லாவே இருக்கு.
😃😃😃
CRVS (or) CRVS2797
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-10
2 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-9
2 weeks ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-8
2 months ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-7
2 months ago
-
மொஹபத் முதல் நிக்காஹ் வரை-6
2 months ago
- 25 Forums
- 329 Topics
- 1,582 Posts
- 2 Online
- 420 Members
